உயிரியல்கல்வி மையம்
uyiriyalkalvi maiyam
இந்தியாவிலேயே முதன்முதலாக உயிரியல் கற்பிக்கும் கல்லூரி ஆசிரியர்களின் திறன்களை வளர்க்கும் நோக்கத்துடன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 1985–இல் தொடங்கப்பெற்றது.
இந்தியாவிலேயே முதன்முதலாக உயிரியல் கற்பிக்கும் கல்லூரி ஆசிரியர்களின் திறன்களை வளர்க்கும் நோக்கத்துடன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 1985–இல் தொடங்கப்பெற்றது. இது இப்பல்கலைக்கழகத்தின் உயிரியல் புலத்தில் செயற்பட்டு வருகிறது. இது அறிவியல் கல்வி மேம்பாட்டுக்கான ஒரு தேசிய கல்வி மையமாகும்.
இவ்வுயிரியல் கல்வி மையம் (Biology Education centre) அறிவியலில் புதிய கல்வித் திட்டங்களை உருவாக்கவும், ஆய்வகங்களை உருவாக்கி அவற்றைச் செம்மையாகப் பயன்படுத்தவும், கணிப்பொறி, காட்சி கேள்வித் துணைக் கருவிகள் ஆகியவற்றை அறிவியல் கற்பித்தலில் பயன்படுத்தவும் நாட்டின் பலபகுதிகளிலும் உள்ள கல்லூரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.
அறிவியல் ஆசிரியர் ஒருவர் தம் புதிய கருத்தைச் சோதித்தறிய விழைவாரானால், அதற்கான அனைத்து வசதிகளும் இக்கல்வி மையத்தில் அவருக்குச் செய்து தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 984)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yjejjsjs/
தமிழ்“உயிரியல்கல்வி மையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yjejjsjs/APA
Oliyon Research. (2026). உயிரியல்கல்வி மையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yjejjsjs/MLA
"உயிரியல்கல்வி மையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yjejjsjs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment