அர்ச்சுனர் குரு
arccuṉar kuru
சீக்கியர்களின் ஐந்தாம் குரு.
சீக்கியர்களின் ஐந்தாம் குரு. குரு இராமதாசரின் மூன்றாம் மகன். அர்ச்சுனர் சீக்கிய மக்களை ஒன்றிணைத்த குருமார்களுள் தலை சிறந்தவர். இவர் கி.பி. 1581 முதல் கி.பி. 1606 வரை சீக்கிய குருவாய் இருந்தார். ‘ஆதி கிரந்தம்’ என்னும் சீக்கியரின் புனித நூலைத் தொகுக்கும் பணியினை மேற்கொண்டவரும் இவரே யாவார். இவர் காலத்தில் சீக்கிய சமயம் விரைந்து பரவியது. பிற சமயத்தவர்களை இவர் குறைகூறிப் பேசுகிறார் என்று சிலர் மொகலாயப் பேரரசர் அக்பரிடம் முறையிட்டனர். அக்பர் அதனைப் பொருட்படுத்தவில்லை. கி.பி. 1606–ஆம் ஆண்டில் சகாங்கீருக்கும் (Jahangir) அவர் மகன் குசுருவிற்கும் (Khusru) நடந்த சிக்கலில் குசுருவிற்காக வருந்திய குரு அர்ச்சுனர் அவருக்கு 5,000 உரூபா உதவி அளித்தார். சினம் கொண்ட சகாங்கீர் 2 இலட்சம் உரூபா தண்டம் செலுத்துமாறு இவருக்கு ஆணையிட்டார். இவருடைய மாணவர்கள் அதனை அளிக்க முன் வந்தும், அப்பணத்தை அர்ச்சுனர் கட்ட மறுத்ததால், சகாங்கீர் இவரை இலாகூர்ச் சிறையிலடைத்துத் துன்புறுத்திக் கொன்றார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 600)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yaf8a3kq/
தமிழ்“அர்ச்சுனர் குரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yaf8a3kq/APA
Oliyon Research. (2026). அர்ச்சுனர் குரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yaf8a3kq/MLA
"அர்ச்சுனர் குரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yaf8a3kq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment