நூல் நூற்பவர் நூற்பு எந்திரத்தில் நூல் தயாரிக்கும் போது வரும் குறைபாடுகளாவன: தவறான அல்லது குறைவான அல்லது அதிக முறுக்கமுள்ள நூல், தடித்த அல்லது முதிரா இழை (roving) தவறான இழுவையால் உண்டாகும் நூல், மொத்தமான அல்லது மெல்லிய நூல், உருண்டை வடிவம் அமைதல், அறுந்த கோர்வையான நூல் அழுக்கான அல்லது எண்ணெய்க் கறையான நூல், நூல் முறுக்கம் (twist) என்பன. நூல் முறுக்கத்தில், கார்க் ஸ்குரு (Cork screw) நூல், ஒற்றை நூல், கனமான நூல், இரண்டிற்கு மேல் ஒட்டிய முறுக்கமான நூல், குறைந்த அல்லது அதிக முறுக்கமான நூல், எண்ணெய்க் கறையான அல்லது அழுக்கான நூல் ஆகிய குறைகள் ஏற்படக் கூடும். —தி.அ. வெங்கடாசலம்