படிகத் திசை சார் நிறத் தன்மை
paṭikat ticai cār niṟat taṉmai
சில ஒளி புகும் படிகங்கள் வழியே சம தள முனைவாக்கமுற்ற வெள்ளை ஒளிக் கற்றை ஊடுருவிச் செல்லும் போது, படிகம் ஒளிப் பாதையை அச்சாகக் கொண்டு சுழற்றப் பட்டால், படிகத்தில் இருந்து வெளிப் படும் கற்றையின் நிறம் மாறுபடும் இப்பண்பு, படிகத் திசை சார் நிறத் தன்மை.
சில ஒளி புகும் படிகங்கள் வழியே சம தள முனைவாக்கமுற்ற வெள்ளை ஒளிக் கற்றை ஊடுருவிச் செல்லும் போது, படிகம் ஒளிப் பாதையை அச்சாகக் கொண்டு சுழற்றப் பட்டால், படிகத்தில் இருந்து வெளிப் படும் கற்றையின் நிறம் மாறுபடும் இப்பண்பு, படிகத் திசை சார் நிறத் தன்மை. (pleochroism) எனப் படும்.
ஒளி ஊடுருவும் படிகத்தின் ஒரு புறமிருந்து, சம தள விளைவுற்ற வெள்ளை நிற ஒளிக் கற்றை ஒன்று, படிகத்தினுள் ஊடுருவியதாகக் கருதலாம். படிகத்தின் மறு புறம் வழியாக வெளி வரும் இக்கற்றை, ஒரு குறிப்பிட்ட நிறத்தைப் பெற்றிருக்கும். இப்போது படிகத்தை மட்டும் சுழற்ற, வெளி வரும் ஒளிக் கற்றையின் நிறம் மாறு படும். சில படிகங்களே பெற்றுள்ள இப்பண்பிற்குப் படிகத்தின் திசை சார் நிறத் தன்மை எனறு பெயர். இவ்வகைப் படிகங்கள், ஊடுருவும் ஒளிக் கற்றையில் உள்ள சில நிறக் கதிர்களை மட்டும் உட்கவர்வதால், இவ்விளைவை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு உட்கவரப் படுதல், கதிர்களின் அதிர்வுறு தளத்தையும், அவை படிகத்தினுள் பரவும் திசையையும் சார்ந்துள்ளது. மேலும், ஒரே அதிர்வுறு தளத்தைக் கொண்டும், ஒரே திசையிலும் பரவும் பல நிறக் கதிர்கள் ஒரே அளவில் படிகத்தால் உட்கவரப் படுவதில்லை. படிகங்கள் பெற்றுள்ள இப்பண்புகளே அவற்றின் திசை சார் நிறத் தன்மைக்குக் காரணம் ஆகும்.
எடுத்துக் காட்டாக, கார்டியரைட் படிகத்தின் வழியே, சம தள தள விளைவுற்ற வெள்ளை நிற ஒளிக் கற்றை ஒன்று, ஒரு குறிப்பிட்ட திசையில் ஊடுருவதாகக் கொள்ளலாம். ஒளிக் கதிர்களின் அதிர்வுகள், படிகத்தில் ஏதேனும் ஒரு தளத்திற்கு மட்டும் இணையாக அமையும். இந்நிலையில் வெள்ளை ஒளி நிற மாலையின் மையப் பகுதியில் உள்ள நிறங்கள் மட்டும் உட்கவரப் படுவதால், படிகத்தை மறு புறமிருந்து பார்க்கும் போது, அது ஊதா சூழ்ந்த நிறமுடையதாகக் காட்சியளிக்கும். இப்போது, ஒளி பரவும் திசையை அச்சாகக் கொண்டு, படிகம் மட்டும் சுழற்றப் படலாம். இதன் காரணமாக, ஊடுருவும் ஒளிக் கற்றையின் அதிர்வுகள், படிகத்தின் வேறு ஒரு தளத்திற்கு இணையாக அமைகின்றன. இப்போது, வெள்ளை நிற ஒளிக் கற்றையால் ஊடுருவப் படும் கார்டியரைட் படிகம், ஒளி பரவும் திசையை அச்சாகக் கொண்டு சுழற்றப் படும் போது, அதன் நிறம் ஆழ்ந்த ஊதா நிறத்திலிருந்து, மஞ்சள் நிறமுடையதாக மாறு படும். இந்நிற மாறுபாடு, படிகத்தின் சுழற்சிக் கோணத்தையும் சார்ந்துள்ளது. படிகம் பெற்றுள்ள இப்பண்பு படிகத்தின் திசை சார் நிறத் தன்மை ஆகும். சில படிகங்களே இப்பண்பினைப் பெற்றுள்ளன. —கோ. மணிவண்ணன் துணை நூல். F.Donald Bloss, Crystallography and Crystal Chemistry–An introduction, Holt Rine Hart and Winston Inc., New York, 1971.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 485)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ya7c8x8v/
தமிழ்“படிகத் திசை சார் நிறத் தன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ya7c8x8v/APA
Oliyon Research. (2026). படிகத் திசை சார் நிறத் தன்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ya7c8x8v/MLA
"படிகத் திசை சார் நிறத் தன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ya7c8x8v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment