‘பிரமாணம்’ அல்லது ‘அளவை’ பலவகையாகச் சொல்லப்படினும் அவற்றுள் தலையானவை காட்சி, கருதல், உரை என்னும் மூன்றுமேயாகும். அவற்றுள் உரையளவை அல்லது ஆகமப் பிரமாணம் தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலை என மூன்றாகும். கரும காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என்னும் வேதத்தின் பிரிவு மூன்றுமே முறையே தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலை என்பனவாம். இனிச் சைவாகமங்களில் உள்ள நாற்பாதங்களுள் சரியா பாதம் தந்திர கலை எனவும், கிரியா மற்றும் யோகபாதங்கள் மந்திர கலை எனவும், ஞான பாதம் உபதேச கலை எனவும் சொல்லப்படும் (சிவஞான சித்தியார் – சுபக்கம் – 19 சிவஞான யோகிகள் உரை). சி.அ.