அயிரை
ayirai
ஓர் ஆறு (சிலப். 28 : 145); ஒரு மலை (பதிற்.
ஓர் ஆறு (சிலப். 28 : 145); ஒரு மலை (பதிற். 21) ; ஒருவகை மீன் (புறம்.67; ஐங். 164).
அயிரை
(அசரை) (Lepidocephalichthys thermalis) மிகச் சிறிய மீன். 1-2 அங்குல மிருக்கும். குளங்களிலும் மணற்பாங்கான படுகையுள்ள ஆறுகளிலும் சாதாரணமாக மிகுதியாகவே காணலாம். இது சேற்றில் அல்லது மணலில் பகலில் புதைந்து கிடந்து, இரவில் இரை தேட வெளி வந்து நீந்தும். முகமும் வாலும் மட்டும் மணலுக்கு மேலே தெரியும்படியும், மற்றப் பாகமெல்லாம் மறைந்திருக்கும்படியும் படுத்திருப்பது இதற்கு வழக்கம். செவுளால் மூச்சுவிடுவதோடு அமையாமல், இது அடிக்கடி நீரின் மட்டத்திற்கு வந்து காற்றை உட்கொள்ளுகிறது. இதை நீரிலிருந்து எடுத்தாலும் வெகுநேரம் உயிரோடிருக்கக் கூடும். அக்டோபர் முதல் ஜனவரி வரையில் இது முட்டையிடும் காலம். மழைத் தண்ணீர்க் குட்டைகளில்கூட இதன் குஞ்சுகளை அக்காலங்களில் பார்க்கலாம். இது சிறிய மீனானாலும் நிரம்பச் சத்தான உணவு என்று கருதுகின்றனர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 179)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xsc8x5bv/
தமிழ்“அயிரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xsc8x5bv/APA
Oliyon Research. (2026). அயிரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xsc8x5bv/MLA
"அயிரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xsc8x5bv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment