இசுலாம் சமயத்தை நிலைநாட்டிய நபிகள் நாயகத்தின் அன்புக்குப் பாத்திரமான அவருடைய மனைவியார் அயிசா அம்மையார். இவ்வம்மையாரின் தந்தையார் அபுபக்கர். இவர் நபிகள் நாயகத்தின் முதன்மை ஆலோசகர். அயிசா கி.பி. 614–ஆம் ஆண்டளவில் மெக்காவில் பிறந்தார். அவர் கி.பி. 622–ஆம் ஆண்டில் மதீனாவிற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நபிகள் நாயகத்திற்கு மணம் செய்விக்க உறுதி செய்யப் பெற்றார். திருமணம் கி.பி. 623–இல் நடந்தேறியது. அப்போது நபிகள் நாயகத்திற்கு 50 வயது; அவர்களுக்குப் பிள்ளைப்பேறு கிட்டவில்லை. நபிகள் நாயகத்திற்கு மனைவியர் பலர். எனினும் இறுதி நாட்களில் நபிகள் அயிசாவிடமே சென்று தங்கலானார். காலிபாக்களின் ஆட்சியின் போது அயிசா பங்கு கொள்ளவில்லை. மதீனாவில் அமைதியாகக் காலத்தைக் கழித்து, கி.பி. 678–ஆம் ஆண்டில் அயிசா காலமானார்.