மலேசியாவில் கெட்டா (Keddah) என்னும் அரசின் தலைநகரம். இது மலாயா முந்நீரகத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கெட்டா ஆற்றங்கரையின்மீது அமைந்துள்ள அலோர் இசுடார் (Alor Star) நகரம் பினாங்கு (Penang) என்னும் ஊருக்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூருக்கும் அதன் தெற்திலுள்ள கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இருப்புப்பாதைத் தொடர்புண்டு. வடக்கே தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கு மாநகருக்கும் இதுபோல் இருப்புப்பாதைத் தொடர்புண்டு. மக்கள்தொகை 71,682 (1980).