குறிப்பி

kuṟippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு தொகுப்பு ஒன்றினை அடையாளங்காட்டுகிற, சுட்டிக்காட்டுகிற,அல்லது அதன் பெயராக உள்ள குறியீடு — identifier
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 726)
2.
சி++ நிரலாக்க மொழியில் ஒரு தகவல் இனம். குறிப்பியை அறிவிக்கும்போதே அதில் ஒரு மாறியின் மூலம் தொடக்கமதிப்பிருத்த வேண்டியது கட்டாயம். அந்த மாறியின் மாற்றுப் பெயராக அக் குறிப்பி செயல்படும். அதாவது மாறிக்குப் பதிலாகக் குறிப்பியையே பயன்படுத்திக் கொள்ளலாம். (எ-டு. int n = 25; int& r = n) n என்பது int என்னும் தரவினத்தில் ஒரு மாறி. r என்பது n-ஐக் குறிக்க உருவாக்கப்பட்டுள்ள குறிப்பி, cout <<r; என்று கட்டளை அமைத்தால் 25 என (n-ன் மதிப்பு) காட்டும். n-ன் மாற்றுப் பெயர்போல | செயல்படும். 2. # ஜாவா, சி மொழிகளில் ஓர் இனக்குழுவில் (Class) உருவாக்கப்படும் இனப் பொருளை (Object) குறிப்பதற்குப் பயன்படும் மாறி (Variable), குறிப்பி, அடுக்கை நினைவகத்திலும், இனப் பொருள், குவியல் (Heap) நினைவகத் திலும் உருவாக்கப்படுகிறது. சி - மொழியிலுள்ள சுட்டுக்கு (Pointer) இணையற்றது — reference'
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 383)
3.
காட்சித் திரையிலுள்ள நகரும் சுட்டி அடுத்த உரு எங்கு அச்சியற்றப்படும் என்பதைக் காட்டும் — cursor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 59)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/23zryqh9/

தமிழ்
“குறிப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/23zryqh9/
APA
Oliyon Research. (2026). குறிப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/23zryqh9/
MLA
"குறிப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/23zryqh9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment