ஐஎஸ்ஓ / ஓஎஸ்ஐ மாதிரியம்

aiesō / ōesai mātiriyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐஎஸ்ஓ தரப்படுத்தலுக்கான பன்னாட்டு அமைப்பு (International Organisation for Standardization); ஓஎஸ்ஐ - திறந்தநிலை முறைமை சேர்த்திணைப்பு (Open Systems Interconnection). இரு கணினிகள் ஒரு தகவல் தொடர்புப் பிணையத்தின் வழியாக தகவலைப் பரிமாறிக் கொள்வதில் அடங்கியுள்ள ஊடாடல் வகைப்பாடுகள், சேவைநிலைகள் ஆகியவற்றைத் தரப்படுத்தும் ஒர் அடுக்குமுறை கட்டுமானம். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியம் கணினிகளுக்கிடையே யான தகவல் தொடர்பினை ஏழு அடுக்குகளாகப் பிரிக்கிறது. ஒரு நிலையின் மீது எழுப்பப்பட்ட இன்னொரு நிலையென, ஏழுநிலைகளைக் கொண்டுள்ளது. ஏழு அடுக்குகளில் முதலாவதாகக் கீழேயுள்ள அடுக்கு கணினி வன்பொருளுடன் தொடர்பு கொள்வதை மட்டுமே கவனித்துக் கொள்கிறது. ஏழாவதாக உள்ள மேலடுக்கு பயன்பாட்டு நிரல் நிலையில் மென்பொருள் ஊடாட்டங்களைக் கவனித்துக் கொள்கிறது — ISO/OSI model
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 252)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zpmddgwc/

தமிழ்
“ஐஎஸ்ஓ / ஓஎஸ்ஐ மாதிரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpmddgwc/
APA
Oliyon Research. (2026). ஐஎஸ்ஓ / ஓஎஸ்ஐ மாதிரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zpmddgwc/
MLA
"ஐஎஸ்ஓ / ஓஎஸ்ஐ மாதிரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpmddgwc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment