அயுக்தர்
ayuktar
என்போர் பணியாளர்கள். பாணினி, ‘அட்டாத்தியாயி’ என்னும் நூலில், அயுக்தர் என்ற பணியாட்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
என்போர் பணியாளர்கள். பாணினி, ‘அட்டாத்தியாயி’ என்னும் நூலில், அயுக்தர் என்ற பணியாட்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கௌடில்யர் யுக்தர், உபயுக்தர் எனக் குறிப்பிட்டுள்ள பணியாட்கள் அயுக்தருடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். கௌடிலியரின் கருத்துப்படி யுக்தர் எனப்படுவோர் அரசாங்கப் பணியாளர்களெனவும், உபயுக்தர் எனப்படுவோர் அவர்களுக்குக் கீழ்நிலையில் பணிபுரிந்த பணியாளர்கள் எனவும் கருதப்படுகின்றனர். அயுக்தர் என்போர், குப்தரின் கல்வெட்டுச் சாசனங்களில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளனர். அயுக்தர் என்ற சொல்லும் அயுக்தகர் என்ற சொல்லும் நிலத்தீர்வை வாங்கும் பணியாட்களைக் குறிப்பதாகவும் கூறலாம். இச்சொற்கள் பொது நிருவாகத் துறைப் பணியாளர்களையும் குறிக்கும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 596)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2k3986xb/
தமிழ்“அயுக்தர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2k3986xb/APA
Oliyon Research. (2026). அயுக்தர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2k3986xb/MLA
"அயுக்தர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2k3986xb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment