உபதேச கலை
upatēca kalai
‘பிரமாணம்’ அல்லது ‘அளவை’ பலவகையாகச் சொல்லப்படினும் அவற்றுள் தலையானவை காட்சி, கருதல், உரை என்னும் மூன்றுமேயாகும்.
‘பிரமாணம்’ அல்லது ‘அளவை’ பலவகையாகச் சொல்லப்படினும் அவற்றுள் தலையானவை காட்சி, கருதல், உரை என்னும் மூன்றுமேயாகும். அவற்றுள் உரையளவை அல்லது ஆகமப் பிரமாணம் தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலை என மூன்றாகும்.
கரும காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என்னும் வேதத்தின் பிரிவு மூன்றுமே முறையே தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலை என்பனவாம்.
இனிச் சைவாகமங்களில் உள்ள நாற்பாதங்களுள் சரியா பாதம் தந்திர கலை எனவும், கிரியா மற்றும் யோகபாதங்கள் மந்திர கலை எனவும், ஞான பாதம் உபதேச கலை எனவும் சொல்லப்படும் (சிவஞான சித்தியார் – சுபக்கம் – 19 சிவஞான யோகிகள் உரை). சி.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 916)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/28pmcqpu/
தமிழ்“உபதேச கலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/28pmcqpu/APA
Oliyon Research. (2026). உபதேச கலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/28pmcqpu/MLA
"உபதேச கலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/28pmcqpu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment