ஆன்ம தரிசனம்

āṉma taricaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆன்மக் காட்சி. பத்துச் செயல்களுள் ஒன்று. பசு கரணமும் சுட்டறிவும் நீங்கித் தன்னை உள்ளவாறு காணல். ஆன்ம நிலை . இது மூன்று. அவை பின்வருமாறு: 1. கேவல நிலை : ஆணவத்தோடு மட்டும் ஆன்மா இருக்கும். இதில் ஆன்மா சிறிதும் அறிவின்றிப் பருப்பொருள்போல் இருக்கும். 2.சகல நிலை : மும்மலங்களும் சேர்ந்திருக்கும் நிலை. இதில் ஆன்மா அறிவைச் சிறிது பெற்று உலகியலில் ஈடுபடும். வினைகளை அது ஈட்டுதலும் அவற்றின் பயனை நுகர்தலும் இந்நிலையிலேயே. இந்நிலையில் ஆன்மா ஒன்றையறிதலும் அறிந்ததை மறத்தலும் ஆகிய இரண்டினையும் உடையது. அந்நினைப்பு மறப்புகளையும் நூல்களில் சகலம், கேவலம் என்பர். இந்நிலையில் ஆன்மாவிற்கு வரும் உறக்கம், விழிப்பு ஆகிய இரண்டும் முறையே கேவலம் சகலம் எனப்படும். இவற்றுள். விழிப்பு நிலை மகா சகலம் அல்லது மாசகலம் எனப்படும். காரிய அவத்தை ஐந்தனுள் சாக்கிரம் எனப்படுவது இதுவே. 3.சுத்த நிலை : இது ஆன்மா தூய்மைபெறும் நிலை. கேவலம், சகலம், சுத்தம் ஆகிய மூன்றும் காரண அவத்தைகள். சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய ஐந்தும் காரிய அவத்தைகள்.பா. ஆன்ம அவத்தை ,அவத்தை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 54)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xt9rzk42/

தமிழ்
“ஆன்ம தரிசனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xt9rzk42/
APA
Oliyon Research. (2026). ஆன்ம தரிசனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xt9rzk42/
MLA
"ஆன்ம தரிசனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xt9rzk42/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment