புகழேந்திப் புலவர்
pukaḻēntip pulavar
பொருள்கள் · Senses
1.
தொண்டை மண்டலத்தில் பொன் விளைந்த களத்தூரில் வேளாளர் மரபில் உதித்தவர். வைணவ சமயத்தினர். மதுரைப் பாண்டியனிடம் சமஸ்தானப் புலவராகத் திகழ்ந்தவர். மள்ளுவ நாட்டு மன்னனாகிய சந்திரன் சுவர்க்கியினாலும் ஆதரிக்கப்பட்டவர். நளவெண்பா என்னும் நூலைப் பாடியவர், "வெண்பாவில் புகழேந்தி" என்று சிறப்பிக்கப்பட்டவர். இரத்தினச் சுருக்கம் என்னும் நூலையும் பாடியுள்ளார். ஒட்டக்கூத்தர் பேச்சைக் கேட்டுக் குலோத்துங்கன் இவரைச் சிறையில் இட்டனர் என்றும்,அந்தத்தருணம் நங்கைமார்களின் பொருட்டு அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை புலந்திரன் களவு மாலை முதலான நூற்களைப் பாடியதாகவும் கூறுவர். காலம் 13 ஆம் நூற்றாண்டு. பல தனிப்பாடல்கள் இவர் பாடினவாகக் கருதப்படுகின்றன.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ysv9dp77/
தமிழ்“புகழேந்திப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ysv9dp77/APA
Oliyon Research. (2026). புகழேந்திப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ysv9dp77/MLA
"புகழேந்திப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ysv9dp77/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment