சாய்தளம்
cāytaḷam
பொறியியல் அமைப்புகளில் தளங்கள் படுகைகளாகப் பயன்படுகின்றன.
பொறியியல் அமைப்புகளில் தளங்கள் படுகைகளாகப் பயன்படுகின்றன. பொறிகளில் அடிப்பகுதியாகவும், ஆதாரமாகவும் விளங்கும். இத்தளங்கள் இயக்கத்திற்கு ஏற்றவாறு கிடைமட்டமாகவோ, சற்றுச் சாய்வாகவோ இருக்கும். திட்ட வடிவமைப்பின் மூலம் சாய்தளமாக அமையும் பரப்புகள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருக்கும்.
படம் 1 இல் காட்டியவாறு ஒரு பொருள் கிடை மட்டப் பரப்பில் இருப்பதாகக் கொள்ளலாம். பொருளுக்கும், பரப்பிற்கும் உள்ள உராய்வு குணகம் μ என்றிருக்கும். பொருளின் எடை கீழ்நோக்கி W என்றும், கிடைமட்ட விசை F என்றும் இருந்தால், பொருள் நகர்வதில்லை. கிடைமட்ட விசை F=μW என்னும் நிலைக்கு வந்தால்தான் பொருள் நகரும். ஆனால் பொருள் நகர்வதற்கு முன்னால் இப்பொருள் சமநிலையில் இருக்க கிடைமட்ட விசை F, உராய்வற்ற எடை விசை W, செங்குத்து விசை ஆகிய மூன்றும் சேர்ந்து பொருளைச் சமநிலையில் வைத்திருக்கும். இவ்விசைகளின் தொகு பயன் (resultant) R செங்குத்து விசைக்கு α என்ற கோணத்தில் இருப்ப தாகக் கொள்ளலாம். கிடைமட்ட விசை F அதிகரித்தால், கோணம் α அதிகரித்துத் தளத்தில் நகரக் கூடும் இந்நிலையில் F=μ.W; tan α = F/W = μ.
இப்போது சாய்தளம் (inclined plane) படம் 2இல் உள்ளவாறு ஏதேனும் ஒரு கோணத்தில் அமைந்தால் பொருளில் ஏற்படும் விசையும் படத்தில் உள்ளவாறு இருக்கும். தளத்தில் கோணம் எதுவாக இருந்தாலும், எடை விசை W இரண்டு பிரிவுகளாகப் பெறப்படும். (அ) தளத்திற்கு இணையாக W Sin α. இது பொருளைக் கீழ் நோக்கி நகரச் செய்யும். (ஆ) தளத்திற்குச் செங்குத்தாக WCos α. இது தளத்திற்கும் பொருளுக்கும் இடையேயுள்ள செங்குத்து எதிர் விசைக்குச் (normal reaction) சமன் செய்யும். தளத்திற்குக் கீழ் நோக்கி இருக்கும் விசையின் பகுதி உராய்வு விசையின் வரம்பிற்குச் சமமாகும் போது பொருள் நகரக் கூடும். அதாவது W Sin α= FCos α அல்லது tan α=μ எனவே, இந்நிலையில் தளத்தின் கோணம் α உராய்வு வரம்புக் கோணம் (limiting friction angle)Φக்குச் சமமாக இருக்க வேண்டும். ∴ α = Φ
இந்நிலையில் எதிர் வினை R எடை விசை Wக்குச் சமமாகவும், எதிர்த் திசையாகவும் இருக்கும். ஆகையால், எதிர் வினை தளத்தின் செங்குத்து அச்சுக்கு Φ என்ற கோணத்தில்தான் இருக்க வேண்டும். இந்நிலையில் பொருள் நகர்ந்து விடும்.
பெரும்பாலான பொறி அமைப்புகளில் சாய்தளங்கள் பயன்படுகின்றன. விசை, பொருளின் மீது செலுத்தப்படும் போது, பொருள் சீரான திசை வேகத்தில் தளத்திற்கு இணையாக நகரும். இதில் பொருள், விசையின் திசைக்கேற்ப மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ நகரலாம். இந்நிலையில் தளத்தின் மீது உள்ள பொருளில் ஏற்படும் விசைகளின் நிலை, படம் 3இல் விளக்கப்பட்டுள்ளது. சாய்தளத்தை ஓர் எந்திரத்திற்குச் சமமாகக் கருதினால், அந்த எந்திரத் திறன் (அ) பொருள் மேல் நோக்கி நகரும் போது
திறன், η = என்றும்,
ஆ) பொருள் கீழ் நோக்கி நகரும் போது
திறன் η = என்றும் அமையும். —கே. ஆர். கோவிந்தன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 62)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ybxjn77r/
தமிழ்“சாய்தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ybxjn77r/APA
Oliyon Research. (2026). சாய்தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ybxjn77r/MLA
"சாய்தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ybxjn77r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment