அண்டோரா
aṇṭōrā
உலகிலுள்ள மிகச் சிறு குடியரசு நாடுகளில் ஒன்று.
உலகிலுள்ள மிகச் சிறு குடியரசு நாடுகளில் ஒன்று. பிரான்சிற்கும் ஸ்பெயினிற்கும் இடையே, மத்தியதரைக் கடலுக்கு 80 மைல்
மேற்கே யமைந்துள்ளது. 9 ஆம் நூற்றாண்டில் சார்லமேன் காலத்திலிருந்து இது சுதந்திர நாடாக இருந்து வருகிறது. இந்நாட்டவர்கள் விவசாயம், ஆடு மேய்த்தல் முதலிய தொழில்களில் ஈடுபடுபவர்கள். இங்குப் புகையிலை மிகுதியாக விளைகிறது.
இக்குடியரசின் ஆட்சி இருபத்துநான்கு அங்கத்தினர்கள் கொண்ட ஒரு சபையால் நடத்தப்படுகிறது. வடகிழக்கு ஸ்பெயினில் வழங்கும் காட்டலான் என்னும் மொழியே இங்கும் பேசப்படுகிறது. பரப்பு : 191 சதுர மைல். மக்.5400 (1950).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 88)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2gcyrvfz/
தமிழ்“அண்டோரா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2gcyrvfz/APA
Oliyon Research. (2026). அண்டோரா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2gcyrvfz/MLA
"அண்டோரா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2gcyrvfz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment