அடையாள மொழி
aṭaiyāḷa moḻi
‘மொழி’ என்பது மனிதன் பேச்சாலும் எழுத்தாலும் தன் கருத்தைப் பிறகுக்குத் தெரிவிப்பது என்னும் கருத்தோடு, அவன் தன் சைகையாலோ படத்தாலோ குறியீட்டாலோ ஒரு கருத்தைப் பிறருக்குத் தெரிவித்தலும் ஆகும் என்று விளக்குவது பொருந்துவதாகும்.
‘மொழி’ என்பது மனிதன் பேச்சாலும் எழுத்தாலும் தன் கருத்தைப் பிறகுக்குத் தெரிவிப்பது என்னும் கருத்தோடு, அவன் தன் சைகையாலோ படத்தாலோ குறியீட்டாலோ ஒரு கருத்தைப் பிறருக்குத் தெரிவித்தலும் ஆகும் என்று விளக்குவது பொருந்துவதாகும். கருத்தைப் புலப்படுத்தும் முறையோ வழியோ எவ்வாறு இருப்பினும் கருத்தை இருவர் புரிந்துகொண்ட மாத்திரத்திலேயே மொழியின் செயல் ஓரளவு நிறைவு பெற்று விடுகிறது. இத்தகைய மொழி, மனித வரலாற்றில் தொடக்கக் காலத்திலிருந்தே அவன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டிய உணர்வோடு முயன்று வந்த முயற்சியின் முற்றிய வளர்ச்சியேயாகும்.
மொழித் தோற்றம் பற்றிய கருத்துகள் இன்றும் ஆய்வுக்குரியனவாக உள்ளன எனலாம். கடவுளால் வழங்கப்பட்டது மொழி என்னும் பழங்காலக் கொள்கை உலகெங்கும் காணப்படுகிறது. ஈடன் தோட்டத்தில் கடவுள் சுவிடீசு (Swedish) மொழியைப் பேசினார் என்றும், ஆதாம் (Adam) தேனிசு (Danish) மொழியைப் பேசினான் என்றும், பாம்பு பிரெஞ்சு மொழியைப் பேசியது என்றும் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவீடன் என்ற மொழியியல் அறிஞர் கூறுகிறார். நம் நாட்டிலும் சிவபெருமான் பாணினிக்கு வடமொழியையும், அகத்தியருக்குத் தமிழையும் கற்பித்தார் என்ற புராணக் கதை நிலவுகிறது. இத்தாலி மொழி தாந்தே என்னும் கவிஞராலும், ஆங்கிலம் சாசர் (Chaucer) என்னும் புலவராலும், செருமானிய மொழி மார்ட்டின் லூதர் (Martin Luther) என்றும் அறிஞராலும், தச்சுமொழி (Dutch) பெடர்சன் (Pederson) என்பவராலும் போற்றி வளர்க்கப்பட்டன என்று ஐரோப்பியர் நம்பினர்.
மொழியின் தோற்றத்தைப் பற்றி ஆராயப் பல்வேறு காலங்களில் பல்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மானிட மொழியியல் அறிஞர்கள் (Anthropological Linguists) மொழியின் தோற்றம், வளர்ச்சி இவற்றை மூன்று நிலைகளில் ஆராய்கிறார்கள். ::{|
மொழியின் தோற்றத்தை ஆராயும்போது, மனிதனின் படிநிலை வளர்ச்சியும் ஆராயப்படும். மனித இன வளர்ச்சியை விலங்கினங்களைக் கொண்டு ஆராய்வது போன்று, மொழியின் தோற்றத்தை ஆராயும் போதும் எவ்வாறு விலங்குகள் தம் எண்ணங்களைச் சைகையாலும் ஒலிக் குறிப்பாலும் தெரிவிக்கின்றன என்பதையும் ஆராயவேண்டும். விலங்கினங்களின் செயல்களை வைத்து மனித மொழியின் தோற்றத்தை ஆராய முற்பட்டனர். தேனீ தனது கருத்தைப் பல்வேறு கோணங்களில் நடனமாடிப் பிற தேனீக்களுக்குத் தெரிவிக்கின்றது என்று அறிவியலார் நம்புகின்றனர். இச்சைகைகள் (Gestures) வாயிலாகத் தேன் கிடைக்கும் திசை, செல்ல வேண்டிய வழி ஆகியவற்றைப் புரியவைக்கிறது. எறும்புகள் மூன்றுவகைச் சைகைகள் மூலம் தம்முள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றன என உருசியப் பேரறிஞர் மாரிகாவுசுக கூறுகிறார். சைகைகளுள் சிலவற்றைக் கட்டளையிடவும், சிலவற்றைப் புதிய வாசனையை உணர்த்தவும், சிலவற்றைத் தேவைகளை வெளிப்படுத்தவும் எறும்புகள் பயன்படுத்துகின்றன என்பது இவரது ஆய்வின் முடிபாகும். இச்சைகைகளை மற்ற எறும்புகன் புரிந்து கொள்ளும். இவ்வாறு விலங்கினமும் பறவையினமும் சைகைகள் வாயிலாகத் தமக்குள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்கின்றன. குரங்கினமும் தம் எண்ணங்களைச் சைகைகள் வாயிலாகப் பரிமாறிக் கொள்கின்றன என அறிவியலார் நம்புகின்றனர். ஆதிகால மனிதன் காட்டில் வேட்டையாடும்போது விலங்கினமும் பறவையினமும் இயற்கையாக ஒலித்த ஒலிகளையே பாவனை செய்து ஒலித்து, அதனால், “இன்னின்ன விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி வந்தேன்” என்று பிறருக்குத் தெரிவித்து மகிழ்ந்தான் என்று மொழித் தோற்றத்தைப் பற்றிய பாவனை மொழிக் கோட்பாடு விளக்குகிறது. ஆதிகால மனிதனின் இம்முயற்சி மொழித் தோற்றத்திற்கு அடிப்படையானதாகும்.
பழங்காலத்து மனிதனும் மொழி வளராத காலத்தில் அடையாளங்கள் அல்லது சைகைகள் வாயிலாகவே தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவித்- திருக்க வேண்டும். பழங்கால மனிதனின் மொழி வளர்ச்சியில் சிறந்த பல அமைப்புகளோடு கூடிய ஒரு சைகை மொழி இருந்திருக்க வேண்டும். இதற்குச் சான்றாக இன்று மக்கள் பல கருத்துகளைச் சைகைகள் வாயிலாகத் தெரிவிப்பதனைக் காட்டலாம். இவ்வடையாள மொழியிலிருந்தே மொழி, தோற்றம் பெற்றிருக்க வேண்டும் எனச் சில மொழியியல் பேரறிஞர்கள் கருதுகின்றனர். சைகை மொழியும் வாய்மொழியும் இணைந்து இன்றைய மொழி உருவானது எனக் கொள்ளலாம். சைகைகள் தொன்றுதொட்டே மொழியாகக் கருதப்பட்டு வந்துள்ளன. முகக் குறிப்பு, மெய்ந்நிலை, போலி ஒலி என்பனவும் மொழியாகக் கருதப்பட்டனவே. சைகையாய், குறிப்பாய், போலியாய் இருந்த நிலை படிப்படியே வளர்ந்து சிறந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மக்களிடத்தில் உயர்நிலை அடைந்திருக்கிறது. வரி வடிவமாகவும் ஒலி வடிவமாகவும் இன்று நாகரிக மக்களிடையே நிலவும் மொழி, இந்த வளர்ச்சியாகிய கூர்தலறத்தின் (Evolution) பயனே ஆகும்.
அடையாள மொழியைப் பழங்கால மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தியிருக்க வேண்டும். பேச முடியாத ஊமையர்களிடம் இன்றும் இந்தச் சைகைகளைக் காண்கிறோம். பேச்சு இல்லாத நிலையில் சைகைகளைப் பயன்படுத்தித் தன் கருத்துகளைப் புலப்படுத்துவதனை இன்றும் காணலாம். மொழி வளர்ச்சி பெறாத காலக் கட்டத்திலும் அடையாள மொழி அல்லது சைகை மொழியைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். பசி உள்ளவன் வயிற்றைக் காட்டுவதும், நீர் வேட்கை உள்ளவன் கையைக் குவித்து வாயருகே காட்டுவதும், அடித்தலைப் புலப்படுத்தக் கையை ஓங்குவதும், ‘உன்னை ஒருகை பார்க்கிறேன்’ என்பதை உணர்த்த மற்ற விரல்களை மடக்கிக் கொண்டு பெருவிரலை நிமிர்த்திக் காட்டுவதும், பேச வேண்டாம் என்பதைக் கையால் வாயை மூடிக் காட்டுவதும், இன்றும் காணப்படுகின்றன. இவையெல்லாம் விரும்பிச் செய்யும் இயல்பினாலானவை (Intentional) யாகும். ஒரு மொழி அறிந்த பழங்குடி மக்களிடத்தில் அவர்தம் மொழியை ஆய்வு செய்தற்காகக் கள ஆய்வு செய்யும்போது தொடக்கநிலையில் சைகைகள், படங்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டுதான், இப்பொருளுக்குரிய தரவுகளைச் (Data) சேகரிக்கலாம் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. உள்ளத்து உணர்ச்சிகள் அனைத்தையும் சைகைகளால் உணர்த்த முடியாது. அருகில் உள்ளவர்களிடம்தான் சைகைகளால் கருத்தைப் புலப்படுத்த முடியும். இரவு நேரங்களிலும் சைகைகளால் கருத்தைப் புலப்படுத்த முடியாது, தென்னாப்பிரிக்காவிலுள்ள பழங்குடி மக்கள் இரவு நேரத்தில் கருத்தைப் புலப்படுத்த, தீயைவளர்த்துப்பின்னர்ச் சைகை வாயிலாக வெளிப்படுத்துவர். சைகை முறை இரு வகைப்படும். ::{|
பாவனைச் சைகை முறை மிகத் தொடக்கக் காலத்திலேயே வளர்ச்சி பெறலாயிற்று. குறியீட்டுச் சைகை முறை பேச்சு வளர்ச்சியின் ஒரு காலக் கட்டத்தில் தோன்றியதாகும்.
கைகளைப் பயன்படுத்திச் சைகை செய்த மனிதன், கைகளைப் பயன்படுத்தி வேலைசெய்யத் தொடங்கினான். அந்நிலையில் கையாலோ கண்ணாலோ சைகைகள் செய்து தன் கருத்தைப் புலப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் மனிதன் வாய்மொழிச் சைகைகளைக் (Mouth gestures) கையாண்டான். இதுவே இக்கால மொழிவளர்ச்சிக்குத் தோற்றமாக அமைந்தது என்று இரிச்சர்டு பிகாட்டு (Pigott, Richard) என்ற அறிஞர் கருதுகிறார். பேச்சு உறுப்புகளின் அசைவுகளால் எண்ணங்களை வெளிப்படுத்திய எளிமையும், சைகைகளையே எப்போதும் பயன்படுத்த இயலாமையும் வாய்மொழிச் சைகைகளுக்கு முதன்மை கொடுக்கப்பட வேண்டிய நிலையை உருவாக்கின எனலாம். குறிப்பிட்ட வகையில் ஒரு குறிப்பிட்ட சைகையின் பொருளை உணர்த்த, ஒரு குறிப்பிட்ட ஒலியை வெளிப்படுத்தியதின் முதல்படி, மொழியின் ஒலியமைப்பு முறைக்கு (Articulated Structure) அடிப்படையாக அமைந்தது. எனவே, பேச்சு உறுப்புகளின் குறிப்பிட்ட சில அசைவுகள் உணர்த்திய வாய்மொழிச் சைகைகளும் ஏனைய சைகைகளும் கொண்ட ஒரு மொழி மனிதனுடைய மொழி வரலாற்றில் இருந்திருக்க வேண்டும் என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது. சைகைகளை மொழியிலிருந்து பிரித்து நோக்க முடியாமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஒருவர் மொழியை மற்றவர் அறியாத வெவ்வேறு மொழி பேசும் இருவர் தத்தம் கருத்துகளைச் சைகைகள் வாயிலாகவே முதலில் புலப்படுத்துவதை இன்றும் காணலாம்.
அடையாள அல்லது சைகை மொழிக்கு அடுத்த நிலையில், மொழியின் தோற்ற வளர்ச்சி பற்றி ஆராய்ந்ததன் விளைவாகக் கீழ்க்கண்ட ஐந்து கோட்பாடுகள் உருவாயின.
:i. பாவனை மொழிக் கோட்பாடு (The Bow–vow theery)
:ii. உணர்ச்சி மொழிக் கோட்பாடு (The Pooh–pooh theory)
:iii. பண்பு மொழிக் கோட்பாடு (The Ding–Dong theory) :iv. ஏலேலோ மொழிக் கோட்பாடு (Yo–he–ho theory)
:v. இன்பப்பாட்டு மொழிக் கோட்பாடு (The Lyric theory)
இக்கோட்பாடுகள் அறிவியல் அடிப்படையில் அமையாமல், மொழியைப் பற்றிய கதைகள் போன்று உள்ளன என்பர் மொழியியல் அறிஞர் சிலர். எனினும் மொழியின் தோற்ற வளர்ச்சியை ஆராய, ஓரளவு இக்கோட்பாடுகளும் உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. மொழியின் தோற்ற வளர்ச்சியில் அடையாள மொழி அல்லது சைகை மொழி முதல் படி நிலை என்று கூறலாம்.சு. சக்தி
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 277)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zaw4ydu4/
தமிழ்“அடையாள மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zaw4ydu4/APA
Oliyon Research. (2026). அடையாள மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zaw4ydu4/MLA
"அடையாள மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zaw4ydu4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment