நைட்டிங்கேல்
naiṭṭiṅkēl
இது பேஸ்சாரிபார்மீஸ் வரிசையில், மியூசிகேப்பிடே குடும்பத்தில் டுர்டினே உட்குடும்பத்தைச் சேர்ந்த பறவையாகப் பாகு படுத்தப் பட்டுள்ளது.
இது பேஸ்சாரிபார்மீஸ் வரிசையில், மியூசிகேப்பிடே குடும்பத்தில் டுர்டினே உட்குடும்பத்தைச் சேர்ந்த பறவையாகப் பாகு படுத்தப் பட்டுள்ளது. இக்குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள், இனிமையாகக் குரல் எழுப்புகின்றன. தென்னிந்தியாவில் காணப் படும் சாமா, வண்ணாத்திக் குருவி ஆகியன இவ்வகையைச் சேர்ந்தவையே. கொண்டைக் குருவியை விட, உருவில் சற்றுச் சிறிய நைட்டிங்கேல் பறவையை மைய ஆசியாவில் பெர்சிய மொழியில் கொண்டைக் குருவிக்கு உரிய ‘புல்புல்’ என்னும் பெயராலேயே குறிக்கின்றனர்.
நைட்டிங்கேல் பறவை. துருப் பழுப்பு நிறத்தில் மேல் உடலும், சிவந்த வாலும், வெளிர் துருப் பழுப்பு நிற மார்பும் வயிறும் கொண்ட இப்பறவை தெற்கு ஐரோப்பா, மைய ஆசியா ஆகிய பகுதிகளில், மரங்களடர்ந்த காடுகளிடையே உள்ள புதர்களில் கோடைக் காலத்தில் இனப் பெருக்கம் செய்யும். குளிர் காலத்தில் மைய ஆப்பிரிக்காவிற்கு வலசை செல்லும். வளர்ச்சி பெற்ற பறவை பாடும் குரலைக் கேட்டே, இளம் குருவியும் பாடக் கற்றுக் கொள்கிறது. புதர்களிடையே மறைவாக இலை தழை, புல், பாசி ஆகியவற்றைக் கொண்டு கூடு கட்டி 5–6 ஆலிவ் பச்சை அல்லது பழுப்பு நிறக் கறைகளைக் கொண்ட முட்டைகளை இடுகிறது. இதன் அடை காக்கும் காலம் 12 நாள்கள். பெண் பறவை மட்டுமே அடை காக்கிறது. எனினும், குஞ்சுகளுக்கு இரை ஊட்டி வளர்ப்பதில், ஆணும், பெண்ணும் பொறுப்பு ஏற்கின்றன. புதர்க் காடுகள் அழிக்கப் படும் போது, இப்பறவை வாழும் இடத்தை விட்டு வெளியேறி விடுகிறது. இது இந்தியாவிற்கு வலசை வருவதில்லை. —க. ரத்னம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 257)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zfa2d8as/
தமிழ்“நைட்டிங்கேல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zfa2d8as/APA
Oliyon Research. (2026). நைட்டிங்கேல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zfa2d8as/MLA
"நைட்டிங்கேல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zfa2d8as/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment