பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களுள் ஒருவர்; கோச்சடையன் இரணதீரனுக்குப்பின் பட்டமேற்றார்; முதலாம் இராசசிம்மபாண்டியன் எனவும் அழைக்கப் பெற்றவர். கோச்சடையனின் மகனான இவர்தம் வெற்றிகளைச் சீவரமங்கலச் செப்பேடுகளும் வேள்விக் குடிச் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. இவர் பல்லவரை வென்றார். இவர் மழகொங்கு நாட்டைக் கைப்பற்றிப் பாண்டிக் கொடுமுடியில் பசுபதி ஈசுவரரை வணங்கினார்; கங்க வேந்தனுடன் திருமணத் தொடர்பு கொண்டார்; வெண்பைப் போரில் சாளுக்கியரை வென்றார். இவர் பெரியாழ்வாரின் உடன் காலத்தவராகக் கருதப் பெறுகிறார். இவரது ஆட்சிக் காலத்தில் பாண்டியரின் மேலாண்மை சோணாட்டிலும் கொங்கு நாட்டிலும் பரவியது. இவர் கோசகசரம், துலாபாரம் முதலான பல தானங்களைச் செய்தவர். சமயப் பொறை உடையவர்.ம.இரா.