களால் வண்ணமிகு பொருள்களான இவற்றைப் பயன்படுத்திப் பொருள்களுக்கு வண்ணமேற்றலாம். ஒரு பொருள்சாயமாக (dye) இருப்பதற்கு அது வண்ணமுடையதாகவோ, பட்டு, கம்பளி, பருத்தி, காகிதம், தோல் போன்ற பொருள்களில் தாமாகவோ, பிற முறை ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவோ இருக்க வேண்டும். மேலும், இவ்வாறு ஒட்டிக் கொண்ட பின், ஒளி, நீர், அமில-காரங்களால் பாதிக்கப்படாமலும், நிறம் மங்காமலும் இருக்க வேண்டும். ஆனால் எல்லா நிறமுடைய பொருள்களும் சாயங்கள் ஆகா. காட்டாக, இரும்புத் துருவுடன் சர்க்கரையைச் சேர்த்து, நன்றாகப் பொடி செய்யும் போது கிடைக்கும் கலவை சிவப்பு நிறமுடையதாக இருக்கும். வெண்சர்க்கரை சிவப்பு இரும்புத் துருவால் நிறமேற்றப்பட்டிருக்கும். இக்கலவையை நுண்ணோக்கியின் வழியே நோக்கினால் சிவப்பு, வெள்ளை நிறத் துகள்கள் தனித்தனியே இருப்பது தெரியும். மேலும் இக்கலவையை நீரில் கரைத்துத் தனித்தனியே பிரித்து விடலாம். நீரில் நனைக்கப்பட்ட வெண்துணியில் இரும்புத் துருவைச் சேர்த்து நிறமேற்றினால், அது துணியில் ஒட்டிக் கொள்கிறது. இந்நிறமேற்றப்பட்ட துணியைச் சோப்பால் கழுவும் போது, அது பிரிந்து விடுகிறது. அதே சமயத்தில், சில நிறமுள்ள பொருள்களை (பொதுவாகக் கரிமப் பொருள்கள்) நீரில் நனைக்கப்பட்ட துணியுடன் சேர்த்துச் சாயத்தில் அமிழ்த்தி எடுக்கும் போது, துணியில் நிறமேற்றப்படுகிறது. இத்துணியை நுண்ணோக்கியின் வழியே நோக்கினால், இரு வேறு நிறங்கள் தெரிவதில்லை. நிறமேற்றப்பட்ட துணியைச் சோப்பால் கழுவினாலும், அது நீங்குவதில்லை. இத்தகைய நிறமேற்றும் பொருளே சாயமாகும். வரலாறு. பழங்காலத்தில் மக்கள் சாயங்களைப் பற்றித் தெரிந்திருந்தனர். அவர்கள் சாயங்களைத் தாவரம், விலங்கினங்களிலிருந்து பெற்றனர். எகிப்து மக்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே அவுரிச் சாயத்- தைப் (indigo) பயன்படுத்தியமைக்குச் சான்றுகள் உள்ளன. பெரும்பாலான இயற்கைச் சாயங்களுக்கு நிறம் நிறுத்தி ( mordant) தேவை. தற்காலத்தில் சாயங்கள் செயற்கையாகத் தொகுப்பு முறைகளிலேயே (synthesis) தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் சாயங்கள் பொருளாதார முறையில் இயற்கையிலிருந்து பெறப்படும் சாயங்களை விட விலை குறைந்தவையாக இருப்பதாலும், பலப் பல வண்ணங்களில் அவை தயாரிக்கப்படுவதாலும், தொகுப்பு முறைத் தயாரிப்பே சாயங்கள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. தோல் பொருளுக்குச் சாயமேற்றவே இயற்கைச் சாயங்கள் பயன்படுகின்றன. தற்போது சுமார் 5000கும் மேற்பட்ட சாயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சில முதன்மையான இயற்கை வகைச் சாயப் பொருள்களின் தோற்றுவாய் அட்டவணை 1 இல் கொடுக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் 1856ஆம் ஆண்டில் சர் வில்லியம் ஹென்றி பெர்கின் என்பார் தற்செயலாக மாவ் (mauve) என்ற செயற்கைச் சாயத்தைக் கண்டுபிடித்தார். அனிலீனைக் கழுவு தொட்டியிலிட்டு, அத்துடன், சிறிது நைட்ரிக் அமிலத்தைச் சேர்க்கும் போது, இச்சாயம் உண்டானது. அனிலீன் நிலக்கரித் தாரிலிருந்து பெறப்பட்டதால், அதிலிருந்து பெறப்பட்ட ஏனைய சாயப் பொருள்கள் கரித்தார் சாயங்கள் அல்லது அனிலின் சாயங்கள் எனப்படும். 1868ஆம் ஆண்டில் அலிசரின் அமைப்பு அறியப்பட்டது. அதே ஆண்டில் இது ஆந்த்ரசீனிலிருந்து தொகுப்பு முறையில் பெறப்பட்டது. 1883 ஆம் ஆண்டில் பேயர், அவுரி நீலத்தின் அமைப்பைக் கண்டறிந்தார். பின்னர் அது தொகுப்பு முறையிலும் தயாரிக்கப்பட்டது. மேலும் டைஅசோ வினைகளைப் பயன்படுத்தி, பலவிதமான அசோ சாயங்கள் தயாரிக்கப்பட்டன. பென்சீன், டொலுயீன், நாஃப்தலின் போன்ற எளிய அரோமாட்டிக் சோமங்கள், சாயங்கள் தயாரிக்கக் கச்சாப் பொருள்களாக உள்ளன. இச்சேர்மங்களில் நைட்ரோ, அமினோ, ஹாலோஜென், சல்ஃபோனிக் அமிலத் தொகுதி போன்ற தொகுதிகளை நுழைக்கும் போது, பல விதமான சாயப் பொருள்கள் உண்டாகின்றன. வணிகத்தில் இவை உலர் பொடியாகவோ, பசை அல்லது கரைசலாகவோ விற்பனை செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 3500 சாயங்கள் வணிகத்தில் பெருமளவு விற்பனையாகின்றன. இச்சாயக் களஞ்சியங்கள் சாய வேதியியலார்க்குப் பெரிதும் உதவுகின்றன. ஒவ்வொரு சாயத்திற்கும் தனித்தனியான எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் வணிக உற்பத்தியாளர் சாயங்களுக்குக் கொடுத்திருக்கும் தனிப்பட்ட பெயர், நிறம், இவற்றைப் பயன்படுத்தும் விதம் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும். (எ—டு) நிறமும் வேதியியல் அமைப்பும். பொருள் இழைகளின் (fibres) உள் அமைப்பில் சாயக் கரைசல்கள் புகுந்து எவ்வாறு ஒட்டிக் கொள்கின்றன என்பது பல்வேறு இயற்பியல், வேதிக் கொள்கைகளால் விளக்கப்பட்டது. பொருளின் நிறத்திற்கும், அமைப்பிற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா எனக் கிரேப், லிபர்மேன் ஆகியோர் ஆராய்ந்து நிறமுள்ள ஒரு கரிமப் பொருளில் ஹைட்ரஜனேற்றம் செய்வதால், நிறமிழப்பும், பின் ஆக்சிஜனேற்றம் செய்வதால் நிறமேற்றமும் நடைபெறுவதாகக் கூறினர். 1876 ஆம்ஆண்டு ஓ.என். விட் என்பார் வெளியிட்ட கருத்துகள் இன்றும் பயனுள்ளவை. சில கரிமப் பொருள்கள் நிறமுற்றிருப்பதற்குக் காரணம் அவற்றிலிருக்கும் நிறைவுறாத் தொகுதிகளே. இத்தொகுதிகள் நிறந்தாங்கிகள் (chromophores) எனப்படுகின்றன. சில முக்கிய நிறந்தாங்கிகளாவன: நிறந்தாங்கியுள்ள பொருள் நிறங்கொள் பொருள் (chromogen) எனப்படும். நிறம் கொள் பொருள்களில் ஒரு நிறந்தாங்கித் தொகுதி மட்டும் இருந்தால், அது மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். நிறந்தாங்கித் தொகுதிகள் அதிகமாகும் போது, நிறத்தின் அழுத்தமும் அதிகரிக்கிறது. நிறம்கொள் பொருள்களில் -OH.-NHsub|2))-NHRsub|2))-NRsub|2)) போன்ற தொகுதிகள் இருந்தால், அப்பொருள்கள் சாயமாக விளங்கும். இத்தொகுதிகள் பொருள்களின் நிறத்தைப் பெருக்குகின்றன. உண்மையில் இவை நிறந்தாங்கிகள் அல்ல; இவற்றால், நிறத்தின் அடர்வு அதிகரிப்பதால், இவை நிறம் பெருக்கிகள் (auxochromes) எனப்படுகின்றன. சில தொகுதிகள் வண்ணத்தை மிகுவிக்கின்றன. இவை வண்ண மிகுப்பிகள் (bathochromic groups) என்றும், வண்ணத்தை வெளிறச் செய்யும் தொகுதிகள் வண்ண மெலிவிப்பிகள் (hypsochromic groups) என்றும் வழங்கப்படுகின்றன. வண்ணம் மிகுதல் என்பது பின்வரும் மாற்றத்தைக் குறிக்கும். மஞ்சள் → ஆரஞ்சு → சிவப்பு → செம்பழுப்பு ஊதா → நீலம் → பச்சை → கறுப்பு பொருள்களின் நிறம் என்பது அப்பொருள் எந்த நிறத்தை உட்கவர்கிறதோ அதன் நிரப்பு நிறம் (complementary colour) ஆகும். இதைப் பின் வரும் அட்டவணையிலிருந்து தெளிவாக அறியலாம். எனவே வண்ண மிகுவிப்பிகள் ஒளி உறிஞ்சலை ஊதாப் பக்கத்திலிருந்து சிவப்புப் பக்கமாகவும், வண்ண மெலிவிகள் இதற்கு மாறாகச் சிவப்புப் பக்கத்திலிருந்து ஊதாப் பக்கமாகவும் நகர்த்துகின்றன. பொதுவாக நிறந்தாங்கிகள் வண்ண மிகுப்பிகளாக உள்ளன. அமினோ தொகுதியிலுள்ள ஹைட்ரஜனுக்குப் பதிலாக அல்க்கைல் அல்லது அரைல் தொகுதிகளைப் பதிலீடு செய்வதால், வண்ணம் மிகும். மாறாக, தொகுதிகளை அசெட்டைல் ஏற்றம் (acetylation) செய்தால், வண்ண மெலிவு உண்டாகும். 1879ஆம் ஆண்டில் நீயெட்ஸ்கி என்பார் பொருளின் மூலக்கூறு எடை அதிகரிப்பால், வண்ணமும் அடர்த்தியாவதாகக் கூறினார். காட்டாக, அசோ சாயங்களில் உள்ள பென்சீன் கருவுக்குப் பதிலாக, நாஃப்தலீனைப் புகுத்தினால், அதன் நிறம் மஞ்சளிலிருந்து சிவப்பாக மாறுகிறது. இதற்குப் பல விதி விலக்குகள் உண்டு. 1885ஆம் ஆண்டு ஆர்ம்ஸ்ட்ராங் o.p-கினோன்கள் நிறம் கொண்டிருப்பதைக் காட்டி, நிறமிக்க பொருள்களெல்லாம் கினோன் அமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறினார். மேற்காணும் கருத்துகள் ஒரு பொருளின் அமைப்பிற்கும், நிறத்திற்குமுள்ள தொடர்பைச் சரியாக எடுத்துக் கூறவில்லை. ஒரு மூலக்கூறு ஒளியை உட்கவர்ந்தால், அது ஆற்றல் குறைந்த தாழ் ஆற்றல் நிலையிலிருந்து (ground state) உயர் ஆற்றல் நிலையை (excited state) அடைகிறது. காட்டாக E என்பதைத் தாழ் ஆற்றல் நிலையென்றும், E என்பதை உயர் ஆற்றல் நிலையென்றும் கொண்டால், hγ =E-E = ΔE h = பிளாங்க் மாறிலி γ = உட்கவரப்பட்ட ஒளியின் அதிர்வெண் ΔE = ஆற்றல் வேறுபாடு ஓரணு மூலக்கூறில் உட்கவரப்பட்ட ஆற்றல் அதனுடைய எலெக்ட்ரான்களின் ஆற்றலைத் தாழ் ஆற்றல் நிலையிலிருந்து உயர் ஆற்றல் நிலைக்கு உயர்த்தவே முடியும். மூலக்கூறில் ஒன்றிற்கு மேற்பட்ட அணுக்கள் இருந்தால், எலெக்ட்ரான் ஆற்றல், சுழல் ஆற்றல் (rotational), அதிர்வு ஆற்றல் (vibrational) ஆகியவற்றின் அளவில் மாற்றத்தைக் கொடுக்கும். உட்கவரப்பட்ட ஒளி ஏற்படுத்தும் எலெக்ட்ரான் ஆற்றல் மாற்றத்தின் அளவு, ஏனைய இரண்டின் மாற்றத்தை விட மிகுதியாக இருப்பதால், ஒளி கவர்தல் கட்புலன் (visible) அல்லது புற ஊதாப் பகுதியில் நடைபெறுகிறது. சுழல், அதிர்வு ஆற்றல்களில் ஏற்படும் மாற்றத்தால் உட்கவர்தல் முறையே சேய்மை, அண்மை அகச்சிவப்புப் (far and near infra red) பகுதியில் நிகழ்கிறது. எலெக்ட்ரான்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட எலெக்ட்ரான் மண்டலங்களிலேயே இருக்கும். எனவே, ΔE இன் மதிப்பு ஒரு குறிப்பிட்ட அளவாகவே இருக்கும். இதனால் மூலக்கூறு உட்கவரும் அல்லது வெளி விடும் ஆற்றல் ஒரு குறிப்பிட்ட அளவாகவே இருக்கும். இந்த அளவுகள் நிரலில் (spectrum) அவற்றிற்கென அமைந்த கோடுகளாகத் தெரியும். சிக்கலான அமைப்புடைய மூலக்கூறுகளில் மிகவும் கிளர்வுற்ற பல நிலைகள் தோன்றலாம். இதனால், நிரல் நிறக் கோடுகள் அனைத்தும் நெருங்கிப் பட்டையாகத் தோன்றலாம். இதன் காரணமாகவே, ஒவ்வொரு பொருளும் நிறமுடையதாகத் தோன்றுகிறது. பொருளின் நிறத்திற்கு ஒளியின் அதிர்வெண் மட்டும் காரணம் ஆகாது. அப்பொருள் ஒளியைக் கவர்தற்குரிய ஆற்றல் அளவு மாறுபாடும் (energy level) கொண்டிருக்க வேண்டும். மூலக்கூறுகள் ஓர் ஆற்றல் நிலையிலிருந்து மற்றோர் ஆற்றல் நிலைக்கு மாற, அதன் இரு முனைத் திருப்புத் திறனும் (dipolement) மாற வேண்டும். ஒளி, மூலக்கூறினால் உட்கவரப்படும் போது, அம்மூலக்கூறில் இணைப்புகளை ஏற்படுத்தும் எலெக்ட்ரான் இணைகள் (electron pairs) அணைவுறுகின்றன. இதனால், இருமுனைத் திருப்புத் திறனின் அளவும் மாறுகிறது. O=C<C=S<—N=O மேற்காணும் தொகுதிகளைப் பொறுத்துப் பொருளின் நிறம் அமையும். இடப்புறமுள்ள தொகுதியிலிருந்து வலப்புறமாகச் செல்லச்செல்ல நிறம் அடர்த்தியாகிறது. உள்ளுறு சாயங்கள். இவ்வகைச் சாயங்களைத் துணிகளில் படியச் செய்ய, இவை துணிகளிலேயே உண்டாக்கப்படுகின்றன. இச்சாயங்களை உண்டாக்கக் கூடிய பொருள்களில் ஒன்றைத் துணியில் முதலில் ஏற்ற, பின் பிற பொருள்களுடன் இவற்றை வினைப் படச் செய்யும் போது, இவை துணியிலேயே தோன்றிப் படிகின்றன. இவற்றில் முக்கியமானது பாரா சிவப்பு என்னும் சாயமாகும். பாரா சிவப்பு. முதலில் காரக் கரைசலிலுள்ள நாஃப்தால் கரைசலில் துணியை அமிழ்த்தி எடுக்க வேண்டும். துணியில் இது ஒட்டுவதற்காகத் துருக்கி சிவப்பு எண்ணெயில் கலக்க வேண்டும். உலர வைத்த துணியை இக்கரைசலில் அமிழ்த்தி எடுத்தால், பாரா சிவப்பு துணியில் படிகிறது. சாயங்களை அவற்றின் நிறங்களுக்கேற்பவும், அவற்றின் மூலத்தைப் பொறுத்தும், வேதி அமைப்பு, அவற்றைப் பயன்படுத்தும் விதம் இவற்றைப் பொறுத்தும் பல விதமாக வகைப்படுத்தலாம். வேதியியல் அமைப்பின் மூலம் சாயங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். சாயம், துணி ஆகியவற்றின் அமைப்பைப் பொறுத்துச் சாயம் பயன்படும் விதம் மாறுபடுகிறது. இயற்கை இழைகள் இரண்டு வகைப்படுகின்றன. தாவர இழைகள் (இவை செல்லுலோஸால் ஆனவை (எ—டு) பருத்தி, சணல்), விலங்கின இழைகள் (இவை புரோட்டீன்களால் ஆனவை: (எ—டு) கம்பளி, பட்டு) செயற்கை இழைகள் என்பன அதிக மூலக்கூறு எடை கொண்ட பல்லுறுப்பிகள் (polymers) ஆகும். (எ—டு) பாலிஅமைடுகள், பாலிஎஸ்ட்டர்கள், பாலி அக்ரிலோநைட்ரைல் இழைகளின் அமைப்பைத் தவிர அவற்றைச் சாயமேற்று முன், நீர் எதிர்ப்பு (water resistant), மசகு எதிர்ப்பு (crease resistant) போன்ற பல வேதியியல் மாற்றங்களுக்குட்படுத்த வேண்டும். இதனால் இழைகளின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. சாயமேற்றுதல் பெரும்பாலும் நீர்க் கரைசலிலேயே நடைபெறுகிறது. ஆனால் அண்மைக் காலங்களில் 1,1.1—டிரைகுளோரோ எத்தேன் போன்ற கரைப்பான்களும் பயன்படுகின்றன. ஒரு சாய மூலக்கூறு சக பிணைப்பு, ஹைட்ரஜன் பிணைப்பு, அயனிப் பிணைப்பு, வான்டெர் வால்ஸ் விசைகள் போன்ற நான்கு விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் இழையுடன் பிணைக்கப்படுகிறது. அமிலச் சாயங்கள். சல்ஃபோனிக், கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடியம் உப்புகள் அமிலச் சாயங்கள் (acid dyes) எனப்படுகின்றன. இவற்றைக் கம்பளி, பட்டு, பாலிஅமைடு அல்லது அக்ரிலிக் இழைகளுக்குச் சாயமேற்றப் பயன்படுத்தலாம். நிறமுள்ள காரங்களின் உப்புகள் காரச் சாயங்கள் (basic dyes) எனப்படுகின்றன. இவற்றில் அமினோ, இமினோ போன்ற காரத் தொகுதிகள் உள்ளன. இவற்றால் டானின், மற்றும் ஆன்ட்டிமனி உப்புகளுக்கும், அலும் போன்ற நிறம் நிறுத்தியால் (mordant) நனைக்கப்பட்ட பருத்தித் துணிகளுக்கும் சாயமேற்றலாம். அசோயிக் சாயங்கள். நீரில் கரையாத அசோ சாயங்கள், அசோயிக் சாயங்கள் (azoic dyes) எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் செல்லுலோஸ் இழைகளுக்குச் சாயமேற்றவே பயன்படுகின்றன. இவை உள்ளுறு சாயங்கள் (ingrain dyes) எனப்படும். அசோயிக் சாயங்கள் சாயமேற்ற வேண்டிய துணியிலேயே வேதி வினையால் உண்டாகின்றன. சாயமேற்ற வேண்டிய துணி முதலில் ஹைட்ராக்சி அல்லது அமினோ தொகுதியுள்ள கரைசலில் அமிழ்த்தி எடுக்கப்படுகிறது. இதை உலர்த்திப் பின் டைஅசோ தொகுதி கொண்ட கரைசலில் நனைக்கும் போது, சாயமேற்றம் நடைபெறுகிறது. ஆக்சிஜனேற்ற சாயங்களும் (oxidation dyes) இவ்வகையன. இவை சாயமேற்ற வேண்டிய துணியைச் சில அரோமாட்டிக் அமீன்கள் உள்ள கரைச்லில் அமிழ்த்தி எடுக்கும் போது உண்டாகின்றன. இறுதியில் விளையும் பொருள் சாயத்தை விட நிறமியாகவே (pigment) இருக்கும். இவை பெரும்பாலும் முடிக்குச் சாயமேற்றப் பயன்படுகின்றன. நிறம் நிறுத்தும் சாயங்கள். துணிகளின் மேல் மிகக் குறைந்த அளவு ஒட்டும் அல்லது முற்றிலும் ஒட்டாத சாயத்தையும் தகுந்த நிறம் நிறுத்தியைப் பயன்படுத்திச் சாயமேற்றலாம். நிறம் நிறுத்தப்பட்ட பருத்தியில் பயன்படுத்தப்படும் காரச் சாயங்கள், கார நிறங்கள் (basic colours) எனப்படுகின்றன. எனவே, நிறம்நிறுத்தியைப் பொதுவாக அமிலச் சாய வகைகளுக்கும், அலிசரின் சாயங்களுக்கும் பயன்படுத்தலாம், அமிலச் சாயங்களுக்கு உலோக ஹைட்ராக்சைடுகளும், காரச் சாயங்களுக்கு டானின்களும் (டானிக் அமிலம்) நிறம் நிறுத்தியாகச் செயல்படுகின்றன. தொட்டிச் சாயங்கள். இவை பெரும்பாலும் பருத்தித் துணிகளுக்குச் சாயமேற்றவே பயன்படுகின்றன. துணிகளில் சாயமேற்றும் போது, இவை ஒடுக்க நிலையிலிருக்கும். பின்னர் இவை ஆக்சிஜனேற்றம் அடைந்து நிறங்களைக் கொடுக்கும். தொட்டிச் சாய நிறங்களில் உள்ள இரண்டு பிரிவுகள் இண்டிகோ, ஆந்த்ரகுய்னோன் என்பவையாகும். கந்தகச் சாயங்கள். இவை பெரும்பாலும் செல்லுலோஸ் நாரியற் பொருள்களுக்கே சாயம் ஏற்றப் பயன்படுகின்றன. இச்சாயங்கள் பல கரிமச் சேர்மங்கள், சோடியம் சல்ஃபைடு அல்லது கந்தகத்துடன் வினை புரிவதால் பெறப்படும். சிதறல் சாயங்கள். இச்சாயங்கள் முதன்முதலில் செல்லுலோஸ் அசெட்டேட்டைச் சாயமேற்றப் பயன்பட்டன. இவை நீரில் கரையாத சாயங்கள். சிதறல் சாயங்களை (disperse dyes) நிறமேற்றுமுன் அவை தகுந்த கரைப்பானில் சிதறடிக்கப்படும். அசோ சாயங்கள் செயற்கைச் சாயங்களில் அசோ சாயங்கள் முக்கியமானவை. இவற்றில் நிறந்தாங்கியாக அரோமாட்டிக் தொகுதியுடன் இணைந்த அசோ தொகுதி செயல்படுகிறது. —NH, NR, OH போன்ற தொகுதிகள் நிறம் பெருக்கிகளாகவும் உள்ளன. ஓர் அசோ தொகுதியுடன் இணைந்த ஒற்றை அசோ சாயங்கள் (monoazo dyes), இரட்டை அசோ சாயங்கள் (biazo dyes) என அசோ தொகுதிகளின் எண்ணிக்கை வகைப்படுத்தப்படும். பொதுவாக, இவை டைஅசோ உப்புடன் ஃபீனால் அல்லது அமீனை நேரடியாக இணைத்தலால் (direct coupling) பெறப்படுகின்றன. அசோ சாயங்களை மேலும் காரச் (நேரயனி) சாயங்கள் எனவும், அமிலச் (எதிரயனி) சாயங்கள் எனவும் வகைப்படுத்தலாம். கிரை சாய்டின். இது ஒரு நேரயனி அசோ சாயமாகும். இதுவே முதன்முதலில் பெருமளவில் தயாரிக்கப்பட்ட சாயமாகும். இது தோல், காகிதம் ஆகியவற்றிற்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. பென்சீன் டைஅசோனியம் குளோரைடுடன், ஃபீனைலின் டைஅமீனை வினைப்படுத்திக் கிரை சாய்டின் தயாரிக்கப்படுகிறது. அனிலீன் மஞ்சள். பாரா அமினோ அசோ பென்சீன் என்னும் இது அசோ சாயங்களில் எளிய அமைப்- <!---- Do not change the positioning of the pictures as they are aligned with their respective topics. படங்களை இட மாற்றம் செய்ய வேண்டாம். தலைப்புக்கேற்றவாறு படங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன..----> பைக் கொண்டது. அனிலீன் மஞ்சள் (Aniline Yellow) அனிலீனை டைஅசோ உப்பாக மாற்றி, அதனுடன் அனிலீனை இணைப்பதால் பெறப்படுகிறது. இது கொழுப்புகள், பாலாடைக் கட்டி ஆகியவற்றிற்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. வெண்ணெய் மஞ்சள். இது பாரா டைமெத்தில் அமினோ அசோ பென்சீன் எனப்படும். அனிலீனை டைஅசோ உப்பாக மாற்றி, அதனுடன் டைமெத்தில் அனிலீனை இணைப்பதால், வெண்ணெய் மஞ்சள் (Butter yellow) பெறப்படுகிறது. இது வெண்ணெய், எண்ணெய் ஆகியவற்றிற்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. பிஸ்மார்க் பழுப்பு. இது தோல் பொருள்களுக்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. பிஸ்மார்க் பழுப்பு (Bismark Brown) பல்அசோ சாயங்கள் தொகுப்பதற்குப் பயன்படுகிறது. m—ஃபீனைல் டைஅமீனில் உள்ள இரண்டு அமீனோ தொகுதிகளையும், டைஅசோ ஆக்கத்திற்குட்படுத்தி அதனுடன் m—ஃபீனைல் டைஅமீனை இணைக்கும் போது, இரு வகைச் சேர்மங்கள் உண்டாகின்றன. பிஸ்மார்க் பழுப்பு என்பது (I) & (II) ஆகியவை கலந்த கலவையாகும். மெத்தில் ஆரஞ்சு. இது அமில அசோ வகையைச் சேர்ந்தது. இது ஹீலியாந்தின் என்றும் கூறப்படுகிறது. மெத்தில் ஆரஞ்சு ஒரு சாயமன்று. டைஅசோ ஆக்கப்பட்ட சல்ஃபானிலிக் அமிலத்துடன் டைமெத்தில் அனிலீனை இணைப்பதால் இது பெறப்படுகிறது. முறித்தல் வினைகளில் (titrations) இது காட்டியாகப் (indicator) பயன்படுகிறது. காரக் கரைசலில் ஆரஞ்சு நிறமும், அமிலக் கரைசலில் சிவப்பு நிறமும் கொண்டிருக்கும். α—நாஃப்தால் ஆரஞ்சு. இது ஆரஞ்சு I என்றும் கூறப்படும். சல்ஃபானிலிக் அமிலத்தை டைஅசோ ஆக்கம் செய்து, 1-நாஃப்தாலை இணைப்பதால், α-நாஃப்தால் ஆரஞ்சு உண்டாகிறது. இதேபோல் β—நாஃப்தால் ஆரஞ்சு அல்லது ஆரஞ்சு II என்ற சாயமும் உண்டு. இது காகிதத்திற்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. கார்போலேன் சாயங்கள். எதிரயனி அசோ சாயங்களில் உள்ள ஒரு முக்கியமான குறை, அவற்றை இழைகளிலிருந்து நீரில் கழுவினால் பிரிந்து விடுதலாகும். இக்குறை கார்போலேன் சாயங்களினால் நீக்கப்படுகிறது. இதில் R என்பது நீள் தொடர் அல்க்கைல் தொகுதியாகும். (எ-டு. CH—). இத்தொகுதியின் நீர் வெறுக்கும் பண்பினால் சாயம் நீரினால் விலகுவது தவிர்க்கப்படுகிறது. காங்கோ சிவப்பு. இது ஒரு நேரடிச் சாயம். மேலும், இது ஓர் இரட்டை அசோ சாயமும் ஆகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> பென்சிடினை டைஅசோ ஆக்கத்திற்குட்படுத்தி இரு மூலக்கூறு நாஃப்த்தியோனிக் அமிலத்துடன் இணைக்கும் போது, காங்கோ சிவப்புக் (Congo Red) கிடைக்கிறது. இது காரக் கரைசலுடன் சிவப்பு நிறத்தையும், அமிலத்துடன் நீல நிறத்தையும் கொடுக்கிறது. இதன் சோடியம் உப்பு, பருத்தியை நல்ல சிவப்பு நிறமாக மாற்றுகிறது. இதுவே பருத்தித் துணிகளில் நேரடியாகச் சாயமேற்றும் வண்ணம் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு முறைச் சாயமாகும். டிரை அரைல் மெத்தேன் சாயங்கள் மாலக்கைட் பச்சை. அடர் சல்ஃப்யூரிக் அமிலம் உடனிருக்க, இரு டைமெத்தில் அனலீன் மூலக்கூறுகள் ஒரு மூலக்கூறு பென்சால்டிஹைடுடன் 100°C இல் குறுக்க வினை புரிவதால் மாலக்கைட் பச்சைச் (Malachite Green) சாயம் கிடைக்கிறது. இதனால், சாயத்தின் வெள்ளைக் காரம் (leuco base) உண்டாகிறது. இதை அசெட்டிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம் கலந்த கரைசலிலிடப்பட்ட காரீயப் பெராக்சைடினால் ஆக்சிஜனேற்றம் செய்யும் போது, வண்ணக் காரம் உண்டாகிறது. இதை மிகுதியான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் கரைக்கும் போது, மாலக்கைட் பச்சைச் சாயம் உண்டாகிறது. இது அடர் பச்சை நிறம் கொண்டது. இதன் நிறம் தாமிரத்தின் தாதுப் பொருளான மாலக்கைட் போன்றிருப்பதால், இதற்கு இப்பெயர் வந்தது. கம்பளி, பட்டுத் துணிகளுக்கு நேரடியாகவும், பருத்தித் துணிகளுக்கு டானின் போன்ற நிறம் ஊன்றியாலும் இது சாயமேற்றுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> ரோசனிலீன், மெஜன்டா, ஃபியூக்சின். அனிலீன், αp-டொலுயீன்களையும் அதன் ஹைட்ரோகுளோரைடு உப்புகளையும் சம மூலக்கூறு கலவையாக நைட்ரோபென்சீலுடன் சேர்த்து இரும்புத் துருவல்களின் முன்னிலையில் ஆக்சிஜனேற்றம் செய்வதால், ரோசனிலீன், பாரா ரோசனிலீன் கலவை கிடைக்கிறது. இதில் ரோசனிலீன் அளவு மிகுதியாக உள்ளது. ரோசனிலீன் படிகங்கள் பச்சை நிற உலோக மிளிர்வைக் கொண்டுள்ளன. நீரில் கரையும் போது, அடர் சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. இக்கரைசலுள் சல்ஃபர் டைஆக்சைடைச் செலுத்தும் போது, கரைசல் நிறமிழக்கிறது. இது ஆல்டிஹைடுகளை அறிய உதவும் ஆய்வில் ஷிகிப் வினைப் பொருளாகப் பயன்படுகிறது. ரோசனிலீன் பட்டு, கம்பளிகளுக்கு நேரடியாகச் சாயமேற்றுவதால் செந்நீல நிறம் உண்டாகிறது. படிக ஊதா. மிச்லர் கீட்டோனை (Michler ketone) டைமெத்தில் அனிலீனுடன் பாஸ்ஃபோரில் குளோரைடு அல்லது கார்போனைல் குளோரைடு உடனிருக்க வெப்பப்படுத்தினால் படிக (Crystal violet) உண்டாகிறது. இதைக் கார்போனைல் குளோரைடைப் பயன்படுத்தி, நேரடியாக டைமெத்தில் அனிலீனுடன் வினைப்படுத்திப் பெறலாம். செறிவு குறைந்த அமிலத்துடன், செம்பழுப்பு நிறத்தையும், செறிவுமிக்க அமிலத்துடன் பச்சை நிறத்தை யும், மிகுதியான செறிவுள்ள அமிலத்துடன் மஞ்சள் நிறத்தையும் இது கொடுக்கிறது. திண்ம நிலைப் படிகங்கள் பளபளப்பான பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. சாந்த்தேன் சாயங்கள் இப்பிரிவின் மூலப்பொருள் சாந்த்தேன் (xanthen) (டைபென்சோ-1, 4-பைரேன்). இதை ஆக்சிஜனேற்றம் செய்வதால், சாந்த்தேனும், ஒடுக்குவதால், சாந்த்ஹைட்ராலும் (9-ஹைட்ராக்சிசாந்த்தேன்) கிடைக்கும். கனிம அமிலங்களுடன் வினை புரிந்து இது ஆக்சோனியம் உப்புகளைக் கொடுக்கிறது. நிறம் பெருக்கிகளைச் சாந்த்தேனில் 3,6 இடங்களில் புகுத்துவதால் சாயங்கள் கிடைக்கின்றன. பைரோனின் ஜி. அடர் சல்ஃப்யூரிக் அமிலம் உடனிருக்க, ஒரு மூலக்கூறு ஃபார்மால்டிஹைடுடன் இரு மூலக்கூறுகள் m-டைமெத்தில் அமினோஃபீனால் வினை புரிந்து கிடைக்கும் வெள்ளைப் பொருளை (leuco compound) ஃபெர்ரிக் குளோரைடினால் ஆக்சிஜனேற்றம் செய்யும் போது, பைரோனின் ஜி கிடைக்கிறது. நிறம் நிறுத்தப்பட்ட பட்டு, பருத்தித் துணிகளுக்கு இது சாயமூட்டுகிறது. தலியீன் சாயங்கள் அடர் சல்ஃப்யூரிக் அமிலம், துத்தநாகக் குளோரைடு, நீரற்ற ஆக்சாலிக் அமிலம் போன்ற நீரகற்றும் காரணி ஏதாவதொன்று உடனிருக்க, ஃபீனால்களும், தாலிக் நீரிலியும் வினை புரிந்து தலீயீன்களைக் கொடுக்கின்றன. ஃபினால்ஃப்தலீன். இது ஒரு டிரைஃபீனைல் மெத்தேன் பெறுதி. ஆனால், இது சாந்த்தேன் பெறுதியன்று. இயல்புகளிலும், தொகுக்கும் முறையிலும் தலீயீன்களை ஒத்திருப்பதால், இதைத் தலீயீன் வகை எனக் கொள்ளலாம். அடர் சல்ஃப்யூரிக் அமிலம் உடனிருக்க, தாலிக் நீரிலியும், ஃபீனாலும் 120°C வெப்ப நிலையில் வினை புரிந்து ஃபீனாஃப்தலீனைக் கொடுக்கின்றன. இது ஒரு நிறமற்ற படிகம்; நீரில் கரையாதது; அமிலத்தில் நிறமற்றிருக்கும்; காரத்தில் அடர் சிவப்பு நிறத்தைப் பெறும். மிகு செறிவுள்ள காரங்களில் இது மீண்டும் நிறமற்றதாக மாறி விடுகிறது. இது அமில கார முறித்தல் வினையில் காட்டியாகப் பயன்படுகிறது. ஃபுளோரசின். இது ஒரு சாந்த்தேன் பெறுதி. நீரற்ற ஆக்சாலிக் அமிலம் உடனிருக்க, தாலிக் நீரிலி ரிசார்சினாலைச் சேர்த்து 200°Cக்கு வெப்பப்படுத்தினால், ஃபுளோரசீன் கிடைக்கிறது. ஃபுளோரசீன் நீரில் கரையாத செந்நிறப் பொடி. இது காரங்களில் கரைந்திருக்கும் போது, மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் ஒளிர்கிறது. இதன் சோடியம் உப்பு யுரானின் எனப்படும். இது அமிலத்தில் கரைந்த கரைசலிருந்து, நேரடியாகக் கம்பளி, பட்டு ஆகியவற்றில் சாயமேற்றுகிறது. ஆனால், இதன் மஞ்சள் நிறம் கெட்டியாக இருப்பதில்லை. இயோசீன். இது ஃபுளோரசின் பெறுதியாகும்; டெட்ராபுரோமோ ஃபுளோரசின், இயோசின் எனப்படும். கிளாசியல் அசெட்டிக் அமிலக் கரைசலில் கரைந்துள்ள ஃபுளோரசினுடன் புரோமினை வினைப் படுத்தி இது தயாரிக்கப்படுகிறது. இது ஒரு செந்திறப் பொடியாகும். பட்டு, கம்பளி ஆகியவற்றிற்கு நேரடியாகச் சாயமேற்றிச் சிவப்பாக்குகிறது. இயோசினின் நீர்த்த கரைசல்கள் சிவப்பு மையமாகப் பயன்படுகின்றன. அக்ரிடின் சாயங்கள் அக்ரிடின் சாயங்கள் மஞ்சளிலிருந்து ஆரஞ்சு,பழுப்பு நிறம் கொண்ட நேரயனிச் சாயங்களாகும். இவை காலிகோ அச்சிலும், பருத்தி, பட்டு, தோல் ஆகியவற்றிற்குச் சாயமேற்றவும் பயன்படுகின்றன. சில அக்ரிடின் சாயங்கள் மருத்துவத்திலும் பயன்படுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> 3,6 டைஅமினோ அக்ரிடின். m-ஃபீனைலீன் டைஅமீன், கிளிசரால், ஆக்சாலிக் அமிலம், துத்தநாகக் குளோரைடு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வெப்பப்படுத்திக் கிடைக்கும் வெண் சேர்மத்தை ஆக்சிஜ- னேற்றம் செய்வதால் 3,6 டைஅமினோ அக்ரிடின் கிடைக்கிறது. இதன் சல்ஃபேட் புரோஃபிளேவின் என்ற நச்சுக் கொல்லியாகப் (antiseptic) பயன்படுகிறது. இதே போல், அக்ரிஃபிளேவினும் ஒரு முக்கிய நச்சுக் கொல்லியாக உள்ளது. அசீன் சாயங்கள் கியூனின் என்ற அல்க்கலாய்டைப் பெறுவதற்காகப் பண்படா அனிலீன் சல்ஃபேட்டைப் பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் சேர்த்து, ஆக்சிஜனேற்றம் செய்யும் போது, கறுப்பு நிற வீழ்படிவு உண்டாயிற்று. இதை மெத்திலேற்றம் செய்யப்பட்ட சாராயத்தால் பிரித்தெடுக்கும் போது, மாவ் (mavue) என்ற நிறப் பொருள் கிடைத்தது. இது அனிலீன் செம்பழுப்பு (Aniline Purple) அல்லது டைரியன் செம்பழுப்பு எனப்படும். இது மாவைன் (Mauveine) என்றும் கூறப்பட்டது. தொட்டிச் சாயங்கள் இண்டிகோ தொகுதி. இந்தியாவே இண்டிகோவின் (அவுரி நீலம்) பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்ட சாயம். இண்டிகோட்டின் என்பது இதன் உலகளாவிய பெயர். இண்டிகோஃபெரா தொகுதி தாவர இனங்களிலிருந்து முன்பு பெறப்பட்டது. ஆனால், தற்காலத்தில் இது தொகுப்பு முறையில் பெருமளவு தயாரிக்கப்படுகிறது. தாவர இனங்களில் இண்டிகோ, இண்டிகேனாக (இண்டாக்சிலிக் குளுக்கோசைடு) உள்ளது. இதை ஹைட்ரோ குளோரிக் அமிலம் அல்லது பொடியாக்கப்பட்ட தாவரத்திலிருக்கும் நொதிகளால் நீராற்பகுக்கும் போது, இண்டாக்சிலாக மாற்றப்பட்டு வளிமண்டல ஆக்சிஜனேற்றம் அடைவதால், இண்டிகோட்டின் கிடைக்கிறது. தொகுப்பு முறைகள். ஆந்த்ரனிலிக் அமிலத்துடன் குளோரோ அசெட்டிக் அமிலத்தைச் சேர்த்து வெப்பப் படுத்தி விளையும் ஃபீனைல்கிளைசீன் —O— கார்பாக்சிலிக் அமிலத்தைப் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, சோடாமைடு கலவையுடன் சேர்த்துச் சூடு படுத்தும் போது, இண்டாக்சிலிக் அமிலம் கிடைக்கிறது. இதைக் கார்பன் டைஆக்சைடு நீக்கத்திற்குட்படுத்திக் காற்றில் திறந்து வைத்திருந்தால், இண்டிகோட்டின் கிடைக்கிறது. அனிலின் எத்திலீன் ஆக்சைடுடன் வினை புரிந்து N-ஃபீனைல்-2-ஹைட்ராக்சி எத்திலமீனைக் கொடுக்கிறது. இதை 200°C வெப்பநிலையில் சோடியம், பொட்டாசியம் ஹைட்ராக்சைடுகளுடன் சேர்த்து உருக்கும் போது, சோடியம் (பொட்டாசியம்) அல்க்காக்சைடுகள் விளைகின்றன. இந்தச் சோடியம் உப்பைச் சோடாமைடு, சோடியம், பொட்டாசியம் ஹைட்ராக்சைடுகளுடன் சேர்த்து 200°Cக்குச் சூடுபடுத்த N-சோடியோ பெறுதி உண்டாகிறது. 300°C வெப்ப நிலையில் வேகமாக வெப்பப்படுத்தும் போது, ஹைட்ரஜன் நீக்கம் நடை பெறுகிறது. இதை விரைவாக 235° C க்குக் குளிரச் செய்வதால், இணடாக்சிலின் சோடியம் உப்புக் கிடைக்கிறது. இதை நீருடன் சேர்த்துக் காற்றில் திறந்து வைத்தால், இண்டிகோட்டின் உண்டாகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> பண்புகள். இண்டிகோட்டின் கருநீலப் பொடி. இது நீரில் கரையாதது. இதன் பசையைக் காரச் சோடியம் ஹைப்போ சல்ஃபைட்டுடன் சேர்த்துப் பெரிய தொட்டிகளிலிட்டுக் கலக்கும் போது, கரையாத இண்டிகோட்டின், கரையும் வெள்ளைச் சேர்மமாக (indigotin white) மாறுகிறது. சாயமேற்றப்பட வேண்டிய பொருளை இந்தக் காரக் கரைசலில் 4. 5. 6. 7. 8. 9. நனைத்துக் காற்றில் உலர வைத்தால், அப்பொருளில் நீல நிறம் உண்டாகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> இண்டிகோசால் O. இண்டிகோடின் வெள்ளை நெசவு அச்சு வேலைகளுக்கு (textile printing) ஏற்ற தன்று. எனவே இண்டிகோட்டின் இண்டிகோசால் O ஆகப் பின் வருமாறு மாற்றப்படுகிறது: இண்டிகோ வெள்ளைப் பிரிடின் உடனிருக்கக் குளோரோ சல்ஃபோனிக் அமிலத்துடன் வினைப்படுத்தப்படுகிறது. பின்னர், இது இதன் சோடியம் உப்பாக மாற்றப்படுகிறது. இண்டிகோசால் காரக் கரைசல்களிலும் நடுநிலைக் (neutral) கரைசல்களிலும் நிலையானது. ஆனால் அமிலக் கரைசலில் இது நீராற்பகுப்படைந்து இண்டிகோட்டின் வெள்ளையாக மாற்றப்படுகிறது. ஆந்த்ரகுய்னோன் சாயங்கள் அலிசரின், ஆந்த்ரகுய்னோன் சாயங்களில் முக்கியமானதாகும். மாடர் வேரின் (madder root) முக்கியப் பொருளாக இது விளங்குகிறது. அலிசரினின் வேதிப் பெயர் 1,2 டைஹைட்ராக்சி ஆந்த்ரகுய்னோன். தற்காலத்தில், இது தொகுப்பு முறையில் உயர் வெப்ப நிலையில் ஆந்த்ரோகுய்னோனைச் சல்ஃப்யூரிக் அமிலத்தால் ஆக்சிஜனேற்றம் செய்து, பின்னர் அதன் சோடியம் உப்பைச் சோடியம் ஹைட்ராக்சைடு, பொட்டாசியம் பெர்குளோரேட்டுடன் சேர்த்து 180-200°C வெப்ப நிலையிலும், அழுத்தத்திலும் உருக்கும் போது கிடைக்கிறது. அலிசரின் ஒரு சிவப்புப் படிகம்; இதன் உருகு நிலை 290°C. காரக் கரைசல்களில் கரைந்து செம்பழுப்பு நிறங்களைக் கொடுக்கிறது. இது ஒரு நிறம் ஊன்றிச் சாயமாகும். இதன் நிறம் பயன்படுத்தப்படும் உலோகத்தைப் பொறுத்திருக்கிறது. அலுமினியத்துடன் சிவப்பு நிறமும், இரும்புடன் (ஃபெர்ரிக்) கரும் ஊதா நிறமும், குரோமியத்துடன் பழுப்பு ஊதா நிறமும் உண்டாகும். அலுமினியம், இரும்பு ஆகிய அலிசரின் சாயங்கள் பருத்திக்கு நிறமேற்றவும், அச்சுத் தொழிலிலும் பயன்படுகின்றன. டிரைஃபீனைல்மெத்தேன் சாயங்கள் இப்பிரிவுச் சாயங்களில் டிரைஃபீனைல் மெத்தேன் நிறம் கொள் பொருளாகவும் —NH, -NR, OH போன்ற தொகுதிகள் வண்ண மிகைப்பிகளாகவும் உள்ளன. இச்சேர்மங்கள் நிறமற்றிருக்கும். இவை வெள்ளைச் சேர்மங்கள் எனப்படுகின்றன. இச்சேர்மங்களை ஆக்சிஜனேற்றமுறச் செய்வதால், இவை மூவிணைய ஆல்கஹாலாக (tertiary alcohol) மாறுகின்றன. இவற்றிற்கு வண்ணக் காரங்கள் (colour bases) என்று பெயர். இக்காரங்கள் நிறமற்றவையாக இருப்பினும், அமிலத்தில் கரையும் போது, சாயங்களை உண்டாக்குகின்றன. இச்சாயப் பொருள்களில் கினோன் அமைப்பு உண்டு. டிரைஃபீனைல் மெத்தேன் சேர்மங்கள் அடர் நிறங்களைக் கொண்டவை. இவை சூரிய ஒளிபடுவதால், நிறம் மங்கி அழிந்து விடும். இதனால், இவற்றை துணிப் பொருள்களுக்குப் பயன்படுத்த முடியாது. இவை வண்ணக் காகிதம், தட்டெழுத்து நாடா முதலியவற்றிற்குப் பயன்படுகின்றன. சில முதன்மையான தொகுப்புச் சாயங்களும், அவற்றின் சிறப்பியல்புகளும் பயன்களும் அட்டவணை 2 இல் கொடுக்கப்பட்டுள்ளன. —மே.ரா. பாலசுப்பிரமணியன் —வி.எஸ். சுப்பிரமணியன் —த. தெய்வீகன் நூலோதி. I.L. Finar. Organic Chemistry, Vol.I, Sixth Edition, ELBS, London, 1973; Β.Ρ.Corbman, Textiles, Fourth Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985.