செயற்கை அருமணி
ceyaṟkai arumaṇi
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இயற்கையாகக் கிடைக்கும் ஒன்பது நிறங்கள் கொண்ட கற்கள் நவமணி எனப்படும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இயற்கையாகக் கிடைக்கும் ஒன்பது நிறங்கள் கொண்ட கற்கள் நவமணி எனப்படும். அவை வைரம், மரகதம், மாணிக்கம், வைடூரியம், நீலம், கோமேதகம், முத்து, பவளம், புட்பராகம் முதலியவையாகும்.இவை தவிர, நிலாக் கல், ஓப்பல் போன்ற பலவிதமான கற்களும் காணப்படுகின்றன. தற்காலத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பவியலால், செயற்கைக் கற்களும் (artificial stone), போலிக் கற்களும் தயாரிக்கப்படுகின்றன. இயற்கை, செயற்கை, போலி மணிகள் அனைத்தும் சேர்த்து, தற்போது எண்பத்து நான்கு வகை கண்டறியப்பட்டுள்ளது. இயற்கையாகக் கிடைக்கும் மணிளை விடச் செயற்கை, போலி மணிகள் இன்று மிகுதியாகக் காணப் படுகின்றன. வேதியியல்பு, வெளிப்புறத் தோற்றம், கடினத் தன்மை, ஒளியியல்பு, நிறம் முதலிய தன்மைகளில் இயற்கை மணிகளை ஒத்து, செயற்கை மணிகள் (synthetic or manufactured gem) காணப் படுகின்றன. போலி மணிகள் கண்ணாடியிலிருந்து செய்யப் படுகின்றன. சில நெகிழியிலிருந்தும் (plastic) தயாரிக்கப்படும்.
வைரம், மாணிக்கம், மரகதம் முதலியவை பெரும்பாலும் செயற்கையாகக் செய்யப்படுகின்றன. வியன்னாவைச் சேர்ந்த ஜோசப் ஸ்டிராசர் 1758ஆம் ஆண்டு ஒரு விதக் கண்ணாடியிலிருந்து, செயற்கை மணியைத் தயாரித்தார். அது வைரம் எனப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அகஸ்டி வெர்னிஸ் 1902இல் செயற்கை மாணிக்கத்தையும், 1910இல் செயற்கை மரகதத்தையும் தயாரித்தார். தற்போது இயற்கையாகக் கிடைக்காத நிறங்களில் கூடப் பல வண்ணக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன.
பெருகி வரும் மக்கள் தொகையில் இன்று தொழில் துறைக்குப் பெரும்பான்மையாக மணிகள் தேவைப் படுகின்றன. ஆனால், இவை இயற்கையில் மிகுதியாகக் கிடைப்பதில்லை. ஆதலால், செயற்கை மணிகள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. மேலும், இயற்கையாகக் கிடைக்கும் மணிகளை விடச் சிறந்த மணிகளைச் செயற்கையாகத் தயாரிக்க முடிகிறது. இவை நிறம், ஒளி, கடினத் தன்மை முதலியவற்றில் சிறந்து விளங்குகின்றன. அறிவியல் வேதி ஆய்வுகளுக்குச் செயற்கை மணிகள் தேவைப் படுகின்றன. இயற்கையில் கிடைக்காத அருமணியைக் கூடச் செயற்கையாகத் தயாரிக்கலாம். 1948இல் டிட்டானியம் என்ற செயற்கை மணி தயாரிக்கப் பட்டது. பின்னர் பாபுலைட் என்ற மணியும் செய்யப் பட்டது.
இயற்கை மணிகளுக்கும், செயற்கை மணிகளுக்கும் வேறுபாடு காண்பது அரிது. இயற்கை மணிகளில் ஊடுருவல் இருக்கும். சில மணிகளில் காற்று, காற்றுக் குமிழ், நீர் ஆகியவை ஊடுருவியிருக்கும். இந்த ஊடுருவல் சில மணிகளுக்கு ஒளிச் சிறப்பைத் தருகிறது. செயற்கை மணிகளில் ஊடுருவல் இராது. ஆனால், காற்றுக் குமிழ் இருக்கும். நிறம் குறைந்த மணிகளைச் சூடு படுத்தி, வேறு நிறத்திற்கு மாற்றுவதுண்டு. பல மணிகளில் இந்நிறம் நிலைக்காது, வெளுத்து விடும். எகிப்தியர்கள், கண்ணாடி மணிகளை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முதன் முதலில் செய்துள்ளனர். —இரா. சரசவாணி நூலோதி. அ. அய்யூப், நவமணிகள், முதல் பதிப்பு, தேவநேயன் அச்சகம், சென்னை, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 793)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qbcg6s2/
தமிழ்“செயற்கை அருமணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2qbcg6s2/APA
Oliyon Research. (2026). செயற்கை அருமணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2qbcg6s2/MLA
"செயற்கை அருமணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2qbcg6s2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment