அகப்பகை என்பது ஒருவர் மனத்தின்கண் நின்று அவருக்குத் துன்பம் செய்யும் பகையாக விளங்குவதாகும். அஃது அறுவகைப்படும். அவையாவன, காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பன. முற்றக் கடியலாகாக் குற்றங்கள் காமம் வெகுளி உவகை ஆகிய மூன்றுமாம். முற்றக் கடியவேண்டுவன கடும்பற்றுள்ளம் மானம் மதம் ஆகியவை. இந்த அறுவகைக் குற்றங்களையும் வட நூலார் பகை வருக்கம் என்பர்.