சிந்தி பசு
cinti pacu
இது மேற்குப் பாகிஸ்தான், கராச்சி மற்றும் பலுசிஸ்தானின் சில பகுதிகளில் காணப்படுகிறது.
இது மேற்குப் பாகிஸ்தான், கராச்சி மற்றும் பலுசிஸ்தானின் சில பகுதிகளில் காணப்படுகிறது. சிந்தி வகை மலைவாழ் பசுக்களில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் மூதாதை இனம் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காணப்படும்.
குணங்கள். சிந்தி இனம் ஏறத்தாழ சாகிவால் மற்றும் சிவப்பு ஆப்கான் பசுவைப் போலவே தோன்றினாலும், இது கிர் இனப் பசு வழியைச் சார்ந்ததாகும். சிந்தி நடுத்தரமான பசுவாகும். தோலின் நிறம் சிவப்பும், அடர் சிவப்புமாகத் தோன்றும். கழுத்தின் கீழ்ப் புறத்திலும், நெற்றியிலும் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படும். உடலில் மென்மையான, குட்டையான மயிர் காணப்படும். தளர்வான, நடுத்தரத் தடிப்புடைய தோல் வண்ணமுடையதாக இருக்கும். நடுத்தர அளவுடைய காதுகளையும், அடித்தளத்தில் சற்றுப் பருமனான, வெளிப்பக்கமாக மேல் நோக்கி வளைந்த கொம்புகளையும் கொண்டது.
இவ்வினக் காளைகளின் தோல் தொடைகளில் அடர் சிவப்பு நிறம் காணப்படும். திமில் நடுரத்தர அளவில் நன்கு வளர்ச்சியடைந்திருக்கும். கால்கள் கட்டையாகவும், வால் நீளமாகவும் இருக்கும். பசுக்களில் மடிக் காம்புகள் நடுத்தர அளவாக இருக்கும். மடி அங்கும், இங்கும் ஆடும் இயல்பு கொண்டிருக்கும். 1½ ஆண்டில் இவ்வினம் நன்கு வளர்ச்சியடைந்து, இனபெருக்கத்திற்குத் தகுதி பெறும். சிற்றூர்ப் புறங்களில், இதன் மூலம் ஆண்டிற்கு 1100 கிலோ பாலும், நல்ல பண்ணைகளில் 1800—5400 கிலோ பாலும் பெறலாம்.
இந்தியாவில் சிந்தி ஒரு சிறந்த கறவை இனமாகும். பால் உற்பத்தித் திறனைப் பெருக்கும் இந்த இனம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வளர்க்கப் படுகிறது. இது குறைந்த அளவிலேயே வேலைகள் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. —எம். தியாகராசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 237)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zx7r4jj4/
தமிழ்“சிந்தி பசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zx7r4jj4/APA
Oliyon Research. (2026). சிந்தி பசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zx7r4jj4/MLA
"சிந்தி பசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zx7r4jj4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment