ஓர் ஆறு. அயோத்தியில், இந்த ஆற்றை இக்காலத்தில் இராப்தி என்பர். பௌத்த சமய இலக்கியத்தில் போற்றப்பெறும் புனித ஆறுகளுள் ஒன்று. இந்த ஆறு கோசல நாட்டின் கடைசித் தலைநகரான சிராவசுதி என்னும் பண்டைய நகரத்தின் மேற்கே ஓடுகிறது. இந்த ஆற்றங்கரையில் அமைந்திருந்த மனசாகேதா என்னும் மாந்தோப்பில் புத்தபிரான் தங்கியிருந்ததாகக் கூறுவர்.