அகத்திணையைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமை பெற விளக்குகிறது. சங்க இலக்கிய விளக்கத்திற்கு அதுவே சிறந்த வழி காட்டியாகும். பின்னர் எழுந்த இறையனார் அகப் பொருளுரை, இடைக்கால வளர்ச்சியை - மரபு மாற்றத்தைக் காட்டுகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் மூவரும் தொடர்ந்து வந்த மரபுவழி விளக்கங்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர். வீரசோழியம் இடைக்கால மரபு வழியில் விளக்கம் தருகிறது. அடுத்துத் தமிழ் நெறி விளக்கம் (25 நூற்பாக்களே கிடைத்துள்ளன), இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், அறுவகை இலக்கணம் என்பன மரபு வழியிலும் மரபினின்று சற்றே விலகியும் அகத்திணையை விளக்குகின்றன. நம்பியகப் பொருள் கோவை நூல்களின் இலக்கண நூல் போல அமைந்து இடைக்கால நூல்களுள் சிறந்து விளங்குகிறது.மாறனகப் பொருளும் இவ்வரிசையில் குறிக்கத்தக்கதாகும். இராம.பெ. துணை நூல்கள் “தொல்காப்பியம்: பொருளதிகாரம்”-இளம்பூரணம், - நச்சினார்க்கினியம் (கழகப் பதிப்புகள்). “இறையனார் களவியலுரை”-(கழகப் பதிப்பு).