நோ
nō
நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு
நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு
உலகில் மிக உயர்ந்த பரிசு என்று கருதப் படும் நோபல் பரிசை நிறுவியவர் இவரே ஆவார். ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு நோபல் என்பார், சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் சிறந்த வேதியியலாராகவும், பொறியியலாராகவும்,தொழிலதிபராகவும் விளங்கினார். இவரது கண்டு பிடிப்புகளில் முதன்மையாக, டைனமைட் என்னும் திறன் மிகு வெடி மருந்தாகவும், பிற வெடி பொருள்களையும் குறிப்பிடலாம். இவரது தந்தையான இம்மானுவேல் நோபல் என்பாரிடமிருந்து, பொறியியலில் அடிப்படை உண்மைகளையும், திறமைகளையும் இவர் வளர்த்துக் கொண்டார். நோபல் குடும்பம் 1842ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் நகரை விட்டு, லெனின் கிரேடில் அமைந்திருக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் என்னும் இடத்திற்கு குடி பெயர்ந்தது. வீட்டில் ஆசிரியர்களால் போதிக்கப் பட்ட நோபல் 16ஆம் வயதிலேயே சிறந்த வேதியியல் ஆய்வாளராக உருவாகினார். இவர் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷியா மற்றும் சுவீடன் நாட்டு மொழிகளில் புலமை மிக்கவராக விளங்கினார். 1850ஆம் ஆண்டு பாரிசுக்குச் சென்று வேதியியல் பயின்றார். பின்னர், அமெரிக்காவிற்குச் சென்று, மாமிட்டர் என்று பெயர் இடப்பட்ட போர்க் கப்பலை உருவாக்கிய ஜான் எரிக்சன் என்பாரின் கீழ், நான்காண்டுகள் பணியாற்றினார். நோபல் மீண்டும் செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகருக்கு திரும்பி, தம் தந்தையின் தொழிலகத்தில் பணியாற்றினார். இத்தொழிலகம் மிகவும் நசிந்து போய் விட்ட நிலையில், நோபல் சுவீடன் திரும்பி, வெடி பொருளான நீர்ம நைட்ரோ கிளிசரினைத் தயாரிக்கத் தொடங்கினார். இத்தயாரிப்பு தொடர்ந்து நடை பெற்று வரும் போது, 1864ஆம் ஆண்டில் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டு, அவர் இறுதி இளைய சகோதரரும், ஏனைய நான்கு தொழிலாளிகளும் மரணமடைந்தனர். சுவீடன் அரசு, நோபல் மீண்டும் தொழிலகம் தொடங்க அனுமதி வழங்கவில்லை. இவரைப் பைத்தியக்கார அறிவியலார் என்று பலர் இழித்து வந்தனர். இதைப் பற்றி நோபல் கவலையுறாமல், நைட்ரோ கிளிசரினை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன் படுத்துவது என்பதில் தம் கவனத்தைச் செலுத்தினார். நைட்ரோ கிளிசரினைக் கீசல்கர் உறிஞ்சியால் உட்கவர்ந்து, அதனை அதிர்ச்சியுறச் செய்தால், வெடிக்கும் என்று அப்போது கண்டு பிடித்தார். இதுவே டைனமைட் என்று குறிப்பிடப் படுகிறது. இவ்வரிய கண்டுபிடிப்பில் உரிமைப் பட்டயத்தை (patent) 1867ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெற்றார். மேலும் இவ்வெடி மருந்து குறித்துத் தீவிர ஆய்வு செய்து, டைனமைட்டைக் கண்டு பிடித்தார். 1876ஆம் ஆண்டு இதற்குரிய தன் உரிமைப் பட்டயத்தைப் பெற்றார். இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் புகையாத நைட்ரோ கிளிசரின் பொடி வெடி மருந்தைக் கண்டு பிடித்தார்.
வெடி மருந்து, உரிமைப் பட்டயங்கள் மற்றும் ரஷியாவில் இருக்கும் பக்கு எண்ணெய் வயல் முதலியவற்றால் நோபல் பெரும் செல்வந்தரானார். நோபல் தம் கண்டு பிடிப்புகளான வெடி மருந்துப் பொருள்களால் ஏற்படும் இடரை எண்ணி, உலகில் அமைதி நிலவும் என்று கருதினார். ஆனால், அவர் தம் எண்ணம் பொய்யானது என்பதைப் பின்னர் நிகழ்ந்த நடவடிக்கைகள் மெய்ப்பித்தன. நோபல், இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இளமைப் பருவத்தில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதியுள்ளார். இவர் சேர்த்து வைத்திருந்த பெரும் செல்வத்தை, மனித மேம்பாட்டிற்காகக் கண்டு பிடிக்கப் படும் உயரிய ஆராய்ச்சிகளில் சிறந்த படைப்பிற்கு வழங்க ஒரு நிதியகத்தை ஏற்படுத்தக் கொடுத்து உதவினார்.
நோபல் பரிசு. இது ஆல்ஃபிரட் நோபல் விருப்பத்தின் படி ஆண்டு தோறும் உலகம் முழுவதிலும் தேர்ந்தெடுக்கப் பட்ட கலை, அறிவியல் துறைகளில் சிறந்த படைப்பிற்காக வழங்கப் படும் மேன்மை மிகு பரிசாகும். 1968ஆம் ஆண்டு வரை இயற்பியல், வேதியியல் மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய ஐந்து துறைகளில் வழங்கப்பட்டு வந்த இப்பரிசு, 1969ஆம் ஆண்டு தொடக்கம் பொருளியல் அறிவியலுக்கும் கொடுக்கப் பட்டு வருகிறது. இவற்றைச் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கழகங்களும், ஒரு நார்வே நாட்டுக் கழகமும் தேர்ந்தெடுத்து வழங்குகின்றன. இப்பரிசு ஒவ்வோர் ஆண்டும் முந்தைய ஆண்டில், மனித குலத்திற்குப் பயன் படும் வகையில் மேற்கொள்ளப் பட்ட மிகச் சிறந்த ஆய்வுகளுக்காக நோபல் இறந்த நாளான டிசம்பர் 10ஆம் நாள் வழங்கப் பட்டு வருகிறது. இது 1901ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் வழங்கப் படுகிறது. 1969ஆம் ஆண்டு முதல் பொருளியல் அறிவியலுக்கான நோபல் பரிசு சுவீடன் வங்கியில் நிறுவப் பட்டு, ஆண்டு தோறும் வழங்கப் படுகிறது.
ஆல்ஃபிரட் நோபல் தம் உயிலில் பின் வரும் நிறுவனங்களைப் பரிசு வழங்குவதற்கான பிரதிநிதிகளாக நியமித்துள்ளார். அவை வருமாறு: இயற்பியல், வேதியியல்: சுவீடன் ராயல் அறிவியல் கழகம்; உடலியங்கியல் அல்லது மருத்துவம் : ராயல் கரோலின் மெடிகோ கிரற்சிக்கல் இன்ஸ்டியூட். இலக்கியம்: சுவீடன் இலக்கியக் கழகம். இவை அனைத்தும் சுவீடன் நாட்டில் அமைந்துள்ளன. அமைதிக்கான பரிசை வழங்க நார்வே நாட்டிலுள்ள ஆஸ்லோ நகரில் நோபல் பரிசுக் குழு ஒன்றுநியமிக்கப்பட்டது. அறிவியலில் நோபல் பரிசு வழங்கத் தேர்ந்தெடுக்கப் பட்ட ராயல் கழகமே பொருளியல் அறிவியியலும் சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுக்கப் பின்னர் நியமிக்கப் பட்டது. நோபல் உயில் படி, ஏற்படுத்தப்பட்ட நோபல் அறக் கட்டளை பரிசு வழங்குவதற்கான நிதி ஆதாரங்களை நிர்வகிப்பதிலும், பரிசு வழங்கும் கழகங்களுடன் இணைந்து, மேற்பார்வையிடுவதில் மட்டுமே ஈடுபடுகிறதேயன்றிப் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வித ஈடுபாடும் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு பரிசும் ஒரு தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும், குறிப்பிட்ட பணத் தொகையும் (நோபல் அறக் கட்டளையின் வருமானத்திற்கேற்ப இத்தொகை கொடுக்கப் படும்) அடங்கும்.
நோபல் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்க, ஒவ்வோர் ஆண்டும், நோபல் பரிசு விதிமுறைகளின்படி, தகுந்த வல்லநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இலையுதிர் காலத் தொடக்கத்தில் உகலம் முழுவதிலிருந்தும் கோரப் படும். ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரித் திங்கள் முதலாம் நாளுக்கு முன்னதாக, இவ்விண்ணப்பங்கள் அனுப்பும் போது, ஒருவர் தம்மைப் பற்றித் தாமே எழுதி அனுப்பினால், அவ்விண்ணப்பம் ஏற்கப் படாது.
பிப்ரவரி முதலாம் நாள் ஒவ்வோரு பரிசுக் குழுவும் கூடி, விண்ணப்பங்களை ஆராயும். தேவைப் பட்டால், பாகுபாடின்றிப் பிற நாடுகளிலிருந்து வல்லுநர்களை அழைத்து, ஆலோசனைகள் மேற்கொள்ளப் படும். செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாதத் தொடக்கத்தில் பரிசுக் குழுக்கள் தமது தெரிவுகளைப் பரிசு வழங்கும் நிறுவனத்திடம் அளிக்கின்றன. அரிதாகவே பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நவம்பர் 15ஆம் நாளுக்குள் பரிசுக்குரிய வர்களின் பெயர்கள் அறிவிக்கப் படும். அமைதிக்கான பரிசைத் தவிர ஏனைய அனைத்துப் பரிசுகளும் தனி மனிதர்களுக்கே வழங்கப் படும். அமைதிக்கான நோபல் பரிசு மனித சேவையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப் படும். இறந்தவர்களின் பெயர்களைப் பரிசுக்காகப் பரிந்துரை செய்ய முடியாது. ஆனால், பெயர்கள் பரிந்துரை செய்யப் பட்ட பின், தேர்ந்தெடுக்கப் பட்டவர் இறந்து விட்டால் அவரைச் சார்ந்தோருக்கு அப்பரிசு வழங்கப் படும். 1961ஆம் ஆண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு டாக் ஹாமர் ஸ்கோஜல்ட் என்பாருக்கும், 1931ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்திற்கான பரிசு எரிக் ஏ.கார்ல்ஃபெல்டட் என்பாருக்கும் அவர்கள் காலமான பின், வழங்கப் பட்டன.
நோபல் பரிசு முழுதும் ஒருவருக்கோ, சில சமயங்களில் இரண்டு அல்லது மூன்று தனி நபர்களுக்கோ பகிர்ந்தளிக்கப் படும். சில நேரங்களில், பரிசுக் குரியவர்கள் எவரும் தேர்ந்தெடுக்கப் படவில்லையெனில், பரிசுத் தொகை முழுவதும் அறக் கட்டளைக்கே திருப்பிக் கொடுக்கப் பட்டு விடும். இதனால், ஒரே துறைக்கு அதற்கடுத்த ஆண்டில் இரு பரிசுகள் வழங்கப் படும். பகைமையின் காரணமாக, சில அரசுகள் அந்த நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப் படும் பரிசாளர்கள் நோபல் பரிசுகளைப் பெறுவதற்கு அனுமதி வழங்காது. ஆனாலும், நோபல் பரிசு பெற்றோரின் பட்டியலில் பரிசு பெற இயலாதவரின் பெயர் பரிசு பெற மறுத்த, வாங்க இயலாத குறிப்புடன் இடம் பெறும். பரிசு பெற மறுப்பதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும், பெரும்பாலும் வெளி உலகச் சிக்கல் காரணமாகவே இவ்வாறு நிகழ்கிறது. சான்றாக 1935ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு காரில்வான் ஓசிட்ஸ்கி என்பாருக்கு வழங்கப்பட்டதைப் பெரும் அவமதிப்பாகக் கருதிய ஹிட்லர் அரசு 1937ஆம் ஆண்டு பிறப்பித்த சட்டத்தின் படி ஜெர்மானியர் நோபல் பரிசு பெறக் கூடாது என்று உத்தரவிட்டது. இவ்வாறு சில காரணங்களால், ஒரு முறை நோபல் பரிசைப் பெற இயலாத பரிசாளர் தம் நிலையை விளக்கி, நோபல் குழுவுக்கு விண்ணப்பித்தால், பின்னர் அவருக்கு நோபல் தங்கப் பதக்கமும், சான்றிதழ் பட்டயமும் வழங்கப் படும். ஆனால், பரிசுக்குரிய தொகை வழங்கப் படுவதில்லை.
நோபல், தம் உயிலில் எழுதி வைத்தவாறு தகுந்த பரிசாளர்கள் தேர்ந்தெடுக்கப் படாவிடில் அல்லது ஏதேனும் சிக்கல் காரணமாகத் தகுந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கத் தேவையான தகவல்கள் வந்து சேராவிடில், பரிசளிப்பது நிறுத்தி வைக்கப் படும். நோபல் பரிசு பெறுவதற்கு எந்நாட்டவரும், மொழியினரும், இனத்தவரும், மதத்தினரும் போட்டியிடலாம். இயற்பியல், வேதியியல், உடலியங்கியல் அல்லது மருத்துவம், இலக்கியம், பொருளியல், அறிவியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோம் நகரிலும், அமைதிக்கான பரிசு ஆஸ்லோ நகரிலும் டிசம்பர் 10ஆம் நாள் வழங்கப் படும். பரிசுக்குரியவர்கள் பொதுவாகத் தாமே நேரில் வந்து பரிசைப் பெற்றுக் கொள்வர். —த. தெய்வீகன் நோபல் பரிசு பெற்றவர்களின் விவரம் வேதியியல்
<!---- 1940 to 1942 நோபல் பரிசு வழங்கப் படவில்லை. ஆதாரம்: https://www.thoughtco.com/chemistry-nobel-prize-winners-608597 --->
கிளென் டி. சீபார்க் <!----- See: https://ta.wikipedia.org/wiki/வேதியியலுக்கான_நோபல்_பரிசு---->
அமெரிக்கா
ரிச்சர்டு சின்ஜ்
இங்கிலாந்து
மேக்ஸ் எஃப் பெருட்ஸ்
இங்கிலாந்து
கார்ல் சைக்ளர்
ஜெர்மனி
ஜார்ஜ் போர்ட்டர் <!---- ஜார்ஜ் போர்ட்டர் பெயர் விடுபட்டுள்ளது. ஆதாரம்: https://www.thoughtco.com/chemistry-nobel-prize-winners-608597 ---->
இங்கிலாந்து
இங்கிலாந்து
ஸ்டான்ஃபோர்டு மூர் வில்லியம் ஹெச்.ஸ்டெயின்
அமெரிக்கா அமெரிக்கா
ஜியாஃபீரி வில்கின்சன்
இங்கிலாந்து
வால்டிமிர் பிரிலாக்
யூகோஸ்லாவியா <!---- See: https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Chemistry---->
ஜியார்ஜ் லிட்டிக்
மே.ஜெர்மனி
வால்டெர் கில்பெல்ட் ஃபிரெடரிக் சங்கர்
அமெரிக்கா இங்கிலாந்து
ரோல்ட் ஹாஃப்மன்
அமெரிக்கா
இல்யா மெக்னிகோவ்
ரஷ்யா
ஜெ.ஜெ.ஆர். மெக்லியாட்
இங்கிலாந்து <!---- See: https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Physiology_or_Medicine ---->
சர்.சி. ஷெரிங்டன்
இங்கிலாந்து
வில்லியம் பி. மர்பி ஜார்ஜ் ஹெச். விப்பில்
அமெரிக்கா அமெரிக்கா
<!----https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு---->
ஆட்டோ லோவி
ஜெர்மனி
எட்வர்டு ஏ. டோய்சி
அமெரிக்கா
ஹெர்பெர்ட் எஸ்.கேசர்
அமெரிக்கா
எர்னஸ்ட் போரிஸ்செயின் லார்டு ஃபுளோரி
இங்கிலாந்து
ஆஸ்திரேலியா
ஜெர்ட்டி டி.கோரி பெர்னார்டோ ஹோவ்சே
அமெரிக்கா அர்ஜென்டினா
அன்டோனியோ எகாஸ் மோனிஸ்
போர்ச்சுக்கல் <!---- https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு---->
எட்வர்டு சி. கெண்டல் டாடியூசுஸ் ரெய்செஸ்டைன்
அமெரிக்கா
சுவிட்சர்லாந்து
சர் ஹெச்.ஏ.கிரப்ஸ்
இங்கிலாந்து
தாமஸ் ஹெச்.வெல்லர் ஃபிரெடரிக் ராபின்ஸ்
அமெரிக்கா
அமெரிக்கா
டிக்கின்சன் ரிச்சர்ட்ஸ் ஆண்ட்ரே எஃப் குவாரனான்ட்
அமெரிக்கா
அமெரிக்கா
எட்வர்ட் எல். டாட்டம் ஜோசுவா லீடர்பெர்க்
அமெரிக்கா
அமெரிக்கா
பாக்டீரியா மரபணு
ஆர்த்தூர் கோர்ன்பெர்க்
அமெரிக்கா
பீட்டர் பி. மெடாவார்
இங்கிலாந்து
ஜேம்ஸ் டி.வாட்சன் மாஸ்ரிஸ் வில்கில்ஸ்
அமெரிக்கா இங்கிலாந்து
அவன் லாயிட் ஹாட்கின் ஆன்ட்ரூ ஹக்சிலி
இங்கிலாந்து
இங்கிலாந்து
ஃபியோடார் லினன்
ஜெர்மனி
ஜேக்குவஸ் மோனாட் ஆண்ட்ரி லோஃவாப்
ஃபிரான்ஸ்
ஃபிரான்ஸ்
ஃபிரான்சிஸ் பிட்டன்ரோஸ்
அமெரிக்கா
ஜியார்ஸ் வால்ட் ராக்னர் ஏ.கிராணிட்
அமெரிக்கா சுவீடன்
ஹர் கோபிந்த் குரானா மார்ஷெல் டபிள்யூ நிரன்பெர்க்
இந்தியா
அமெரிக்கா
<!---- See: https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு---->
ஆல்ஃபிரட் டி.ஹெர்சி சல்வேடார் இ.லூரியா
அமெரிக்கா
அமெரிக்கா
சர் பெர்னார்டு காட்ஸ் உல்ஃப் வான் ஆய்லர்
இங்கிலாந்து
சுவீடன்
ராட்ணி போர்ட்டர்
இங்கிலாந்து
கொனார்டு லாரன்ஸ் நீக்கோலாஸ் டின் பெர்ஜென்
ஆஸ்திரேலியா
நெதர்லாந்து
கிறிஸ்டியன் ஆர்.டி டுவே ஜார்ஜ் இ.பாலடே
பெல்ஜியம்
அமெரிக்கா <!---- See : https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு---->
டேவிட் பால்ட்டிமோர்
அமெரிக்கா
டி.கார்ல்டன் கஜட்ஸ்க்
அமெரிக்கா
ரோஜர் குல்லிமின் ஆண்ட்ரூ ஷாலி <!----https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு---->
அமெரிக்கா அமெரிக்கா
டேனியல் நாதன்ஸ் ஹாமில்ட்டன் ஓ.சுமிட்
அமெரிக்கா அமெரிக்கா
காட்ஃபிரி என். ஹல்லிஃ ஹன்ஸ்ஃபீல்ட்
இங்கிலாந்து
ஜார்ஜ் டி.ஸ்நெல் ஜீன் டாஸ்ஸெட்
அமெரிக்கா ஃபிரான்ஸ் <!---- See : https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு ---->
டார்ஸ்ட்டன் N.வீசல் டேவிட் H.ஹூபெல்
ஸ்வீடன்
அமெரிக்கா
பென்கட் ஐ.சாமூவேல்சன் ஜான். ஆர்.வேனி
ஸ்வீடன்
இங்கிலாந்து
<!---- See :https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு ---->
ஜியார்ஜஸ் ஜெ.எஃப்.கோலர் சீசர் மில்ஸ்டீன்
ஜெர்மனி
அர்ஜென்டினா
<!---- https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு ---->
ஃபிரெடரிக் பாசி
ஃபிரான்ஸ்
சார்லஸ் ஆல்பர்ட் கோபட்
சுவிட்சர்லாந்து
லூயிஸ் ரேனால்ட்
ஃபிரான்ஸ் <!---- See: https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_Peace_Prize_laureates---->
ஃபிரெடரிக் பேஜர்
டென்மார்க்
ஆகஸ்ட் பீராநெர்ட்
பெல்ஜியம்
ஆல்ஃபிரட் ஃபிரிட்
ஆஸ்திரேலியா
கிறிஸ்டியன் லுவஸ் லாங்கே
நார்வே
சார்லஸ் ஜி டேவெஸ் அரிஸ்டைடு பிரான்ட்
அமெரிக்கா ஃபிரான்ஸ்
லுட்விக் கியூட்
ஜெர்மனி <!---- See: https://ta.wikipedia.org/wiki/அமைதிக்கான_நோபல்_பரிசு ---->
நிக்கோலஸ் மூர்ரே பட்லர்
அமெரிக்கா
ஜான் ஆர். மோட்
அமெரிக்கா
நண்பர்கள் சேவைக் கழகம்
இங்கிலாந்து
<!----https://ta.wikipedia.org/wiki/அமைதிக்கான_நோபல்_பரிசு---->
லிடுக் தோ (மறுத்து விட்டார்)
வட வியட்நாம்
சீன் மெக்பிரைட்
அயர்லாந்து
பெட்டி வில்லியம்ஸ்
வட அயர்லாந்து
அன்வர் சதாத்
எகிப்து
அல்ஃபோன்சா கார்சியா ரோபெல்ஸ்
மெக்சிகோ
ஜெ. எச்சிகாரேஇ எலில்குரி
ஸ்பெயின்
நாடக ஆசிரியர்
ஹெச்.போன்டோ பிடான்
டென்மார்க் <!---- See : https://en.wikipedia.org/wiki/Nobel_Prize_in_Literature ---->
நாவலாசிரியர்
<!--- ஃபிரான்ஸ் என்பது தவறு. ஆதாரம் : https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Literature ---->
நெல்லி சாகஸ்
சுவீடன்
கவிஞர்
<!---- See: https://ta.wikipedia.org/wiki/இலக்கியத்துக்கான_நோபல்_பரிசு_பெற்றவர்களின்_பட்டியல்---->
ஹாரி மார்ட்டின்சன்
சுவீடன்
நாவலாசிரியர், கவிஞர்
லாரென்ஸ் விடுபியட்டர் சீமன்
நெதர்லாந்து நெதர்லாந்து
பெக்யூரெல் பியரி கியூரி மேரி கியூரி
ஃபிரான்ஸ்
ஃபிரான்ஸ் (போலந்து)
கார்ல் பிரான்
ஜெர்மனி
<!---- See: https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Physics ---->
சர் லாரன்ஸ் பிராக்
இங்கிலாந்து
ஜீன் பெர்ரின்
பிரான்ஸ்
ஆர்தர் ஹெச். காம்டன்
அமெரிக்கா
மின்னூட்டம் கொண்ட துகள்களால் X கதிர்களின் சிதறல் கண்டு பிடிப்பு
எட்வின் சுரோடிஞ்சர்
ஆஸ்திரியா
ஜார்ஜ் பி.தாம்சன்
இங்கிலாந்து
எர்னஸ்ட் வால்டன்
அயர்லாந்து
எட்வர்டு பர்செல்
அமெரிக்கா
வால்தர் போத்தே
ஜெர்மனி
ஒன்றிப்பு முறை மூலம் காஸ்மிக் கதிர்களின் பகுப்பாய்வு
பாலிகார்ப் குஸ்ச்
அமெரிக்கா
எலெக்ட்ரான் காந்தத் திருப்புத் திறன்
ஜான் பார்டீன் வால்டர் பிரட்டயன்
அமெரிக்கா அமெரிக்கா
சென் நிங்யாங்
சீனா
இல்யா எம். ஃபிராங்க் இகோர் ஒய். டேம்
ரஷ்யா
ரஷ்யா
எமிலியே செக்ரெ
அமெரிக்கா (இத்தாலி)
மரியா கோப்பர்ட் மேயெர் யூஜின் பால் விக்னர்
ஜெர்மனி
அமெரிக்கா
அணுக் கருவினுள் புரோட்டோன், நியூட்ரான் இடையீடு பற்றிய அறிமுறை
நிக்கோலாய் பேசோ அலெக்சாண்டர். பீரகோரோவ்
ரஷ்யா
ரஷ்யா
ரிச்சர்டு ஃபெய்ன்மன் டொமனாகா ஷின் இச்சிரோ
அமெரிக்கா
ஜப்பான்
ஹான்ஸ் ஆல்ப்வென்
ஸ்வீடன்
லியான் என்.கூப்பர் ராபர்ட் ஸ்ச்ரெய்ஃபர்
அமெரிக்கா அமெரிக்கா
ஐவார் ஜியாயெவர்
பிரயன் ஜோசப்சன்
அமெரிக்கா (நார்வே) இங்கிலாந்து
அண்டோனி ஹியூவிஷ்
இங்கிலாந்து
பென் மோட்டெல்சன் ஜேம்ஸ் ரெயின் வாட்டர்
அமெரிக்கா
அமெரிக்கா
சாவோ சுங் டிங்
அமெரிக்கா
<!---- https://en.wikipedia.org/wiki/J/psi_meson ---->
சர் நெவில் மாட் ஜான் எச். வேன் வீளெக்
இங்கிலாந்து அமெரிக்கா
ராபர்ட் டபிள்யூ. வில்சன் பியோட்டர் எல். காபிட்ஸா
அமெரிக்கா
ரஷ்யா
தாழ் வெப்பநிலை இயற்பியலில் அடிப்படை
ஷெல்டன் எல். கிளாஸ்ஷோ அப்துஸ்சலாம்
அமெரிக்கா
பாகிஸ்தான்
வால் L. ஃபிட்ச்
அமெரிக்கா
நிகோலஸ் பிளொயெம் பெர்ஜன் ஆர்தர். எல். ஸ்சாவ்லோவ்
அமெரிக்கா
அமெரிக்கா
லேசர் நிற மாலையியல் ஆய்வு
வில்லியம் ஏ. பௌலெர்
அமெரிக்கா
சைமன் வாண்டர்மீர்
நெதர்லாந்து
<!---- See : https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Physics ---->
ஜெர்டு பின்னிங் ஹென்ரிச் ரோரர்
ஜெர்மனி சுவிட்சர்லாந்து
ஜார்ஜ் பெர்நாட்ஸ்
சுவிட்சர்லாந்து
நோய்க் குறியியல்
மருத்துவத்தின் ஒரு பிரிவாகிய நோய்க் குறியியல், நோயினால் திசுக்களிலும், உறுப்புகளிலும் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிந்து, நோயினை அறிய உதவுகிறது. நோய்க் குறியியலைப் பற்றிக் காண்பதற்கு முன்பு, நலமான நிலையில் உறுப்புகளும், திசுக்களும் அமைந்திருக்கும் விதத்தைப் பற்றி அறிய வேண்டும். அதாவது, உறுப்புகள் திசுக்களின் அமைப்பு, செயல் முறை, வேதி நிலை ஆகியவற்றை நன்கு ஆராய வேண்டும். இதனால், நோய் வாய்ப் பட்ட நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய முடியும். ஏனெனில், நோய் எனப் படும் நிலை இயல்பான நிலையின்றும் மாறு பட்டதாகும். நோய்க் குறியினைப் பின் வரும் வகைகளாகப் பிரிக்கலாம்.
பொது நோய்க் குறியியல். இப்பிரிவு, பல்வேறு வித நோய்களினால் திசுக்களிலும், உறுப்புகளிலும் ஏற்படும் பொதுவான மாற்றங்களைக் கொண்டுள்ளது.
சிறப்பு நோய்க் குறியியல். இவ்வகையில், ஒரு குறிப்பிட்ட உறுப்பையோ, திசுவையோ தாக்கும் நோய்களினால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிக் கூறப்படும். அதாவது, குருதி ஒட்ட உறுப்புகளைத் தாக்கும் நோய், சிறுநீரக உறுப்புகளில் ஏற்படும் நோய் ஆகியவற்றினால் ஏற்படும் மாற்றங்களால், ஏற்படும் மாற்றங்கள் இப்பிரிவில் விளக்கப் படும்.
நோயறியும் நோய்க் குறியியல். இது எந்நோய் ஏற்பட்டுள்ளது எனக் கண்டறிய மருத்துவ நிலைகளில் உதவுகிறது.
ஆய்வு நோய்க் குறியியல். இது செயற்கையாக ஆய்வக விலங்கினங்களில் ஏற்படுத்தப் படும் நோயினால் உண்டாகும் மாற்றங்களைக் கண்டறிய உதவுகிறது.
ஒப்பீட்டு நோய்க் குறியியல். இப்பிரிவில் விலங்கினங்களில் ஏற்படும் நோய்களும், மனிதர்களில் ஏற்படும் நோய்களும் ஒப்பீடு செய்யப்படுகின்றன.
காரண நோய்க் குறியியல். இப்பிரிவில் நோய்க் குறியியலை, நோயுண்டாக்கும் காரணங்களைக் கொண்டு ஆய்வு செய்யலாம். இதனால், நோயினைத் தடுக்கப் பல்வேறு வழி முறைகளைக் கையாள முடிகிறது. நோயுண்டாக்கும் காரணங்கள் உடலின் உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ உண்டாகின்றன. இவ்வகைக் காரணங்களை இயற்பிய, வேதியிய, உயிரியல் அடிப்படையில் வகைப்படுத்தலாம். உயிரியல் காரணங்களை நுண்ணுயிரியல், நச்சுயிரியல், பூசணக் காளான்களால் ஏற்படும் நோய்க்குறியியல் என மேலும் வகைப் படுத்தலாம்.
நோயுண்டாக்கக் காரணங்கள். விலங்கினங்கள் சோதித்து அறியப் படும் இவ்வகைக் காரணங்கள் உடனடிக் காரணங்களாகவோ, மறைமுகக் காரணங்களாகவோ, அடிப்படைக் காரணங்களாகவோ இருக்கலாம். நோய் உற்பத்திக் குறியியல் என்பது நோய் உண்டாகக் காரணமாக உள்ள அடிப்படைச் செயல்களைப் பற்றி விளக்குகிறது. காட்டாகப் புற ஊதாக் கதிர், வெண்ணிறத் தோல் உடைய விலங்கினங்களில் ஏற்படுத்தும் நோயினைப் பற்றிக் கூறலாம். வெண்ணிறத் தோலில், வடி கட்டும் நிறப் பொருள்கள் இல்லாமையால், இக்கதிர்கள் ஊடுருவி, குருதி நாளங்களில் குருதி கசியும் நிலை அதிகரித்து, சிவப்பு நிற வீக்கங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையைச் சூரிய–எரிப்பு எனக் கூறுவர். இதற்குத் தோலில் உள்ளவை சுட்டும் நிறப் பொருள்களின் செயல்பாடு அடிப்படையாக விளங்குகிறது.
நோய்க் குறிகள். அறிவுப் பிரிவில் பாதிக்கப் பட்ட விலங்குகளோ, மனித இனமோ வெளிப்புறமாகத் தோற்றுவிக்கும் குறிகளைப் பற்றி விளக்கப் படுகிறது. நுரையீரல் வீக்க நோயில், காய்ச்சல், சுவாசத்தில் கடினம், வேக நாடித் துடிப்பு,சளி வெளியேறுதல் போன்ற குறிகள் காணப் படும்.
நோய்ச் சுவடுகள். நோயினால் நிறத்திலும், உறுப்புகளிலும் ஏற்படும் மாற்றங்களை நோய்ச் சுவடுகள் எனலாம். இம்மாற்றங்கள் கண்களாலும் உருப் பெருக்கியாலும் காணக் கூடியவாறு உள்ளன. எடுத்துக் காட்டாகப் பெரிய அம்மை நோய், தோலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் அவற்றின் சுவடுகளாக விளங்குகிறன.
நோய் கண்டறியும் முறையில், நோயுண்டாகும் காரணம், நோய்ச் சுவடு, நோய்க் குறி ஆகியன பற்றி விளக்கப் படுகிறது.நோய்க் காரணி தாக்கிய நாளிலிருந்து நோய் தோன்றும் நாள் வரை நோய் வெளிப் படும் காலம் ஆகும். காட்டாக, வெக்கை நோய்க்கான நச்சுயிரி, விலங்கினத்தைத் தாக்கிய நாளிலிருந்து 4–5 நாள்களுக்குப் பிறகு, நோய்க் குறிகள் தோன்றும். எனவே, வெக்கை நோய்க்கு, நோய் வெளிப்படும் காலம் 4–9 நாள்கள் ஆகும். இக்காலம் சில மணி நேரங்களிலிருந்து, பல ஆண்டுகள் வரை அமையலாம். நோய் உண்டாகும் வழி, எவ்வகை உறுப்புகள் அல்லது திசுக்களின் வழியாக நோய் சென்று, அதன் முடிவு நிலையை அடைகிறது என்பதைப் பற்றி விளக்குகிறது. நோயின் தொடக்கம், விரைவாகவோ, மெதுவாகவோ இருக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட விலங்கினம், நோயினால் விடுபட்டு, இயல்பு நிலையை அடையலாம் அல்லது இறப்பையும் ஏற்படுத்தலாம்.
நோய்க் குறியியல் வல்லுநர் இறந்த விலங்கினத்தை அறுவை செய்து காணும் மாற்றங்களைப் பிண ஆய்வில் காணலாம். நோய்த் திசு ஆய்வினைக் கொண்டு பாதிக்கப்பட்ட உயிருடன் உள்ள விலங்கினத்திலிருந்து எடுக்கப்படும் திசுக்களைக் கொண்டு நோய் அறியப் படுகிறது.
நோய்க் காரணங்கள். நோய்க் காரணங்களை இருவகையாகப் பிரிக்கலாம். அவற்றில் ஒன்று அடிப்படைக் காரணம், மற்றொன்று நோயினைத் தோற்றுவிக்கும் காரணம். நோய்க்கான அடிப்படைக் காரணம் மரபியல் வழியாகவும், மரபியல் அற்ற வகையாகவும் இருக்கலாம். சில விலங்கினப் பிரிவுகள் சில வகை நோய்க்கு உள்ளாக வல்லவை. சான்றாகப் பாலுக்காக வளர்க்கப் படும் மாடு, இறைச்சிக்காக வளர்க்கப் படும் மாடுகளைவிட எளிதில் பாதிக்கப் படக் கூடியது. அதிக உடல் எடையைக் கொண்ட அல்ஷேசன் போன்ற நாய்கள், எலும்பு தொடர்பான நோய்க்கு எளிதில் உட்படக் கூடியவை.
பொதுவாக, பெண் விலங்கினங்கள், சில வகை நோய்க்கு எளிதில் ஆட்படக் கூடியவை, காட்டாக, சிறுநீரக நோய் ஆண் நாய்களையும், பசுக்களையும் எளிதில் தாக்க வல்லது. விலங்கினங்களில் நிறமும், சில நோய்க்குக் காரணமாக விளங்குகிறது. சாம்பல் நிறக் குதிரைகள் ஒரு வகைத் தோல் புற்று நோய்க்கு எளிதில் உள்ளாகக் கூடியவை. வெண்மை நிற விலங்கினங்கள், சூரிய ஒளியினால் பாதிக்கப்பட்டு, நோய் வாய்ப்படக் கூடியவை.
நோயினைத் தோற்றுவிக்கும் காரணங்களை, இயற்பிய காரணங்கள், வேதிக் காரணங்கள், உயிரியல் காரணங்கள் எனப் பிரிக்கலாம். கதிர் வீச்சு, உறை நிலை மின்சாரம், வெளிப் புறக் காற்றழுத்தம், காயங்கள் போன்றவை இயற்பிய காரணங்களாகலாம். பல்வேறு வித அமிலப் பொருள்களும், வேதிப் பொருள்களும், பூச்சிக் கொல்லிகளும், காளான் கொல்லிகளும், மருந்துப் பொருள்களும் நோய் உண்டாக்கக் காரணங்களாகின்றன
உயிரியல் காரணங்கள். நுண்ணுயிரி, நச்சுயிரி, ஒட்டுண்ணி, பூசணம் போன்றன நோயுண்டாக்கும் காரணங்களாக உள்ளன. இவ்வகை உயிரியல் காரணங்கள், பல்வேறு நச்சுப் பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலமாகவும், ஒவ்வாமை காரணமாகவும், பல்வேறு உறுப்புகளை அடைந்து, செயலற்றதாக்கச் செய்வதன் மூலமாகவும் நோயுண்டாக்குகின்றன. நோய் வாயில்கள் தோல். தோல் வழியாகப் பல்வேறு நோய்கள் உடலை ஊடுருவுகின்றன. சில வகை ஒட்டுண்ணிகள் நோயில் சில உயிரினங்கள், தோல் பாதிக்கப் படும் போது, உள் நுழைந்து நோயுண்டாக்குகின்றன. கடிக்கும் ஒட்டுண்ணி, கொசு மூலமாகவும், தோல் வழியாக நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
உணவுக் குழாய். உணவுக் குழாய், வாய், குடல் போன்றவற்றின் மூலம் பல்வேறு வகை நோய் பரவ வாய்ப்புண்டு. வாயிலோ, குடலிலோ புண்கள் ஏற்படும் போது, அவற்றின் வழியாக நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நுழைந்து, நோயினை ஏற்படுத்துகின்றன. கண் வழியாகப் பரவும் நுண்ணுயிரிகளால், மாடுகளில் கருச் சிதைவு நோய் பரவக் கூடும்.
சுவாசக் குழாய். சுவாசக் குழாயில் உள்ள சளிப் பொருளால், பல வித நோய்கள் பரவ வாய்ப்புண்டு. மேலும், இனப் பெருக்க உறுப்பு மூலமாக, நாய்களில் ஒரு விதப் புற்று நோய், பசுவினத்தில் கருச் சிதைவு நோய், பால் வினை நோய்களும் ஏற்படலாம்.
புரத வளர்ச்சி மாற்றம் பாதிக்கப் படுவதால், செல்கள் கலங்கிய நிலையுடனும், வீக்கத்துடனும் காணப் படும். இது செல்களில் முதல் முதலாகத் தோன்றும் மாற்றம் ஆகும். ஆக்சிஜன் இராமையினாலும், நச்சுப் பொருள் தாக்குவதாலும் இந்நிலை ஏற்படுகிறது. இதே போல், செல்களில் ஓட்டைகள் தோன்றுதல், செல்கள் கண்ணாடி போன்ற நிலையினை அடைதல், செல்களில் அயற்பொருள் காணப் படல் ஆகிய பல்வேறு நிலைகள் தோன்றுகின்றன.
குருதி அணுக்கள் நுண்ணுயிரிகளைக் கொல்லுதல். நோய்க் குறியியலில், குருதி அணுக்கள் நுண்ணுயிரிகளைக் கொல்லுவது இன்றியமையாத செயலாகும். இதில், வெள்ளையணுக்கள் பெரும் பங்கு கொள்ளும். இந்த அணுக்கள் நுண்ணுயிரிகளை வளைத்து, பல்வேறு நொதிப் பொருள்களை அவற்றின் மேல் செலுத்தி, அவற்றினை அழித்து விடுகின்றன. திசு அழற்சி காணப் படும் நீர்மத்தினை அணுக்களாகவும், நீர்மப் பொருளாகவும் பிரிக்கலாம். அணுக்களில், நியூட் ரோஃபில், பேசோஃபில், ஈசினோஃபில், லிம்போசைட், பிளாஸ்மா அணுக்கள், மேக்ரோபேஜ் போன்ற அணுக்கள் காணப் படுகின்றன.
திசு அழற்சியால் ஏற்படும் சீழ்ப் பொருளில், சேதமடைந்த திசுக்களும், நியூட்ரோஃபில் எனப் படும் வெள்ளணுக்களும் காணப் படும். திசுவீக்கத்தினால் கட்டிகளும் ஏற்படும் வாய்ப்புண்டு. இந்தத் திசு அழற்சியை, உடனடி வகை (acute) என்றும், நாட்டபட்ட வகை (Chronic) என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். தூண்டுதல்களுக்கான காரணத்தைப் பொறுத்து இவ்விரு வகைளும் ஏற்படுகின்றன. திசு அழற்சி ஏற்படுவதற்கான முதன்மைக் காரணம், காரணப் பொருளை வெளித் தள்ளுவதேயாகும். திசு அழற்சி ஏற்படும் காரணம் மிதமாக இருந்தால், அதற்கான காரணி வெளியேற்றப் படுகிறது அல்லது முறியடிக்கப் படுகிறது. சேதமடைந்த திசுக்கள் உறிஞ்சப் படுகின்றன. குருதி அணுக்கள் இங்குமிங்கும் அலைந்து, இறுதியில் குருதிக் குழாயினை அடைகின்றன.
திசுப் புண் ஆறும் நிலை. நோய்க் குறியியலில் திசுப் புண் ஆறும் நிலை மிக இன்றியமையாதது. திசு அழற்சிக்குப் பின்பு, அதற்குண்டான காரணத்தை அகற்றிய பின்பு, திசு இயல்பு நிலையினை அடைவது நோய்க் குறியியலில் குறிப்பிடத் தக்க நிலையாகும். இந்தப் புண் ஆறும் நிலை, வயது, உட்கொள்ளும் உணவின் நிலை, வைட்டமின் பொருள்கள், குறிப்பாக, வைட்டமின் ஈ, ஆகியனவற்றைப் பொறுத்து மாறு படும். அதே போல் , தைராக்ளின் எனப் படும், நாளமில்லா சுரப்புப் பொருளும் , திசுப் புண் ஆறுவதற்கு மிகவும் உதவும்.
நோய்க் குறியியலில் காய்ச்சல். நோய்க் குறியியலில், காய்ச்சல் முதன்மையான அறிகுறியாகும். சாதாரணமாக, உடலின் வெப்ப நிலை அதிகரித்தால், அதைச் சமச் சீர் ஆக்கும் முயற்சிகள் உடலில் ஏற்படும். வியர்வை, சுவாச எண்ணிக்கை மிகுவதாலும், கதிரி வீச்சு போன்ற முறைகளாலும், உடல் வெப்ப நிலை குறைய வாய்ப்புண்டு. ஆகவே, காய்ச்சலின் போது, வளர் சிதை மாற்றங்களும், சுவாச எண்ணிக்கையும், பசியின்மையும், வாந்தி எடுக்கும் எண்ணமும் , மலச் சிக்கலும், தாகமும் அதிகரித்தும், சிறுநீர் வெளியேற்றம், உடலில் நீர் ஆகியவை குறைந்தும், காணப் படும். காய்ச்சலுக்கான காரணங்கள் பலவாகும். அவற்றில் முதன்மையாகக் குறிப்பிடத் தக்கவை. கிராம் எதிர் நுண்ணுயிரிகள் உண்டாக்கும் நச்சுப் பொருள்கள், நச்சுயிரிகள், நோயுண்டாக்கும் ஓரணுக்கள் , பூசணப் பொருள்கள் , ஒவ்வாமை போன்றவையாகும். காய்ச்சலின் பயனாகக் குருதி வெள்ளணுக்கள் நுண்ணுயிரிகளை செயலற்றதாக்கும் திறன், நியூட்ரோபில் வகை வெள்ளணுக்களின் எண்ணிக்கை , நோய் எதிர்ப்பு அணுக்கள் உற்பத்தி ஆகியவை அதிகரித்துக் காணப்படும். மேலும், நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள், அதிக உடல் வெப்ப நிலையில் உயிர் வாழ வாய்ப்பு உண்டு.
நோய்க் குறியியலில் குருதி ஓட்டப் பாதிப்புக்கள். குருதிப் போக்கு, நோய்க் குறியியலில் பல வகைப் படும். வாய், மூக்கு போன்ற பல்வேறு உறுப்புகளிலிருந்து வெளிப்படுவதற்கு ஏற்றவாறு, குருதிப் போக்கு நோய்க் குறியியலில் வகைப் படுத்தப் படுகிறது. இந்தக் குருதிப் போக்கிற்குக் குருதிக் குழாய்கள் சேதமடைதல், வைட்டமின் மற்றும் வகைக் குறைவு எனப் பல காரணங்களைக் கூறலாம். சில நேரங்களில் இந்தக் குருதிப் போக்கு, குருதிக் கட்டிகளாகவும் மாற வாய்ப்புண்டு.
குருதிக் குழாய் கட்டி. உயிருடன் உள்ள போதே , குருதிக் குழாய்களின் உள்ளே ஏற்படும் கட்டிகளைத் திராம்போஸ் எனக் கூறுவர். இவ்வகை கட்டி, குருதிக் குழாயின் உட்சுவர் பாதிக்கப் படுவதன் மூலமும், குருதிச் சிரையிலுள்ள பொருள்கள் பாதிக்கப் படுவதன் மூலமும் ஏற்படுகின்றன. இக்கட்டியை இதயத்தில் ஏற்படும் கட்டி என்றும், குருதித் தமனியில் ஏற்படும் கட்டி என்றும், குருதிச் சிரையில் ஏற்படும் கட்டி என்றும், குருதி நுண் குழாயில் ஏற்படும் கட்டி எனவும், அடைப்புக் கட்டி எனவும், வலியுள்ள கட்டி எனவும், நுண்ணுயிரிகள் கோர்த்த கட்டி எனவும், வெளுத்த கட்டி எனவும், சிவப்பு நிறக் கட்டி எனவும் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.
சில கட்டி சுருங்கி, உறிஞ்சப் படுகின்றன. சில, குருதி கொண்டு செல்லும் குழாய்களை அடைத்துக் கொள்வதன் மூலமும், குருதி ஓட்டம் திசுக்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்திப் பாதிக்கப் படும் திசுவினைப் பொறுத்து நோய்க் குறிகள் ஏற்படுகின்றன. இதயத்திற்குக் குருதி கொண்டு செல்லும் திசுக்கள் பாதிக்கப் படும் போது, இறப்பையும் ஏற்படுத்தும். நோய்க் குறியியலில் நீர்க் கோப்பு. திசுக்களின் இடையிலும் , உடலில் உள்ள குழிகளிலும் நீர்க் கோப்பு ஏற்படுகிறது. இந்த நீர்க் கோப்பு குருதி நுண் குழாய்களில் சுவர்களின் ஊடுருவும் தன்மை அதிகப் படுவதாலும் , குருதி சவ்வூடு பரவும் அழுத்தம் குறைவதாலும் ஏற்படுகிறது. குருதியில் சவ்வூடு பரவும் அழுத்தம், குருதி இழப்பினாலும், சிறுநீரகப் பாதிப்பினாலும், ஈரல் நோயிலும், சத்துணவு உட்கொள்ளாமையினாலும் ஏற்பட வாய்ப்புண்டு.
நோய்க் குறியியலில் அதிர்ச்சி. குருதிப் போக்கு, காயம், தீப்புண், நச்சுப் பொருள்களை உட்கொள்ளுதல் , மனிதர்களில் மன நோய்க் காரணங்கள் ஆகியவற்றால் அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. அதிர்ச்சியினை முதல் வகை, இரண்டாம் வகை எனப் பிரிக்கலாம். இரண்டாம் வகை அதிர்ச்சி , முதல் வகை அதிர்ச்சியினை விடத் தீமை பயக்கும். இவ்வகையில், குருதியின் கன பரிமாணத்திற்கும், குருதி சுற்றும் இடத்திற்கும் உள்ள மாறுபட்ட விகிதம் அறியப் படும். குருதி சுற்றும் இடம் அதிகரித்து, அவ்விடத்திற்குச் செல்லும் குருதி அளவு குறையும் போது , ரத்த அழுத்தமும் குறைகிறது. இந்நிலையை ஈடு செய்ய, வெளிப் புறக் குருதிக் குழாய்கள் சுருங்கி , மூளைக்கும், இதயத்திற்கும் குருதி ஓட்டம் அதிகரிக்கச் செய்யப் படுகிறது. இதனால், இதயத் துடிப்பு அதிகரித்து, இறப்பு ஏற்படுகிறது. இவ்வகை அதிர்ச்சி, கடுமையான காயங்கள், உடலின் பல்வேறு பகுதிகள் நொறுங்கக் கூடிய விபத்து, பல நாள்கள் தொடர்ந்து வயிற்றுப் போக்கு, சோடியம் உப்புக் குறைவு, நீரிழிவு, மயக்கம் ஆகியவற்றில் காணப் படும்.
நோய்க் குறியியலில் வெப்ப நிலை, தீக்காயம், ஒளி, வேதிப் பொருள்கள், மின்சாரம், கதிர் வீச்சு ஆகியன பல்வேறு வகைத் திசு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் , உடலில் வைட்டமின் குறைவும், மிகையும் பல்வேறு வித நோய்க் குறியியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. புற்று நோய்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் நோய்க் குறியியலில் மற்றுமொரு பிரிவாகும். புற்று நோயினை, அதன் அமைப்பு, வளர்ச்சி, பரவும் விதம், நோய்க் குறி உண்டாக்கும் வகை, நுண் திசுஅமைப்பு ஆகியவற்றைப் பொறுத்துத் தீதுறு வகை, தீதற்ற வகை எனப் பிரிக்கலாம். —வே. புருஷோத்தமன்
நோய்த் தடுப்பியல்
விலங்குகள் நோய்வாய்ப் படாமல் இருப்பது பற்றி விளக்கும் ஒரு பகுதி, நோய்த் தடுப்பியல் ஆகும். நோய் நுண்ணுயிரிகள் உலகின் அனைத்து இடங்களிலும் பரவலாக இருக்கின்றன. அதாவது, நோய் நுண்ணுயிரிகள், சுவாசிக்கும் காற்று, பருகும் நீர்,உண்ணும் உணவு முதலிய அனைத்திலும் இருக்கும். இவற்றின் மூலம் உடலினுள் சென்ற நோய் நுண்ணுயிரிகள், நோய் எதிர்ப்புத் திறனால் நோயை உருவாக்காமல் மாண்டு விடுகின்றன. உடலின் இரு வகையான செயல்பாடுகள் மூலம், நோய் எதிர்ப்புத் திறன் உண்டாகின்றது. அவை முதன்மைத் தற்காப்பு (Primary defence), இரண்டாம் தற்காப்பு (Seconary defence) என்பன.
முதன்மைத் தற்காப்பு. உடலை மூடியுள்ள தோல் மற்றும் சவ்வு மூலம் நோய் நுண்ணுயிரிகள் உடலில் செல்லாமல் தடுக்கப் படுகின்றன. தோலில் சுரக்கும் வேர்வைத் துளிகள் நோய் நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை கொண்டவை. கண், காது, மூக்கு, இனப் பெருக்க உறுப்பு இவற்றை மூடியுள்ள சவ்வுகளில் சளி போன்ற ஒட்டும் தன்மை கொண்ட நீர்மம் சுரக்கும். இந்த உறுப்புகள் மூலம் நோய் நுண்ணுயிரிகள் உடலில் செல்லும் போது, அவற்றில் ஒட்டிக் கொள்ளும். மூக்கு, மூச்சுக் குழல் வழியாக இவை செல்லும் போது, அங்கு சுரக்கும் சளியில், இவை ஒட்டிக் கொண்டு சளியோடு வெளியேறி விடும். கண்ணில் சுரக்கும் கண்ணீரின் மூலம், கண்ணைச் சென்றடையும் நுண்ணுயிரிகள் வெளியேற்றப் படுகின்றன. காது வழியாகச் சுரக்கும் மெழுகு போன்ற நீர்மம், காது வழியாகச் செல்லும் நுண்ணுயிரிகளை வெளியேற்ற உதவுகிறது. வாயின் வழியாகச் செல்லும் நுண்ணுயிரிகள் இரைப்பையைச் சென்றடைந்து, அங்கு சுரக்கும் அமிலத்தில் இறந்து விடும்.
இரண்டாம் தற்காப்பு. முதன்மைத் தற்காப்பையும் மீறி, நோய் உயிரிகள் உடலினுள் சென்று பாதிப்பை உருவாக்கும் போது, நுண்ணுயிரிகள் இரண்டாம் தற்காப்பு மூலம் கொல்லப் படுகின்றன. குருதியில் காணப் படும் வெள்ளணுக்கள், இந்த இரண்டாம் தற்காப்பில் இன்றியமையாதவை. இரண்டாம் தற்காப்பு அணுக்கள் மூலம் நோய் எதிர்ப்புத் திறன்(cell mediated immunity) கொண்டும், தேவைக்கேற்பச் செயல் படும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்டும் விளங்கும்.
அணுக்கள் மூலம் நோய் எதிர்ப்புத் திறன். கழுத்துக் கணையச் சுரப்பி நிண அணுக்கள்(Thymus Lymphocyte) இதில் குறிப்பிடத் தக்கவை. குருதியில் இருக்கும் உடலுறுப்புகளை நோய் நுண்ணுயிரிகள் தாக்கும் போது, இவ்வணுக்கள் குருதியின் மூலம், அவ்வுறுப்புகளுக்குச் சென்று லிம்போகைன் (lymphokines) எனும் அணுக்களாக மாறி, நோய் நுண்ணுயிரிகளைக் கொல்லத் தவறும் போது, கழுத்துக் கணைய நிண அணுக்களை அழிக்கும் அணுக்களாக (killer cell)உருவெடுத்து, நோய் நுண்ணுயிரிகளைக் கொல்கின்றன.
தேவைக்கேற்பச் செயல்படும் நோய் எதிர்ப்புத் திறன். பர்சா நிண அணுக்கள் (bursa lymphorcyte) இதில் இன்றியமையாதவை. குருதியில் இருக்கும் உடலுறுப்புகளை, நோய் நுண்ணுயிரிகள் தாக்கும் போது, இவ்வணுக்கள் குருதியின் மூலம், அவ்வுறுப்புகளுக்குச் சென்று, பிளாஸ்மா அணுக்களை (plasma cells) உற்பத்தி செய்யும். பிளாஸ்மா அணுக்கள் உற்பத்தி செய்யும் நோய் எதிர்ப் பொருள்(antibody)நோய் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போரிட்டு அவற்றை மாய்க்கும்.
நோய் எதிர்ப் பொருள்கள். பொதுவாக ஐவகையான நோய் எதிர்ப் பொருள்கள் உடலில் உற்பத்தி செய்யப் படுகின்றன. அவை எதிர்ப் பொருள் A, எதிர்ப் பொருள் M, எதிர்ப் பொருள் G, எதிர்ப் பொருள் D, எதிர்ப் பொருள் E ஆகும்.
எதிர்ப்பொருள் G. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில் 75% இவ்வகையைச் சேர்ந்தது. இவை, மேலும் நான்கு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. அவை G2a, G2b, G2c, G2d எனப் படும். இந்த எதிர்ப் பொருள் மட்டுமே தாயிடமிருந்து தொப்பூழ்க் கொடி (placenta) மூலம், கருப்பையில் வளரும் குட்டிகளுக்குச் சென்று, குட்டிகளில் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குகிறது.
எதிர்ப் பொருள் A. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில் 15% இவ்வகையைச் சேர்ந்தது. இவை சுவாச, உணவு மண்டல, புணர்ச்சி வாய்ச் சவ்வுகளில் சுரக்கும். அதன் மூலம், சுவாச உறுப்பு, குடல், புணர்ச்சி வாய் முதலியவற்றைப் பாதுகாக்கும்.
எதிர்ப் பொருள் M. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில் 10% இவ்வகையைச் சேர்ந்தது. உடலை நுண்ணுயிரிகள் தாக்கும் போது, இது முதன் முதலில் உற்பத்தியாகி, நோயைக் கட்டுப் படுத்தும்.
எதிர்ப் பொருள் E. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில், 0.004% இவ்வகையைச் சார்ந்தது. உடலில் ஒவ்வாமை ஏற்படும் போது, இது கூடுதலாக உற்பத்தியாகி, ஒவ்வாமையைக் கட்டுப் படுத்தும்.
எதிர்ப் பொருள் D. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில் 0. 2% இவ்வகையைச் சார்ந்தது. இவற்றைப் பற்றித் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
நோய்த் தடுப்பியல், அறிவியல் கோட்பாட்டுப்படி, நோய்த் தடுப்பியல்(Innak Immunity) பெறப் பட்ட நோய்த் தடுப்பியல் (acquired Immunity) எனப் பிரிக்கப் படும்.
இயற்கை நோய்த் தடுப்பியல். உடலிலுள்ள இயற்கையான நோய்த் தடுப்புத் திறனால், சில விலங்குகள், சில நோய்களினால் பாதிக்கப் படுவதில்லை. எடுத்துக் காட்டாக, மாடுகளைப் பாதிக்கும்கோமாரி நோயினால், மனிதர்கள் தாக்கப் படுவதில்லை. மாடுகளைத் தாக்கும் வெக்கை நோயினால், மனிதர்கள் தாக்கப் படுவதில்லை. மனிதர்களைப் பாதிக்கும் காலரா நோயினால், மாடுகள் தீமையடைவதில்லை.
பெறப்பட்ட நோய்த் தடுப்பியல். இது மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப் படுகிறது. அவை பிற வினை நோய்த் தடுப்பியல்(pssive Immunity) தன் வினை நோய்த் தடுப்பியல்(active Immunity) என்பன.
பிறவினை நோய்த் தடுப்பியல். நோய் பரவலாகக் காணப் படும் நேரங்களில் அந்நோய் எதிர்ப்பு ஊனீரை(anti serum) உடலில் செலுத்தினால், எதிர்ப்பு ஊனீரிலுள்ள நோய் எதிர்ப் பொருள்கள் அவ்விலங்கை நோயிலிருந்து காக்கும்.
தன் வினை நோய்த் தடுப்பியல். சில சமயம் ஒரு முறை ஒரு நோயால் பாதிக்கப்பட்ட விலங்கு, மீண்டும் அந்நோயினால் பாதிக்கப் படாது. காட்டாக அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட விலங்கு, மீண்டும் அம்மையினால் பாதிக்கப் படாது. இத்தகைய நோய்த் தடுப்பை விலங்குகளுக்குத் தடுப்பூசி மூலம் அளிக்கலாம். விலங்குகளின் தடுப்பூசி மருந்து, நோய் எதிர்ப் பொருள்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால், அந்நோயினால் விலங்குகள் பாதிப்புக்குள்ளாவதில்லை. —மு. சேகர்
நோய்த் தடுப்பு முறைகள்
கால்நடைகளில் நோய்களைத் தடுக்க, நோய்க்கு இடமளிக்கும் சூழல்களைக் களைதல், தடுப்பூசி போடுதல், நோய்ப் பரப்பிகளைக் கட்டுப் படுத்தல், தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், கால்நடைகளைத் தனித்து வைத்து ஆய்தல், நோய் தொற்றிய பொருள்களை அகற்றுதல், நோயுற்ற விலங்குகளை விலக்குதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய்க்கு இடமளிக்கும் சூழல்களைக் களைதல். வைட்டமின், தாதுப்பு நிறைந்த உணவைக் குறிப்பாக, வைட்டமின் A மற்றும் புரதம் நிறைந்த உணவினை இளங் கால்நடைகளுக்கு வழங்கினால், நோய் எதிர்ப்புத் திறன் பெறும். சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் நீங்கும்.
சீம்பாலில் நோய் எதிர்ப்பாற்றல் நிறைந்துள்ளதால், இளம் கன்றுகள் நன்கு அருந்த விட வேண்டும். குடற்புழுக்களின் சுமையால், கால்நடைகள் நலிவுறும் போது, நோய் எதிர்ப்புத் திறனும் குறைகிறது. எனவே முறையாகக் குடற்புழு நீக்கம் (deworming) செய்ய வேண்டும். குறிப்பாக, மழைக் காலத்திற்கு முன்னும், பின்னும், தடுப்பூசி போடும் முன்னரும் இதைச் செய்தல் நன்று. அதிகக் குளிர், வெப்பம், காற்றோட்டமின்மை, இட நெருக்கடி ஆகியவற்றால் கால்நடைகளில் நோய்கள் உண்டாகக் கூடும். எனவே, இருப்பிட அமைப்பில் கவனம் தேவை.
தடுப்பூசி போடுதல். மாட்டினங்களுக்கு நுண்ணுயிரியால் ஏற்படும் சப்பை நோய், தொண்டையடைப்பான் போன்ற தொற்று நோய்கள் மழைக் காலத்தில் வருகின்றன. எனவே மழைக் காலம் தொடங்கும் முன்பு, நோய்க் கிளர்ச்சி(out break) ஏற்படும் காலம் அறிந்து, அதற்கு முன்பே நோய்த் தடுப்பூசி போட வேண்டும். 5–10 மி.லி. மருந்தினைத் தோலுக்கடியில் செலுத்த வேண்டும்.
அடைப்பான் நோய்த் (anthrax) தடுப்பூசியில் 1 மி.லி. தோலுக்கடியில் செலுத்தினால், 1 ஆண்டு வரை எதிர்ப்பாற்றல் இருக்கும். கருச் சிதைவு நோயைத் தடுக்க, 4 முதல் 8 மாதம் வரையிலான கன்றுகட்குக் காட்டான் ஸ்டெரைன் புருசெல்லா அபார்டஸ் 19 எனும் மருந்தைச் செலுத்த வேண்டும். வெக்கை (rinderpest) எனும் வைரஸ் நோய்க்குத் திசுவில் வளர்ந்த தடுப்பு மருந்து (Tissue culture vaecine) 1 மி.லி. தோலுக்கடியில் ஆண்டு தோறும் போட வேண்டும். கால் மற்றும் வாய் நோய்களுக்குப் பல்வகை நச்சுயிரிகளுக்கான தடுப்பு மருந்து(polyvalent) உள்ளது.
ஆட்டினங்களில் துள்ளுமரி (enterotaxaemia) எனும் நுண்ணுயிரி நோய்க்கு, 3–5மி.லி மருந்தினைத் தோலடியில் செலுத்த வேண்டும். வைரஸ் நோயான அம்மைக்குத் (sheep pox) தடுப்பு மருந்தினைக் காது மடல் தோலில் செலுத்த வேண்டும்.வெக்கை அடைப்பான், கால் மற்றும் வாய் நோய்த் தடுப்பூசிகளும், மாடுகளைப் போலவே, ஆடுகட்கும் உரியன. வளர்ப்பு நாய்கட்கு, டிஸ்டம்பர் நோய்த் தடுப்பு மருந்தினை 10 வார வயது ஆனவுடன் போட வேண்டும். பிறகு, ஆண்டுக்கொரு முறை வழங்க வேண்டும். வெறி நோய்த் (rabies) தடுப்பு மருந்தின் புது வகையினை ஒரு மாதக் குட்டியிலிருந்தே போடலாம். பிறகு ஆண்டுக்கொரு முறை வழங்குதல் ஏற்றது.
பன்றிக் காய்ச்சல் நோய்த் தடுப்புக்காக 2–4 வாரக் குட்டிகளுக்கு, இந்தியக் கால் நடை மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (VRI) தயாரிக்கும் தடுப்பு மருந்துகளை வழங்கலாம். கோழி இனங்களுக்கு , மேரெக்ஸ் நோய்க்குரிய தடுப்பு மருந்தினைக் குஞ்சு பொரிந்து, முதல் நாளே போட்டு விட வேண்டும். கோழி அம்மைக்குரிய (fowl box) தடுப்பு மருந்தினை, ஆறாம் வார வயதில் வழங்க வேண்டும். சுவாசக் குழல் நோய் எனும் நச்சுயிரி நோய்க்கு 3–4 வாரங்களில் கண்களில் செலுத்த வேண்டும். வெள்ளைக் கழிச்சல் (ranikhet disease) நோய்க்குக் குஞ்சுப் பொரிந்து ஒரு வாரத்துக்குள், லசோடா அல்லது தடுப்புமருந்தினைச் செலுத்த வேண்டும். பிறகு ஆர். டி. வி. கே. மருந்தினை இறகின் அடியில் ஊசி மூலம் செலுத்திட வேண்டும்.
நோய்ப் பரப்பிகளின் கட்டுப்பாடு நத்தை. மாடுகளில் ஒட்டுண்ணியால் ஏற்படும் மூக்குப் புற்று எனப் படும் குறட்டை நோய்க்கு (Nasal sctistcsomiasis) இடைநிலைக் காப்பானாக (intermediate host) நத்தைகளிலிருந்து நோய் பரவும். ஈரல் புழு (Liver flikes) மற்றும் ஒரு வகைத் தட்டைப் புழு (amphistomes) செம்மறியாடு, வெள்ளாடு, மாடுகளின் உள்ளுறுப்புகளிலும் சுழன்று நோய் உண்டாக்கும். இதற்கும், இடைநிலைக் காப்பானான நத்தை, மேய்ச்சலுக்குச் செல்லும் கால் நடைகளைத் தொற்றிக் கொள்கிறது.
நத்தைகளை ஒழிக்க 1:1, 00,000 காப்பர் சல்ஃபேட் நீர் நிலைகளிலும் , புல்வெளி மற்றும் மேய்ச்சல் நிலங்களிலும் தெளிக்க வேண்டும். வாத்து வளர்த்தல் நத்தை ஒழிப்புக்கு ஏற்றது.
ஈ. குதிரை வலிப்பு (trypanasomiasis) எனும் ஓரணு ஒட்டுண்ணி நோய், மாடு, ஒட்டகங்களைத் தாக்கும் டபானஸ் (tabanus) மற்றும் ஸ்மோமாக்சிஸ் எனும் குருதிக் குடிக்கும் ஈ மூலம் பரவுகிறது. செம்மறி ஆடுகளில், நீல நாக்கு நோய் (blue tongue) மாடுகளில் மூட்டு வலிக் காய்ச்சல் (ephemeral fever) போன்ற வைரஸ் தொற்று நோய்களை மணல் ஈ (sand flies) பரப்புகிறது. முக ஈ (face flies) கால்நடைகளில் கண் நோய்களைப் பரவச் செய்கிறது. ஈக்களை ஒழிக்கச் சுற்றுப் புறத் தூய்மை பேணப் பட வேண்டும்.
கொசு. மனித இனத்திற்கு மலேரியா, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்புவது போலவே கொசு, கால்நடைகளில் தோல் புழு நோய் (cytaneous filariasis) குதிரை மூளைக் காய்ச்சல் (equine encephalitis) போன்ற நோய்களை ஏற்படுத்துவதுடன், அதிக அளவில் குருதியைக் குடித்து, இளம் குட்டிகளில் குருதிச் சோகையினையும் ஏற்படுத்துகிறது. எனவே, கொசு ஒழிப்புக்கு, நீர் தேங்காத நிலையும், புறத் தூய்மையும் வேண்டும்.உண்ணி. குருதிச் சிறுநீர் நோய் (falesiasis) எனும் உண்ணிக் காய்ச்சல், அனபிளாஸ்மா நோய் (anaplasmosis) தைலேரியா காய்ச்சல் (theilariasis) போன்ற ஓரணு ஒட்டுண்ணி நோய்கள், செம்மறி ஆடுகளில் லெரீமியா (larimak), குட்டிகளில் உண்ணிச் சீழ்க் காய்ச்சல் (tick pyaemia) போன்ற நுண்ணுயிரி நோய்கள் ஆகியன குருதி உறிஞ்சும் உண்ணி மூலம் பரவுகின்றன. பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தனித் தனியே உண்ணி பீடித்துள்ள கால்நடைகளில் தடவலாம். கால்நடை இருப்பிடங்களிலும், இம்மருந்தைத் தெளிக்க வேண்டும்.
தூய்மை. நீர் மூலம் நோய் நுண்ணுயிரிகள் பரவுவதைத் தடுக்க வேண்டும். இதனால் மழைக் காலங்களில், நோய்க் கிளர்ச்சி மிகுதியாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கால்நடைகள் தேங்கியுள்ள நீரைக் குடிக்க விடாமல், தூய்மையான நீரை வழங்க வேண்டும். மேலும் தீவனங்களை நன்முறையில் பாதுகாத்து வழங்க வேண்டும். சில சமயங்களில் பூசணக் காளான்களால், தீவனம் கெட்டு விட்டால், அப்ளோ நச்சுப் (aflo toxin) பாதிப்பு ஏற்படும். நோயுற்ற மாட்டிலிருந்து உயிரிகள் (germs) வைக்கோல், புல், அடர்தீவனம் மூலம் தொற்றிக் கொண்டு, மற்ற மாடுகட்குப் பரவுவதைத் தடுக்க, தீவனம் வழங்குவதில் விழிப்புத் தேவை. மேய்ச்சல் நிலங்களில், நோய்த் தொற்றுகள் மற்றும் புழு முட்டைகள் பரவி இருக்கும் என்று கருதினால், புதிய இடங்களில் மேய்ச்சலுக்கு விட வேண்டும். இருப்பிடம் தூய்மையாக இருக்க வேண்டும். அதனால், பால் மடிக் காம்பு மூலம் நுண்ணுயிரிகள் நுழைந்து, மடி வீக்க நோய் (mastitis) ஏற்படாமலும், காயமுற்ற கால்நடைகளில், டெட்டனஸ் (tetanus) நுண்ணுயிரிகள் நுழைந்து விரைப்பு நோய் ஏற்படாமலும் பாதுகாக்கலாம். ஈ, கொசு, பேன் , உண்ணி ஆகியன பெருகா வண்ணம் இருப்பிடத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் தூய்மை பேணப்படல் வேண்டும். எருக்குழிகளைத் தொலைவில் அமைக்க வேண்டும். பண்ணையில் தெரு நாய்கள் புகா வண்ணம், பாதுகாப்பதன் மூலம் வெறி நோய், தோல் நோய், நீர்க் கட்டி நோய், குடற்புழுத் தொற்று ஆகியவற்றைத் தடுக்கலாம்.
தனித்து வைத்து ஆய்தல் (quarantisne). சில வேளைகளில், கால்நடைகள் தொற்று நோய் நுண்ணுயிரிகளைச் சுமந்து உள்ளுறை (latent form) வடிவில் இருக்கும். எனவே, பண்ணையில் புதிதாகக் கால்நடை களையோ, கோழிகளையோ சேர்க்குமுன், 10–15 நாள்கள் தனிமைப் படுத்தி, ஆய்வு செய்த பின், நோயின் வெளிப்பாடு தோன்றாமலிருப்பின், அவற்றை உண்ணி நீக்கம் மற்றும் தொற்று நீக்கம் (dipping & disinfectant) செய்து, உள்ளே அனுமதிக்கலாம். புதிய கால்நடைகளை, நன்கு அறிமுகமான , தொற்று நோயில்லாத பண்ணையில் வளர்க்க வேண்டும்.
நோய்த் தொற்றிய பொருள்களை அகற்றல். நோயுற்ற கால் நடைகளிலிருந்து வடியும் குருதி, சீழ்,சிறுநீர், சாணம் கலந்த வைக்கோல், தீவனம், படுக்கைப் பொருள் போன்றவற்றையும், கருச் சிதைவு நோய் மற்றும் விப்ரியோ நோயுற்ற மாடுகளிலிருந்து இறந்து பிறந்த குறைக் கன்றுகளின் நஞ்சுக் கொடி மற்றும் குருதிக் கழிவுகளையும் மேய்ச்சல் இல்லாத நிலத்தில் ஆழமான குழியில், தொற்றுக் கொல்லி, சுண்ணாம்பு நீர்த் தெளித்துப் புதைத்து விட வேண்டும் அல்லது எரித்து விட வேண்டும். அந்த இடங்களையும் 0.5% பினால் அல்லது கிரிசால் போன்ற தொற்றுக் கொல்லி மூலம் தூய்மை செய்ய வேண்டும்.
கோழிப் பண்ணைகளில் மேரெக்ஸ் நோய் தாக்கி உதிர்ந்த இறகுகளிலிருந்து நச்சுயிரிகள் பரவுவதால், அவற்றை எரித்து விட வேண்டும். தொற்று நோய் கண்ட ஆழ் கூளத்தை அகற்றி, அந்த இடம் முழுதும் தொற்றுக் கொல்லி மருந்து தெளித்துச் சில காலம் வரை புதிய கோழிகளை அங்கு சேர்க்காமல் இருக்க வேண்டும். தீவனம் , நீர் கொடுக்கும் பாத்திரங்களையும், சோடியம் கார்பனேட் அல்லது 0.5% பீனால் கலந்த நீரில் கழுவி, வெயிலில் உலர்த்த வேண்டும்.
நோயுற்ற விலங்குகளை விலக்குதல். பண்ணையில் உள்ள மாடுகளுக்குச் காச நோய் ஆய்வு ஊசி மூலம் காச நோயினையும் மற்றும் ஜோன் ஆய்வு ஊசி மூலம் கருச் சிதைவு நோயையும், கால்நடைகளில் கண்டு பிடித்துப் பண்ணையிலிருந்து அகற்றி, நோய் பரவுதலைத் தடுக்கலாம்.
நோயுற்ற இறந்த மாடுகளை நிலம் மற்றும் நீர் நிலை அருகில் புதைப்பதோ, தோலை உரித்துப் போடுவதோ கூடாது. அவற்றை எரித்து விட வேண்டும் அல்லது சுண்ணாம்புத் தூள் தெளித்த குழிகளில் போட்டுப் புதைத்து விட வேண்டும். குறிப்பாக , அடைப்பான் (anthrax) நோய் கண்டு இறந்த கால்நடைகளைத் தோலுக்காக உரிக்கவோ, இறைச்சிக்காக அறுக்கவோ கூடாது. ஏனெனில், நுண்ணுயிரிகள் தம்மைச் சுற்றிக் காப்புக் கோட்டை உருவாக்கி, வித்துகளாக மாறிப் பல நாள் வாழ்ந்து, தொற்றும் தன்மையுடைதாக மாறும். —ச. தமிழரசன்
நோய்த் தடுப்பூசி
கால்நடைகளுக்கு நோய் வரும் முன்னர், தடுப்பூசிகள் அளிப்பதே சாலச் சிறந்த முறையாகும். இது குறிப்பாக, வைரஸ் நோய்களுக்கு மிகவும் பொருந்தும். கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நுண்ணுயிர் மற்றும் வைரஸ் நோய்களுக்குப் பின் வரும் தடுப்பூசிகள் உள்ளன. சப்பை நோய், அடைப்பான் நோய், தொண்டை அடைப்பான் நோய், கருச் சிதைவு நோய், வெக்கை நோய், அம்மை நோய், கோமாரி நோய், வெறி நோய் ஆகியவற்றிற்குத் தடுப்பூசிகள் உள்ளன. கோழிகளைத் தாக்கும் கழிச்சல் நோய், அம்மை நோய், சிறுமூச்சுக் குழல் நோய், பெருமூச்சுக் குழல் நோய், பர்சா நோய்,கோழிக் காலரா ஆகியவற்றிற்கும் தடுப்பூசிகள் உள்ளன. நாய்களுக்கு உண்டாகும் வெறி நோய், டிஸ்டெம்பர் நோய்,பார்வோ நோய், லெட்டோஸ்பைரோசிஸ் ஆகியவற்றிற்கும் தடுப்பூசிகள் உள்ளன.
தடுப்பூசிகளைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப் படும் தடுப்பு மருந்து, செயலற்றதாக்கப் பட்ட நோய் நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப் படும் தடுப்பு மருந்து, நோய் நுண்ணுயிரிகள் உற்பத்தி செய்யும் நச்சுப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து ஆகியனவாகும். வைரஸ் நோய்களுக்குப் பெரும்பாலும், உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப் படும் தடுப்பு மருந்தே பயன் படுகிறது. அதாவது, வீரியம் குறைந்த நோயுண்டாக்காத நச்சுயிரிகளைக் கொண்டு, தடுப்பு மருந்து தயாரிக்கும் முறையில் நச்சுயிரிகளைப் பல முறை திசுக்களில் செலுத்தி, அல்லது நோயினால் பாதிக்கப்படாத விலங்கு வகைகளில் செலுத்தி, அவற்றின் வீரியத்தைக் குறைக்கலாம். இம்முறையில் செலுத்தப்பட்ட நோய் நுண்ணுயிரிகள் நோயுண்டாக்கா. ஆனால், எதிர்ப்பாற்றல் அளிக்கும் தடுப்பு மருந்துகளாக உதவும்.
செயலற்றதாக்கப் பட்ட தடுப்பு மருந்தில், பல்வேறு வித வேதிப் பொருள்களைப் பயன் படுத்தி, அவற்றினைச் செயலற்றதாக்கித் தடுப்பு மருந்தாக மாற்றலாம். உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு அளிக்கப்படும் தடுப்பு மருந்தினை விட வீரியமுடனும், நீண்ட காலம் நோய் எதிர்ப்புத் திறனுடனும் விளங்கும். இந்தத் தடுப்பூசிகளைத் தகுந்த காலத்தில், தக்க அளவில் அளித்து, நோய் எதிர்ப்புத் திறனைக் கால்நடைகளிலும், கோழியினங்களிலும் உண்டாக்க முடியும்.
வலிப்பு நோய், சப்பை நோய், துள்ளுமாரி நோய் ஆகியவற்றிற்கு நோய் நுண்ணுயிரி உற்பத்தி செய்யும் நச்சுப் பொருள்களைக் கொண்டு, தடுப்பு மருந்து தயாரிக்கப் படுகிறது. இந்நச்சுப் பொருள்கள் பார்மலின், கார்பானிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டு, நச்சுத் தன்மையினை முறித்துத் தடுப்பு மருந்துகளாகத் தயாரிக்கப் படுகின்றன. —வே. புருஷோத்தமன்
நோய் நுண்ணுயிரிக் கடத்திகள்
நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்து மற்ற விலங்குகளுக்கு, நோயினைக் கடத்தும் உயிரினங்கள், நோய் நுண்ணுயிரிக் கடத்திகள் என்பனவாகும். நோய் நுண்ணுயிரிக் கடத்திகள், நோயை மறைமுகமாகப் பரப்பும் வழி வகைளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இனப் பெருக்கம் அடையாத வகையில் அமைந்திருப்பதே ஒரு பிரிவாகவும், நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இனப் பெருக்கம் அதன் வாழ்க்கைச் சுற்றின் ஒரு பகுதியினை நிறைவு செய்யும் வகையில் அமைந்திருப்பது மற்றொரு பிரிவாகவும் கொள்ளப் படும். நோய்க் கடத்திகளில் ஏற்படும் நிலையினை மூவகையாகப் பிரிக்கலாம்.
வளர்ச்சியடையும் வகையில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரியின் வளர்ச்சி நிலையில் ஒரு பகுதி, நோய் கடத்தியில் இனப் பெருக்கம் அடைந்து, பின்னரே பரவுகிறது. மூன்றாம் வகையில் மேற்கூறிய இரு பிரிவுகளும் நடைபெறுகின்றன. முதல் நிலையில், நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள், நோய்க் கடத்திகளில் இங்குமங்கும் செல்கின்றன. சான்றாக, ஆப்பிரிக்கா டிரபனோசோமியாசிஸ் எனப் படும் நோயினை உண்டாக்கும் ஒட்டுண்ணி, கிளாஸீனா வகைப் பூச்சிகளாகப் பூச்சிகளின் வயிற்றில் சென்று பின்பு, உமிழ் நீர்ச் சுரப்பிகளின் வழியே வெளியேற்றப் பட்டு, நோயினைப் பரப்புகிறது.
சில கடத்திகளில் உட்கொள்ளப்பட்ட நுண்ணுயிரிகள் மலக்கழிவின் மூலமாக வெளியே தள்ளப் பட்டு, நோயினைப் பரப்புகின்றன. சில வகை நோய்களுக்கும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வகைக் கடத்தியே காரணமாக உள்ளது. சான்றாக, மலேரியா நோயைப் பரப்ப,பிளாஸ்மோடியம் வகைக் கொசுக்களே நோய்க் கடத்திகளாக விளங்குகின்றன.
பெரும்பான்மையான நோய்க் கடத்திகள் ஈ, கொசு, உண்ணி போன்ற ஒட்டுண்ணிகளாக உள்ளமையால், அவை பரப்பும் நோய்களின் அளவும் எண்ணிக்கையினைக் கொண்டு மாறுபடும். காட்டாக, மழைக் காலத்திற்குப் பிறகு, கொசுக்கள் மிகுதியும் பெருகும் நிலையில் அவை பரப்பும் நோய்களும் மிகுந்து காணப் படும்.
நோய்க் கடத்திகளின் பல்வேறு உறுப்புகள் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. சில நுண்ணுயிரிகள்,நோய்க் கடத்திகளின் உமிழ் நீர்ச் சுரப்பிகளில் இனப் பெருக்கம் செய்கின்றன. காட்டாக, யானைக் கால் ஏற்படுத்தும் ஒட்டுண்ணி நோய், கடத்தியின் வாய்ப் பகுதியில் மிகுந்து காணப் படுகிறது. நோய்க் கடத்திகளால், நோய்கள் பரவும் போது, கடத்திகளைக் கட்டுப் படுத்துவது நோயினைக் கட்டுப் படுத்தப் பெரிதும் உதவும். பூச்சி கொல்லிகளைப் பயன் படுத்தி, நோய்க் கடத்திகளைக் கட்டுப் படுத்துவது ஒரு முறையாகும். ஆனால், நோய்க் கடத்திகள் இவ்வகை நோய்க் கொல்லிகளுக்கு எதிராக, எதிர்ப்புத் தன்மைகளைச் சில நேரம் அடைவதன் மூலம், நோய் கட்டுக்கடங்காமல் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. (D.D.T, B.H.C.) போன்ற பூச்சிக் கொல்லிகளைப் பயன் படுத்திச் செட்ஸ் எனப் படும் ஈயினை, ஆப்பிரிக்கா நாட்டின் சில பகுதிகளில் கட்டுப் படுத்தினர். கால்நடைகளில் பல ஒட்டுண்ணி நோய்கள், குறிப்பாகத் தைலேரியானிஸ்,பெபீசியாவுளிஸ் போன்றவை வெளிப்புற ஒட்டுண்ணிகள் மூலம், ஒரு கால்நடையிலிருந்து மற்றொரு கால்நடைக்குக் கடத்தப் படுகின்றன.
விலங்கியல் முறையில் நுண்ணுயிர்க் கடத்திகளைக் கட்டுப் படுத்துதல். பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப் பொருள்களினால் சுற்றுப்புறக் கேடு ஏற்படுவதால்,தற்போது உயிரியல் முறைகள் பெருத்த அளவில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இம்முறைகளில், நோய்க் கடத்திகளின் இயற்கை எதிரிகளைத் தெரிந்தெடுத்து, அவற்றினைப் பயன் படுத்தி, நோய்க் கடத்தியினை அழிக்கலாம்.
மலேரியா நோய்ப் பரப்பும் அனாபிலிஸ் வகைக் கொசுக்களைக் கட்டுப்படுத்தச் சில வகை மீன்கள் மிகுதியும் பயன் படுத்தப் பட்டு வந்தன. தற்போது, இவ்வகைக் கொசுக்களின் இளநிலைப் பருவத்தினைக் கட்டுப் படுத்தப் பேசில்லஸ் சீரியஸ் எனப் படும் நுண்ணுயிரி பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இது உற்பத்தி செய்யும் புரதம், கொசுக்களின் இளநிலையினைத் தாக்கி அழிக்க வல்லது. இப்பொருள் தற்போது தொழில் நுட்ப முறையில் மிகுதியாகத் தயாரிக்கப் பட்டு, மலேரியா பரப்பும் கொசுக்களையும், தாவரங்களில் நோய் பரப்பும் பூச்சிகளையும் அழிக்கப் பெரிதும் பயன் படுத்தப் பட்டு வருகிறது. —புருஷோத்தமன்
நோய்ப் புலனாய்வு
விலங்கினங்களுக்கு ஏற்படும் நோய்களைப் புலனாய்வு செய்வது ஒரு தனிப் பிரிவாகும். நோய் என்பது, உணவு மற்றும் சுற்றுப்புறத் தேவைகள் இயல்பு நிலையில் இருந்த போதும், உடல் நிலை சரி வர இயங்கா நிலையே ஆகும். இவ்வித நோய்கள் பல்வேறு காரணங்களினால் ஏற்படுகின்றன. இவற்றைப் பின் வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன, பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்கள், வைரஸ்களால் ஏற்படும் நோய்கள், ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள், தீவனப் பொருள் பற்றாக் குறைவால் ஏற்படும் நோய்கள் , நச்சுப் பொருள் களால் ஏற்படும் நோய்கள், மரபு வழியாக ஏற்படும் நோய்கள். நோயுண்டாக்கும் பலவிதக் காரணிகளைப் பகுத்தறிந்து, நோயினைக் கண்டறிதலில், நோய்ப் புலனாய்வு பெரும் பங்கு பெறுகிறது.
விலங்கினங்கள் மனிதர்களைப் போல் வாய் பேசா. எனவே, கால்நடை மருத்துவர் மேலும் மிகுந்த கவனம் செலுத்தி, விலங்கினத்தின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கி, நோயினைக் கண்டறிய வேண்டும். இதற்கு, விலங்குகளை வளர்ப்பவரின் உதவி பெரிதும் தேவைப் படுகிறது. எனவே, அவரை வினாக்களால் புலனாய்வு செய்தல், நோயினைக் கண்டறியப் பெரிதும் உதவும். எவ்வகைத் தீவனம் அளிக்கப் பட்டுள்ளது, எவ்வகைத் தடுப்பு மருந்துகள் அளிக்கப் பட்டுள்ளன, பண்ணையில் புதிதாகக் கால்நடைகள் சேர்க்கப்பட்டுள்ளனவா போன்ற வினாக்கள் நோயினைக் கண்டறியப் பெரிதும் உதவும். விலங்குகளின் செயல்பாடுகளில் ஏதேனும் மாறுபாடு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கேட்டு அறிய வேண்டும். குறிப்பாக, நாய், குதிரை,பசு போன்ற விலங்கினங்களில் இது பெரிதும் உதவும். ஆடுகளிலும், பன்றிகளிலும் இம்முறையில் நோயினைக் கண்டறிவது ஓரளவு கடினம்.
விலங்கினங்களின் சுற்றுப் புறச் சூழலை ஆய்வு செய்தலும், நோயினைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாகக் காற்றின் ஈரப் பதம், மண்ணின் அமிலத் தன்மை,நீர்த் தேக்கம் இவையும் நோய் பரவிடக் காரணமாகின்றன. ஈரப் பதம் கூடுதலாக இருந்தால், சளிக் காய்ச்சல் நோய் பரவ வாய்ப்பாகும்.
விலங்கினத்தின் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி விலங்கு வளர்ப்பவரிடம் கேட்டறிதல், நோய்ப் புலனாய்வில் மிகவும் இன்றியமையாதது. காட்டாக, வலிப்பு ஏற்படும் கால்நடை,பார்வைக்கு நலமாகவே காணப் படும். அதற்கு அடிக்கடி வலிப்பு உண்டாகுமா என அதை வளர்ப்பவரிடம் கேட்டறிவதே நோயினைக் கண்டறியப் பெரிதும் உதவும். கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிக் கண்டறியும் போது, விலங்கினத்தின் குறிப்பு,நோயின் வரலாறு, பராமரிப்பு முறை போன்றவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
விலங்கினத்தின் குறிப்பு. இதில் விலங்கினத்தின் உரிமையாளரின் பெயர்,அவருடைய தகப்பனார் பெயர், முகவரி,விலங்கின வகை, இனம், உடல் எடை, நிறம் போன்ற குறிப்புகளைச் சேகரிக்க வேண்டும்.
நோய் ஏற்பட்ட வரலாற்றினைச் சேகரிக்கும் போது, பாதிக்கப்பட்டுள்ள விலங்கு ஒன்றா, பலவா என்பதை அறிய வேண்டும்.இது ஒரு விலங்கினம் பாதிக்கப் பட்டிருந்தாலும், சுற்றியுள்ள பிற விலங்கினங்களையும் ஆய்வு செய்யும் போது, அவை நோயின் தொடக்கக் கட்டத்தில் இருந்தால். உடனே கண்டறிய உதவும்.
பண்ணையாளர்களிடம், நோய் ஏற்பட்ட வரலாற்றினை ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டு அறிதல் வேண்டும். தீவனம், நீர் உட்கொள்ளுதல், பால் உற்பத்தி, வளர்ச்சி, சுவாசித்தல், உடல் வெப்ப நிலை, சிறுநீர் மற்றும் மலம் வெளியேற்றும் நிலை, வேர்வை, நிற்கும் நிலை, குரல், தலை, விலங்கினத்தின் மீது ஏற்படும் கெடு நாற்றம் ஆகியவற்றையும் கண்டறிதல் வேண்டும்.
விலங்கினப் புலனாய்வில், இறந்த கால்நடைகளைப் பிண ஆய்வு செய்வதின் மூலம், எவ்வகை நோய் ஏற்பட்டுள்ளது என அறியலாம். நோய்க்கான அறிகுறி தோன்றிய முதல் நாளிலிருந்து, இறப்பு அல்லது குணமான நிலை வரை ஏற்படும் அறிகுறிகளை நன்கு கேட்டு, பார்த்து அறிந்து கொள்ளுதல், நோயினைப் பற்றி அறிய உதவும். நோய்க்கு முன்பு, வாலினை அகற்றுதல், விதை நீக்கம் மற்றும் தடுப்பு மருந்து அளித்தல் போன்றவை பற்றியும் கண்டறிய வேண்டும்.
இறப்பு.மற்றும் பாதிப்பு விகிதம். பாதிப்பு விகிதம் என்பது மொத்த விலங்கின் எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதாகும். இறப்புச் சதவீதம் மொத்த எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் நோயினால் இறந்துள்ளது என்பதாகும். பாதிப்பில் இறப்பு சதவீதம் எத்தனை எனவும் கண்டறிய உதவுகிறது. இவ்வகை விகிதங்கள் நோய்க்கு ஏற்றவாறு மாறுபடும். எடுத்துக் காட்டாகக் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோயில் பாதிப்பு சதவீதம் மிகுந்திருப்பினும், இறப்பு சதவீதம் குறைவாக இருக்கும். ஆனால், வெக்கை நோயில் பாதிப்பும், இறப்பு சதவீதமும் பெருமளவில் இருக்கும்.
நோய்ப் புலனாய்வில் பராமரிப்பு பற்றிய விவரங்கள். பராமரிப்பு பற்றிய விவரங்களில் குறிப்பிடத் தக்கவை தீவனம், இனப் பெருக்க முறை, வீடு அமைப்பு, விலங்கினங்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்லும் முறை, கையாளும் விதம் ஆகியன ஆகும். நோய் உண்டாவதற்கு முன்பு, இவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா எனக் கண்டறிய வேண்டும்.
தீவனம், நோய் உண்டாக ஒரு காரணமாக இருக்கலாம். கொடுக்கப்படும் தீவனத்தின் அளவு அல்லது அதில் உள்ள சத்துகளில் ஏதேனும் வேறுபாடு நோய் உண்டாவதற்கு முன்பு செய்யப்பட்டதா எனக் கண்டறிய வேண்டும். அதே போல் மேய்ச்சலுக்கு விடப்படும் விலங்கினங்கள் ஒட்டுண்ணிகள் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாகும். தீவனங்களின் நன்கு கொதிக்க வைக்கப்படும் உணவில் வைட்டமின் சத்து குறைவாக இருக்கும். இதே போல் அழுத்த முறையில் எடுக்கப்பட்ட ஆமணக்குப் பிண்ணாக்கில் ஹைட்ரோசயனிக் அமில நச்சு மிகுந்து காணப்படும். பன்றிகளும், கன்றுகளும் மிகக் குறைந்த அளவில் தீவன இடம் கொடுக்கும் போது, போட்டியின் காரணமாக, வலிவுள்ளவை மிகு தீவனம் உட்கொண்டும், வலிவற்றவை குறைந்த தீவனம் உட்கொண்டும், சத்துப் பற்றாக்குறைவினால் பாதிக்கப் படும். பால் தரும் கால்நடைகளிலும், கருவுற்ற கால்நடைகளிலும் சுண்ணாம்புச் சத்து, சர்க்கரைச் சத்து, மக்னீசீயம் சத்து ஆகியவை குறைந்து காணப் படும். பன்றிகளில் குடிநீர் அளவு குறையும் போது உப்பினால் ஏற்படும் நச்சுத் தன்மை நோய் ஏற்படும். இவ்வாறு தீவனமும், நீரும் பல வகைகளில் நோயுண்டாகக் காரணங்களாக விளங்குகின்றன.
இனப் பெருக்கப் பராமரிப்பு. இனப் பெருக்கம், கன்று ஈனுதல் போன்றவை நோய் உண்டாகப் பல வகைகளில் காரணமாக விளங்குகின்றன. செம்மறியாடுகளில், சினைக் காலத்தின் போது, நச்சுத் தன்மை ஏற்படுவதும், பசுக்களில், கன்று ஈன்ற 2–6 வாரங்களில் அசிடோனீமியா எனப்படும் நச்சுத் தன்மை ஏற்படுவதும் உண்டு. அனைத்து வகை விலங்கினகளிலும், கன்று ஈன்ற சில நாள்களில் கருப்பை வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
வானிலை. வானிலையைப் பொறுத்துப் பல நோய்கள் ஏற்படக் கூடும். கால்நடைகளில் ஏற்படும் கால் அழுகும் நோய், வெயில் காலங்களில் மிகுதியாகவும், மழைக் காலங்களில் குறைவாகவும் காணப் படும். மேய்ச்சலுக்கு விடப் படும் மாடுகளில், குளிர் காலங்களில் மக்னீசியச் சத்துக் குறைவு ஏற்படும். காற்று அடிக்கும் திசைக்கு ஏற்றவாறு, வைரஸ் நோய்கள் பரவ வாய்ப்புண்டு.
பொதுப் பராமரிப்பு. கால்நடைகளின் பொதுப் பராமரிப்பில் பலவிதத் குறைபாடுகளால் நோய்கள் உண்டாகின்றன. பொதுச் சுகாதாரம், காற்றோட்டம்,கழிவு நீர் வெளியேற்றம், தீவனத் தொட்டி அமைப்பு முறை, விலங்கினக் கொட்டகை அமைப்பு முறை ஆகியனவும் நோய் உண்டாகக் காரணங்களாகின்றன.
சுற்றுப்புறச் சூழ்நிலை. சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், நோயுண்டாவதற்கும் நேரடித் தொடர்பு உண்டு. மேய்ச்சல் நிலத்தில் வளர்க்கப் படும் விலங்கினங்கள், அந்த மேய்ச்சல் நிலத்தில் உள்ள தாவரங்கள், மண் வகை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். மரங்கள் இல்லாத மேய்ச்சல் நிலத்தில் உண்டாகும் காற்று, மாடுகளைப் பால் வலிப்பு எனும் நோயின் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடும். ஜோனீஸ் நோய், ஈரல், தட்டைப் புழு போன்ற நோய்கள் மேய்ச்சலில் வளர்க்கப் படும் கால்நடைகளில் மிகுதியும் ஏற்படும்.
மண்ணின் வகையினைப் பொறுத்துத் துத்தநாகம், கோபால்ட் போன்ற தாதுப் பொருள்களின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. நீர் தேங்கி நிற்கும் மண்ணில், மடி வீக்க நோய், கால் அழுகும் நோய் போன்றன ஏற்படக் கூடும். காற்றில் தூசிகள் மிகுதியாகக் கலந்திருந்தால், சுவாச உறுப்பு நோய்களும், நுரையீரல் நோய்களும் தோன்றலாம்.
வளர்க்கப் படும் விலங்கினங்களின் எண்ணிக்கை. தொட்டில்களில் பெரும் எண்ணிக்கையில் விலங்கினங்களை வளர்க்கும் போது, மலம், சிறுநீர் போன்றவை மிகுதியாகச் சேர்ந்து, நோய் உண்டாக வாய்ப்புண்டு. இதனால், ஒன்றுக்கொன்று சண்டையிட்டு முட்டிக் கொள்வதால், காயம் ஏற்படவும் கூடும்.
தீவனமும், குடிநீரும் விலங்கினங்களுக்குக் கிடைக்கும் முறை. சில மேய்ச்சல் நிலங்களில் உள்ள களைத் தாவரங்கள், நோயுண்டாகக் காரணமாக உள்ளன. நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் தாவரங்கள், பூசணங்கள் ஆகியன நோயை உருவாக்குகின்றன. சுற்றுப்புறத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகளின் மூலமாகவும், மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப் பட்டு, நோய் உண்டாக வாய்ப்புள்ளது. விலங்கினங்களுக்குக் கிடைக்கும் நீர் எந்த இடத்திலிருந்து கிடைக்கிறது என்பதனைப் பொறுத்தும் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. தொழிற்சாலைக் கழிவு, பூசண நச்சுப் பொருள் ஆகியன நீரில் கலப்பதால் நோய்கள் ஏற்படும்.
விலங்கினங்கள் வளர்க்கப் படும் கொட்டகைகளும் நோய் உண்டாக்கும் காரணிகளாகின்றன. முறையான வீட்டமைப்பு, காற்றோட்டமின்மை, இட நெருக்கடி போன்ற காரணங்கள் நோய் ஏற்படவும், பரவவும் வழி செய்யும். சுற்றுப்புறச் சூழ்நிலை மிகவும் மாசடைந்திருந்தால், நோய் ஏற்படக் கூடும். அம்மோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற வளிமங்களை அளத்தல், கொட்டகையின் காற்றோட்ட நிலையை அறியப் பெரிதும் உதவும். கொட்டகைத் தரையின் நிலை மிகவும் சீர்கேடாக இருந்தால், தோல் தசை அழற்சியும் ஏற்படும். கொட்டில்களில் ஒளி குறைவாக இருப்பதும், தூய்மைக் கேட்டுக்கு வழி வகுக்கும்.
தனிப்பட்ட விலங்கினத்தினைப் புலனாய்வு செய்யும் போது, அதன் வெளிப்புறத் தோற்றம், ஆய்வுக் கூட முடிவு ஆகியனவற்றினைக் கருத்தில் கொள்ள வேண்டும்.விலங்கினங்களை இடையூறு செய்யாமல், அவை இயல்பு நிலையில் உள்ள போதே, அவற்றினை ஆய்விடல் சிறந்தது. அதாவது, ஒரு விலங்கு மந்தையிலிருந்து தனியே பிரிந்து இருந்தால், அடிக்கடி கீழ் அமர்ந்தும், நின்று கொண்டும் இருத்தல், தன் உடலைக் கடுமையாக நக்கிக் கொள்ளுதல், மரம், கல் போன்ற பொருள்களைக் கடித்தல், தலையைச் சுவரில் அழுத்திக் கொள்ளுதல் போன்றவை காணப் படும். வெறி நோய் போன்ற நிலைகளில் விலங்கினத்தின் குரல் மாறுபட்டுக் காணப் படும். விலங்கினங்கள் அடிக்கடி கொட்டாவி விடுதல், ஈரல் பாதிப்பினைக் குறிக்கும்.
விலங்கு அசை போடுதல் என்பது நலமான நிலைக்கு ஒரு குறிப்பிடத் தக்க அறிகுறியாகும். அசை போடுவதிலும், விழுங்குவதிலும் கடினம், மூக்கு வழியாக உண்ட உணவினை வெளியேற்றுதல் போன்ற நோய்குறிகள், உணவுக்குழாயில் அடைப்பு, தொண்டைப் பகுதி உணர்விழத்தல் ஆகியன ஏனைய அறிகுறிகளாகும். பன்றிக்கு அதன் வாலின் சுழற்சி நலமான நிலைக்கு அறிகுறியாகும். குதிரைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோயில் வால் உயர்ந்தும், காதும், கால்களும் விறைத்தும் காணப் படும். கால்களை அசைக்கும் வேகம், எண்ணிக்கை, வலிமை ஆகியனவும் நோய்க்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன. லிஸ்டிரியோசிஸ் எனப்படும் நோயினால் பாதிக்கப் பட்ட ஆடுகள், தன்னைத் தானே சுற்றிச் சுற்றி வரும். குதிரைகள் மூளை வீக்க நிலையிலும், ஈரல் சீராக இயங்கா நிலையிலும், தடைகளைப் பொருட்படுத்தாமல் நேராக மோதிக் கொள்ளும்.
தோலில் ஏற்படும் மாறுதலும், நோய்ப் புலனாய்வுக்குப் பெரிதும் உதவுகிறது. தோலில் ஏற்படும் பூசண நோய், தோலுக்கடியில் ஏற்படும் வீக்கம், குருதிப் புண், காற்று அடைப்பு ஆகியவை பல வித நோய்களைக் குறிக்கின்றன. மேலும், விலங்கினத்தின் நாக்கு நோயினைப் பற்றி அறியவும் உதவும். நாக்கின் நிறம், புண் போன்றவை எந்த நோயின் வெளிப்பாடு என்பதை உணர்த்தும். பெருத்த எண்ணிகையில் விலங்கினங்கள் பாதிக்கப்படும் போது, நோயினைக் கண்டறிவது சிறிது கடினம். நுண்ணுயிரிகளால் ஏற்படும் அடைப்பான், தொண்டை அடைப்பான், வெக்கை, கோமாரி ஆகிய நோய்கள் இவ்வகையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதே போல், மரபியல் நோய்களாலும், விலங்கினங்கள் மிகுதியாகப் பாதிக்கப் படும்.
விலங்கின நோய்ப் பலனாய்வில் ஆய்வகம் பெரிதும் உதவுகிறது. ஐயப்படும் நோய்க்கேற்றவாறு மாதிரிப் பொருள்களை எடுத்து ஆய்வுக் கூடத்திற்கு அனுப்ப வேண்டும்.
ஒட்டுண்ணி நோய்களானால், 5 கிராம் சாணத்தினைப் பாலிதீன் உறையில் சேகரித்து அனுப்பலாம். பேபிசியா, தையேரியா, டிரபன் சோமியா போன்ற ஓரணு ஒட்டுண்ணி நோய்களில் குருதி மாதிரியும், வீங்கிய நிண நீர்க் காய்களும் ஆய்வுக்குத் தேவைப் படும். —வே. புருஷோத்தமன்
நோய் விளைவிக்காதவை
நோய் உண்டாக காரணி, ஓம்புயிர், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகிய மூன்று கூறுகள் தேவை. நோய் உண்டாகும் முன்பு நோய் மறைகாலம் (incubation period) என்னும் கட்டம் இருக்கிறது. நுண்ணுயிரோ, மீநுண்ணுயிரோ உடலினுள் சென்றவுடன், நோயை உண்டாக்குவதில்லை. சில காலத்திற்குப் பின்னரே, நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன. நோய்க் காரணி உட்சென்று, நோயின் அறிகுறிகள் தோன்றும் வரையிலான கட்டம், நோய் மறைகாலம் எனப் படுகிறது.
நோய்க் காரணிகள் உயிரியல் காரணிகள். மீநுண்ணுயிர், ரிக்கெட்சியா, கிளாமைடியா, மைக்ரோபிளாஸ்மா, நுண்ணுயிரி, சுருளுயிரி, புரோடோசோவா, காளான், குடற்புழு.சத்துக் காரணி. கொழுப்புப் பொருள், புரதம், மாவுப் பொருள், வைட்டமின், களிமண்,நீர்.
வேதி காரணி. உடலின் உள்ளிருந்து வருபவையாக யூரியா (யூரியா மிகை குருதி), பிலிரூபின்(காமாலை), யூரிக் அமிலம் (கீல் வாதம்), கால்சியம் கார்பேனேட், (சிறுநீரகக் கற்கள்) ஆகியவையும், உடலின் வெளியேயிருந்து வருபவையாக, ஒவ்வாமைப் பொருள், உலோகங்கள்,ஆவி, தூசி,வளிமம், நுண்ணுயிர்க் கொல்லி ஆகியவையும் விளங்குகின்றன.
இயற்பியற் காரணி. தட்பவெப்பம், புழுக்கம், அழுத்தம், கதிர் வீச்சு, ஒலி, மின்னாற்றல்.
யாந்தீரிகக் காரணிகள். நாட்பட்ட உறுத்தல், காயம், எலும்பு முறிவு, சுளுக்கு இடப் பெயர்ச்சி.
வேதிக் கூறுகள். இன்சுலீன், ஈஸ்ட்ரஜன் போன்ற ஹார்மோன், நொதி.
ஓம்புயிரின் பங்கு. வயது, பால்,இனம், மரபு நுட்ப இயல், மணமான நிலை, செய்தொழில், தடுப்பாற்றல் தன்மை, சமூக நிலை, கல்வித் தரம், வாழ்க்கை நிலை, பயணம் ஆகியனவும் நோயூக்குகின்றன.
இதயக் குருதி நாள நோய், இரைப்பைப் புண், குருதி மிகு அழுத்தம் போன்ற நோய்களுக்குக் காரணமே தெரியவில்லை. நோய்த் தாக்கத்திலிருந்து விடுபடப் பின் வரும் கூறுகளில் கவனம் செலுத்த வேண்டும். அவை உடல் நல ஊக்குவிப்பு, குறிப்பிட்ட பாதுகாப்பு, விரைவாக நோய் அறுதியிடல், மருத்துவம், நோயால் ஏற்படும் குறைபாடுகளைத் தவிர்த்தல், மறுசீரமைப்பு.
ஒருவருக்கு நோயூக்கும் நுண்ணுயிரி மற்றவருக்கு நோயூக்க முடியாது. ஆகவே, நுண்ணுயிரிகளை நோயூக்க வல்லவை, நோயூக்க இயலாதவை எனப் பிரிக்க முடியாது. நோய் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை, நுண்ணுயிர் வீரியத் தன்மை, நோயாளியின் தடுப்பாற்றல் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே நோயுண்டாகிறது. —மு.ப. கிருஷ்ணன்
நோயியல், தாவர
தாவரங்களில் ஏற்படும் நோய்களைப் பற்றி அறிவது தாவர நோயியல் (Plant pathology) எனப் படும். தற்போது பல்வேறு ஆய்வுகளுக்கும், கண்டு பிடிப்புகளுக்கும் பொருளாதாரப் பயன்களுக்கும் தகுந்தவாறு அறிவியல் பிரிவாகத் திகழும் இதில் பல உயிரியல் பிரிவுகள் உள்ளன. தாவர நோயின் இயல்பு. தாவர நோயின் இயக்க ஆற்றல் பற்றி அறிந்து கொள்வதற்குத் தாவரவியலின் பல துறைகளான உள்ளமைப்பியல், செல்லியல், மரபியல், செயலியல் ஆகியவை பற்றிய அறிவு தேவைப் படுகிறது. நோய் உண்டாவதற்கு உரிய காரணங்களைப் பற்றி அறியப் பாக்டீரியாவியல், பூசணவியல், வைரசியல் போன்றவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நோய்களின் வீரியத் தன்மைகளைப் பாதிக்கக் கூடிய சூழ்நிலைக் காரணிகள் பற்றி அறியச் சூழ்நிலை இயல், கால நிலை இயல் ஆகியன பற்றியும் அறிய வேண்டியுள்ளது. சமுதாயத்தில், தாவர நோயினால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறியச் சமூகவியல், பொருளாதார இயல் பற்றிய அறிவு தேவைப் படுகிறது. தாவர நோயியல் என்னும் அறிவியலில் நோயின் இயல்பு, அதற்குரிய காரணம் ஆகியவை பற்றிய நடைமுறைத் திறமும், நோய்களைக் குறைத்து விளைச்சலைக் கூடுதலாக்கும் நோக்கமும் அடங்கும்.
நோயறிதல். கண்ணுக்குத் தெரிகிற வகையில், தாவரத்தில் உண்டாக்கும் நிற மாறுதல், அமைப்பு மாற்றம், உருமாற்றம் போன்றவற்றைக் கொண்டு, நோயினை அறிந்து கொள்ளலாம். இத்தகைய மாறுதல்கள் அறிகுறிகள் எனப் படும். அவற்றுள், கொலை நோய், அழுகல் நோய் போன்றவை செல்களும், திசுக்களும் இறப்பதால் ஏற்படுகின்றன. பச்சைய நீக்கம், வளர்ச்சி குன்றல் போன்ற அறிகுறிகள் தாவரங்களின் வளர்ச்சி, வளர்முறை குன்றுவதால் ஏற்படுகின்றன. முண்டு போன்ற நோய்கள் செல் எண்ணிக்கையிலும், அளவிலும் கூடுவதால் ஏற்படுகின்றன. நோய் விளைவிக்கக் கூடிய நோய் நுண்ணுயிரியின் அடையாளங்களும் காணப் படுகின்றன. எடுத்துக் காட்டாக, பாக்டீரியாக் கசிவு, பொடிப் பூசண நோய் ஆகியவற்றில் நோய்க் காரணியை இனம் கண்டு கொள்வது நோய் அறி இயலில் சிறப்பானது. இதன் அடிப்படையில், நோய்க் கட்டுப்பாட்டிற்கு உரிய நடைமுறைத் திறத்தினை வகுக்கலாம். நோய் விளைவிக்கக் கூடிய பல நுண்ணுயிரிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அவற்றைச் செயற்கை முறையில் வளர்க்கலாம். அவற்றை நோய் இல்லாத தாவரத்தினுள் ஊசி மூலம் செலுத்தி, அவற்றின் நோய் உண்டாக்கும் தன்மையினை ஆய்வு செய்யலாம். நோய் அறிவதற்கு ஒளி, எலெக்ட்ரான் நுண்ணோக்கி நிற மாலை அறிமுறை, மின் பிரிதல் ஆய்வு போன்ற உயிரி வேதி ஆய்வுகள், அடர்த்திக் கணிப்பு, புற ஊதா ஒளிர்வு போன்ற இயல்பியல் ஆய்வுகள், அகார் ஊடுருவுதல், நொதி இணை நோய்த் தடுப்புப் பகுப்பாய்வு போன்ற நீர் அறிமுறை ஆய்வுகள் போன்றவை பயனாகின்றன.
நோய்க் காரணி இயல் என்பதில் நோயிற்கான காரணம் பற்றி ஆராயப் படுகிறது. நோயின் காரணமாகத் தாவரங்கள் வெளிப் படுத்தும் அடையாளங்கள் அறிகுறி இயல் (Symptomology) எனப் படும். முதல் நிலை நோய்க் காரணி என்பது ஒரு தாவரத்திலிருந்து, நோயினை மற்றொரு தாவரத்திற்குப் பரப்பக் கூடியது. இது பாக்டீரியா, பூசணம் அல்லது வைரசாக இருக்கலாம். அல்லது நோய் மற்றொரு தாவரத்திற்குப் பரப்ப முடியாததாகவும் இருக்கலாம். எடுத்துக் காட்டாக, நைட்ரேட் மிகை நோயைக் கூறலாம். நோய் உயிரி என்னும் பெயர், வைரஸ், வைராய்டு போன்ற நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளுக்கே வழங்கப் படுகிறது. ஊட்டச் செறிவு அல்லது குறைவு போன்ற உயிர் அற்ற காரணிகளினாலும் நோய்கள் உண்டாகின்றன. ஒட்டுண்ணி என்பது ஓம்புயிரியில் இருந்து உணவினை உண்டு வாழும். நோய் ஏற்கக் கூடிய ஓம்புயிரித் தாவரத்திலிருந்து நோய் நுண்ணுயிரி உணவினைப் பெற்றுக் கொண்டு, ஓம்பியிரித் தாவரத்திற்கும் நோயினை உண்டாக்குகிறது. உயிரிக் கூட்டத்தில் நோய்ப் பரவும் விதம் பற்றிய ஆய்வு நோய்ப் பரவு இயல் எனப் படும். திடீரென விரைந்து பரவும் நோயிற்குக் கொள்ளை நோய் என்று பெயர்.
தாவர நோய்களின் வகைகள். முதலில் நோய்கள், அவற்றின் அறிகுறிகளின் அடிப்படையில் வகைப்பாடு செய்யப் பட்டன. நோய்களுக்கான காரணம் அறியப் படாததற்கு முன்பே, மூன்று பெரும் அறிகுறித் தொகுப்புகள் அறியப் பட்டன. அழுகல், புள்ளி வாடல் நோய்கள் நோய்ப் பாதிப்புற்ற செல் திசுக்களின் புரோட்டோ பிளாஸ்ட்டுகள் அழிவதால் உண்டாகின்றன. பச்சைய நீக்கம், குன்றிய வளர்ச்சி போன்றவை, தாவரங்களின் வளர்ச்சிக் குறைவினால் ஏற்படுகின்றன. இது நோயினை அடையாளம் கண்டு கொள்வதற்கும், நோய் அறிவதற்கும் பயன் படுகிறது. நோயிற்கு உரிய காரணிகளான பூசணம், பாக்டீரியா, வைரஸ், உருண்டைப் புழுக்கள் போன்றவை கண்டு பிடிக்கப் பட்ட பிறகு, நோய்க் காரணியைக் கொண்டு, நோய்களை வகைப்பாடு செய்வது எளிதாயிற்று. நோயிற்கு உரிய காரணி, தொற்று நோய்களை வகைப்பாடு செய்வது எளிதாயிற்று. நோயிற்கு உரிய காரணி தோற்று நோய்ப் பரப்பியாக இருந்தால், நோய்கள் பாக்டீரியாவாலும், வைரசாலும், உருண்டைப் புழுவாலும் உண்டாக்கப் படுகின்றன என்று வகைப்பாடு செய்யலாம். மேற்கூறியவற்றுள், பூக்கும் விதைத் தாவரங்கள், முன்னுயிரிகள், மைக்கோபிளாசம்கள், ஸ்பைரோ பிளாசம்கள், வைராய்டுகள் போன்ற நோய்க் காரணிகளும் சேர்க்கப் படுகின்றன.
இரண்டாம் தொகுதியில் தொற்று நோய் இல்லாத நோய்க் காரணிகளான காற்று மாசுகள், போதுமான அளவை விடக் குறைந்த அளவு ஆக்சிஜன் உள்ள நிலை, ஊட்டக் குறைவு அல்லது மிகையால் உண்டாகின்றன. பிற வகைப்பாடுகளில் குறிப்பிட்ட தாவர உறுப்புகளுக்கு ஏற்படும் நோய்கள், செயலில் தன்மை மாறுபாடுகளினால் உண்டாகும் நோய்கள் குறிப்பிட்ட தாவரத்திற்கு அல்லது கனி மரங்கள், காய்கறித் தாவரங்கள் போன்ற தாவரத் தொகுதிகளுக்கு உண்டாகும் நோய்கள் என்று வகைப்பாடு செய்யலாம். 1950ஆம் ஆண்டில் ஜி.எல்.மேக் நியூ என்பார், பின் வரும் செயலியல் காரணிகளினால், நல்ல நிலையில் உள்ள தாவரங்களில் நோய்கள் உண்டாகின்றன என்று கருதினார். அவை உணவுச் சேமிப்பு, சேமித்த உணவினைப் பயன் படுத்துதல், நீர், கனிமங்களை வேர்கள் உறிஞ்சுதல், ஆக்கு திசுக்களின் வளர்ச்சியும், வளர் முறையும், நீர் கடத்தல், ஒளிச் சேர்க்கை போன்ற செயலியல் தன்மைகளில் ஏற்படும் உலைவுகள் என்பன. மேற்கூறிய சிறப்பான செயலியல் தன்மைகளில் ஏற்படும் மாறுதல்களின் அடிப்படையில் நோய்கள் தொகுக்கப் பட்டன. இந்த நோய் வகைப் பாட்டியலில் நோயிற்கு உரிய காரணிகளை விட, நோய்த் தன்மைக்கு இன்றியமையாமை தரப் படுகிறது. எ–டு: நாற்றுகளில் உண்டாகும் கொள்ளை நோய். இந்த வகைப் பாட்டியலில் குறிப்பிட்ட நோய்க் காரணியை விடச் சூழ்நிலை எவ்வாறு நோய்ச் செயலினைப் பாதிக்கிறது என்பது சிறப்புப் பெறுகிறது.
தனி வளர்ப்பு (monoculture). ஒருமித்த மரபியல் தன்மை உடைய பயிர்களை உருவாக்கும் போது, நோய்கள் மிகுதியும் உண்டாகின்றன. இத்தகைய சூழ்நிலை தாவரத் தனி வளர்ப்பின் மூலம் ஏற்படுகிறது. 1970ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட மக்காச் சோள நோய் நவீன பயிர் வகைகளுக்கு உண்டாகும் நோயின் தீவிரத் தன்மையினை உணர்த்துகிறது. இதனால், உலகில் மக்களுக்குத் தேவையான மக்காச் சோளம் கிடைக்காமல் போயிற்று. புதிய நோய்த் தடுப்பு முறைகள், புதிய பூசணக் கொல்லிகள் போன்றவை கண்டு பிடிக்கப்பட்ட போதிலும், இன்று நோய்களினால் ஏற்படும் பயிர் இழப்பு மிகுந்தே உள்ளது.
நோய் அறிகுறிகள். தாவரங்களில் நோய்ச் செயல்களினால் ஏற்படும் வெளிப்பாடுகளே அறிகுறிகள் ஆகின்றன. இவை கட்புலனாகும் நிறம், அமைப்பு, உருவம் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள் ஆகும். இந்நிலையில், இலைகளில் புள்ளிகள் உண்டாகி, மஞ்சள் நிறம் பெற்று இறுதியில் அவை அழிந்து விடுகின்றன. கனிகள், தாவரங்களில் இருக்கும் போது அல்லது சேமித்து வைக்கும் போது அழுகி விடுகின்றன; தண்டுகளில் திட்டுகள் உண்டாகின்றன; தாவரங்களில் கொள்ளை நோய் ஏற்பட்டு அவை வாடி விடுகின்றன; குறிப்பிட்ட நோய்கள் தனிப்பட்ட அறிகுறிகளைக் காட்டுவதால், நோயிற்கு உரிய நோய் நுண்ணுயிரிகளைக் கண்டு பிடிக்கவும் செய்கின்றனர். கட்புலனாகக் கூடிய வெளிப்படையான அறிகுறிகள் அமைப்பியல் அறிகுறிகள் எனப் படும்.
அனைத்து நோய் அறிகுறிகளையும் மூன்று பெரும் பிரிவுகளில், அவை தாவரங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பொறுத்து, வகைப்பாடு செய்யலாம். பெரும்பாலான நோய் நுண்ணுயிரிகள் திசுக்களை அழிக்கின்றன. இது திசு இறப்பு எனப் படும். திசு இறப்பின் தொடக்க நிலையில் நீர்க் கசிவு, மஞ்சள் நிறமாதல், வாடல் போன்றவை ஏற்படுகின்றன. செயல்களும், திசுக்களும் அழியும் போது, தாவரப் பகுதி அல்லது தாவரத்தின் தோற்றம் மாறுகிறது. அதனால், கொள்ளை, திட்டு நோய், புள்ளி அழுகல் போன்றவை உண்டாகின்றன. பெரும்பாலான நோய் நுண்ணுயிரிகள் திசு இறப்பினை உண்டாக்குவதில்லை; ஆனால், அவை செல் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. செல் எண்ணிக்கை, அளவுகளில் குறைவு ஏற்பட்டால், அத்தகைய நோய்ச் செயல், குறை வளர்ச்சி என்று வகைப்பாடு செய்யப் படும். செல் எண்ணிக்கை, அளவு ஆகியவை நோயினால் அதிகரித்தால், இந்நிலை மிகை வளர்ச்சி எனப் படும். மேற்கூறிய செயல்கள் நோய் நுண்ணுயிரிகளில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக ஏற்படுவதால், நோயினை அறிந்து கொள்வதற்கு அவை மிகவும் பயன் படுகின்றன. குறை வளர்ச்சித் தொகுப்பினுள் தாவர நிறம், அளவு, அமைப்பு முதலியவற்றின் குறைவினால் பல் வண்ணம் (mosaic), குவி மைய அமைவு (rosetting), வளர்ச்சிக் குறைவு போன்ற அடையாளங்கள் உண்டாகின்றன. மிகை வளர்ச்சியினால் முண்டுகள் பெருக்குப் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
நோய்க் காரணிகள்பூசணம், பாக்டீரியா, வைரஸ், வைராய்டு, உருண்டைப் புழு, ஒட்டுண்ணி விதைத் தாவரம் போன்ற காரணிகள், தாவரங்களில் நோய்களை உண்டாக்குகின்றன.
பூசணம். ஏனைய காரணிகளை விடப் பூசணமே பெருமளவில் தாவரங்களில் நோய்களை உண்டாக்குகிறது. பூசணத்தில் நிறமிகள் அற்ற பல்லாயிரக் கணக்கான இனங்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், பெரும்பாலானவை நுண்ணோக்கியினால் மட்டும் காணக் கூடிய அளவில் மிகச் சிறியவை. ஒரு சில பூசணங்களின் வாழ்க்கைச் சுழற்சியின் சில பருவத்தில் அவை கண்ணுக்குத் தெரியும் அளவிலான புதிய பூசணத்தைத் தோற்றுவிக்கின்றன. மிகச் சிறிய இவ்விதைகளால், பூசணம், பால் இனப் பெருக்கமும், பாலிலாப் பெருக்கமும் பெறுகின்றன. ஓம்புயிரித் தாவரங்களில் இருந்து உணவைப் பெற்று, வாழும் பூசண நோய் நுண்ணுயிரி, ஒட்டுண்ணி எனப் படும். உயிருள்ள தாவரத் திசுக்களுடன் மட்டுமே இயைந்து வாழும் பூசணம் முழு ஒட்டுண்ணி எனப் படும். ஒரு சில பூசணங்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருள்களை, இறந்த கரிமப் பொருள்கள் அல்லது உயிருள்ள தாவரங்களில் இருந்து பெற்றுக் கொள்கின்றன. இனப் பெருக்க நிலைகளில் அமைப்பியல் தன்மைகளின் அடிப்படையில், பூசணம் பல வகுப்புகளாக வகைப்பாடு செய்யப் படும்.
பாக்டீரியா. இது பேரினங்களைச் சார்ந்த 100 பாக்டீரியா இனங்கள் நோய்களைத் தோற்றுவிக்கின்றன.
பரவல். இவைகளில் உள்ள பாக்டீரியா நோய் உயிரிகள் மழைத் துளிகளாலும், காற்றினாலும் அடித்துச் செல்லப் பட்டு ஒரு தாவரத்தில் இருந்து, மற்றொரு தாவரத்திற்குப் பரவுகின்றன. இலை, தண்டுகளில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் புறத் தோல் துளைகள், தண்டு துளைகள், திசு முறிவினால் இத்தகைய பாக்டீரியாக்கள் ஏனைய தாவரங்களிலும் பரவிச் சென்று, நோய் உண்டாக்குகின்றன. பூச்சி நீர்ப் பாசனத்திற்குரிய தண்ணீர், வளர் பருவத்தில் செய்யப் படும் பல பயிர் வளர்ப்புப் பணிகள் போன்றவற்றாலும் பாக்டீரியா நோய்கள் பரவுகின்றன.
நோய் தரும் பாக்டீரியா. தெள்ளுப் பூச்சி, விட்டில் பூச்சி போன்றவற்றுள் பாக்டீரியா தன் பணிக் காலத்தைக் கழிக்கும். மக்காச் சோள வாடல், நோயின் தீவிர தன்மை குளிர் கால வெப்ப நிலையைப் பொறுத்து அமைகிறது. ஏனெனில், அந்த குளிர் வெப்ப நிலையில் எத்தகைய விட்டில் பூச்சிகள் உயிர் வாழும் தன்மை பெற்றுள்ளன என்பதைப் பொறுத்து, அடுத்த பருவத்தில் மக்காச் சோளத்தில் வாடல் நோய் ஏற்படுகிறது. ஸ்பைரோபிளாஸ்மா போன்ற நோய் நுண்ணுயிரிகள், வெட்டுக் கிளிகளின் உடலினுள், குளிர் காலத்தைக் கழிக்கின்றன. ஓம்புயிரித் தாவரங்களுள் பெரும்பாலான பாக்டீரிய நோய் நுண்ணுயிரிகள் தம் ஒவ்வாத சூழ்நிலையைக் கழிக்கின்றன. ஓம்புயிரித் தாவரங்கள் கிடைக்காத போது, குறைந்த எண்ணிக்கையில் உள்ள பாக்டீரியாக்கள் மண்ணில் வாழ்கின்றன. குளிர் காலங்களில் ஓம்புயிரி இல்லாத புல் வேர்களில் பாக்டீரியாக்கள் நுழைந்து, அங்குத் தமக்கேற்ற அடுத்த பருவம் வரும் வரை உயிர் வாழ்கின்றன. ஒரு சில பாக்டீரியாக்கள் ஒவ்வாத குளிர் காலத்தில் விதைகளினுள் வாழ்கின்றன. உருளைக் கிழங்கில் வளைய அழுகல் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள், உருளைக் கிழங்குகளைச் சேமித்து வைத்திருக்கும் போது, அவற்றினுள் குளிர் காலத்தைக் கழித்து விடுகின்றன. உருளைக் கிழங்குகளை நடுவதற்காகக் கத்தியினால் நறுக்கும் போது, அந்தக் கத்தியில் ஒட்டிக் கொண்டு, நோய் இல்லாத கிழங்குகளிலும் இவை நோயைப் பரப்புகின்றன. தண்டு, மரப் பட்டை, இலையுறை, தாவரங்களில் இயற்கையாக ஏற்படும் திறவு, காயங்கள் மூலம் பாக்டீரியா நுழைய முடிவதில்லை. இலையில் உள்ள புறத் தோல் துளை, தண்டுத் துளை, இலையின் நீர்த் திறவு போன்றவை பாக்டீரியாவிற்கு இயற்கையாக அமைந்த உட்செல்லும் வழிகளாகச் செயல் பட்டு, அவற்றின் மூலம் பாக்டீரியா தாவரங்களினுள் நுழைகிறது. இலைகளை மென்று தின்னும் பூச்சி, வேர் முடிச்சு நோய் உண்டாக்கும் உருண்டைப் புழு போன்றவை தாவரங்களில் காயங்களை ஏற்படுத்துவதால், பாக்டீரியா அத்தகைய காயங்களினுள் நுழைய வாய்ப்பு ஏற்படுகிறது.
நோய்ச் செயல்பாடு. பாக்டீரியா, தாவரங்களில் நோய்களைத் தூண்டும் விதம் பற்றிச் சரி வர அறியப் படவில்லை. தாவரங்களில் உள்ள ஆயிரக் கணக்கான செல்கள், அவற்றைச் சூழ்ந்துள்ள பல்லாயிரக் கணக்கான செல்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இதனால், ஓம்புயிரித் தாவரத்தினுள் நொதிகளும், நச்சுப் பொருள்களும் நுழைய வாய்ப்பு உள்ளது. மென் அழுகல் நோய் உண்டாக்கும் பாக்டீரியா தன் நொதிகளினால், செல் இடைப் பொருள்களைக் குறைக்கிறது. இதனால் நீர், செல் இடைவெளிப் பகுதிகளில் கசிவதால், இதன் திசு மிகவும் மென்மையாகி விடுகிறது. புகையிலை நோயளிக்கும் பாக்டீரியா இலைகளின் மூலம் உட்சென்று, குறைந்த மூலக் கூற்று எடை கொண்ட நச்சுப் பொருள்களை உண்டாக்கி ஓம்புயிரிச் செல்களின் வளர் சிதை மாற்றத்தில், மஞ்சளான வெற்றிடங்களை உண்டாக்கும். காற்றுக் குழாய்க் கற்றைகளில் நோய் விளைவிக்கும் கோந்து போன்ற பொருளைப் பாக்டீரியா உற்பத்தி செய்கிறது.
கட்டுப்பாடு. சரி வரச் சிதைவடையாத தாவரமட்கு, விதை ஆகியவற்றிலிருந்து நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் தாவரங்களைத் தாக்கி, நோய் உண்டாக்குகின்றன. பயிற்சி முறை, நோய் உயிரி நீக்கிய விதைகளை விதைத்தல் மூலம் இலைகளைத் தாக்கும் பாக்டீரியாக்களைப் பெருமளவில் குறைக்கலாம். பாக்டீரிய இலை நோய்களுக்கு மருந்துத் தெளித்தல், தூவுதல் முதலியன பயனளிக்காமையால், நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற புதிய வகைகள் உருவாக்கப் பட்டன. ஆப்பிள், பேரி போன்றவற்றில் காணும் நெருப்புக் கொள்ளை நோயிற்கு, இது வரை சரியான பொருளாதாரப் பயன் உடைய தெளித்தலோ, தூவுதலோ கண்டு பிடிக்கப் படவில்லை. தக்காளி, உருளைக் கிழங்கு வாடல் நோயினை உண்டாக்கும் பாக்டீரியா மண்ணில் நீண்ட காலம் நிலைத்து வாழ்கிறது. நோய்க் கட்டுப்பாட்டு முறையில் நோய்த் தடுப்பு ஆற்றல் பெற்றவற்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மக்காச் சோளத்தில் உண்டாகும் நோயினைத் தடுக்கப் பயிர்ச் சுழற்சி முறை பயன் படுகிறது. சிறிய வீட்டுத் தோட்டங்களில், மண்ணோடு கலந்துள்ள நோய் விளைவிக்கும் பாக்டீரியாவை நீக்க, மெத்தில் புரோமைடு, புகையூட்டம் முதலியன போடப் படுகின்றன. கண்ணாடி வீடுகளில் உள்ள தாவரங்களில் உண்டாகும் பாக்டீரிய நோயினை நீக்க, நீராவியின் மூலம் உயிரி நீக்கம் செய்யப் படுகிறது. வெள்ளரி வாடல் நோயினை உண்டாக்கும் பாக்டீரியா, பூச்சிகளின் மூலம் பரவுவதால், பூச்சிகளை அழித்து, வாடல் நோயைக் கட்டுப் படுத்தலாம்.
வகைப்பாடு. தாவரங்களில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை அதன் பண்பு, செல் அமைப்பியல், நிறங்களை ஏற்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இனங்களாகப் பிரிக்க இயலாது. இதனால், உயிரி வேதியியல், இயற்பியல் ஆய்வுகள் மூலம் பொதுவாகப் பாக்டீரியாவை வேறுபடுத்தி உணர இயலும். பாக்டீரியப் புரத ஆய்வு, டி.என்.ஏ. கலப்பு முறை, கொல்லிகளுக்கு ஈடு கொடுக்கும் தன்மை, புரதங்களின் மின் பகுப்பு ஆய்வு போன்ற செயல்முறைகளினால் பாக்டீரியாவை இனங் காணலாம்.
வைரசும் வைராய்டும். தாவரங்களில் நோய் உண்டாக்கக் கூடிய மிக எளிய அமைப்புடைய இவற்றின்அடிப்படை நியூக்ளிய அமிலங்கள் ஆகும். வைரசில் நியூக்கிளிய அமிலத்தைச் சுற்றிலும், ஒரு புரத உறை உள்ளது. ஆனால், வைராய்டில் இத்தகைய புரத உறை கிடையாது. ஏறத் தாழ 400 வைரஸ்களும், 10 வைராய்டுகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இவற்றின் நுண்ணிய அளவினால், எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலமே இவற்றைக் காண இயலும். இவை கோள வடிவமாகவும், குழல் வடிவமாகவும் உள்ளன. கோள வடிவ வைரஸ்கள் 25–50 நானோ மீட்டர் விட்டம் உடையவை. குழல் வடிவ வைரஸ்கள் 12–15 நானோமீட்டர் விட்டமும் 200–2000 நானோமீட்டர் நீளமும் கொண்டுள்ளன. பெரும்பாலான தாவர வைரஸ்களில், ஒற்றை இழை கொண்ட 1.5–4 மில் லியன் மூலக் கூறு எடை உள்ள ஆர்.எஸ்.ஏ. காணப் படுகின்றது. பல கோள வடிவமான வைரஸ்களில், இரட்டை இழை உடைய 10–20 மில்லியன் மூலக் கூற்று எடை கொண்ட ஆர்.என்.ஏ. இழைகள் உள்ளன. ஒரு சில வைரஸ்களில் 4–5 மில்லியன் மூலக் கூற்று எடை உள்ள இரட்டை டி.என்.ஏ. உள்ளது. சில வைரஸ்களில் 0.8 மில்லியன் மூலக் கூற்று எடை உள்ள ஒற்றை இழை டி.என்.ஏ. உள்ளது.
இரட்டிப்பு. வைரஸ் இரட்டிப்பதற்கு, உயிருடைய செல்கள் தேவைப் படுகின்றன. புகையிலைப் பல வண்ண வைரஸ், வெள்ளரிப் பல் வண்ண வைரஸ் ஆகியவை பல தாவர இனங்களிலும் காணப் படுகின்றன. கோதுமைக் கீற்றுப் பல் வண்ண வைரஸ் ஒரு சில புற்களில் மட்டுமே உள்ளது. தாவரங்களில் உள்ள காயங்கள் மூலம், வைரஸ் நுழைகிறது. வைரசில் உள்ள புரத உறை அகன்று, நியூக்ளிய அமிலம் ஓம்புயிரித் தாவரச் செல்லினுள் விட்ப் படுகிறது. வைரசில் உள்ள டி.என்.ஏ, ஆர்.என்.ஏ. போன்ற சேர்க்கைக்கு உரிய புரதங்களை உற்பத்தி செய்கின்றன. நியூக்ளிய அமிலம் இரட்டிப்பு அடைந்து, புரத உறை உண்டாகிறது. நியூக்ளிய அமிலமும், புரத உறையும் இணைந்து, வைரஸ் உண்டாகிறது. வைராய்டு இரட்டிப்பு அடையும் விதம் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. வைரஸ் ஒரு செல்லில் இருந்து, ஏனைய செல்களுக்கு எளிதாகப் பரவுகிறது. சில தாவரங்களில், முதலில் வைரஸ் நுழைந்த செல்கள் இறந்து விடுவதால், மீண்டும் வைரஸ் பரவுதில்லை.
பரவல். தாவரங்களுக்குத் தாவரம் வைரஸ்கள் ஊடுருவிச் செல்வது, பல விதஙகளில் நடைபெறுகிறது. தாவரப் பகுதிகளை ஒட்டு வைக்கும் போது, நோயுற்ற பகுதியிலிருந்து, நோயற்ற பகுதிக்கு வைரஸ் ஊடுருவி விடுகிறது. விதையிலாப் பெருக்கத்திற்கு எனத் தேர்ந்தெடுக்கப் படும் நறுக்குகள் வைரஸ் நோய் அற்றவையாக உள்ளமை அறியப் பட்ட பின்னரே, அவற்றை நிலத்தில் நட வேண்டும். நோயுற்ற இலைகள் நோயற்ற இலைகளுடன் உராயும் போது, உண்டாகும் காயங்களின் மூலம் வைரஸ் உட்சென்று விடும். வைரஸ் நோயுள்ள தாவரங்களை உண்ணும் பூச்சி, உருண்டைப் புழு, பூசணம் ஆகியவை வைரஸ் நோயினைத் தமக்குள் சில காலம் வைத்திருந்து, பிறகு அவை நோயற்ற தாவரங்களை உண்ணும் போது, அவற்றினுள் நோய் பரவுகிறது. நோயற்ற விதைகளின் மூலம், சில வைரஸ்கள் பல சந்ததிகளிலும் நோயினை உண்டாகுகின்றன. நோயற்ற தாவரங்கள், நோயுற்ற தாவரங்களில் தொடர்பு கொள்வதன் மூலமும், வெட்டும் கருவிகளின் மூலமும் வைராய்டுகள் பரவுகின்றன. கட்டுப்பாடு. நோய் எதிர்ப்புத் திறம் பெற்ற வகைகளைப் பயிர்ப் பெருக்க முறையில் உண்டாக்கியும், வைரஸ் இல்லாத தாவரங்களைப் பெருக்கத்திற்குப் பயன்படுத்தியும், வைரஸ் இல்லாத விதைகளை விதைப்பதன் மூலமும்,வைரஸ் பரப்பும் மாற்றிகளை அழிப்பதன் மூலமும், சில தாவரங்களில் மிதமான வைரஸ்களை, ஓம்புயிரித் தாவரத்தில் செலுத்துவதன் மூலமும், தாவரங்களை வைரஸ் நோய்களிலிருந்து காக்கலாம். முறைக்கு மிகுந்த செலவாகுமாதலால், பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த பணப் பயிர்களான உருளைக் கிழங்கு போன்றவற்றில் ஏற்படும் தங்க நிற உருண்டைப் புழுக்களைத் தடுக்கவே, இத்தகைய மண் புகையூட்டம் மேற்கொள்ளப் படுகிறது. உயிருள்ள தாவரங்களில் உள்ள உருண்டைப் புழுக்களைக் கட்டுப் படுத்த ஆர்க்னோபாஸ்ஃபேட், கார்பமேட் பூச்சிக் கொல்லிகள் பெரிதும் பயனாகின்றன.
விதைத் தாவரங்கள் . ஏறத்தாழ 3000 விதைத் தாவரங்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்க்கை நடத்துகின்றன. லொராந்தேசி, விஸ்கேசிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் ஒட்டுண்ணிகளாக உள்ளன. கண்வால்வுலேசி என்னும் குடும்பத்தில் ஒரே ஒரு பேரினம் மட்டும், அதாவது கஸ்குடா என்னும் தாவரம் மட்டும் ஒட்டுண்ணியாக உள்ளது. பெரும்பாலான ஒட்டுண்ணித் தாவரங்கள் தரை வாழ்வன. இவை ஓம்புயிரித் தாவரங்களின் வேர்கள் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவற்றின் உணவுப் பொருள்களை உண்டு வாழ்கின்றன. சில தாவரங்கள் உணவு தயாரித்து, நிலத்தில் தற்சார்பு உடையவையாக வாழ்கின்றன. இவை தகுந்த ஓம்புயிரித் தாவரம் கிடைத்து, அதனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட பின்னரே, பூக்கத் தொடங்குகின்றன. இவை குறை ஒட்டுண்ணிகள் எனப் படும்.
ஸ்டிரிகா ஆசியாடிகா என்னும் குறை ஒட்டுண்ணிச் செடி மக்காச் சோளம், சோளம் ஆகிய தானியப் பயிர்களின் வேர்களில் ஒட்டிக் கொண்டு, அவற்றின் நீர், கனிமப் பொருள்களை உறிஞ்சி வாழ்வதால், தானியப் பயிர்கள் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. லொராந்தஸ், விஸ்கம் போன்ற தண்டு ஒட்டுண்ணிகள் காடு, கனித் தோட்டங்கள், அழகிற்காக வளர்க்கப் படும் மரங்கள் போன்றவற்றில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து, அவற்றில் பேரழிவை உண்டாக்குகின்றன. ஒட்டுண்ணி எதிர்ப்புத் திறன் பெற்றவற்றை உருவாக்குதல், குறைந்த அளவு நோய் ஏற்கும் இனங்களைப் பயிரிடுதல், வேதிப் பொருள்களைப் பயன் படுத்துதல், ஒட்டுண்ணி தாக்கப்பட்ட கிளைகளைக் களைதல், நோயுற்ற தாவரங்களையே அகற்றுதல் போன்ற பல ஒருமித்த செயல்களினால், ஒட்டுண்ணிகளிடமிருந்து பயன் தரு தாவரங்களைக் காக்கலாம்.
நோய்த் தொற்றாத காரணிகள். நோய் தொற்றாத காரணிகளினால் ஏற்படும் அறிகுறிகள்,மேலும் பரவுவதில்லை. இவை ஊட்டப் பொருள் மிகை அல்லது குறைவால் உண்டாகின்றன. மேலும் மாசுகளும், தாவரங்களுக்குப் புறத்தே ஏற்படும் உயிரியல் விளைவுகளும், நோய்த் தொற்றாத காரணிகளாக விளங்குகின்றன.
ஊட்டப் பொருள் குறை அல்லது மிகை. தாவரங்களின் இயல்பான வளர்ச்சிக்குத் தாவரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்ஃபேட், பொட்டாசியம் போன்றவை தொடர்ச்சியாகத் தேவைப் படுகின்றன. மண்ணில் உள்ள அமில–கார வினை களினால் ஊட்டப் பொருள் கிடைப்பது பாதிக்கப் படுகிறது. நைட்ரஜன் குறை உள்ள தாவரங்களின் இலைகளில் பச்சய நீக்கம் உண்டாகி, அதனால் முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறம் அடைகின்றன. பாஸ்ஃபேட் குறை உள்ள தாவரங்களின் இலைகள் இயல்பான இலைகளை விடக் கரும் பச்சை நிறமாகவும், நுனி சிவந்தும் காணப் படும். பொட்டாசியம் குறைவாக உள்ள தாவரங்களின் இலைகள் பசுமை நிறமும், நுனி விளிம்புகளில் புள்ளிகளும் பெற்று இருக்கும். சிறு ஊட்டப் பொருள் குறைவினாலும், பல நோய்கள் ஏற்படுகின்றன. பேரான் குறைந்தால், ஆப்பிள் கனியினுள் தக்கைத் திசு உண்டாகும். கால்சியம் குறைவினால், தக்காளியில் நுனிப் பூ அழுகல் ஏற்படும். இரும்பு குறைந்தால், பச்சய நீக்கம் ஏற்படும். மாங்கனீஸ் குறைந்தால், ஓட்ஸ் இலைகளில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். மாலிப்டினம் குறைவினால், காலிஃபிளவரில் சாட்டை வால் நோய் காணப் படும். துத்தநாகக் குறைவால், பீச் மரத்தில் சிற்றிலைகள் தோன்றும்.
மாசுப் பொருள்கள். பூச்சி கொல்லி மருந்துகளைப் பெருமளவில் பயன் படுத்தினாலும், தாவரங்களுக்குத் தீமை உண்டாகிறது. பூசணக் கொல்லி, பூச்சி கொல்லிகளைத் தவறாகப் பயன் படுத்தவும் கூடாது. செடிக் கொல்லிகளைத் தெளிப்பான் மூலம் தெளிப்பதால், அருகமைந்த நிலப் பகுதியில் உள்ள பயிர்களுக்குத் தீமை ஏற்படுகிறது. செடிக் கொல்லி மருந்துகள் மண்ணில் தங்குவதால், அடுத்த பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கும் அழிவு உண்டாகிறது. செடிக் கொல்லி மருந்துகள், மண்ணினுள் நுழைந்து கிணற்று நீரில் கலந்தால், அந்த நீரைப் பயன்படுத்துவோருக்கும், விலங்குகளுக்கும், தாவரங்- களுக்கும் இடர் ஏற்படும். தூவுவான், தெளிப்பான், கலப்பான் போன்ற கருவிகளை நன்றாகத் தூய்மை செய்யாவிடில், செடிக் கொல்லி மருந்துகள் மாசாகக் கலந்து தீமை உண்டாக்கும்.
சல்ஃபர் கலந்துள்ள தொல்லுயிர்ப் படிம எரி பொருள்களை எரிப்பதாலும்,உலோக சல்பைடுகளைத் தூய்மை ஆக்கும் போதும், சல்பர் ஆக்சைடுகள் உண்டாகின்றன. நிலம் சூழ் ஓசோன், கதிரவனில் இருந்து வரும் வெப்பம் மக்களை அடையா வண்ணம் காக்கிறது. தொல்லுயிர்ப் படிம எரி பொருள்களைப் பயன் படுத்தும் ஊர்திகளில் இருந்து, ஹைட்ரோ கார்பன் மாசுகள் உண்டாகின்றன. தாவரங்களுக்குத் தீமை உண்டாக்கும் பிற காற்று மாசுகளும் உள்ளன. அலுமினியம், எஃகு, பீங்கான் பாத்திரங்கள், பாஸ்ஃபேட் உரங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வளிம வடிவில் ஃபுளோரைடு மாசுகள் தோன்றுகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் மீதேன், அதன் உண்மை வடிவில் தாவரங்களுக்கு நச்சாக அமைவதில்லை; ஆனால், அது மண்ணில் உள்ள மீதேனை உண்டு வாழும் பாக்டீரியாக்களுக்கு உணவாகிறது. இத்தகைய பாக்டீரியாக்கள் எண்ணிக்கையில் மிகப் பலவாகப் பெருக, மண்ணில் உள்ள ஆக்சிஜன் அளவுக் குறைவினால், உயர் தாவரங்களின் வேர்கள் கொல்லப் படுகின்றன. சல்ஃபர் ஆக்சைடு, ஃபுளோரைடு போன்ற மாசுப் பொருள்களைத் தாக்கமுற்ற தாவரங்களில் காண இயலாது. தனித் தனியாக இருப்பதை விட, ஓசோன், சல்ஃபர் ஆக்சைடு இரண்டும் கலந்திருந்த போது, தாவரங்களுக்குத் தீமை மிகுந்தமை அறியப் பட்டது. காற்று மாசுப் பொருள்களினால் இலைகளில் புள்ளிகளும், பல்வகை நிறங்களும் உண்டாகின. இலை, கனிகளில், சிவப்பு நிறம் அற்றுப் போய், பூ உறுப்புகள் வாடி, குறை வளர்ச்சி ஏற்பட்டு,தாவரம் முழுவதும் உள்ள தாவரப் பகுதிகள் அழிந்தன.
வெளி உயிரினங்களின் உயிரியல் விளைவுகள். ஆப்பிளில் இருந்து உண்டாகும் எதிலின், கேரட்டில் ஏற்படுத்தும் விளைவினை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். ஒரு தாவரத்தில் இருந்து உண்டாகிய நச்சுப் பொருள், மற்றத் தாவரத்தில் உண்டாகும் தீய விளைவும் இதில் அடங்கும். கறுப்பு வால்நட் மரங்களின் வேர்கள் உள்ள மண் பகுதியில், ஏனைய தாவரங்கள் நன்றாக வளர்வதில்லை. கறுப்பு வால்நட் மரங்கள் குயுனோனிக் சேர்மங்களைச் சுரப்பதால், மேற்கூறிய விளைவு ஏற்படுகிறது. பாசில்லஸ், சிரியஸ் போன்ற பாக்டீரியாக்களில் இருந்து சுரந்த ஐசோலுசின் என்னும் நச்சுப் பொருளால், புகையிலையில் நோய் ஏற்படுகிறது.
வாழ்க்கைச் சுழற்சி. தாவரங்களில் நோய் நுண்ணுயிரிகள் நோய்களைத் தொடக்கிப் பல தொடர்ச்சியான நிலைகளில் கீழ்க் காணும் நோய்ச் சுழற்சியினை உண்டாக்குகின்றன. இதில், நோய் உயிரிகள் குளிர் காலத்தைக் கழித்தல், நோய் உயிரிகளின் நுழைவு, பரவுதல், நோய் உண்டாக்குதல், வளர்ச்சி மற்றும் பெருக்கத்தினால் புதிய தாவரங்களில் நோய் உண்டாக்குதல் போன்றவை அடங்கும்.
குளிர் காலத்தைக் கழித்தல். நோய் உயிரிகள் தம் குளிர் காலத்தை, மரங்களின் தரைக் கீழ்ப் பகுதிகளில் கழிக்கின்றன. சில நோய் உயிரிகள் பல்லாண்டு வாழ் தாவரங்களிலும், தாவரமட்கிலும், விதைகளிலும், பூச்சிகளிலும் மண்ணிலும் கழிக்கின்றன. உயிள்ள செல்களில் மைக்கோப்பிளாஸ்மா, வைரஸ், முன்னுயிரி ஆகியவை தம் குளிர் காலத்தைக் கழிக்கின்றன. உயிருள்ள செல்களுடன் தொடர்பு கொண்டுள்ள போது, பாக்டீரியா குளிர் காலத்தைக் கழிக்கிறது. பூசணம். ஒட்டுண்ணி உயர் தாவரங்கள், உருண்டைப் புழு போன்றவை குளிர் காலத்தை முறையே விதை, விதை முட்டை போன்றவற்றில் கழிக்கின்றன.
நோய் உயிரியின் உற்பத்தியும், வெளியீடும். நோய் உயிரிகள் புதிய தாவரங்களில் நுழைவதற்கு வைரஸ், பாக்டீரியா, பூசணம், ஒட்டுண்ணி உயர் தாவரங்கள் ஆகியவற்றின் உடலப் பகுதி அல்லது விதைகளைப் பயன் படுத்துகின்றன. வளர் பருவத்தில் நோய் புகுத்தப் படுவது முதல் நிலை நோய்ப் புகுத்துதல் எனப் படும். இதனால், முதல் நிலை நோய்கள் ஏற்படுகின்றன. சில வகை வைரஸ், மைக்கோப்பிளாஸ்மா, முன்னுயிரி, பாக்டீரியா போன்றவை தாவரங்களின் வெளியே நோயைப் புகுத்தாமல், மொட்டு, ஒட்டு, பூச்சி மாற்றி போன்ற உயிருள்ள செல்களில் நோயினை மாற்றுகின்றன. பூசணம், ஒட்டுண்ணி உயர் தாவரங்கள், பெரும்பாலான பாக்டீரியாக்கள், உருண்டைப் புழு ஆகியவை, ஓம்புயிரித் தாவரங்களின் வெளிப் புறத்தில் நோயைப் பரப்புகின்றன அல்லது ஈரம் இருந்தால், தாவரத்தில் இருந்து வெளியேறுகின்றன.
உருண்டைப் புழு. அண்டார்டிக் கடல் முதல் வெப்ப நீருற்று வரையிலான நீர்ச் சூழல்களில் காணப் படும் முதுகெலும்பு இல்லாத விலங்குத் தொகுதி, உருண்டைப் புழுவாகும். இது நன்னீர்ச் சூழலிலும், கடல் நீர்ச் சூழலிலும் காணப் படும். தாவரங்கள் வாழும் மண் துகள்களைச் சூழ்ந்துள்ள நீர்ப் படிவங்களில் வாழும். பெரும்பாலான உருண்டைப் புழுக்கள், நுண்ணோக்கியினால் மட்டுமே காணத் தக்க சிறு தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியாக்களை உண்டு வாழ்கின்றன. ஒரு சில உருண்டைப் புழுக்கள், கொக்கிப் புழு,ஊசிப் புழு, மண் புழு,விலங்கு ஒட்டுண்ணி ஆகியவற்றை உண்டு வாழ்கின்றன. உருண்டைப் புழுவின் வெளிப் புறத்தில் ஒட்டு உறுப்பு இராமையால், இது பாம்பு போல் நகர்ந்து செல்கிறது. இது முட்டை மூலம் இனப் பெருக்கம் செய்கிறது. இதற்கு ஆண், பெண் இனப் பெருக்க உறுப்புகள் காணப் படுகின்றன. தனித்த ஆண் புழுக்களைக் காண்பது அரிது; அனைத்து இனங்களிலும், நான்கு இளம் நிலைகளும், சட்டை உரித்தலுக்குப் பிறகு, முதிர்ச்சிப் பருவமும் காணப் படும் முட்டைக் கூட்டினுள்ளேயே, முதல் சட்டை உரிதல் நிகழ்கிறது. ஒரு சில இனங்களில், முதிர்ச்சி அடைந்த பெண் புழு உப்பிய நிலையை எய்தி, இயக்கம் எதுவும் இன்றி, ஒரே இடத்தில் நிலையாக உள்ளது.
தீமை. அக ஒட்டுண்ணிகள் திசுக்களைத் தின்பதால், வேர்ப் பகுதியில் உள்ள திசுக்களில் அழிவு உண்டாக்குகிறது. இத்தகைய இயக்கம் உடைய உருண்டைப் புழு இலைகள் வரை சென்று, அங்கு பல பழுப்பு நிறப் புள்ளிகளை உண்டாக்குகிறது. இயக்கமற்ற ஒரே இடத்தில் உள்ள அக ஒட்டுண்ணிகள் ஓம்புயிரித் தாவரச் செல்களைக் கொல்லாமல்,அவற்றில் மாறுதல்களைத் தூண்டி, முண்டுகளை உண்டாக்குகின்றன. உருண்டைப் புழுவின் தலையைச் சூழ்ந்துள்ள ஓம்புயிரித் தாவரத்தின் செல்கள், தடித்த செல் சுவர்கள், அடர்த்தியான சைட்டோப்பிளாசம், நியூக்ளியஸ் ஆகியவற்றுடன் செல்கள் பெருப்பதால், அப்பகுதிகளில் மட்டும் முண்டுகள் ஏற்படுகின்றன. ஓம்புயிரித் தாவரத்திலிருந்து பெற்ற ஊட்டப் பொருள்கள், இத்தகைய பேருருவச் செல்களில் மிகுதியாக உள்ளன. ஒரு சில இனங்களில் தண்டு அல்லது விதைகளிலும் முண்டுகள் உண்டாகின்றன. ஒரு சில புற ஒட்டுண்ணிகளும் முண்டுகளைத் தோற்றுவிக்கின்றன.
புழுக்கள் உள்ள வேர் நுனிகள், தம் ஆற்றல் தன்மையினை இழந்து வளராமல் நின்று, அதனால், வேர்த் துடிப்போ, அழிவோ அடையாமல் இருக்கும். உருண்டைப் புழு,தாவரங்களில் நேரடியாகத் தீமையை உருவாக்குவதுடன், நோய்க் கூட்டுகளுக்கு உரிய சிறப்பான காரணியாகவும் விளங்குகிறது. நைவுப் புண், முண்டு மூலம் மண் வாழ் பூசணமும், பாக்டீரியாவும் நுழைகின்றன. உருண்டைப் புழு உடன் இருக்கும் போது, மண் வாழ் நோய் நுண்ணுயிரிகள் உண்டாக்கும் நோய்கள் தீவிரமாக உள்ளன. மண் வாழ் நோய்ப் பூசணத்திற்கு, எதிர்ப்புத் திறம் பெற்ற தாவர வகைகளினுள் இதற்கு முன்னர், ஒட்டுண்ணி உருண்டைப் புழுக்கள் வாழ்ந்தால், அத்தகைய தாவரங்கள் தம் எதிர்ப்புத் தன்மையினை இழந்து விடுகின்றன.
கட்டுப்பாடு. நோயற்ற தாவரங்களுடன், பயிர்ச் சுழற்சி செய்து, பயிரிட்டும் உருண்டைப் புழு எதிர்ப்புத் திறம் பெற்ற வகைகளைப் பயிரிட்டும், தாவர ஒட்டுண்ணி உருண்டைப் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். சாமந்தியைப் போன்ற சில தாவரங்கள், உருண்டைப் புழுக்களுக்கு நச்சாக உள்ள சிறு சேர்மங்களைச் சுரக்கின்றன. நீர்ப் பாசன முறை மூலம் தாவரத் தீமைகளைக் குறைக்கலாம். பொட்டாசியத்தைக் கலந்து, நீர்ப் பாசனம் செய்வதால் உருண்டைப் புழுவினால் இழப்பு ஏற்பட்ட பொட்டாசியத் தாவரங்கள் மீண்டும் பொட்டாசியத்தைப் பெற வாய்ப்புள்ளது. விலங்கு உரம், தழை உரம், கரிமக் கழிவுப் பொருள்கள் ஆகியவை உருண்டைப் புழுவினை உண்ணக் கூடிய பூசணம் உண்டாகும் சூழலை ஏற்படுத்துகின்றன. வேதிக் கட்டுப்பாட்டில், மண்ணில் நீர்ம வடிவத்தில் உள்ள வேதிப் பொருள்கள் உருகி, நச்சுத் தன்மை உடைய புகையை உண்டாக்குவதால், இப்புகை மண்ணினுள் ஊடுருவிச் செல்கிறது.
நோயைப் பரப்புதல். காற்று, மழை, பூச்சி, விலங்கு, மனிதரால் பயன் படுத்தப் படும் கருவி போன்றவற்றால் நோய்கள் பரவுகின்றன. பாக்டீரியா, பூசணம், உருண்டைப் புழு போன்றவை ஒரு சில செ.மீ. வரை நகருகின்றன.
நோய் நுழைவு. நோய் உயிரி, நோய் ஏற்கக் கூடிய ஓம்புயிரித் தாவரத்தில் நுழைந்து, நோய் உண்டாக்குகிறது. ஓம்புயிரித் தாவரத்துடன் தொடர்பு ஏற்பட்டாலோ, காயங்கள் அல்லது இயற்கைத் திறவுகள் மூலமாகவோ, நோய் உயிரிகள் நுழைகின்றன. வைரஸ், மைக்கோப்பிளாஸ்மா, முன்னுயிரி, சில பாக்டீரியாக்கள் போன்றவை பூச்சி மாற்றிகள் மூலம் ஓம்புயிரித் தாவரங்களிலும் நுழைகின்றன. மேற்கூறிய நோய் உயிரிகள், தாவரங்களின் மேற்பரப்பில் தொடர்பு ஏற்படுத்தி, காயங்கள் அல்லது புறத் தோல் துளைகள், தண்டுத் துளைகள் மூலமாக நுழைகின்றன. நோய் உயிரிகள் நோய் ஏற்கக் கூடிய தாவரங்களில் நேரடியாக நுழைந்து, நொதிகளைச் சுரந்து செல் சுவர்களைக் கரைத்து, தாவரங்களில் இயற்பியல் அழுத்தம் தருகின்றது.
நோய் உண்டாதல். ஓம்புயிரித் தாவரங்கள் ஊட்டப் பொருள்களை உறிஞ்சத் தொடங்கிய உடனே, நோய் உண்டாகிறது. ஓம்புயிரித் தாவரம், நோய் உயிரினை எதிர்த்துப் போராட, அதைக் கொன்று விடுகிறது. அல்லது தீமையான விளைவுகளை நிறுத்துகிறது. நோய் உயிரியின் நோயினால், ஓம்புயிரித் தாவரம் அழிவதுன்டு. நோய் ஏற்கும் தன்மையும், நோய் உண்டாக்கும் தன்மையும், ஒத்து வரின், நோய் உண்டாகிறது. சில சமயங்களில், தொடக்கத்தில் உண்டாகும் இத்தன்மையும் நோய் உயிரி உண்டாக்கும் எலக்டின் என்னும் புரத மூலக் கூறுகளுடன் ஓம்புயிரித் தாவரம், அதன் பரப்பில் உண்டாக்கும் சிக்கலான சர்க்கரை மூலக் கூறுகளுடன் ஒத்தியங்கும். நோய் உயிரி நோய் உண்டாக்கும் போது, தாவரச் செல்களை மட்டுப் படுத்தி, நச்சுப் பொருள்களைத் தோற்றுவித்து அவற்றால், தாவரப் புரதங்களைச் செயல் இழக்கச் செய்து, தாவரச் சவ்வுகளின் பணிகளை அழித்து, தாவர ஹார்மோன் சம நிலையைக் குலைக்கும் வளர்ச்சி சீராக்கிகளை உண்டாக்கும். நோய் உயிரிக்கு எதிராகத் தாவரங்களும், நொதி நச்சுப் பொருள், வளர்ச்சிச் சீராக்கி முதலியவற்றை உண்டாக்கி, நோய் உயிரிக்கு எதிராகத் தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன. நோய் ஏற்பவைக்கும், நோய் உயிரிக்கும் இடையே ஏற்படும் வினை, எதிர் வினை ஆகியன அவற்றின் குரோமாசோம்களில் அமைந்த டி.என்.ஏ மூலக் கூற்றினால் தீர்மானிக்கப் படும். அண்மைக் கால ஆய்வுகளின்படி, சில குறிப்பிட்ட நோய்களை உண்டாக்கும் நோய் உயிரிகளில் பிளாஸ் மிடுகள் என்னும் வட்ட வடிவமான டி.என்.ஏ. இழைகளுடன் கூடிய கூடுதலான மரபியல் பொருள்கள் உள்ளன என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
பிளாஸ்மிடு டி.என்.ஏ.இல் உள்ள மரபிகள் நச்சுப் பொருள்களை உற்பத்தி செய்து, கட்டுப்பாடு அற்ற செல் பகுப்புகள் தொடர்ந்து விரைவில் நடைபெறுவதால், முண்டு உண்டாகிறது. தாவரத்தில் நோய் உண்டாகும் போது, தாவரத்தின் பகுதிகள் அழிக்கப் படுகின்றன அல்லது நோய் ஏற்கும் தாவர, நோய் உயிரிச் சேர்க்கைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளப் படுகின்றது. நோய் தொடங்குவதற்கும், நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே உள்ள காலம், குறிப்பிட்ட நோய் ஏற்பி நோய் உயிரிச் சேர்க்கைக்குக் குறிப்பிட்டுச் சொல்லும் படியாகவும், அங்கு நிலவும் வெப்ப நிலைக்கு ஏற்றதாகவும் அமையும். பெரும்பாலான நோய்களில், இந்த இடைப்பட்ட காலம் 2 நாள்கள் முதல் 3 வாரங்களாகவும், சில நோய்கள் 2 முதல் 3 ஆண்டுகளாகவும் உள்ளன.
நோய் உயிரியின் வளர்ச்சியும், பெருக்கமும். நோய் உண்டாகும் போது, தாவரத்தில் உள்ள பெரும்பாலான நோய் உயிரிகள் அளவில் பெருக்கம் அடையாமல், எண்ணிக்கையில் மட்டும் பெருக்கம் அடைகின்றன. நோய் உண்டாக்கும் பூசணங்களும், ஒட்டுண்ணி உயர் தாவரங்களும் தம் அளவில் அதிகரிக்கின்றன. தாவரங்களில் நோய் உண்டாக்கும் நோய் உயிரிகளான பாக்டீரியா, மைக்கோ பிளாஸ்மா, முன்னுயிரி போன்றவை பிளவு முறையில் பெருக்கம் அடைகின்றன. அதாவது, ஒவ்வொரு நோய் உயிரியும், தம்மை முற்றிலும் ஒத்த மற்றொரு நோய் உயிரியை உண்டாக்குகிறது. தாவரங்களுள் உருண்டைப் புழுக்கள் இட்ட முட்டைகளில் இருந்து, பல புதிய புழுக்கள் உண்டாகின்றன.
பெரும்பாலான பாக்டீரியாக்களும், உருண்டைப் புழுக்களும் ஓம்புயிரித் தாவரத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் பரவுகின்றன. ஓம்புயிரித் தாவரங்களின் வேர்கள், மன் பரப்பில் நுழையும் போது, ஒட்டுண்ணிப் பூசணங்கள் உண்டாக்கும் எண்ணிறந்த விதைகள் மூலம் ஓம்புயிரித் தாவரங்களுக்கு வெளியில் தம் விதைகளைத் தோற்றுவிக்கின்றன.இவ்வாறு, ஒவ்வொரு நோயுற்ற தாவரத்திலும், கோடிக் கணக்கான புதிய நோய் உண்டாக்கிகள் தோற்றுவிக்கப் பட்டுத் தக்க சூழ்நிலைகளில் நோய் எங்கும் பரவி, புதிய இரண்டாம் நிலை நோய்கள் உண்டாகின்றன. இரண்டாம் நிலை நோய் உண்டாக்கும் நோய் செயல் ஒவ்வொரு வளர்ச்சி பருவத்திலும், நோய் உயிரிக்கு ஏற்றவாறு அமையும். வளர்ச்சிப் பருவத்தின் முடிவில், நோய் உயிரிகள் வளர்வடங்கிய நிலையை அடைகின்றன அல்லது சிறப்பு வாய்ந்த கெட்டித் தன்மை உடைய அமைப்புகளை உண்டாக்கி, அவை மூலம் குளிர் காலத்தைக் கழித்து, நோய்ச் சுழற்சியினை நிறைவு செய்கின்றன.
நோய் நச்சு. நோய் நச்சு(pathotoxin) என்பது, உயிரினங்களின் மூலம் உண்டானது. நொதியினின்றும் வேறுபட்ட இது தாவர நோயியலில் சிறப்பிடம் பெற்றது. தாவரங்களில் நோய் உண்டாக்கும் பூசணம், பாக்டீரியா போன்றவை பெரும்பாலான நச்சுகளை உண்டாக்குகின்றன. ஆனால், ஒரு சில நோய் நச்சுகள் உயர் வகைத் தாவரங்களில் இருந்து உண்டாகின்றன. தாவரமும், நோய் விளைவிக்கும் பாக்டீரியாவும் சேர்ந்து புரியும் வினை, எதிர் வினைகளில் மூலமாக நோய் நச்சு ஏற்படுகிறது. ஒரு சில நோய் நச்சுகள் பெரிதும் தேர்வுத் திறன் பெற்றவை. அவை நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் வழியே நோய் நச்சை வெளிப்படுத்திப் பேரழிவைத் தருகின்றன.ஆனால், வேறு சில நோய்கள் நச்சுகள் தேர்வுத் திறன் அற்றவை. இவை, தாவரங்கள் நோய் ஏற்பவையாயினும், நோய் எதிர்ப்புத் திறன் பெற்றவையாயினும், அவற்றில் நச்சுத் தன்மையினை உண்டாக்குகின்றன. ஒரு சில நோய் நச்சுகள் இனத் தேர்வு உடையவை. எனவே, அவை அனைத்துத் தாவரங்களிலும் தீமை விளைவிக்காமல், ஒரு சில தாவரங்களில் மட்டும் தீமை விளைவிக்கின்றன. இத்தகைய சில தாவரங்கள் நோய் உயிரிக்கு எதிர்ப்புத் திறன் பெற்று விடுவதால், நச்சுப் பொருள்களை உணரும் நிலையில் உள்ளன. தேர்வுத் திறனும், நோய் நுண்மையும். குறிப்பிட்டுச் சொல்லும் படியான தேர்வுத் திறன் பெற்ற நோய் நச்சுகள் குறிப்பிட்ட ஓம்புயிரி நுண்மை நச்சுகள் எனப் படும். பல சிறப்பான தாவர நோய்களுக்குச் சிறப்பான நோய் நுண்மைக்கு உரிய செயல் முறைகள் விளக்கப் படுகின்றன. பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட மரபியல் காரணியைக் கொண்ட தனியான தாவரத் தொகுதி, குறிப்பிட்ட நோயை ஏற்கக் கூடியதாக உள்ளது. நோய் உயிரி உண்டாக்கிய தேர்வுத் திறன் பெற்ற நோய் நச்சுகளும் நுண்மை பெற்றுள்ள, அவை நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற தாவரங்களை விட, நோய் ஏற்கக் கூடிய தாவரங்களில் 4 இலட்சம் மடங்கு நச்சு உள்ளவையாகும். நோயின் செயலில் தன்மை, தாவரங்களின் நோய் எதிர்ப்புத் திறம் ஆகியவை பற்றிய ஆய்வுகளில் தேர்வுத் திறன் பெற்ற நோய் நச்சுகள் மாதிரி அமைப்புகளாக அறிவியல் ஆய்வுகளில் பயனாகின்றன. நோய் உயிரிகள் உண்டாக்குபவைக்கு மாற்றாக, நோயுற்ற தாவரங்களின் வளர் சிதை மாறுதல்கள் மாற்றப் படுகின்றன. நோயுற்ற தாவரங்களில், நாளடைவில் ஏற்படும் நோயியல் நிகழ்ச்சிகள், நச்சுச் செயலினால் சில மணி நேரங்களாகக் குறைக்கப் படுகின்றன.
தேர்வுத் திறன் பெற்ற நோய் நச்சுகளினால், இரண்டு பேரிடர்களிடமிருந்து பயன் தரக் கூடிய முடிவுகளைக் கண்டறிந்தனர். 1940ஆம் ஆண்டில் ஓட்ஸ் தானியத்தில் உண்டாகிய விக்டோரியாக் கோலை நோய் பேரழிவைத் தந்தது. எனவே, இந்த நோய்கள் தாக்காத நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற புதிய வகைகள் கண்டு பிடிக்கப் பட்டன. ஓட்சின் விக்டோரியாக் கோலை நோய் எதிர்ப்பிற்கு, pc² என்னும் நோய் எதிர்ப்புப் பண்பு புதிதாகத் தாவரத்தில் புகுத்தப் பட்டது. ஆனால், இத்தகைய நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ஓட்ஸ் பயிர் ஹெல்மிந்தோஸ்போரியம் விக்டோரியீ (Helminthosporium victoriae) என்னும் பூசண நோய் உயிரியினால் நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அளித்தது. இந்தப் பூசணம் விக்டோரின் என்னும் வளர் சிதை மாற்றப் பொருளை உண்டாக்கியது.இது pc² என்னும் காரணியைக் கொண்ட பயிரிடும் வகை ஓட்சிற்கு மிகு நச்சுத் தன்மை உடையதாக இருந்தது. இதனால், விக்டோரியாக் கோலை நோயினைப் பெற்றது. துரு நோயிற்கும், விக்டோரியா கோலை நோயிற்கும், எதிர்ப்புத் திறன் பெற்ற ஓட்ஸ் வகையினை உண்டாக்க மிகப் பெரிய முயற்சிகள் மேற்கொண்டாலும், அவை வெற்றி பெறவில்லை. இதற்காக, 8 கோடி ஓட்ஸ் நாற்றுகள் விக்டோரியின் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. இவற்றுள் பிழைத்திருந்த ஒரு சில நாற்றுகள் துரு நோயிற்கும், விக்டோரியாக் கோலை நோயிற்கும் எதிர்ப்புத் திறன் பெற்று விளங்கின. மற்ற தாவர நோய் உயிரிகள் உண்டாக்கும் நோய் நச்சு, சோளம், எலுமிச்சை, கரும்பு முதலிய பயிர்களில் எதிர்ப்புத் திறன் வாய்ந்த வகைகளை உருவாக்க உதவின.
வேதிச் செயல் முறை. பெரும்பாலான நோய் நச்சுகள் தேர்வு திறன் அற்றவை. ஜிப்பெரேல் வினை போன்ற ஒரு சில வளர்ச்சி சீராக்கிளாகப் பணி புரிகின்றன. ஜிப்பெரேல்லின் என்பது ஒரு வகைப் பூசணத்திலிருந்து எடுக்கப் பட்டது. இந்த பூசணம், நெல்லில் அறிவற்ற நாற்றுகள்(foolish seedlings) என்னும் நோயினை உண்டாக்குகிறது. செயல் முறையிலான வளர்ப்பின் போது, பூசணம் ஜிப்பெரேல்லின்களை உண்டாக்குகிறது. இந்தப் பூசணத்தால் தாக்கப் பட்ட பயிர்களில் நீண்ட கணுவிடைப் பகுதிகள் உள்ளன. ஏனெனில், இது தாவர வளர்வூக்கியாகச் செயல் படுகிறது. ஃபூசிகாக்கம் அமிக்டாலி (Fusicoccum amygdali <!---- See: https://en.wikipedia.org/wiki/Fusicoccum_amygdali---->) என்னும் பூசணத்திலிருந்து உண்டான ஃபூசிகாக்சின் என்பது வளர்ச்சிச் சீராக்கிப் பண்புகள் கொண்டது. இதை உண்டாக்கும் பூசணம் பீச்,பாதாம் மரங்களில் வாடல் நோயினைத் தோற்றுவிக்கிறது. இந்த வளர்ச்சிச் சீராக்கியும், தேர்வுத் திறன் அற்ற நோய் நச்சாகும்.இது தாவர இலைகளில் புறத் தோல் துளைகளைத் திறப்பதற்கும் காரணமாக உள்ளது. ஆல்டர்னேரியா ஆல்டர்னேடா (Alternarla alternata) என்னும் பூசணத்திலிருந்து உண்டான டென்டாக்சின் என்னும் நோய் நச்சு இனத் தேர்வுத் திறன் பெற்றது. இது வெள்ளரி,பருத்தி போன்றவற்றில் பல் வண்ணப் பச்சைய நீக்க நோயை உண்டாக்குகிறது. ஆனால், புகையிலை, முள்ளங்கி போன்றவற்றில் இந்தப் பூசணம் தாக்குவதில்லை.
தேர்வுத் திறன் பெற்ற வேதிப் பண்புகள் அறியப் பட்ட ஒரே நோய் நச்சு, AM நச்சு என்பதாகும். ஆல்டர்னேரியாமாலி என்னும் பூசணத்திலிருந்து எடுக்கப் பட்ட இது, ஆப்பிள் பழத்தில் நோய் உண்டாக்குகிறது. AM நச்சு என்பது நோய் ஏற்கும் ஆப்பிள் திசுக்களின் உட்செலுத்துந் திறனை 10–9 கரைசலில் தடை செய்கிறது. ஆனால், தடுப்பு ஆற்றல் பெற்ற திசுக்களில் இதை விட 10,000 மடங்கு மிகுதியானால் மட்டுமே, மேற்காணும் விளைவு தோன்றும். —கே.ஆர். பாலச்சந்திர கணேசன் பயிர் நோய்கள். பயிர்கள் தோன்றிய காலந் தொட்டே, பயிர்களில் நோய்களும் தோன்றியுள்ளன. பழங்காலத்திலிருந்தே பயிர் நோய்கள் காணப் படினும், அண்மைக் காலத்திலேயே, பயிர் நோய்கள் பற்றிய அறிவியல் நன்கு வளர்ந்துள்ளது. ஜெர்மனி நாட்டு அறிவியலரான ஆன்டன் டீ பேரி என்பார், 1853ஆம் ஆண்டில் நோய் நுண்ணுயிரிகளால் பயிர் நோய்கள் தோன்றுவதற்கான சான்றினை முதன் முறையாக வெளிப் படுத்தினார். இந்த ஆய்வே, பயிர் நோயியல் வளர்வதற்கு வழிகாட்டியாக அமைந்தது. இத்துறையில், விரிவான ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப் பட்டன.
நோய்க் காரணிகள். பயிர் நோய்கள் பல்வேறு நோய்க் காரணிகளால் உண்டாகின்றன. இக்காரணிகளை உயிருள்ளவை, உயிரற்றவை எனப் பகுக்கலாம்.
அறிகுறிகள். நோயினால் தாக்கப்பட்ட பயிரின் வெளிப் பகுதியிலும், உட்ப்புறத் திசுக்களிலும் பல வித மாற்றங்கள் தோன்றுகின்றன. அறிகுறிகளைக் கொண்டும், ஆய்வகத்தில் நுண்ணோக்கியின் துணை கொண்டும், ஆய்வு முறைகளின் அடிப்படையிலும் நோய்க் காரணிகளைக் கண்டறிந்து கொள்ளலாம். இத்தகைய நோய்க் காரணிகளால் பின் வரும் அறிகுறிகள் தோன்றுகின்றன.
இலைப் புள்ளி. இலைகளில் காணப் படும் குறிப்பிடத் தக்க நோய்களில் புள்ளி நோயும் ஒன்றாகும்.நோயினால் பாதிக்கப்பட்ட இலைகளில், வெண்மை, மஞ்சள், சிவப்பு, கருஞ் சிவப்பு, கறுப்பு நிறப் புள்ளிகள் தோன்றுகின்றன. சில வகைப் புள்ளிகளின் நடுவில் சிறிய கறுப்பு நிற வித்துத் திரள்கள் காணப் படும். நோய்க்குத் தகுந்தாற் போல், புள்ளிகளின் உருவமும், வடிவமும், காணப் படும். எ.டு. நிலக் கடலை டிக்கா இலைப் புள்ளி.
இலைத் துளை. இலைப் புள்ளி நோய்கள் சிலவற்றில், புள்ளிகள் ஏற்பட்ட பகுதிகள் மட்டும் காய்ந்து, நைந்து உதிர்வதால், அப்பகுதியில் துளைகள் உள்ளமையைக் காணலாம். எ.டு. மரவள்ளி இலைப் புள்ளி.
இலைக் கருகல். இலைகளில் தோன்றும் நோயின் காரணமாக, இலைகளில் பெரும் பகுதி பழுப்பு நிறமாகவோ, கரும் பழுப்பு நிறமாகவோ மாறி, நாளடைவில் கருகி விடுகிறது. எ.டு. உருளைக் கிழங்கு பின் இலைக் கருகல்.
தார்ப் புள்ளி. இலையின் மேல் பல கருமையான தடித்த புள்ளிகள் வட்ட வடிவில் பளபளப்பாகத் தோன்றும். எ.டு. சோளம் தார்ப் பள்ளி.
கரும் படலம். நோயினால் பாதிக்கப்பட்ட இலை , காய், மலர் முதலியவற்றின் மீது புகை படிந்தது போன்ற கருமை நிறப் பூசணப் படிவுகளைக் காணலாம். எ.டு. மாவிலைக் கரும் படல நோய்.
கொப்புளக் கருகல். இலையின் அடியில் பல பெரிய கொப்புளங்கள் தோன்றி, முதலில் வெண்மையாகக் காணப் படும் . இக்கொப்புளங்கள் பின்னர், இளங்காய்ப்பு நிறமாக மாறி விடும். கொப்புளங்களின் மேற்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்துடன் குழியாகக் காணப் படும். எ.டு. தேயிலைக் கொப்பளக் கருகல்.
துரு. செடியின் சில பகுதிகளில் கரும் பழுப்பு, சிவப்பு, கருஞ்சிப்பு நிறமான வட்ட வடிவ அல்லது நீள் சதுரமான தடித்த துருக் கூடுகள் தோன்றுகின்றன. நாளடைவில், இக்கூடுகள் உடைந்து, கருமை அல்லது ஆரஞ்சு நிறப் பொடியாக வெளிப் படுகின்றன. எ.டு. கோதுமைத் துரு.
சாம்பல் நோய். இலைகளில் வெண்மை அல்லது சாம்பல் நிறப் படிவு ஏற்பட்டுள்ளமையைக் காணலாம். எ.டு. வெண்டையின் சாம்பல் நோய்.
கரிப் பூட்டை. நோயற்ற கதிரில் உள்ள தானியங்கள் கரிப் பூட்டையாக மாற்றப் பட்டு, அவற்றில் கருமையான பூசணப் பொடிகள் உண்டாகின்றன. பாதிக்கப்பட்ட தானியங்கள் உருவில் பெரியனவாய், ஒரு மெல்லிய தோலால் போர்த்தப் பட்டிருக்கும்.எ.டு.சோளக் கரிப் பூட்டை.
வேரழுகல். நோயுள்ள செடியின் பக்க வேர்களும், ஆணி வேர்களும் அழுகி விடுகின்றன. இவற்றின் பட்டைகள் எளிதில் உரிந்து விடும். எ.டு. பருத்தியில் வேரழுகல். பிளவை. இலை,கிளை,கனி போன்றவற்றில் சொறி போன்று, சொரசொரப்பாகவோ மரு போன்ற வெளி வளர்ச்சியுடனோ அறிகுறிகள் காணப் படும். தாக்கப் பட்ட பகுதியின் மேற்பரப்பில் உள்ள திசுக்கள் அழிந்து, தக்கை போன்ற வளர்ச்சி காணப் படும். அவற்றின் மையப் பகுதிகள் குழியாகப் பிளவையாக தோன்றும். எ.டு. எலுமிச்சையின் பிளவை.
இலைச் சுருள். நோயினால் பாதிக்கப்பட்ட இலை, இயல்பான வடிவத்தை இழந்து, சுருக்கமுற்றுக் காணப் படும். எ.டு.புகையிலை இலைச் சுருள்.
தேமல். பசுமையான இலைப் பரப்பில், ஆங்காங்கே இளம் பச்சை நிறத் திட்டுகள் காணப் படும். எ.டு. மரவள்ளித் தேமல்.
கட்டுப்பாட்டு முறை. பயிர் நோய்கள் கட்டுப்படுத்துவதற்குத் தவிர்த்தல் (exclusion), அகற்றல் அல்லது (eradication), காத்தல் (protection), எதிர்ப்பு ஆற்றலூட்டல் (immunization), ஆகிய நான்கு முறைகள் கடைப் பிடிக்கப் படுகின்றன.
நோய் முன்னறிவிப்பு. நோய் முன்னறிவிப்புப் (disease forecasting) பற்றிய ஆய்வுகள் மேலை நாடுகளில் பெருகி வருகின்றன. ஆயினும், இந்தியாவில் இத்துறையில் முன்னேற்றம் குறிப்பிடத் தக்க அளவில் இல்லை. நோய் தோன்றவிருப்பதை முன்னரே அறிந்து கூறுவது, நோயினைத் தடுக்க வழி கோலும். கால நிலை, நோய் நுண்ணுயிரிகள் பரவியிருக்கும் நிலை போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வந்தால், நோய் தோன்றவிருப்பதை முன்னரே அறிந்து கொள்ளலாம்.
உருளைக் கிழங்கின் பின்கருகல் நோய் தோன்றவிருப்பதை முன்னறிவிக்கும் முறையினை, ஹாலந்து நாட்டினர் முதன் முதலில் உருவாக்கினர். இம்முறை இரவில் நான்கு மணி நேரமாவது பனி தோன்றுதல், இரவில் வெப்ப நிலை 50°C அளவுக்குக் குறையாமல் இருத்தல், அடுத்த நாள் மேகக் கூட்டங்கள் தென்படல், நான்கு மணி நேரமாவது பனி பெய்த மறுநாள் 0.1 மி.மீ. அளவுக்கு குறையாமல் மழை பெய்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.
மழை, வெயில், வெப்பம், சூறாவளிக் காற்று, புயல் போன்றவை பாக்டீரிய நோய்கள் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்க வல்லவை. கோடைக் காலத்தில் சில நாடுகளில் குளிர் பகுதிகளில், குறைந்த வெப்பமிருத்தல் செப்டம்பர் திங்களில் குறைந்த வெப்பமும் நிறைந்த மழையும் இணைந்திருந்தல் போன்றவை இந்நிலையில் குறிப்பிடத் தக்கவை.
நிலத்தில் உள்ள மண், பயிருக்குப் பாய்ச்சல் நீர் போன்றவற்றில் கலந்திருக்கும் பாக்டீரியா அழிவு நச்சுயிரியின் (bacteriophage) அளவுக்கும், நெல்லில் இலைக் கருகல் நோய் திடீரென்று தோன்றுவதற்கும் தொடர்புண்டு. இந்நோய் தோன்றுவதற்கு முன்பு, நச்சுயிரியின் எண்ணிக்கை மண்ணிலும், பாய்ச்சும் நீரிலும் கூடுதலாகிறது. எனவே, பயிர் வளரும் போது தக்க இடைவெளியில் ஒவ்வொரு பருவத்திலும், பாக்டீரியா அழிவு நச்சுயிரி கலந்திருக்கும் அளவினைக் கணக்கிட்டு வருதல் வேண்டும். இந்தக் குறியீட்டு அளவினைக் கொண்டு, முன் கூட்டியே நோய் தோன்றுதலைக் கணிக்க முடியும்.
வட இந்தியாவில் கோதுமைப் பயிரில் செந்துரு நோய் தோன்றுதல், பின் வரும் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கிறது. ஜனவரித் திங்கள் 15–20ஆம் நாளுக்குள், உத்திரப் பிரதேசம், வடக்கு பீகார் மாநிலங்களில், கோதுமைப் பயிரில் 20–30 கி .மீ. பரப்பில், நோயின் அறிகுறி தென்படும்.வடஇந்தியாவில் ஜனவரி–ஏப்ரல் 15ஆம் நாளுக்குள் பெய்யும் மொத்த அளவும், மழை பெய்யும் நாள்களின் எண்ணிக்கையும், இயல்பை விட இரண்டு மடங்காகக் காணப் படும். வடமேற்கு இந்தியப் பகுதிகளில் மார்ச் 15 வரை ஒவ்வொரு வாரத்தில் சராசரி உயர் வெப்ப நிலை, வழக்கத்தை விட 1°C கூடவோ, குறையவோ செய்யும்.
முதல் இரண்டு நிகழ்ச்சிகள் முறையாக இருந்தால், செந்துரு நோய் பெருவாரியாகத் தோன்றும். மூன்று நிகழ்ச்சிகளிலும், சிறிதளவு மாற்றமிருந்தால், செந்துரு நோய் ஓரளவே தோன்றும் . வெப்ப நிலை குறைவாக நிலவினால், ஓரளவு செந்துரு நோயும், பேரளவு மஞ்சள் துரு நோயும் கோதுமைப் பயிரில் தோன்றும்.
நோயின் தீவிரத் தன்மை. நோயின் தீவிரத் தன்மையினைப் (disease intensity) பயிர்களில் பல்வேறு வழிகளில் அளவிட்டுக் கூறலாம். பயிர்களின் நோய்கள் பல்வேறு நோய் நுண்ணுயிரிகளால் ஏற்படுகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட பயிர் வெளிப் படுத்தும் அறிகுறிகளைக் கொண்டு, நோயின் தீவிரத் தன்மையை அளவிடலாம்.
தீவிரத் தன்மையை அறுதியிடும் முறைகள். வாடல், வேரழுகல் , நாற்றழுகல், தேமல் போன்ற நோய்களால் பாதிக்கப் பட்ட செடிகளின் அளவினைச் சதவிகிதத்தில் வெளிப்படுத்தலாம். செடிகளின் மொத்த எண்ணிக்கையும், அவற்றுள் நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளின் எண்ணிக்கையும் கணக்கிடப் பட்டு, அவற்றைக் கொண்டு பாதிக்கப் பட்ட செடிகளின் எண்ணிக்கையும் கணக்கிடப் பட்டு, அவற்றைக் கொண்டு பாதிக்கப்பட்ட செடிகளின் சதவிகிதம் அறியப் படுகிறது. சான்றாக, ஒரு பாத்தியில் 100 எண்ணிக்கையுள்ள மொத்த செடிகளில், 20 செடிகளில் வாடல் நோய் தென்பட்டால், அப்பாத்தியில் 20% வாடல் நோயின் அளவு இருப்பதாகக் கொள்ளலாம். அதற்கு அடுத்துள்ள பாத்தியில் மொத்தம் 100 செடிகளைக் கணக்கிட்டுப் பார்க்கும் போது, அவற்றுள் 30 செடிகளில் வாடல் நோய் தென்பட்டால், 30% வாடல் நோயின் அளவு இருப்பதாகக் கொள்ளலாம். எனவே, முதல் பாத்தியில் 20%உம், அடுத்துள்ள பாத்தியில் 30%உம் வாடல் நோய் உள்ளமையால், முதல் பாத்தியை விட, அடுத்துள்ள பாத்தியில் வாடல் நோயின் தீவிரத் தன்மை கூடுதலாக உள்ளமை புலனாகும். இலைப் புள்ளி போன்ற நோய்கள் தோன்றினால், அச்செடியில் பாதிக்கப் பட்டிருக்கும் இலையின் பரப்பளவைக் கொண்டு நோயின் தீவிரத் தன்மையை அளவிடலாம்.
தீவிரத் தன்மையை அறுதியிடும் காரணிகள். நோயின் தீவிரத் தன்மையை அறுதியிட வீரியமுள்ள நோய் நுண்ணுயிரிகள், அவை பெருவாரியாகப் பெருகும் தன்மை, அவை பிற பகுதிகளுக்குப் பரவுதல், நோய்க்கு எளிதில் இலக்காகும் தாவர வகை, நோய் தீவிரமாவதற்கு ஏற்ற சுற்றுப் புறச் சூழ்நிலை ஆகியவை பயன் படும்.
வீரியமுள்ள நோய் நுண்ணுயிரிகள் பெருக்கமடைந்து, பல்வேறு பகுதிகளுக்குப் பரவிப் பயிரைத் தாக்கும். நோய்க்கு எதிர்ப்புத் திறனுள்ள வகைகளைப் பயிரிடப் பயன் படுத்தப் படும் போது, நோய் எளிதில் தோன்றும் வாய்ப்புக் குறைவு. வெப்பம், வானீரப் பசை, சூரிய ஒளி, மழையூட்டம் போன்றவை நோய்கள் தீவிரமாகத் தோன்றும் தன்மைக்கு அடிப்படையாகின்றன.
நோய் பெருவாரியாகத் தோன்றுதல். நோய் பெருவாரியாகத் தோன்றுதல் (epidemiology) பல காரணங்களால் நிகழும். நோய் திடீரென்று தீவிரமாகத் தோன்றிப் பெருவாரியாகப் பரவுதற்கு மாறும் இயல்புகளைக் கொண்ட பயிர் அல்லது ஊண்வழங்கி (host) நோய் நுண்ணுயிரி (pathogen) சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவை காரணமாகின்றன. நிலையான தொடர்புடைய இவை, ஓரளவு ஒன்றையொன்று கட்டுப் படுத்தும் இயல்புடையவை. இவற்றில், பயிர் அல்லது ஊண் வழங்கி இன்றியமையாத காரணியாகும். பல பயிர்களில் எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகள் இருக்கின்றன. எதிர்ப்புத் திறனற்ற வகைகளைப் பயிரிடப் பயன்படுத்தும் போது, நோய் தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. பயிர்களின் உடலமைப்பும் பயிர்ச் சாற்றில் அடங்கியுள்ள வேதிப் பொருள்களும் எதிர்ப்புத் திறத்தின் அளவினை அறுதியிடுகின்றன. பொதுவாகத் தழைச் சத்து மிகுதியாகவும், சாம்பல் சத்துக் குறைவாகவும் இருந்தால், எதிர்ப்புத் திறன் குறைகிறது. பயிர்களில் திசுக்கள் மென்மையானவையாகவும், மிகவும் சாறுள்ளவையாகவும் இருந்தால், எளிதில் நோய்த் தாக்கமுறுகின்றன.
நோய் நுண்ணுயிரிகளால் பயிரில் நோய் தோன்றுதல், சங்கிலித் தொடர் போன்று ஒன்றோடொன்று இணைந்த பல்வேறு இயல்புகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வோர் இயல்பும் நோய் பெருவாரியாகப் பரவுதற்கு அடிப்படை யாகிறது. பயிரில் நோய் நுண்ணுயிரிகள் உட்புகுதல், உட்சென்ற பின் பெருக்கமடைதல், நோயின் அறிகுறியை வெளிப் படுத்தல் , பின்னர் அடுத்த பயிருக்குப் பரவுதல் போன்றவை தொடர் நிகழ்வுகளாகும். இவ்வாறான வாழ்க்கைச் சூழல் பயிரிடும் பருவத்திலேயே பல முறை நிகழும். மேலும் நுண்ணுயிரி, அடுத்த பருவத்தில் பெருவாரியாக நோயினைத் தோற்றுவிக்க வேண்டுமாயின், பயிரிடப் படாத காலங்களில் அழியாது இருக்க வேண்டும். ஒரு பருவத்திலிருந்து, அடுத்த பருவம் வரை விதைகளிலும், பல்லாண்டு வாழ் செடிகளிலும், செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும் சருகு, கிளை ஆகியவற்றிலும், வெட்டுப் பட்ட கிழங்கு போன்றவற்றிலும் நுண்ணுயிரிகள் பெருக்கமடைகின்றன. இவ்வாறு, ஒன்றோடொன்று தொடர்புடைய காரணிகளின் தொடர்பினைத் துண்டிக்காமல் விடுவதால், நோய்த் தோற்றம் மிகுதியாகிறது. பருத்தியில் கருங்கிளை நோய், நெல்லில் செம்புள்ளி நோய், சோளத்தில் கரிப் பூட்டை நோய் போன்றவை, விதை வழியாக ஒரு பருவத்திலிருந்து அடுத்த பருவத்திற்குப் பரவுவதாலும், நோயினால் தாக்கப் பட்ட பயிரிலிருந்து கிடைக்கும் விதைகளைப் பயன் படுத்துவதாலும் கூடுதலாகின்றன. வெள்ளரி வாடல் நோயை வெள்ளரியைத் தாக்கும் வண்டுகள் பரப்புவதால், பூச்சிக் கொல்லியைத் தெளித்து, வண்டுகளை ஒழிக்காவிடில், நோய் விரைந்து பரவும் சூழ்நிலை ஏற்படுகிறது. விதை நேர்த்தி மேற்கொள்ளாமை, பயிர்ச் சுழற்சியைக் கடைப் பிடிக்காமை, நோய் எதிர்ப்புத் திறன் வகையைப் பயன் படுத்தாமை போன்றவற்றால், நோய் மிகுதியாகப் பரவும். நோய்களால் ஏற்படும் இழப்பு ஒவ்வோர் ஆண்டுக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு வேறுபடும். இவ்வேறுபாட்டிற்குக் காரணம் அப்பகுதிகளிலே நிலவும் சுற்றுப் புறச் சூழ்நிலைகளுக்கேற்றவாறு நுண்ணுயிரிகள் பயிர்களைத் தாக்கும் அளவும், திறனும் வேறுபடுகின்றன. இவற்றுள் வெப்பமும், ஈரமும் குறிப்பிடத் தக்கவை. மண்ணில் ஈரமும், காற்றில் ஈரப் பதமும் மிகுதியாக இருந்தால், பயிர்களும் மிகுதியான நீரை எடுத்துக் கொள்கின்றன. இலைகள் மிகுதியான ஈரத்துடன் இருக்கின்றன. இலைகளில் நோய்களைக் கட்டுப் படுத்துவதற்காகத் தெளிக்கப் படும் வேதிப் பொருள்கள் இலைகளில் உள்ள நீரில் கலப்பதால், அவற்றின் அடர்வு ஓரளவு குறைகிறது. எனவே, வேதிப் பொருள்களின் திறன் குறைவதால், பயிர்கள் நோய்க்கு உள்ளாகின்றன. பெரும்பாலான பாக்டீரியாக்கள், காற்றுடன் கூடிய மழை பெய்யும் போது, சிதறும் மழைத் துளிகளின் மூலமும், நீர் நிலத்தின் மீது ஓடி, அடுத்துள்ள வயல்களில் வடிவதாலும் பரவுகின்றன. மழை பெய்யும் போது, இலைகளும் ஈரத்தை ஈர்த்துக் கொள்கின்றன. காற்றின் ஈரப் பதமும், மழைக் காலங்களில் கூடுவதால், பாக்டீரியாக்கள் செடிகளில் எளிதில் தொற்றுகின்றன.
வெப்பம், நோய் தோன்றுவதற்கு அடிப்படையாகிறது. பாக்டீரியா வாடல் நோய், தக்காளி பயிரிடும் இடங்களில் பொதுவாகக் காணப் படும். ஆயினும், மண்ணில் வெப்பம் கூடுவதாலேயே, இந்நோய் பெருவாரியாகத் தோன்றுகின்றன. குறைந்த வெப்பத்தினால், நோய் நுண்ணுயிரிகள் தொற்றினாலும், நோயின் அறிகுறி தோன்றுவதற்கு ஏற்ற கூடுதல் வெப்ப நிலை தேவைப் படுகிறது. அளவுக்கு மிகுதியான வெப்பமும், நோய் தோன்றுவதற்கு ஏற்றதன்று. பெரும்பாலும் 89°C வெப்பத்தில் வளரும் தக்காளிச் செடிகளில், கொப்புளங்கள் தோன்றுவதில்லை.ஆனால் 82°C வெப்பத்தில் வளரும் செடிகளில், கொப்புளங்கள் தோன்றுகின்றன.
மண்ணில் உள்ள வெப்ப நிலை, 20–27°C இருந்தால், பருத்தியில் வாடல் நோய் தோன்றுகின்றது. மண்ணில் 40°C அளவுள்ள வெப்ப நிலையில் வளரும் பருத்திச் செடிகளில், கருங்கிளை நோய் தோன்றுவதில்லை. ஆயினும், ஏறத் தாழ 28°C வெப்பம், இந்நோய் பெருவாரியாகத் தோன்றுவதற்கு வழி வகுக்கிறது. குளிரூட்டிய அறைகளில், உருளைக் கிழங்கை வைத்திருந்தால், பாக்டீரியாவால் ஏற்படும் அழுகல் நோய் தோன்றுவதில்லை. ஆனால், வெப்பம் கூடுதலாக வுள்ள அறைகளில், சேமித்து வைத்திருக்கும் உருளைக் கிழங்கில் எளிதில் நோய் தோன்றுகிறது. தழைச் சத்து மிகுதியானால், நெல்லின் குலை நோய், பருத்தியின் கருங்கிளை நோய் போன்றவை மிகுதியாகின்றன. சாம்பல் சத்து கூடுவதால், இத்தகைய நோய்கள் குறைவாகத் தோன்றுகின்றன.நோய் அகற்றல். பயிர் நோய்க் கட்டுப்பாட்டில், கடைப் பிடிக்கப் படும் சிறப்பான முறையில், நோய் அகற்றல் அல்லது ஒழித்தல் (eradication) என்பது குறிப்பிடத் தக்கது. இந்நோக்குடன், நோய் கண்ட பயிரிலிருந்து கிடைத்த விதை, கரணை, கிழங்கு முதலானவற்றைப் பயிரிடப் பயன் படுத்தாமல் அழித்து விடல், நோய் கண்ட பகுதியை மட்டும் செடியிலிருந்து பிரித்தெடுத்து அழித்தல், நோய் கண்ட செடி முழுவதையுமே அழித்தல், நோய் காணப் படும் பகுதிகளில் நோய் பரவுதற்கு ஏற்ற பயிர்கள் பயிரிடப் பட்டிருந்தால், அப்பயிர்களை அழித்தல், நோய்க் காரணிகள் தங்கும் மாற்றுப் பயிர்களை அழித்தல் போன்ற பல முறைகள் கையாளப் படுகின்றன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில், எலுமிச்சை வகைச் செடிகளின் பேரழிவுக்குக் காரணமான பிளவை நோய்(Canker) இவ்வகை அழிப்பு முறைகளால், சிறப்பாகக் கட்டுப் படுத்தப் பட்டுள்ளது. கரும்பைத் தாக்கும் பாக்டீரியா நோய்கள்,பல்வேறு புல் வகையைச் சேர்ந்த செடிகளையும் தாக்குவதால், இவை மூலம் கரும்புப் பயிருக்கு, நோய்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, மாற்று விருந்தோம்பிகளை அழிப்பதால், நோய் பரவுதல் குறையும் எனலாம். ஆப்பிள், பேரி மரங்களில் தோன்றும் செந்தீசல் நோய்க்குக் காரணமான பாக்டீரியாக்கள், அம்மரங்களின் கிளைகளில் தோன்றும் பிளவுகளில் தங்கியிருக்கின்றன. எனவே, இத்தகைய நோய் கண்ட பகுதிகளை வெட்டி எரித்து விடுதல் சிறந்தது.
வெள்ளரி வாடல் நோய் காரணமாக, எர்வினியா டிரகிஃபிலா (Erwinia tracheiphila) என்னும் பாக்டீரியா, டயபிரோடிகா விட்டேடா (Diabrotica vittata) அல்லது டயபிரோடிகா டியோடெசிம்பங்க்டேட்டா (D.duodecimpunctata) என்னும் பூச்சியின் உடலுடன் இணைந்துள்ளமையால், இப்பூச்சிகளை அழிப்பது வெள்ளரி வாடல் நோய் மீண்டும் தோன்றுவதைத் தடுக்கும். மண்ணில் நோய்களைத் தோற்றுவிக்கும் பாக்டீரியாக்களும், பூசணங்களும் உள்ளன. வெப்ப நேர்த்தியை மேற் கொள்ளல், வேதிப் பொருள்களை நீரில் கலந்து ஊற்றி, மண்ணை நனைத்தல் போன்றவற்றால், மண்ணில் உள்ள பாக்டீரியா, பூசணம் போன்ற நுண்ணுயிரிகள் அழிக்கப் படுகின்றன. மேலும், மண்ணில் உள்ள இந்நுண்ணுயிரிகளுக்கு எதிர் விளைவினைச் சேர்க்கும் நுண்ணுயிரிகள், இயற்கையில் கலந்திருக்கின்றன. இவற்றால், நோயினை ஏற்படுத்தும் நோய்க் காரணிகளின் பெருக்கம், மண்ணில் ஓரளவு தடைப் படுகிறது. மண்ணில் கலந்திருக்கும் ஆக்டினோ மைசிட்ஸ் போன்ற எதிர் உயிரிகளைப் பிரித்தெடுத்துப் பிண்ணாக்கிலோ, தொழு உரத்திலோ வளர்த்து, அவற்றை நிலத்திற்கு இட்டால், மண்ணுடன் இணைந்துள்ள சில நோய்க் காரணிகள் அழிக்கப் படுகின்றன. பயிர்ச் சுழற்சியை மேற்கொண்டு நோய் தாக்காத மாற்றுப் பயிர்களை வளர்ப்பதால், நோய்க் காரணியின் பெருக்கம் கட்டுப் படுத்தப் படும்.
நோய் பரவுதலைத் தடுப்பதற்கு, நிலத் துப்புரவு முறைகளைக் கடைப் பிடிப்பது இன்றியமையாதது. நோய் கண்ட செடியின் உறுப்புகளை அறுவடைக்குப் பின், நிலத்தில் விழுந்து கிடக்காமல், அவற்றைத் திரட்டி அழித்து விடுதல் சிறந்தது. இம்முறையால், உருளைக் கிழங்கு வட்ட நோய், பருத்திக் கருங்கிளை நோய், எலுமிச்சைப் பிளவை நோய், கத்திரி போன்ற பயிரிகளின் வாடல் நோய் போன்றவற்றைத் தடுக்கலாம். பயிருடன் தோன்றும் களைகளின் மூலமும், பல்வேறான நோய்கள் தோன்றுகின்றன. மிளகாய்ப் பூண்டுச் செடிகளை அழித்து, நிலத்தைத் துப்புரவாக வைத்திருப்பதால், பருத்திக் கருங்கிளை நோயும், கீழா நெல்லிச் செடிகளை அழித்து விடுவதால், பயறு வகைப் பயிர்களில் ஏற்படும் சாம்பல் நோயும் நீக்கப் படுகின்றன.
நச்சுயிரிகள், மைக்கோப்பிளாஸ்மா போன்ற உயிரிகள் ஆகியன செடியின் பல பகுதிகளில் காணப் படுகின்றன. எனவே, நோய் தாக்கப் பட்ட பயிர்கள் தன்னிச்சையாக வாழும் செடிகள், களைச் செடிகள் முதலியவற்றின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலும் அகற்றி அழிப்பது இன்றியமையாதது.
நோய்க் கண்காணிப்பு. பயிர் நோய்க் கண்காணிப்பு (plant disease quarantine)என்பது நோய்ப் பரவுதலைத் தடை செய்தலும், தவிர்த்தலும் ஆகும். ஓரிடத்தில் நோயுண்ட அல்லது நோயுண்டாவதற்குக் காரணமான பொருள்களை, மற்றப் பகுதிகளுக்கு எடுத்து செல்ல முடியாத படி, இம்முறைகள் தடுக்கின்றன. விளைச்சலைப் பெருக்குவதற்காகப் பயன் படும் விதை, இனப் பெருக்கத் தாவரப் பகுதிகளான கரணை போன்றவை, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கோ, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கோ எடுத்துச் செல்லப் படுகின்றன. இவற்றின் மூலம், அங்கு புதிதாக நோய்கள் தோன்றுகின்றன. காப்பித் துரு (Coffee Rust), வாழை முடிக் கொத்து (Banana Bunchy Top) போன்ற நோய்கள் மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் புகுந்து, பேரிழப்பினை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறு, பிற நாடுகளிலிருந்து பரவுகின்ற நோய்களைத் தடுப்பதற்கு இந்தியாவில் 1914ஆம் ஆண்டில் பூச்சி, நோய்க் கண்காணிப்புக்கான தடுப்புச் சட்டம் இயற்றப் பட்டது.இதற்கு, வெளி நாட்டுத் தொற்றுக் கண்காணிப்புச் சட்டம் (Foreign Quarantine Law) என்று பெயர். இந்தியாவிலுள்ள, ஒவ்வொரு விமான நிலையத்திலும், துறைமுகத்திலும் தொற்று நோய்த் தடுப்புக் கண்காணிப்பு அலுவலங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவை வெளிநாட்டிலிருந்து வரும் தாவரங்களையோ, தாவரப் பகுதிகளையோ ஆய்வு செய்து நோயிருந்தால், அவற்றை அழித்தும், நோயில்லையெனில் நோயில்லாச் சான்றிதழ் வழங்கியும் வருகின்றன. மேற்குறிப்பிட்ட சட்டப்படி, கோகோ ஆப்பிரிக்காவிலிருந்தும், ரப்பர் அமெரிக்காவிலிருந்தும், கரும்பு ஆஸ்திரேலியாவிலிருந்தும் இந்தியாவிற்குள் வரக் கூடாது என்னும் கட்டுப்பாடு உள்ளது.
ஒரு நாட்டில் ஒரு பகுதியில் நோய் காணப் பட்டால், அந்நோய், மற்றப் பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க, உள் நாட்டுத் தொற்றுக் கண்காணிப்புச் சட்டம் (internal or domestic quarantine law) இயற்றப் பட்டுள்ளது. தமிழ் நாட்டில், 1919ஆம் ஆண்டில் இயற்றப் பட்ட சட்டத்தின் படி, கேரளா, ஒரிசா ஆகிய மாநிலங்களில், வாழையின் முடிக் கொத்து, தமிழ்நாட்டில் ஆனை மலைப் பகுதியில் ஏலத் தேமல் , மேற்கு வங்காளத்தில் உருளைக் கிழங்கின் புற்று நோய் முதலியன மிகுதியான அளவில் தோன்றுவதால், அப்பகுதிகளிலிருந்து விதைப் பொருள்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவது தடை செய்யப் பட்டுள்ளது.
நோய் எதிர்ப்புத் திறன் வகை. நோய் எதிர்ப்புத் திறனுள்ள வகைகளையும், பயிரிடப் பயன் படுத்தல் மூலமாக, எளிதில் நோயைக் கட்டுப் படுத்தலாம். நோய் எதிர்ப்புத் திறனுள்ள வகைகள் கிடைக்கவில்லையெனில், நோய் தாங்கும் வகைகளைத் (disease tolerent varieties) தேர்ந்தெடுத்துப் பயிரிடப் பயன் படுத்தல் மூலம், ஓரளவு நோயைக் கட்டுப் படுத்த முடியும். இவ்விரு வகைகளும் கிடைக்காத நிலையில், நோய்க்குள்ளாகும் வகைகளைப் பயிரிட நேரும் போது , நோய் தீவிரமாகப் பாதிப்பதால், விளைச்சல் பெருமளவில் குறைகிறது.
நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டிருப்பவற்றில் பெரும்பாலானவை காட்டு இனத்தைச் (wild species) சேர்ந்தவையாகவோ, மிகக் குறைந்த விளைச்சல் திறன் கொண்டவையாகவோ இருக்கின்றன. எனவே, இவற்றில் மிகுதியான விளைச்சல் திறன் ஒருங்கே அமையப் பெற்ற வகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் . நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கத் திடீர் மாற்ற முறை (mutation) பின் பற்றப் படுகிறது. இதற்கு வேதி முறையையோ, கதிரியக்க நுணுக்க முறையையோ பயன் படுத்தலாம். சில நேரங்களில், பண்பக மாற்றம் (gene alteration) ஏற்பட்ட வகையில், நோய்க்கு எதிர்ப்புத் திறன் காணப்படலாம். சிறப்புத் தேர்வு முறையிலும், உயர் விளைச்சல் தரும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகள், வயல் வெளி ஆய்வின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. இவ்வாறான வகைகளை, மீண்டும் பயிர் செய்து, அவற்றிலிருந்து உயர் விளைச்சலும், நோய் எதிர்ப்புத் திறனும் கொண்ட வகைகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. பயிர்கள் நச்சுயிரிகளை எதிர்த்து நிற்கும் திறனைக் கீழ்க் காணும் நான்கு பிரிவுகளில் அடக்கலாம். அவை, விலக்குப் பெற்றவை, மீவுணர்வுள்ளவை, தாங்கு திறன் பெற்றவை, தப்பிப்பவை என்பன.
விலக்குப் பெற்றவை. பி.எஸ்.டி.ஏ. 41956 என்னும் உருளைக் கிழங்கு வகை, மிதத் தேமல் நோய் தாக்காததாகும். மிளகாய் பி.11 என்னும் வகையிலும் சொலானம் வகையிலும், உருளைக் கிழங்கு இலை நரம்புக் கருத்தல் நச்சுயிரி தோன்றுவதில்லை.
மீவுணர்வுள்ளவை. மீவுணர் திறன் பெற்ற செடிகள் நோய்க் காரணியால் பாதிக்கப் பட்டால், அப்பகுதியில் உள்ள திசுவறைகள் மட்டும் காய்ந்து விடும். நோய்க் காரணிகளும், பெரும்பாலான செடிகளில் செயலிழந்து விடும். எனவே, அவ்வாறு காய்ந்த பகுதிகளிலிருந்து, நச்சுயிரி பிற பகுதிகளுக்குப் பரவுவதில்லை.
இவ்வினையைப் புகையிலைத் தேமல் நச்சுயிரிச் சாற்றை நிகோடியானா குளுட்டினோசா இலைகளில் தடவி வெளிப் படுத்தலாம். நச்சுயிரிச் சாற்றைத் தடவிய இலைகளில், தனி இடம் சார்ந்த புள்ளிகள் (Local lesions) ஏற்படுகின்றன. அப்புள்ளிகளில் உள்ள திசுக்கள் காய்ந்து விடுவதோடு, நச்சுயிரியும் காய்ந்த பகுதியுடன் மட்டுமே தொடர்பு கொண்டுள்ளது.இது பிற பகுதிகளுக்குப் பரவுவதில்லை. மீவுணர் திறன் பெற்ற வகைகள் புகையிலை, மிளகாய், உருளைக் கிழங்கு, தட்டைப் பயிறு முதலிய பயிர்களில் உள்ளன. மீவுணர் திறன் பெற்றவை நிலத்தில் நோய் தோன்றுதலிலிருந்து விலக்குப் பெற்றவை எனக் கருதப் படுகின்றன.
தாங்கும் திறன் பெற்றவை. இவ்வகைச் செடிகள் நோய்களினால் பாதிக்கப்பட்டாலும், நோயின் அறிகுறிகளை வெளிக் காட்டாமல், உள்ளேயே தேக்கி வைத்திருக்கும் திறன் பெற்றவை. பாதிக்கப் பட்ட செடிகள் முழுவதுமே அறிகுறிகளை வெளிக் காட்டாதவையாக இருக்கலாம். அல்லது சிறிதளவு அறிகுறிகளை மட்டும் வெளிப் படுத்தி நிற்கும் திறன் பெற்றவையாகவும் இருக்கலாம். நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் உள்ள செடிகளால் பேரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. ஏனெனில், நோயின் அறிகுறி தெரியாமையால், அவ்வாறான செடிகளைக் களைந்தெறிதல் இயலாது. எனவே, நச்சுயிரிகள், பிற செடிகளுக்கும் இவற்றிலிருந்து பரவுவதற்கு வழி ஏற்படும்.
தப்பிப்பவை. சில வகைச் செடிகள் நச்சுயிரி நோயினால் பாதிக்கப் படாமல் தப்பிக்கின்றன. ஆயினும், இச்செடிகளில் செயற்கை முறையில் நச்சுயிரி நோயினைத் தோற்றுவிக்க முடியும். இவ்வாறு இயற்கையில் நோய் தோன்றாமல் தப்பிக்கும் இயல்பு ஒவ்வொரு வகைச் செடிக்கும் நச்சுயிரிக்கும் ஏற்றவாறு வேறுபடும். நோய் பரப்பும் பூச்சிகள் சில செடிகளை உண்ணத் தலைப் படுவதில்லையாதலால், அச்செடிகள் நோய் தொற்றுவதிலிருந்து தப்பிக்கின்றன. செக்கோயா என்னும் உருளைக் கிழங்கு வகையை இலை உருள்வு நோயைப் பரப்பும் அசுவினிகள் விரும்புவதில்லை. எனவே, அவ்வகை, இலை உருள்வு நோய்க்குத் தப்பிக்கும் இயல்பைப் பெறுகிறது. இதே போல வெள்ளரித் தேமல் நேயைப் பரப்பும் அசுவினிகள் ஒரு சில அரசாணிக் காய் வகைகளைத் தாக்குவதில்லையாதலால், அவ்வகைகளில் வெள்ளரித் தேமல் நோய் தோன்றுவதில்லை.
நோய் பரப்பும் பூச்சிகள். நோய் பரப்பும் பூச்சிகள், பூசணம், பாக்டீரியா, நச்சுயிரி போன்றவற்றால் ஏற்படும் பல்வேறு நோய்களைப் பரப்பும் திறனைப் பெற்றுள்ளன. பூச்சிகள் பயிரில் தொடர்பு கொண்ட பின், நோயால் பாதிக்கப் படாத பயிருடன் தொடர்புற்றால், அவற்றின் வழியாகப் பூசணம் பரவுகிறது. கம்புக் கதிர்களில் தோன்றும் தேனொழுகல் நோய், தேனீக்களாலும், ஈக்களாலும் பாதிக்கப் பட்ட பயிர்களிலிருந்து ஏனைய கம்புப் பயிர்களுக்கும் பரவுகிறது. டேக்கினாஃ போலக்ஸ் ஆக்சிசெடோனியா வெர்சிகலர், டாலி கோரிஸ் இன்டிகஸ், சிர்பஸ், கேம்பனோட்டஸ், கம்ப்ரசஸ் ஆகிய பூச்சிகளாலும் தேனொழுகல் நோய் பரவுகிறது. எரிவினியா டிரகீபிலா என்னும் பாக்டீரியா வெள்ளரியைத் தாக்கும் வண்டுகளால் பரவி, வாடல் நோயை ஏற்படுத்தும். பொதுவாகப் பாக்டீரியா நேரடியாகப் பயிரில் நுழைந்து செல்ல முடியாமையால், பூச்சிகள் ஏற்படுத்தும் காயங்கள் வழியாக எளிதில் உட்செல்லும்.
பூச்சிகள் நோய்த் தாக்கிய செடியின் சாற்றை உறிஞ்சி விட்டு, நோய் தாக்காத செடிகளைத் தாக்கும் போது, அத்தகைய நச்சுயிரிச் சாற்றை உட்செலுத்துகின்றன. பூச்சிகள் நோய் கண்ட செடிகளை உண்ணும் போது, நச்சுயிரிச் சாறு, பூச்சிகள் வாய்ப் பகுதியில் ஒட்டுகிறது. இப்பூச்சிகள் நோயினால் பாதிக்கப் பட்டிராத செடிகளை உண்ணத் தலைப் படும் போது, வாயிலுள்ள நச்சுயிரிச் சாறு செடியின் மேல் தோலில் சிறிதளவு உட்செல்வதால், அச்செடிகளிலும் நோய் பரவுகிறது.
இவ்வகையில் பரவும் நச்சுயிரிகளை, உறிஞ்சு குழல் வாய்ப் பகுதிகளின் மேல் ஒட்டிப் பரவும் நச்சுயிரிகள் எனலாம்.
இரண்டாம் வகையில் உறிஞ்சு குழல் வாய்ப் பகுதியைக் கொண்ட பூச்சிகள் உறிஞ்சு குழல்களை நோய் கண்ட செடியின் சல்லடைக் குழாய்த் தசை வரை செலுத்தி, நச்சுயிரிச் சாற்றை உறிஞ்சுகின்றன. பூச்சியின் உடல் முழுதும் இந்த நச்சுயிரிச் சாறு குருதியுடன் சுழல்கிறது. நோய் தாக்காத செடிகளை நாடும் போது, இந்நச்சுயிரிச் சாறு மீண்டும் அச்செடிகளில் செலுத்தப் படுகிறது. இவ்வாறு பரவும் நச்சுயிரிகளைச் சுழலும் நச்சுயிரிகள் எனலாம்.
சில வகைப் பூச்சிகள், உடல் முழுதும் பரவிய நச்சுயிரிகள் உடலிலேயே தங்கிப் பெருக்கமடைகின்றன. இவை பெருகும் நச்சுயிரிகள் எனப் படுகின்றன. இவ்வகை நச்சுயிரிகள் நோய்ப் பரப்பும் பூச்சிகளின் உடலிலேயே வளர்ந்து பெருகிப் பூச்சிகளின் பின் தலைமுறைக்கும் வழித்தோன்றல் தன்மையுடையதாக முட்டை வழியாக உட்புகுத்தப் படுகின்றன.
நச்சுயிரியை எடுத்துக் கொள்வதற்குப் பூச்சிகள் நோய் கண்ட செடிகளுடன் குறிப்பிட்ட காலம் தொடர்பு கொள்ள வேண்டும். இக்காலம் பூச்சிகள் நச்சுயிரியைத் தொற்றும் காலம் அல்லது பெறும் காலம் எனப் படும். அதே போல, நச்சுயிரிச் சாற்றைப் பூச்சிகள் எடுத்துக் கொண்ட பின், அவற்றை உட்புகுத்துவதற்கும் குறிப்பிட்ட காலம் நோய் கண்டிராத செடிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இக்காலம், நச்சுயிரியை உட்செலுத்தும் காலம் ஆகும். இக்காலங்கள் பூச்சி வகைகளைப் பொறுத்தும், நச்சுயிரிகளைப் பொறுத்தும் வேறுபடும். வெள்ளரித் தேமல் நச்சுயிரி கண்ட செடிகளிலிருந்து ஏபிஸ் பேபே என்னும் அசுவினிகள், ஐந்து நிமிடங்களிலேயே நச்சுயிரியைத் தொற்றிக் கொள்கின்றன. உருளைக் கிழங்கு இலை நரம்புக் கருத்தல் நச்சுயிரியைத் தொற்றிக் கொள்ள மைசஸ் பெர்சிகே என்னும் அசுவினிகளுக்கு இரண்டு நிமிடங்களே ஆகும். ஆனால், உருளைக் கிழங்கு இலை உருள்வு நச்சுயிரியை தெரல்றிக் கொள்ள மைசஸ் பெர்சிகே என்னும் அசுவினிகளுக்கு ஆறு மணி நேரம் தேவைப் படுகிறது.
ஒரு முறை நோய்த் தொற்றினால், சில காலம் வரையே பூச்சிகள் நச்சுயிரித் தன்மையைக் கொண்டிருக்கின்றன. பின்னர், நச்சுயிரியைப் பரப்பும் திறன் அழிந்து விடுகிறது.
ஆனால், ஒரு சில வெள்ளைப் பூச்சிகளில், ஒரு முறை நச்சுயிரி நோய்த் தொற்றினால், இப்பூச்சிகள் உயிருள்ள வரை நச்சுயிரியைப் பரப்பும் திறனை அழியாமல் பெற்றிருக்கின்றன.
பூச்சிகள் நச்சுயிரிகளைத் தொற்றிக் கொண்ட பின், நோய்ப் பரப்பும் திறனைப் பெற்றிருக்கும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, நச்சுயிரிகளைத் தங்கி நிற்கும் நச்சுயிரிகள், தங்கி நிற்கா நச்சுயிரிகள் எனப் பகுத்துள்ளனர். இவை யிரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைப் பின் வரும் அட்டவணை விளக்கும்.
நோய்க் குறியீட்டெண். நோய்க் குறியீட்டெண் (disease index) என்பது பயிர்களில் அளவினைக் கணக்கிடப் பயன் படுகிறது. நோய்க்குத் தகுந்தவாறு குறியீட்டெண் முறையும் மாறு படும். குறியீட்டெண்ணின் அளவு, நோயின் தீவிரத்திற்குத் தகுந்தவாறு கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும். குறியீட்டெண் குறைவாக இருந்தால், நோய் குறைவாகத் தோன்றியிருப்பதாகவும், கூடுதலாக இருந்தால், நோய் தீவிரமாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லில் செம்புள்ளி நோயின் (brown spot disease) அளவினைக் கணக்கிட 1 முதல் 9 வரையுள்ள தர எண் (grade) ஒதுக்கப் பட்டுள்ளது. செம்புள்ளி நோயினால், பாதிக்கப் பட்டிருக்கும் இலைப் பரப்பளவை, அடிப்படையாகக் கொண்டு இந்தத் தர எண் ஒதுக்கப் பட்டுள்ளது.
இலையின் பரப்பளவு
50 இலைகளில் செம்புள்ளி நோயின் அளவினைத் தர எண் அடிப்படையில் கணக்கிட்டு, அவை யாவற்றையும் கூட்டி, 50 ஆல் வகுத்தால் சராசரித் தர எண் கிடைக்கும். இதனைச் சராசரிக் குறியீட்டெண் (mean index) எனக் குறிப்பிடலாம். —கா.சிவப்பிரகாசம் துணை நூல். R.S Singh, Plant Diseases, Oxford and JBH Publishing Company, Calcutta, 1968: J.C Walker, Plant Pathology, McGraw Hill Book Company, Newyork, 1957.
நோயுற்ற கால்நடைகளைப் பேணுதல்
கால்நடைகளுக்குச் சாதாரணக் காய்ச்சல், கழிச்சல், வயிற்று உப்புசம், கல்லீரல் அழற்சி, நுரையீரல் அழற்சி, இதய நோய் போன்ற தொற்றாத நோய்களும், வைரஸ் (parasite), பூசணக் காளான் (fungus) போன்ற தொற்று நோய்களும் ஏற்படும். நோயுற்ற கால்நடைகளைக் காத்தல் எனும் போது, அவற்றிற்கு மருத்துவம், ஏற்ற உணவு, இருப்பிடம், பராமரிப்பு, சுகாதாரம் இவற்றில் பொதுவாகக் கவனம் செலுத்த வேண்டும். தொற்று நோய் கொண்ட கால்நடைகளைக் காக்கும் போது, மற்றக் கால்நடைகளுக்கு அந்த நோய் பரவாத வகையில், முன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றை, மனிதர் நடமாட்டமில்லாத பகுதியில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
நோயுற்ற கால்நடைகளைக் கண்டுபிடித்தல். பண்ணையில் மாடுகளோ, மந்தையில் ஆடுகளோ கூட்டமாக இருக்கும் போது, இவற்றில் நோயுற்றவை இருப்பின், அறிகுறிகள் மூலம் அடையாளம் கண்டு கொள்ளலாம். பொதுவாக, நோயுற்ற கால்நடைகள் சோர்வுற்று இருக்கும். வழக்கமான உணவு , தீவனம் உண்ணாது, உதட்டின் மேற்புறம் உலர்ந்து இருக்கும். கண்களின் நிறம் மாறுபாடாக இருக்கும். சிறுநீர் மற்றும் சாணத்தின் நிறம், தன்மை அளவு ஆகியன மாறியிருக்கும். உடல் வெப்பத்தின் ஏற்றத் தாழ்வு இருக்கும். மற்ற அறிகுறிகள் நோய்க்குத் தக்கபடி வேறுபாடு காட்டும்.
மனிதர் நடமாட்டமில்லாத பகுதியில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். ஓரிடம் விட்டு மற்ற இடத்திற்குக் கொண்டு சென்றால் நோய் விரைவில் பரவும். நோயற்ற விலங்குகட்கும் துன்பம் விளையும். நாய், பூனை , காக்கை, எலி போன்றவற்றால் நோய் கண்ட கால்நடைகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், அவற்றின் மூலமும் நோய் நுண்ணுயிரிகள் பரவிட வாய்ப்பு உண்டு. தொற்று நோய் கொண்ட விலங்குகளைக் கையாள்பவர் நல்ல மாடுகளை அணுகாதிருத்தல் நலம். அத்தகைய சூழ்நிலை ஏற்படின், சுகாதார முறைகளைக் மேற்கொள்ளவேண்டும். நீர், கழிவு தேங்காத இடமாக இருந்தால் ஈ, கொசு இரா. மேலும், நோயுற்றவைக்குப் பயன் படுத்திய வைக்கோல், புல், தீவனம், நீர் ஆகியவற்றை நல்ல மாடுகளுக்குப் பயன்படுத்தினால், நோய் நுண்ணுயிரிகள் மற்ற மாடுகளுக்குப் பரவிடக் கூடும்.
தொண்டை அடைப்பான் (Haemorrhagic septicaemia) எனும் நுண்ணுயிர் நோய் கண்ட மாடு கூடுதலான காய்ச்சல், மார்புச் சளி, தாடை–கழுத்துப் பகுதி வீக்கத்துடன் இருக்கும். இதற்கு நுண்ணுயிர் எதிர் மற்றும் சல்ஃபா மருந்துகளை மருத்துவர் மூலம் வழங்கலாம்.
சப்பை நோய் (flock quarter) எனும் நுண்ணுயிரி நோய், கடும் காய்ச்சலையும், முன் அல்லது பின் சப்பை வீங்கித் தள்ளாடி நடக்க இயலா நிலையையும் கொண்டிருக்கும். இதற்கு, பென்சிலின் மற்றும் நுண்ணுயிர் எதிர் மருந்துகளை ஊசி மூலம் வழங்கலாம். வீங்கிய பகுதிக்கு மென்மையாக ஒற்றடம் கொடுக்கலாம். எளிதில் செரிக்கக் கூடிய கஞ்சி, புல் போன்ற உணவுடன் தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும். ஈரமில்லாத குளிர் மற்றும் வெயில் தாக்காத காற்றோட்டமான கொட்டகைகளில், நோயுற்ற கால் நடைகளை வைக்க வேண்டும்.
அடைப்பான் (anthrax). இது ஆடு மாடுகளைத் தாக்கி, உடனடியாக இறப்பினை ஏற்படுத்தும் நுண்ணுயிரி நோய். சில நேரங்களில் கடும் நிலையில் நோய்க் குறிகளுடன் இருந்து, ஓரிரண்டு நாள்களில் கால்நடை இறந்து விடும். எனவே, தீவிர மருத்துவத்துடன் உணவு உண்ணாத நிலையில், குளுக்கோஸ் போன்ற சத்து நீரைக் குருதி வழி ஏற்றலாம். நோயுற்ற மாடுகளின் கழிவுகளையும், குருதிக் கழிவுகளையும், உடனடியாக அகற்றிச் சுண்ணாம்பு நீருடன் புதைத்தல் அல்லது எரித்தல் நலம். நுண்ணுயிரிக் கொல்லி (disinfectants) மருந்து மூலம் இடத் தூய்மையைக் காக்க வேண்டும்.
வெக்கை நோய் (rinder pest). நச்சுயிரியால் தாக்கப் படும் மாட்டினமும், ஆட்டினமும் கடும் காய்ச்சல், வாயில் புண், கடும் கழிச்சலைக் காட்டும். உடன், பண்ணையிலிருந்து பிரித்துத் தொற்று நோய்ப் பிரிவில் தனியே வைத்துத் தொடர் மருத்துவம் வழங்க வேண்டும். கழிச்சலால் ஏற்படும் நீரிழப்பினை ஈடுசெய்யச் சத்து நீரைக் குருதி வழியே செலுத்தலாம். அரிசிக் குருணைக் கஞ்சியும், ஆற வைத்த குடிநீரும் வழங்கலாம்.
கால் மற்றும் வாய் நோய் (foot and mouth disease) நச்சுயிரித் தாக்குதலால் கால், குளம்பு, வாய், ஈறு, நாக்குப் பகுதிகளில், கொப்புளங்கள் ஏற்பட்டு வாய் திறக்க இயலா நிலையில் உள்ள கால்நடைகளைத் தனியே வைத்துக் காக்க வேண்டும். தரை, சேறு, சகதி, ஈரமில்லாது இருந்தால்தான், கால்ப் புண்கள் வழியாக, நுண்ணுயிரிகள் நுழையா. ஈ மொய்த்து இடையூறு தருவது மட்டுமன்றிப் புழுக்களும் உற்பத்தியாகித் தாங்கொண்ணாத் துன்பமும் ஏற்படுத்தி விடும். ஈ அணுகாதிருக்கக் கால் புண்ணில், வேப்பெண்ணெய் தடவலாம். புண்ணைப் பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலால் கழுவி, களிம்பு தடவலாம். இந்நோய்க்கு மருத்துவம் வழங்க வேண்டும். எனினும், பராமரிப்பும், சுகாதாரமும் மிகவும் மேலானவை. சாதாரணக் கழிச்சல், வயிறு உப்புதல் போன்ற உணவுப் பாதை தொடர்பான நோய் கண்ட மாடுகளுக்குத் தீவனக் கட்டுப்பாடு தேவை. சினை மற்றும் கன்று ஈன்ற பசுக்களுக்குத் தனியான பராமரிப்பும், கண்காணிப்பும் வேண்டும்.
கன்று பேணல். குருதிக் கழிச்சல், கன்றுக் கழிச்சல் போன்ற நுண்ணுயிரி நோய்களால் பாதிக்கப் படும் கன்றுகளுக்குத் தேவைான நுண்ணுயிர் எதிர் மருந்துகளையும், வைட்டமின் மருந்துகளையும், கழிச்சலால் ஏற்படும் நீரிழப்பினைத் தவிர்க்க, சர்க்கரை உப்பு சத்து கலந்த மருந்து நீரையும் அளிக்கலாம். பொதுவாக, நோயுற்ற கன்றுகளைக் குறுகிய தொழுவத்தில் நெருக்கமாக அடைக்காமல், குளிரோ, வெப்பமோ, தடுக்காத காற்றோட்டமான இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். காய்ச்சி ஆற வைத்த குருணைக் கஞ்சி, நல்ல குடி நீர், மிதமான அளவு பசும்பால் வழங்கலாம். காய்ச்சலில் உடல் நடுங்கினால், உடலைப் போர்த்தி விடலாம். மென்மையான வைக்கோல் மெத்தையில் படுக்க வைக்கலாம்.
நோய் கண்ட ஆட்டினம் பேணல். வெக்கை நோய், கால் மற்றும் வாய் நோய், அடைப்பான் கண்ட ஆடுகளையும், மாடுகளைப் போலவே பராமரிக்க வேண்டும். பேரிழப்பை ஏற்படுத்தும் அம்மைத் (sheep pox) தொற்று நோய் கண்ட ஆடுகளைத் தனியே பிரித்துப் பேண வேண்டும். கால் குளம்பு, வாலின் அடி, தொடை, பால் மடி, இனவுறுப்பு, வாய், உதடு ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றி, நமைச்சலை ஏற்படுத்தும். இதனால், சுவர், மரம் போன்றவற்றில் உராய்ந்து, கொப்புளங்கள் உடைந்து, புண்ணாகிச் சீழ்ப் பிடிக்கத் தொடங்கும். ஈ மொய்த்துப் புழு உருவாகி விடும். தரை தூய்மையின்றி இருப்பின், சேறும், சகதியும் புகுந்து விடும். எனவே, மாடுகளில் கால் மற்றும் வாய் நோய்க்குச் செய்யும் சுகாதார முறைகளையே இதற்கும் கையாள வேண்டும். வாயில் புண் இருப்பதால், மென்மையான புல், கஞ்சி, தூய நீர் வழங்க வேண்டும்.
துள்ளுமரி. நோய் கண்ட ஆட்டினைக் காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும். வலியினால் புரண்டு விழும் போது, சிறிய இடமாகவோ, அடைசலாகவோ இருந்தால், அடி பட்டுக் காயங்கள் ஏற்படும். நோயுற்ற ஆட்டுக் குட்டிகளை, மேலும் நன்முறையில் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பேண வேண்டும்.
நோய் கண்ட நாயினம் பேணல். நாயின் நோய்க் குறிகள் அதனுடன் பழகுபவர்களுக்கு எளிதில் தெரிந்து விடும். கழிச்சல் ,குருதிக் கழிச்சல், வயிற்றுப் பொருமல் , சளி போன்ற சாதாரண நோய்களுடன் டிஸ்டம்பர் (Distember) போன்ற வைரஸ் நோய்களும் தாக்கும். நோய் நிலைக்குத் தக்கவாறு, மருத்துவம் செய்ய வேண்டும். எப்போதும் கொடுக்கப் படும் உணவில், நோய்க்குத் தக்கபடி மாறுதல் செய்வதுடன், குடிநீர், புதிய ரொட்டி, காய்ச்சி ஆற வைத்த பால், முட்டை இவற்றைக் கொடுக்கலாம்.
நோயுற்ற நாய்க்கு வழக்கத்தை விடக் கூடுதலான பராமரிப்பினையும், கண்காணிப்பினையும் வழங்க வேண்டும். ஆனால், மனிதர்களுக்குத் தொற்றக் கூடிய கொடுமையான வைரஸ் நோய், வெறி நோய் (rabies) என்று ஐயப்பட்டால், அதனைத் தனியான கூண்டுக்குள் வைத்துக் கண்காணிக்க வேண்டும். யாரும் தொடாமல், அதன் எச்சிலோ, கழிவுப் பொருள்களோ படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாய் இறந்து விட்டால், அதனையும், கழிவு, மற்றும் பயன்பட்ட பொருள்களையும் புதைத்தலோ, எரித்தலோ நலம்.
நோய் கண்ட பன்றியினம் பேணல். உயிரினப் பன்றிகள் வளர்க்கப்படும் பண்ணையில் நோயுற்ற பன்றிகள், நல்ல பன்றிகளிலிருந்து தோற்றத்தில் மாறுபாடு காட்டும். இவற்றைப் பண்ணையிலிருந்து பிரித்து, நோயின் தன்மையினை ஆய்வு செய்து, தனியான அறையில் வைத்து மருத்துவம் செய்ய வேண்டும்.
பன்றிகளுக்குப் பொதுவாகப் பன்றிக் காய்ச்சல் (Swine fever) அம்மை (SWine pox), எரிசிபிலேஸ் (Erysepelas) போன்ற தொற்று நோய்களும், காய்ச்சல், கழிச்சல், சளி, வயிற்றுக் கோளாறு போன்ற நோய்களும் ஏற்படும். மற்றக் கால்நடைகளைப் போலவே, நோயுற்ற பன்றிகளுக்கும், நோய்க்குத் தகுந்த மருத்துவம் செய்வதுடன், இடச் சுகாதாரம், சுற்றுப் புறத் தூய்மை, கண்காணிப்பு ஆகியன தேவை. உணவும், நோய்க்குத் தக்கவாறு தூய்மையாகவும், எளிதில் செரிக்கக் கூடியதாகவும், சத்தானதாகவும் அமைய வேண்டும்.
நோய் கண்ட கோழியினம் பேணல். கோழிக் கழிச்சல் (bacillary white diarrhoea), கோழி டைபாய்டு (foul typhoid), கோழிக் காலரா(fowl cholera), வெள்ளைக் கழிச்சல் (ranikhet diseases), குருதிக் கழிச்சல் (coccodopsrs) எனும் நோயால் பாதிக்கப் பட்டால், பண்ணையிலிருந்து அந்தக் கோழிகளை உடன் பிரித்துத் தனிக் கொட்டகையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் . மருந்துகளைத் தீவனத்துடன் கலந்து வைப்பதை விட, நீரில் கலந்து வைப்பது நல்லது. அதனை விடவும், தனித் தனியே வாய் வழியாகவோ, ஊசி வழியாகவோ செலுத்தினால், பயன் மிகுதியாக இருக்கும். கழிவுகளை உடனுக்குடன் அகற்றி, நுண்ணுயிர்க் கொல்லிகளால் இடத் தூய்மையைப் பேண வேண்டும். எளிதில் செரிக்கக் கூடிய குருணை போன்ற தீவனம் வழங்கலாம்.
சளி நோய் (coryza). சுவாசக் குழாய் நோய்((infections Bronchitis) போன்றவற்றால் பாதிக்கப் பட்ட கோழிகளுக்கு, குளிர் வாட்டாத கதகதப்பான, ஆனால், காற்றோட்டமான இடம் தேவை. கோழி இருக்கும் இடங்களில் தோன்றும் புற ஒட்டுண்ணிகளை நீக்க வேண்டும். கீரிப் பிள்ளை, எலி, பாம்பு, பருந்து இவற்றால் ஊறு நேராத இடமாக அது இருக்க வேண்டும். —ச. தமிழரசன்
நோவினேகல் வினை
கரிமச் சேர்மங்களில் α, β நிறைவுறா அமிலங்களைத் தயாரிக்க உதவும் ஒரு முறை நோவினேகல் வினை(Knoevenagel reaction) ஆகும். இவ்வினை கரிமக் காரம் உடனிருக்க, ஆல்டிஹைடுகளும், வீரிய (active) மெத்திலீன் தொகுதிகளும் இணைந்த கரிமச் சேர்மங்களுக்கிடையே நிகழ்கிறது. இவ்வினைப்படி எண்(1)இலிலேயே முடிந்து விடலாம். அல்லது மைக்கேல் குறுக்க வினை வழியாக வினைப்படி எண் (2)க்கும் தொடரலாம்.
சம அளவு ஆல்டிஹைடு எத்தில் மாலனேட் ஆகியவை பிரிடின் உடனிருக்க, வினைப் படும் போது, வினை எண்(1) நிகழ்கிறது. மிகையளவு எத்தில் மலானேட் செறிந்திருக்கப் பைப்பிரிடின் உடனிருக்கும் போது, ஆல்டிஹைடு அலிஃபாட்டிக் வகையினதாகவும் இருந்தால், வினை(2) தொடர்கிறது. மேலும், நோவினேகல் வினை என்பது சேர்மங்கள் குறுக்கமடைவதையும், இதன் விளைவாக, நிறைவுறாச் சேர்மங்கள் உருவாவதையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே, α, β நிறைவுறா அமிலங்கள் தயாரிக்க, வினை எண் (1)ஐப் பயன் படுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து, நீராற் பகுப்பும் வெபப்பமூட்டலும் நிகழ வேண்டும்.
பொதுவாக இவ்வினை வழி முறையில், ஆல்டிஹைடுடன் மலானிக் அமிலத்துடன், பிரிடின் உடனிருக்கக் கலந்தாலே போதுமானது. எ-டு: அசெட்டால்டிஹைடு குரோட்டோனிக் அமிலம் தரும் வினை.
நோவினேகலின் வினை வழி முறை இன்றியமையாதது. பிரிடின் போன்ற மூவினையைக் காரம் வினை வேக மாற்றியாகப் பயன் படும் போது, ஆல்டால் குறுக்க வினை நிகழும் போது ஏற்படும் வழி முறையைப் போன்றே, இவ்வினையிலும் ஏற்படுகிறது.
எத்தில் மலானேட், ஆல்டிஹைடுகளுடன் மட்டுமே குறுக்க வினை நிகழ்த்தும். ஆனால், எத்தில் அசெட்டேட் அமினோ புரோப்பியோனிக் அமிலம் போன்ற அமினோ அமில வினை வேக மாற்றி உடனிருக்க, கீட்டோன்களுடன் குறுக்க வினை புரியும். எ-டு: அசெட்டோன் ஐசோ புரோப்பிலிடின் சயனோ அசெட்டிக் எஸ்ட்டரை உண்டாக்குதல்.
சயனோ சேர்மங்கள் எளிதில் நீராற் பகுப்படைந்து, அவற்றை ஒத்த கரிம அமிலங்களைக் கொடுப்பதால், இவ்வினையை R₂C = CH – COOH எனும் வாய்ப்பாடுடைய α, β நிறைவுறாக் கரிமச் சேர்மங்கள் தயாரிக்கப் பயன் படுத்தலாம். —த. தெய்வீகன் துணை நூல். Robert Thronton Morrson and Robert Neilson Boyd, Organic Chemistry, 4th Edtion, Allyn and Bacon, inc, Boston, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 310)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zuwfas46/
தமிழ்“நோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zuwfas46/APA
Oliyon Research. (2026). நோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zuwfas46/MLA
"நோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zuwfas46/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment