அழுத்தமானிகள்
aḻuttamāṉikaḷ
அழுத்தமானிகள் (Manometers) அழுத்தத்தை அளவிடும் கருவிகள்.
அழுத்தமானிகள் (Manometers) அழுத்தத்தை அளவிடும் கருவிகள். இவற்றில் பலவகை யுண்டு. அளவிடப்படும் அழுத்தத்திற்குத் தகுந்தவாறு இவற்றின்
வடிவமும் மாறுபடும். சாதாரண அழுத்தங்களை அளவிட எளியவகைக் கருவியொன்றுவழங்குகிறது. இது திறந்த அழுத்தமானி எனப் அழுத்தமானிகள்படும். படத்திலுள்ளதைப் போல் பவடிவான குழலின் வளைவில் ரசம் அல்லது வேறு திரவமொன்று நிரப்பப்பட்டு, அதன் ஒரு முனை அழுத்தத்தை அளவிடும் இடத்துடன் இணைக்கப்படும். மறு முனை வெளிக்காற்றில் திறந்தவாறு இருக்கும். இரு புறங்களிலும் திரவ மட்டங்களின் வேற்றுமையை அளந்து, அதைக் காற்றின் அழுத்தத்துடன்கூட்டியோ, அதிலிருந்து கழித்தோ, வாயுவின் அழுத்தத்தைப் பெறலாம்.
இதைவிட அதிகமான அழுத்தத்தை அளவிட மூடிய அழுத்தமானி என்ற கருவி வழங்குகிறது. இதுவும்
ப-வடிவான தே. இதன் ஒரு முனை அழுத்தத்தை அளவிடும் இடத்துடன் இணைக்கப்படும். மறுமுனை மூடப்பட்டிருக்கும். மூடிய முனையில் போர்டன் அழுத்தமானி திரவ மட்டத்திற்கு மேல் சாதாரண அழுத்தத்திலுள்ள காற்று நிரம்பியிருக்கும். திறந்த முனை வெளிக்காற்றில் உள்ளபோதும், அழுத்தத்தை அளவிடும் இடத்துடன் இணைந்திருக்கும் போதும் குழலுக்குள் இருக்கும் காற்றின் பருமனை அளவிட்டு, பாயில் விதியைப் (Boyle's law) பயன்படுத்தி அழுத்தத்தைக் கணக்கிடலாம்.
இதைவிட அதிகமான அழுத்தங்களையும் சில சமயங்களில் அளவிட நேருகிறது. உதாரணமாக நீராவி எந்திரங்களில் நீராவியின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். இதையொத்த கருவிகளில் பயனாகும் அழுத்தமானி போர்டன் அழுத்தமானி (Bourdon gauge எனப்படும். இது அமைப்பில் திரவமில்லாப் பாரமானியை ஒத்தது. இதில் நீள்வட்ட வடிவான வெட்டுப் பரப்புள்ள ஒரு குழல் இருக்கும். இது வட்டமாக வளைந்திருக்கும். குழலின் ஒரு முனை நீராவியுடன் இணைக்கப்படும் ; மறு முனை மூடப்பட்டிருக்கும். ஆவியின் அழுத்தத்தால் குழலின் வளைவில் மாறுதல் விளைந்து அதன் மறுமுனை இயங்குகிறது. இவ்வியக்கம் நெம்பு கோல்களின் உதவியால் ஒரு முள்ளை இயக்குகிறது. இம்முள் ஓர் அளவையின் மேல் இயங்கி நேரடியாக அழுத்தத்தைக் காட்டுகிறது.
மிகக் குறைந்த அழுத்தங்களை அளவிட வெற்றிட மானிகள் (Vacuum gauges) பயனாகின்றன. இவற்றில் மாக்லியாடு அழுத்தமானி (Mcleod 'gauge) என்பது நன்கறிந்தது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 286)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zm59r9fw/
தமிழ்“அழுத்தமானிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zm59r9fw/APA
Oliyon Research. (2026). அழுத்தமானிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zm59r9fw/MLA
"அழுத்தமானிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zm59r9fw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment