ஓர் இயக்கத்தில் பலவகையான சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இயக்கத்தின் செயல் திறன், தடையின்றிச் செயல்படும் திறன் இவை யாவும் சாதனங்களின் நம்பகத்தைப் பொறுத்து அமையும். இயக்கத்தைப் பொறுத்துச் சாதனங்களின் நம்பகம் முக்கியத்துவம் அடைகின்றது. சான்றாக, செயற்கைக் கோள்கள், விமானம் முதலியவற்றில் காணப்படும் சாதனங்கள் பழுது படாமல் ஒரே சீராக நீண்ட நாள் செயல்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கும், மருத்துவத் துறையிலும் பயன்படும் கருவிகள் சிறந்த நம்பகத் தன்மை கொண்டிருக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சிக்குப் பயன்படும் கருவிகள் பல நம்பகமான உறுப்புகளால் வடிவமைக்கப்பட்டிருக்கும். அனைத்து உறுப்புகளையும் நம்பக ஆய்வுக்குட்படுத்த (reliability test) வேண்டும். ஒரு சாதனத்தின் நம்பகத்தைக் கண்டறிய, பலவழிகள் உள்ளன. நம்பகப் பொறியியல் (reliability engineering) ஒரு சிறந்த பாடமாகும். ஒரு சாதனத்தின் நம்பகம் குறைவதற்குப் பின் வருவனவற்றை முக்கிய காரணங்களாகக் கூறலாம். தொழில் நுட்பக் குறைபாடுகள், திட்டமிடல், வடிவமைப்பு, உற்பத்தி, பொருள்கள், உருச் சேர்க்கும் குறைபாடுகள் (operation faults), செயலாற்றலில் தோன்றும் குறைபாடுகள் (operation faults), மூப்படைதல் அல்லது கால மாறுபாடு (ageing), தேய்மானம், துருவரிப்பு (corrosion) அரிப்பு, புற அகக் கோளாறுகள், செயலாற்றம், பராமரிப்புக் குறைபாடுகளுடன், பொதுப்படையான தவிர்க்க முடியாத போதாமைகளும், இயலாமைகளும் காரணமாகலாம். ஆகவே, மேற்காணும் முறைகளில் நம்பகம் குறையாமலிருக்க, திட்டமிடல், குறியீடு, வடிவமைப்பு, உற்பத்தி ஆகிய துறைகளில் முந்தைய பட்டறிவு தேவைப்படும். தடுப்புப் பராமரிப்புக்கு(preventive maintenance) முதலிடம் அளிக்கப்பட்டுக் கெட்டுப் போகும் பொருள்களில் தவறு நேர்வதற்கு முன்னரே சீராக்கப்படுகின்றன. வல்லுநராலும், பட்டறிவுடையோராலும் உருவாக்கப்பட்ட செயலாற்றக் குறிப்புரைகள் பின்பற்றப்படுகின்றன. தகைவுப் பாதிப்புகளும், திரிபு மாறுபாடுகளும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு, அவற்றிற்கான வாய்ப்பாடுகள் அறுதியிடப்படும். ஒரு சாதனத்தின் அனைத்துக் கருவிகளும் தர நிர்ணயக் கட்டுப்பாடு செய்யப்பட்டு, குறையற்ற, இழப்பற்ற, சிறந்த செயல் திறனைத் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம்பகம் அதிகரிக்கும்பொழுது சாதனம் எளிதாகக் கிடைக்கிறது. அதன் குண எண் பெரிதாகிறது. ஒரு சாதனத்தின் நம்பகம் கீழ்க்காணும் விதத்தில் கணக்கிடப்படுகிறது. அ. தொலைப்பு விகிதம் (outage ratio) = = = = ஆ. கிடைப்பு விகிதம் (innage ratio) = 1—தொலைப்பு விகிதம் இ. ஆண்டுத் தொலைப்பு = 8760 X தொலைப்பு விகிதம் (மணிகள்) ஈ. நம்பகம் = % உ. எடுத்துக்காட்டாக ஒரு சாதனம் ஓர் ஆண்டில் 32 நொடி மட்டுமே வேலை செய்யவில்லையென்றால், அதன் நம்பகம் 99.9999% என்பது பெறப்படும். (இங்கு த.ச. நே = 5 மணி, த.ஆ.நே 5000 மணி) ந (வி) =நம்பகச் சார்பு (reliability function) =1 — = 1 — சாதன நம்பகத்தைப் பெருக்குவதற்குக் கீழ்க்காணும் வழி முறைகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அவை, மேற்பார்வை, ஆய்வு இவற்றை நெறிப்படுத்துவது, அதிகப்படுத்துவது, திறமற்ற உறுப்புகளை மறுவடிவமைப்பது, நல்ல வலிவான பொருள்களைப் புகுத்தி துணைக் கருவிகளைத் திறம்படச் செய்வது, செயல் முறைகளை மாற்றி அமைப்பது, சிறந்த அமைப்பையே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது என்பன. —க.அர. பழனிச்சாமி — இரா.மணிவாசகம்