உயர்வு

uyarvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறப்பு, புகழ் — eminence, distinction
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயர்வு)
2.
மக்களால் வரும் பெருமை, மேம்பாடு, (குறள் 135); உயர்ச்சி, பொருள் படைகளால் மிகுதல், (குறள் 595); உயர்ச்சியையே, (குறள் 596); நல்ல உயரத்தை (குறள் 743) [பரிதியார் உரை ‘பணியாமை தன்மை குறைவு படாமல் ஒழுகல்; தாழ்ச்சி சொல்லாமல் கனமாயிருத்தல் வேண்டும்’ என்று கூறுகிறது; கனம், பெருமை, (குறள் 963)]; [‘சொல் வளம் குறுகி விட்ட ஒரு வறியர், பிறரிடம் மிக உயர்வாக நடந்து கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறது நாவலருரை, (குறள் 963)].
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 74)
3.
குறித்த அளவுக்கு முழு எண்ணை மதிப்பில் உயர்த்தும் பயனிலையும் பெயர்ச் சொல்லும் — increment
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 126)
4.
1) பணவீக்கத்தால் இருப்பின் மதிப்பு கூடுதல் 2) நாணயத்தின் மதிப்பு கூடுதல் ஒ, depreciation — appreciation
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 20)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xtfsm6mn/

தமிழ்
“உயர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xtfsm6mn/
APA
Oliyon Research. (2026). உயர்வு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xtfsm6mn/
MLA
"உயர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xtfsm6mn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment