அர்கேடியா
arkēṭiyā
அர்கேடியா என்பது கிரீசு நாட்டின் நடு மேட்டு மாவட்டம் ஆகும்.
அர்கேடியா என்பது கிரீசு நாட்டின் நடு மேட்டு மாவட்டம் ஆகும். இம்மேட்டு நிலத்தைப் பெலப்போனசசு (Peloponnessos) என்பர். பண்டைக் காலத்தில் அர்கேடிய மக்கள் கடற்கரைத் தொடர்பேதுமின்றி மலைத் தொடர்களால் தடுக்கப் பெற்றிருந்தனர். அவர்கள் எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அவர்கள் நாகரிகம் முதிர்ச்சி பெறாதிருந்தது. அதனால், அர்கேடியா (Arcatia) என்னும் சொல் இலட்சிய எளிமைக்கும், கிராமப்புற அழகிற்கும், போதுமென்னும் மனப்பாங்கிற்கும் எடுத்துக் காட்டாக அமைந்திருந்தது. இக்கால அர்கேடியா நாப்பிலியா வளைகுடா வரை நீண்டுள்ளமையால் 64 கி.மீ. கடற்கரை இதற்குச் சொந்தமாயுள்ளது. மாவட்டத்தின் பெரும்பகுதியில் காடுகள் நிறைந்துள்ளன. இங்கு மண் வளம் குறைவு, அதனால் விளை பொருள்களும் குறைவேயாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 600)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2sbwxkrg/
தமிழ்“அர்கேடியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2sbwxkrg/APA
Oliyon Research. (2026). அர்கேடியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2sbwxkrg/MLA
"அர்கேடியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2sbwxkrg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment