கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கவிஞருள் ஒருவர். இவர் கொங்கு நாட்டிலுல்ல கரடிவாவியைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் வேங்கடப் பிரசங்கியார். இவர் தம் இருபத்தைந்தாம் அகவைக்கு மேல் பல்வேறு இடங்களுக்கும் சென்று கற்று இலக்கண, இலக்கியப் புலமை நிரம்பப் பெற்றார். இவர் தாம் கற்றனவற்றைப் பிறர்க்கு அன்போடு வழங்கும் பெருமனம் படைத்தவர். காரமடைத் தல புராணம், சத்திரிய புராணம், சத்தியோபாய் சசித்திரம், சடாசன நியமனம் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.