அஞ்சுவண்ணம்
añcuvaṇṇam
இடைக்காலத் தமிழகத்தில் செயற்பட்டுவந்த வாணிகக் குழுக்களுள் ஒன்று.
இடைக்காலத் தமிழகத்தில் செயற்பட்டுவந்த வாணிகக் குழுக்களுள் ஒன்று. டாக்டர் குண்டர்ட்டு, டாக்டர் பர்னால் என்ற அறிஞர்கள் சேரநாட்டில் யூதர்கள் வாழ்ந்த பகுதி அஞ்சுவண்ணம் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். எல்லிசு என்ற அறிஞர், இது ஐந்துவகை உரிமைப் பட்டங்களை உணர்த்தும் சொல் என்று கூறுகிறார். அறிஞர்சிலர் இது தன்னுரிமை பெற்றிருந்த ஒரு வணிகக்குழு என்று கருதுகின்றனர். சிலர் இப்பெயர் ஐந்து வகைச் சாதியாரைக் குறிக்கிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அஞ்சுவண்ணம் என்பது கிறித்தவ வணிகக்குழு எனச்சிலர் கருதுகின்றனர். ‘பல்சந்தமாலை’ என்னும் நூலின் மூலம், அஞ்சுவண்ணத்தார் என்போர் இசுலாமிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. தஞ்சை மாநகரிலுள்ள சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள பழைய பாடல் திரட்டொன்று, அஞ்சுவண்ணம் என்பது, கிழக்குக் கடற்கரையிலுள்ள நாகப்பட்டினத்தில் வாணிகம் செய்யும் பொருட்டுத் தங்கியிருந்த முகம்மதியர் குழுவினைக் குறிக்கிறது என்று கூறுகிறது.
துணை நூல்
தி.வை. சதாசிவப்பண்டாரத்தார், “கல்வெட்டுகளால் அறியப்பெறும் உண்மைகள்”, தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1963.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 201)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yrhqt9g2/
தமிழ்“அஞ்சுவண்ணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yrhqt9g2/APA
Oliyon Research. (2026). அஞ்சுவண்ணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yrhqt9g2/MLA
"அஞ்சுவண்ணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yrhqt9g2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment