என்போர் பணியாளர்கள். பாணினி, ‘அட்டாத்தியாயி’ என்னும் நூலில், அயுக்தர் என்ற பணியாட்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கௌடில்யர் யுக்தர், உபயுக்தர் எனக் குறிப்பிட்டுள்ள பணியாட்கள் அயுக்தருடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். கௌடிலியரின் கருத்துப்படி யுக்தர் எனப்படுவோர் அரசாங்கப் பணியாளர்களெனவும், உபயுக்தர் எனப்படுவோர் அவர்களுக்குக் கீழ்நிலையில் பணிபுரிந்த பணியாளர்கள் எனவும் கருதப்படுகின்றனர். அயுக்தர் என்போர், குப்தரின் கல்வெட்டுச் சாசனங்களில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளனர். அயுக்தர் என்ற சொல்லும் அயுக்தகர் என்ற சொல்லும் நிலத்தீர்வை வாங்கும் பணியாட்களைக் குறிப்பதாகவும் கூறலாம். இச்சொற்கள் பொது நிருவாகத் துறைப் பணியாளர்களையும் குறிக்கும்.