சுழல் கண்ணாடி
cuḻal kaṇṇāṭi
இடைவினை செய்யும் அணுக் காந்தத் திருப்புத் திறன்களைக் கொண்ட பல வகையான பொருள்களில் சுழல் கண்ணாடியும் (Spin glass) ஒன்று.
இடைவினை செய்யும் அணுக் காந்தத் திருப்புத் திறன்களைக் கொண்ட பல வகையான பொருள்களில் சுழல் கண்ணாடியும் (Spin glass) ஒன்று. கண்ணாடி என்னும் சொல் அவற்றின் படிக உருவற்ற தன்மையைக் குறிக்கிறது. இத்தகைய பொருள்களில் காந்த ஏற்புத் திறனுக்கும், வெப்ப நிலைக்கும் இடையில் ஒரு வரைபடம் வரைந்தால், ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் அதன் சரிவு திடீரென மாற்றம் அடையும். அவ்வெப்ப நிலை உறையும் வெப்ப நிலை எனப்படும். உறையும் வெப்ப நிலையில் வரை கோடு ஒரு முகடு போன்ற தோற்றம் பெற்றிருக்கிறது. இவ்வெப்ப நிலைக்குக் கீழ்ப்பட்ட வெப்ப நிலைகளில், தற்சுழற்சிகள் பெரும் நெடுக்க காந்த ஒழுங்குத் தன்மை பெற்றவையாக இரா. அதற்கு மாறாக, நுண் தொலைவுகளில் தன்னிச்சையாக மாறுபடுகிற நிலையான அல்லது ஓரளவு நிலையான திசைபாடுகள் பெற்றுள்ளவையாகக் காணப்பட்டுள்ளன. இந்நிலை, சுழல் கண்ணாடிக் காந்த ஒழுங்கு எனப்படுகிறது. பெரும் நெடுக்க ஒழுங்கு இல்லாமையை, மெய்ப்பிக்க, வேறு பல தகவல்கள் தேவைப்படும். நியூட்ரான் விளிம்பு விலகல் நிகழ்ச்சியைப் பயன்படுத்தியும், நெருங்கிய தொடர்புள்ள காந்த ஏற்புத் திறன் முகடுகளைக் காணலாம். சுழல் கண்ணாடிகளில் நிலை மாற்றம் (phase transition) ஏற்படுகிறதா இல்லையா என்பதில் கருத்து முரண்பாடு உண்டு.
சுழல் கண்ணாடி நிலை மாற்றம். தங்கத்தில் ஓரளவு இரும்பு கலந்த கலவையின் தனி வெப்ப நிலைக்கும், காந்த ஏற்புத் திறனுக்கும் இடையில் வரையப்பட்ட வரைகோடு படம் 1இல் காட்டப் பட்டிருக்கிறது. இரும்பு அணுக்கள் காந்தத் திருப்புத் திறனுள்ளவை. அவை தங்க அணிக் கோவையில் தன்னிச்சையாகப் பரவியிருக்கின்றன. அடுத்தடுத்துள்ள காந்தத் திருப்புத் திறன்கள், ஒன்றோடொன்று இடைவினை செய்யும். இது ரூடர்மான்—கிட்டல்—காசூயா யோசிடா பரிமாற்ற இடைவினை மூலம் நிகழும். தங்கத்தின் கடத்தல் எலெக்ட்ரான்களால் நடத்தி வைக்கப்படும் இந்த இடைவினை பின் வரும் சமன்பாட்டால் தரப்படுகிறது.
,
ஆகிய தற்சுழற்சிகளுக்கு இடையிலான தொலைவு அதிகரிக்கும் போது, பரிமாற்ற மாறிலியான J விரைவாகத் தன் மின் குறிகளை நேரினமாகவும், எதிரினமாகவும் மாற்றிக் கொண்டேயிருக்கிறது. காந்த ஏற்புத் திறனின் கூர்மையான முகடு T என்ற வெப்ப நிலையில் ஏற்படுகிறது. இப்போது KT என்னும் பெருக்குத் தொகை ஒரு மாதிரித் தன்மை யுள்ள பரிமாற்ற மாறிலியான J இன் மதிப்புக்குச் சமமாகும். இங்கு K என்பது போல்ட்ஸ்மன் மாறிலி. இந்நிகழ்வில் தேவையான ஒழுங்கீனம், காந்தத் திருப்புத் திறன்கள் தன்னிச்சையாக உள்ளமையால், உண்டாகிறது. இதனால், விளையும் பரிமாற்ற இணைப்புகளின் வடிவமைப்பு, திருப்புத் திறன் திசைபாடுகள் தல அளவில் தொடர்புள்ளவையாக வும், நுண் தொலைவுகளில் பயனுறு வகையில் தன்னிச்சையாக அமைந்திருப்பவையாகவும் உள்ள மையால், குறைந்த வெப்ப நிலைகளில் சிறும ஆற்றல் நிலையான வகையில் உள்ளது.
நிலை மாற்றத்தின் கூர்மை 100 ஓர்ஸ்டட்டுகள் போன்ற சிறிய காந்தப் புலங்களைச் செலுத்தும் போது, அழிக்கப்படுவதை முதல் வரைபடம் காட்டுகிறது. பெரும் எண்ணிக்கையிலான காந்தத் திருப்புத் திறன்களின் கூட்டு முயற்சியின் விளைவாகவே, நிலை மாற்றம் ஏற்படுகிறது என்பதற்கு இது சான்றாகும். ஏனெனில், இவ்வெப்பநிலையில், 100 ஓர்ஸ்டட் அளவிலான காந்தப் புலம் ஒரு தனிப்பட்ட காந்தத் திறனின் இயக்கத்தைப் பெரும்பாலும் பாதிப்பதில்லை.
சுழல் கண்ணாடி ஒழுங்கு நிகழ்வு. பல தனித் தன்மையான ஒழுங்கீன வகைகளை வெளிக் காட்டும். பல வகையான ஒழுங்கீன காந்தப் பொருள்களில் சுழல் கண்ணாடி ஓழுங்கு நிலை நிகழ்வதாகக் காணப்படும். சிறிதளவு இரும்பு கலந்துள்ள தங்கத்தில், தங்க அணிக் கோவையில் இரும்பு அணுக்கள் தன்னிச்சையாக அமர்ந்துள்ளமையால், அந்த உலோகக் கலவை ஓழுங்கின்றியுள்ளது. இதே காரணத்தால், சிறிதளவு மாங்கனீஸ் கலந்த செம்பு, வெள்ளி, தங்கம் ஆகிய கலவைகளும் ஒழுங்கில்லாமல் உள்ளன. இந்த அமைப்புகளில் சில, பரந்த கூட்டமைப்பு நெடுக்கத்தில் சுழல் கண்ணாடி நடத்தையை வெளிக் காட்டுகன்றன. கோண்டோ விளைவும், குறைந்த மற்றும் உயர் செறிவுகளில் காந்த அயனியில் ஏற்படக் கூடிய அயக் காந்த நடத்தையும் இந்நெடுக்கத்திற்கு வரம்பு கட்டுகின்றன. சிறிய செறிவுகளில், இந்த உலோகக் கலவைகளின் பரிமாற்ற இடை வினைகள் சிறப்பியல்பான வலிமையையும், பரவீட்டையும் கொண்டிருக்கின்றன. காந்த அயனிகள் நிறைந்த, படிகத் தன்மையற்ற கட்டமைப்புள்ள : உலோகச் சுழல் கண்ணாடி வகை ஒன்றும் உள்ளது.
Gd Al₂, (Fe Mn) (P B₆ Al₃) இவற்றை இதற்கு.எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம். Gd Al₂இல் கடோலினியம் அயனிகள் காந்தத் தன்மையுள்ளவை. இப்பொருள்களைப் படிக உருவற்ற நிலையில், உண்டாக்கத் தனி வகையான செயல் முறைகள் தேவைப்படும். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள உலோகக் கலவை, உலோகக் கண்ணாடி (met glass) இனத்தைச் சேர்ந்தது. அது மறு நுழைவு சுழல் கண்ணாடி (reentrant spin glass) வகையாகும்.
சுழல் கண்ணாடி வகைகளில், மின் கடத்தாத வகைகளும் உள்ளன. கோபால்ட், மாங்கனீஸ் ஆகியவற்றின் அலுமினோ சிலிகேட் உலோகக் கலவைகள் முதன் முதலாக உருவாக்கப்பட்ட மின் கடத்தாச் சுழல் கண்ணாடிகளாகும். அவை படிக, உருவற்றவை. அவற்றில் 20-40% தேவையான அளவில் காந்த அயனிகள் கலந்துள்ளன. இவற்றிலும், மேலே குறிப்பிடப்பட்ட படிக உருவற்ற உலோக .அமைப்புகளிலும், காந்த இனங்களுக்கிடையிலான இடை வினைகள் தனித் தன்மை கொண்டவை அல்ல.
Eu SrS என்னும் அமைப்பு நன்கு ஆய்வு செய்யப்பட்ட மின் கடத்தாச் சுழல் கண்ணாடி யாகும். x = 1 என்னும் நிலையில், அயக் காந்தப் பரிமாற்ற இடை வினைகளே இதற்குக் காரணம். அப்போது, சுயமான படிகக் கட்டமைப்பு நீடிக்கிறது. x இன் மதிப்பு 0.5-ஐ விடக் குறையும் போது, ஒன்று விட்ட அணுக்களிடையே ஏற்படுகிற எதிர் அயக் காந்தப் பரிமாற்ற இணைப்புகளின் காரணமாக, இந்த அமைப்பு, சுழல் கண்ணாடியாகிறது. யூரோப்பியத்தின் செறிவு மிகும் போது, இந்த அமைப்பு மறு நுழைவு தன்மை பெறுகிறது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> அயக் காந்த நிலையிலிருந்து சுழல் கண்ணாடி நிலைக்கு மாறுதல். பல சேர்மங்கள் ஏதாவது ஒரு கியூரி வெப்ப நிலையில் அயக் காந்த ஒழுங்கைப் பெறுவதும், அவ்வெப்ப நிலைக்குக் குறைவான வெப்ப நிலைகளில், அவற்றில் அந்த ஒழுங்கு குலைந்து விடுவதும் காணப்படும். இத்தகைய அமைப்பு மறு நுழைவு சுழல் கண்ணாடி எனப் படுகிறது. ஏனெனில், பெரும் நெடுக்கக் காந்த ஒழுங்கு இல்லாமலேயே, அவற்றின் குறைந்த வெப்ப நிலைக் கட்டம், ஏதோ ஒரு வகையில் ஒழுங்கு பெற்றுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக (PdFe Mn என்னும் உலோகக் கலவைக்கான காந்த ஏற்புத் திறன், தனி வெப்ப நிலையுடன் மாறுவதைக் கூறலாம். படம் 2இல் மாங்கனீசின் மூன்று செறிவுகளுக்கு வரை கோடுகள் வரையப்பட்டுள்ளன. x = 0.01 என உள்ள போது, சேர்மம் அயக் காந்தத் தன்மை கொண்டுள்ளது. 13K குறைவான அனைத்து வெப்ப நிலைகளிலும், காந்த ஏற்புத் திறன் தெவிட்டிய நிலையில் உள்ளது. 9K வெப்ப நிலையில், x = 0.05 என உள்ள போது, சேர்மம் அயக் காந்தத் தன்மை
பெற்றிருக்கிறது. ஆனால் வெப்ப நிலை 3Kக்கும் குறைவாகும் போது, அயக் காந்தத் தன்மை குலைந்து, சுழல் கண்ணாடித் தன்மை ஏற்பட்டு விடுகிறது. இது மறு நுழைவு சுழல் கண்ணாடி நிகழ்வாகும்.
மாங்கனீஸ் செறிவு மிகுதியாக இருக்கும் போது, எடுத்துக்காட்டாக x = 0.065 என்னும் நிலையில், அயக் காந்தத் தன்மை மறைந்து விடுகிறது. வரை கோட்டில் ஓர் எளிய முகடு மட்டுமே காணப்படுகிறது. அயக் காந்த நிலையிலிருந்து, சுழல் கண்ணாடி நிலைக்கு மாறுவது ஒரு மெய்யான நிலை மாற்றமா என்பதில் ஓரளவு கருத்து வேற்றுமை இருந்து வருகிறது. Eu SrS, Au Fe, Fe Cr போன்ற சேர்மங்களிலும், படிக உருவற்ற (PB₆Al₃) சேர்மத்திலும், மறு நுழைவு சுழல் கண்ணாடி நடத்தை காணப்படுகிறது. இவற்றில் EuSrS மின் கடத்தாத் தன்மை கொண்டது. ஏனையவை காந்தத் தன்மையுள்ள உலோக கலவைகள் ஆகும். —கே.என். ராமச்சந்திரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 541)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2f7t3932/
தமிழ்“சுழல் கண்ணாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2f7t3932/APA
Oliyon Research. (2026). சுழல் கண்ணாடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2f7t3932/MLA
"சுழல் கண்ணாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2f7t3932/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment