வில்லைப் பாட்டைப் பிணையம்
villaip pāṭṭaip piṇaiyam
பொருள்கள் · Senses
1.
தரவு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வில்லை அனுப்பும் முறையைக் கடைப்பிடிக்கின்ற, பாட்டைக் கட்டமைப்பில் அமைந்த ஒரு குறும்பரப்புப் பிணையம் (பணி நிலையங்கள் ஒற்றை, பகிர்வு தரவு நெடுவழியில் பிணைக்கப் பட்டிருக்கும்). தரவு அனுப்பும் உரிமையை வழங்கும் வில்லை ஒரு நிலையத்திலிருந்து இன்னொரு நிலையத்துக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு நிலையமும் வில்லையைச் சிறிது நேரம் வைத்திருக்கும். அந்நேரத்தில் அந்நிலையம் மட்டுமே தரவு அனுப்ப முடியும். அதிக முன்னுரிமை பெற்ற நிலையத் திலிருந்து அதற்கடுத்த முன்னுரிமை பெற்ற நிலையத்துக்கு வில்லை அனுப்பி வைக்கப்படும். அந்நிலையம், பாட்டையில் அடுத்த நிலையமாக இருக்கவேண்டியதில்லை. சுருங்கக்கூறின், வில்லையானது பிணையத்தில் ஒரு தருக்க நிலை வளையத்தில் (Logical Ring) சுற்றிவருகிறது எனலாம். வளையக் கட்டமைப்பில் இருப்பதுபோன்று பருநிலை வளையத்தில் (Physical Ring) சுற்றி வருவதில்லை. இத்தகு பிணையங்கள் ஐஇஇஇ 802. 4-ல் வரையறுக்கப்பட்டுள்ளன.
— token bus network
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zjeza26t/
தமிழ்“வில்லைப் பாட்டைப் பிணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjeza26t/APA
Oliyon Research. (2026). வில்லைப் பாட்டைப் பிணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zjeza26t/MLA
"வில்லைப் பாட்டைப் பிணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjeza26t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment