இது வெப்ப, மித வெப்ப நாடுகளில் மட்டும் காணப்படும் ஒரு சிறு குடும்பம் ஆகும். சிமரூபேசி இரு வித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிமரூபா என்ற பேரினத்தின் ஒன்பது சிற்றினங்கள் கேற்கிந்தியத் தீவு, பிரேசிலில் காணப்படுகின்றன. வளரியல்பு. இக்குடும்பத்தைச் சார்ந்த பேரினங்கள் பெரு மரங்களாகும். மரப்பட்டைகள் கசப்பான சுவை கொண்டவை. எனவே, இவை பெரும்பாலும் மருந்தாகப் பயன்படுகின்றன. இலை. கூட்டிலைகள், மாற்றிலை, அடுக்கு அமைப்பு. இலையடிச் செதில் இல்லை. சிற்றிலைகள் மாறி அமைந்திருக்கும். எயிலாந்தஸ் (Ailanthus) மரத்தின் சிற்றிலைகள், வேம்பின் இலைகளை ஒத்திருக்கும். கொஸ்ஸியா (quasia) மூன்று சிற்றிலைகளைக் கொண்டது. மஞ்சரி. இலைக் கோண அல்லது தண்டு நுனிக் கூட்டுப் பூத்திரள் (panicle) ஆகும். மலர்கள். சிறியவை. ஒரு பால் மலர். ஓரில்லம் அல்லது ஈரில்லம். ஆண் மலர்கள் நான்கு அங்க மலர்கள். பெண் மலர்கள் ஐந்து அங்கம். எ. கிளாண்டுலோசா ( A. glandulosa) மலர்கள் ஒரு பால் ஈரில்லம் அல்லது இரு பால் வகையைச் சேர்ந்தவை. புல்லி வட்டம். இணைந்தவை. புல்லி மடல்கள் 4—6 வரை இருக்கும். அடுக்கு ஒழுங்கு இதழ் (imbricate) அமைப்பு. புல்லி வட்டம் சற்றே ஈருதடு அமைப்புக கொண்டது. அல்லி வட்டம். ஐந்து இதழ்கள், தனித்தவை. அடுக்கு ஒழுங்கு இதழ் அமைப்பு. அல்லி இதழ்கள் சில இனங்களில் இல்லை. மகரந்தத் தாள்கள். பொதுவாக மகரந்தத்தாள்கள் பத்து உண்டு. மகரந்தத் தாளின் அடியில் செதில்கள் காணப்படும். மகரந்தத் தாள்களின் எண்ணிக்கை அல்லி மடல்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவோ, இரட்டித்தோ இருக்கும். அரிதாக எண்ணில் அடங்கா மகரந்தத் தாள்கள் உண்டு. பெண் மலரில் மலட்டு மகரந்தத் தாள்கள் காணப்படும். மகரந்தப் பை இரண்டாகப் பிளவுபட்டிருக்கும். சூலகம். ஐந்தாகப் பிளவுபட்டிருக்கும். முழுச் சூலகம், சூலகத் தண்டு தனித்தோ இணைந்தோ காணப்படும். சூல்முடி ஐந்து தலை வடிவம் அல்லது இறகு போன்று காணப்படும். சூலறை ஐந்து சூல்கள், அறைக்கு ஒன்றாகத் தொங்கு முறையில் அமைந்திருக்கும். சூலகத்தின் அடியில் ஆழமாகப் பிளவுபட்ட சுரப்பி காணப்படும். சூரியானா (suriana), கேடிலியா (cadellia) ஆகியன படிமலர்ச்சியில் முன் தோன்றிய இனங்களாகும். இவற்றின் சூலகங்கள் தனித்தவை. கனி. காம்பற்ற உள்ளோட்டுச் சதைக்கனி. எயிலந்தசின் கனி இறகுக் கனியாகும். இவற்றைச் சாவி என்று பொதுவாகக் கூறுவர். விதை. முளைசூழ் தசை (endosperm) அற்றது. விதையிலைகள் சதைப்பற்று மிக்கவை. சில இனங்களும் அவற்றின் பயன்களும். பலநைட்டிஸ் எஜிப்டியாகா (Balanites aegyptiaca) தென்னிந்தியாவின் வறண்ட காட்டுப் பகுதிகளில் காணப்படும் மரமாகும். அடிமரத்தில் முள்கள்உண்டு. கூட்டிலைகள்; இரண்டு சிற்றிலைகளைக் கொண்டவை. ஒரு விதை கொண்ட உள்ளோட்டுச் சதைக் கனி. தமிழில் நஞ்சுண்ட மரம் என்பர். இதன் கனியில் ஊட்டச் சத்து மிகுதியாகக் காணப்படுகிறது. இது உண்ணத் தக்கது. எனவே, இதன் தமிழ்ப் பெயருக்கும், தன்மைக்கும் பொருத்தமில்லை. விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், வெட்டுக் காயங்களை ஆற்ற உதவும். பாலின ஹார்மோன்கள் தயாரிக்கத் தேவையான ஸ்டீராய்டுகள் இக்கனிகளில் உண்டு. சமடீரா (samadera) கேரளா காடுகளில் காணப்படும். இதற்குக் கருங்கொட்டான் மரம் என்று பெயர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> எயிலாந்தஸ் இனச் சிற்றினங்கள் சில தென்னிந்தியாவில் உண்டு. எ.அல்டிசீமா (A. altissima), எ.கிளாண்டுலோசா ஆகியன சீனாவைத் தாயகமாகக் கொண்டவை. இவை சாலையோரங்களில் அழகுக்காகவும், நிழலுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இவை 30 மீ. உயரம் வரை வளர்கின்றன. ஆகாயத்தைத் தொடுவன போல காணப்படுவதால், இவை சொர்க்கத்தின் மரம் எனப்படும். இலையுதிர் வகை மரங்களில் இலைகள் உதிரும் முன் அழகிய வண்ண மாறுதல்கள் ஏற்படும். ஆண் மரம் மலரும் போது நாற்றமுண்டாகும். அடி மரக் கட்டைக் குழம்பிலிருந்து எழுதும், அச்சிடும் காகிதம் தயாரிக்கப்படுகிறது. எ.எக்செல்சா (A.excelsa) இந்தியாவைச் சேர்ந்த மரமாகும். இது காற்றுத் தடுப்பானாக வளர்க்க ஏற்ற மரம். மரக் கட்டை லேசானது. தீக்குச்சி, தாள், பென்சில், மீன் மிதப்பு, கட்டு மரம், கள்ளிப் பெட்டி முதலியன தயாரிக்கப் பயன்படுகின்றது. எ. ட்ரைபில்லாவை (A. triphylla), எ.மலபாரிகா (A. malabarica) என்று கூறி வந்துள்ளனர். இதைத் தமிழிலும், மலையாளத்திலும் ‘பெருமரம்’ என்பர். மிக அழகான மரம். கேரளா, ஸ்ரீலங்கா காடுகளில் காணப்படும். மரப்பட்டையிலிருந்து மணமுடைய ரெசின் எடுத்து, அதைக் குங்குலியமாக மாற்றுவர். வயிற்றுப் போக்குக்கு ஏற்ற மருந்து. இலைகளிலிருந்து கறுப்புச் சாயம் கிடைக்கிறது. இது சாட்டின் நூல்களுக்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. —தி. ஸ்ரீகணேசன் நூலோதி. A. B. Rendle. Classification of Flowering Plants, Cambridge University Press, London, 1959.