மறைமலையடிகள்

maṟaimalaiyaṭikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவரே நாகை வேதாசலம்பிள்ளை என்பவர். சுவாமி வேதாசலம் என்றும் இவரை குறிப்பிடுவர். இவர் வடமொழி, தென்மொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஈடும் எடுப்பும் அற்றவர். சைவசித்தாந்த துண் பொருள்களைத் தெற்றத் தெளிய உணர்ந்தவர். ஆராய்ச்சித்துறையில் தலைசிறந்தவர். மறுப்புரை எழுதுதலில் மாபெரும் புலவர். இவர் உரைநடை எழுதுவதிலும், உரைவரைவதிலும், செய்யுள் இயற்றுவதிலும் தலைசிறந்தவர். இவர் பேச்சும், எழுதும் நடையும் தமிழ்ச்சுவை மிக்கனவாக விளங்கும். சைவக் குடும்பத்தில் நாகைபட்டினத்தில் பிறந்தவர். பின்னர்ச் சென்னை, பல்லாவரத்தில் சிறக்க வாழ்ந்தவர். இவர் நாகை நாராயணசாமிப் பிள்ளையிடம் இயற்றமிழ் அறிவையும், சூளை சோமசுந்தர நாயகரிடம் சித்தாந்த நூற் புலமையும் பெற்றவர். இவர் எழுதியுள்ள நூற்களில் உள்ள முகவுரையில் இவரது பன்மொழிப் புலமை புலப்படும். இவர் எழுதியுள்ள நூற்களுள் மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி என்னும் மாபெரும் நூலை ஒவ்வொருவரும் படித்தல் சாலச் சிறந்தது. தமிழ்நாட்டில் துலங்கிய இலக்கண இலக்கிய சமய ஆசிரியர்கள் காலம் அனைத்தையும இந்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 618)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zpqymyn4/

தமிழ்
“மறைமலையடிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpqymyn4/
APA
Oliyon Research. (2026). மறைமலையடிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zpqymyn4/
MLA
"மறைமலையடிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpqymyn4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment