நூல் இயக்கப் பண்பு
nūl iyakkap paṇpu
நீளுதல், வளைதல், சுருங்குதல் போன்ற பண்புகளை உடைய நூல் பின் வரும் ஆய்வுகளுக்குப் பின்னர், தரம் பிரிக்கப் படுகிறது.
நீளுதல், வளைதல், சுருங்குதல் போன்ற பண்புகளை உடைய நூல் பின் வரும் ஆய்வுகளுக்குப் பின்னர், தரம் பிரிக்கப் படுகிறது. இவ்வகை ஆய்வுகள் வருமாறு: அறுபடும் ஆற்றல் (breaking load), முறுக்கு (twist perinch), ஈரம் ஈர்ப்பு (yarn humidity), முறையான அமைப்பு (yarn regularity), சீரான குறுக்களவு (yarn diameter) .
அறுபடும் ஆற்றல். குறிப்பிட்ட நீளமுள்ள நூல் குறிப்பிட்ட எடையையே தாங்கும். அதன் எடை மிகுந்தால், நூல் அறுந்து விடும். அவ்வாறு, எந்த எடையில் நூல் அறுபடுகிறதோ, அதுவே நூலின் அறுபடும் ஆற்றல் எனப் படுகிறது. ஒற்றை இழையாக நூல் அறுபடும் ஆற்றலைக் கண்டு பிடிக்கும் முறைக்கு, ஒற்றை இழை அறுபடும் ஆற்றல் (single yarn breaking strength) முறை எனப் பெயர். 120 கெஜத்தை சட்டத்தில் சுற்றி, அதன் அறுபடும் ஆற்றலைக் கண்டறியும் முறை லீ அறும் ஆற்றல் (Lea strength) எனப் படும்.
நூலின் முறுக்கு. குறிப்பிட்ட அளவில் நூலின் மையத்தைச் சுற்றியுள்ள முறுக்கு நூல் முறுக்கு எனப் படும். இதில் இரு வகைகள் உள்ளன. அவை ‘Ƶ’ முறுக்கு, ‘S’ முறுக்கு என்பன.
ஈரம் ஈர்ப்பு. ஒவ்வொரு வகையான நூலும், வெவ்வேறு அளவுகளில் ஈரம் ஈர்க்கும் ஆற்றல் உடையதாக இருக்கும். பொதுவாகப் பருத்தி நூல்கள் மிகையளவில் ஈரம் ஈர்க்கும் ஆற்றல் உடையவை.
எனவேதான், பருத்தி ஆடைகள் நனைந்த பிறகு, உலர்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது. பாலி எஸ்ட்டர் நூல் ஈரத்தை மிகையளவில் ஈர்க்காது.
சரியான அமைப்பு. நூலின் குறுக்களவு ஒரே அளவாக இருத்தல் வேண்டும். அவ்வாறு உள்ள நூல், சரியான குறுக்களவுள்ள நூல் எனப் படும். மாறாக, குறுக்களவு மாறி, மாறி உள்ள நூல் காண்பதற்குச் சீராக இராமலும், எளிதில் அறுபடும் ஆற்றலைப் பெற்றுமிருக்கும். அதனால் தறியிலோ, பிற பயன்பாட்டின் போதோ நூல் அடிக்கடி அறுந்து விடும்.
1. நூலின் குறுக்களவு (அங்குலத்தில்) =
2. நூலின் குறுக்களவு (மி.மீட்டரில்) = மேலும் நூலின் குறுக்களவில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதன் பண்புகளிலும் மாற்றம் ஏற்படும். —தி.அ. வெங்கடாசலம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 128)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xv3xzhn4/
தமிழ்“நூல் இயக்கப் பண்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xv3xzhn4/APA
Oliyon Research. (2026). நூல் இயக்கப் பண்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xv3xzhn4/MLA
"நூல் இயக்கப் பண்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xv3xzhn4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment