உயர்பொருட்பேறு
uyarporuṭpēṟu
காலப்போக்கில் ஒரு மொழியில் காணப்பெறும் சொற்களின் பொருளில் ஏற்படும் மாற்றம் சொற்பொருள் மாற்றம் (Semantic Change) எனப்படும்.
காலப்போக்கில் ஒரு மொழியில் காணப்பெறும் சொற்களின் பொருளில் ஏற்படும் மாற்றம் சொற்பொருள் மாற்றம் (Semantic Change) எனப்படும். மொழியில் இழிந்த பொருளில் வழங்கிய ஒரு சொல் பின்னர் உயர்ந்த பொருளில் வழங்கப்பெறும் உயர்பொருட்பேறு (Elevation) சொற்பொருள் மாற்றங்களின் வகைகளுள் ஒன்றாகும்.
தமிழ்மொழியில் ‘கழகம்’ என்னும் சொல் முன்னர்ச் சூதாடுமிடத்தினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இக்காலத்தில் இது குழு (Association) அல்லது கூட்டத்தினைக் குறிக்கப் பயன்படுகிறது. இதனைப்போன்றே ‘களிப்பு’ என்னும் சொல் மது உண்டமையால் ஏற்படும் மனமகிழ்ச்சி நிலையினை மட்டும் குறிக்கப் பயன்படுத்தப்பெற்று, இக்காலத்தில் பொதுவாக அனைத்து நிலைகளிலும் உண்டாகும் மனமகிழ்ச்சியினைக் குறிக்குஞ் சொல்லாக, உயர் பொருளில் ஆளப்பட்டு வருகிறது. இங்ஙனம் இழி பொருளைக் குறிக்கும் ஒரு சொல், அப்பொருளை இழந்து உயர்பொருளைப் பெறுவதே உயர்பொருட்பேறு என்பதாகும்.
ஈண்டுக் ‘கழகம்’, ‘குழு’ என்னும் இரு சொற்களுக்கிடையே பொருண்மை நிலையில் காணப்பெறும் ஒற்றுமையே இத்தகைய பொருள் மாற்றத்திற்குக் காரணமாக அமைகிறது. ஒரு குழுவிலுள்ள அங்கத்தினர்கள் கழகத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தமையால் ‘கழகம்’ என்ற சொல் பொருண்மை நிலையில் மாற்றம் பெற்று உயர்பொருளில் வழங்கலாயிற்று. ஈண்டுச் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றமே இத்தகு பொருள் மாற்றத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஏ.ஆ.
துணை நூல்கள்
Reddy, G.N., A Study of Telugu Semantics, Sri Venkateswara University, Tirupati, 1966.
Ullmann, S., Semantics: An Introduction to the Science of Meaning, Blackwell, Oxford, 1962.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 968)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yurv7fjh/
தமிழ்“உயர்பொருட்பேறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yurv7fjh/APA
Oliyon Research. (2026). உயர்பொருட்பேறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yurv7fjh/MLA
"உயர்பொருட்பேறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yurv7fjh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment