இரிச்சு மார்கரட் எல்டன்
iriccu mārkaraṭ elṭaṉ
வாழ்க்கைப் பின்னணி ஆய்வாளர்களுள் ஒருவர் ஆவார்.
வாழ்க்கைப் பின்னணி ஆய்வாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் குடும்பச் சமூகப் பணியில் 50 ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார்; ‘குடும்பச் சமூகப் பணியின் வரலாறு’ என்னும் நூலை இயற்றினார்.
இரிச்சு மார்கரட் எல்டன் (Rich, Margaret Elden) போர்ட்லாந்து என்னுமிடத்தில் பிறந்தார். இராடுகிளிப்புக் (Radcliff) கல்லூரியில் தம் பட்டப் படிப்பை 1907–ஆம் ஆண்டில் முடித்தார், பின்னர்ப் பாசுடன் அறக்கட்டளைக் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளராகவும், 1915–ஆம் ஆண்டு முதல் 1918-ஆம் ஆண்டு வரை நியூட்டன் குடும்பப் பணி மன்றத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் 1919–ஆம் ஆண்டில், அமெரிக்கக் குடும்பப் பணி மன்றத்தில் பணி ஏற்றுப் பல ஆண்டுகள் பணியாற்றினார். இம்மன்றத்தில் இயக்குநராகவும், ‘குடும்பம்’ என்ற இதழின் பதிப்பாசிரியராகவும் பொறுப்பேற்ற பொழுது, குறிப்பிடத்தக்க தொண்டுகள் செய்தார், மில்போர்டு மாநாட்டு அறிக்கையை எழுத உதவி செய்தார். இவ்வறிக்கை வாழ்க்கைப் பின்னணி பணிக்கோட்பாடுகளின் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தது. தாம் ஓய்வுபெறும் காலம்வரை பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தார். இவர் ஓய்வு பெற்ற பிறகு, 1952–ஆம் ஆண்டில், அமெரிக்கக் குடும்பப் பணி நிறுவனம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடும்பப் பணி வரலாற்றை எழுதுமாறு கேட்டுக்கொண்டது. இவர் இவ்வரலாற்றைத் தாம் இறப்பதற்கு ஒரு வார காலத்திற்கு முன்பு எழுதிக் கொடுத்தார். இரிச்சு சமூகப் பணியில் காட்டிய ஈடுபாடு மிகுதியான பாராட்டுகளைப் பெற்றது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 173)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yxv7xync/
தமிழ்“இரிச்சு மார்கரட் எல்டன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yxv7xync/APA
Oliyon Research. (2026). இரிச்சு மார்கரட் எல்டன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yxv7xync/MLA
"இரிச்சு மார்கரட் எல்டன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yxv7xync/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment