அகப்பிரதிபலிப்பு
akappiratipalippu
ஓர் ஒளிக்கதிர் ஒளி அடர்த்தி அதிகமான ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஊடகத்தை அடைந்தால் லம்பத்திலிருந்து விலகிக் கோட்டமடைகிறது.
ஓர் ஒளிக்கதிர் ஒளி அடர்த்தி அதிகமான ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஊடகத்தை அடைந்தால் லம்பத்திலிருந்து விலகிக் கோட்டமடைகிறது. ஆகையால் கோட்டமடையும் கதிரின் படுகோணத்தை (ANGLE OF INCIDENCE) விடக் கோட்டக் கோணம் பெரிதாக இருக்கும். படுகோணம் அதிகமாக அதிகமாகக் கோட்டக் கோணமும் அதிகரித்துக்கொண்டே வரும். படுகோணம் குறிப்பிட்ட அளவை அடையும்போது கோட்டக்கோணம் 900 ஆகும். இப்போது ஒளிக் கதிரானது இரு ஊடகங்களையும் பிரிக்கும் பரப்பைத் தொட்டுச் செல்லும். படுகோணத்தின் இந்த அளவு அதன் அவதி அளவு (CRITICAL VALUE) எனப்படும். படுகோணம் அவதி அளவைவிட அதிகமானால் ஒளிக்கதிர் பிரிவுப் பரப்பை அடைந்து இரண்டாம் ஊடகத்தில் நுழைவதற்குப் பதிலாக முதல் ஊடகத்திலேயே பிரதிபலிக்கும். இவ்விளைவு அகப் பிரதிபலிப்பு எனவும், இது முதன்முதல் நிகழும் படுகோணம் அவதிக் கோணம் எனவும் கூறப்படும்.
படத்தில் SOS1 க்கு மேல் பக்கத்தில் உள்ள ஊடகத்தைவிடக் கீழேயுள்ளது ஒளி அடர்த்தி குறைவான ஊடகம். SOS1 என்பது பிரிவுப் பரப்பு. NON1 என்பது பரப்பிற்கு வரையப்படும் லம்பம். I2 என்பது படுகதிராயின் OR1 என்பது கோட்டக்கதிர். இது பிரிவுப் பரப்பைத் தொட்டுச் செல்கிறது. இதைவிடப் பெரிய கோணத்தில் பரப்பின்மேல் படும் I3O அகப்பிரதிபலிப்பிற்கு உள்ளாகி OR3 என்ற பிரதிபலிப்புக்கதிராக முதல் ஊடகத்திலேயே திரும்பிச் செல்கிறது. இப்போது I2ON என்ற கோணம் அவதிக் கோணமாகும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 45)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yk2rdcww/
தமிழ்“அகப்பிரதிபலிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yk2rdcww/APA
Oliyon Research. (2026). அகப்பிரதிபலிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yk2rdcww/MLA
"அகப்பிரதிபலிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yk2rdcww/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment