தொகுதி - பத்து சா சாக் ஆழ்கடல் அல்லது மிதக்கின்ற உயிரிகளிலிருந்து உண்டாகும் ஒரு வகைச் சுண்ணப் பாறை சாக் (chalk) எனப்படும். இவ்வுயிரிகள் நுண்ணியனவாகவும், நுண் துளைகளைப் பெற்றும், எளிதில் தகர்ந்து விழக் கூடியவையாகவும் (friable) உள்ளன. சாக் வெண்மையாகவும், வெளிர் நிறங்களிலும் கால்சைட்டை மிகுதியாகப் பெற்றுக் காணப்படுகின்றது. இப்பாறை, நுண்ணுயிரிகளின் கால்சைட் ஓடுகளால் ஆனது. இவ்வுயிரிகளில் ஃபோராமினிஃபெரிடா, குளோபிஜெரினா, டெக்ஸ்டுலாரியா முதலியவை குறிப்பிடத்தக்கவை. மிதக்கும் ஆல்கே, ராப்டோலித், கோகோலித், ரேடியோலேரியா முதலியவற்றின் படிவுகள் இதில் காணப்படுகின்றன. சில சாக்குகளில் அப்பாறையின் படிவுகளை விட நுண்ணுயிரிகளின் படிவுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆங்கிலக் கால்வாயின் இரு புறத்திலும் உள்ள செங்குத்தான மலைப் பகுதியில் காணப்படும் கிரிட்டேசியக்கால சாக்குகளே மிகப் புகழ் பெற்றவை. அமெரிக்காவில் அலபாமா, மிசிசிப்பி, டென்னீஸ், நெப்ராஸ்கா முதலிய இடங்களிலும் சாக் படிவுகள் காணப்படுகின்றன. சிமெண்ட், பொடி, மென் தேய்ப்புப் பொருள் (soft abrasive), மெருகூட்டி (polisher), உரம், வண்ணத் தீட்டு கோல் (crayon) முதலிய பொருள்களில் சாக் பயன்படுகிறது. -இரா. சரசவாணி நூலோதி. A.N. Winchell and H. Winchell, Elements of Optical Mineralogy, Wiley Eastern Private Ltd. New Delhi, 1968. சாக்கடல் சாக்கடல் (Dead Sea) இது இஸ்ரேலுக்கும் ஜோர்டனுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியாகும். இதில் ஜோர்டன் ஆறு கலக்கிறது. இக்கடல் நீர் உலகிலேயே மிக அதிகமான உப்புத் தன்மையுள்ளது. மற்ற கடல் நீரை விட இக்கடல் நீரில் 9 மடங்கு உப்புத் தன்மை மிகுதியாக உள்ளது. மத்திய தரைக்கடல் மட்டத்திற்கும் கீழே ஏறத்தாழ 400 மீ. ஆழம் இக்கடல் உள்ளது. புவியில் இதுவே மிக ஆழத்தில் உள்ள கடலாகும். உப்புத் தன்மை மிகுந்துள்ளமையால் இதில் உயிரினங்கள் இல்லை. இங்கு மீன்கள் இல்லாமையால் பறவைகளும் சாக்கடலை அணுகுவதில்லை. இக்கடல் 80 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் 1050 ச.கி.மீ. பரப்பும் 395 மீ. ஆழமும் கொண்டது. ஜோர்டன் ஆற்றைத் தவிர சிற்றாறுகளும் நாள் தோறும் பெருமளவு நன்னீரைக் கடலில் கொண்டு வந்து சேர்க்கின்றன. இங்கு நிலவும் அதிக வெப்பத்தால் நன்னீர் முழுதும் ஆவியாகிவிடுகிறது. எனவே, கடலில் நீர் மட்டம் மிகாமலும், எப்போதும் உப்புத் தன்மை குறையாமலும் உள்ளது. சாக்கடல் நீரில் 24% உப்பு உள்ளது. இத்துடன் மக்னீசியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு, கால்சியம் குளோரைடு, மக்னீசியம் புரோமைடு போன்ற கனிமப் பொருள்களும் மிகுதியாக உள்ளன. இவற்றிலிருந்து பொட்டாஷ், புரோமின் உணவு, உப்பு, ஜிப்சம் போன்ற வேதிப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. சிரியா, ஜோர்டனிலிருந்து வடமேற்கு அரேபியா வரை உள்ள எரிமலைப் பகுதியருகில் இக்கடல் உள்ளமையால், கடற்கரையருகில் எரிமலைக் குழம்பு, சல்ஃபர், பாறை உப்பு முதலியன மிகுதியாகக் காணப்படுகின்றன. கடல் நீரிலிருந்து வரும் அருவெறுப்பு மணமுடைய வளிமம் சில நோய்களைத் தீர்க்கிறது என்று கருதுகின்றனர். காலீயா என்ற இடத்தில் நலவாழ்வு மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. —கே. கே. அருணாசலம் சாக்கடைக் கட்டுமானம் கழிப்பறைக் கழிவுகள், இல்லங்கள், தெருக்கள் கழுவப்பட்ட நீர், தொழிற்சாலைக் கழிவு நீர், மழை நீர், தூய்மையற்ற மண் சேர்ந்த நீர் ஆகியவை சாக்கடைக் கழிவு நீர் (sewage) எனப்படும். சாக்கடைக் கழிவு நீரை முக்கியமாக நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அவை கழிப்பறைக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், நிலத்தடிக் கசிவு நீர்க் கழிவுகள், மழை நீர்க் கழிவுகள் ஆகும். நிலத்தின் மேற்புறம் அமைக்கப்பட்டுத் திறந்த வெளியில் சாக்கடைக் கழிவு நீரை எடுத்துச் செல்லும் பாதை, வாய்க்கால் சாக்கடைக் குழி எனப்படுகிறது. நிலத்தின் அடியில் குழாய்கள் அமைக்கப்பட்டுச் சாக்கடைக் கழிவு நீரை எடுத்துச் செல்லும் பாதை, பாதாளச் சாக்கடை அல்லது சாக்கடை எனப்படுகிறது. இச்சாக்கடைகளை இணைத்துத் தேவையான கருவிகளுடன் கட்டப்படுவது சாக்கடை அமைப்பு எனப்படும். சாக்கடைகளைச் சேகரித்து எடுத்துச் செல்லும் முறைகளை இரண்டு வகையாகச் செய்வது உண்டு. அவை ஊழியர் எடுத்துச் செல்லும் உலர் முறை, நீரினால் எடுத்துச் செல்லும் முறை என்பன. நவீன நீர் வசதிகளும், பாதாளச் சாக்கடை வசதிகளும் இல்லாத இடங்களில் கழிவறைக் கழிவுகள் வண்டிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு ஊருக்கு வெளியில் எடுத்துச் செல்லப்படும். வீடுகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர், சாக்கடைத் தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும். பின்னர் வண்டிகள் மூலம் கழிவு அகற்றும் ஊழியர்களால் அப்புறப்படுத்தப்படும். இரண்டாம் வகையில் நீர் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டு, திண்மக் கழிவுப் பொருள்கள் கழிவு நீரில் கரைக்கப்பட்டு 99%க்கு மேல் நீராகவே எடுத்துச் செல்லப்படும். இம்முறையில் மிகுந்த நீர் செல்வதால் நீரியல் விதிகளுக்குட்பட்டுச் செயல்படக் கூடியது. வளர்ச்சியடைந்த பெரும்பாலான நாடுகளில் இரண்டாம் வகையே பயன்படுகிறது. உலர் முறையில் பல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கழிப்பறைக் கழிவுகளை எடுத்துச் செல்லும் ஊழியருக்கு நலவாழ்வுக் குறைவு ஏற்படக் கூடும்; கழிவறைக் கழிவுகள் சேமிக்கப்படும் இடங்கள் கெடுநாற்றத்தை உண்டாக்கும். கழிவறைக் கழிவுகளை எடுத்துச் செல்லும் போது வீதிகளும், மக்கள் பயன்படுத்தும் இடங்களும் தூய்மை இழக்கும். கவனமின்றி, முறையற்ற வகையில் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டால் நோய் பெருகும் தீமை உண்டு. கழிவு நீர்த் தொட்டிகள் திறந்த வெளியில் இருப்பதால் தூய்மைக் கேடு ஏற்படலாம். நீர் எடுத்துச் செல்லும் முறையால் பல நன்மைகள் உண்டு. முழுதும் மூடப்பட்ட குழாய்கள் தூய்மை உடையன. இவை, அருவெறுப்பு ஏற்படுத்தா வண்ணம் சிறந்த முறையில் இயங்கக் கூடியவையாக உள்ளன. இறுதியாக வெளியேற்று முன்பு தூய்மைப் படுத்தப்படுவதால், நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதன் மூலம் மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படுகிறது. குழாய்களை அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் மிகுந்த செலவானாலும், நகரத்தின் நலவாழ்வு நிலைக்கும், மக்களின் பொது நலத்திற்கும் குழாய்கள் மிகவும் இன்றியமையாதவை. சாக்கடைக் குழாய்கள் பயன்படும் பணிகள், இடங்கள் ஆகியவற்றைப் பொறுத்து அவை பல வகைப் பெயர்களில் குறிப்பிடப்படும். துப்புரவுச் சாக்கடை எனப்படுவது இல்லங்களிலிருந்து கழிவுகளை எடுத்துச் செல்லும் சாக்கடைக் குழாய் ஆகும். தனிப்பட்ட சாக்கடை எனப்படுவது இல்லக் கழிவுகளும், கோடைக் காலத்தில் சாதாரணமாகச் செல்லக் கூடிய கழிவு நீரும் இணைந்து செல்லும் சாக்கடைக் குழாய் ஆகும். ஒருங்கிணைந்த சாக்கடை எனப்படுவது இல்லக் கழிவுகளுடன் மழை நீரையும் சேர்த்து எடுத்துச் செல்லக் கூடிய சாக்கடைக் குழாய் ஆகும். வீட்டுச் சாக்கடை எனப்படுவது இல்லங்களிலிருந்து வீதி சாக்கடைக்கு எடுத்துச் செல்லும் சாக்கடைக் குழாய் ஆகும். பக்கவாட்டுச் சாக்கடை எனப்படுவது நேரிடையாக இல்லங்களிலோ, வீதிகளிலோ கழிவு நீர் பெறும் சாக்கடைக் குழாய் ஆகும். முக்கிய துணைச் சாக்கடை எனப்படுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பக்கவாட்டுச் சாக்கடைகளிலிருந்து கழிவு நீர் பெறும் சாக்கடைக் குழாய் ஆகும். முக்கிய சாக்கடை எனப்படுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முக்கிய துணைச் சாக்கடைக் குழாய்களிலிருந்து கழிவு நீர் பெறும் குழாய் ஆகும். குறுக்கீட்டுச் சாக்கடை எனப்படுவது பல தனிப்பட்ட சாக்கடைகளை இணைத்துப் பெறப்படும் கழிவு நீர், ஒரு தனிக் குழாயில் எடுத்துச் செல்லப்பட்டுத் தேவையான இடத்தில் மிகப் பெரிய சாக்கடையுடன் இணைக்கப்படுவதாகும். வெளியேறும் சாக்கடை எனப்படுவது சேகரிக்கப்பட்ட கழிவு நீரை இறுதியாக வெளியேற்றும் சாக்கடைக் குழாய் ஆகும். பெரிய சாக்கடை அமைப்புகளை ஒருங்கிணைந்த அமைப்பு, தனிப்பட்ட அமைப்பு, ஓரளவு தனிப்பட்ட அமைப்பு என மூவகைப்படுத்தலாம். ஒருங்கிணைந்த அமைப்பு, பெரிய சாக்கடையாகவும் அனைத்துக் கழிவு நீரையும் எடுத்துச் செல்லும் வகையிலும் இருக்கும். தனிப்பட்ட அமைப்பில் இல்லக் கழிவுகளும் தொழிற்சாலைக் கழிவுகளும் ஒரு தனிச் சாக்கடைக் குழாய் மூலமாகவும், மழைக் காலக் கழிவு நீர் ஏனைய கழிவு நீர், ஒரு தனிச் சாக்கடைக் குழாய் மூலமாகவும் எடுத்துச் செல்லும் அமைப்பாக இருக்கும். ஓரளவு தனிப்பட்ட, சற்று விரிவுபடுத்தப்பட்ட அமைப்பு, மழைக் காலக் கூரைக் கழிவு நீர் தரையிலிருந்து வந்து சேரும் கழிவு நீர் ஆகியவற்றையும் சேர்ந்து எடுத்துச் செல்லும் அமைப்பாக இருக்கும். படம் 1. வலிவூட்டப்பட்ட வட்ட வடிவ நெகிழிக் குழாய் தனிப்பட்ட அமைப்பு, கீழ்க்காணும் இடங்களில் மிகப் பொருத்தமான அமைப்பாக இருக்கும். மழை சீராக விழாத இடங்கள், மழை நீர், ஏனைய கழிவு நீர் செல்ல முன்னரே சாக்கடை உள்ள இடங்கள், இறைப்பான்கள் (lift), இல்லக் கழிவுகளை வெளியேற்றும் எக்கி (pump) உள்ள இடங்கள், தாழ்வான இடங்கள் முதலியவையாகும். தனிப்பட்ட அமைப்பு முறை சிக்கனமானது; வடிவமைப்புச் செய்ய எளிது; குப்பைகளால் அடைப்பு ஏற்படாதது; குறைந்த அளவே இருப்பதால் தூய்மைப்படுத்துவதும், வெளியேற்றுவதும் எளிது; இந்த அமைப்பு முறையைச் சரிவு இல்லாவிடில் அமைக்க முடியாது. ஏனெனில் கழிவு நீர் தானாக ஓடும் வகையில் சரிவாகக் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். பழுது ஏற்பட்டால், கவனமாகச் சீர்படுத்த வேண்டும். ஒருங்கிணைப்பு முறையில் மழை நீர் மிகுதியாகச் செல்லும் போது அதுவே தூய்மைப்படுத்தி விடும்; தூய்மைப்படுத்தும் செலவு குறைவு; மிகப் பெரிய அளவில் இருப்பதால் சீர் செய்யும் பணிக்கு வசதியாக இருக்கும்; இம்முறையை அமைக்கும் போது மிகப் பெரிய அளவில் குழிகள் வெட்ட வேண்டி யிருக்கும். பெரிய அளவில் இருப்பதால் சகதியும், சேறும் தங்கிக் கழிவு நீர் செல்லும் திசை வேகத்தைக் குறைக்கும்; பழுதடையும் போது மக்கள் பொது நலம் பெரிதும் பாதிப்படையும். ஓரளவு தனிப்பட்ட முறை பெரும்பாலும் சிக்கனமானது; தேவையான போது மழை நீரும் எடுத்துச் செல்லக் கூடியது; சேறு தங்காதது. திசை வேகம் குறைவாகத் தரக் கூடியது. இடையிடையே மழை நீர் செல்லாவிடில், தூய்மை அடையாது. சாக்கடை வடிவமைப்பின் போது கீழ்க் காண்பவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சாக்கடையின் அளவை முடிவு செய்ய மொத்தக் கழிவு நீர் அளவைக் கணக்கிட வேண்டும். அதற்கு அவ்விடத்தில் வசிக்கும் மக்கள் தொகையையும், அவர்கள் மூலம் உருவாகும் கழிவு நீரின் அளவையும் கணக்கிட வேண்டும். மேலும் எதிர் கால விரிவாக்கத்திற்கும் சேர்த்துக் கணக்கிட வேண்டும். கழிவு நீர் ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் எனக் குறிப்பிடப்படும். கழிவு நீரின் மொத்த அளவு, மக்கள் தொகை. கழிவு நீர் பெறப்படும் இடங்களின் நிலை, குடி நீர்ப் பங்கீடு, நிலத்தடியில் கசிந்து செல்லும் நீரின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். மக்கள் தொகை கணக்கிடும் போது குடிநீர்ப் பங்கீட்டிற்குக் கணக்கிடும் முறையை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். கழிவு நீர் பெறப்படும் இடங்களின் நிலையைக் கணக்கிடும் போது வசிப்பிடங்கள், தொழிற்சாலைகள், வணிகம் நடக்கும் இடங்கள் ஆகியவற்றைத் தனித்தனியே கணக்கிட வேண்டும். பொதுவாக, குடிநீர்ப் பங்கீட்டிற்குத் தரப்படும் நீரை, கழிவு நீர் அளவிற்குச் சமமாகக் கருதுவதுண்டு. நிலத்தடியில் கசிந்து செல்லும் நீரின் அளவு ஒரு கிலோ மீட்டருக்கு இத்தனை லிட்டர் என்னும் அளவில் குறிக்கப்படும். அது நிலத்தின் வகை, நிலத்தடி நீரோட்ட அளவு ஆகியவற்றைப் பொறுத்துக் கணக்கிடப்படும். படம் 2. தூண்களால் தாங்கப்பட்ட சாக்கடைக் குழாய்கள் சாக்கடைப் பாய்வு, நீரியல் முறைக்குக் கணக்கிடுவது போலவே கணக்கிடப்படும். அதற்குப் பயன்படும் வாய்பாடே இதற்கும் பயன்படும். சாக்கடைப் பாய்வு, திசை வேகம், கன அளவு முதலியவற்றைக் கணக்கிட, செஸ்ஸி, மேனிங், கட்டர், கிரிம்ப் மற்றும் பர்கஸ், காசன் வில்லியம் வாய்பாடுகள் பயன்படுகின்றன. செஸ்ஸி வாய்ப்பாடு திசைவேகம் = =c\sqrt{mi} c—மாறி; சொரசொரப்புத் தன்மையைப் பொறுத்தது m—சராசரி நீர் ஆழம் i—நீர் புறச் சரிவு கட்டர் வாய்ப்பாடு c=\frac{23+\frac{1}{n}+\frac{0.00155}{i{1+(23+\frac{0.00155}{i})\frac{n}{\sqrt{m} n—நீர் செல்லும் பரப்பின் சொரசொரப்புத் தன்மைக் குணகம் மேனிங் வாய்ப்பாடு திசை வேகம்=\frac{1}{n}m^\frac{2}{3}i^\frac{1}{2} கிரிம்ப் மற்றும் பாக்ஸ் வாய்ப்பாடு திசை வேகம்=83.5m^\frac{2}{3}i^\frac{1}{2} காசன் வில்லியம் வாய்ப்பாடு திசை வேகம்=0.85 c m^{0.63}i^{0.54} சாக்கடையில் செல்லும் கழிவு நீரின் திசை வேகம் மிகக் குறைந்த அளவு, நொடிக்கு 0.6 மீட்டரும், மிக அதிக அளவு நொடிக்கு 2.25 மீட்டரும் இருக்க வேண்டும். நிலத்தின் சரிவு, கழிவு நீரின் திசை வேகம், சாக்கடைக் குழாயின் விட்டம், கழிவு நீரின் மொத்த அளவு ஆகியவற்றைப் பொறுத்துச் சாக்கடைக் குழாயின் சரிவு மாறுபடக் கூடும். சாக்கடைக் குழாயின் குறுக்கு வெட்டுப் பரப்பு, கழிவு நீர்ப் பாய்வு, கட்டுமானத்தின் நிலைப்புத் தன்மை, செலவு, இயக்கம், பராமரிப்பு, உள் அழுத்தம், வெளி அழுத்தம், தேய்மானம் மற்றும் அரிப்பு ஆகியவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். குறுக்கு வெட்டுப் பரப்பு வட்டம், செவ்வகம், முட்டை வடிவம், அரை நீள் வட்டம் ஆகிய வடிவங்களில் அமைக்கப்படும். பொதுவாக வடிவம் அமைக்கப்படும் போது, அளவைக் கருத்தில் கொண்டு இரு மடங்கு இடம்இருப்பது போல் அமைக்க வேண்டும். வரைபடங்கள் மூலம் அனைத்துக் கணக்கீடுகளையும் இணைத்துத் தேவையான இட வசதியைக் கண்டறிய வேண்டும். ஒன்றிற்கு ஒன்று உள்ள விகித முறைகளைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். திசை வேகம் சீராகப் பராமரிக்கப்பட வேண்டும். படம் 3. சாக்கடை இணைப்புகளின் வெட்டுமுகம் சாக்கடைக் குழாய்களில் தீமை விளைவிக்கக் கூடிய நச்சு வளிமங்கள் சேர்ந்து விடாமல் இருக்க, காற்று வெளியேற்றும் குழாய்களைப் பொருத்து அழுத்தம் குழாயினுள் குறையும்; விபத்துகள் தவிர்க்கப்படும்; சாக்கடைக் குழாயினுள் உள்ள கெட்ட வளிமங்கள் வெளியேற, தூண் போன்ற நீண்ட உயரமான குழாய்களைப் பயன்படுத்தலாம்; இடையிடையே சாக்கடை மூடிகளைப் போட்டு அவற்றில் துளைகள் ஏற்படுத்தி வைக்கலாம்; இடையில், வெளியேற்றும் திறந்த வெளிக் குழாய் இணைப்புகளைப் பொருத்தலாம்; தேவையான இடங்களில் காற்று வெளியேற்றும் காற்றாடிகளையும் வீடுகளுக்கு அருகில் காற்று வெளியேற்றும் குழாய்களையும் பொருத்தலாம். ஏ.எஸ்.எஸ். சேகர் நூலோதி. E.W. Steel and Terence J. McGhee, Water Supply and Sewerage, Fifth Edition, Mc- Graw-Hill International Book Company, London, 1981. சாக்கரின் இது ஆர்த்தோ சலஃபோபென்சாயிக் இமைடு ஆகும். இதன் வாய்ப்பாடு: டொலுயீனை, குளோரோசல்ஃபோனிக் அமிலம் கொண்டு சல்ஃபோனேட் ஏற்றம் செய்தால் o, p-டொலூயீன் சல்ஃபோனைல் குளோரைடுகள் கிடைக்கும். இதில் ஆர்த்தோ மாற்றியத்தை வடிகட்டிப் பிரித்து அம்மோனியாவுடன் வினைப்படுத்திக் கிடைக்கும் பொருளைப் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொண்டு ஆக்சிஜனேற்றமடையச் செய்தால் ஆர்த்தோ சல்ஃபோமிடோ பென்சாயிக் அமிலம் கிடைக்கும். இதைச் சூடு செய்தால் சாக்கரின் உண்டாகிறது. இது வெண்மையான படிகம்; சர்க்கரையை விட 550 மடங்கு மிகு இனிப்புத் தன்மை உடையது. ஏறத்தாழ நீரில் கரையாது; ஆனால், இதன் சோடியம் உப்பு, நீரில் நன்கு கரையும். எனவே கடைகளில் சோடியம் உப்பாகவே இது விற்கப்படுகிறது. இதன் நீர்த்த கரைசல் இனிப்புச் சுவையுடையது. ஆனால், அடர்கரைசல் கசப்புத் தன்மையைப் பெற்றிருக்கும். இது ஆற்றல் தரும் உணவுப் பொருள் அன்று. எவ்வித மாற்றமும் அடையாமல் சிறுநீரில் வெளியேறி விடும். மலிவான பானங்களில் இனிப்புப் பொருளாகப் பயன்படுகிறது. கொழுப்புச் சத்து மிகுந்தவர்களும், நீரிழிவு நோய் உள்ளோரும் சர்க்கரைக்குப் பதிலாக இனிப்புப் பொருளாக இதைப் பயன்படுத்தலாம். —பி.ஈ.எம். லியாகத் அலிகான் சாக்கரைடுகள் இவை வகையிடப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், வேதி அடிப்படையில் கார்போஹைட்ரேட்டுகள் கீழ்க் காணுமாறு வகையிடப்படுகின்றன: மோனோ சாக்கரைடுகள் (monosaccharides). இவை ஆறு அல்லது அதற்குக் குறைவான எண்ணிக்கையில் கார்பன் அணுக்களைக் கொண்ட கார்போஹைட்ரேட்டுகள். இவற்றை நீராற் பகுத்து மேலும் எளிய சர்க்கரைகளைப் பெற இயலாது. டைசாக்கரைடுகள் (disaccharides). டைசாக்கரைடை நீராற் பகுத்தால் இரு மோனோ சாக்கரைடுகள் விளையும். டைசாக்கரைடு மூலக்கூறில் 12 கார்பன் அணுக்கள் உள்ளன. குறை சாக்கரைடுகள் (oligosaccharides). இவை 3, 4 எண்ணக் கூடிய அளவில் (பொதுவாக ஒன்பது வரை) மோனோ சாக்கரைடு தொகுதிகளை உள்ளடக்கியவை. இவற்றை நீராற் பகுத்தால் ஒவ்வொரு குறை சாக்கரைடு மூலக்கூறுகள் கிட்டும். டைசாக்கரைடுகளையும் குறை சாக்கரைடுகளாகக் கருதுவதுண்டு. பாலிசாக்கரைடுகள் (polysaccharides). அறுதியிட்டுக் குறிப்பிட முடியாத பெரும் எண்ணிக்கையில் மோனோ சாக்கரைடு மூலக்கூற்றுத் தொகுதிகளை உள்ளடக்கியவை (macromolecules) பாலிசாக்கரைடுகளை நீராற் பகுத்தால் படிப்படியாக குறை, டை, மோனோ சாக்கரைடுகள் எனச் சிதைவு விளை பொருள்கள் கிடைக்கின்றன. மற்ற வகை சாக்கரைடுகளினின்றும் பாலிசாக்கரைடுகள் பின் வரும் இயல்புகளில் வேறுபட்டுள்ளன; அவை படிகத் தன்மையற்றவை; நீரில் கரையாதன; இனிப்புச் சுவையற்றவை. மோனோ சாக்கரைடுகள் எளிய சர்க்கரைகளான இவற்றுள்ளும் எளியது 3 கார்பன் அணுக்களைக் கொண்ட கிளிசரால்டி ஹைடாகும். கிளிசரால்டிஹைடு குறிப்பிடத்தக்க சர்க்கரைப் பொருள் இல்லையெனினும் நான்கு, ஆறு கார்பன் அணுக்களைக் கொண்ட மோனோ சாக்கரைடுகளின் வடிவமைப்புகளை (configurations) நிறுவுவதற்கு, கிளிசரால்டிஹைடின் வடிவமைப்பே அடிப்படையாகும். வலஞ்சுழி கிளிசரால்டிஹைடின் (D-glyceraldehyde) வடிவமைப்பு கீழ்க்காணுமாறு நிணையிக்கப்பட்டுள்ளது (படம் 1). இவ்வாய்ப்பாட்டிலிருந்து வருவிக்கப்படும் (மேலெழுப்பப்படும்) 4,5,6-கார்பன் சர்க்கரைகள் யாவும் D-வரிசை எனக் கொள்ளப்படுகின்றன. இவை யாவற்றிலும் ஆல்டிஹைடு தொகுதிக்கு எதிர் முனையிலுள்ள சமச்சீரற்ற கார்பன் அணுவில் ஹைட்ராக்சைடு தொகுதி வலப்புறம் உள்ளது. புகுத்தப்படும் கூடுதல் கார்பன் அணுவுடன் இணைந்துள்ள ஹைட்ராக்சைடு தொகுதியின் வசத்திற்குத் தகுந்தாற் போல் இரு சாக்கரைடுகள் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, D-கிளிசரால்டிஹைடில் நான்காம் கார்பனைப் புகுத்தினால் அக்கார்பனுடன் இணைந்துள்ள ஹைட்ராக்சைடு தொகுதியின் வசத்திற்குத் தகுந்தாற் போல் எரித்ரோஸ், திரியோஸ் என இரு டெட்ரோஸ்கள் கிடைக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் ஒரு புதிய கார்பனைப் (5-ஆம் கார்பனை) புகுத்தினால், மேலும் நான்கு மோனோ சாக்கரைடுகள், அதாவது பெண்டோஸ்கள் (ரிபோஸ், அராபினோஸ், சைலோஸ், லைசோஸ்) கிட்டும். இவை ஒவ்வொன்றிலும் ஆறாம் சார்பனைப் புகுத்தினால், எட்டு ஹெக்சோஸ்கள் (அல்லோஸ், அல்ட்ரோஸ், குளூகோஸ், மானோஸ், கூலோஸ், கீட்டோஸ், காலக்டோஸ், டாலோஸ்) தோன்ற வாய்ப்புண்டு. இவற்றின் வடிவ வாய்ப்பாடுகள் அனைத்தும் அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளன. இயற்கையில் கிடைக்கும் மோனோ சாக்கரைடுகளுள் முதன்மையானவை D-குளூக்கோஸ், D-மானோஸ், D-ஃபிரக்டோஸ், D-காலக்டோஸ் ஆகிய ஹெச்சோஸ்களும், D-சைலோஸ், D-அராபினோஸ் ஆகிய பெண்டோஸ்களுமாகும். D-ரிபோஸும், 2-டி ஆக்சி-D-ரிபோஸும் எங்கும் நிறைந்திருக்கும் கார்போஹைட்ரேட்டாகும்; மரபியல் பொருள்களான DNA, RNA ஆகிய நியூக்ளியிக் அமிலங்களில் இச்சாக்கரைடுகள் இடம் பெற்றுள்ளன. எனவே, உயிர்ச்செல்கள் யாவற்றிலும் இவை அடங்கியுள்ளன. இயற்கையில் கிடைக்கும் மோனோ சாக்கரைடுகள் சிலவற்றின் தோற்றுவாய்கள் அட்டவணை 2இல் தரப்பட்டுள்ளன. அட்டவணை 1 ஆல்ட்டோஸ்கள் (ஆல்டோஹெக்சோஸ்கள் வரை)-D-வரிசை மோனோ சாக்கரைடுகள் யாவும் ஆல்டிஹைடுகளாகவோ, கீட்டோன்களாகவோதான் உள்ளன. இவ்வடிப்படையில் அவற்றை ஆல்டோஸ்கள், கீட்டோஸ்கள் என வகையிடலாம். மோனோ சாக்கரைடுகளை அவற்றின் மூலக் கூறுகளிலுள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் வகையிடலாம். 5-கார்பன் சாக்கரைகளைப் பென்டோஸ்கள் என்றும், 6-கார்பன் சாக்கரைகளை ஹெக்சோஸ்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. டை சாக்கரைடுகள், குறை சாக்கரைடுகள் ஆகியவற்றின் சிலவற்றில் தனி ஆல்டிஹைடு தொகுதி இருக்கும். மற்றவற்றில் இந்த ஆல்டிஹடு தொகுதி பிணைப்பில் ஈடுபட்டுத் தனித் தன்மை இழந்து நிற்கும். இவ்வடிப்படையில் இச்சாக்கரைடுகளை ஒடுக்கத் திறன் கொண்ட சர்க்கரைகள் (reducing sugars), ஒடுக்கத் திறனற்றவை (non-reducing sugars) என வகையிடலாம். மால்ட்டோஸ் முதல் வகைக்கும், சுக்ரோஸ் இரண்டாம் வகைக்கும் எடுத்துக்காட்டுகள். சோளத் தட்டையிலுள்ள ஸைலான் (xylan) எனும் பாலி சாக்கரைடைச் சிதைத்து, சைலோஸ் தயாரிக்கப்படுகிறது. லாக்டோஸை அமில வினையூக்கியைக் கொண்டு நீராற்பகுத்துக் கிடைக்கப் பெறும் மோனோ சாக்கரைடு காலக்டோஸ் ஆகும். குளுக்கோஸிலிருந்து காலக்டோஸைத் தயாரிக்கும் வழி முறை உடலினுள்ளேயே நிகழ்வதால், தனியாகக் காலக்டோஸை உணண வேண்டிய தேவை எழுவதில்லை. உணவில் காலக்டோஸின் செறிவு மிகவும் கூடுதலானால், ஆக்கச் சிதை மாற்றத்திற்குட்படாத. நீரில் கரையாத காலக்டிடால் எனும் ஆல்கஹால் தோன்றி, கண் வில்லை மீது படிந்து பார்வையை மறைக்கும். D-குளுக்கோஸ் (கிளைகிஸ் என்றால் கிரேக்க மொழியில் இனிப்பு எனப் பொருள்) பழங்கள், தேன், குருதி ஆகியவற்றிலும், நோய்க்கு அறிகுறியாகச் சிறு நீரிலும் கரைந்திருக்கும். மேலும் இது பெருமளவில் இயற்கையில் கிடைக்கும் டைசாக்கரைடுகளான லாக்டோஸ், சுக்ரோஸ் ஆகிய இரண்டிலும், பாலிசாக்கரைடுகளான செல்லுலோஸ், ஸ்டார்ச், கிளைகோஜன் ஆகியவற்றிலும் வேதிப்பிணைப்புற்ற நிலையில் உள்ளது. பொதுவாக, D-குளுக்கோஸ் உருளைக் கிழங்கு ஸ்டார்ச்சிலிருந்தும் சோள வகை ஸ்டார்ச்சிலிருந்தும் தயாரிக்கப்படும். கீட்டோ ஹெக்சோஸ்களில் முதன்மையானதும் குளுக்கோஸின் மூலக் கூறு வாய்ப்பாட்டையே கொண்டதுமான ஃபிரக்டோஸ் தேன், ஆப்பிள், தக்காளி ஆகியவற்றில் மலிந்துள்ளது. மோனோ சாக்கரைடுகளிலேயே இனிப்பு மிக்கதான ஃபிரக்டோஸ் சுக்ரோஸை நீராற்பகுத்தலால் பெறப்படுகிறது. இது மனித உடலில் ஆக்கச் சிதை மாற்றம் அடையக் கூடிய சர்க்கரைகளுள் ஒன்றாகும். தொழிலக அளவில் ஃபிரக்டோஸைத் தயாரிப்பதற்கு இனுலின் சிதறிய நீரியக் கரைசலை நீர்த்த சல்ப்யூரிக் அமிலத்துடன் சூடுபடுத்தும் முறை பயன்படுகிறது. ஃபிரக்டோஸின் வாய்ப்பாடு படம் 2இல் தரப்பட்டுள்ளது. மோனோ சாக்கரைடுகளின் வேதிவினைகள். மோனோ சாக்கரைடுகள் யாவற்றிலுமே இரு வகை வினையுறு தொகுதிகளே உள்ளன; அவை ஆல்டிஹைடு அல்லது கீட்டோ தொகுதி, ஆல்கஹால் தொகுதி என்பன. எனவே வேதி வினைகள் யாவற்றையும் இவ்விரு வகைத் தொகுதிகளின் வினைகளாகப் பிரித்தறியலாம். ஆல்டோஸ்கள் ஆல்டிஹைடுகளாதலால் எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைகின்றன; குளூக்கோஸின் ஆல்டிஹைடு தொகுதி அமிலத் தொகுதியாகிறது. ஆக்சிஜனேற்றத்திற்கு ஃபெல்லிங் கரைசல் (Fehling's solution) அல்லது பெனிடிக்ட் கரைசல் (Benedict's solution) பயன்படுகிறது. இரண்டிலும் தாமிர சல்ஃபேட் கரைசலும், காரமும் உள்ளன. முதலாம் கரைசலில் சோடியம் பொட்டாசியம் டார்டரேட்டும், இரண்டாம் கரைசலில் சோடியம் சிட்ரேட்டும் உள்ளன. இவ்வுப்புகள் தாமிர அயனிகளுடன் அணைவுச் சேர்மங்களை உருவாக்கி ஆக்சிஜனேற்றம் நிகழ்வதற்கு முன்பாகவே, தாமிர உப்பு வீழ்படிவாகாமல் காக்கின்றன. இக்கரைசல்களில் ஏதேனும் ஒன்றைக் குளூக்கோஸ் கரைசலுடன் கலந்து மெல்லச் சூடு படுத்தினால், செம்பழுப்பு நிற வீழ்படிவு (தாமிர (I) ஆக்சைடு) தோன்றும். இந்த ஆய்வு குருதி, சிறுநீர் ஆய்வுகளில் முதன்மையானதாகும். குருதியில் இயல்பாகவும், சிறுநீரில் நோயின் அறிகுறியாகவும் குளூக்கோஸ் கரைந்து இருக்கும். குருதியில் குளூக்கோஸின் செறிவு கூடுதலானாலோ, சிறுநீரில் குளூக்கோஸ் தோன்றினாலோ நீரிழிவு நோய் உள்ளதெனக் கொள்ளலாம். குருதி-குளூக்கோஸ் அடக்கத்தைக் கண்டறிவதற்கு மேற்கூறிய ஆய்வு பயனாகிறது. இந்த வினை குளூக்கோஸுக்கான தனி வினை அன்று; எனினும் ஃபெல்லிங் கரைசலிலுள்ள காரம் குளூக்கோஸ் மூலக்கூறைச் சிதைத்து விடுவதால், இவ்வினையின் விகிதவியல் (stoichiometry) துல்லியமாக அறியப்படவில்லை. தற்போது குருதி, சிறுநீர்-குளூக்கோஸ் செறிவை அறிவதற்கு, குளூக்கோஸ் ஆக்சிடேஸ் என்ற நொதி பயன்படுகிறது. இது குளூக்கோஸின் ஆக்சிஜனேற்றத்தை விரைவுபடுத்தி ஹைட்ரஜன் பெராக்சைடை விளைவிக்கிறது. இந்த HO, கலவையில் இடப்பட்டுள்ள சாயப் பொருளொன்றை ஆக்சிஜனேற்றம் செய்கிறது. இதன் விளைவான நிறத்தின் அடர்த்தி குளூக்கோஸின் செறிவுக்கு நேர் விகிதத்திலுள்ளது. இந்த ஆய்வு குளூக்கோஸுக்கு மட்டுமேயான சிறப்பு வினையாகும். குளூக்கோஸின் ஆல்டிஹைடு தொகுதி காரம் கலந்த அயோடினுடன் வினைப்பட்டு அமிலமாகலாம். இவ்வினை ஃபிரக்டோஸுக்கு (கீட்டோஸுக்கு) இல்லை. டாலன் வினைப்பொருளுடன் வெள்ளியை வீழ்படிவாக்குதலும் ஆக்சிஜனேற்ற வினைகளுள் ஒன்றாகும். எனினும், ஏனைய ஆல்டிஹைடுகளைப் போலன்றி, குளூக்கோஸ் ஷிஃப் வினைப்பொருளுடன் சிவப்பு நிறத்தைத் தருவதில்லை. ஃபிரக்டோஸ் ஃபெல்லிங் கரைசலுடன் வினையுறும் என எதிர் பார்க்க முடியாது; ஏனெனில், ஃபிரக்டோஸில் ஆல்டிஹைடு தொகுதி இல்லை. ஆனால் ஃபிரக்டோஸ் இவ்வினையைத் தருகிறது. இதற்குக் காரணம் காரத்தின் முன்னிலையில் சிறிதளவு கீட்டோஸ் ஆல்டோஸாக மாறி விடுகிறது (லோப்ரி டி பிராயின் வஈன் எகின்ஸ்டீன் வினை). மோனோ சாக்கரைடுகள் யாவும் எளிதில் ஆல்கஹால்களாக ஒடுக்கமடைகின்றன. சோடியம் ரசக் கலவை-நீர்க் கலவை இங்கு வினைப்பொருளாகப் பயன்படுகிறது. குளுக்கோஸ் \frac{N_2Hg}{H_2O}சார்பிட்டால் (D-குளூசிட்டால்) ஃபிரக்டோஸ் ────⇾ சார்பிட்டால் + மானிட்டால் மானோஸ் ────⇾ மானிட்டால் காலக்டோஸ் ────⇾ டல்சிட்டால் மோனோ சாக்கரைடுகளுக்கான மற்றோர் ஆய்வு ஓசசோன் உருவாதலாகும். ஏனைய ஆல்டிஹைடு, கீட்டோன்களைப் போன்றே ஒற்றைச் சாக்கரைடுகளும் ஃபினைல் ஹைட்ரசீனுடன் குறுக்கவினை புரிகின்றன. ஆனால் இங்கு 1:1 என்ற மோலார் விகிதத்தில் வினைப்பொருள் கலப்பதில்லை. ஒரு மோல் ஒற்றைச் சாக்கரைடுக்கு 3 மோல் ஃபீனைல் ஹைட்ரசீன் வினையுறுகிறது. CHO+3 CHNHNH குளூகோசசோன் + NH+HO+CHNH (மஞ்சள் நிறப் படிகம்) குளுக்கோஸும், ஃபிரக்டோஸும் மாற்றியங்கள் (isomers) ஆகும். இவை இரண்டுமே ஃபீனைல் ஹைட்ரசீனுடன் வினையுற்று, ஒரே ஒசசோனை அளிக்கின்றன. இதிலிருந்து இவ்விரு மூலக்கூறுகளின் வடிவமைப்பும் C-1,C-2 கார்பன் அணுக்களைத் தவிர ஏனையவற்றில் வேறுபடவில்லை என்பது தெளிவாகிறது. மோனோ சாக்கரைடுகளைக் கண்டறிவதற்குச் சில சிறப்பு வண்ண ஆய்வுகள் உள்ளன. மோனோ சாக்கரைடை α-நாஃப்தாலுடன் கலந்து அடர்செறிவு மிக்க H₂SOஐச் சேர்த்தால் ஊதா நிறம் தோன்றும் (மாலிஷ் ஆய்வு). டாபர் (Tauber) ஆய்வில் 5-கார்பன் அணுக்களைக் கொண்ட மோனோ சாக்கரைடுகளை அடர் அசெட்டிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட பென்சீலுடன் வினைப்படுத்தினால், செர்ரி பழத்தைப் போன்ற சிவப்பு நிறம் உண்டாகும். மோனோ சாக்கரைடுகளை ஃபுளூரோகுளூசினால் + ஹைட்ரோ குளோரிக் அமிலக் கலவையிலிட்டால் ஊதா-சிவப்பு நிறம் கிட்டும். ரிசார்சினால் + ஹைட்ரோகுளோரிக் அமிலக் கலவையுடன் மோனோ சாக்கரைடுகள் சிவப்பு நிறத்தைத் தோற்றுவிக்கின்றன (செலிவானோஃப் ஆய்வு). யூரோனிக் அமிலங்களுக்கு டாலனின் நாஃப்தா ரிசார்சினால் ஆய்வும், டிஸ்ஷே கார்பசோல் ஆய்வும் ஏற்றவை. ஓசசோன் (மஞ்சள் படிகம்) ஆய்வும் இங்கு பயன்படுகிறது. குளுக்கோஸ் உள்ளிட்ட பல மோனோ சாக்கரைடுகளின் வடிவமைப்புகள் பல ஆண்டுகளாக நேர் சங்கிலி வடிவங்களாகக் கருதப்பட்டன. இச்சர்க்கரைகள் மெத்தில் ஆல்கஹாலுடன் வினைப்படுதல் ஆராயப்பட்ட போது வடிவமைப்பைப் பற்றிய கருத்து மாற்றத்துக்குள்ளானது. ஓர் ஆல்டிஹைடு மூலக்கூறு ஓர் ஆல்கஹால் மூலக்கூறுடன் கூட்டு வினையுற்று, ஹெமி அசெட்டால் என்ற மூலக்கூறைத் தருகிறது. இது மேலும் ஓர் ஆல்கஹால் மூலக்கூறுடன் குறுக்க வினையுற்று அசெட்டால் எனும் பொருளைத் தருகிறது. குளூக்கோஸும் ஆல்டிஹைடேயாயினும் ஒரு மூலக்கூறு மெத்தில் ஆல்கஹாலுடன் வினைப்பட்டு (அதாவது 1:1 மோலார் விகிதம்) அசெட்டாலைத் தரும். ஹெமி அசெட்டால் உருவாவதில்லை. இதற்குக் காரணம் குளூக்கோஸ் மூலக்கூறின் ஆல்டிஹைடு தொகுதி அதே மூலக்கூறின் 5ஆம் கார்பன் அணுவிலுள்ள ஆல்கஹால் தொகுதியுடன் கூட்டுவினை புரிந்து ஒரு வளைய உருக் கொண்ட ஹெமிஅசெட்டாலைத் தோற்றுவிக்கிறது. இம்மூலக்கூறு ஓர் அறுகோண வளையமாகும். ஹாவொர்த் என்பாரின் கண்டுபிடிப்பான இவ்வடிவமைப்பு, குளூக்கோபைரனோஸ் எனப்படும். இங்கு புதிதாகத் தோன்றியுள்ள சமச்சீரில்லா கார்பன் (asymmetric carbon) முதலாம் கார்பனாகும். இதன் விளைவாக H──OH என்றும், HO──H என்றும் இடவல மாற்றமாக இரு வடிவமைப்புகள் உருவாகின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள α வடிவத்தைப் போன்றே முதல் கார்பனில் H──OH என்ற அமைப்புக் கொண்ட β வடிவமும் உள்ளது. மெத்தில் ஆல்கஹாலுடன் குளூக்கோஸ் குறுக்க வினையுற்றபின் மெத்தில் குளுகோஸைடாகிறது. இரு குளூகோஸைடுகளின் தனித் தன்மையும் (ஒளிச் சுழற்சிக் கோணங்களில் வேறுபாடு), சிதைபுரிமாற்றம் எனும் தோற்றப்பாடும் குளூக்கோஸின் வளைய அமைப்பை உறுதி செய்கின்றன. புதிதாகத் தயாரிக்கப்பட்ட குளூக்கோஸ் கரைசலின் ஒளிச்சுழற்சிக் கோணம் + 113°, புதிதாகத் தயாரிக்கப்பட்ட 3-D-குளுக்கோஸ் கரைசலின் ஒளிச்சுழற்சிக் கோணம் +19° தேக்கி வைத்திருக்கையில் மெல்ல மெல்லச் சுழற்சிக் கோணம் இரு கரைசல்களிலுமே மாறுகிறது. α வடிவத்தின் ஒளிச்சுழற்சி மதிப்புக் குறைகிறது; β-இன் ஒளிச்சுழற்சி கூடுகிறது. இறுதி நிலையில் இரு கரைசல்களுமே + 52.5° மதிப்பை எய்துகின்றன. இக்கரைசலில் 37%உம், 63%உம் இயங்கு சமநிலையிலுள்ளன. இத்தோற்றப்பாடு குளூக்கோஸுக்கு மட்டுமன்றி, ஆல்டிஹைடு, கீட்டோ தொகுதிகளைக் கொண்ட சர்க்கரைகள் யாவற்றுக்கும் உண்டு. α-வடிவமும், β-வடிவமும் திறந்த சங்கலி வடிவத்தின் மூலம் ஒன்று மற்றொன்றாக மாறும். குளுக்கோஸின் வளயை அமைப்பில் பிணைப்புகள் யாவுமே ஒற்றைப் பிணைப்புகளாதலால் வளைய ஹெக்சேனை ஒத்ததாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக வளைய ஹெக்சேனைப் போன்றே குளூக்கோஸுக்கும் நாற்காலி, படகு என இரு வச அமைப்புகள் (conformations) தோன்றுவதற்கு வாய்ப்புண்டு எனினும், நாற்காலி வச அமைப்பே நிலைத்தன்மை மிக்கது. இவ்வச அமைப்பு அடிப்படையில் குளூக்கோஸின் வினைகளில் விரைவுகளை விளக்கலாம். டைசாக்கரைடுகள் இரு மோனோ சாக்கரைடு மூலக்கூறுகளின் இணைப்பு மூலக்கூறு டைசாக்கரைடுகள் ஆகும். ஒரு குளுக்கோஸ் மூலக்கூறும், ஒரு ஃபிரக்டோஸ் மூலக்கூறும் குறுக்க வினையுற்றனவாக் கருதிடின், விளையும் மூலக்கூறு சுக்ரோஸ் (கரும்புச் சர்க்கரை) ஆகும். சுக்ரோஸ் கரும்பிலிருந்தும், பீட்ரூட்டிலிருந்தும் பிரித்தெடுக்கப்படுகிறது. இது ஓர் ஒடுக்கத் திறனற்ற சர்க்கரையாகும். ஃபீனைல் ஹைட்ரசீனுடன் ஒச்சோனை அளிப்பதில்லை. சிதைபுரிமாற்றம் கொள்வதில்லை. நீர்த்த கனிம அமிலங்களால் நீராற்பகுத்தலுக்குள்ளாகிறது. இதன் விளைவாகக் குளூக்கோஸும், ஃபிரக்டோஸும் தோன்றுகின்றன. குளுக்கோஸ் வலம்புரி ஒளிச்சுழற்சியும், ஃபிரக்டோஸ் இடம் புரிச் சுழற்சியும் கொண்டுள்ளமையால், மொத்தத்தில் நீராற்பகுக்கப்பட்ட சுக்ரோஸ் கரைசலின் ஒளிச் சுழற்சிக் கோணம் மாறுகிறது. தொடக்கத்தில் வலம்புரிச் சுழற்சிக் கொண்டிருக்கும் சுக்ரோஸ் கரைசல் நீராற்பகுப்புக்குப் பின்பு இடம்புரியாக மாறுவதால் சுக்ரோஸை மாறிய சர்க்கரை (invert sugar) என்பர். சுக்ரோஸ் அசெட்டிக் அமிலத்துடன் வினை புரிந்து சுக்ரோஸ் ஆக்ட்டா அசெட்டேட் என்ற எஸ்ட்டரையொத்த பொருளைத் தருகிறது. சுக்ரோஸ் சுண்ணாம்பு நீருடன் வினை புரிந்து கால்சியம் சுக்ரோசேட் என்ற உப்பை உண்டாக்குகிறது. நீரை விடச் சுக்ரோஸ் கரைசல் ஏறத் தாழ 18 மடங்கு கூடுதலாகக் கால்சியம் ஹைட்ராக்சைடைக் கரைக்க வல்லது. இவ்வினையைப் பயன்படுத்தி, கால்சியம் ஹைட்ராக்சைடு- கால்சியம் கார்பனேட் கலவையைப் பிரித்து அளவறிதல் செய்யலாம். சுக்ரோஸ் மூலக்கூறில் குளுக்கோஸ் பகுதி பைரனோஸாகவும் (அறுகோண வளையம்), ஃபிரக்டோஸ் பகுதி ஃபியூரனோஸாகவும் (ஐங்கோண வளையம்) உள்ளன. மால்டோஸ் மற்றொரு முதன்மையான டைசாக்கரைடு ஆகும். இது ஸ்டார்ச்சை நீராற்பகுத்துப் பெறப்படுகிறது. இவ்வினைக்குப் பார்லியிலிருந்து பிரிக்கப்படும் டயாஸ்டேஸ் எனும் நொதி வினையூக்கியாகும். மால்டோஸ் ஒடுக்கத் திறனுடைய சர்க்கரையாகும். இது ஃபெல்லிங் கரைசலை ஒடுக்குகிறது; ஓசோனைத் தருகிறது; சிதைபுரிமாற்றம் காண்கிறது. மால்டோஸில் ஓர் ஆல்டிஹைடு தொகுதி தனித்து விளங்குகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. மால்டோஸ் மூலக்கூறு இரு குளுக்கோஸ் மூலக்கூறுகளாலானது. இரு குளுக்கோஸ் பகுதிகளும் & -பிணைப்பால் சேர்க்கப்பட்டுள்ளன. மால்ட்டேஸ் எனும் நொதி மால்டோஸின் நீராற்பகுப்பிற்கு வினையூக்கியாகும். இந்நொதி α-பிணைப்பு வகைகளை மட்டுமே உடைக்க வல்லது. செல்லோபயோஸ் எனும் டைசாக்கரைடு மால்ட்டோஸைப் போன்றது. மால்டோஸில் இரு குளூக்கோஸ் மூலக்கூறுகள் α-பிணைப்பால் சேர்க்கப்பட்டிருக்கையில், செல்லோபயோஸில் அவை β-பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளன. செல்லுலோஸை நீராற்பகுத்துப் பெறப்படும் டைசாக்கரைடு செல்லோபயோஸ் ஆகும். எமல்சின் எனும் நொதி இந்நீராற்பகுப்பை ஊக்குவிக்கிறது. இந்நொதி β-பிணைப்பை மட்டுமே உடைக்க வல்லது. செல்லோபயோஸ் வேதிப் பண்புகளில் மால்ட்டோஸை ஒத்தது. லாக்டோஸ் பாலில் உள்ள டைசாக்கரைடாகும். பாலில் சுமார் 4.5% லாக்டோஸ் உள்ளது. இது ஒடுக்கத்திறன் கொண்ட சர்க்கரையாகும்; ஒசசோனைத் தர வல்லது: சிதைபுரிமாற்றம் அடைகிறது. நீர்த்த அமிலங்கள் அல்லது லாக்டேஸ் எனும் நொதியின் முன்னிலையில் நீராற் பகுக்கப்பட்டு, சம மோலார் அளவு குளூக்கோஸையும் காலக்டோஸையும் தருகிறது. பாலிசாக்கரைடுகள் இச்சர்க்கரைகள் பல்லாயிரத்திலிருந்து பல லட்சம் வரை மூலக்கூறு எடை கொண்டவை. பாலிசாக்கரைடுகளுள் இயற்கையில் மலிந்து கிடைப்பவை ஸ்டார்ச்சும், செல்லுலோஸும் ஆகும். ஸ்டார்ச் எல்லா தானியங்களிலும் (அரிசி, கோதுமை, சோளம், பார்லி, உருளைக்கிழங்கு) கிடைக்கிறது. ஸ்டார்ச்சில் இரு பகுதிகள் உள்ளன, A பகுதி α-அமைலோஸ் என்றும், B பகுதி-βஅமைலோஸ் (அல்லது அமைலோபெக்ட்டின்) என்றும் குறிப்பிடப்படுகின்றன. முதல் வகை 10—20% உம், இரண்டாம் வகை 80—90%உம் இயற்கையில் கிடைக்கும் ஸ்டார்ச்சில் உள்ளன. α அமைலோஸ் நீரில் கரையாது. அயோடினுடன் நீல நிற அணைவுச் சேர்மத்தைத் தருகிறது. α-அமைலோஸின் நீர்த்த கரைசலைத் தேக்கி வைத்திருந்தால், மெல்ல மெல்ல அது வீழ்படிவை உருவாக்குகிறது. அமைலோபெக்ட்டின் நீரில் கரையும். கரைசல் நிலைத்தன்மை மிக்கது. அயோடினுடன் ஊதா நிறத்தைத் தோற்றுவிக்கிறது. α-மைலோஸ் மூலக்கூறு ஒரு நீண்ட சங்கிலியாகும்; மூலக்கூறு எடை ஏறத்தாழ 10,000-1.000,000 வரையாகும். அமைலோபெக்ட்டின் கிளைச் சங்கலி பொருந்திய பல்லுறுப்பி (polymer) ஆகும். மூலக்கூற்று எடை வரம்பு 50,000-10.000,000 வரையாகும். ஸ்டார்ச்சைப் பகுதி நீராற் பகுப்புக்குட்படுத்தினால் டெக்ஸ்ட்ரின் எனும் கோந்துப்பொருள் கிடைக்கும். செல்லுலோஸ், தாவரத்தின் அடிப்படை எனலாம். மரங்களும், செடிகளும் தழைத்தோங்கி நிற்பதற்குச் செல்லுலோஸே காரணம். இது மரத்திலிருநதும், பருத்தியிலிருந்தும் பெறப்படுகிறது. செல்லுலோஸ், அம்மோனியா கலந்த தாமிர ஹைட்ராக்சைடு கரைசலில் கரைகிறது. ஒருவகை ரேயான் அட்டவணை 3 சில பல்லின பாலிசாக்கரைடுகள் அட்டவணை 4 சில ஒரின சாக்கரைடுகள் (செயற்கைப்பட்டு) தயாரிப்பில் இவ்வினை பயன்படுகிறது. ஸ்டார்ச்சில் குளுக்கோஸ் தொகுதிகள் α-பிணைப்பாலும், செல்லுலோஸில் β-பிணைப்பாலும் சேர்க்கப்பட்டு உள்ளன, செல்லுலோஸின் மூலக்கூற்று எடை 20,000-5, 00, 000 வரையாகும். இது கிளைச் சங்கிலிகள் இடம் பெறாத பல்லுறுப்பியாகும். இனுலின் எனும் பாலிசாக்கரைடு டாலியா, டன்டேலியன் எனும் பூக்களில் இருக்கும். இனுலினை நீராற்பகுத்தால் ஃபிரக்ட்டோஸ் கிட்டும். அயோடினுடன் எவ்வண்ணத்தையும் தாராது. கிளைக்கோஜன் (விலங்கின மாவுப்பொருள்) விலங்கினச் செல்கள் யாவற்றிலும் உள்ளது. இது விலங்கினங்களால் தம் உடலில் சேமித்து வைக்கப்படும் கார்போஹைட்ரேட்டாகும்; அயோடினுடன் ஊதா கலந்த சிவப்பு நிறம் தரும்; நீராற்பகுப்பில் குளூக்கோஸ் விளைகிறது. மூலக்கூற்று எடை 1, 000, 000-5, 000, 000 வரை இருக்கக் கூடும்; இது கிளைச் சங்கிலிகள் மலிந்த பல்லுறுப்பி. இதுவரை விவரிக்கப் பட்ட பாலிசாக்கரைடுகளைத் தவிர, பல்லின பாலிசாக்கரைடுகள் (heteropolysaccharides) எனும் வகையும் இயற்கையில் கிடைக்கும். இவற்றில் இரண்டு அல்லது மூன்று வகை மோனோசாக்கரைடுப் பகுதிகள் பிணைந்துள்ளன. சில முதன்மையான பல்லின பாலி சாக்கரைடுகள் அட்டவணை 3-இல் பட்டியலிடப்பட்டுள்ளன. ஓரின பாலிசாக்கரைடுகள் (homopolysaccharides) அட்டவணை 4-இல் பட்டியலிடப்பட்டுள்ளன. பெக்டின்கள் பழச்சாறுகளிலும் பழத்தோல்களிலும் உள்ளன. இவை எளிதில் கெட்டியாகி, களிகளைத் (gel) தருகின்றன. கடல்வாழ் ஆல்காக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் அல்சினிக் அமிலங்களும் பாலிசாக்கரைடு வகையைச் சார்ந்தனவே. கார்போஹைட்ரேட்டுகள் இவை இயற்கையில் தோன்றும் கரிமப் பொருள்களுள் மலின மிக்கனவும், பரந்து காணப்படுவனவும் ஆகும். உயிரினங்களில் இன்றியமையாத இப்பொருள்கள் ஒளிச்சேர்க்கை இயக்கத்தின் வாயிலாகக் கார்பன் டைஆக்சைடு, நீர், சூரிய ஒளி ஆகியவற்றிலிருந்து பயிரினங்களால் தொகுத்தளிக்கப்படுகின்றன. உயிரினங்களின் ஆற்றல் தேவையை நிரப்புவதுடன் அவற்றின் கட்டுமானப் பொருளாகவும் விளங்குகின்றன. மரபியலில் மைய இடம் பெறும் நியூக்ளியிக் அமிலத்தின் ஒரு பகுதி ரிபோஸ் எனும் சர்க்கரைப் பொருளாலானது. பயிரினங்களில் உலர்த்திய நிலை எடையில் சுமார் முக்கால் பங்கு கார்போஹைட்ரேட்டாகும். இவை கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய அணுக்களை உள்ளடக்கிய ஹைட்ரஜன், ஆக்சிஜன் அணு விகிதம் 2:1 என்றமையும் வாய்ப்பாடு கொண்ட இயற்கையில் கிடைக்கும் பொருள்கள். இவற்றின் பொது வாய்ப்பாடு CHO என்றிருப்பினும், விதி விலக்குகளும் உண்டு. ராம்னோஸ் எனும் சர்க்கரைப் பொருள் பிற கார்போஹைட்ரேட்டுகளைப் பல வகைகளில் ஒத்திருப்பினும், அதன் மூலக்கூறு வாய்ப்பாடு (CHO) மேற்கூறிய பொது வாய்ப்பாட்டை ஒத்து அமையவில்லை. மாறாக, அசெட்டிக் அமிலம், ஃபார்மால்டிஹைடு போன்ற சில மூலக்கூறுகள் (CHO என்ற வாய்ப்பாட்டில் அமைந்திருந்தாலும், இயல்புகளில் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து பெரிதும் மாறுபடுகின்றன. எனவே, கார்போஹைட்ரேட்டுகளுக்கான வரையறையை பாலிஹைட்ராக்சி ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் அவற்றின் வழிப்பொருள்கள் அல்லது நீராற் பகுப்பால் அவற்றைத் தருபவை எனக் குறிப்பிடலாம். வகையீடும், பெயரிடலும். கார்போஹைரேட்டுகள் நான்கு பெரும் தொகுதிகளாக வகையிடப்படுகின்றன. அவை: மோனோ சாக்கரைடுகள், டைசாக்கரைடுகள், குறைசாக்கரைடுகள் (oligosaccharides), பாலி சாக்கரைடுகள். எளிய சாக்கரைடுகள் எனப்படும் மோனோ சாக்கரைடுகள் திராட்சை, ஏனைய பழங்கள், தேன்ஆகிய பொருள்களில் மலிந்துள்ளன. மோனோ சாக்கரைடுகளை நீராற்பகுத்து மேலும் எளிய சர்க்கரைப் பொருள்களைப் பெறுதல் இயலாது. இவற்றில் பொதுவாக 3-6 கார்பன் அணுக்கள் இடம் பெறுகின்றன. எளிய சர்க்கரைகளுக்குச் சான்றுகளாவன: குளூக்கோஸ், ஃபிரக்டோஸ், காலக்டோஸ் இவற்றுடன் அல்லோஸ், அல்ட்ரோஸ், மானோஸ், கூலோஸ், இடோஸ், டாலோஸ், சார்போஸ் ஆகிய அரிய வகைச் சர்க்கரைகளும் வடிவமைப்பு மாற்றியங்கள் (isomers) ஆகும். வடிவமைப்பில் தோன்றும் சிறு வேறுபாடுகளும் இம் மூலக்கூறுகளுக்கிடையே தன்மை வேறுபாடுகள் பலவற்றைத் தோற்றுவிக்கும். எடுத்துக்காட்டாக, ஹைட்ராக்சில் தொகுதிகளின் இருக்கைகளைப் பொறுத்துச் சர்க்கரையின் இனிப்புத் தன்மை அமைகிறது. எளிய சர்க்கரை மூலக்கூறுகளில் இரண்டை இணைத்து உருவாக்கப்படும் மூலக்கூறு டைசாக்கரைடாகும். கரும்புச் சர்க்கரையின் மூலக்கூறு ஒரு குளூக்கோஸ் மூலக்கூறும் ஒரு ஃபிரக்டோஸ் மூலக்கூறும் இணைந்து உருவானதாகும். பாலின் சர்க்கரைப் பொருளான லாக்டோஸ் ஒரு குளூக்கோஸையும், ஒரு காலக்டோஸையும் இணைத்துப் பெறப்பட்ட தாகக் கருதப்படலாம். மால்டோஸ் மூலக்கூறு இரு குளூக்கோஸ் மூலக்கூறுகளின் சேர்க்கையாகும். செல்லோபயோஸ் மூலக்கூறும் இரு குளூக்கோஸ் மூலக்கூறுகளின் சேர்க்கையேயாயினும், பிணைப்பு வசத்தில் α, β என்று இரு வகைகள் உள்ளமையால் செல்லோபயோஸ் (α குளூக்கோஸ் வகை) மால்டோஸினின்றும் (β குளூக்கோஸ் வகை) வேறுபடுகிறது. டைசாக்கரைடுகள் மோனோசாக்கரைடுகளாக நீராற்பகுக்கப் பட்ட பின்பே அவற்றிலுள்ள ஆற்றல் உயிரினங்களுக்குக் கிட்டும். மூன்று முதல் ஆறு ஒற்றை மூலக்கூறுகளை உள்ளடக்கியவை குறை சாக்கரைடுகள் எனப்படுகின்றன. இவை இயற்கையில் அரிதாகக் கிடைக்கின்றன. சில வகையீடுகளில் இரண்டு முதல் ஒன்பது மோனோ சாக்கரைடு தொகுதிகளை உள்ளடக்கிய பாலிசாக்கரைடுகளையும் குறை சாக்கரைடுகளாகக் கருதுவதுண்டு, மோனோ, டை, குறை சாக்கரைடுகள் படிகத் தன்மை கொண்ட, நீரில் கரைய வல்ல இனிப்புப் பொருள்கள். பாலிசாக்கரைடுகள் இவற்றுக்கு நேர்மாறான பண்புகளைக் கொண்டவை, ராஃபீனோஸ், ஜென்டிபயோஸ் ஆகியன டிரைசாக்கரைடுகளாகும். இயற்கையில் கிடைக்கும் கட்டுமான மாவுப் பொருள்களும், ஆற்றல் தேக்கும் பொருள்களும் பெரும்பாலும் பாலிசாக்கரைடுகளாகும். 10,000 ஒற்றைச் சாக்கரைடுகளைக் கூட உள்ளடக்க வல்ல பாலிசாக்கரைடுகள் அளவிலும், வடிவமைப்பிலும் ஒன்றோடொன்று மிகு வேறுபாடு கொண்டுள்ளன. பல நூறு தனி அமைப்புகள் இவ்வகையில் கண்டறியப் பட்டுள்ளன.மரம், செடிகளின் கட்டுமானப் பொருளான செல்லுலோஸ், மாவுப் பொருளான ஸ்டார்ச்; விலங்கினங்களின் சதைப்பிடிப்பான கிளைகோஜன் (இது கல்லீரலிலும், தசைகளிலும் உருவாகும் ஆற்றல் தோற்றுவாயாகும்) ஆகியன நன்கு அறியப்பட்டுள்ள பாலிசாக்கரைடுகளாகும். கார்போஹைட்ரேட்டுகளை (குறிப்பாக மோனோ சாக்ரைடுகளை) அவற்றிலுள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வகையிடலாம். ஐந்து அணுக்களைக் கொண்ட சாக்கரைடு பென்டோஸ் என்றும், ஆறு கார்பன் அணுக்களையுடைய சாக்கரைடு ஹெக்சோஸ் என்றும் வழங்கப்படும். மோனோ சாக்கரைடுகள் ஆல்டிஹைடுகளாகவோ, கீட்டோன்களாகவோ இருக்க வேண்டுமாதலால், ஆல்டோபென்டோஸ், ஆல்டோஹெக்சோஸ், கீட்டோ பென்டோஸ் போன்ற பெயர்கள் வழக்கிலுள்ளன. இவ்வடிப்படையில் குளூக்கோஸ் ஆல்டோஹெக்சோஸ் ஆகும்; ஃபிரக்டேக்டோஸ் கீட்டோஹெக்சோஸ் ஆகும். இதன் தொடர்பான மற்றொரு வகையீட்டில் டை மற்றும்குறை சாக்கரைடுகளை ஒடுக்கும் திறன் கொண்டன (reducing sugars), ஒடுக்கும் திறன் அற்றன (non-reducing) என்றும் பிரிக்கலாம், முதல் வகையில் > C=O அல்லது ─=O தொகுதி உள்ளது. உயிரினங்கள் யாவற்றுக்கும் அடிப்படையான ஆற்றல் தேவை, பெரும்பாலும் கார்போஹைட்ரேட்டுகளாலேயே நிரப்பப்படுகிறது. உயர் விலங்கினங்களின் குருதியில் கரைந்த நிலையிலுள்ள குளூக்கோஸ், செல்களின் செயல் திறனுக்கு இன்றியமையாததாகும். குளூக்கோஸ் ஆக்கச்சிதை மாற்றம் சரியாக அமையாவிடில், நீரிழிவு நோய் தோன்றக் கூடும். ஆடு,மாடுகளில் நொதிகள் பாலிசாக்கரைடுகளைப் புரதங்களாக மாற்றுகின்றன. வைட்டமின் C (அஸ்கார்பிக் அமிலம்), நுண்ணுயிர் எதிர் வகையைச் சார்ந்த ஸ்ட்ரெப்டோமைசீன் ஆகியன கார்போஹைட்ரேட் வழிப்பொருள்களாகும். பயிருறை செல்லுலோஸ் காகிதம், துணி ஆகியவற்றைத் தயாரிக்கப் பயனாகிறது. உயிரினங்கள் மலிந்த புவிப்பகுதி (biosphere) முழுதும் ஒளிச் சேர்க்கை நிகழ்கிறது. பசுமைப் பயிர்கள் யாவும் ஒரே இயங்கு முறையிலேயே ஒளிச் சேர்க்கையை நிகழ்த்துகின்றன. 3-பாஸ்ஃபோகிளிசரிக் அமிலம் என்ற இடைநிலைச் சேர்மம் தோன்றி, பின்பு செல்லுலோஸாகவும், ஸ்டார்ச்சாகவும் மாற்றமடைகிறது. ஒருவரின் ஆற்றல் தேவை, அவருடைய வயது, தொழில், பழக்க வழக்கம் ஆகியவற்றைப் பொறுத்தமையும். பொதுவாக, நாளொன்றுக்கு 8-16 கிலோ ஜூல் வரை தேவைப்படுகிறது. மனித உடலில் செரிக்க வல்ல கார்போஹைட்ரேட்டுகளில் ஒவ்வொரு கிராமும் சுமார் 1 ஜூல் வெப்பத்தை அளிக்க வல்லது. மனிதனால் செரிக்கப்படும் கார்போஹைட்ரேட்டுகளுள் முதன்மையானது ஸ்டார்ச் ஆகும். தானிய வகை ஸ்டார்ச்சுகள் இரு வகைப்படும்: 1 அமைலோஸ் (நீள்சங்கிலி வடிவம்); 2. அமைலோபெக்ட்டின் (கிளைச் சங்கிலி கொண்ட திண்ம வடிவம்). குளூக்கோஸ் தொகுதி —O— சிறு மணி உருவில் (granular) அமைந்துள்ள ஸ்டார்ச் தவிர, தனிவினையுறுப்புச் செல்கள் (parenchymatous cells) எனும் சிறப்புச் செல்களைக் கொண்ட கிழங்குகளிலும் ஸ்டார்ச் மலிந்துள்ளது. ஸ்டார்ச்சில் 75% அமைலோபெக்ட்டினாகவும், 25% அமைலோஸாகவும் இருக்கும். இனப்பெருக்கத்திற்குச் சிறப்பான உத்திகளைப் பயன்படுத்தி அமைலோஸ் அடக்கத்தை 75% ஆக மாற்றலாம். அமைலோபெக்ட்- டினை விட அமைலோஸ் எளிதில் செரிக்கிறது. சில புல்வகைகளில் ஸ்டார்ச்சுக்குப் பதிலாக ஃபிரக்டோஸ் தொகுதிகளாலான பாலிசாக்கரைடுகள் செறிவேற்றம் அடைகின்றன. இவை விலங்கினங்களால் எளிதில் செரிக்கப்படுவதில்லை. விலங்கினங்கள் ஸ்டார்ச்சைத் தம் உடலில் தயாரிப்பதில்லை. பதிலாகக் கிளைக்கோஜென் எனும் பாலிசாக்கரைடைத் தயாரிக்கின்றன. முதுகெலும்புள்ளன, முதுகெலும்பற்றன தவிர பூஞ்சாணங்கள், முதற்றோன்றிகள் (protozoa) ஆகியனவற்றுள்ளும் கிளைக்கோஜன்கள் உள்ளன. உயர் விலங்கினங்களின் கல்லீரலிலும், தசைச் செல்களிலும் உயர் செறிவுகளில் கிளைக்கோஜன் உள்ளது. மெலெழுந்த வாரியாகக் கிளைக்கோஜெனின் வடிவமும் அமைலோபெக்டினின் வடிவமும் ஒத்தவை போல் தோன்றினாலும் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. இறுக்கமான நிலையிலோ, தசையியக்கம் விரைவாக நிகழும் போதோ உடலிலுள்ள கிளைக்கோஜன் சிதைவுற்றுக் குளுகோஸாக மாறுகிறது. சில நாள் உண்பதை நிறுத்தினால், கல்லீரலில் உள்ள கிளைக்கோஜன் சேமிப்பு மிகுதியாகக் குறைவதைக் காணலாம். பயிரினங்களில் ஸ்டார்ச்சை விடச் செல்லுலோஸ் கூடுதலாகவுள்ளது. செல்லின் சுவரில் செல்லுலோஸ், பெண்டோஸண் (வைக்கோலில் உள்ளது). கோந்தையொத்த பொருளான லிக்னின் ஆகியன கலவையாக உள்ளன. பெரும்பாலான தாவரங்களில் 40-60% செல்லுலோஸ் உள்ளது. பருத்தி ஏறத்தாழ தூய செல்லுலோஸ் ஆகும். கணுக்காலிகளான பூச்சிகளில் கைட்டின் என்ற கார்போஹைட்ரேட் இடம் பெறுகிறது. வடிவமைப்புகள். கார்போஹைட்ரேட்டுகளின் வடிவமாற்றியம் எமில் ஃபிஷர் என்பாரால் நன்கு ஆராயப்பட்டுள்ளது. கார்போஹைட்ரேட் வேதியியலில் ஒளியியல் மாற்றியம் (optical isomer) மைய இடம் பெறுகிறது. இரு மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று ஆடி உருவ அமைப்பில் இருப்பின், அவை ஆடி எதிர் வடிவங்கள் (enantiomers) என்றும், இரு மாற்றியங்கள் ஒளியைச் சுழற்றும் தன்மையுடையனவாக, ஆனால், ஆடி உருவ அமைப்புகள் அற்றனவாயிருப்பின், டயாஸ்டீரியோமெர்கள் (diastereomers) குறிப்பிடப்படுகின்றன. ஒளியைச் சுழற்றும் இயல்பைக் கொண்டிருப்பதற்குச் சமச்சீர்மையற்ற கார்பன் அணு இன்றியமையாத் தேவையாகும். சம வச அமைப்பு அற்ற ‘n’ சமச்சீர்மையற்ற கார்பன் அணுக்கள் இடம் பெற்றிடின், அம்மூலக்கூறு 20 மாற்றியங்களைப் பெற்றிருக்கும். குளூக்கோஸ் மூலக்கூறில் நான்கு சமச்சீர்மையற்ற கார்பன் அணுக்கள் உள்ளன என்றாலும், அவ்வணுக்கள் முற்றிலும் வேறு பட்டவை எனக் குறிப்பிட முடியாது. சம கார்பன் அணுக்களைக் கொண்ட ஆல்டோஸுக்கும் கீட்டோஸுக்கும் சமச்சீர்மையற்ற கார்பன் அணுக்களின் எண்ணிக்கையில் வேறுபாடுண்டு. ஆல்டோஸை விடக் கீட்டோஸில் ஒரு கார்பன் அணு குறைவாக இருக்கும். எந்த ஒற்றைக் சாக்கரைடாயினும்,அதன் ஹைட்ராக்சைடு தொகுதி வச அமைப்பு D-கிளிசரால்டிஹைடு எனும் மூலக்கூறின் அடிப்படையில் நிறுவப்படுகிறது. கார்பன் அணுக்கள் ஆல்டிஹைடு தொகுதியிலிருந்தோ, கீட்டோ தொகுதியை யடுத்த முனையிலிருந்தோ வரிசைப்படுத்தப்படும். D- உருவ அமைப்புக்கான அடிப்படை ஆல்டிஹைடு தொகுதியின் எதிர் முனையிலிருந்து தொடங்கி வரையறுக்கப்படும், ஆல்டிஹைடு அல்லது கீட்டோ தொகுதியின் மறுமுனையிலிருந்து எண்ணுகையில் முதல் சமச்சீரற்ற கார்பனின் ஹைட்ராக்சைடு தொகுதி வலப்புறமாக அமைந்தால் அம்மூலக்கூறு D வடிவமைப்பாகும்; இடப்புறமாக அமைந்தால் அது L- வடிவமைப்பாகும். D, L குறியீடுகளுக்கும் ஒளிச்சுழற்சியின் குறியீட்டுக்கும் தொடர்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, இயற்கையில் கிடைக்கும் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் இரண்டுமே D வடிவமைப்புக் கொண்டவையாகும். ஆனால், குளூக்கோஸ் வலஞ்சுழி இயல்பிலும், ஃபிரக்டோஸ் இடஞ்சுழி இயல்பிலும் உள்ளன. உயிரியல் அமைப்புகளில் D அல்லது L ஏதேனும் ஒரு வகை வடிவமைப்பு மட்டுமே பயனாகிறது. சர்க்கரை மூலக்கூறுகளில் இரண்டுக்கு மேற்பட்ட சமச்சீரற்ற கார்பன் அணுக்கள் உள்ளமையால், பல DL இரட்டைகள் தோன்றுகின்றன. ஆனால் இவற்றுள் பெரும்பாலானவை எதிர் வடிவங்களல்ல. கார்போஹைட்ரேட்டுகளின் வடிவமைப்புகளை முடிவு செய்வதற்கு ஒளிச்சுழற்சி சிறந்த உத்தியேயாயினும், பல சர்க்கரைக் கரைசல்களின் சுழற்சிக் கோணம் புதிதாகத் தயாரித்த நிலையிலிருந்து நேரம் செல்லச் செல்ல மாறிக் கொண்டே வரும். இத் தோற்றப்பாடு சிதைபுரி மாற்றம் எனப்படும். இத்தோற்றப்பாட்டை அமிலங்கள், காரங்கள் இரண்டுமே வினையூக்கம் செய்கின்றன. ஆல்டிஹைடு தொகுதியிலுள்ள கார்பனும், கீட்டோ தொகுதியிலுள்ள கார்பனும் (முறையே ஆல்டோஸிலும்) கீட்டோஸிலும் சமச்சீரில்லாக் கார்பனாக மாறுவதால் இந்நிகழ்வு தோன்றுகிறது. இதன் விளைவாகப் பெரும்பாலான பென்டோஸ்களும், ஹெக்சோஸ்களும் நேர்கோட்டுச் சங்கிலி அமைப்பில் தோன்றுவனவல்ல. குறிப்பாக, கரைசல் நிலையில் இவை வளைய உருவைப் பெறுகின்றன. இவ்வமைப்புகளை ஹெமி அசெட்டால்கள் என்றும் ஹெமிகீட்டால்கள் என்றும் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, குளூக்கோஸ் மூலக்கூறின் 5-ஆம் கார்பன் அணுவில் இணைந்துள்ள ஹைட்ராக்சைடு தொகுதி முதல் கார்பனான ஆல்டிஹைடு C=O இரட்டைப் பிணைப்பில் கூடுதல் வினை புரிந்ததாகக் கருதப்படுகிறது. புதிதாக உருவாகியுள்ள சமச்சீரில்லாக் கார்பன் அணுவில் H-C-OH என்றும், HO-C-H என்றும் இரு வடிவமைப்புகள் தோன்றலாம். முதல் அமைப்புள்ள மூலக்கூறு α-D-குளூக்கோஸ் என்றும் இரண்டாம் வகை β-D-குளூக்கோஸ் என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஹெமிஅசெட்டால் தோற்றத்தால் உருவாகும் சமச்சீரில்லாக் கார்பன், சீர்மை அகற்றப்பட்ட கார்பன் (anomeric carbon)எனப்படும். α-வடிவமைப்பில் முதல் கார்பனின் -OH தொகுதி ஆக்சிஜன் வளையத்தின் திசையிலும், β-வடிவமைப்பில் —OH தொகுதி ஆக்சிஜன் வளையத்தின் எதிர்த்திசையிலும் அமையும். இவ்வளைய வடிவங்களில் HOH CHOH தொகுதிகளின் முப்பரிமாண இருக்கைகளைக் குறிப்பிடக் கூடிய வகையில் ஹவொர்த் என்பார் ஓர் அறுகோண வடிவத்தை வரைந்தார். அறுகோண வடிவைத் தவிர ஐங்கோண வடிவிலும் குளூக்கோஸ் இருக்கக் கூடும். வளைய ஹெக்சேன் தொடர்புப் பொருள்களைப் போன்றே ஹாவொர்த் அமைப்பும் நிறைவுற்ற பிணைப்புகளாலான அறுகோண வளையமாதலால், நாற்காலி மற்றும் படகு வடிவங்களில் இருப்பதற்கு வாய்ப்புண்டு. நீரியக் கரைசல் நிலையில் நேர் சங்கிலி வடிவம் சுமார் 1%க்கும் குறைவாகவே இடம் பெறுகிறது. தயாரிப்பும் பகுப்பாய்வும். பொதுவாக, பாலிசாக்கரைடுகளை அமிலச் சிதைவுக்குட்படுத்தியே மோனோ சாக்கரைடுகள் தயாரிக்கப்படுகின்றன. மோனோ சாக்கரைடு கலவையைப் பிரிப்பதற்குப் பரப்புக் கவர்ச்சிப் பகுப்பாய்வு பயன்படுத்தப்படுகிறது. குறை சாக்கரைடுகளையும், பாலிசாக்கரைடுகளையும் தயாரிப்பதற்குத் தனி உத்திகள் உள்ளன. பாலிசாக்கரைடுகள் ஒரு பரந்த மூலக்கூறு எடை வரம்பிலேயே தயாரிக்க வல்லன. செல்லுலோஸ் போன்ற நீரில் கரையா கார்போஹைட்ரேட்டுகளின் தூய்மையை நிறுவுவது எளிதன்று. கார்போஹைட்ரேட்டுகளின் பண்பறி பகுப்பாய்வுக்குப் பல வண்ண வகை ஆய்வுகள் உள்ளன. மோலிஷ் ஆய்வில் ஒரு மோனோ சாக்கரைடை α-நாஃப்தால் -HSO கலவையிலிட்டால் ஊதா நிறமாக மாறுகிறது. டாபர் ஆய்வில் 5-கார்பன் சர்க்கரைகளை அடர் அசெட்டிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட பென்சிடீலுடன் வினைப்படுத்தினால் (செர்ரி பழச்) சிவப்பு நிறம் தோன்றுகிறது. கார்போஹைட்ரேட் பகுப்பாய்வுக்கு ஒளிச் சுழற்சி முறையே முன்பு பெருமளவு பயன்படுத்தப் பட்டது. ஒளிச் சுழற்சிக் கோணத்தின் எண் மதிப்பை யும், குறியீட்டையும் கொண்டு முதல் கார்பனிலுள்ள ஹைட்ராக்சில் தொகுதியின் வசத்தை அறியலாம். α-வடிவமைப்புக் கொண்ட கிளைக்கோசைடுகள், β-வடிவமைப்புக் கிளைக்கோசைடு களை விட ஒளிச் சுழற்சிக் கோணம் கூடுதலாக அமையப் பெற்றவை. ஒளிச் சுழற்சி, கூட்டுப் பண்பு அன்று; மூன்று குளூக்கோஸ் தொகுதிகளைக் கொண்ட டிரை சாக்கரைடின் ஒளிச் சுழற்சி மதிப்பு மூன்று குளூக்கோஸ் தொகுதிகளின் கூட்டு மதிப்பு ஆகாது. சர்க்கரை வகை ஆல்கஹால்களும் (சார்பிட்டால், மானிட்டால்), சர்க்கரை வழி அமிலங்களும் (குளூகோனிக் அமிலம்) வளைய அமைப்புப் பெறாதவை. அவற்றின் ஒளிச் சுழற்சிக் கோணம் மிக மிகக் குறைவாகும். இதிலிருந்து ஒளிச் சுழற்சிப் பண்புக்கும் கார்போஹைட்ரேட்டின் வளைய அமைப்புக்கும் தெருங்கிய தொடர்பு இருத்தல் தெரிய வரும். கிளைக்கோஸைடை நீராற்பகுத்தால் நிகழும் ஒளிச் சுழற்சி மாற்றத்தை நேரத்தின் சார்பலனாக வரைபடமாக்கி இவ்வினையின் விரைவைக் கணக்கிடலாம். அகச் சிவப்பு நிரலியல் (infrared spectroscopy), அணுக்கருக் காந்த உடனிசைவு நிரல்(nuclear magnetic resonance spectrum)ஆகியனவும் கார்போஹைட்ரேட் வடிவமைப்புகளை ஆராய்வதற்கு உதவுகின்றன. பாகுத்தன்மை அளவைகளின் அடிப்படையில் கார்போஹைட்ரேட்டுகளின் மூலக்கூற்று எடைகளையும், வடிவங்களையும் அறியலாம். கிளைக்கோசைடுகள் இவை மோனோ சாக்கரைடு வகைக் கார்போஹைட்ரேட்டுகளின் அசெட்டால்கள் ஆகும். மோனோ சாக்கரைடுகள் யாவும் ஆல்டிஹைடு அல்லது கீட்டோன் தொகுதியைக் (முதல் கார்பன் அணுவில்) கொண்டவையாதலால் ஏனைய ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் போன்றே ஒரு மூலக்கூறு ஆல்கஹாலுடன் கூடுதல் வினை புரிந்து ஹெமி அசெட்டால் அல்லது ஹெமி கீட்டாலையும், மேலும் ஒரு மூலக்கூறு ஆல்கஹாலுடன் குறுக்கவினை புரிந்து அசெட்டாலையும் (அல்லது கீட்டாலையும்) உண்டாக்க வேண்டும் எனக் கருதலாம். ஆனால், குளூக்கோஸ் மூலக்கூறு ஒரே ஒரு மெத்தில் ஆல்கஹால் மூலக்கூறுடன் குறுக்கவினையுற்று அசெட்டாலைத் தருகிறது. ஹெமி அசெட்டால், இடைநிலைச் சேர்மமாக விளைவதில்லை. இந்த ஆய்வினால் குளூக்கோஸின் ஃபிஷர் வாய்ப்பாடு திருத்தப்பட வேண்டியதாயிற்று. குளூக்கோஸின் ஆல்டிஹைடு தொகுதியில் அதே மூலக்கூறின் 5-ஆம் கார்பன் அணுவில் இணைந்த ஈரிணைய ஆல்கஹால் தொகுதி கூடுதல் வினை புரிந்து ஹெமிஅசெட்டாலைத் தருவதாகவும், இவ்வினை ஒரு மீள் வினையாதலால், இவ்வினையால் விளையும் ஹாவொர்த் வளைய அமைப்புக்கும், ஃபிஷர் அமைப்புக்கும் சமநிலை நிலவுவதாகவும் கண்டறியப்பட்டது. சமநிலை, வளைய அமைப்பின் பக்கம் சாய்ந்துள்ளது. வளைய அமைப்புக்கு முதன்மையான சான்றுகள் இரண்டாகும். ஆல்டிஹைடு தொகுதி -OH தொகுதியாக மாறினால்தான் குளூக்கோஸ் மெத்தில் ஆல்கஹாலுடன் குறுக்க வினையுற்று மெத்தில் குளூக்கோஸைடு (அசெட்டாலை) உண்டாகும் வினைக்கு விளக்கம் அளிக்க இயலும். குளூக்கோஸ் நீரியக் கரைசலைத் தயாரித்து நீண்ட நேரம் தேக்கி வைத்திருந்தால், அக்கரைசலின் ஒளிச் சுழற்சிக் குறியீடு வலஞ்சுழியிலிருந்து சிதைபுரி மாற்றம் (mutarotation) எனும் இத்தோற்றப்பாட்டை ஃபிஷர் சங்கிலி வாய்ப்பாட்டின் அடிப்படையில் விளக்க இயலாது. வளைய வாய்ப்பாட்டில் ஆல்டிஹைடு கார்பன் ஹெமி அசெட்டாலாக மாறியதால், முதல் கார்பன் அணு சமச்சீரில்லாத கார்பனாக மாறி, 5-ஆம் கார்பன் அணுவின் சமச்சீரின்மை மாறி விடும். முதல் கார்பன் அணுவில் (anomeric carbon) -OH தொகுதி சங்கிலிக்கு வலப்புறமோ, இடப்புறமோ அமைவதைப் பொறுத்து α-D-குளூக்கோஸ் என்றும், β-D-குளூக்கோஸ் என்றும் இருவகைக் குளூக்கோஸ் மூலக்கூறுகள் தோன்றுகின்றன. இந்த ஹைட்ராக்சைடு தொகுதி மெத்தில் ஆல்கஹாலுடன் வினையுறுவதால், மெத்தில் குளூக்கோஸைடுகளிலும் இரு வகைகள் (α மற்றும் β) தோன்றுகின்றன. புதிதாகத் தயாரிக்கப்பட்ட குளூக்கோஸ் கரைசல் எந்த வடிவமைப்பைப் பெற்றிருந்தாலும், நீண்ட நேரம் சேமித்து வைக்கும் போது, மெல்ல மெல்ல α,β இரு வகைக் குளூக்கோஸ்களும் கலந்த சமநிலைக் கலவை உருவாகி விடும். இதன் விளைவே சிதைபுரி மாற்றம் ஆகும். குளூக்கோஸ் சிதைபுரிமாற்றத் தோற்றப்பாட்டைக் காட்டுவது போல் மெத்தில் குளூக்கோஸைடுகள் தருவதில்லை. இவ்வுண்மையிலிருந்து இத்தோற்றப்பாட்டின் இயங்கு முறையை வருவிக்கலாம். (படம் 8) குளூக்கோஸ் மட்டுமன்றிப் பிற மோனோ சாக்கரைடுகளும் மெத்தில் ஆல்கஹாலுடன் அசெட்டால்களை உருவாக்க வல்லன. இந்த அசெட்டால்கள் கிளைகோஸைடுகள் என்னும் பொதுப் பெயரில் வழங்கப்படுகின்றன. α மற்றும் β மெத்தில் குளூக்கோஸைடுகள் படிக உருச் சேர்மங்கள். பின்னப் படிகமாக்கல் முறையிலோ, நொதிகளைப் பயன்படுத்தியோ அவற்றை எளிதில் பிரிக்கலாம். மால்ட்டேஸ் எனும் நொதி α-வடிவமைப்பை மட்டுமே நீராற்பகுக்க வல்லது. எமல்சின் எனும் நொதி β வடிவமைப்பை மட்டுமே நீராற்பகுக்கும். மெத்தில் α-D- குளூக்கோஸைடின் ஒளிச் சுழற்சிக் கோணம் + 159. மெத்தில் β-D- குளூக்கோஸைடின் ஒளிச்சுழற்சிக் கோணம் -33° அவற்றை நீராற்பகுப்பதற்கு நீர்த்த அமிலங்களையும், காரங்களையும் பயன்படுத்தலாம். கிளைக்கோஸைடுகளை நீராற்பகுத்தால் சர்க்கரையும், சர்க்கரை அல்லாத ஒரு பொருளும் (aglycon) கிடைக்கின்றன. சர்க்கரை குளூக்கோஸாக இருந்தால், கிளைகோஸைடு, குளூக்கோஸைடு எனப்படும். பெரும்பாலான கிளைக்கோஸைடுகள் குளிர்ந்த, சூடான நீரில் கரையக் கூடியவை. 95% எத்தில் ஆல்கஹாலிலும் கரைய வல்லன; ஆனால், ஈதரில் கரைவதில்லை. கிளைக்கோஸைடுகள் தாவரங்களில் (குறிப்பாக இலைகள், மொட்டுகள், இளங்குருத்துகள் ஆகியவற்றில்) மலிந்து கிடக்கின்றன. சில வகைகள் மரப்பட்டைகளிலும், விதைகளிலும் உள்ளன. மலர் வண்ணப் பொருள்களான ஆந்தோசயனின்கள், மரப் பொருள்களான டானிகள் ஆகியனவும் கிளைக்கோசனடுகளே ஆகும். சில நன்கறியப்பட்ட கிளைக்கோஸைடுகள் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன. —மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. I.L. Finar, Organic Chemistry, Vol.II, Sixth Edition, ELBS, London, 1982. சாக்குத் துணிகள் காண்க: சணல் துணிகள் சாக்குலைனா இது நண்டுகளின் மேல் ஒட்டியிருக்கும் கணுக்காலி ஒட்டுண்ணியாகும். ஒட்டுண்ணியாக இருப்பதால் உடல் உறுப்புகள் அனைத்தும் குறைவுபட்டிருக்கும். வளர்ந்த உயிரியில் கணுவாக்கம் இணை உறுப்புகள் புலனுறுப்புகள் உணவு மண்டலம் போன்ற கணுக்காலிப் பண்புகளில் எதுவும் இதில் இல்லை. இது ஒரு முட்டை வடிவப் பிதுக்கமாக நண்டின் பின் பகுதியில் ஒரு சிறிய தண்டின் மூலமாக அடி வயிற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு மெல்லிய பை போன்ற வெளிப் போர்வை, உள்ளுறுப்புத் தொகுதிகளையும் இணையுறுப்புகளையும் மூடியுள்ளது. பல ஆண்டுகள் இதை ஒரு விலங்கு என்றே எவரும் கருதவில்லை. இதனுடைய வளர்ச்சியில் நன்கு நீந்தக் கூடிய நாப்ளியஸ் (nauplius) இளவுயிரி இருந்ததைப் பார்த்த பிறகே இது ஒரு கணுக்காலி என்று முடிவு செய்தனர். இந்த இளவுயிரி, பிறகு சைப்ரிஸ் (cypris) உருமாறுகிறது. தன்னுடைய நுண் உணர் கொம்பின் (antennule) உதவியால் இளம் நண்டின் பின் பக்கத்தில் ஒட்டிக் கொள்ளத் தொடங்குகிறது. பின்னர், சைப்ரிஸ் இளவுயிரி தன்னுடைய உடல், இணையுறுப்புகள் அனைத்தையும் இழந்து ஒரு செல் திரட்சியாக மாறுகிறது. இதற்கு, கென்ரோஜன் இளவுயிரி என்று பெயர். இது ஓம்புயிரியின் உடலுள் புகுந்து சிறுகுடலுக்குக் கீழ் தங்கிக் கொள்கிறது. உள் ஒட்டுண்ணியாக மாறிய பிறகு பிதுக்கமாகத் தெரிகிறது. இது, மெல்ல, மெல்ல வேர்த்தூவிகளைப் போன்ற அமைப்புகளை நண்டினுள் செலுத்தி ஓம்புயிரியின் உடலிலிருந்து ஊட்டம் முழுமையும் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. செவுள்கள், இதயம், மூளை தவிர அனைத்துப்பகுதிகளுக்கும் இதன் உறிஞ்சும் வேர்த் தூவிகள் பரவுகின்றன. நண்டு தோலுரிக்கும் போது, உள்ஒட்டுண்ணியாக இருந்தது, வெளி ஒட்டுண்ணியாக மாறுகிறது. இப்போது, முட்டை வடிவப் பையாக, இனப்பெருக்கத் திறப்பு அல்லது பொது மலத் திறப்பு மூலம் வெளியே திறக்கிறது. இந்த ஒட்டுண்ணியால், ஓம்புயிரியில் பல இரண்டாம் நிலைப் பால் மாற்றங்கள் நிகழ்கின்றன. நுட்பமாக எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது என்பது இன்னும் சரியாக அறியப்படவில்லை. —ஜி. எம். நடராஜன் சாகுபடி முறைக் கட்டுப்பாடு காண்க: பயிரிடும் திட்டம் சாங்க்ராய்டு பால்வினை நோய்களில் ஒன்றாகிய சாங்க்ராய்டு (chancroid) என்பது ஹீமோபிலஸ் டுக்ரீய் (Haemophilus ducreyi) என்னும் கிராம் நெகடிவ் நுண்ணுயிரியால் உண்டாகிறது. 1-2 மைக்ரான் நீளமுள்ள இந்நுண்ணுயிரி சாயமேற்றப்பட்டால், மீன் கூட்டச் சங்கிலித் தொடர் போல் தோன்றும். இந்நோய் பெரும்பாலும் வெப்ப மண்டல நாடுகளிலேயே காணப்படுகிறது. நோயுடைய பெண்ணுடனோ, ஆணுடனோ புணர்ச்சி செய்த 1-8 நாளுக்குள் இந்நோய் தோன்றும், பிறப்புறுப்புகளில் தோன்றும் பரு சிறிய தாக வலியுடன் காணப்படும். விரைவில் இது சீரற்ற புண்ணாக மாறுகிறது. தொடையிடை (கவான்), நிணக் கட்டிகள் வீங்கிப் பழுத்துப் புண்ணாகும். இத்துடன் அசதியும், காய்ச்சலும் தோன்றும். இதை உடனடியாகக் கவனிக்காவிடில், தொடையிடைச் சீழ்க் கட்டிகள் தோன்றி, புண்களாக மாறி, திசுச் சிதைவு தோன்றக் கூடும். பிறப்புறுப்புகளில் தொடு வலியுடன் கூடிய பல புண்களும், நிணக் கட்டிகளும் இருக்கும்போது, சாங்க்ராய்டு நோய் என எளிதில் முடிவு செய்யலாம். எனினும் வகைப்படுத்தி முடிவு செய்யும் போது, மேக நோய், அரையாப்புக் கட்டி நோய், கொடை இடைக் கழலைகள், பிறப்புறுப்பு அக்கி ஆகிய நோய்களையும் நினைவில் கொள்ள வேண்டும். பிறப்புறுப்பின் மீது காணப்படும் புண்களிலிருந்து எடுக்கப்பட்ட நீர்மத்தைக் கிராம் முறைப்படிச் சாயமேற்றினால், ஹீமோஃபைலஸ் டுக்ரீய் நுண்ணுயிரியைக் காணலாம். சல்ஃபாடிமிடின், கோ-டிரைமாக்சசோல், ஸ்ட்ரெப்டோமைசீன், ஆக்சிடெட்ரா சைக்ளின் போன்ற மருந்துகள் பயனளிக்கின்றன. —அ.கதிரேசன் நூலோதி. A. King et.al., Venereal Diseases, Fourth Edition, Bailliere Tindall, London, 1982. சாட்டன்—பௌமான் வினை ஓரிணைய, ஈரிணைய அமீன்கள், ஃபீனால்கள், ஆல்கஹால்கள் போன்றவை நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடு முன்னிலையில் பென்சாயில் குளோரைடுடன் வினைப்படுவதைச் சாட்டன் பௌமான் வினை (Schotten Baumann reaction) என்பர். இவ்வினை பென்சாயிலேற்றம் என்றும் குறிக்கப்படும். மேற்சொன்ன பற்பல ஹைட்ராக்சி மற்றும் அமினோ சேர்மங்களை அவை அரோமாட்டிக் அல்லது அலிஃபாட்டிக் சேர்மங்களாக இருப்பினும், இம்முறையில் பென்சாயிலேற்றம் செய்யலாம். சேர்மத்தைப் பென்சாயில் குளோரைடுடன் சேர்த்துக் காரத்தின் முன்னிலையில் நன்கு குலுக்கி எடுத்தால் இவ்வினை நிகழும். CH{[sub|5COX + HO → CHCOOH + HX CHCOX + HOR →RCOOR + HX CHCOX + NH →RCONH + HX பென்சாயில் குளோரைடு, நீரிலும் நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடு முன்னிலையிலும் மிகத் தாமதமாகவே சிதைவுறும். எனவே ஓரிணைய, ஈரிணைய அமீன்கள், ஃபீனால்கள், ஆல்கஹால்கள் இவற்றிலுள்ள வீரிய ஹைட்ரஜன் அணு நீக்கப் பெற்று, கருக் சுவர் பதிலீட்டு வினையின் (nucleophilic substitution) மூலம் இவ்வினை நிகழும். பொதுவாக அசைல்ஹாலைடுகளும், ஆல்கஹால்களும் வினை புரிந்து எஸ்ட்டர்களை உருவாக்கும். வேறு வினைத் தொகுதிகளில் குறுக்கிடுதல் எதுவும் இல்லையாதலால், இவ்வினை மேற்சொன்ன வினைத் தொகுதிகளைக் கரிமப் பண்பறிப் பகுப்பாய்வினால் கண்டறியப் பயன்படும். பென்சாயில் பெறுதிகள் படிக வடிவமுள்ளவை. இவற்றுக்குத் திட்டமான உருகு நிலையுண்டு. கார்போனைல் கார்பன், எலெக்ட்ரான் அடர்த்தி குறைந்த மையமாகத் திகழ்வதால், அலிஃபாட்டிக் அமில குளோரைடுகளுடன் (எலெக்ட்ரான் ஈனிகளுடன்) மிகு வீரியமாகச் செயல்படும். பென்சனிலைடு (CHNHCOCH), கிளைக்கால் டைபென்சோயேட் ((CH)(COOCH)), மெத்தில் 3.5- டை நைட்ரோ பென்சோயேட் (CH (NO)COOCH) ஆகியன பென்சாயில் பெறுதிகளுக்கு எடுத்துக்காட்டுகள். —டி. சுகுமார் சாண எரிவளிமம் சாணத்திலிருந்து கிடைக்கக் கூடிய எரிவளிமம், சாண எரிவனிமம் (gobar gas) எனப்படும். தற்போது ஈரச் சாணத்தை வரட்டியாகவோ, உரமாகவோ பயன் படுத்துகின்றனர். மாறாக ஈரச்சாணத்தை எரிவளிமக் கருவியிலிட்டுக் கிடைக்கக் கூடிய எரிவளிமத்தின் வெப்பம், அதை வரட்டியாகப் பயன்படுத்தும் வெப்பத்தை விட 20% அதிகமாகக் கிடைக்கிறது. அதே போல், சாண எரிவளிமக் கருவியில் செரிக்க வைத்து வெளித் தள்ளப்படும் சாண வடிசாற்றின் எரு, குழிகளிலிட்டு மட்க வைத்துக கிடைக்கும் எருவை விட 40% அதிகமாகக் கிடைக்கிறது. இந்த எரு தூய்மையானது; கேடற்றது. சாண எரிவளிமக் கருவி, சாண எரிவளிமத் தோற்ற அமைப்பு படம் 1, 2 இல் காட்டப்பட்டுள்ளது. இதிலுள்ள முக்கியமான பகுதிகள் செரிமான அமைப்பு, வளிமச் சேமக் கலம் ஆகியனவாகும். செரிமான அமைப்பு. இது தரை மட்டத்திற்குக் கீழே தோண்டி எடுக்கப்பட்ட ஒரு கிணறு போன்ற கட்டுமானம் ஆகும். அமைக்கப்படும் கருவியின் கொள்திறனுக்கேற்றவாறு கிணற்றின் ஆழம் சுமார் 3.5-6 மீ வரையும், அதன் விட்டம் 1.35-5 மீ வரையும் வேறுபட்டிருக்கும். இதன் மையத்திலுள்ள ஒரு தடுப்புச் சுவர் இக்கிணற்றை இரண்டு அரைவட்டக் கூறுகளாகப் பிரிக்கிறது. தடுப்புச் சுவருக்கு இரு பக்கத்திலும், நீண்ட கல்நார் அட்டைக் குழாய்கள் தரை மட்டத்திலிருந்து கிணற்றின் அடிப்பகுதி வரை சாய்வாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. இக்குழாய்களின் திறந்த பகுதிகள் கிணற்றின் இரு பக்கத்திலும் எதிர்வாட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒன்று உட்செல் குழாயாகவும், மற்றது வெளிச்செல் குழாயாகவும் பயன்படும். உட்புறக் குழாயுடன் இணைந்த தொட்டி, வெளிப்புறக் குழாயுடன் இணைந்துள்ள தொட்டியைவிடச் சிறிது உயரமாக இருக்கும். சாணம், நீர் ஆகியவற்றை 4:5 என்ற விகிதத்தில் கலந்து உட்செல் குழாயின் மூலம் நிரப்ப வேண்டும். வேண்டிய அளவு நிரம்பிய பின்பு, எந்த அளவுக்குச் சாணக் கலவை உட்புறத் தொட்டியில் செலுத்தப்படுமோ, அந்த அளவுக்கு வெளிப்புறத் தொட்டியில் நீர்க் கலவை வெளிப்படும். தடுப்புச் சுவர் கிணற்றின் உயரத்தில் முக்கால் பங்கு மட்டுமே எழுந்திருப்பதால் சாணக் கலவையிலேயே அது மூழ்கியிருக்கும். சுமார் ஐம்பது நாளுக்கு வேண்டிய சாணக் கலவை கொள்ளும் அளவுக்கு இக்கிணறு அமைக்கப்பட்டிருக்கும். வளிமச் சேமக் கலம். இது மெல்லிய எஃகு தட்டினாலான கவிழ்ந்த முரசு வடிவ அமைப்பு டையது. இதன் விட்டம் கிணற்றின் உள்விட்டத்தை விடச் சற்றுக் குறைவாகவே இருக்கும். கிணற்றின் மேற்புறத்தில், படத்தில் காட்டியவாறு குல்லாய் போல் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். இது சாணக் கலவையில் அமிழ்ந்து கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள சுவர்ப் பக்க விளிம்பு வரை தாங்கி நிற்கும். செரிமான அமைப்பிலிருந்து வெளிப்படும் வளிமத்தை இம்முரசு சேகரிக்கிறது. முரசின் உட்புறப் பகுதியில் வளிமம் நிரம்ப நிரம்ப முரசு உயர்ந்து எழுகிறது. அதாவது முரசின் உட்புறப் பகுதியில் சேகரிக்கப்பட்ட வளிமத்தின் அழுத்தம் முரசின் எடைக்குச் சமமாக இருக்கும். இவ் வளிம அழுத்தத்தின் அளவு 7.5-10 செ.மீ. நீர்மட்ட அளவில் இருக்கும். இந்த அழுத்தம், முரசின் மேல் பகுதியிலுள்ள குழாயின் வழியாக வெவ்வேறு குடியிருப்புப் பகுதியிலுள்ள அடுப்புகளுக்கும், வளிம விளக்குகளுக்கும் செல்லும் அளவிற்குப் போதுமானது. முரசின் மேல் பகுதியிலுள்ள கட்டுப்பாட்டிதழ் இந்த எரிவளிமத்தைக் கட்டுப்படுத்துகிறது. நிரப்பப்படும் வளிமத்தின் அளவுக்கு ஏற்றவாறு முரசு மேலும் கீழுமாக இயக்கமடைவதற்கு வேண்டிய மையத்தண்டு கட்டும் போதே அமைக்கப்படும். எரிவளிமம் உண்டாகும் விதம். சாண எரிவளிமத்தை இரு முறைகளில் பெறலாம். ஒரு தாவரஞ் சார்ந்த பொருளைக் காற்றுப் படும்படி வைத்தால், அதனைச் சார்ந்த வளிமம் வளிமண்டலத்திற்குச் செல்கிறது. எஞ்சியது கலப்பு உரமாக நிற்கிறது. அதாவது, தாவரஞ்சார்ந்த பொருளில் உள்ள பாக்டீரியா ஆக்சிஜனுடன் சேர்ந்து இத்தகைய விளைவை உண்டாக்குகிறது. இந்நிகழ்ச்சிக்கு, காற்று வாழ் செரிமானம் (acorobic) என்று பெயர். மற்றொரு நிகழ்ச்சியைக் காற்றில்லாச் (anerobic) செரிமானம் என்பர். இந்நிகழ்ச்சி, ஆக்சிஜன் இன்றி ஏற்படுவதால் பயனுள்ள எரிவளிமம் கிடைக்கிறது. சாண எரிவளிமத்திலுள்ள முக்கிய எரிபொருள் மெத்தேன் எனும் வளிமம் ஆகும். சாண எரிவளிமக் கருவியில் காற்றில்லாச் செரிமானமே நிகழ்கிறது. முதலில் சாணச் சேற்றுப் பொருள்கள் சிறு சிறு மூலக்கூறுகளாகச் சிதைவுறுகின்றன. செரிமான அறைக்குள் செலுத்தப்பட்ட சாண நீரிலுள்ள ஆக்சிஜன் பொருள்களை ஆக்சிஜனேற்றம் செய்து அமிலங்களாகவோ, ஆல்கஹால்களாகவோ மாற்றிக் கார்பன் டை ஆக்சைடை வெளிப்படுத்துகிறது. இரண்டாம் நிலையில், பாக்டீரியா அமிலத்தையும் ஆல்கஹாலையும், மெத்தேனாகவும், கார்பன் டைஆக்சைடாகவும் மாற்றுகிறது. இந்த எரிவளிமத்தில் 60-70% வரை மெத்தேன் அடங்கியிருக்கும். நிலையான அளவுடைய எரிவளிமம் கிடைக்க, இந்த அமைப்புக்குச் சிறந்த சமநிலைச் சூழ்நிலை தேவை. வெப்பம், அமிலத் தன்மை. உள்ளீட்டுச் சாணக் கலவையின் செறிவு ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டால், வெளிப்படும் எரிவளிமத்தின் அளவு பாதிக்கப்படும். சான்றாக 75°C இல் வெளிப்படும் எரிவளிமம், 25°C இல் வெளிப்படும் எரிவளிமத்தைப் போல் இரண்டு மடங்கு இருக்கும். 10°C இல் மெத்தேன் வளிமம் வெளிப்படுவதில்லை. அதே போல் செரிமான அமைப்பில் இருக்கும் சாணக் கலவையின் அமிலத் தன்மை மாறினாலும் வெளிப்படும் எரிவளிமமும் பாதிக்கப்படும். சாணக் கலவையிலுள்ள அமிலத் தன்மையை ஹைட்ரஜன் அயனிச் செறிவு மூலம் குறிப்பிடுவர். அதற்குப் பயன்படுத்தப்படும் pH இன் அளவு 7-7.2 வரையிருந்தால் பெருமளவு மெத்தேன் கிடைக்கும். நிலையான சாண எரிவளிமம் கிடைக்க pH மதிப்பு 6.6 க்குக் குறையாமலும், 7.7 க்கு மிகாமலும் இருக்க வேண்டும். pH மதிப்பு 6.2 க்குக் குறைந்தால், சாணக் கலவையில் அமிலம் மிகுந்த பாக்டீரியாக்கள் நச்சுத் தன்மையைப் பெற்று விடும். இதைத் தவிர்க்க அம்மோனியம் ஹைட்ராக்சைடு போன்ற தடுப்புப் பொருளைச் சேர்க்க வேண்டும். பயன்கள். வழக்கில் பயன்படும் நிலக்கரி வளிமம் அல்லது பர்ஷேன் வளிமங்களில் அடங்கியிருக்கும் கூட்டமைவில் இருந்து சாண எரிவளிமத்தின் கூட்டமைவு மாறுபட்டிருப்பதால் சாண வளிமத்துக்குத் தனிப்பட்ட அடுப்புச் சிமிழ்களும் வளிம விளக்கு மெல்வலைகளும் தேவை. சாண எரிவளிமத்தை உருளைகளில் அடைத்து வைக்க முடியாது. கால்நடைகள் மிகுந்துள்ள சிற்றூர்களில் சமையல் செய்தல், தெரு விளக்கு ஏற்றுதல், குடி நீருக்காகக் கிணற்றிலிருந்து நீர் எடுக்கும் எக்கிகள், வேளாண்மை விசையேற்றங்கள், உப்பு நீரைக் குடிநீராக மாற்றுதல், குடிசைத் தொழில் போன்ற பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தலாம். நன்மைகள். சாண எரிவளிமம் கண்ணுக்கு ஊறு விளைவிக்காத புகையற்ற, நீல நிறச் சுடரை உடையது. விரைவில் சமைக்கலாம். சமையல் பாத்திரங்களில் கறைபடிவதில்லை. எரு. சாண எரிவளிமக் கருவியிலிருந்து வெளி வரும் நீர்மச் சாணக் கலவையில் சத்துள்ள நைட்ரஜனும், இலை தழைகள் மட்கிய சத்துப் பொருளும் அடங்கியுள்ளன. வெளிப்படுத்தப்படும் நீர்மச் சாணம் முழுமையான செரிமானம் அடைந்திருப்பதாலும், சிறப்பாகக் கூறுபடுத்தப்பட்டிருப்பதாலும், பாசன நீருடன் இதைக் கலந்து வயல்களுக்குப் பயன்படுத்தலாம். பாசன நீருடன் நேரிடையாகக் கலக்க முடியாத இடங்களில், நுரைத்தெழும் முறையில் கலப்பு உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக எரிவளிமக் கருவிக்கருகே சில குழிகள் வரிசையாகத் தோண்டி வைக்கப்படும். ஒவ்வொரு குழியிலும் புல், இலை, தழை போன்ற தாவரக் குப்பைகள் இடப்பட்டு, இவற்றின் மேல் நீர்ச் சாணக் கலவை நிரப்பப்படும். இதன் மேல் தாவரக் கழிவுப் பொருள்களைப் போட்டு மூடுவர். இவ்வாறு ஒரு குழி நிரம்பிய பின், அடுத்துள்ள குழியையும் இதேபோல் நிரப்புவர். குழிகளின் வடிவம், எண்ணிக்கை, கருவியின் கொள்ளளவு, இடவசதி ஆகியவற்றைப் பொறுத்திருக்கும். இறுதிக் குழி நிரம்புவதற்குள் முதல் குழியில் உள்ள எரு வெளியே எடுத்துச் செல்லும் அளவுக்குப் பதப்பட்டு விடும். கொள்ளளவு. வீட்டில் பயன்படுத்தப்படும் மிகச் சிறிய சாண எரிவளிமக் கலத்தின் கொள்ளளவு 70 கன அடி. இயல்பாக உணவு உண்டு, நன்கு வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு கால்நடையும் நாளொன்றுக்குக் கொடுக்கக் கூடிய ஈரச் சாண அளவு பின் வருமாறு: எருமை—14 கி.கி; எருது அல்லது பசு —10 கி.கி; கன்று—4 கி.கி. ஒரு கி.கி. ஈரச் சாணம், சுமார் 1.3 கன அடி சாண வளிமம் கொடுக்கும். ஒரு நபரின் ஒரு நாளைய சமையலுக்குத் தேவைப்படும் வளிமத்தின் கொள்ளளவு, 8-15 கன அடி வரை வேறுபடும். ஒரு சாண எரிவளிம அடுப்பை ஒரு மணி நேரம் பயன்படுத்த 12-16 கன அடி வரை சாண வளிமம் வேண்டும். 100 மெழுகுவர்த்தித் திறன் கொண்ட 2 அல்லது 3 வளிம விளக்கு (gas mantle) எரியத் தேவைப்படும் சாணவளிமம் 4-6 கன அடி வரை இருக்கும். வளிமப் பொறி ஒன்று, ஒரு குதிரைத் திறன் ஆற்றலை ஒரு மணி நேரம் கொடுக்க 15-20 கன அடி சாண வளிமம் தேவைப்படுகிறது. இந்தத் தோராயமான புள்ளி விவரங்களைக் கொண்டும், கிடைக்கக் கூடிய கால்நடைகளின் எண்ணிக்கையைக் கொண்டும், தேவையான கருவியை அமைத்துக் கொள்ளலாம். கிடைக்கக் கூடிய வெவ்வேறு கருவிகளின் கொள்ளளவு 2-140 கன மீட்டர் வரை வேறுபட்டிருக்கும். எரிவளிமக் கருவியில் மாட்டுச் சாணம் மட்டுமல்லாது, மனித மலம், சிறுநீர் போன்ற கழிவுப் பொருள்களையும் பயன்படுத்தலாம். சிற்றுண்டி விடுதி போன்ற இடங்களில் வீணாக்கப்படும் சோறு போன்ற கழிவுப் பொருள்கள், தாவரக் கழிவுப் பொருள்கள், செந்நீல நிறமுடைய மணி வடிவ நீர் மலர்கள், கிழங்குத் தண்டுகளையுடைய செடி வகைகள், வேண்டாத களைச் செடிகள், வளர்ப்புப் பறவைகளின் கழிவுப் பொருள்கள், வேண்டாத மீன் உறுப்புகள் ஆகிய பல விதமான கழிவுப் பொருள்களையும் இக்கருவியிலிட்டுச் செரிமானம் செய்யலாம். எனவே, இவ்வளிமத்தைச் சாண எரிவளி எனக் குறிப்பிடுவதுடன், உயிரி வளி (bio - gas) எனவும் குறிப்பிடலாம். —எல்.கே. இராமலிங்கம் சாணை பிடித்தல் தொழிற்சாலை யுகம் தொடங்கிய போது வெட்டிரும்பு என்பதே உலோகத்தை வெட்டப் பயன்பட்டது. இதிலிருந்து படிப்படியாக, ஒரு முனைப் பொறி போன்றவை தோன்றின. ஆயினும் இவையனைத்தும் மந்தமான மேற்பரப்பைத் தோற்றுவித்தன. பல் முனை வெட்டும் பொறியான சாணைச் சக்கரத்தைக் கொண்டு உலோகங்களை வெட்டுவதே சாணை பிடித்தல் எனப்படுகிறது. சாணை பிடித்தல் என்பது பொதுவாக 0.25 -0.50 மி.மீ. அளவிற்கு உலோகத்தைச் சாணைச் சக்கரத்தைக் கொண்டு நீக்குவதே ஆகும். சாணை பிடித்தலைச் சில சமயங்களில் முக்கிய உலோகம் அகற்றும் பணிகளில் பயன்படுத்தினாலும், வழக்கமாக இறுதிப் பணிகளிலேயே இது பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் வகையைச் சார்ந்து இதன் அளவு 0.000025 மி.மீ. வரை மாறுபடும். சாணை பிடித்தல் என்னும் முறை ஒருங்கிணைக்கப் பட்ட கார்பைடு (cemented carbide). கல் போன்ற கடினமான பொருள்களுக்கும் ஏற்றது. ஏனெனில், வழக்கத்திலுள்ள சாணை பிடிக்கும் சுரண்டிகள் (abrasives) வினை செய்ய வேண்டிய உலோகங்களை விட மிகவும் கடினத் தன்மை வாய்ந்தவையாக இருக்கும். சாணைச் சக்கரங்கள், சுரண்டும் துகள்களாலும, கட்டாற்றல் மிக்க பொருள்களாலும் ஆனவை. சிலிக்- கான் கார்பைடு, அலுமினியம் ஆக்சைடு போன்றவை பெரும்பாலும் சுரண்டிகளாகப் பயன்படும். இந்தச் சுரண்டிகள் சாணைச் சக்கரத்தில் கட்டாற்றல் மிக்க பொருள்களால் நன்கு பதிக்கப்பட்டு வெட்டு முனைகளாகப் பயன்படுகின்றன. இயற்கைச் சுரண்டிகள், செயற்கைச் சுரண்டிகள் எனச் சுரண்டிகள் இரு வகைப்படும். எமரி, குருந்தம் போன்றவை இயற்கைச் சுரண்டிகளுக்கும், கார்போரண்டம். அலாக்சைட் போன்றவை செயற்கைச் சுரண்டிகளுக்கும் எடுத்துக்காட்டுகளாகும். கட்டாற்றல் மிக்க பொருள்கள், சுரண்டித் துகள்களைக் கலவையாகச் சக்கர வடிவங்களில் வைத்திருக்கத் தக்கவையாகும். சுரண்டிகளில் சிலிக்கான் கார்பைடு படிகங்கள் கடினத் தன்மையும், எளிதில் விரிசல் அடையும் தன்மையும் கொண்டவை. ஆதலால், குறைந்த இழுவைத் திறன் கொண்ட அலுமினியம், பித்தளை, செம்பு போன்ற பொருள்களுக்குப் பயன்படுகின்றன. மேலும் கடினத் தன்மையும், உடையும் தன்மையும் கொண்ட கடின உலோகக் கலவை ஒருங்கிணைந்த கார்பைடு, பழுப்பு இரும்பு, பளிங்குக் கல் போன்ற பொருள்களுக்குப் பயன்படுகின்றன. அலுமினியம் ஆக்சைடு படிகங்கள் கடினத் தன்மையும், விரிசல் அடையாத் தன்மையும் கொண்டவை. ஆதவால், அதிக இழு திறன்கொண்ட கலப்பு உலோகக் கலவை எஃகு இரும்பு போன்ற பொருள்களுக்குப் பயன்படும். தற்போது பயனில் உள்ள பொருள்களாவன: லிட்ரிஃபைடு, சிலிக்கேட், ரப்பர், ரெசினாய்டு ஷெல்லாக் போன்றவை. பயன்படுத்தும் சுரண்டிகளைக் கொண்டும் (சிலிக்கான் அல்லது அலுமினியம்), துகளின் உருவைக் கொண்டும், துகள் வகை அல்லது கடினத் தன்மை, அமைப்பு (அடர்த்தி) இவற்றைக் கொண்டும் சாணைச் சக்கரங்களை வகைப்படுத்தலாம். அதிகமான உலோகத்தை நீக்க வேண்டியிருப்பின், பருமையான சாணைச் சக்கரத்தையும், சிறந்த பரப்பு வேண்டியிருப்பின் நுண் துகள் சாணைச் சக்கரத்தையும் பயன்படுத்த வேண்டும். மென்மையான உலோகத்தைச் சாணை பிடிக்க மிகு கட்டாற்றல் மிக்க சாணைச் சக்கரமும், கடினமான உலோகத்தைச் சாணை பிடிக்க, குறைந்த கட்டாற்றல் மிக்க சாணைச் சக்கரமும் பயன்படுகின்றன. மென்மையான உலோகத்தைச் சாணை பிடிக்கும் போது, பொறியை ஆழமாகப் பயன்படுத்த வேண்டியிருப்பதால், மிகு கட்டாற்றல் மிக்க துகள் கொண்ட சாணைச் சக்கரத்தையும், கடினத் தன்மை வாய்ந்த உலோகத்தைச் சாணை பிடிக்கும் போது, குறைந்த கட்டாற்றல் மிக்க துகள் கொண்ட சாணைச் சக்கரத்தையும் பயன்படுத்த வேண்டும். சாணைச் சக்கரத் தயாரிப்பில் உள்ள முக்கிய வழி முறைகள். முதலில் தூளாக்கப்பட்ட சுரண்டிப் பொடியைக் காந்தப் பிரிப்பான் வழியாகச் செலுத்தி இரும்பு மாசுகளை நீக்கிய பிறகு, தூசு போன்ற மாசை நீர் மூலம் கழுவி நீக்க வேண்டும். பல விதமான சல்லடைகள் வழியாகச் சுரண்டித் துகள்களைச் செலுத்திய பின் அளவுக்குத் தக்கவாறு துகள் வகைப் படுத்தப்படும். தகுந்த கட்டாற்றல் மிக்க பொருள்களைச் சுரண்டித் துகளுடன் கலந்து தகுந்த வடிவங்களில் வார்த்து உலர்த்த வேண்டும், நன்கு உலர்ந்ததும், இவை வெப்பப்படுத்தப் படுவதால், கட்டாற்றல் மிக்க பொருள்கள் சுரண்டித் துகள்களை நன்கு இறுகுமாறு பொருத்திக் கொள்கின்றன. முடிவில் தகுந்த வடிவத்தில் வெட்டப்பட்டுப் பயன்படுத்தப் படுகின்றன. சாணை பிடிப்பில், சாணைச் சக்கரம் உயர் வேகத்தில் சுழல வேண்டியிருப்பதால், சக்கரத்தில் எவ்வித விரிசலும் ஏற்படக் கூடாது. அதற்காக நீரியல் ஆய்வுகளுக்குச் சாணைச் சக்கரங்கள் உட்படுத்தப்படுகின்றன. மேலும், இவை நிலையான மற்றும் சுழற்சி நிலையில் நன்கு சமன் செய்யப்பட்ட பின்பே பொறிகளில் பொருத்தப்படுகின்றன. சாணை பிடிக்கும் போது உண்டான வெப்பத்தை வெளியேற்றவும், சாணைச் சக்கரங்களிலிருந்து விழும் சுரண்டித் துகளை நீக்கவும், குளிரூட்டும் (coolant) நீர்மம்-சோடா கலந்து பயன்படுத்தப்படும். துருப் பிடிக்கக் காரணமாக இருப்பதால், நீர் பயன்படுத்தப்படுவதில்லை. அடிக்கடி குளிர்வடையும் நீர்மத்திலிருந்து சுரண்டித் துகள்கள் வடி கட்டப்பட்டுப் பின் மீண்டும் நீர்மம் பயன்படுத்தப்படும். சாணை பிடிப்புச் சக்கரம் கொண்டு உலோகத்தை அரைத்தெடுக்கும் முறைக்குச் சாணை பிடித்தல் அல்லது அரைப்புச் செயல் (grinding) என்று பெயர். பொதுவாக மிகத் துல்லியமான அளவும், பளபளப்பான தோற்றமும் கிடைப்பதற்குச் சாணை பிடித்தல் முறை கையாளப்படும். தேவையான பரப்புகளிலும் பொறிப் பணி செய்ய முடியாத மிகச் சிக்கலான பரப்பில் பொறிப் பணி செய்யவும் சாணை பிடித்தல் பயன்படும். பொதுவாக 0.25-0.5 மி.மீ. அளவே சாணை பிடித்தல் மூலம் குறைக்கலாம். 0.000025 மி.மீ. துல்லியம் வரை சாணை பிடிக்க முடியும். அனைத்து வகை உலோகங்களிலும், சாணை பிடிப்புச் செய்யப்படுகிறது. வேலையின் நுட்பத்தைப் பொறுத்து இரு பெரும் பிரிவுகளாக இதை வகைப்படுத்தலாம். நுணுக்கமில்லாமல் சாணை பிடித்தல். இது அளந்து பார்த்து நுணுக்கமாகச் சாணை பிடிக்காமல் தோராயமாகச் சாணை செய்வதைக் குறிக்கும். இதற்குப் பயன்படும் சாணைப் பொறிக்கு நுணுக்கமற்ற சாணைப் பொறி என்று பெயர். இதற்கு, பணி மனையில் சிறுமேடையில் அமைக்கப்படும் சாணைப் பொறி (bench grinding) அல்லது தரையில் நிலைப்- படுத்தப்படும் சாணைப் பொறி (pedestal grinder) பயன்படும். எளிய சாணை பிடிப்பு அமைப்பு, படம் 1 இல் விளக்கப்பட்டுள்ளது. தரையில் நிற்கும் சாணைப் பொறி என்பது தாங்கும் பாலம் ஒன்றில் பொருத்தப்பட்ட சிறிய அமைப்பாகும். இதன் சுழல் தண்டு (spindle) கிடை நிலையில் இருக்கும். ஒரு முனையில் மென்மையான சாணைச் சக்கரம் (smooth grinding wheel) பொருத்தப் பட்டி ருக்கும். பொதுவாக ஒற்றை முனை வெட்டுளிகளைச் (single point tool) சாணை பிடிக்கவும், வார்ப்பு (casting) உருவங்களிலுள்ள உலோகப் பிசிறுகளை நீக்கவும் இது பயன்படும். மேலும் நெகிழ் சாணைப் பொறி (flexible grinder),ஊசலாடும் சாணைப் பொறி (swing frame grinder), சாணைப் பட்டைச் சாணைப் பொறி (abrasive belt grinder) எனப் பலவகையான நுணுக்கமற்ற சாணைப் பொறிகள் பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன. நுணுக்கமான சாணை மிக நுணுக்கமான அளவிற்குச் சாணைச் செயல்புரிவதை இது குறிக்கும். உருளை வடிவச் சாணைப் பொறி (cylindrical grinder). இது பணிப் பொருளைப் பிடித்துக் கொண்டு சுழலச் செய்வதற்கு ஏற்ற அமைப்பாகும். கடைசல் பொறியிலுள்ள பணிப் பொருளைப் பிடித்துச் சுழலச் செய்யும் தலைப் பகுதி போன்றது. தலைப் பகுதியிலுள்ள சுழற்றியின் பிடிப்பில் தாங்கி முனை பொருத்தி வேலை செய்யலாம். இதில் சுழற்றியின் வேகத்தை மாற்றி அமைக்கும் வசதி உள்ளது. தலைப்பகுதியைத் தேவைக்கேற்பக் குறிப்பிட்ட கோணத்திற்குத் திருப்பியும் அமைக்கலாம். சுழற்றியின் வேகம் நிமிடத்திற்கு 20-30 மீ வரை இருக்கும். உட்பக்கச் சாணை பிடித்தல். இது உட்பக்கமாகச் சரிவற்ற, சரிவுள்ள, உருளை வடிவுடையவற்றின் சுற்றுப் பரப்பைச் சாணை பிடிப்பதாகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> பரப்புச் சாணை பிடித்தல். கிடை நிலையாகவோ, செங்குத்தாகவோ, சாய்வாகவோ அமைந்துள்ள தட்டையான வெளிப் பரப்பைச் சாணை பிடிப்பதற்குப் பரப்புச் சாணை பிடித்தல் என்று பெயர். வெட்டுளி மற்றும் வெட்டுக் கருவிச் சாணை பிடித்தல், பணிமனையில் பயன்படுத்தப்படும் துளைக் கரண்டி, வெட்டுக் கருவி, துளையிடும் அலகு (drill bit),மரையிடு உளி (tap) போன்ற பலமுனை வெட்டுளிகளைச் சாணை பிடிக்கலாம். மேலும் அச்சுக் கருவி (gauge), நுணுக்க அளவிகள் (micrometer) போன்றவற்றைச் சாணை பிடிக்கவும் மிகவும் பயன்படும். வெளிப்பக்க உருளை வடிவங்கள் சாணை பிடித்தல். வெளிப் பக்கத்தில் உருளை வடிவமாகவும், சரிவு உருளை வடிவமாகவும் சாணை பிடிக்க இவ்வகைப் பொறி பயன்படும். குறுக்கே நகர்த்திச் சாணை பிடித்தல் என்பது சக்கரத்தின் அகலத்தை விட நீளமான உருளை வடிவத்தைச் சாணை செய்தலைக் குறிக்கும். இதில் சாணை பிடிப்பு மேடை, இடப்பக்கமும, வலப்பக்கமும் மாறி மாறி நகரும். சக்கரத்தைப் புகுத்திச் சாணை பிடித்தல் (plunge grinding) என்பது சாணைச் சக்கரத்தை விட அகலம் குறைவான பகுதியில் சாணை பிடிப்பதைக் குறிக்கும். பணிப் பொருள் இருந்த இடத்தில் சுழன்று கொண்டே இருக்கும். சாணை பிடிக்கும் சக்கரத்தை மட்டும் முன்னோக்கி நகர்த்திச் சாணை பிடிக்கலாம். மேலும், முகப்புச் சாணை பிடித்தல் (face grinding), தடுக்கு முகப்புச் சாணை பிடித்தல் (shoulder grinding), வடிவச் சாணை பிடித்தல் (form grinding) எனப் பலவகையுண்டு. —கே.ஆர். கோவிந்தன் நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Hand Book, McGraw-Hill Book Company, London, 1964. சாணை பிடிப்பாலை இது பொருளின் துகள் அளவைக் குறைப்பதற்குப் பயன்படும் எந்திரம் ஆகும். அளவைக் குறைக்கும் முறை, விலை மதிப்புள்ள தாதுவிலிருந்து அகற்றும் பணியில் மிகவும் உதவுகிறது. அளவில் பெரிய பொருள்கள் முதலில் நொறுக்கப்படுகின்றன. அடுத்து, நுணுக்கமான துகள் குறைப்பிற்குச் சாணை பிடிப்பும், தூளாக்கல் முறையும் உதவுகின்றன. சாணை பிடிப்பாலை மூன்று வகைப்படும். அவை, வளைய உருளைப் பிடிப்பாலை, கவிழ்க்கும் பிடிப்பாலை, சுத்தியல் பிடிப்பாலை எனப்படும். வளைய உருளைப் பிடிப்பாலையில் வேகமாகச் சுழலும் விற்சுருள் கொண்ட உருளை வழியாகப் பொருள்கள் செலுத்தப்படுகின்றன. மெதுவாகவும், அளவாகவும் உருளும் பரப்புகள் விசையைக் கருவிக்குள் இருக்கும் பொருள்களுக்குச் செலுத்துகின்றன. இச்செயலில் உருவாகும் நுண்துகள்கள் காற்றின் மூலம் பிடிப்பாலையிலிருந்து வெளியேறுகின்றன. கவிழ்க்கும் பிடிப்பாலையில், கிடைமட்டமாகச் சுழலும் உருளையின் உள்ளே பொருள்கள் செலுத்தப்படுகின்றன. துகள்களுக்கிடையே உள்ள சுரண்டிகள், பொருள்களைச் சாணை பிடிக்கின்றன. சாணை பிடிக்கும் பொருள்களாவன: தீச்சட்டிக்கல், இரும்புப் பந்து, உருளையின் அச்சுக்கு இணையாக அமைந்துள்ள கம்பி முதலியன. சுத்தியல் பிடிப்பாலையில், ஆடக் கூடிய சுத்தியல்கள் பொருளை அதிரடி மூலமாக அளவில் குறையச் செய்யும். மிக அதிகமான நுண்ணிய ஒழுங்கான முடிவான துகள்களைக் கொண்டும், வெளியிடும் அளவைப் பொறுத்தும் தேவையான பரப்பைப் பிரிக்கலாம். மிக அதிகமான அளவு கொண்ட துகள்கள் (மூடிய பிடிப்பாலை) மீண்டும் உலோகக் குறைப்புக்கு அனுப்பப்படுகின்றன. பிற வேறுபாடுகள் சாணை பிடிப்பில் ஈரமாக, உலர்ந்ததாக அல்லது குவியலாக அல்லது தொடர் முறையாக இருக்கும். —வி. சண்முகசுந்தரம் நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Hand Book, McGraw-Hill Book Company, London, 1964. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக மேலே உள்ள கோடு தேவைப்படுகிறது. Don't remove the above line. ----> சாதனங்களைச் சிப்பங்கட்டுதல் இது சாதனங்களின் மூலப்பொருள்களில் இயற்பியல் சார்ந்த தொடர்புகளை ஏற்படுத்துவதும், எந்திர ஆற்றலைப் பல வகை இணைப்புகளால் தருவதும் ஆகும். சிப்பங்கட்டலின் (packaging) முதற்படி, திட்ட அமைப்புச் செயல் முறையாகும். அதாவது, உறுப்புகள் (components) அல்லது சாதனங்களின் இயக்கக் கூறு சார்ந்த விளக்கவுரையை உருவாக்குவதாகும். இதன் மூலம் சாதனங்கள் சிப்பங்கட்டப்படுவதுடன், தேவைக்கேற்பவும் பயன்படும். சிப்பங்கட்டுதலின் அளவு, வடிவம், எடை ஆகியவை ஓர் அமைப்பின் குறிப்பீட்டைப் (specification) பொறுத்து அமைகின்றன. உறுப்புகளை ஒழுங்குபடுத்துவதில், உறுப்புகளுக்கிடையே தொடர்பின்மை (isolation), குறுக்கு மின் சுற்று வழி (short circuit) ஏற்படாமல் தடுத்தல், வெளியீடு (venting) இவையனைத்தும் சுற்றுப்புற வெப்பம், ஈரப்பதம், அழுத்தம், அதிர்வு, இரைச்சல் ஆகியவற்றிற்கு ஏற்றாற் போல் இருக்க வேண்டும். முக்கியமாக வெப்ப இயங்கியலிலும் (thermodynamics), வெப்பப் பரிமாற்றத்திலும் (heat transfer) மூலக்கூறுகளுக்கும், சுற்றுப்புறச் சூழ்நிலைக்குமிடையே உள்ள தொடர்பு இன்றியமையாதது. இதனால் பாதிப்புகள் குறைகின்றன. சிப்பங்கட்டுதல் சார்புக் குறுக்கீட்டைப் (mutual interference) பெரிதும் குறைக்கிறது. இதில் அணுகுதலும் (access), பாதுகாத்தலும் இன்றியமையாதவை. சிப்பங்கட்டப்பட்ட சாதனங்களின் பயன், அதன் திறமையைச் சிப்பங்கட்டுதலில் செயல்படுத்துவதைப் பொறுத்து அமைகிறது. —சே. வீணா நூலோதி. R. L. Peurifoy, Construction Planning, Equipment and Methods, Third Edition, McGraw-Hill International Book Company, London, 1979. சாதனச் சிறுவடிவாக்கம் மின்னணுலியல் துறையில் சாதனங்களைச் சிறுவடிவாக்குதல் (miniaturization of equipments) என்பது மிகவும் இன்றியமையாததாகும். கருவிகளின் வடிவத்தையும், எடையையும், மின்னாற்றலையும் குறைக்க இது பயன்படும். சாதன வடிவத்தைக் குறைக்கும் போது எடை, ஆற்றல் முதலியன தாமாகவே குறையும். விண்வெளி ஆய்வுகளுக்காக அனுப்பப்படும் செயற்கைக் கோள்களில் பயன்படும். சாதனங்களின் வடிவம் சிறிதாகவும், எடை மிகக் குறைந்ததாகவும் இருக்க வேண்டும். விண்வெளியில் கிடைக்கும் மின்னாற்றல் குறைவாகவிருப்பதால் தேவையான மின்னாற்றலின் அளவையும் குறைக்க வேண்டும். பொதுவாக, திண்ம நிலைச் சாதனங்களாலும் (solid state devices), ஒருங்கிணைந்த சுற்றுகளாலும் (integrated circuits) சாதனங்களின் வடிவம் மிகவும் குறைந்துள்ளது. கேள் பொறிகள், இதயத் துடிப்பியக்கி, தொலைத் தொடர்பியல் கருவிகள், கணிப் பொறிகள், மருத்துவக் கருவிகள் முதலியவற்றிற்கு ஒருங்கிணைந்த சுற்று, வடிவத்தைக் குறைப்பதுடன், இயக்கத்திற்கு வேண்டிய மின்னாற்றலையும் குறைக்கலாம். சுற்றுகளின் செயல்படும் வேகத்திற்கும், அதன் எடைக்கும் உள்ள விகிதம் ஒரு முக்கியமான குண எண் (figure of merit) ஆகும். —சு. அர. பழனிச்சாமி நூலோதி. R. L. Peurifoy, Construction Planning, Equipment and Methods, Third Edition, Mc-Graw-Hill International Book Company, London. 1979. சாதன நம்பகம் ஓர் இயக்கத்தில் பலவகையான சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இயக்கத்தின் செயல் திறன், தடையின்றிச் செயல்படும் திறன் இவை யாவும் சாதனங்களின் நம்பகத்தைப் பொறுத்து அமையும். இயக்கத்தைப் பொறுத்துச் சாதனங்களின் நம்பகம் முக்கியத்துவம் அடைகின்றது. சான்றாக, செயற்கைக் கோள்கள், விமானம் முதலியவற்றில் காணப்படும் சாதனங்கள் பழுது படாமல் ஒரே சீராக நீண்ட நாள் செயல்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கும், மருத்துவத் துறையிலும் பயன்படும் கருவிகள் சிறந்த நம்பகத் தன்மை கொண்டிருக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சிக்குப் பயன்படும் கருவிகள் பல நம்பகமான உறுப்புகளால் வடிவமைக்கப்பட்டிருக்கும். அனைத்து உறுப்புகளையும் நம்பக ஆய்வுக்குட்படுத்த (reliability test) வேண்டும். ஒரு சாதனத்தின் நம்பகத்தைக் கண்டறிய, பலவழிகள் உள்ளன. நம்பகப் பொறியியல் (reliability engineering) ஒரு சிறந்த பாடமாகும். ஒரு சாதனத்தின் நம்பகம் குறைவதற்குப் பின் வருவனவற்றை முக்கிய காரணங்களாகக் கூறலாம். தொழில் நுட்பக் குறைபாடுகள், திட்டமிடல், வடிவமைப்பு, உற்பத்தி, பொருள்கள், உருச் சேர்க்கும் குறைபாடுகள் (operation faults), செயலாற்றலில் தோன்றும் குறைபாடுகள் (operation faults), மூப்படைதல் அல்லது கால மாறுபாடு (ageing), தேய்மானம், துருவரிப்பு (corrosion) அரிப்பு, புற அகக் கோளாறுகள், செயலாற்றம், பராமரிப்புக் குறைபாடுகளுடன், பொதுப்படையான தவிர்க்க முடியாத போதாமைகளும், இயலாமைகளும் காரணமாகலாம். ஆகவே, மேற்காணும் முறைகளில் நம்பகம் குறையாமலிருக்க, திட்டமிடல், குறியீடு, வடிவமைப்பு, உற்பத்தி ஆகிய துறைகளில் முந்தைய பட்டறிவு தேவைப்படும். தடுப்புப் பராமரிப்புக்கு(preventive maintenance) முதலிடம் அளிக்கப்பட்டுக் கெட்டுப் போகும் பொருள்களில் தவறு நேர்வதற்கு முன்னரே சீராக்கப்படுகின்றன. வல்லுநராலும், பட்டறிவுடையோராலும் உருவாக்கப்பட்ட செயலாற்றக் குறிப்புரைகள் பின்பற்றப்படுகின்றன. தகைவுப் பாதிப்புகளும், திரிபு மாறுபாடுகளும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு, அவற்றிற்கான வாய்ப்பாடுகள் அறுதியிடப்படும். ஒரு சாதனத்தின் அனைத்துக் கருவிகளும் தர நிர்ணயக் கட்டுப்பாடு செய்யப்பட்டு, குறையற்ற, இழப்பற்ற, சிறந்த செயல் திறனைத் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம்பகம் அதிகரிக்கும்பொழுது சாதனம் எளிதாகக் கிடைக்கிறது. அதன் குண எண் பெரிதாகிறது. ஒரு சாதனத்தின் நம்பகம் கீழ்க்காணும் விதத்தில் கணக்கிடப்படுகிறது. அ. தொலைப்பு விகிதம் (outage ratio) = = = = ஆ. கிடைப்பு விகிதம் (innage ratio) = 1—தொலைப்பு விகிதம் இ. ஆண்டுத் தொலைப்பு = 8760 X தொலைப்பு விகிதம் (மணிகள்) ஈ. நம்பகம் = % உ. எடுத்துக்காட்டாக ஒரு சாதனம் ஓர் ஆண்டில் 32 நொடி மட்டுமே வேலை செய்யவில்லையென்றால், அதன் நம்பகம் 99.9999% என்பது பெறப்படும். (இங்கு த.ச. நே = 5 மணி, த.ஆ.நே 5000 மணி) ந (வி) =நம்பகச் சார்பு (reliability function) =1 — = 1 — சாதன நம்பகத்தைப் பெருக்குவதற்குக் கீழ்க்காணும் வழி முறைகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அவை, மேற்பார்வை, ஆய்வு இவற்றை நெறிப்படுத்துவது, அதிகப்படுத்துவது, திறமற்ற உறுப்புகளை மறுவடிவமைப்பது, நல்ல வலிவான பொருள்களைப் புகுத்தி துணைக் கருவிகளைத் திறம்படச் செய்வது, செயல் முறைகளை மாற்றி அமைப்பது, சிறந்த அமைப்பையே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது என்பன. —க.அர. பழனிச்சாமி — இரா.மணிவாசகம் சாதனம் பேணல் ஒரு சாதனத்தை இயங்கும் தன்மையில் வைத்திருப்பதே சாதனம் பேணல் ஆகும். 100%க்குக் குறைவான நம்பகத் தன்மை உள்ள எந்தச் சாதனத்திற்கும், பேணல் இன்றியாமையாதது. மேலும், சிக்கலான அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த அவற்றின் பகுதிகளை இணைக்கும் பல்வேறு நிலைகளிலும் சில சீரான சரி செய்யும் அமைப்புகள் தேவைப்படுகின்றன. ஓர் அமைப்பின் பகுதிகளையும், சாதனங்களையும் வடிவமைக்கும் போது, அவற்றை விரைவாகவும், எளிதாகவும் சீர் செய்து,பழுது பார்க்கும்படி அமைக்க வேண்டும். அமைப்பின் சோதனை முறைகளை வசதியாக அமைத்தலும், சீர் செய்தலும், அளவீடு செய்ய வேண்டிய பகுதிகளை அணுகு நிலையில் வைத்திருத்தலும் வடிவமைக்கும் போது கருத்திற்கொள்ள வேண்டியவையாகும். சாதனம் பயன்படும் இடத்தில் அதன் பகுதிகளைப் பழுது பார்க்கும் போது தேவையான பொருள்கள் எளிதில் மாற்றத் தக்கனவாக இருக்க வேண்டும். வீட்டில் பயன்படுத்தும் வானொலிப் பெட்டியில் உள்ள மின்தடையம் (resistor), மின்தேக்கி (capacitor), மின்தூண்டம் (inductor), அடியில் செல்லும் மின்கடத்தி (conductor) போன்றவை உதிரி உறுப்புகளுக்கான சிக்கலை எடுத்துக் காட்டுகின்றன. அமைப்பின் உறுப்புகள் எளிய அணுகு நிலைக்கேற்றவாறு சீராக அமைக்கப்பட்டிருத்தலும், அவற்றைச் சார்ந்த பிற பகுதிகளுக்கு எந்தச் சேதமுமின்றி அகற்றப்படக் கூடியனவாக இருத்தலும், விரைவாக எளிதில் மாற்றக் கூடியனவாக இருத்தலும் ஒரு நல்ல வடிவமைப்பின் இயல்புகளாகும். நீண்ட நேரம் செயல்பட வேண்டிய சாதனங்களில் பழுது நேர்ந்தால், பழுதடைந்த பகுதிகளுக்குப் பதிலாக நல்ல நிலையில் உள்ள வேறு பகுதிகளை அமைக்க ஏதுவாக, பழுதடைந்த பகுதிகள் எளிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, விரைவில் அகற்றக் கூடியனவாக இருத்தல் வேண்டும். இவற்றைக் கருத்திற் கொண்டு, ஓர் அமைப்பில் பழுதடைந்த பகுதியைப் பகுத்தறியவும், அகற்றவும், மாற்றியமைக்கவும், பழுதுபார்க்கவும் வசதியாக அமைப்பின் பல பகுதிகளும் தனித்தனியே பிரிக்கக் கூடியனவாக அமைக்கப்பட்டிருக்கும். அலகினைப் பழுது பார்க்க இயலாத வகையில் வடிவமைப்பும், சேர்த்து வைக்கும் கோட்பாடுகளும் இருக்கும். இந்த அணுகுமுறையை முழுமையாக ஆய்ந்தால் இயங்கும் அலகுகளின் பயனீட்டுக் கோட்பாடு இடம் பெறும். சிக்கலான அமைப்புச் சாதனங்கள் எளிய செந்தரப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளாகப் பிரிக்கப்படுகின்றன. இயங்கும் அலகுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும் தேவைப்படும் நேரம், வழக்கமான சிக்கலான அளவுகளை விடக் குறைவாகவே இருக்கும். ஒவ்வொரு கட்டமைப்பும் ஓர் இயங்கும் அலகைக் குறிப்பதால், புதிய சிறந்த மாதிரிகள் கிடைக்கும் போது இருக்கின்ற அலகுகளை மாற்ற முடியும். மேலும் எளிய இயங்கும் அலகுகள் எந்திர உற்பத்திக்கு ஏற்றவை. இந்த இயங்கும் அலகுகளைப் பொதுவாகச் செந்தரப்படுத்த இயலுமானால், மேலும் சிக்கலான பகுதி அமைப்புகளும் பல்வேறு கட்டமைப்புகளின் சேர்க்கையில் பயனுறும். இந்த அதிக அளவு உற்பத்தியை வழங்குவோரிடம் அளிப்பதால், மின்னணுவியல் சாதனங்களின் அடிப்படை விரிவடைகிறது. பழுது பார்க்காமல் மாற்றும் கொள்கை, நேரத்தையும், மனித ஆற்றலையும் குறைக்கிறது. இயக்கம் பழுதான இடத்தைக் கண்டு பிடித்தால் போதும். இயங்கும் அலகிற்குள் பழுதான பகுதியைக் கண்டு பிடிக்க வேண்டியதில்லை. ஆகவே, பேணல் எளிதாகிறது. இயக்க வழியில் சாதனங்களைப் பிரித்தலால், நல்ல வெப்ப வடிவமைப்புச் செய்ய முடிகிறது. சிறப்பான சூழல்கள் தேவைப்பட்டால், அக்குறிப்பிட்ட அலகுகளுக்காகக் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களை நிறுவுவதும் இயலும், இயங்கும் அலகுகள் செந்தரப்படுத்தப்படுவதால், உற்பத்தி உயரும். ஆகவே, உயர்ந்த தரம் வாய்ந்த ஒத்த அலகுகள் கிட்டும்; அலகுகள், மொத்த சாதனங்களின் நம்பகத் தன்மை ஆகியவை மேம்படும். —எஸ். சுந்தரசீனிவாசன் நூலோதி. R.L. Peurifoy, Construction Planning, Equipment and Methods, Third Edition, McGraw-Hill International Book Compay, London, 1979. சாந்தங் இது டுஸ்ஸா (tussah) பட்டு இழைகளால் பணிச் சார்பற்று (plain) நெய்யப்பட்ட தடிமனான துணியாகும். சாந்தங் (shantung) இயற்கையான பழுப்பு வண்ணத்தில், முண்டு முடிச்சுகளுடன் அரைகுறையாக நெய்யப்படுகிறது. பருத்தி, முறுக்கு வட ரேயானைப் (spun rayon) போன்ற போலி வகைகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. —இரா. சரசவாணி நூலோதி. Z. Grosicki, Watson's Textile Design and Colour, Seventh Edition, Butterworth Co. Publishers Ltd., London, 1975. சாந்தமான கழலையங்கள் ஒரு கழலையம் தீதற்ற சாந்தமான கழலையமா (benign tumour) அல்லது புற்றுப் பழங்கண் கழலையமா என்று நோய்க் குறிகளைக் கொண்டு ஆய்வது இன்றியமையாதது. பல சமயங்களில் எளிதாகக் கண்டு பிடிக்க இயலும் இக்கட்டிகள் சில சமயங்களில், நோய்க்குறியில் மருத்துவரையும் குழப்பி விடும் தன்மை கொண்டவை. சாந்தக் கழலையங்கள் பொதுவாக உறையுடன் காணப்படும். இது அடுத்துப் பரவுவதும் இல்லை. உறையுடன் நீக்க மீண்டும் வளர்வதும் இல்லை. இக்கட்டிகளின் வளர்ச்சி மெதுவாக, ஒரே நிலையில் கட்டி முழுதும் காணப்படும். இக்கழலையங்களின் அளவு, பாதிக்கப்பட்ட இடம், அழுத்தம் இவற்றைப் பொறுத்து, நோய்க்குறிகள் வேறுபடும். அரிதாக அடினோமா போன்ற சுரப்புகள் உடலில் மாற்றங்களைத் தோற்றுவிக்கலாம். பல சமயங்களில் இச்சாந்தக் கழலையங்கள் எண்ணிக்கையில் மிகுதியாகக் காணப்படும். எ.கா: கொழுப்புக் கழலையம், நரம்பு நாரோமா முதலியன. மருத்துவம். அறுவை மூலம் உறையுடன் களையும் போது குணமடையும். —மா.ஜெ. ஃபிரடெரிக் ஜோசப் சாந்தீன் சாயம் சாந்தீன் அல்லது டைபென்சோ-7- பைரான் என்ற பல்வினை அணு வளையச் சேர்மத்திலிருந்து தயார் செய்யப்பட்ட சாயங்களே சாந்தீன் சாயங்கள் (xanthene dyes) எனப்படும். வேதி அமைப்பில் சாந்தீன் என்பது ஒரு டைஹைட்ராக்சி டைஃபினைல் மெத்தேன் உள்நீரிலியே ஆகும். இதன் வாய்ப்பாடு: இதை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தால் சாந்தோன் கிடைக்கும். சாலிசைலிக் அமிலத்துடன் அசெட்டிக் நீரிலியைச் சேர்த்துச் சூடு செய்தும் சாந்தோனைத் தயார் செய்யலாம். முதன்முதலாகத் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்ட சாந்தீன் சாயம், ஃப்தாலீன் (phthalein) வகைச் சாயங்களே ஆகும். குறிப்பாக ஃபுளூரசீன், கேலின், கோரியூலின் முதலியவற்றை முறையே ரிசார்சினால், பைரோகலால், கேலிக் அமிலம் ஆகியவற்றுடன் தாலிக் நீரிலியைச் சேர்த்துக் குறுக்க வினைக்கு (condensation reaction) உட்படுத்தித் தயாரிக்கலாம். சாந்தீன் சாயங்கள் இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பைரோனைன்கள் (டைஃபினைல் மெத்தேன் வழிச் சாயங்கள்) சாந்தீனை நேரடியாக அடிப்படையாகக் கொண்டவை; தாலீன்கள் (டிரைஃ பினைல் மெத்தேன் வழிச் சாயங்கள்) 9—ஃபினைல் சாந்தீனை அடிப்படையாகக் கொண்டவை. தாலீன் சாயங்கள் பின்வரும் உட்பிரிவுகளைக் கொண்டவை. அ) ஃபுளூரசின்கள்—ஹைட்ராக்சில் தொகுதியைக் கொண்டவை. ஆ) ரோடமீன்கள்—அல்க்கைல் அமினோ அல்லது அரைல் அமினோ தொகுதியைக் கொண்டவை. இ) கலப்பு வகையில் இருவகைத் தொகுதிகளும் சேர்ந்து காணப்படும். பைரோனைன்கள். அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தின் முன்னிலையில், m-டைஅல்க்கைல் அமினோ ஃபினால்களை, ஃபார்மால்டிஹைடுடன் குறுக்கவினைக்கு உட்படுத்தினால், சாந்தீன் வழிச் சேர்மம் கிடைக்கும். இதை ஆக்சிஜனேற்றமடையச் செய்தால், சாந்ஹைட்ரால் கிடைக்கும். இந்த ஆல்கஹாலை அமிலத்தில் கரைத்தால், பைரோனைன் வகைச் சாயம் கிடைக்கும். பைரோனைன் G (பெண்டர் 1889) என்பது சிவப்புக் காரச் சாயம். இது மஞ்சள் நிற உடனொளிர் (fluorescence) தன்மையைப் பெற்றுள்ளது. பருத்தி இழைத் துணிகளுக்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. இதைப் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொண்டு ஆக்சிஜனேற்றம் அடையச் செய்து, அக்ரிடின் சிவப்பு 3 B என்ற சாயத்தைப் பெறலாம். இரண்டு மூலக்கூறுகள் m-டைஅல்க்கைல் அமீனோ ஃபீனால்களை, சக்சினிக் அமிலம் அல்லது தாலிக் அமிலம் போன்ற இரட்டைக் கார்பாக்சலிக் அமிலங்களின் நீரிலிகளுடன் குறுக்க வினைக்கு உட்படுத்தினால், நேரடியாகச் சாந்தீன் சாயங்களைத் தரும். சக்சினிக் நீரிலியைப் பயன்படுத்தும் போது, பைரோனைன் தொகுதிச் சாயங்களையும், தாலிக் நீரிலியைப் பயன்படுத்தும் போது, தாலீன் தொகுதிச் சாயங்களையும் பெறலாம். m-டைமெத்தில் அமீனோஃபீனாலைச் சக்சினிக் நீரிலியுடன், துத்தநாகக் குளோரைடு நீர் நீக்கியின் முன்னிலையில் குறுக்க வினைக்கு உட்படுத்தினால், ரோடமீன்-S என்ற சாயம் கிடைக்கும். பருத்தி இழைகளுக்குப் பின் நிறமேற்றவும், காகிதம், மரம் முதலியவற்றிற்கு நிறமூட்டவும், ஏனைய பைரோனைன் சாயங்களை விட இது சிறந்தது. தாலீன்கள். இவ்வகைச் சாயங்களில் அடிப்படைப் பொருளாக ஃப்ளூரேன் அமைகிறது. இது பினால்ஃப்தலீன் தயாரிப்பின் போது, துணைப் பொருளாக முதலில் பெறப்பட்டது. தாலிக் நீரிலி யுடன் ஃபினால், ஆர்த்தோ இடத்தில் குறுக்க வினை நடை பெறும் போது, ஃபுளூரேன் கிடைக்கிறது. இச்சேர்மம் தாலீன் வழிச் சேர்மங்களுக்கு நிறக் கரு (chromogen) எனக் கருதப்படுகிறது. ஏனெனில், இச்சேர்மத்தில் ஒரு நிறம்பெருக்கித் (auxochrome) தொகுதியை இணையச் செய்து, அமில அல்லது காரச் சாயங்களைப் பெறலாம். இவற்றை உப்பாக மாற்றியே ரோடமீன்கள், இயோசின்கள் முதலிய சாயங்கள் பெறப்படுகின்றன. கம்பளி, பட்டு முதலியவற்றில் தூய சிவப்பு நிறத்தை ஏற்ற இயோசின் சாயங்களே பெருமளவில் பயன்படுகின்றன. சிவப்பு மை என்பது நீர்த்த இயோசின் சாயக் கரைசலே ஆகும். ரோடமீன்கள். இவை ஃபுளூரேன்களின் அல்க்கைல் அமினோ வழிச் சேர்மங்கள் ஆகும். m-அமினோஃபினால்களைத் தாலிக் நீரிலியுடன் சேர்த்து வினைப்படுத்தி, இவற்றைப் பெறலாம். மெத்தில் வழிச் சேர்மங்களை விட, எத்தில் வழிச் சேர்மங்கள் கரை திறன் மிகுந்தவை. எனவே, எத்தில் வழிச் சாயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ரோடமீன்கள் காரச் சாயப் பொருள்கள் சிலவற்றைப் பயன்படுத்திக் கம்பளி, பட்டு முதலியவற்றில் நேரடியாக, ஒளிரும் தன்மையுடைய நீலம் கலந்த சிவப்புச் சாயமேற்றலாம். பருத்தி இழைகளில் சாயமேற்றும் போது, ஒளிரும் பண்பை இழந்து விடும். ரோடமீன்-B ஆன்ட்டிமனி உப்புகளுடன் நிறமுடைய அணைவுச் சேர்மங்களைத் தருவதால், உயிரியல் நீர்மங்களில் இத்தனிமம் இருப்பதை எளிதில் கண்டறியலாம். சல்ஃபோனிக் அமில வழிச் சேர்மம் ஒரு முக்கியச் சாய வகையாகும். ஏனெனில், இவ்வகைச் சாயங்கள் எளிதில் நிறம் நீங்கப் பெறுவதில்லை; ஊதா நிறத்திலிருந்து நீல நிறம் வரை பல வண்ணங்களில் பெறலாம். —பி ஈ.எம்.லியாகத் அலிகான் நூலோதி. I.L. Finar, Organic Chemistry. Vol.II. Sixth Edition, ELBS, 1982. சாந்து சிமெண்ட் அல்லது சுண்ணாம்பு போன்ற இணைத்துக் கட்டும் பொருளுடன் மணலும், நீரும் சேர்த்துத் தயாரிக்கப்படும் பசை போன்ற கலவையைச் சாந்து (mortar) எனலாம். இணைத்துக் கட்டும் பொருளான சிமெண்ட் அல்லது சுண்ணாம்பை வார்ப்படப் பொருள் எனலாம். வார்ப்படப் பொருளின் தன்மையால் கலப்படப் பொருள் இணைத்துக் கட்டுமானம் உருவாக்கப்படுவதால், சாந்தின் நீண்ட கால உழைப்பு, தரம், வலிமை ஆகியவை வார்ப்படப் பொருளைப் பொறுத்தே அமையும். கடினமான, தொடர்ச்சியான திண்மப் படலமாக இறுக வல்ல நீரியத் திண்மக் குழைமம், கட்டடங்களின் உட்புறச் சுவர்களுக்குப் பூச்சுப் பொருளாகப் பயன்படுகிறது. இதே பொருளை வெளிப்புறச் சுவர்களுக்குப் பூச்சாகப் பயன்படுத்தும் போது, அதற்கு, குழைகாரை (stucco) என்று பெயர். சாந்தை அடிப் பூச்சாகவும் (1.9 செ.மீ தடிமனுக்கு), மேல் பூச்சாகவும் (0.16 செ.மீ. தடிமனுக்கு) பயன்படுத்தலாம். அடிப்பூச்சு மென்மையற்றதாகவும் மேல் பூச்சு மென்மையானதாகவும் அமையும். அடிப்பூச்சுக்குச் சுண்ணாம்பு, மணல், இழை முதலியனவும், மேல்பூச்சுக்குச் சுண்ணாம்பு—ஜிப்சம் கலவை முதலியனவும் பயன்படுகின்றன. களிமண், சுண்ணாம்பு, ஜிப்சம் ஆகிய மூலப் பொருள்களிலிருந்து சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது. இது நீருடன் இணையும் போது, வேதி மாற்றம் நிகழ்ந்து பசை போன்று மாறி இளகும் நிலையை அடைகிறது. பின்னர் உலர்ந்து இறுக்கமடைந்தால், கல் போல் ஒரே பொருளாகி விடுகிறது. இயற்கையான சுண்ணாம்புக் கற்கள், சுண்ணப் பாறை, கடல் சிப்பி முதலிய மூலப்பொருள்களைத் தூய்மைப்படுத்தி, அதிக வெப்பத்தில் வேக வைத்து மிகுநீர் சேர்த்துக் குளிரூட்டிப் பொடியாக அரைத்துச் சுண்ணாம்பு தயாரிக்கப்படுகிறது. இதுவும் சிமெண்டைப் போலவே, நீருடன் இணைந்த பின், உலர்ந்து இறுகிக் கட்டியாக மாறுந் தன்மை உடையது. ஆனால், வலிமை குறைந்தது. சாந்து தயாரிக்க, சிமெண்ட் அல்லது சுண்ணாம்பைத் தரமுள்ளதாகத் தேர்வு செய்ய வேண்டும். பின்பு அதனுடன் சேர்க்கத் தேவையான மணலும் தரமுள்ளதாக இருக்க வேண்டும். மணல் என்பது சிறு துகள்களாக உள்ள சிலிக்கா ஆகும். இது நெடுங்கால நிலை மாற்றங்களால், மணல் பாறைகளில் அரிப்பு உண்டாகி, உதிர்ந்து உருவாகிறது.குழி மணல், ஆற்று மணல், கடல் மணல் என இயற்கையாக மணல் மூன்று வகையாகக் கிடைக்கிறது. குழி மணல் என்பது நிலத்திலிருந்து 1—2 மீ ஆழம் வரையுள்ள மண் குழிகளில் கிடைக்கிறது. இது கூர்மையான கோணம் உள்ள துகள் ஆகும்; உப்புத் தன்மையற்றது. தூய குழி மணல் சாந்து தயாரிக்கப் பயன்படும். பல வேலைக்கும் பயன்படக் கூடிய ஆற்று மணல் வெள்ளை நிறத்தில் உருண்டை மணி போல் ஆற்றுப் படுகைகளில் கிடைக்கும். கடற்கரையில் கிடைக்கக் கூடிய கடல் மணல் உருண்டையான நுண்ணிய மணி போல் வெளிர் நிறம் கொண்டது. உப்பு நிறைந்த இம்மணல் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடையது. அதனால் கட்டடத்தின் ஈரப் பகுதி வெளுத்து விடுவதால், கட்டுமானப் பொருள் பிரிந்து விடும். சிமெண்ட் இறுக்கமடைவதைக் குறைக்கும். ஆகவே சுடல் மணல் கட்டுமான வேலைகளுக்கு ஏற்றதன்று. 1.5875 மி.மீ. வலையைக் கடந்து செல்லும் மணல் நுண்மணல் என்றும், 3.175 மி.மீ. வலையைக் கடந்து செல்லும் மணல் பருமணல் என்றும், 7.62 மி.மீ வலையைக் கடந்து செல்லும் மணல் கல் மணல் என்றும் பல வகைப்படும். நுண்மணல் பூச்சு வேலைக்கும், பருமணல் கட்டுமான வேலைக்கும், கல் மணல் கற்காரை வேலைக்கும் பயன்படுத்தப்படும். மணலுடன் நீர் சேரும் போது, மொத்த மணலின் கன அளவு கூடுதலாகும். இதை மணல் வீக்கம் எனக் குறிப்பிடலாம். நீர் அதிக அளவில் சேர்ந்தால், மணல் துகள் மீண்டும் நெருக்கம் அடைந்து இயல்பான கன அளவைப் பெறும், நல்ல மணல் என்பது வேதி மாற்றம் உண்டாக்காமல், தூய்மையாக ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்; நுண்ணுயிர்கள், தாவரங்கள் இல்லாத, நீண்ட காலம் மாறாத வடிவாக மணிகள் இருக்க வேண்டும்; நீரை உறிஞ்சக் கூடிய உப்பு இதில் இருக்கக் கூடாது. சாந்து, கட்டுமானத்தில் இணைப்புப் பொருளாகப் பயன்படும். சாந்தின் கன அளவை அதிகரிக்கும் கலப்படப் பொருளாக மணல் பயன்படுவதால் சிமெண்ட் அல்லது சுண்ணாம்பின் அளவு குறைகிறது. சுண்ணாம்புடன் இணையும் போது, அதில் உள்ள கார்பன் டைஆக்சைடு மணலில் உள்ள இடைவெளிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டு, விரைவில் இறுக்கம் அடைகிறது. சாந்து உலர்ந்து, இறுக்கம் அடையும் போது, சுருங்கிக் கீறல் விழாமல் தடுக்கிறது. சாந்து அல்லது கற்காரையின் வலிமையில் சிறு மாற்றம் செய்ய மணல் பயன்படுகிறது. சாந்தின் மீது சுமை செயல்பட்டு நொறுங்கும் போது, மணல் தடுக்கிறது. சில இடங்களில் மணலுக்குப் பதிலாகக் கல் துகள், எரித்த களி மண், எரித்த நிலக் கரித் தூள் போன்ற பொருள்கள் பயன்படுகின்றன. சாந்து பல வகைப்படும். சாந்து விரிவடையும் அடர்த்தியைப் பொறுத்துப் பளுவான சாந்து அல்லது குறை சுமையுடைய சாந்து எனப்படும். இணைக்கப்படும் பொருள்களை ஒட்டிச் சுண்ணாம்புச் சாந்து, சிமெண்ட் சாந்து, ஜிப்சச் சாந்து, சுண்ணாம்பும், சிமெண்டும் கலந்த சாந்து எனப் பல வகைப்படும். பயன்படும் தன்மையை ஒட்டிச் செங்கல் கட்டுமானச் சாந்து, பூச்சு வேலைச் சாந்து என இரு வகைப்படும். பல குறிப்பிட்ட காரணங்களுக்காகப் பயன்படும் சாந்துகள் நெருப்பு எதிர்ப்புச் சாந்து, எடை குறைந்த சாந்து, விரைந்து இறுகும் அடைப்புச் சாந்து, ஒளி ஏற்கும் சாந்து, கதிர் வீச்சுக் கவசச் சாந்து எனப் பல வகைப்படும், நல்ல சாந்து தேவையான வலிமை, ஒட்டும் தன்மை, நீர்த் தடுப்பாற்றல், வேலை செய்ய எளிதான தன்மை, விரைந்து இறுக்கம் அடையும் தன்மை, கீறல் விழாத தன்மை, நீண்ட காலம் தோற்றம் மாறாமல் உழைக்கும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். சுண்ணாம்பு, மணல், நீர் சேர்ந்த கலவையை அரைத்துச் சுண்ணாம்புச் சாந்து தயாரிக்கப்படுகிறது. அரைப்பதற்கு, செக்குப் போன்ற அரைவைத் தொட்டி அல்லது எந்திரம் பொருத்திய அரைவைக் கலன்கள் பயன்படுகின்றன. சிமெண்ட் சாந்து, நீர் புகாத மேடை அல்லது இரும்புத் தகட்டில் சிமெண்ட், மணல் கலவை மீண்டும், மீண்டும் கலக்கப்பட்டுப் பின்னர் நீர் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. ஆய்வு மூலம் சாந்தின் ஒட்டும் தன்மை, அழுத்தந்தைத் தாங்கும் வலிமை, அழுத்த விசையைத் தாங்கும் வலிமை முதலியவற்றைக் கணக்கிட முடியும். —ஏ. எஸ். எஸ். சேகர் —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. I. C. Syal & A. K. Goel, Reinforced Concrete Structures, Second Edition, Wheeler & Co Private Ltd., Allahabad, 1987. சாந்தூட்டல் மிகுந்த நீருடன் சிமெண்டைக் கலந்து நீர்ம நிலையில் தயார் செய்யப்படும் கலவை, சாந்துக் கரைசல் (grout) அல்லது சிமெண்ட் பால் எனப்படுகிறது. சில வேளைகளில் சாந்துக் கரைசலில் மணல் சிறிதளவு சேர்க்கப்படுகிறது. அது உலரும் போது, கடினத் தன்மை கிடைக்கும். சாந்துக் கரைசல் நீர்ம நிலையில் இருப்பதால், இன்றைக்கும் எந்திரத்தின் உதவியால் அழுத்தத்துடனும், வேகத்துடனும் தேவையான இடங்களில் ஊற்றப்படுகிறது. மிகப் பெரிய கட்டுமானம், அணை, சுரங்கம் இவற்றில் உள்ள சிறு கீறல், துளை, காற்று இடைவெளிகளில் சாந்துக் கரைசல் எந்திரத்தின் உதவியால் செலுத்தப்பட்டு, நீர் புகாமல் தடுக்கவும், பளு தாங்கும் ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுகிறது. பெரிய அணைக்கட்டுகளிலும், கம்பி வடங்கள் செல்லும் குழாய்களிலும், இணைப்புப் பகுதிகளை அடைக்கும் நிரப்புப் பொருளாகச் சாந்துக் கரைசல் பயன்படுகிறது. சில வேளைகளில் சாந்துக் கரைசலுடன் குறிப்பிட்ட கட்டுமானத்திற்குத் தேவையான வேதிப்பொருள்களையும் சேர்ப்பதுண்டு. சாந்துக் கரைசல் உலர்ந்த பின்னர் விறைப்புத் தன்மை அடைய வேண்டும். அதே சமயம், நீர் போல் பீறிட்டு, நுண் துளைகளிலும் உட்செலுத்த வசதியாக இருக்க வேண்டும். இவ்வாறு வேலை செய்ய எளிதானது சிமெண்ட் 1 பங்கும், நீர் 10 பங்கும் சேர்ந்த சாந்துக் கரைசல் ஆகும். பெருந்துளைகள் இருக்கும் போது, சிமெண்ட் 3 பங்கும், நீர் 4 பங்கும் சேர்ந்த கரைசலைப் பயன்படுத்தலாம். அணைக்கட்டுகளிலும், சுரங்கங்களிலும் அடிமானத்தை (foundation) வலிமைப்படுத்த சாந்தூட்டல் முறை (grouting) பயன்படுகிறது. வலிமையற்ற பாறைத் தளத்தில் எந்திரங்களின் உதவியால் நீண்ட துளைகள் போடப்பட்டு, அவை வேகத்தில் செலுத்தப்படும் காற்று, நீர் ஆகியவற்றால் தூய்மைப்படுத்தப்படும். பின்னர் பாதுகாப்பான அழுத்தத்துடன் (ஒரு ச.செ.மீ. பரப்பிற்கு 0.25 கி.கி. அழுத்தம்) சாந்துக் கரைசல் எந்திரங்களின் உதவியால் உட்செலுத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. சில வேளைகளில், இதே முறையில் அணைக்கட்டுச் சுவர்கள், பழங்காலக் கட்டடங்கள் போன்றவை வலிவூட்டப்படுகின்றன. சிமெண்ட் சாந்தூட்டல் கொடுக்க, காற்று அழுத்த எந்திரம், கலவை எந்திரம், அதிர்வு அளித்துக் கொண்டே இருக்கும் தொட்டி, இறைக்கும் எந்திரம், கரைசலைத் தேவையான இடத்தில் செலுத்தும் வளையக் கூடிய குழாய் முதலியன தேவை. தொடர்ந்து நீர்க் கசிவு உள்ள துளைகளில், சிமெண்ட் சாந்தூட்டல் முறையை முதலில் பயன்படுத்த இயலாது. அவ்விடங்களில் தார், தார்க்கீல் கலந்த சாந்துக் கரைசலைச் சாந்தூட்டலுக்கு முன்னர் பயன்படுத்த வேண்டும், தார் மற்றும் தார்க் கீல் செல்லும் போது, நீராவியுடன் சேர்த்துச் செலுத்தினால் கரைசல் முழுமையான நீர்ம நிலையில் சென்றடையும். மிகப் பெரிய துளை, பள்ளங்களை நிரப்ப, சிக்கனமாகச் சாந்தூட்டல் செய்ய, சிமெண்ட் சாந்துக் கரைசலுடன் களிமண்ணைச் சேர்க்கலாம். அக்கரைசலை மிகு அழுத்தத்தில் உட்செலுத்த வேண்டியிருக்கும். பிற வகையான சாந்தூட்டல் முறைகளைப் பயன்படுத்த முடியாத போது மட்டுமே வேதிச் சாந்தூட்டல் பயன்படுத்தப்படுகிறது. இது கடல் நீருக்கு அடியில் உள்ள கட்டுமானங்கள், அடிமானங்கள் அல்லது தொழிற்சாலைகளில் அதிக வெப்பமும், அழுத்தமும் உள்ள இடங்களில் பயன்படுகிறது. சாந்தூட்டலில் சாந்துக் கரைசல், கோந்து அல்லது பசை போன்று உருவாகிறது. மிகக் குறைந்த நேரத்தில் உலர்ந்து நிறைவடையக் கூடியது. சிறிய அளவில், சாந்தூட்டும் துப்பாக்கியின் உதவியாலும் சாந்தூட்டப்படுகிறது. மிகுந்த காற்று அழுத்தத்துடன் நீரும், சிமெண்ட்டும் இத்துப்பாக்கியினுள் செலுத்தப்படும். தேவையான இடங்களில் சிறு துளைகள் வழியே மிகு வேகத்துடன் பீறிட்டடிக் கும் முறையில் சாந்து உட்செலுத்தப்படும் முறை எளிதானது. —ஏ.எஸ்.எஸ். சேகர் சாந்தைன் மைய நரம்பு மண்டல ஊக்கிகளான சாந்தைன்களில் முக்கியமானவை காஃபீன், தியோஃபைலின், தியோ புரோமின் ஆகியன. சாந்தைன் கலந்த பானங்களில் காஃபி, தேயிலை, கோகோ, கோலா ஆகியவை அடங்கும். இவை அனைத்துமே மைய நரம்பு மண்டல ஊக்கிகளாகும். இந்த மூன்றின் வேதி அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மூன்று அல்கலாய்டுகளும் தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றன. காஃபியில் காணப்படும் காஃபீனின் அளவு ஒரு கோப்பையில் 100 —150மி.கி. ஆகும். தேயிலையில் காணப்படும் காஃபீனும், தியோஃபைலினும் ஒரு கோப்பைக்கு 30—40மி.கி. ஆகும். ஒரு கோப்பை கோகோவில் காணப்படும் காஃபீனும், தியோபுரோமினும் 15—18மி.கி. ஆகும். 12 அவுன்ஸ் கோலாவில் காணப்படும் காஃபீன் 40மி.கி. ஆகும். காஃபீன், மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டும் அளவுக்குத் தியோஃபைலினும், தியோபுரோமினும் தூண்டுவதில்லை. புதுப் பிறப்புகள், மூச்சு விடத் தடை ஏற்படும் போது தியோஃபைலினைப் பயன்படுத்துகின்றனர். சாந்தைன்கள் இதயத்தைத் தூண்டுகின்றன. அமினோஃபைலின் என்ற தியோஃபைலின் இதயத் தளர்வில் பயனளிக்கிறது. சாந்தைன்கள் பெருமூளை இரத்த நாளங்களைச் சுருக்குவதால், பெருமூளைக்கான இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. ஆகவே, இரத்த மிகு அழுத்தத்தில் ஏற்படும் தலைவலியைப் போக்க, சாந்தைன்கள் பயன்படுகின்றன. இதயத்திற்கு இரத்தம் கொடுத்தல் குறையும் போது, சாந்தைன்களைப் பயன்படுத்தினால், இதய இரத்த நாளத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சாந்தைனைச் சார்ந்த தியோஃபைலின், மூச்சுக் கிளைக் குழல் மெல்லிய தசை இழைகளை விரியச் செய்வதால், இது ஆஸ்த்துமா நோயில் பயன்படுகிறது. அனைத்துச் சாந்தைன்களும் வாய் அல்லது குதம் அல்லது ஊசி மூலமாகப் பயனளிக்கின்றன. சில போது, இரைப்பையில் உறுத்தலும், குமட்டலும் உண்டாகின்றன. சாந்தைன்கள் மைய நரம்பு மண்டல ஊக்கிகளாகவும், சிறுநீர்ப் பெருக்கிகளாகவும், மூச்சுக் கிளைக் குழல் ஆஸ்த்துமாவிலும், இதயத் தளர்வின் போதும் பயன்படுகின்றன. ஆஸ்பிரினுடன் சேர்த்துத் தலைவலிக்கு எதிராகப் பயனளிக்கும். காஃபீனும், எர்காட்டும் சேர்ந்து ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படும். மேற்கூறிய இரண்டு நிலைகளிலும் பெருமூளை இரத்த நாளங்களைச் சுருக்குவதால் பயன் உண்டாகிறது. கல்லீரல் நாள வலிக்கு, அமினோஃபைலினைப் பயன்படுத்தி 0.25-0.5 கிராம் அலகில் சிரை வழியாகச் செலுத்தி வலியைப் போக்கலாம். சாந்தைன்களின் வேண்டா விளைவுகளாக நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, பிதற்றல், மிகை நாடித் துடிப்பு ஆகியவை தோன்றலாம். அமினோஃபைலினைச் சிரை வழியாகச் செலுத்தும் போது, கவனக் குறைவாக இருந்தால் மரணம் நேரிடும். —அ. கதிரேசன் நூலோதி. Charles R. Graig, Modern pharmacology, First Edition, Little Brown & Co. Boston, 1982. சாபசைட் இது சியோலைட் கனிமக் குழுவைச் சார்ந்த ஒரு கனிமமாகும். சாபசைட்(chabazite)நீர் சேர்ந்த கால்சிய அலுமினிய சிலிக்கேட் (Ca(AlSiO)6HO) ஆகும். அறுகோணப் படிகத் தொகுதியில் உருவாகும் இது, பொதுவாக எளிய சாய்சதுரப் படிகமாகவும், ஊடுருவிய இரட்டைப் படிகமாகவும் மிகுதியாகத் தென்படும். தெளிவற்ற கனிமப் பிளவை உடையது. கடினத் தன்மை 4—5 வரை வேறுபடும். அடர்த்தி 2.05—2.15 வரை உயரும். பளிங்கு மிளிர்வு கொண்டது; பொதுவாக வெண்மையான நிறத்தைக் கொண்டிருந்தாலும், மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு நிறங்களிலும் காணப்படும். படிக உருவில் சாபசைட், கால்சைட் கனிமத்தை ஒத்திருக்கும். இது நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் நுரையை உண்டாக்காது. எனவே, இதைக் கால்சைட்டிலிருந்து வேறுபடுத்தி அறியலாம். இதன் படிக அச்சு விகிதம் 1:1.086 ஆகும். ஒளி விலகல் எண் 1.470 —1.494 வரை வேறுபடும்; குறைந்த இரட்டைக் கதிர் ஒளி விலக்கமுடையது. இக்கனிமம் நேர் (+) அல்லது எதிர்மறை (-) ஒளிக் குறியை உடையது. இதிலுள்ள கால்சியம், சோடியம் ஆகியவற்றின் அளவு பெரிதும் வேறுபடும். இக்கனிமங்களில் பொட்டாசியமும் சிறிதளவு காணப்படும். பாகோலைட் என்னும் சாபசைட், திறமற்றதாகவும், நீண்ட உருவத்துடன் கூடிய அறுகோண இரட்டைப் படிகங்களை உடைய கனிமங்களாகவும் கிடைக்கிறது. சாபசைட் குழு மூன்று கனிமங்களைக் கொண்டது. அவை சாபசைட், சிமிலினைட், இலெவினைட் ஆகும். இக்கனிமங்கள் படிக இரட்டுறல் காரணமாக அறுகோணப் படிகத்தைப் போல் தோற்றமளிக்கும். சாபசைட், பசால்ட் மற்றும் அதனுடன் தொடர்பு கொண்ட பாறைகளில் உள்ள வெற்றிடங்களில் பூச்சாகப் படிந்து வளர்ந்திருக்கும். எரிமலைப்பாறைகளின் பொந்துகளில் முழுப்படிக உருவத்துடன் கால்சைட் கனிமத்துடன் காணப்படும். இது அயர்லாந்திலும், பாரோத் தீவுகளிலும், இத்தாலியிலுள்ள திரின்தினோவிலும், ஜெர்மனியிலுள்ள ஓபர்தீனிலும், தக்காணப் படிக்கட்டுப் பாறையிலும் காணப்படுகிறது. சாபசைட் அயனி மாற்றத்திற்கும், வளிமங்களை உறிஞ்சி ஒற்றிக் கொள்வதற்கும் மிகுதியாகப் பயன்படுகிறது. ஆனால் தற்போது செயற்கையான சியோலைட்டுகள் இத்துறையில் பெருமளவில் பயன்படுகின்றன. —இரா. இராமசாமி நூலோதி. L. G. Berry and B. Mason, <>Mineralogy. W.H Freeman & Co, San Francisco, 1961. சாம்பல் சத்து காண்க: பொட்டாசிய உரங்கள் சாம்பல் நரையான் இது,சிக்கோனிபார்பீஸ் வரிசையில் ஆர்டைடே குடும்பத்தைச் சேர்ந்தது. நீர்நிலை மீன்களைத் தின்று வாழும் சிறப்பினம் உலகெங்கும் காணப்படுகின்றது. நீண்ட கால்களும், உறுதியான கூரிய அலகும் கொண்ட சாம்பல் நரையானின் கழுத்து, மீன்களைப் பற்ற உதவும் விசைச் சுருள் அமைப்புடையது. வெண்மையான நீள் கழுத்தின் முன் பக்கத்தில் மேலிருந்து கீழாகக் கறுப்பு நிறப் பட்டைகள் ஆரம் போல அமைந்திருக்கும். உடலின் மேற்பகுதி கருஞ்சாம்பல் நிறமுடையது. இறக்கைகள் கறுப்பு நிறத்தன. வயிறும், மார்பும் வெள்ளையாக இருக்கும். முழு வளர்ச்சி பெற்ற நாரையின் உச்சியிலிருந்து கறுப்பு நிறக் கொண்டை சிறு கொத்தாகப் பின்னோக்கித் தொங்கும். பெண் நாரை உருவில் சற்றுச் சிறியதாக இருப்பதோடு, இறகுகள் சற்று நிறம் மங்கியும் இருக்கும். தலைக் கொண்டையும் ஓரளவே வளர்ச்சி பெற்றிருக்கும். தென் இந்தியாவில் நீர் வளமிக்க இடங்களைச் சார்ந்து ஆங்காங்கே காணப்படும். இது வேடந்தாங்கலில் இனப் பெருக்கம் செய்கிறது. பெரும்பாலும் தனித்தே காணப்படும் இது, இனப்பெருக்க காலத்தில் குழுவாக ஏனைய நீர் வாழ் பறவைகளோடு கூடிக் கூடு கட்டும். வைகறை, நேர அளவு: ஒரு நாள் என்பது காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என ஆறு சிறுபொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் எற்பாடு என்பது மாலை \(14\) மணி முதல் \(18\) மணி வரை உள்ள காலமாகும்.அடிப்படைக் காரணம்: 'எல்' என்பது கதிரவனைக் குறிக்கிறது. 'படுதல்' என்பது மறைதல் ஆகும். எனவே, கதிரவன் மறையத் தொடங்கும் நேரம் (மாலை) 'எற்பாடு' என்று அழைக்கப்படுகிறது. நேரங்களில் நீர் நிலை அருகே தோள்களுக்கு இடையே கழுத்தை உள்ளே இழுத்து வைத்துக் கொண்டு, அசையாமல் மீன், தவளைகள் நெருங்கும் வரை ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு காத்திருந்து, பின் கழுத்தை நொடிப் பொழுகில் விரைந்து நீட்டி, இரையை அலகால் பற்றும். பிடித்த மீனின் தலைப் பகுதி முதலில் வாயுள் செல்லுமாறு விழுங்கும். நீரிடையே ஆரவாரமின்றிக் கால் மாற்றி வைத்து மெல்ல நடந்து சென்று இரை தேடுவதும் உண்டு. மரக்கட்டைகளில் கட்டையோடு கட்டையாக அசையாது அமர்ந்திருந்து, அருகே வரும் மீன்களைப் பிடிப்பதோடு, நீர்ப்பரப்பை ஒட்டிச் சற்றே உயரப் பறந்து, மீன்களைப் பிடிக்கும் பழக்கமும் காணப்படும். அமர்ந்திருக்கும் இது மக்கள் நெருங்கும் போது, ‘க்வார்ங்’ எனக் கூவியவாறே எழுந்து பறக்கும். அப்போது நீண்ட கழுத்தை முன் நீட்டி, இறக்கைகளை வேகமாக அடித்துக் கொண்டு எழுந்து பறப்பதில், இது அடையும் துன்பம் புலனாகும். உயர எழுந்து, பின் அகன்ற இறக்கைகளைச் சீராக அசைத்தவாறு, கழுத்தை S வடிவில் மடக்கி உள்ளிழுத்துக் கொண்டும், கால்களை வாலோடு ஒட்டி நீட்டியவாறும் பறப்பது காணத்தக்கது. இரவில் தோப்புகளிலும், சதுப்பு நிலக் காடுகளிலும் உள்ள மரங்களில் தங்கும் இது, பகல் நேரத்திலும் அங்கு ஓய்வு கொள்ளும். தென் இந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலும் நவம்பர்—மார்ச் வரை இது இனப்பெருக்கம் செய்கிறது. ஆண் பறவையே நீரினுள் அல்லது நீர் நிலைக்கு அருகே நிற்கும் மரங்களில் கூடு கட்டும் இடத்தைத் தேர்ந்தெடுக்கிறது. குச்சிகளைக் கொண்டு நடுவே குழிவுடைய பரண் அமைப்பிலான கூட்டினை ஆணும், பெண்ணுமாகக் கட்டி முடித்த பின் இலைக் கொத்துகள், வைக்கோல், நீரில் மிதக்கும் பாசி ஆகியன கொண்டு கூட்டினை மென்மையாக்கிக் கொள்ளும். கூடு கட்டும் சமயத்திலும், இணை சேரும் போதும் சில மரபு ஆட்டங்களைக் குரல் ஒலி எழுப்பியவாறே நிகழ்த்தும். வெளிர் கடற்பச்சை அல்லது பசு நீல நிறத்தில் நீள்வட்ட வடிவமான மூன்று அல்லது நான்கு முட்டைகளிடும். ஆணும், பெண்ணும் சில மணி நேரங்களுக்கு ஒரு முறை மாறி, மாறி அடை காப்பதோடு, கடும் வெயில், மழை ஆகியவற்றிலிருந்து முட்டைகளையும், குஞ்சுகளையும் இறக்கைளை விரித்துப் பாதுகாக்கும். முதல் முட்டை இட்ட உடனேயே அடை காக்கத் தொடங்குவதால், ஒரே கூட்டிலுள்ள குஞ்சுகளிடையே வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வேறுபாடு புலப்படக் காணலாம். 25 நாளுக்குப் பின் வெளிப்படும் குஞ்சுகளுக்கு ஆணும், பெண்ணும், உண்டு செரித்த மீன்களைக் கக்கி இரையூட்டுகின்றன. இரை கொண்டு வரும் பறவை கூட்டில் வந்து இறங்கியவுடன், குஞ்சுகள் ஆவலோடு, அதன் அலகினைப் பற்றி வேகமாக ஆட்டி, இரையைத் தங்கள் வாயினுள் கக்கச் செய்கின்றன. குஞ்சுகள் சற்று வளர்ந்தவுடன் ஆணும், பெண்ணும் கூட்டின் மீதே இரையினைக் கக்க, குஞ்சுகள் அதைத் தேடித் தின்னும். ஏழு அல்லது எட்டு வாரங்களுக்குப் பின் குஞ்சுகள் கூட்டை விட்டுப் பறந்து செல்கின்றன. —க. ரத்னம் நூலோதி. Salim Ali, and S. Dillon, Ripley Hand Book of the Birds of India and Pakistan, Vol. I. Oxford Press, New Delhi, 1968. <!---- மேலேயுள்ள கோட்டை நீக்க வேண்டாம். பக்க ஒருங்கிணைப்பின் போது, topicகளுக்கு இடையே வேறுபாடு காட்டத் தேவைப்படுகிறது.----> சாம்பல் நிறப்பொருள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ள ஒரு கரும் பொருள் வெளியிடுகிற பல்வேறு அலை நீளமுள்ள கதிர்களைப் போலவே, அவற்றுக்குக் குறிப்பிட்ட விகிதத்தில் கதிர்களை வெளியிடுகிற அதே வெப்ப நிலையிலுள்ள ஒரு பொருள் சாம்பல் நிறப் பொருள் (grey body) எனப்படும். அதன் கதிர்களின் ஆற்றல் பரவீடும், கரும் பொருள் கதிர் வீச்சின் ஆற்றல் பரவீட்டைப் போன்றதாகவே இருக்கும். ஒவ்வோர் அலை நீளத்திலும், கரும்பொருள் கதிர் வீச்சுச் செறிவுக்கும், சாம்பற் பொருள் கதிர் வீச்சுச் செறிவுக்கும் இடையில் உள்ள தகவு ஒரே அளவாக இருக்கிறது. சாம்பல் நிறம் என்பது பொருளின் நிறத்தைக் குறிப்பது அன்று, அப்பொருளின் கதிர் வீச்சுப் பரவீடு, கரும்பொருளின் கதிர் வீச்சுப் பரவீட்டை ஒத்திருப்பதாலும், அது கரும்பொருள் கதிர் வீச்சுப் பரவீட்டை விடக் குறிப்பிட்ட அளவு குறைந்திருப்பதாலும், அத்தகைய பொருள்கள் சாம்பல் நிறப் பொருள்கள் எனப்படுகின்றன. பெரும்பாலான உலோகங்களுக்கு நிற மாலையின் கண்ணுக்குத் தெரியும் பகுதிக்குள் கதிர் வீச்சு எண் (emissivity) மாறிலியாக இருக்கும். எனவே அவை அப்பகுதியில் சாம்பல் நிறப் பொருள்கள் ஆகும். சாம்பல் நிறப் பொருள் என்ற கருத்து சில குறிப்பிட்ட பொருள்களின் மொத்தக் கதிர் வீசலின் செறிவைக் கணக்கிட உதவுகிறது. ஸ்டீபான்—போல்ட்ஸ்மான் விதியின் மூலம் கிடைக்கிற, கதிர் வீசலின் மொத்த ஆற்றலைக் கதிர் வீசு எண்ணால் பெருக்கினால், மொத்தக் கதிர் வீசல் செறிவு கிடைக்கிறது. ஒரு பரப்பு வெளியிடும் கதிர் வீச்சின் ஆற்றல் பரவீட்டை ஒத்த அல்லது ஏறத்தாழ ஒத்திருக்கிற கதிர் வீசும் ஆற்றல் பரவீட்டை உடைய ஒரு கரும் பொருளின் வெப்ப நிலை, அப்பரப்பின் நிற வெப்ப நிலை (colour temperature) எனப்படும். ஒரு சாம்பல் நிறப் பொருளுக்கு, நிற மாலை முழுதும் கதிர் வீசு எண் மாறிலியாக இருப்பதால், அதன் பரப்பின் நிற வெப்ப நிலையும், உண்மையான வெப்ப நிலையும் ஒன்றாகவே இருக்கும். சாம்பல் நிறப் பொருள் என்ற கருத்து, பொருள்களின் நிற வெப்ப நிலையை அளவிட்டு, உண்மையான வெப்ப நிலையைக் கணக்கிட உதவுகிறது. —கே. என். ராமச்சந்திரன் சாம்பல் நோய் இந்நோய் பல பயிர்களில் காணப்படுகிறது. உளுந்து, பாசிப்பயறு, துவரை, கொத்தவரை, கொள்ளு அல்லது கானப்பயறு, தட்டைப்பயறு, பட்டாணி, மிளகாய், வெண்டை, எள், மா, பருத்தி, புகையிலை, வெந்தயம், சதகுப்பை (sowa), அவரை, சீரகம், கொத்துமல்லி போன்ற பயிர்களில் பொதுவாகச் சாம்பல் நோய் (powdery mildew disease) காணப்படும். அறிகுறிகள். இந்நோயினால் இலைகளிலும், தண்டின் முனையிலும் பூசணப் படிவுகள் வெண்மையாகக் காணப்படும். தாக்கப்பட்ட இலைகள் வளர்ச்சி குன்றிச் சிறுத்து விடுகின்றன. நோய் முனைப்புடன் தோன்றினால், இலைகள், பூக்கள் யாவும் உதிர்ந்து விடுகின்றன. காரணி. இந்நோய் பெரும்பாலான பயிர்களில் எரிசிபே பாலிகோனி, லெவல்லுலா டார்கா என்ற பூசணங்களால் தோன்றுகிறது. இவ்விரண்டு பூசணங்களுமே வெந்தயப் பயிரில் சாம்பல் நோயை உண்டாக்குகின்றன. அ. எரிசிபே பாலிகோனி. இப்பூசணம் பூசண இழைகளை (mucelia) வெளிப்புறத்தில் உண்டாக்கி, அவற்றிலிருந்து உறிஞ்சிகளை (haustoria) வெளிப்புறத் தோலின் திசுவறைக்குள் செலுத்துகிறது. பூசண இழை, குறுக்குச் சுவருடன் 4.6—5.0 மைக்கிரான் குறுக்களவைக் கொண்டது. தூள் வித்துத் தண்டு (conidiophore) 106.5—166.5 மைக்கிரான் நீளமுடையது. தண்டின் நுனிப் பகுதியுடன் சங்கிலித் தொடர் போன்று தூள் வித்துகள் (conidia) வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தூள் வித்துகள் ஒற்றைச் செல்லுடன், நிறமற்றும் கண் வடிவத்துடனும் 29-45X13-16 மைக்கிரான் அளவிலும் காணப்படும். ஆ. லெவல்லுலா டாரிகா. இப்பூசணம் திசுவறைகளுக்கிடையில் பரலிக் காணப்படும். உறிஞ்சிகள் திசுவறைகளின் உட்பகுதியுடன் தொடர்பு கொண்டுள்ளன. உட்பகுதியிலுள்ள பூசண இழைகளிலிருந்து தூள் வித்துத் தண்டுகள் தோன்றி இலைத் துளை (stomata) வழியாகத் தனியாகவோ, கொத்தாகவோ வெளிப்படுகின்றன. ஒவ்வொரு தூள் வித்துத் தண்டிலிருந்தும், ஒவ்வொரு தூவி தோன்றும். தூள் வித்து கள் ஒற்றைத் திசுவறையுடன் திறமற்று உருளை வடிவத்தில் 35-80X12-28 மைக்கிரான் அளவுடன் காணப்படுகின்றன. வித்துக் குடுவை (cleistothecium) 200 மைக்கிரான் குறுக்களவில், உருண்டை வடிவத்தில் இருக்கும். ஒவ்வொன்றிலும் 10—40 குடுவை உள் வித்துக் கூடுகள் (asci) உள்ளன இவை 80-100×30-40 மைக்கிரான் அளவுடையவை. ஒவ்வொரு குடுவைஉள் வித்துக் கூட்டிலும் ஒற்றைத் திசுவறையுடன் கூடிய முட்டை அல்லது சிறிது வளைந்த வடிவத்தில், நிறமற்ற இரண்டு ஆஸ்கோ வித்துகள் அடங்கியிருக்கும்.இவை 25-40×15-30 மைக்கிரான் அளவுடையவை. பரவுதல். காற்றின் மூலம் தூள் வித்துகள் பரவி, நோயைத் தோற்றுவிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த நுண்ணிய கந்தகத் தூளை ஹெக்டேருக்கு 25 கி.கி. வீதம் பயிரில் தூவ வேண்டும். —கா. சிவப்பிரகாசம் நூலோதி. R.S. Singh, Plant diseases, Oxford and IBH Publishing Co., Calcutta, 1968. சாமக்குருவி கேப்ரிமுல்ஜிபார்மீஸ் (Caprimuljiformes) வரிசையில் அதே பெயரால் வகுக்கப்பட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்தது சாமக்குருவி (night jar) ஆகும். இது குறுகிய உறுதியற்ற அலகினைப் பெற்றது. அதனை ஈடு செய்யும் வகையில் தவளை போல அகலத் திறக்கும் வாயமைப்புடையது. காலை, மாலை, அந்திகளில் இது வாயைத் திறந்தவாறு பறந்து, பறக்கும் பூச்சிகளை இரையாகப் பிடித்து உண்ணும். இரவில் இருட்டில் பார்க்க உதவும் பெரிய கண்களையும், திறமையாகப் பறந்து பூச்சிகளைத் துரத்திப் பிடிக்க உதவும் நீண்ட இறகுகளையும், வாயையும் பெற்றது. முகத்தில் மெல்லிய கம்பி போன்ற தூவிகள் உண்டு. கால்களும், கால் விரல்களும் உறுதியற்றனவாக மரக் கிளைகளைப் பற்றிப் பிடித்து அமர இயலாத வகையில் அமைந்துள்ளன இதனால், தரையில் அமர்ந்து பகல் நேரத்தைக் கழிப்பதோடு, தரையிலேயே இரண்டு முட்டைகள் இடும். தென் இந்தியாவில் சாமக் குருவிகளில் ஐந்து சிறப்பினங்கள் காணப்படுகின்றன. வெண் பழுப்பு, சாம்பல், செம்பழுப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய பல நிறங்கள் கொண்ட புள்ளிகளையும், கோடுகளையும், பட்டைகளையும் கொண்ட இவற்றின் நிறம் தரையோடு ஒட்டி அமைந்து விடுவதால், பகல் நேரத்தில் தரையோடு தரையாக அமர்ந்திருக்கும் இவற்றை எளிதில் கண்டு கொள்ள முடியாது. பின் வரும் சிறப்பினங்களிடையேயான வேறுபாடுகளை நேரில் கண்டு அறிவது கடினம். எனினும், ஒவ்வொரு சிறப்பினமும் ஒவ்வொரு வகையான குரலொலி எழுப்பும் இயல்புடையது. ஆகையால், அக்குரலொலி கொண்டு ஒருவாறு ஒரு வட்டாரத்தில் திரிவது எந்தச் சிறப்பினச் சாமக்குருவி என வேறுபடுத்தி அறிதல் கூடும். பெருங்காதுடைய சாமக்குருவி (Eurostopodus macrotis). தலையில் கண்ணுக்குப் பின்புறம் இருமருங்கும் காது போல் பின்னோக்கி வளர்ந்திருக்கும் கொண்டைத் தூவிகளைக் கொண்டது. வீட்டுக் காக்கை அளவுள்ளது. உடலெங்கும் கறுப்பு, பழுப்பு, சாம்பல் நிறப் புள்ளிகளோடும், கீற்றுகளோடும் கூடிய உடலும் கொண்ட இதுவே தென்னிந்தியாவில் காணப்படும் சாமக்குருவிகளுள் உருவில் பெரியது. பகல் முழுதும் வயிற்றைத் தரையிலோ, மரக்கட்டை மீதோ வைத்தவாறு படுத்துக் கிடக்கும் இது, சூரியன் மறைந்ததும், உரத்த குரல் எழுப்பிக் காடுகளில் வளர்ந்திருக்கும் மரங்களுக்கு மேல் பறக்கும் பூச்சிகளைத் தேடி வட்டமிட்டுப் பறக்கும். ஓலமிட்டு அழுவது போன்ற குரலில், ‘விஹி—வொஹீவு’ என்று இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து குரல் கொடுக்கும். கேரளத்தைச் சார்ந்த காடுகளில் மட்டுமே குறிப்பிட்ட வட்டாரங்களில் இதைக் காணலாம். காட்டுச் சாமக்குருவி (Caprimulgus indicus). புறாவை விட அளவில் சிறிய இதை மலை சார்ந்த வறள் காடுகளில் தரை மட்டத்திலிருந்து 2300 மீ. உயரம் வரை காணலாம். தேக்கு, மூங்கில் வளர்ந்துள்ள காட்டுப் பகுதிகளில் விரும்பித் திரியும் இயல்புடையது. பகலில் மரக் கிளைகளின் மேலேயும், தரையில் நிழலான இடங்களிலும் பொழுதைக் கழிக்கும் இது, சூரியன் மறைந்தவுடன் எழுந்து குரலெடுத்துக் கத்தியவாறு இரை தேடத் தொடங்கும். சாமக்குருவிகளின் இறக்கை, ஆந்தைகளின் இறக்கை போல மென்மையானது. ஆனால், பறக்கும் போது இறக்கைகளில் அதிர்வு ஒலி கேட்பதில்லை. காடுகளிடையே செல்லும் பாதையின் புழுதியில் படுத்துக் கிடக்கும் இதன் கண்கள் கார் விளக்கொளியில் மாணிக்கம் போலப் பளபளக்கக் காணலாம். பட்டாம்பூச்சி, வண்டு, ஈசல் முதலிய பறக்கும் உயிரினங்களே இதன் இரையாகும். ‘சுக்-சுக்-சுக்’ எனவும், ‘சுக்கூ- சுக்கூ-சுக்கூ’ எனவும், ‘ஊக் குரூகுரூ-ஊக் குரூகுரூ’ எனவும் இரவுகளிலும், இனப் பெருக்க காலத்திலும் இரவு முழுதும் குரல் கொடுத்தவாறு இருக்கும். நீண்டவால் சாமக்குருவி(Caprimulgus macrurus). உருவில் முந்தைய இனத்தை ஒத்த இது சற்று நீண்ட வால் உடையது. பெண்ணின் வால் இறகின் முனைகளில் வெள்ளைத் திட்டு உண்டு .மலை சார்ந்த பசுமை மாறாக் காடுகளில் காணப்படும். ‘சவுங்-சவுங்’ எனத் தொடர்ந்து 50 முறை வரை குரல் எடுத்துக் கத்தும். 4 நொடிகளில் ஐந்து முறை ‘சவுங்’ ஒலி எழுப்பும். இனப்பெருக்க காலமான மார்ச்—ஜுலை வரையான பருவத்தில் இரவு முழுதும் இக்குரலைக் கேட்கலாம். சின்ன சாமக்குருவி (Caprimulgus asiatis). மைனா அளவுள்ள இதன் உடலில் மெல்லிய கருங்கோடுகள் நிறைந்திருக்கும். இந்தியா முழுதும் வறள் காடுகளிலும், கள்ளி, கற்றாழைகள் புதராக மண்டியுள்ள பகுதிகளிலும் காணப்படும் இது அவ்வப்போது இடம் பெயர்ந்து வேறு பகுதிகளுக்குச் சென்று விடுவதும் உண்டு. பழக்க வழக்கங்கள் ஏனைய சாமக்குருவி போன்றன. ‘சுக் சுக்-சுக்-சுக் சுர்ர்’ என நேரே நிற்கும் கம்பம் அல்லது கல் மேல் அமர்ந்து குரல் கொடுக்கும். இனப்பெருக்க காலத்தில் இரவு நெடுக இவ்வாறு குரல் கொடுக்க, அதன் துணை எதிர்க் குரல் கொடுத்தவாறு இருக்கும். வெள்ளை வால் சாமக்குருவி (Caprimulgus alfinis). மைனாவை விடச் சற்றுப் பெரிய உருவுடைய ஆணின் வால் முழுதும் வெண்மையாகவும், பெண்ணின் வால் பட்டைகளைக் கொண்டதாகவும் இருக்கும். மார்பைத் தரையோடு வைத்து உட்கார்ந்த நிலையில் இருக்கும் போது, இதன் தோள் பட்டையிலிருந்து V வடிவ வெளிர்பட்டை முதுகு வரை நீண்டிருக்கக் காணலாம். சவுக்கைச் சொடுக்கும் போது எழும் ‘சுவீஸ்’ என்னும் ஒலியை உயரமான இடத்தில் அமர்ந்து 4 அல்லது 5 நொடிக்கு ஒரு முறை எழுப்பும். —க. ரத்னம் நூலோதி. Salim Ali, and S. Dillon Riply, Hand Book of the Birds of India and Pakistan, Vol. IV, Oxford Press, New Delhi, 1970. சாமந்தி இது கம்ப்போசிட்டே (compositae) என்னும் சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் கிரிசாந்த்திமம் இண்டிகம் (Chrysanthemum indicum) <!---- As per the custom the Botanical name of a plant or flower consists of two parts or words. The first letter of the first part start with Capital letter and the second part starts with small letter----> என்பதாகும். இதில் ஏறத்தாழ 150 இனங்கள் உண்டு. இவை பெரும்பாலும் பல பருவச் செடி கள். சில இனங்கள் ஆண்டுதோறும் புதியனவாக விதையினின்று உண்டாகும் ஒரு பருவச் செடிகளாக உள்ளன. இலைகள். மாற்றிலையடுக்க இலைகள்: வெளிர் பச்சை நிறமுடையலை. மலர்கள். பூத்தலைகளாக (head) மலர்கள் உண்டாகும். தனிப் பூக்கள் சிறியவை; அவை சிறு பூக்கள் (florets) எனப்படும். பூத்தலைகள் தனியாக நீண்ட பூத்தண்டுகளின் (peduncle) முனையில் இருக்கும் அல்லது பல பூத்தலைகள் குடை மஞ்சரி (corymbose) வடிவில் ஒன்று திரண்டிருக்கும். மகரந்தக் கேசங்களும், சூலகமும் முழுமையான பூக்களைக் கொண்டுள்ளன. பூத்தலையின் ஓரத்தில் சுற்றிலுமுள்ள கதிர்ச்சிறு பூக்கள் பயன் தருபவை. இச்சிறு பூக்களின் நிறமே சாமந்திப் பூவின் நிறமாகும். பூக்கள் வெள்ளை, மஞ்சள், ரோஜா போன்ற அழகிய வண்ணங்களில் நறுமணத்துடன் காணப்படுகின்றன. சில கம்ப்போசிட்டே இனங்களில் சிறு பூக்களின் இடையில் பூச்செதில்கள் (paleae) என்னும் பூக்காம்புச் சிற்றிலைகள் காணப்படும். இப்பூச்செதில்கள் சாமந்திப்பூவில் காணப்படுவதில்லை. பூக்காம்பிலைகள் பல அடுக்குகளாகச் சிற்றிலை வட்டமாக (involucre) அமைந்திருக்கும். கனி. வெடியாச் சிறு உலர் கனி (achene). ஓர் அறையையும், ஒரு விதையையும் கொண்டது. உலர் கனியை விதை என்பர். கனியின் உச்சியில் மயிர்க் குச்சம் போல் புறவிதழ்கள் காணப்படும். வளரிடம். இது உலகின் பல பகுதிகளில் வளர்கிறது. எனினும் ஆஃபிரிக்காவில் மிகுதியாகக் காணப்படுகிறது. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சாமந்திப் பூ முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது ஜப்பான் மன்னரின் அடையாளப் பூவாக உள்ளது. பயிர் செய்யும் முறை. சாமந்தியைத் தொட்டி அல்லது நிலத்தில் பயிரிடுவர். பெரும்பாலும் கிளைகளை நறுக்கி நட்டு, அவை வேர் பிடித்தவுடன் பெயர்த்தெடுத்துக் குறுமண்ணும், மணலும், எருவும் கலந்த மண்ணில் புரவலாக நட வேண்டும். நீரைப் போதிய அளவுக்குப் பாய்ச்ச வேண்டும். கிளைகளின் முளைகளைக் கிள்ளி விட்டால், செடி புதர் போலச் செழித்து வளரும். குளிர் காலத்தில் சாமந்திப் பூக்கள் மிகுதியாக மலரும். சாமந்தியில் பல இனங்கள் இருப்பினும், மிகச் சில இனங்களே தோட்டத்தில் பயிர் செய்யப்படுகின்றன, அவை வருமாறு: உள்வளைந்த சீனவகை. இதில் பூத்தலை உருண்டையாகவும், ஒழுங்காகவும் இருக்கும். சிறு பூக்கள் வழுவழுப்பாக உருண்டு, முனையில் சிறு பற்களுடன் போதிய அளவு நீண்டு, கவர்ச்சியான வளைவைக் கொண்டிருக்கும். அனிமோன் வகை (anemone). இவ்வகை மலர்கள் உயர்ந்த அழகிய நடுப்பகுதியைக் கொண்டவை. கதிர்ச் சிறு பூக்கள் தட்டையாகக் கிடைமட்டத்தில் அமைந்திருக்கும். பாம்ப்பன் வகை. இது தட்டை அல்லது ஏறக்குறைய உருண்டையாக இருக்கும். ஒழுங்காகவும், இறுக்கமாகவும் பொருந்தியிருக்கும். சிறு பூக்கள் குட்டை, தட்டை அல்லது பருமனாகக் காணப்படும். தனி வகை. இதில் சிறுபூக்கள் போதிய அளவுக்கு நெருக்கமாகப் பொருந்தியுள்ளன. பூத்தலை ஒழுங்கான ஓரத்தைக் கொண்டுள்ளது. கதிர்ச் சிறு பூக்கள் ஒன்று அல்லது இரண்டு வரிசையில் இருக்கும். சிலவற்றில் 3 அல்லது 4 வரிசையும் காணப்படும். பூத்தலையின் நடுவில் குட்டையான அல்லது நீண்ட குழாய் வடிவச் சிறு பூக்கள் இருக்கும், அருவி வகை(cascade). இதில் சிறு பூக்கள் ஒரு வரிசை மேலும், ஒரு வரிசை மடிந்தும் அடுக்கடுக்காக இருக்கும்.பயன்கள். சில சாமந்தி வகைகள் அழகுக்காகவும், அணி கலன் செய்யவும் பயனாகின்றன. சில வகைகள் பூச்சி கொல்லிகளாகப் பயன்படும். அஸ்ஸாமில் சாமந்திக் கொழுந்து, சமையலில் பயன்படுகிறது. பூவும் பட்டையும் மருந்தாகப் பயன்படும். —அ. அரங்கநாதன் சாய் சதுரம் நான்கு கோடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு நாற்கோட்டத்தில் (quadrilateral) நான்கு பக்கங்களும் சமமாகவும், இணையாகவும் இருந்து நான்கு கோணங் களும் சமமாக, ஒவ்வொன்றும் 90° இருப்பின், அது சதுரம் எனப்படும். நான்கு பக்கங்கள் மட்டும் சமமாக இருக்கும் நாற்கோட்டம், சாய்சதுரம் (rhombus) எனப்படும். இது இணைகரத்தின் ஒரு வகையாகும். மூலை விட்டங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக வெட்டிக் கொள்ளும். ஒரு பக்கத்தையும் உயரத்தையும் பெருக்கினால் கிடைக்கும் தொகை சாய்சதுரத்தின் பரப்பிற்குச் சமமாகும். மூலை விட்டங்களின் பெருக்குத் தொகையில் பாதியும் இதன் பரப்பிற்குச் சமமாகும். —பங்கஜம் கணேசன் சாய்சைட் இது ஒரு சிலிக்கேட் கனிமம். எப்பிடோட் கனிமக் குழுவைச் சேர்ந்த இது, நீர் கலந்த கால்சியம் அலுமினியம் சிலிக்கேட் (Casub|2))Alsub|3))Sisub|3))Osub|12)) (OH)sub|2)) ஆகும். இதில் சிறிய அளவில் இரும்பு காணப்படுகின்றது. சாய்சைட் (zoisite) கிளைனோசாய்சைட் என்னும் கனிமத்துடன் ஈருருவத் தொடர்பு உடையது. செவ் வகத் தொகுதியின் நிறை வடிவ வகுப்பைச் சேர்ந்த இது, இயல்பான அடிப்படை அணுக்கோப்பை உடையது. இதன் ஓர் அணுக்கோப்பில் நான்கு கூட்டணுக்கள் உள்ளன. கனிமத்தின் அணு அமைப்பில் அணுக்களுக்கு இடையேயுள்ள தொலைவு முன்பின் திசையில் 16.2—16.30 Å ஆகவும், பக்க வாட்டத்தில் 5.45—5.63 Å ஆகவும், கீழ்மேலாக 10.04—10.20 Å ஆகவும் இருக்கும். சாய்சைட்டில் படிக அச்சுகளின் விகிதம் a:b:c=0.6195: 1:0.3429. இதன் படிகங்கள் பெரிதும் பட்டகங்களாகக் காணப் படுகின்றன. படிகங்களில் கீழ்மேலாக ஆழமான கீறல்கள் உள்ளன. இது படிகமாக அரிதாகக் காணப்படும். சாய்சைட் திண்மங்களாகவும், தூண் போன்று கெட்டியாகவும் இருக்கும். இதில் (100) கனிமப் பிளவுகள் தெளிவாகவும், (010) தெளிவின்றியும் காணப்படும். இது சாம்பல் நிறம், பசுமை கலந்த சாம்பல் நிறம், பசுமை கலந்த சருகு நிறம், பசுமை, வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிறமுடையது. சில நிறமற்றவையாகவும், ஊதா நிறமாகவும் உள்ளன. இதன் தூள் நிறமற்றது. சாய்சைட் சீரற்ற அல்லது வளைவு முறிவு உடையது. பளிங்கு மிளிர்வும், கனிமப் பிளவு தளத்தில் முத்து மிளிர்வும் காணப்படும். இதன் கடினத் தன்மை 6.5—7 ஒப்படர்த்தி 3.35 ; நொறுங்கக் கூடியது. ஒளி புகும் அல்லது ஒளி கசியுந்தன்மை உடையது. நுண்ணோக்கியில் சாய்சைட்டைக் காணும் போது, குறிப்பாக இளஞ்சிவப்பு நிறமுடையது. இது திசைக் குணமாற்றம் உடையது. இதன் ஒளி விலகல் எண்கள் α = 1.685. - 1. 705; β = 1.688. -1.710; γ = 1.697. -1.725. இது இரண்டு ஒளி அச்சுகளை உடையது. இதன் ஒளி அச்சுக் கோணம் (2V)= 0°-60° நேர் ஒளிக்குறி உடையது. இதில் ஒளி அச்சுத்தளம் (010) முகத்திற்கு இணையாக அமைகிறது. இரும்பு உள்ள கனிமங்களில் இத்தளம் (001) முகத்திற்கு இணையாக இருக்கும். இதில் ஒளி பிரிதல் மிகுதி. தூளைட், டான்சனைட் ஆகிய இரண்டும் சாய்சைட்டின் வகையைச் சேர்ந்தவை, சாய்சைட் கார அனற் பாறைகளிலிருந்து உண்டான மாற்றுருப் பாறைகளில் காணப்படுகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பின்லாந்து, சோவியத் ஒன்றியக் குடியரசு, ஜப்பான் ஆகிய நாடுகளில் சாய்சைட் கிடைக்கிறது. —இல. வைத்திலிங்கம் நூலோதி. N. L Sharma & K. S. V. Ram, Introduction to India's Economic Minerals, Dhanbad Publishers, Dhanbad, 1964. சாய்தளம் பொறியியல் அமைப்புகளில் தளங்கள் படுகைகளாகப் பயன்படுகின்றன. பொறிகளில் அடிப்பகுதியாகவும், ஆதாரமாகவும் விளங்கும். இத்தளங்கள் இயக்கத்திற்கு ஏற்றவாறு கிடைமட்டமாகவோ, சற்றுச் சாய்வாகவோ இருக்கும். திட்ட வடிவமைப்பின் மூலம் சாய்தளமாக அமையும் பரப்புகள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருக்கும். படம் 1 இல் காட்டியவாறு ஒரு பொருள் கிடை மட்டப் பரப்பில் இருப்பதாகக் கொள்ளலாம். பொருளுக்கும், பரப்பிற்கும் உள்ள உராய்வு குணகம் μ என்றிருக்கும். பொருளின் எடை கீழ்நோக்கி W என்றும், கிடைமட்ட விசை F என்றும் இருந்தால், பொருள் நகர்வதில்லை. கிடைமட்ட விசை F=μW என்னும் நிலைக்கு வந்தால்தான் பொருள் நகரும். ஆனால் பொருள் நகர்வதற்கு முன்னால் இப்பொருள் சமநிலையில் இருக்க கிடைமட்ட விசை F, உராய்வற்ற எடை விசை W, செங்குத்து விசை ஆகிய மூன்றும் சேர்ந்து பொருளைச் சமநிலையில் வைத்திருக்கும். இவ்விசைகளின் தொகு பயன் (resultant) R செங்குத்து விசைக்கு α என்ற கோணத்தில் இருப்ப தாகக் கொள்ளலாம். கிடைமட்ட விசை F அதிகரித்தால், கோணம் α அதிகரித்துத் தளத்தில் நகரக் கூடும் இந்நிலையில் F=μ.W; tan α = F/W = μ. இப்போது சாய்தளம் (inclined plane) படம் 2இல் உள்ளவாறு ஏதேனும் ஒரு கோணத்தில் அமைந்தால் பொருளில் ஏற்படும் விசையும் படத்தில் உள்ளவாறு இருக்கும். தளத்தில் கோணம் எதுவாக இருந்தாலும், எடை விசை W இரண்டு பிரிவுகளாகப் பெறப்படும். (அ) தளத்திற்கு இணையாக W Sin α. இது பொருளைக் கீழ் நோக்கி நகரச் செய்யும். (ஆ) தளத்திற்குச் செங்குத்தாக WCos α. இது தளத்திற்கும் பொருளுக்கும் இடையேயுள்ள செங்குத்து எதிர் விசைக்குச் (normal reaction) சமன் செய்யும். தளத்திற்குக் கீழ் நோக்கி இருக்கும் விசையின் பகுதி உராய்வு விசையின் வரம்பிற்குச் சமமாகும் போது பொருள் நகரக் கூடும். அதாவது W Sin α= FCos α அல்லது tan α=μ எனவே, இந்நிலையில் தளத்தின் கோணம் α உராய்வு வரம்புக் கோணம் (limiting friction angle)Φக்குச் சமமாக இருக்க வேண்டும். ∴ α = Φ இந்நிலையில் எதிர் வினை R எடை விசை Wக்குச் சமமாகவும், எதிர்த் திசையாகவும் இருக்கும். ஆகையால், எதிர் வினை தளத்தின் செங்குத்து அச்சுக்கு Φ என்ற கோணத்தில்தான் இருக்க வேண்டும். இந்நிலையில் பொருள் நகர்ந்து விடும். பெரும்பாலான பொறி அமைப்புகளில் சாய்தளங்கள் பயன்படுகின்றன. விசை, பொருளின் மீது செலுத்தப்படும் போது, பொருள் சீரான திசை வேகத்தில் தளத்திற்கு இணையாக நகரும். இதில் பொருள், விசையின் திசைக்கேற்ப மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ நகரலாம். இந்நிலையில் தளத்தின் மீது உள்ள பொருளில் ஏற்படும் விசைகளின் நிலை, படம் 3இல் விளக்கப்பட்டுள்ளது. சாய்தளத்தை ஓர் எந்திரத்திற்குச் சமமாகக் கருதினால், அந்த எந்திரத் திறன் (அ) பொருள் மேல் நோக்கி நகரும் போது திறன், η = என்றும், ஆ) பொருள் கீழ் நோக்கி நகரும் போது திறன் η = என்றும் அமையும். —கே. ஆர். கோவிந்தன் சாய்வரி ஒண்பட்டுப் புறணித்துணி இது சாட்டின் பருத்தி கொண்ட இரு படை நெசவுடைய துணியாகும். சாய்வரி ஒண்பட்டுப் புறணித் துணி (silesia) மிகுதியாகக் கஞ்சியிடப்பட்டு, சாயமேற்றப்பட்டுப் பளபளப்பான மேற்பரப்புக் கொடுக்கப்பட்டுச் சீராக முடிக்கப்படுகிறது. ஆனால், சில சமயம் கோட்டு வடிவங்களும் அச்சிடப்படுகின்றன. இது 27 சிணுக்கு (பாவில்) எண்ணும், 18 சிணுக்கு (ஊடையில்) எண்ணும் கொண்டுள்ளது. —இரா. சரசவாணி சாய்வரிக் கம்பளித் துணி நன்கு முறுக்கப்பட்ட கம்பளி, பருத்தித் துணி ஆகியன மிதமான எடையுடன் மேல் நோக்கி இரண்டும் கீழ் நோக்கி இரண்டுமாக, 45° கோணத்தில் குறுக்கு வாட்டத்தில் அமைந்தது இருபடைத் துணி (twill) ஆகும். பொதுவாக முழுச்சீர் செய்தலும், எப்போதாவது பகுதிச்சீர் செய்தலும் (semi finish) கொண்டது. இருபடை வகை அமைப்பு முன்புறமும், பின்புறமும் நன்கு தெரியும்; பல வனககளில் தயாரிப்பதற்கு இது ஏற்றது. துவளுந்தன்மை மிக்கதாகையால், உடலுடன் ஒட்டி எடுப்பான தோற்ற உருவத்தைக் கொடுக்கக் கூடியது, இத்துணியில் மெல்ல மெல்ல உருவாகும் பளபளப்பை அகற்ற முடியாது. ஏனைய கம்பளித் துணிகளைப் போன்று சாய்வரிக் கம்பளித் துணி (serge) வலஞ்சுழி இருபடை அமைப்புக் கொண்டது. —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles - Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, New York, 1985. சாய்வுகோணம் படலங்களாக (அடுக்குகளாக) உள்ள பாறைகள் கிடைமட்டத்திலிருந்து சாய்ந்திருக்கும் கோணத்திற்குச் சாய்வுகோணம் (dip) என்று பெயர். செங்குத்தாக அமைந்திருக்கும் பாறைப் படலத்தின் சாய்வு கோணம் 90° ஆகவும், கிடைமட்டத்திலிருக்கும் படலத்தின் சாய்வுகோணம் 0° ஆகவும் கருதப்படுகிறது. எனவே, சாய்வுகோணம் இவ்விரண்டிற்குமிடையே இருக்கும். ஒரு பலகையை, சாய்ந்திருக்கும் வகையிலும், நீரில் ஒரு பகுதி மூழ்கி இருக்கும் வகையிலும் வைத்தால், அப்பலகையில் நீர்மட்டம், ஒரு கோடு போல் இருக்கக் காணலாம். இதனைக் கிடைமட்டமான நீர் மட்டமும், சாய்ந்திருக்கும் பலகையின் தளமும் சந்திக்கும் கோடு எனக் கூறலாம். இந்தக் கோட்டை பாறைப் படலத்தின் கிடைமட்டம் (strike) என்பர். சாய்வு கோணம் இந்தக் கிடை நீட்டத் திசைக்கு 90° குறுக்காக உள்ள திசையில் அமைந்துள்ள செங்குத்தான தளத்தில் அளக்கப்படுகிறது. இதை நிறை (முழு) சாய்வுகோணம் என்பர். வேறு திசைகளில் அளந்தால், அப்படலத்தின் சாய்வு கோணம் முன் அளந்த திசையில் இருந்ததை விடக் குறைவாகவே இருக்கும். கிடை நீட்டத்தின் திசைக்கு மிக நெருக்கமான திசையில் அளந்தால் இது 0°க்கு ஏறக்குறைய சமமாக இருக்கக் காணலாம். ஆகையால் கிடைநீட்டத் திசைக்கு 90" குறுக்காக அமையாத பிற திசைகளில் அளக்கப்பட்ட சாய்வுகோணம் குறை-சாய்வுகோணம் என்று பிரித்துக் கூறப்படும். பொதுவாக, சாய்வுகோணம் என்பது நிறை சாய்வு கோணத்தையே குறிப்பதாகக் கொள்ளப்படும். சாய்வுகோணத்தின் அளவை இத்தனை பாகை என்று குறிப்பிடுவதோடு, அது சாய்ந்திருக்கும் திசையையும் குறிப்பிடுவது மிகவும் இன்றியமையாதது. ஆகவே, சாய்வு கோணம் எனும் போது பாறைப் படலம் சாய்வாகவுள்ள கோண அளவையும், அது கீழ் நோக்கிச் சாய்ந்துள்ள திசையையும் குறிக்கிறது என்பது தெளிவாகும். எனவே, சாய்வு கோணம் எனும் சொல் இரண்டு பகுதிகள் அல்லது கூறுகளை உடையது. சாய்வுகோணம் பல வகைகளில் அளவிடப்படுகிறது. நிலப்பரப்பில் காணப்படும் பாறைகளின் சாய்வு கோணத்தைச் சரிவளவி திசைக்காட்டி என்னும் கருவியைப் பயன்படுத்தி அளக்கலாம். நில மட்டத்திற்குக் கீழே புதைந்து மறைந்து கிடக்கும் பாறைகளின் சாய்வு கோணத்தைச் சோதனைத் துளை இட்டு, அந்தத் துளைகளில் ஒரு குறிப்பிட்ட பாறை இருக்கும் ஆழங்களை அறிந்து சாய்வு கோணத்தைக் கணக்கிட முடியும். இவ்வாறு கணக்கிட, குறைந்தது மூன்று துளைகளிலிருந்து ஒரு பாறை உள்ள ஆழத்தை அறிதல் வேண்டும். சில சூழ்நிலைகளில் பாறைப் படலங்களைக் கண்ணால் நேரடியாகக் காண முடியும். ஆனால், சாய்வுகோணம் என்று கூறி விட படம் 1. சாய்வு கோணத்தை அளத்தல் படம் 2. கிடைநிலை, செங்குத்து, சாய்ந்த நிலப்பகுதிகளுக்குப் பயன்படும் சாய்வு கோணக் குறியீடுகள் (அ)சாய்ந்த நிலப் பகுதி (ஆ) கிடைநிலை, நிலப்பகுதி (இ) செங்குத்து நிலப் பகுதி இயலாது. அது குறை சாய்வு கோணமாக இருக்கக் கூடும். குறைந்தது இரண்டு அல்லது இரண்டிற்கு அதிகமான திசைகளில் ஒரு பாறையின் குறை-சாய்வு கோணங்களை அளந்து அறிந்து விட்டால், அவற்றைக் கொண்டு அப்பாறையின் நிறை சாய்வு கோணத்தைக் கணக்கிட்டு விடலாம். இவ்வாறு கணக்கிட, முக்கோண அளவை முறை (trignometrical method) அல்லது வரைபட முறை (geometrical method) பயன்படுகிறது. சாய்வு கோணத்தை ஓரிடத்தின் நிலப்பொதியியல் படத்திலிருந்தும் கணக்கிட முடியும். நிலப்பொதியியல் படத்திலிருந்து முதலில் பாறைகளில் கிடை நீட்டம் வரையப்படும். பின்னர் கிடை நீட்டக் கோடுகளுக்கு இடையேயுள்ள தொலைவை அளந்து கணக்கிட்டு, அங்குள்ள பாறைகளின் சாய்வு கோணம் கணக்கிடப்படும். நிலத்தின் கீழ் புதைந்து கிடைக்கும் கனிமத் தாரைகள், நிலக்கரி, தங்கம், செம்பு போன்ற தாதுக்களின் அளவைக் கணக்கிடவும். அவை ஓரிடத்தில் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன என்பதை அறிவதற்கும் சாய்வு கோணம் பயன்படுகிறது. நூலோதி . Marland P. Billings, Structural Geology. Third Edition, Prentice Hall of India Private Ltd., New Delhi, 1987. சாயக் கம்பளித் துணி பல்வேறு வழிமுறைகளில் சாயமேற்றப்பட்ட கம்பளித் துணியை இழை வடிவிலோ, நூல் வடிவிலோ, துணி வடிவிலோ சாயமேற்றுவதற்கு வழிமுறைகள் நன்கு வகுக்கப்பட்டுள்ளன. நூற்பதற்கு முன்பாகவே வெட்டிழைக்குச் சாயமேற்றும் முறை, இழைச் சாயமேற்றல் (stock dyeing) எனப்படும். இதில் இரு வகை உண்டு; சற்றே பழமையான முறையில் இழையைக் கட்டிலிருந்து பிரித்து, சிறு சிறு கட்டுகளாகப் பெரிய தொட்டிகளில் அடுக்கி, உயர் வெப்ப நிலையில் சாயத்தை ஊற்றிச் சுழற்ற வேண்டும். மற்றொரு முறையில் கட்டைப் பிரிக்காமல், நூல் கட்டு முழுதும் உறையை அகற்றாமல், கிழித்துச் சாயக் கரைசலை உள்ளே பாய்ச்சுவர். இம்முறையில் உழைப்பும், நேரமும் குறையும். மேற்றப்படாத இழையை விடச் சாயமேற்றப்பட்ட இழையை நூற்பது கடினமாகும். ஆக்ஸ்போர்டு சூட்டிங்குகள், டூவீட் (tweed) ஆகிய கம்பளித் துணிகள் இழைச் சாயமேற்றப்பட்டவை. சாயமேற்றப்பட்ட மணிக் கம்பளி (top worsted). கம்பளியைச் சிக்கெடுத்துக் குட்டை இழைகளை அகற்றி, சுமார் 3 செ.மீ. தடிமனுக்குக் கயிறு வடிவில் முறுக்கித் தயாரிக்கப்படுவது மணிக் கம்பளி. துளையிடப்பட்ட உருளையின் மீது மணிக் கம்பளியைச் சுற்றிச் சாயக் கரைசலை ஊற்ற வேண்டும். அருவிச் சாயமேற்றல்(beck dyeing). எல்லாக் கம்பளி வகைகளுக்கும் ஏற்ற இம்முறையில் துணியை விறைப்பற்ற கயிறு வடிவில் சாயத் தொட்டியில் அமிழ்த்த வேண்டும். இக்கயிறு ஒரு தண்டவாளத்தில் நகர்ந்து ஒரு சுற்றும் அமைப்பை அடைகிறது. இங்கு கயிறு சாயத்தில் அமிழ்த்தப்பட்டு, மேல் எழுந்து முன்னேறும். இவ்வழிமுறை மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்பட்டுத் தேவைப்படும் அடர்த்திக்குச் சீராகச் சாயமேற்றப்படுகிறது. துணியின் மென்மையும், அடர்வும் சாயமேற்ற நிகழ்வால் பாதிக்கப்படுவதில்லை. அறை வெப்பநிலைத் திணிப்பு முறை (coldpad-batch process). அறை வெப்பநிலையில் சாயத்தில் கம்பளித் துணியை நனைத்து, இரு அழுத்து உருளைகளுக்கிடையே செலுத்தினால், சாயம் துணிக்குள் திணிக்கப்பட்டு, மிகையான சாயம் பிழிந்து வெளியேற்றப்படும். துணிச் சுருளைச் சுற்றி உலராமல் தடுக்க வேண்டும். அடுத்த 48 மணி நேரத்திற்கு உருளையை மெல்லச் சுழற்றிச் சாயம் படர்தலைச் சீராக்க வேண்டும். சாயத்தில் சேர்க்கப்படும் பிற பொருள்களையும், ஊன்றாத சாயத்தையும் அகற்றும் பொருட்டு வீரியம் குன்றிய ஒரு காரக் கரைசலில் கழுவி, துணியை உருவி எடுத்து உலர்த்த வேண்டும். —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. Norma Hollen et. al., Textiles, Fifth Edition, Collier Macmillan Publishing Co., London, 1979. சாயங்கள் களால் வண்ணமிகு பொருள்களான இவற்றைப் பயன்படுத்திப் பொருள்களுக்கு வண்ணமேற்றலாம். ஒரு பொருள்சாயமாக (dye) இருப்பதற்கு அது வண்ணமுடையதாகவோ, பட்டு, கம்பளி, பருத்தி, காகிதம், தோல் போன்ற பொருள்களில் தாமாகவோ, பிற முறை ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவோ இருக்க வேண்டும். மேலும், இவ்வாறு ஒட்டிக் கொண்ட பின், ஒளி, நீர், அமில-காரங்களால் பாதிக்கப்படாமலும், நிறம் மங்காமலும் இருக்க வேண்டும். ஆனால் எல்லா நிறமுடைய பொருள்களும் சாயங்கள் ஆகா. காட்டாக, இரும்புத் துருவுடன் சர்க்கரையைச் சேர்த்து, நன்றாகப் பொடி செய்யும் போது கிடைக்கும் கலவை சிவப்பு நிறமுடையதாக இருக்கும். வெண்சர்க்கரை சிவப்பு இரும்புத் துருவால் நிறமேற்றப்பட்டிருக்கும். இக்கலவையை நுண்ணோக்கியின் வழியே நோக்கினால் சிவப்பு, வெள்ளை நிறத் துகள்கள் தனித்தனியே இருப்பது தெரியும். மேலும் இக்கலவையை நீரில் கரைத்துத் தனித்தனியே பிரித்து விடலாம். நீரில் நனைக்கப்பட்ட வெண்துணியில் இரும்புத் துருவைச் சேர்த்து நிறமேற்றினால், அது துணியில் ஒட்டிக் கொள்கிறது. இந்நிறமேற்றப்பட்ட துணியைச் சோப்பால் கழுவும் போது, அது பிரிந்து விடுகிறது. அதே சமயத்தில், சில நிறமுள்ள பொருள்களை (பொதுவாகக் கரிமப் பொருள்கள்) நீரில் நனைக்கப்பட்ட துணியுடன் சேர்த்துச் சாயத்தில் அமிழ்த்தி எடுக்கும் போது, துணியில் நிறமேற்றப்படுகிறது. இத்துணியை நுண்ணோக்கியின் வழியே நோக்கினால், இரு வேறு நிறங்கள் தெரிவதில்லை. நிறமேற்றப்பட்ட துணியைச் சோப்பால் கழுவினாலும், அது நீங்குவதில்லை. இத்தகைய நிறமேற்றும் பொருளே சாயமாகும். வரலாறு. பழங்காலத்தில் மக்கள் சாயங்களைப் பற்றித் தெரிந்திருந்தனர். அவர்கள் சாயங்களைத் தாவரம், விலங்கினங்களிலிருந்து பெற்றனர். எகிப்து மக்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே அவுரிச் சாயத்- தைப் (indigo) பயன்படுத்தியமைக்குச் சான்றுகள் உள்ளன. பெரும்பாலான இயற்கைச் சாயங்களுக்கு நிறம் நிறுத்தி ( mordant) தேவை. தற்காலத்தில் சாயங்கள் செயற்கையாகத் தொகுப்பு முறைகளிலேயே (synthesis) தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் சாயங்கள் பொருளாதார முறையில் இயற்கையிலிருந்து பெறப்படும் சாயங்களை விட விலை குறைந்தவையாக இருப்பதாலும், பலப் பல வண்ணங்களில் அவை தயாரிக்கப்படுவதாலும், தொகுப்பு முறைத் தயாரிப்பே சாயங்கள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. தோல் பொருளுக்குச் சாயமேற்றவே இயற்கைச் சாயங்கள் பயன்படுகின்றன. தற்போது சுமார் 5000கும் மேற்பட்ட சாயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சில முதன்மையான இயற்கை வகைச் சாயப் பொருள்களின் தோற்றுவாய் அட்டவணை 1 இல் கொடுக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் 1856ஆம் ஆண்டில் சர் வில்லியம் ஹென்றி பெர்கின் என்பார் தற்செயலாக மாவ் (mauve) என்ற செயற்கைச் சாயத்தைக் கண்டுபிடித்தார். அனிலீனைக் கழுவு தொட்டியிலிட்டு, அத்துடன், சிறிது நைட்ரிக் அமிலத்தைச் சேர்க்கும் போது, இச்சாயம் உண்டானது. அனிலீன் நிலக்கரித் தாரிலிருந்து பெறப்பட்டதால், அதிலிருந்து பெறப்பட்ட ஏனைய சாயப் பொருள்கள் கரித்தார் சாயங்கள் அல்லது அனிலின் சாயங்கள் எனப்படும். 1868ஆம் ஆண்டில் அலிசரின் அமைப்பு அறியப்பட்டது. அதே ஆண்டில் இது ஆந்த்ரசீனிலிருந்து தொகுப்பு முறையில் பெறப்பட்டது. 1883 ஆம் ஆண்டில் பேயர், அவுரி நீலத்தின் அமைப்பைக் கண்டறிந்தார். பின்னர் அது தொகுப்பு முறையிலும் தயாரிக்கப்பட்டது. மேலும் டைஅசோ வினைகளைப் பயன்படுத்தி, பலவிதமான அசோ சாயங்கள் தயாரிக்கப்பட்டன. பென்சீன், டொலுயீன், நாஃப்தலின் போன்ற எளிய அரோமாட்டிக் சோமங்கள், சாயங்கள் தயாரிக்கக் கச்சாப் பொருள்களாக உள்ளன. இச்சேர்மங்களில் நைட்ரோ, அமினோ, ஹாலோஜென், சல்ஃபோனிக் அமிலத் தொகுதி போன்ற தொகுதிகளை நுழைக்கும் போது, பல விதமான சாயப் பொருள்கள் உண்டாகின்றன. வணிகத்தில் இவை உலர் பொடியாகவோ, பசை அல்லது கரைசலாகவோ விற்பனை செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 3500 சாயங்கள் வணிகத்தில் பெருமளவு விற்பனையாகின்றன. இச்சாயக் களஞ்சியங்கள் சாய வேதியியலார்க்குப் பெரிதும் உதவுகின்றன. ஒவ்வொரு சாயத்திற்கும் தனித்தனியான எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் வணிக உற்பத்தியாளர் சாயங்களுக்குக் கொடுத்திருக்கும் தனிப்பட்ட பெயர், நிறம், இவற்றைப் பயன்படுத்தும் விதம் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும். (எ—டு) நிறமும் வேதியியல் அமைப்பும். பொருள் இழைகளின் (fibres) உள் அமைப்பில் சாயக் கரைசல்கள் புகுந்து எவ்வாறு ஒட்டிக் கொள்கின்றன என்பது பல்வேறு இயற்பியல், வேதிக் கொள்கைகளால் விளக்கப்பட்டது. பொருளின் நிறத்திற்கும், அமைப்பிற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா எனக் கிரேப், லிபர்மேன் ஆகியோர் ஆராய்ந்து நிறமுள்ள ஒரு கரிமப் பொருளில் ஹைட்ரஜனேற்றம் செய்வதால், நிறமிழப்பும், பின் ஆக்சிஜனேற்றம் செய்வதால் நிறமேற்றமும் நடைபெறுவதாகக் கூறினர். 1876 ஆம்ஆண்டு ஓ.என். விட் என்பார் வெளியிட்ட கருத்துகள் இன்றும் பயனுள்ளவை. சில கரிமப் பொருள்கள் நிறமுற்றிருப்பதற்குக் காரணம் அவற்றிலிருக்கும் நிறைவுறாத் தொகுதிகளே. இத்தொகுதிகள் நிறந்தாங்கிகள் (chromophores) எனப்படுகின்றன. சில முக்கிய நிறந்தாங்கிகளாவன: நிறந்தாங்கியுள்ள பொருள் நிறங்கொள் பொருள் (chromogen) எனப்படும். நிறம் கொள் பொருள்களில் ஒரு நிறந்தாங்கித் தொகுதி மட்டும் இருந்தால், அது மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். நிறந்தாங்கித் தொகுதிகள் அதிகமாகும் போது, நிறத்தின் அழுத்தமும் அதிகரிக்கிறது. நிறம்கொள் பொருள்களில் -OH.-NHsub|2))-NHRsub|2))-NRsub|2)) போன்ற தொகுதிகள் இருந்தால், அப்பொருள்கள் சாயமாக விளங்கும். இத்தொகுதிகள் பொருள்களின் நிறத்தைப் பெருக்குகின்றன. உண்மையில் இவை நிறந்தாங்கிகள் அல்ல; இவற்றால், நிறத்தின் அடர்வு அதிகரிப்பதால், இவை நிறம் பெருக்கிகள் (auxochromes) எனப்படுகின்றன. சில தொகுதிகள் வண்ணத்தை மிகுவிக்கின்றன. இவை வண்ண மிகுப்பிகள் (bathochromic groups) என்றும், வண்ணத்தை வெளிறச் செய்யும் தொகுதிகள் வண்ண மெலிவிப்பிகள் (hypsochromic groups) என்றும் வழங்கப்படுகின்றன. வண்ணம் மிகுதல் என்பது பின்வரும் மாற்றத்தைக் குறிக்கும். மஞ்சள் → ஆரஞ்சு → சிவப்பு → செம்பழுப்பு ஊதா → நீலம் → பச்சை → கறுப்பு பொருள்களின் நிறம் என்பது அப்பொருள் எந்த நிறத்தை உட்கவர்கிறதோ அதன் நிரப்பு நிறம் (complementary colour) ஆகும். இதைப் பின் வரும் அட்டவணையிலிருந்து தெளிவாக அறியலாம். எனவே வண்ண மிகுவிப்பிகள் ஒளி உறிஞ்சலை ஊதாப் பக்கத்திலிருந்து சிவப்புப் பக்கமாகவும், வண்ண மெலிவிகள் இதற்கு மாறாகச் சிவப்புப் பக்கத்திலிருந்து ஊதாப் பக்கமாகவும் நகர்த்துகின்றன. பொதுவாக நிறந்தாங்கிகள் வண்ண மிகுப்பிகளாக உள்ளன. அமினோ தொகுதியிலுள்ள ஹைட்ரஜனுக்குப் பதிலாக அல்க்கைல் அல்லது அரைல் தொகுதிகளைப் பதிலீடு செய்வதால், வண்ணம் மிகும். மாறாக, தொகுதிகளை அசெட்டைல் ஏற்றம் (acetylation) செய்தால், வண்ண மெலிவு உண்டாகும். 1879ஆம் ஆண்டில் நீயெட்ஸ்கி என்பார் பொருளின் மூலக்கூறு எடை அதிகரிப்பால், வண்ணமும் அடர்த்தியாவதாகக் கூறினார். காட்டாக, அசோ சாயங்களில் உள்ள பென்சீன் கருவுக்குப் பதிலாக, நாஃப்தலீனைப் புகுத்தினால், அதன் நிறம் மஞ்சளிலிருந்து சிவப்பாக மாறுகிறது. இதற்குப் பல விதி விலக்குகள் உண்டு. 1885ஆம் ஆண்டு ஆர்ம்ஸ்ட்ராங் o.p-கினோன்கள் நிறம் கொண்டிருப்பதைக் காட்டி, நிறமிக்க பொருள்களெல்லாம் கினோன் அமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறினார். மேற்காணும் கருத்துகள் ஒரு பொருளின் அமைப்பிற்கும், நிறத்திற்குமுள்ள தொடர்பைச் சரியாக எடுத்துக் கூறவில்லை. ஒரு மூலக்கூறு ஒளியை உட்கவர்ந்தால், அது ஆற்றல் குறைந்த தாழ் ஆற்றல் நிலையிலிருந்து (ground state) உயர் ஆற்றல் நிலையை (excited state) அடைகிறது. காட்டாக E என்பதைத் தாழ் ஆற்றல் நிலையென்றும், E என்பதை உயர் ஆற்றல் நிலையென்றும் கொண்டால், hγ =E-E = ΔE h = பிளாங்க் மாறிலி γ = உட்கவரப்பட்ட ஒளியின் அதிர்வெண் ΔE = ஆற்றல் வேறுபாடு ஓரணு மூலக்கூறில் உட்கவரப்பட்ட ஆற்றல் அதனுடைய எலெக்ட்ரான்களின் ஆற்றலைத் தாழ் ஆற்றல் நிலையிலிருந்து உயர் ஆற்றல் நிலைக்கு உயர்த்தவே முடியும். மூலக்கூறில் ஒன்றிற்கு மேற்பட்ட அணுக்கள் இருந்தால், எலெக்ட்ரான் ஆற்றல், சுழல் ஆற்றல் (rotational), அதிர்வு ஆற்றல் (vibrational) ஆகியவற்றின் அளவில் மாற்றத்தைக் கொடுக்கும். உட்கவரப்பட்ட ஒளி ஏற்படுத்தும் எலெக்ட்ரான் ஆற்றல் மாற்றத்தின் அளவு, ஏனைய இரண்டின் மாற்றத்தை விட மிகுதியாக இருப்பதால், ஒளி கவர்தல் கட்புலன் (visible) அல்லது புற ஊதாப் பகுதியில் நடைபெறுகிறது. சுழல், அதிர்வு ஆற்றல்களில் ஏற்படும் மாற்றத்தால் உட்கவர்தல் முறையே சேய்மை, அண்மை அகச்சிவப்புப் (far and near infra red) பகுதியில் நிகழ்கிறது. எலெக்ட்ரான்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட எலெக்ட்ரான் மண்டலங்களிலேயே இருக்கும். எனவே, ΔE இன் மதிப்பு ஒரு குறிப்பிட்ட அளவாகவே இருக்கும். இதனால் மூலக்கூறு உட்கவரும் அல்லது வெளி விடும் ஆற்றல் ஒரு குறிப்பிட்ட அளவாகவே இருக்கும். இந்த அளவுகள் நிரலில் (spectrum) அவற்றிற்கென அமைந்த கோடுகளாகத் தெரியும். சிக்கலான அமைப்புடைய மூலக்கூறுகளில் மிகவும் கிளர்வுற்ற பல நிலைகள் தோன்றலாம். இதனால், நிரல் நிறக் கோடுகள் அனைத்தும் நெருங்கிப் பட்டையாகத் தோன்றலாம். இதன் காரணமாகவே, ஒவ்வொரு பொருளும் நிறமுடையதாகத் தோன்றுகிறது. பொருளின் நிறத்திற்கு ஒளியின் அதிர்வெண் மட்டும் காரணம் ஆகாது. அப்பொருள் ஒளியைக் கவர்தற்குரிய ஆற்றல் அளவு மாறுபாடும் (energy level) கொண்டிருக்க வேண்டும். மூலக்கூறுகள் ஓர் ஆற்றல் நிலையிலிருந்து மற்றோர் ஆற்றல் நிலைக்கு மாற, அதன் இரு முனைத் திருப்புத் திறனும் (dipolement) மாற வேண்டும். ஒளி, மூலக்கூறினால் உட்கவரப்படும் போது, அம்மூலக்கூறில் இணைப்புகளை ஏற்படுத்தும் எலெக்ட்ரான் இணைகள் (electron pairs) அணைவுறுகின்றன. இதனால், இருமுனைத் திருப்புத் திறனின் அளவும் மாறுகிறது. O=C<C=S<—N=O மேற்காணும் தொகுதிகளைப் பொறுத்துப் பொருளின் நிறம் அமையும். இடப்புறமுள்ள தொகுதியிலிருந்து வலப்புறமாகச் செல்லச்செல்ல நிறம் அடர்த்தியாகிறது. உள்ளுறு சாயங்கள். இவ்வகைச் சாயங்களைத் துணிகளில் படியச் செய்ய, இவை துணிகளிலேயே உண்டாக்கப்படுகின்றன. இச்சாயங்களை உண்டாக்கக் கூடிய பொருள்களில் ஒன்றைத் துணியில் முதலில் ஏற்ற, பின் பிற பொருள்களுடன் இவற்றை வினைப் படச் செய்யும் போது, இவை துணியிலேயே தோன்றிப் படிகின்றன. இவற்றில் முக்கியமானது பாரா சிவப்பு என்னும் சாயமாகும். பாரா சிவப்பு. முதலில் காரக் கரைசலிலுள்ள நாஃப்தால் கரைசலில் துணியை அமிழ்த்தி எடுக்க வேண்டும். துணியில் இது ஒட்டுவதற்காகத் துருக்கி சிவப்பு எண்ணெயில் கலக்க வேண்டும். உலர வைத்த துணியை இக்கரைசலில் அமிழ்த்தி எடுத்தால், பாரா சிவப்பு துணியில் படிகிறது. சாயங்களை அவற்றின் நிறங்களுக்கேற்பவும், அவற்றின் மூலத்தைப் பொறுத்தும், வேதி அமைப்பு, அவற்றைப் பயன்படுத்தும் விதம் இவற்றைப் பொறுத்தும் பல விதமாக வகைப்படுத்தலாம். வேதியியல் அமைப்பின் மூலம் சாயங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். சாயம், துணி ஆகியவற்றின் அமைப்பைப் பொறுத்துச் சாயம் பயன்படும் விதம் மாறுபடுகிறது. இயற்கை இழைகள் இரண்டு வகைப்படுகின்றன. தாவர இழைகள் (இவை செல்லுலோஸால் ஆனவை (எ—டு) பருத்தி, சணல்), விலங்கின இழைகள் (இவை புரோட்டீன்களால் ஆனவை: (எ—டு) கம்பளி, பட்டு) செயற்கை இழைகள் என்பன அதிக மூலக்கூறு எடை கொண்ட பல்லுறுப்பிகள் (polymers) ஆகும். (எ—டு) பாலிஅமைடுகள், பாலிஎஸ்ட்டர்கள், பாலி அக்ரிலோநைட்ரைல் இழைகளின் அமைப்பைத் தவிர அவற்றைச் சாயமேற்று முன், நீர் எதிர்ப்பு (water resistant), மசகு எதிர்ப்பு (crease resistant) போன்ற பல வேதியியல் மாற்றங்களுக்குட்படுத்த வேண்டும். இதனால் இழைகளின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. சாயமேற்றுதல் பெரும்பாலும் நீர்க் கரைசலிலேயே நடைபெறுகிறது. ஆனால் அண்மைக் காலங்களில் 1,1.1—டிரைகுளோரோ எத்தேன் போன்ற கரைப்பான்களும் பயன்படுகின்றன. ஒரு சாய மூலக்கூறு சக பிணைப்பு, ஹைட்ரஜன் பிணைப்பு, அயனிப் பிணைப்பு, வான்டெர் வால்ஸ் விசைகள் போன்ற நான்கு விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் இழையுடன் பிணைக்கப்படுகிறது. அமிலச் சாயங்கள். சல்ஃபோனிக், கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடியம் உப்புகள் அமிலச் சாயங்கள் (acid dyes) எனப்படுகின்றன. இவற்றைக் கம்பளி, பட்டு, பாலிஅமைடு அல்லது அக்ரிலிக் இழைகளுக்குச் சாயமேற்றப் பயன்படுத்தலாம். நிறமுள்ள காரங்களின் உப்புகள் காரச் சாயங்கள் (basic dyes) எனப்படுகின்றன. இவற்றில் அமினோ, இமினோ போன்ற காரத் தொகுதிகள் உள்ளன. இவற்றால் டானின், மற்றும் ஆன்ட்டிமனி உப்புகளுக்கும், அலும் போன்ற நிறம் நிறுத்தியால் (mordant) நனைக்கப்பட்ட பருத்தித் துணிகளுக்கும் சாயமேற்றலாம். அசோயிக் சாயங்கள். நீரில் கரையாத அசோ சாயங்கள், அசோயிக் சாயங்கள் (azoic dyes) எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் செல்லுலோஸ் இழைகளுக்குச் சாயமேற்றவே பயன்படுகின்றன. இவை உள்ளுறு சாயங்கள் (ingrain dyes) எனப்படும். அசோயிக் சாயங்கள் சாயமேற்ற வேண்டிய துணியிலேயே வேதி வினையால் உண்டாகின்றன. சாயமேற்ற வேண்டிய துணி முதலில் ஹைட்ராக்சி அல்லது அமினோ தொகுதியுள்ள கரைசலில் அமிழ்த்தி எடுக்கப்படுகிறது. இதை உலர்த்திப் பின் டைஅசோ தொகுதி கொண்ட கரைசலில் நனைக்கும் போது, சாயமேற்றம் நடைபெறுகிறது. ஆக்சிஜனேற்ற சாயங்களும் (oxidation dyes) இவ்வகையன. இவை சாயமேற்ற வேண்டிய துணியைச் சில அரோமாட்டிக் அமீன்கள் உள்ள கரைச்லில் அமிழ்த்தி எடுக்கும் போது உண்டாகின்றன. இறுதியில் விளையும் பொருள் சாயத்தை விட நிறமியாகவே (pigment) இருக்கும். இவை பெரும்பாலும் முடிக்குச் சாயமேற்றப் பயன்படுகின்றன. நிறம் நிறுத்தும் சாயங்கள். துணிகளின் மேல் மிகக் குறைந்த அளவு ஒட்டும் அல்லது முற்றிலும் ஒட்டாத சாயத்தையும் தகுந்த நிறம் நிறுத்தியைப் பயன்படுத்திச் சாயமேற்றலாம். நிறம் நிறுத்தப்பட்ட பருத்தியில் பயன்படுத்தப்படும் காரச் சாயங்கள், கார நிறங்கள் (basic colours) எனப்படுகின்றன. எனவே, நிறம்நிறுத்தியைப் பொதுவாக அமிலச் சாய வகைகளுக்கும், அலிசரின் சாயங்களுக்கும் பயன்படுத்தலாம், அமிலச் சாயங்களுக்கு உலோக ஹைட்ராக்சைடுகளும், காரச் சாயங்களுக்கு டானின்களும் (டானிக் அமிலம்) நிறம் நிறுத்தியாகச் செயல்படுகின்றன. தொட்டிச் சாயங்கள். இவை பெரும்பாலும் பருத்தித் துணிகளுக்குச் சாயமேற்றவே பயன்படுகின்றன. துணிகளில் சாயமேற்றும் போது, இவை ஒடுக்க நிலையிலிருக்கும். பின்னர் இவை ஆக்சிஜனேற்றம் அடைந்து நிறங்களைக் கொடுக்கும். தொட்டிச் சாய நிறங்களில் உள்ள இரண்டு பிரிவுகள் இண்டிகோ, ஆந்த்ரகுய்னோன் என்பவையாகும். கந்தகச் சாயங்கள். இவை பெரும்பாலும் செல்லுலோஸ் நாரியற் பொருள்களுக்கே சாயம் ஏற்றப் பயன்படுகின்றன. இச்சாயங்கள் பல கரிமச் சேர்மங்கள், சோடியம் சல்ஃபைடு அல்லது கந்தகத்துடன் வினை புரிவதால் பெறப்படும். சிதறல் சாயங்கள். இச்சாயங்கள் முதன்முதலில் செல்லுலோஸ் அசெட்டேட்டைச் சாயமேற்றப் பயன்பட்டன. இவை நீரில் கரையாத சாயங்கள். சிதறல் சாயங்களை (disperse dyes) நிறமேற்றுமுன் அவை தகுந்த கரைப்பானில் சிதறடிக்கப்படும். அசோ சாயங்கள் செயற்கைச் சாயங்களில் அசோ சாயங்கள் முக்கியமானவை. இவற்றில் நிறந்தாங்கியாக அரோமாட்டிக் தொகுதியுடன் இணைந்த அசோ தொகுதி செயல்படுகிறது. —NH, NR, OH போன்ற தொகுதிகள் நிறம் பெருக்கிகளாகவும் உள்ளன. ஓர் அசோ தொகுதியுடன் இணைந்த ஒற்றை அசோ சாயங்கள் (monoazo dyes), இரட்டை அசோ சாயங்கள் (biazo dyes) என அசோ தொகுதிகளின் எண்ணிக்கை வகைப்படுத்தப்படும். பொதுவாக, இவை டைஅசோ உப்புடன் ஃபீனால் அல்லது அமீனை நேரடியாக இணைத்தலால் (direct coupling) பெறப்படுகின்றன. அசோ சாயங்களை மேலும் காரச் (நேரயனி) சாயங்கள் எனவும், அமிலச் (எதிரயனி) சாயங்கள் எனவும் வகைப்படுத்தலாம். கிரை சாய்டின். இது ஒரு நேரயனி அசோ சாயமாகும். இதுவே முதன்முதலில் பெருமளவில் தயாரிக்கப்பட்ட சாயமாகும். இது தோல், காகிதம் ஆகியவற்றிற்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. பென்சீன் டைஅசோனியம் குளோரைடுடன், ஃபீனைலின் டைஅமீனை வினைப்படுத்திக் கிரை சாய்டின் தயாரிக்கப்படுகிறது. அனிலீன் மஞ்சள். பாரா அமினோ அசோ பென்சீன் என்னும் இது அசோ சாயங்களில் எளிய அமைப்- <!---- Do not change the positioning of the pictures as they are aligned with their respective topics. படங்களை இட மாற்றம் செய்ய வேண்டாம். தலைப்புக்கேற்றவாறு படங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன..----> பைக் கொண்டது. அனிலீன் மஞ்சள் (Aniline Yellow) அனிலீனை டைஅசோ உப்பாக மாற்றி, அதனுடன் அனிலீனை இணைப்பதால் பெறப்படுகிறது. இது கொழுப்புகள், பாலாடைக் கட்டி ஆகியவற்றிற்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. வெண்ணெய் மஞ்சள். இது பாரா டைமெத்தில் அமினோ அசோ பென்சீன் எனப்படும். அனிலீனை டைஅசோ உப்பாக மாற்றி, அதனுடன் டைமெத்தில் அனிலீனை இணைப்பதால், வெண்ணெய் மஞ்சள் (Butter yellow) பெறப்படுகிறது. இது வெண்ணெய், எண்ணெய் ஆகியவற்றிற்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. பிஸ்மார்க் பழுப்பு. இது தோல் பொருள்களுக்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. பிஸ்மார்க் பழுப்பு (Bismark Brown) பல்அசோ சாயங்கள் தொகுப்பதற்குப் பயன்படுகிறது. m—ஃபீனைல் டைஅமீனில் உள்ள இரண்டு அமீனோ தொகுதிகளையும், டைஅசோ ஆக்கத்திற்குட்படுத்தி அதனுடன் m—ஃபீனைல் டைஅமீனை இணைக்கும் போது, இரு வகைச் சேர்மங்கள் உண்டாகின்றன. பிஸ்மார்க் பழுப்பு என்பது (I) & (II) ஆகியவை கலந்த கலவையாகும். மெத்தில் ஆரஞ்சு. இது அமில அசோ வகையைச் சேர்ந்தது. இது ஹீலியாந்தின் என்றும் கூறப்படுகிறது. மெத்தில் ஆரஞ்சு ஒரு சாயமன்று. டைஅசோ ஆக்கப்பட்ட சல்ஃபானிலிக் அமிலத்துடன் டைமெத்தில் அனிலீனை இணைப்பதால் இது பெறப்படுகிறது. முறித்தல் வினைகளில் (titrations) இது காட்டியாகப் (indicator) பயன்படுகிறது. காரக் கரைசலில் ஆரஞ்சு நிறமும், அமிலக் கரைசலில் சிவப்பு நிறமும் கொண்டிருக்கும். α—நாஃப்தால் ஆரஞ்சு. இது ஆரஞ்சு I என்றும் கூறப்படும். சல்ஃபானிலிக் அமிலத்தை டைஅசோ ஆக்கம் செய்து, 1-நாஃப்தாலை இணைப்பதால், α-நாஃப்தால் ஆரஞ்சு உண்டாகிறது. இதேபோல் β—நாஃப்தால் ஆரஞ்சு அல்லது ஆரஞ்சு II என்ற சாயமும் உண்டு. இது காகிதத்திற்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. கார்போலேன் சாயங்கள். எதிரயனி அசோ சாயங்களில் உள்ள ஒரு முக்கியமான குறை, அவற்றை இழைகளிலிருந்து நீரில் கழுவினால் பிரிந்து விடுதலாகும். இக்குறை கார்போலேன் சாயங்களினால் நீக்கப்படுகிறது. இதில் R என்பது நீள் தொடர் அல்க்கைல் தொகுதியாகும். (எ-டு. CH—). இத்தொகுதியின் நீர் வெறுக்கும் பண்பினால் சாயம் நீரினால் விலகுவது தவிர்க்கப்படுகிறது. காங்கோ சிவப்பு. இது ஒரு நேரடிச் சாயம். மேலும், இது ஓர் இரட்டை அசோ சாயமும் ஆகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> பென்சிடினை டைஅசோ ஆக்கத்திற்குட்படுத்தி இரு மூலக்கூறு நாஃப்த்தியோனிக் அமிலத்துடன் இணைக்கும் போது, காங்கோ சிவப்புக் (Congo Red) கிடைக்கிறது. இது காரக் கரைசலுடன் சிவப்பு நிறத்தையும், அமிலத்துடன் நீல நிறத்தையும் கொடுக்கிறது. இதன் சோடியம் உப்பு, பருத்தியை நல்ல சிவப்பு நிறமாக மாற்றுகிறது. இதுவே பருத்தித் துணிகளில் நேரடியாகச் சாயமேற்றும் வண்ணம் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு முறைச் சாயமாகும். டிரை அரைல் மெத்தேன் சாயங்கள் மாலக்கைட் பச்சை. அடர் சல்ஃப்யூரிக் அமிலம் உடனிருக்க, இரு டைமெத்தில் அனலீன் மூலக்கூறுகள் ஒரு மூலக்கூறு பென்சால்டிஹைடுடன் 100°C இல் குறுக்க வினை புரிவதால் மாலக்கைட் பச்சைச் (Malachite Green) சாயம் கிடைக்கிறது. இதனால், சாயத்தின் வெள்ளைக் காரம் (leuco base) உண்டாகிறது. இதை அசெட்டிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம் கலந்த கரைசலிலிடப்பட்ட காரீயப் பெராக்சைடினால் ஆக்சிஜனேற்றம் செய்யும் போது, வண்ணக் காரம் உண்டாகிறது. இதை மிகுதியான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் கரைக்கும் போது, மாலக்கைட் பச்சைச் சாயம் உண்டாகிறது. இது அடர் பச்சை நிறம் கொண்டது. இதன் நிறம் தாமிரத்தின் தாதுப் பொருளான மாலக்கைட் போன்றிருப்பதால், இதற்கு இப்பெயர் வந்தது. கம்பளி, பட்டுத் துணிகளுக்கு நேரடியாகவும், பருத்தித் துணிகளுக்கு டானின் போன்ற நிறம் ஊன்றியாலும் இது சாயமேற்றுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> ரோசனிலீன், மெஜன்டா, ஃபியூக்சின். அனிலீன், αp-டொலுயீன்களையும் அதன் ஹைட்ரோகுளோரைடு உப்புகளையும் சம மூலக்கூறு கலவையாக நைட்ரோபென்சீலுடன் சேர்த்து இரும்புத் துருவல்களின் முன்னிலையில் ஆக்சிஜனேற்றம் செய்வதால், ரோசனிலீன், பாரா ரோசனிலீன் கலவை கிடைக்கிறது. இதில் ரோசனிலீன் அளவு மிகுதியாக உள்ளது. ரோசனிலீன் படிகங்கள் பச்சை நிற உலோக மிளிர்வைக் கொண்டுள்ளன. நீரில் கரையும் போது, அடர் சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. இக்கரைசலுள் சல்ஃபர் டைஆக்சைடைச் செலுத்தும் போது, கரைசல் நிறமிழக்கிறது. இது ஆல்டிஹைடுகளை அறிய உதவும் ஆய்வில் ஷிகிப் வினைப் பொருளாகப் பயன்படுகிறது. ரோசனிலீன் பட்டு, கம்பளிகளுக்கு நேரடியாகச் சாயமேற்றுவதால் செந்நீல நிறம் உண்டாகிறது. படிக ஊதா. மிச்லர் கீட்டோனை (Michler ketone) டைமெத்தில் அனிலீனுடன் பாஸ்ஃபோரில் குளோரைடு அல்லது கார்போனைல் குளோரைடு உடனிருக்க வெப்பப்படுத்தினால் படிக (Crystal violet) உண்டாகிறது. இதைக் கார்போனைல் குளோரைடைப் பயன்படுத்தி, நேரடியாக டைமெத்தில் அனிலீனுடன் வினைப்படுத்திப் பெறலாம். செறிவு குறைந்த அமிலத்துடன், செம்பழுப்பு நிறத்தையும், செறிவுமிக்க அமிலத்துடன் பச்சை நிறத்தை யும், மிகுதியான செறிவுள்ள அமிலத்துடன் மஞ்சள் நிறத்தையும் இது கொடுக்கிறது. திண்ம நிலைப் படிகங்கள் பளபளப்பான பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. சாந்த்தேன் சாயங்கள் இப்பிரிவின் மூலப்பொருள் சாந்த்தேன் (xanthen) (டைபென்சோ-1, 4-பைரேன்). இதை ஆக்சிஜனேற்றம் செய்வதால், சாந்த்தேனும், ஒடுக்குவதால், சாந்த்ஹைட்ராலும் (9-ஹைட்ராக்சிசாந்த்தேன்) கிடைக்கும். கனிம அமிலங்களுடன் வினை புரிந்து இது ஆக்சோனியம் உப்புகளைக் கொடுக்கிறது. நிறம் பெருக்கிகளைச் சாந்த்தேனில் 3,6 இடங்களில் புகுத்துவதால் சாயங்கள் கிடைக்கின்றன. பைரோனின் ஜி. அடர் சல்ஃப்யூரிக் அமிலம் உடனிருக்க, ஒரு மூலக்கூறு ஃபார்மால்டிஹைடுடன் இரு மூலக்கூறுகள் m-டைமெத்தில் அமினோஃபீனால் வினை புரிந்து கிடைக்கும் வெள்ளைப் பொருளை (leuco compound) ஃபெர்ரிக் குளோரைடினால் ஆக்சிஜனேற்றம் செய்யும் போது, பைரோனின் ஜி கிடைக்கிறது. நிறம் நிறுத்தப்பட்ட பட்டு, பருத்தித் துணிகளுக்கு இது சாயமூட்டுகிறது. தலியீன் சாயங்கள் அடர் சல்ஃப்யூரிக் அமிலம், துத்தநாகக் குளோரைடு, நீரற்ற ஆக்சாலிக் அமிலம் போன்ற நீரகற்றும் காரணி ஏதாவதொன்று உடனிருக்க, ஃபீனால்களும், தாலிக் நீரிலியும் வினை புரிந்து தலீயீன்களைக் கொடுக்கின்றன. ஃபினால்ஃப்தலீன். இது ஒரு டிரைஃபீனைல் மெத்தேன் பெறுதி. ஆனால், இது சாந்த்தேன் பெறுதியன்று. இயல்புகளிலும், தொகுக்கும் முறையிலும் தலீயீன்களை ஒத்திருப்பதால், இதைத் தலீயீன் வகை எனக் கொள்ளலாம். அடர் சல்ஃப்யூரிக் அமிலம் உடனிருக்க, தாலிக் நீரிலியும், ஃபீனாலும் 120°C வெப்ப நிலையில் வினை புரிந்து ஃபீனாஃப்தலீனைக் கொடுக்கின்றன. இது ஒரு நிறமற்ற படிகம்; நீரில் கரையாதது; அமிலத்தில் நிறமற்றிருக்கும்; காரத்தில் அடர் சிவப்பு நிறத்தைப் பெறும். மிகு செறிவுள்ள காரங்களில் இது மீண்டும் நிறமற்றதாக மாறி விடுகிறது. இது அமில கார முறித்தல் வினையில் காட்டியாகப் பயன்படுகிறது. ஃபுளோரசின். இது ஒரு சாந்த்தேன் பெறுதி. நீரற்ற ஆக்சாலிக் அமிலம் உடனிருக்க, தாலிக் நீரிலி ரிசார்சினாலைச் சேர்த்து 200°Cக்கு வெப்பப்படுத்தினால், ஃபுளோரசீன் கிடைக்கிறது. ஃபுளோரசீன் நீரில் கரையாத செந்நிறப் பொடி. இது காரங்களில் கரைந்திருக்கும் போது, மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் ஒளிர்கிறது. இதன் சோடியம் உப்பு யுரானின் எனப்படும். இது அமிலத்தில் கரைந்த கரைசலிருந்து, நேரடியாகக் கம்பளி, பட்டு ஆகியவற்றில் சாயமேற்றுகிறது. ஆனால், இதன் மஞ்சள் நிறம் கெட்டியாக இருப்பதில்லை. இயோசீன். இது ஃபுளோரசின் பெறுதியாகும்; டெட்ராபுரோமோ ஃபுளோரசின், இயோசின் எனப்படும். கிளாசியல் அசெட்டிக் அமிலக் கரைசலில் கரைந்துள்ள ஃபுளோரசினுடன் புரோமினை வினைப் படுத்தி இது தயாரிக்கப்படுகிறது. இது ஒரு செந்திறப் பொடியாகும். பட்டு, கம்பளி ஆகியவற்றிற்கு நேரடியாகச் சாயமேற்றிச் சிவப்பாக்குகிறது. இயோசினின் நீர்த்த கரைசல்கள் சிவப்பு மையமாகப் பயன்படுகின்றன. அக்ரிடின் சாயங்கள் அக்ரிடின் சாயங்கள் மஞ்சளிலிருந்து ஆரஞ்சு,பழுப்பு நிறம் கொண்ட நேரயனிச் சாயங்களாகும். இவை காலிகோ அச்சிலும், பருத்தி, பட்டு, தோல் ஆகியவற்றிற்குச் சாயமேற்றவும் பயன்படுகின்றன. சில அக்ரிடின் சாயங்கள் மருத்துவத்திலும் பயன்படுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> 3,6 டைஅமினோ அக்ரிடின். m-ஃபீனைலீன் டைஅமீன், கிளிசரால், ஆக்சாலிக் அமிலம், துத்தநாகக் குளோரைடு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வெப்பப்படுத்திக் கிடைக்கும் வெண் சேர்மத்தை ஆக்சிஜ- னேற்றம் செய்வதால் 3,6 டைஅமினோ அக்ரிடின் கிடைக்கிறது. இதன் சல்ஃபேட் புரோஃபிளேவின் என்ற நச்சுக் கொல்லியாகப் (antiseptic) பயன்படுகிறது. இதே போல், அக்ரிஃபிளேவினும் ஒரு முக்கிய நச்சுக் கொல்லியாக உள்ளது. அசீன் சாயங்கள் கியூனின் என்ற அல்க்கலாய்டைப் பெறுவதற்காகப் பண்படா அனிலீன் சல்ஃபேட்டைப் பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் சேர்த்து, ஆக்சிஜனேற்றம் செய்யும் போது, கறுப்பு நிற வீழ்படிவு உண்டாயிற்று. இதை மெத்திலேற்றம் செய்யப்பட்ட சாராயத்தால் பிரித்தெடுக்கும் போது, மாவ் (mavue) என்ற நிறப் பொருள் கிடைத்தது. இது அனிலீன் செம்பழுப்பு (Aniline Purple) அல்லது டைரியன் செம்பழுப்பு எனப்படும். இது மாவைன் (Mauveine) என்றும் கூறப்பட்டது. தொட்டிச் சாயங்கள் இண்டிகோ தொகுதி. இந்தியாவே இண்டிகோவின் (அவுரி நீலம்) பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்ட சாயம். இண்டிகோட்டின் என்பது இதன் உலகளாவிய பெயர். இண்டிகோஃபெரா தொகுதி தாவர இனங்களிலிருந்து முன்பு பெறப்பட்டது. ஆனால், தற்காலத்தில் இது தொகுப்பு முறையில் பெருமளவு தயாரிக்கப்படுகிறது. தாவர இனங்களில் இண்டிகோ, இண்டிகேனாக (இண்டாக்சிலிக் குளுக்கோசைடு) உள்ளது. இதை ஹைட்ரோ குளோரிக் அமிலம் அல்லது பொடியாக்கப்பட்ட தாவரத்திலிருக்கும் நொதிகளால் நீராற்பகுக்கும் போது, இண்டாக்சிலாக மாற்றப்பட்டு வளிமண்டல ஆக்சிஜனேற்றம் அடைவதால், இண்டிகோட்டின் கிடைக்கிறது. தொகுப்பு முறைகள். ஆந்த்ரனிலிக் அமிலத்துடன் குளோரோ அசெட்டிக் அமிலத்தைச் சேர்த்து வெப்பப் படுத்தி விளையும் ஃபீனைல்கிளைசீன் —O— கார்பாக்சிலிக் அமிலத்தைப் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, சோடாமைடு கலவையுடன் சேர்த்துச் சூடு படுத்தும் போது, இண்டாக்சிலிக் அமிலம் கிடைக்கிறது. இதைக் கார்பன் டைஆக்சைடு நீக்கத்திற்குட்படுத்திக் காற்றில் திறந்து வைத்திருந்தால், இண்டிகோட்டின் கிடைக்கிறது. அனிலின் எத்திலீன் ஆக்சைடுடன் வினை புரிந்து N-ஃபீனைல்-2-ஹைட்ராக்சி எத்திலமீனைக் கொடுக்கிறது. இதை 200°C வெப்பநிலையில் சோடியம், பொட்டாசியம் ஹைட்ராக்சைடுகளுடன் சேர்த்து உருக்கும் போது, சோடியம் (பொட்டாசியம்) அல்க்காக்சைடுகள் விளைகின்றன. இந்தச் சோடியம் உப்பைச் சோடாமைடு, சோடியம், பொட்டாசியம் ஹைட்ராக்சைடுகளுடன் சேர்த்து 200°Cக்குச் சூடுபடுத்த N-சோடியோ பெறுதி உண்டாகிறது. 300°C வெப்ப நிலையில் வேகமாக வெப்பப்படுத்தும் போது, ஹைட்ரஜன் நீக்கம் நடை பெறுகிறது. இதை விரைவாக 235° C க்குக் குளிரச் செய்வதால், இணடாக்சிலின் சோடியம் உப்புக் கிடைக்கிறது. இதை நீருடன் சேர்த்துக் காற்றில் திறந்து வைத்தால், இண்டிகோட்டின் உண்டாகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> பண்புகள். இண்டிகோட்டின் கருநீலப் பொடி. இது நீரில் கரையாதது. இதன் பசையைக் காரச் சோடியம் ஹைப்போ சல்ஃபைட்டுடன் சேர்த்துப் பெரிய தொட்டிகளிலிட்டுக் கலக்கும் போது, கரையாத இண்டிகோட்டின், கரையும் வெள்ளைச் சேர்மமாக (indigotin white) மாறுகிறது. சாயமேற்றப்பட வேண்டிய பொருளை இந்தக் காரக் கரைசலில் 4. 5. 6. 7. 8. 9. நனைத்துக் காற்றில் உலர வைத்தால், அப்பொருளில் நீல நிறம் உண்டாகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> இண்டிகோசால் O. இண்டிகோடின் வெள்ளை நெசவு அச்சு வேலைகளுக்கு (textile printing) ஏற்ற தன்று. எனவே இண்டிகோட்டின் இண்டிகோசால் O ஆகப் பின் வருமாறு மாற்றப்படுகிறது: இண்டிகோ வெள்ளைப் பிரிடின் உடனிருக்கக் குளோரோ சல்ஃபோனிக் அமிலத்துடன் வினைப்படுத்தப்படுகிறது. பின்னர், இது இதன் சோடியம் உப்பாக மாற்றப்படுகிறது. இண்டிகோசால் காரக் கரைசல்களிலும் நடுநிலைக் (neutral) கரைசல்களிலும் நிலையானது. ஆனால் அமிலக் கரைசலில் இது நீராற்பகுப்படைந்து இண்டிகோட்டின் வெள்ளையாக மாற்றப்படுகிறது. ஆந்த்ரகுய்னோன் சாயங்கள் அலிசரின், ஆந்த்ரகுய்னோன் சாயங்களில் முக்கியமானதாகும். மாடர் வேரின் (madder root) முக்கியப் பொருளாக இது விளங்குகிறது. அலிசரினின் வேதிப் பெயர் 1,2 டைஹைட்ராக்சி ஆந்த்ரகுய்னோன். தற்காலத்தில், இது தொகுப்பு முறையில் உயர் வெப்ப நிலையில் ஆந்த்ரோகுய்னோனைச் சல்ஃப்யூரிக் அமிலத்தால் ஆக்சிஜனேற்றம் செய்து, பின்னர் அதன் சோடியம் உப்பைச் சோடியம் ஹைட்ராக்சைடு, பொட்டாசியம் பெர்குளோரேட்டுடன் சேர்த்து 180-200°C வெப்ப நிலையிலும், அழுத்தத்திலும் உருக்கும் போது கிடைக்கிறது. அலிசரின் ஒரு சிவப்புப் படிகம்; இதன் உருகு நிலை 290°C. காரக் கரைசல்களில் கரைந்து செம்பழுப்பு நிறங்களைக் கொடுக்கிறது. இது ஒரு நிறம் ஊன்றிச் சாயமாகும். இதன் நிறம் பயன்படுத்தப்படும் உலோகத்தைப் பொறுத்திருக்கிறது. அலுமினியத்துடன் சிவப்பு நிறமும், இரும்புடன் (ஃபெர்ரிக்) கரும் ஊதா நிறமும், குரோமியத்துடன் பழுப்பு ஊதா நிறமும் உண்டாகும். அலுமினியம், இரும்பு ஆகிய அலிசரின் சாயங்கள் பருத்திக்கு நிறமேற்றவும், அச்சுத் தொழிலிலும் பயன்படுகின்றன. டிரைஃபீனைல்மெத்தேன் சாயங்கள் இப்பிரிவுச் சாயங்களில் டிரைஃபீனைல் மெத்தேன் நிறம் கொள் பொருளாகவும் —NH, -NR, OH போன்ற தொகுதிகள் வண்ண மிகைப்பிகளாகவும் உள்ளன. இச்சேர்மங்கள் நிறமற்றிருக்கும். இவை வெள்ளைச் சேர்மங்கள் எனப்படுகின்றன. இச்சேர்மங்களை ஆக்சிஜனேற்றமுறச் செய்வதால், இவை மூவிணைய ஆல்கஹாலாக (tertiary alcohol) மாறுகின்றன. இவற்றிற்கு வண்ணக் காரங்கள் (colour bases) என்று பெயர். இக்காரங்கள் நிறமற்றவையாக இருப்பினும், அமிலத்தில் கரையும் போது, சாயங்களை உண்டாக்குகின்றன. இச்சாயப் பொருள்களில் கினோன் அமைப்பு உண்டு. டிரைஃபீனைல் மெத்தேன் சேர்மங்கள் அடர் நிறங்களைக் கொண்டவை. இவை சூரிய ஒளிபடுவதால், நிறம் மங்கி அழிந்து விடும். இதனால், இவற்றை துணிப் பொருள்களுக்குப் பயன்படுத்த முடியாது. இவை வண்ணக் காகிதம், தட்டெழுத்து நாடா முதலியவற்றிற்குப் பயன்படுகின்றன. சில முதன்மையான தொகுப்புச் சாயங்களும், அவற்றின் சிறப்பியல்புகளும் பயன்களும் அட்டவணை 2 இல் கொடுக்கப்பட்டுள்ளன. —மே.ரா. பாலசுப்பிரமணியன் —வி.எஸ். சுப்பிரமணியன் —த. தெய்வீகன் நூலோதி. I.L. Finar. Organic Chemistry, Vol.I, Sixth Edition, ELBS, London, 1973; Β.Ρ.Corbman, Textiles, Fourth Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985. சாயந்தோய்த்தலும் அச்சிடலும் இழைகளையும், உடைகளையும் தோற்றப் பொலிவுடன் சீர்செய்யும் முறைக்குச் (finishing processes) சாயந்தோய்த்தலும் அச்சிடலும் முக்கியமாகும். பெரும்பாலான துகில் வகைளை எக்கட்டத்தில் வேண்டுமானாலும் சாயமேற்றலாம். உயர் வகைக் கம்பளிகளுக்குத் தனி இழை வடிவிலேயே சாயமேற்றப்படும். தடித்த கம்பளி நூலுக்கு (worsted yarn) உருளை நூற்கண்டு சாயமேற்றல் ஏற்றதாகக் கருதப்படுகிறது. துணித் தயாரிப்பாளர் தனித் துணிக்குச் சாயமேற்றலையே பெரும்பாலும் விரும்புகின்றனர். ஏனெனில், தேவை குறைவான துணிகளை அளவுக்கு மேல் குவித்து வைப்பதைத் தவிர்க்கவும், சாயமேற்றப்படாத வெண்ணிறத் துணிகளைச் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது, விரும்பும் வண்ணத்தை ஏற்றவும், இம்முறை தகுந்தது. பயன்படுத்தப்படும் சாயம் துணியின் தன்மையையும், குறிப்பிட்ட தேவையையும் பொறுத்ததாகும். சில தேவைக்கு ஒளி வழி நிறமிழப்புத் தவிர்க்கப்பட வேண்டும். கம்பளி, பட்டு மற்றும் நைலான் துணிகளுக்கு அமில வகைச் சாயங்களும், செல்லுலோஸ் இழைகளுக்கு நேரடிச் சாயமும் (direct or substantive dyes) பயனாகின்றன. ஊன்றும் சாயங்களைப் (mordant dyes) பயன்படுத்துவதற்குப் பிற வேதிப் பொருள்களின் சேர்க்கை தேவைப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்படும் சில உப்பு, சாயப் பொருளுக்கும் துணி இழைக்கும் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. பருத்தி, ரேயான் போன்ற செல்லுலோஸ் இழைகளையும், கம்பளி, பட்டுப் போன்ற இழைகளையும், தக்க உப்புக் கரைசல்களில் நனைத்துப் பின்பு, ஊன்றுகைச் சாயத்தில் தோய்க்க வேண்டும், செல்லுலோஸ் இழைக்கு நிறமேற்றப் பயன்படும் கந்தகச் சாயங்கள் மலிவானவை; ஆனால் பளபளப்புக் குன்றிய தோற்றத்தைத் தரக் கூடும். அசோயிக் சாயங்கள் நீரில் கரையா நிறப் பொருள்கள்: உள்ளுறு சாயங்களான (ingrain dyes) இவை இரு வேறு வேதிப் பொருள்கள் துணிப் பரப்பின் மீது கலப்பதால் தோன்றுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> இணைத்தல் வினையில் பங்கு பெறும் இரு சேர்மங்களுள் ஒன்றின் கரைசலில் துணியை முதலில் நனைத்துப் பின்பு, டைஅசோ ஆக்கலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பொருளுடன் வினைப்படுத்த வேண்டும். தொட்டிச் சாயங்கள் எனப்படும் நீரில் கரையா வகையைக் காரம் சேர்ந்த சோடியம் ஹைட்ரோசல்ஃபைட் கரைசலுடன் வினைப்படுத்தி, நிறமற்ற, ஆனால், நீரில் கரைய வல்ல சோமங்களாக மாற்றி, துணியை இதன் கரைசலில் நனைத்து, உலர்த்துகையில் மென்மையான ஆக்சிஜனேற்றத்திற்கு உட்படுத்துதல் தேவை. இச்சாயங்கள் திடமிக்கவை; சிதறு வகைச் சாயங்கள், நுண்தூள் வடிவிலான நீரில் கரையா நிறமிகளாகும். கரிம வகையைச் சார்ந்த இலை, நீர் தவிர்க்கும் இழைகளான பாலி எஸ்ட்டர், நைலான், செல்லுலோஸ் அசெட்டேட்டுகளுக்குச் சிறந்தவை. வினையுறு சாயங்கள் இழைகளுடன் நேரடியாக வினையுற்று, நிறமிழக்காத தன்மையைப் பெறுகின்றன. துணி மீது அச்சிடல். அழகூட்டும் நோக்குடன் துணிகளின் மீது கோலங்களையும், ஓவியங்களையும் அச்சுருவமாகப் பதித்தல், துணியின் மீது துருசைக் (brush) கொண்டு கையால் பூசும் முறையில் தொடங்கியதெனினும், துணியின் மீது அச்சிடல் தொன்மை வாய்ந்த கலையாகும். கி.மு. 400 ஆம் ஆண்டிலேயே இம்முறை இந்தியாவில் வழக்கில் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. எகிப்தின் வட பகுதியில் ஆக்மின் என்னுமிடத்தில் இரு காடுகளிலிருந்து புதை பொருள்களை மீட்ட போது, அச்சு வகைக் கட்டைக் கற்கள் கிடைக்கப் பெற்றன. பெருவிலும், மெக்சிகோவிலும் அச்சிடப்பட்ட துகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. துணி அச்சிடலில் கட்டைக் கல், உருளை, சல்லடை, காகிதம் ஒற்றி அச்சிடல் என நான்கு முதன்மையான உத்திகள் அடங்கியுள்ளன. இம்முறைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கெட்டியான பசையாக வண்ணம் பூசப்பட்டு, பின்பு துணியின் பரப்பின் மீது நிலை நிறுத்தப்படும். நிலை நிறுத்துவதற்கு (fixation) நீராவியில் சூடு படுத்துதல் ஏற்றது. பின்பு, மிகையான வண்ணப் பொருள் துணியின் பரப்பிலிருந்து கழுவி அகற்றப்படும். அச்சிடும் பாணிகள் நேரடி, வெளியேற்றம், பகுதி மூடல் என வகையிடப்பட்டுள்ளன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> நேரடி அச்சிடல் முறையில், வண்ணப் பசை நேரடியாகத் துணியின் மீது அச்சிடப்படுகிறது. வெளியேற்ற அச்சிடலில், துணியின்மீது சமச் சீராக ஓர் அடிப்படை வண்ணம் ஏற்றப்படுகிறது. துணியின் மீது அமைந்துள்ள வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் மட்டும் தக்க வேதிப் பொருளைக் கொண்டு அகற்றினால், நிற நீக்கம் செய்யப்பட்ட வெண்மைப் பகுதி ஓர் ஓவிய வடிவைக் கொடுக்கும். இந்நிறத்தை வேதி முறையில் நீக்குவதற்குப் பயன்படும் வேதிப் பொருளுடன் மற்றொரு வண்ணத்தாலான ஓவியம் பதிவாகும். பகுதி மூடல் முறையில், துணியின் மீது தடை எனக் குறிப்பிடப்படும் ஒரு பொருளை வண்ணப் பூச்சு ஏற்றப்படாத பகுதிகளின் மீது பூச வேண்டும். பின்பு துணியைச் சாய அச்சிடலுக்குட்படுத்தினால் தடையால் மூடப்பட்ட பகுதிகள் வண்ணமேற்கா. துணியின் மீது தடை வகை வேதிப் பொருளைப் பூசிய பின்பு, சோடியம் ஹைட்ராக்சைடு கரைசல் கொண்டு நீக்கினால், நுண் மடிப்பு (plisse) வகை அச்சுத் தோற்றம் உருவாகும். சோடியம் ஹைட்ராக்சைடு பருத்திக்கும், ஃபீனால் நைலானுக்கும் நுண் மடிப்புத் தோற்றத்தைத் தருகிறது. கட்டைக்கல் அச்சிடல். ஒரு மரக்கட்டையில் தேவைப்படும் உருவம் அல்லது கோலத்தைச் செதுக்கினால் செதுக்கப்பட்ட உருவம் கட்டையின் அடித்தளத்திலிருந்து முன்னோக்கி வருவது போன்று தோற்றமளிக்கும். மிகப் பெரிய பரப்பளவுக்கு விரிந்துள்ள பாணியாக இருப்பின், இந்த ஓவியத்தைக் குழிவான அமைப்பாகச் செய்து, இப்பள்ளங்களைக் கம்பளி அட்டைகளால் நிரப்ப வேண்டும். மெல்லிய கோடுகள் வரையப்பட வேண்டிய இடங்களில் தாமிரக் கம்பிகள் பதிக்கப்படும். நன் முறையில் அச்சுகள் பதிலிடப்படுவதற்கு இக்கம்பிகள் பதிக்கப் படுகின்றன. மேலும், இக்கட்டைகளின் மீது புரி ஊசிகள் அச்சிடப்பட வேண்டிய கோலத்தின் பளிச்சிட வேண்டிய பகுதிகளில் பொருத்தப்படும். ஒரு மேஜையின் மீது போர்வையைப் பல அடுக்குகளாக விரித்து, அவற்றின் மீது ரப்பராலான கனமான ஒன்றைப் பொருத்த வேண்டும். அச்சிடப்பட வேண்டிய துணியை இந்த ரப்பர் படலத்தின் மீது ஒட்ட வேண்டும். வண்ணத்தை ஒரே சீராகப் பூசி, அதன் மீது தகுந்த கோலத்தை அச்சிட வேண்டும். வண்ணங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பதித்து, முழு ஓவியத்தையும் பெறலாம். வணிக அளவில் பயன்படுத்துவதற்குக் கட்டைக்கல் அச்சிடல் முறையில் உழைப்பும், செலவினமும் கூடுதலாகத் தோன்றினாலும், அழகு மிளிர் ஓவியங்கள் இம்முறையிலேயே பெறப்படும். உருளை அச்சிடல். நீண்டு கொண்டே போகும் துணிப் பரப்பில் ஒரே வகைக் கோலத்தை இடம் விட்டு அச்சிட வேண்டியிருப்பின், உருளை முறை பயன்படுத்தப்படுகிறது. 1783 இல் முதன்முதலாக நிறுவப்பட்ட ஓர் எந்திரத்தின் திருத்தப்பட்ட அமைப்பு தற்போது பயனாகிறது. (படம் 6) வார்ப்பிரும்பினால் உருவாக்கப்பட்ட ஓர் உருளை மீது தொங்கும் துணியற்ற ஒரு விரிப்பு நகருகிறது. இவ்விரிப்பு சாயமேற்றப்பட வேண்டிய துணிக்குத் தாங்குந்தளமாகிறது. இத்தளத்தின் மீது காரிக்கன் தாங்கி எனும் காடா வகைத் துணி பரப்பப்படும். தற்போது, இதற்காக நைலானாலான தொடர்ச்சியான வார் பயனாகிறது. தாங்குந்தளமும், அதன் மீதான துணிப் பரப்பும் நன்கு இழுத்துக் கட்டப்படுவதால், உருளை சுழலுகையில் அதை ஒட்டியுள்ள துணிப் பரப்பும் நகரும். ஓவியத்தில் இடம் பெறும் வண்ணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உருளையின் பகுதி வடிவம் செதுக்கித் துளையிட வேண்டும். ஒரு தண்டின் மீது அமைக்கப்பட்ட தாமிரக் கூட்டின் மீது உருளையில் செதுக்கிய ஓவியம் பதிக்கப்படுகிறது. பிசிறில்லாத அச்சுப்பதிவு தோற்றுவிக்கப்படுவதற்குச் செதுக்கல் ஒரு கலையாகப் பின்பற்றப்படல் வேண்டும். ஒவ்வோர் அச்சு உருளைக்கும் ஒரு வண்ணப் பூச்சு உருளை இணைந்து செயல்படும். இது அச்சு உருளைக்குள் ஒரு வண்ணப் பூச்சுப் பசை அல்லது கரைசலில் பகுதியளவு அமிழ்ந்திருக்கும். உருளைகளின் செதுக்கப்பட்ட பகுதிகளில் பூசப்பட்டுள்ள பசையில் மிகைப் பகுதியைக் கூரிய விளிம்புடைய பெரிய துடைப்பான்களால் (doctor blades) அகற்றலாம். பிசிறுகளை அகற்றப் பஞ்சுத் துடைப்பான் (bint blade) பயன்படுகிறது. மைய உருளையிலிருந்து விலகி அச்சிடப்பட்ட துணி ஒரு நீராவி அறைக்குள் செல்ல, அங்கு வண்ணம் நிலை நிறுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து உலர்தல் நிகழும். இவ்வகை எந்திரம் துணியின் ஒரு பக்கம் மட்டுமே அச்சிட வல்லது என்றாலும், துணியின் இரு புறமும் அச்சிடுவதற்கு ஏற்ற இரட்டை உருளை எந்திரமும் (duplex roller) பயன்படுத்தப்படும். நவீன அச்சு எந்திரங்கள் யாவும் நுட்பமான கருவிகளாகும். கவனமாக வடிவமைக்கப்பட்ட உருளை தாங்கிகளையும், நீரியக்க (hydraulic) அல்லது காற்றியக்க (pneumatic) இயங்கு முறைகளையும் பொருத்தி, அழுத்தத்தையும், இணங்கு தன்மையையும் (flexibility) சமச்சீராக்கலாம். ஒரு கருவி முகப்பைக் கொண்டு அழுத்தத்தைச் சீராக்கலாம்; ஒவ்வோர் உருளைக்கும் தனித்தனியே மின்காந்த வகைக் கட்டுப்பாட்டமைப்பு உண்டு; உருளை ஓட்ட விரைவை வேறுபடுத்துவதற்கு இயக்கிகள் உள்ளன. தடைவகை அச்சிடல். அச்சு மையில் வேண்டுமென்றே கலக்கப்படும் சில வேதிப் பொருள்கள், அடுத்துப் பயன்படுத்தப்படும் அச்சு மையில் இடம் பெறும் சாயம் முதலில் பதிக்கப்பட்ட சாயத்தின் மீது பதியாமல் தடுக்க வல்லன. இவ்வகை வேதிப் பொருள்கள், ஒதுக்கும் பொருள்கள் (reserving agents) எனப்படும். எடுத்துக்காட்டாக, காரப்பொருள் கலந்த அச்சு மையைப் பயன்படுத்தி, ஒரு சிவப்பு நிறச் சாயம் ஏற்றப்பட்டால், அதன் பின்பு அனிலீன் வகைக் கறுப்புச் சாயம் அச்சிடப்படுகையில், இக்கறுப்பு நிறம் சிவப்பான பகுதிகளில் படுவதில்லை. முதல் மையிலுள்ள காரம் இம்மேல்படிதலைத் தடுக்கிறது. இதன் விளைவாக ஒரு கறுப்புப் பின்னணியில் சிவப்பு உள்ளமைப்புத் தோன்றுகிறது. வெளியேற்ற அச்சிடல் (discharge printing). ஒரு குறிப்பிட்ட சாயத்தை ஏற்றிய பின்பு, தோற்றுவிக்கப்பட வேண்டிய கோலத்திற்குத் தகுந்தவாறு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் நிறத்தை நீக்கும் பொருட்டுச் சில வேதிப் பொருள்களைச் (குறிப்பாக, ஹைட்ரோசல்பைட் வகையை) சேர்க்க வேண்டும். இதனால் வண்ணப் பின்னணியில் வெண்ணிறக் கோலம் உருவாகிறது. இந்நிற நீக்கியால் பாதிக்கப்படாத ஒரு நிறமியை இரண்டாம் அச்சு மையில் சேர்த்தால், பின்னணி, ஓவியம் இரண்டுமே வெவ்வேறு வண்ணங்களில் அமையும். இதற்கு நிற வகை வெளியேற்ற அச்சிடல் (colour discharge printing) எனப் பெயர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> தொட்டிச் சாய முறை. இம்முறையில் அச்சு மையில் சாயம், காரம், ஒரு குறைப்பான் ஆகியவை இடம் பெறுகின்றன. தகுந்த விளைவுகளுக்குத் துணியை நீராவியில் பதப்படுத்தும் வரை நிறமியை ஒடுக்குதல் கூடாது. இந்நோக்கத்துடன் சோடியம் ஃபார்மால்டிஹைடு சல்பாக்சிலேட், தயோயூரியா டைஆக்சைடு ஆகியன குறைப்பான்களாகப் பயன்படுகின்றன. இப்பொருள்களின் ஒடுக்கும் திறன் உயர் வெப்பநிலையிலேயே முழுமை பெறுகிறது. முற்ற வைப்புத் தொட்டி (vat ager) எனப்படும் ஒரு நீராவி அறையில் ஏழு நிமிடங்களுக்குச் செலுத்தி இவ்வண்ணங்களை நிலை நிறுத்தலாம். அமிலமிடப்பட்ட, ஆக்சிஜனேற்ற வல்ல கரைசலில் கழுவி, வண்ணத்தை நிலை நிறுத்தலாம். கெட்டியான பசைக்குப் பதிலாக பால்மங்களைப் (emulsions) பயன்படுத்தியும் தொட்டிச் சாயங்களை ஏற்றலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> திடீர் முற்ற வைப்பு (flash ageing). தொட்டிச் சாய முறையில் பயன்படுத்தப்படும் குறைப்பானைத் தவிர்த்தல் இம்முறையின் அடிப்படைக் கொள்கையாகும். சோடியம் ஹைட்ராக்சைடில் கரையாத கெட்டியாக்கும் பொருளொன்று தொட்டிச் சாயத்துடன் கலக்கப்படுகிறது. இக்கலவை துணியின் மீது அச்சிடப்பட்டு, உவர்த்தப்படுகிறது. ஓவியத்தை உடனேயே முழுமையுறச் செய்யலாம் அல்லது பின்பு தேவையான மற்றொரு சமயத்தில் நிலை நிறுத்தலாம். இறுதியாகத் துணியை எரிகாரமும், ஹைட்ரோ சல்ஃபைட்டும் கலந்த பொருள் கொண்ட திணிப்பியின் வழியே செலுத்தி, பின்பு விரைவாக நீராவிக் கலனில் இட வேண்டும், நிற நிலையாக்கம் அரைகுறையாக நிற்பதையும், அச்சுப் பதிக்கப்பட்ட பகுதியில் நிறப் பாய்வு நிகழ்த்தலையும் தடுக்கும் பொருட்டுச் சாயப் பொருளின் துகள் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. நாஃப்தால் அச்சிடல். பீட்டா—ஆக்சி நாஃப்தாலிக் அமிலத்தின் (β-oxy-naphtholic acid) வழிப் பொருள்களான நாப்தால்கள் துணிக்கு ஏற்றப்பட்டு, இவற்றில் டை அசோ ஆக்கத்திற்குட்படுத்தப்பட்ட வண்ண உப்புகள் பூசப்படுகின்றன. இணைத்தலும், நிலை நிறுத்தலும் விரைவாக நிகழ்கின்றன. மிகையான நாஃப்தால் தேய்த்து அகற்றப்படுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> அசோயிக் அச்சிடல். தற்போது நிறமுடைமை முடக்கப்பட்ட, டைஅசோ சேர்மங்களை நாஃப்தால்களுடன் கலந்து, துணியின் மீது பூசி, இத்துணியை நீராவி கலந்த ஃபார்மிக் அமில ஆவியில் சூடுபடுத்தும் போது இணைத்தல் வினை (coupling) நிகழ்ந்து, நிறம் நிலையாக உருவாகிறது. இதற்கு அமில வழி முற்ற வைப்பு (acid ageing) எனப் பெயர். வெண்ணிறத்தொட்டி எஸ்ட்டராக்கல் முறை. பொதுவாக, தொட்டிச் சாயங்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் நிறமற்று, நீரில் கரையக் கூடியவையாக உள்ளன. இந்நிலையில் அவை நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கு எஸ்ட்டராக்கல் முறையைப் பயன் படுத்தலாம்; அமிலமும், ஆக்சிஜனேற்றியும் சேர்க்கப் பட்டால், மீண்டும் நிறமுற்ற, நீரில் கரையா இயல்பைப் பெறலாம். இங்கு அமிலத்தைச் சிதைவு வழியில் உருவாக்க வல்ல பொருள்களாக அம்மோனிய உப்புகள் ஈடுபடுத்தப்படுகின்றன. அரித்தல் வகை அச்சிடல்(etch printing). ஒரு துணியில் ஒரு வகை இழை அடித்தளமாகவும், மற்றொரு வகை இழை மேலடுக்காகவும் அமையக் கூடும். மேலடுக்கு இழைகளை மட்டும் தாக்கக் கூடிய பொருள்களால் துணியின் மீது அச்சிட்டு, பின்பு அச்சிடப்பட்ட பகுதியிலுள்ள நிறப் பொருளைச் சூடுபடுத்தி அகற்றினால், சிலை செதுக்கியது போன்ற தோற்றம் உருப்பெறும். கந்தை அச்சிடல் (flock printing). ஒட்டுவிப்பி (adhesive) அடங்கிய பசைகள் துணியின் மீது பூசப்- படுகின்றன. ஒட்டுவிப்பி ஈரமாக இருக்கும் போதே, இத்துணி மாறுமின்னோட்ட வகை மின்முனைகளுக்கிடையே செலுத்தப்படும். மின்னேற்றமுற்ற துணிப் பிசிறுகள் ஒட்டுவிப்பியுடன் மோதி நிலை பெறுகின்றன. நிறமி அச்சிடல்(pigment printing). நிறமிகள் நீரில் சிதறிய நிலையில், செயற்கை பிசின்களுடன் பால்மமாக்கப்பட்டுத் துணியின் மீது பூசப்படுகின்றன. பின்பு சூடு படுத்தும் போது, எளிதில் ஆவியாகக் கூடிய பொருள்கள் வெளியேறி, பிசின் நிறப்பொருளைத் துணியின் மீது ஒட்டச் செய்யும். மற்றொரு முறையில் நிறப்பொருளைப் பிசினுடன் கலந்து பின்பு, நீரைச் சேர்த்துப் பால்மமாக்குவர். தாள் ஒற்றி அச்சிடுதல் (sublistatic printing). ஒரு தாளில் தக்க சாயத்தைக் கொண்டு, கோலத்தின் வடிவமைப்பைப் பதித்து, இத்தாளை துணி மீது வெப்ப வகை அழுத்த அமைப்பால் ஒட்ட வேண்டும். ஓவியம் தாளிலிருந்து துல்லியமாகத் துணிக்கு மாறி விடும். குறை அடர்த்தி (half-tone) கொண்ட ஓவியங்களை இவ்வழி முறையில் உருவாக்கலாம். எவ்வகையான துணி அச்சிடல் முறையாலும், கெட்டியாக்கியின் பாகுத்தன்மை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது துணையலகாகும். மரபு வழி முறைகளில் ஸ்டார்ச், ஆல்கினேட், மெத்தில் செல்லுலோஸ், ஈதர், டிரகசந்த் கோந்து (gum tragacenth) ஆகியவை கெட்டியாக்கிகளாகப் பயன்படுகின்றன. சல்லடை அச்சிடல் (screen printing). இவ்வச்சிடலைக் கைகளாலோ, எந்திரங்களைக் கொண்டோ நிகழ்த்தலாம். ஒரு மேஜையின் மீது அடித் துணியைப் பரப்பி ,அதன் மீது சாயமிடப்பட வேண்டிய துணியை ஒட்ட வேண்டும். மரம் அல்லது உலோகத்தாலான சட்டத்தில் பொருத்தப்பட்ட பட்டு அல்லது நைலான் வலை வழியே நிறப் பூச்சு அழுத்தி ஊற்றப்படுகிறது. துணிப் பரப்பின் மீது நிறம் நன்கு சீராகப் பரவுவதற்கு உதவியாக, தேய்க்கும் தூரிகை (squcegee) பயன்படுகிறது. ஒவ்வொரு வண்ணத்திற்கும் தனித்தனி வலையமைவுகள் பயன்படுகின்றன. இவ்வலைகள் தட்டையாகவோ, உருளையாகவோ அமைக்கப்படலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> அச்சிடலுக்குப் பயன்படும் வண்ணக் கலவையில் கிளிசரின், கிளைகால், யூரியா போன்ற ஈர நிறுத்திகள் கலக்கப்படுதல் கட்டாயத் தேவையாகும். இதனால் சாயத்தின் கரைதிறன் உயர்த்தப்படுகிறது. —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. Norma Hollen, et. al., Textiles, Fifth Edition, Macmillan Publishing Co., New York, 1979. சாய நூல் துணிகள் இழையை நூலாக்கிய பின்பு (நூற்ற பின்) நெய்வதற்கு முன்னர், சாயமேற்றப்பட்ட நூல்களிலிருந்து தயாரிக்கப்படும் துணிகளில் உள்ள சாயம் நூலின் உட்பகுதி வரை ஊன்றியிருக்கும். இவ்வகைத் துணிகளில் நிறம் ஆழ்ந்திருக்கும். வெளுப்பதற்கு முன்அவற்றின் சாயம் திடமானதா என ஆய்வு செய்தல்வேண்டும். ஏனெனில், இவ்வகைத் துணிகளில் சாயக்கசிவு (bleeding) நேரக் கூடும். விரும்பத்தக்க கோடுகளையும் கட்டங்களையும் உருவாக்கும் பொருட்டுப் பல வகை நிறம் கொண்ட நூல்களைப் பயன்படுத்தி நெய்யப்படும். பாவு நூல் நிறம் கொண்டதாகவும், நிரப்பு நூல் வெண்ணிறமுடையதாகவும் இருப்பின், துணிகள் நெய்யப்பட்ட துணி சாம்ப்ரேஸ் (chambrays) எனப்படும். மற்ற வகை வண்ண நூல் கலவைகளால் உருவாக்கப்பட்ட துணிகளாவன: சீர்சக்கர் (seersucker), ஜிங்காம் (gingham), மேய்ப்பர் கட்டம் (shepherd's check), பிளெயிட். நூலுக்குச் சாயமேற்றுதலில் பின்வரும் நான்கு வழிமுறைகள் உள்ளன: நூற்கண்டு அல்லது சிட்டத்தைச் சாயமிடுதல் (skein or hank dyeing), துளைக் குழல் சாயமிடல் (package dyeing), பாவுத் தண்டு சாயமிடல் (warp—beam dyeing), விட்டு விட்டுச் சாயமிடல் (space dyeing). நூற்கண்டு சாயமிடல் முறையில் நூற்கண்டுகளைக் கம்பிப் படிச் சட்டத்தில் தொங்க விட்டுச் சாயத் தொட்டியில் அமிழ்த்த வேண்டும். சாய நிறம் நன்கு நூலினுள் ஊடுருவும் என்றாலும், இது ஒரு செலவு மிக்க முறையாகும். கூம்பிய நூற்கண்டாகவோ, உருளை மீது சுற்றியோ துளையிடப்பட்ட தண்டுகளின் மீது அடுக்கி, சாயத்தை அவற்றின் வழியே அழுத்தத்தில் வெளியே பாய்ச்சி, மீண்டும் உட்புறமாகச் செலுத்துதல் துளைக் குழல் சாயமிடலாகும். பின்னல் வகைத் துணிகள் இம்முறையில் சாயமேற்றப்படுகின்றன. பாவு உருளையிலேயே துளையை உருவாக்கிச் சாயத் தொட்டியில் மூழ்க வைத்தல் மூன்றாம் முறையாகும். விட்டு விட்டுச் சாயமிடல் முறையில் நூலைப் பின்னல் வகைத் துணியாக்கித் தேவைப்படும் நீள் வளையத்தை உருவாக்கிக் கொள்ளலாம். பின்னப்பட்ட துணியைச் சாயமேற்றி, பின்னலைப் பிரித்து விட வேண்டும். நீள் வளையப் பகுதிகளில் சாயம் உட்புகுந்திருக்கும். ஆனால், நூல்கள் குறுக்கிடும் பகுதிகள் சாயமேற்கா. மாறாக, சரியான இடைவெளிகளில் அமைக்கப்பட்ட மாறுபட்டசாயத் தொட்டிகளின் வழியே நிமிடத்திற்கு 900 மீட்டர் என்ற விரைவில் நூல்களைச் செலுத்திப் பல வண்ண விளைவுகளைத் தோற்றுவிக்கலாம். —மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985. சாயமிடல் இது துணிகளுக்கும், இழைகளுக்கும் நிறமேற்றும் செயல் முறையாகும். சாய மூலக் கூறுகளை இழைகளுடன் இணைக்கும் விசைகள் பலவகைப்பட்டவை.எனினும், மூன்று கட்டங்களில் இச்செயல் முறை நிகழ்கிறது. அவை: சாயக் கரைசலிலிருந்து சாயம் இழையின் பரப்பின் மீது படர்தல்; இழையின் பரப்பிலிருந்து இழைக்கு இடைப்பட்ட பகுதிக்குச் சாய மூலக்கூறு நகர்தல்; இழையின் மூலக்கூறுகளுடன் சாய மூலக்கூறுகள் வாண்டர் வால்ஸ் வகை, ஹைட்ரஜன் பிணைப்பு அல்லது சக பிணைப்பு மூலம் இணைதல் எனப்படும். சாய மூலக்கூறுகள் கரைசலிலிருந்து இழைக்கு நகர்தல் இழைப் பரப்பின் மின்னேற்றத்தையும், வெப்ப நிலையையும், கரைசலைக் கலக்கும் விளைவையும் பொறுத்தமையும். இழை மின்னேற்றத்தின் அடிப்படையில் எந்த இழைக்கு எந்தச் சாயம் ஏற்றது என்பது தீர்மானிக்கப்படுகிறது. சாயம் இழைகளுக்கு இடையே அமர்தல், சாய மூலக்கூறுக்கும் இழையின் மீதான துளைக்கும் உள்ள குறுக்களவு விகிதத்தைப் பொறுத்தது. சாயமிடும் அமைப்புகள். சாயமிடும் கருவிகளின் வடிவமைப்பு சாயம் மற்றும் இழை வகையைப் பொறுத்தது. சில சாயங்களுக்கு உயர் அளவுக்கு நீர்மம் தேவைப்படுவதால், கூடுதலான அளவில் கரைசல்களைக் கையாளக் கூடிய அமைப்புகள் தேவை. சில இழைகளின் மீது சாயமிடுவதற்கு அழுத்தம் தேவை. இழையின் வடிவம் ஒரு முதன்மையான துணையலகாகும். உதிரி இழைகள், நூல்கள், துணிகள் ஆகிய ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனி வகைச் சாயமிடும் கருவிகள் தேவைப்படுகின்றன. சாயமிடும் வழிமுறையில் பயன்படும் பொறிகளில் பின்வரும் மூன்று வகை உள்ளன: பற்றுப் பொருள் (அதாவது துணி, சாய நீர்மத்தில் மூழ்கி நகர்தல்), சாய நீர்மம் (அசையா இழை அல்லது துணி மீது பாய்ந்து செல்லுதல்), துணி (அல்லது நூல்), சாயம் இரண்டுமே இயக்கத்துக்குள்ளாதல், சாயமிடும் அமைப்பில் இன்றியமையாதவை. பற்றுப் பொருளின் பரப்பில் ஒரே சீராகச் சாயப் பொருள் பரவுவதற்குத் தக்கவாறு இயக்கம் அமைதல்; இவ்வியக்கம் துணிக்கு ஊறு விளைவிக்காதிருத்தல்; எவ்வுலோகத்தால், பீங்கான்அல்லது நெகிழியால் (plastic) சாயமிடும் அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளதோ, அப்பொருள் சாயத்தின் வேதிப் பொருள்களால் பாதிப்புக்குள்ளாகாமல் இருத்தல்; சாயமிடும் அமைப்பு முழுதும் சீரான வெப்ப நிலை நிலவச் செய்தல்; செயல்முறையில் குறுக்கிடாது தேவைப்படும் போதெல்லாம், சாய ஓட்டத்தில் புதிதாகச் சாயத்தைக் கலக்கும் அமைப்பு இருத்தல். சாயமிடல் வகைகள் கச்சா இழையைச் சாயமிடல் (raw-stock dyeing). நூற்புக்கு முன்பே சாயமிடும் இவ்வழி முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களை ஒரே நூலில் கலக்க இயலும். சாயச் சீர்மை இவ்வழி முறையில் எளிதில் எய்தப்படும். இவ்வகைச் சாயமிடல் திறந்த தொட்டிகளிலும், மூடிய அழுத்தமிக்க கலன்களிலும் நிகழ்த்தப்படுகிறது. நூற்கண்டு சாயமிடல் (skein dyeing). நூல் சிட்டங்கள் துளையிடப்பட்ட (கறைபடா எஃகினாலான) தண்டுகளிலிருந்து தொங்க விடப்பட்டுக் கீழே திறந்த தொட்டியில் சாயக் கரைசல் தேக்கப்படும் (படம் 1). தொட்டியிலுள்ள சாயம் இறைப்பிகள் மூலம் துணி தொங்க விடப்படும் தண்டுகளுக்குள் செலுத்தப்படுகிறது. இத்தண்டுகளின் துளை வழியே இழையின் மீது பீச்சப்படும் சாய நீர்மம் மீண்டும் தொட்டிக்குள் விழுகிறது. துளையிடப்பட்ட தண்டுகளை அவ்வப்போது அசைப்பதால் சாயத்தைச் சீராகத் துணி அல்லது நூல் மீது பரவச் செய்தல் எளிதாகிறது. நூற்கண்டு சாயமிடல் (ஹஸ்ஸிங் கருவி). ஒரு பற்சட்டத்திலிருந்து தொங்க விடப்பட்ட நூற்கண்டு களைச் சாயத் தொட்டியில் அமிழ்த்த வேண்டும். ஓர் உந்தி, நூல் கண்டுகளின் மீது சாயத்தைப் பாய்ச்சுவதற்கு உதவுகிறது. சில அமைப்புகளில் அழுத்தத்தில் சாயமிட வேண்டியிருப்பதால் மூடிகள் தேவைப்படும். சிப்பங்கட்டிச் சாயமிடல் (package dyeing). நூற்கண்டு கட்டுகளைச் செங்குத்தான விசைத் தண்டின் (spindle) மீது அமர்த்தி, சாயக் கலனில் பொருத்த வேண்டும். அச்சாய நீர்மம் விசைத் தண்டிலுள்ள சிறு துளைகள் வழியே நூற்கண்டின் மீது சுழற்றி வீசப்படுகிறது. நீர்ம ஓட்டத்தின் திசையை நேர் எதிராக மாற்றி, மாற்றி அமைத்து இறுதியில் விரும்பத் தக்க வண்ணமேற்றப்படுகிறது. வழியுறுதி கொண்டு சாயமிடல் (dyeing by jig). துணி பல உருளைகளில் மேலும் கீழுமாக உராய்ந்து சென்று, சாயத் தொட்டியில் மூழ்சி மீண்டும் உருளைகளினூடே சென்று வெளிவருகிறது. (படம் 2) துணியின் ஓட்டத்தைப் பல முறை தலைகீழாக்கித் தேவைப்படும் அளவுக்குச் சாயத்தை ஊன்றச் செய்யலாம். சாயமேற்றப்பட்ட துணியைப் பிழி உருளை (squeeze roller) வழியே செலுத்திச் சாயத்தைத் துணியில் நன்கு ஊடுருவச் செய்யலாம். சாயம் காட்டுதல் (dye beck). துணிகளை முனைக்கு முனை தைத்து நீண்ட சாளரமாக்கி, வழிப்படுத்தும் உருளை மூலமாகவும், சுற்றி (reel) மூலமாகவும் சாயத் தொட்டியில் நீள் வளையங்களாகச் செலுத்த வேண்டும் (படம் 3). துடுப்புப் பொறி முறை (paddle machine). முழுமையாக உருவாக்கப்பட்ட உடைகளையும், பனியன் வகைத் துணிகளையும் வலைத்துளை மிக்க பைகளில் கட்டிச் சாயத் தொட்டியில் அமிழ்த்தி, துடுப்பு வகை விசிறியால் தொட்டியைக் கலக்க வேண்டும். விட்டவகைத் தொட்டி (beam dyeing). பர்லிங்டன் விட்டத் தொட்டி எனும் அமைப்பில் துளையிட்ட விட்டத்திலிருந்து துணிகளைத் தொங்க விட்டுத் துளை வழியாகச் சுழற்றப்படும் சாயத்தைத் துணிகளின் மீது ஏற்றலாம். நெருக்கமாக நெய்யப்பட்ட துணிகளை விட வலையாகப் பின்னப்பட்ட துணிகளுக்கு இம்முறை சிறந்தது. பொதுவாக, சாயப் பொருள்கள் அமிலச் சாயங்கள், காரவகை அல்லது நேர் அயனிச் சாயங்கள், நேர் சாயங்கள், பரவும் சாயங்கள், தொட்டிச் சாயங்கள், வினைபுரி சாயங்கள் என ஆறுவகையாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சாயத்திற்கும் தகுந்த சாயமிடல் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அமிலச் சாயங்கள் பெரும்பாலும் சல்ஃபோனிக் அமில உப்பு ஆகும், புரத வகை இழைகளுக்கு அமிலச் சாயங்கள் ஏற்றவை. கரை திறன் கூடுதலாக இருப்பதால், சாயக் கரைசலிலிருந்து மிகப் பெரிய அளவில் சாயம் துணிகளிடையே ஊடுருவுகிறது. அமிலச் சாயங்களைத் துணிகளுக்கு ஏற்றுவதற்கான வழிமுறைகளுள் ஒன்றான சாய நீர்மத்தில் நீர், NaSO.HSO ஆகியன முதலில் இடப்படுகின்றன. 40°C வெப்ப நிலையில் நூல் அல்லது துணியை இக்கலவையில் அமிழ்த்தி, 10—20 நிமிடங்கள் வரை பொறுத்துச் சாயத்தைச் சேர்க்க வேண்டும், வெப்ப நிலையை மெல்ல மெல்லக் கொதி நிலைக்கு உயர்த்தி, சாயமிடலை 45—60 நிமிடங்கள் வரை நிகழ்த்த வேண்டும். சாய நீர்மத்தின் pH மதிப்பு 2—3 என்ற வரம்புக்குள் இருத்தல் தகுந்த பயன் தரும். சமநிலைப் பரவு தன்மை சற்றே குறைவாக அமையப் பெற்று, அமிலச் சாயங்களுக்கு அமிலத் தன்மையைச் சரி செய்வதற்கு அசெட்டிக் அல்லது ஃபார்மிக் அமிலத்தைப் பயன்படுத்த வேண்டும். அசெட்டிக் அமிலம், சோடியம் சல்ஃபேட், சாயம் ஆகியவற்றின் கலவையை 37-48°C வரம்பில் நிறுத்தித் துணியைப் புகுத்த வேண்டும். பின்பு, வெப்ப நிலையை மெல்லக் கொதிநிலைக்கு உயர்த்தி, 60—90 நிமிடங்கள் வரை சாயமிட வேண்டும். காரச் சாயங்களில் சாய மூலக்கூறின் எதிர் அயனி வண்ணமுடையதாகும். இவ்வயனி இழை மீதுள்ள நேர் மின்னேற்றம் கொண்ட பகுதிகளால் ஈர்க்கப்படுகின்றது. இதன் விளைவாக ஓர் இழைக்கும், சாயத்திற்கும் இடையே ஒரு வலிய சக பிணைப்புத் தோன்றக் கூடும். எந்த இழையும் எக்காரச் சாயத்துடனும் இவ்வகைப் பிணைப்பை ஏற்படுத்தி விடுவதில்லை, ஆதலால், இச்சாயத்தின் திடம் (durability) இழைக்கு இழை வேறுபடுகிறது. காரச் சாயங்களின் தனிப் பண்புகள் அவற்றின் சாய அழுத்தமும், ஒளிர்வுமாகும். பிற சாயங்களை விட நீரில் கரையும் திறன் குறைவு. 65°Cக்கு மேல் சிதைவுறும். அமிலச் சாயத்துடன் காரச் சாயத்தை ஒரே கலவையில் பயன்படுத்த இயலாது; முயன்றால், வீழ்படிவு தோன்றும், அக்ரிலிக் வகை இழைகளைத் தலிர ஏனையவற்றுடன் காரச் சாயங்களின் ஒட்டும் திறன் குறைவு. பொதுவாக, காரச் சாயங்களுக்குச் சாய நீர்மத்தின் pH வரம்பு 7. 5—8 ஆகும். யூரியாக் கரைசலைத் தாங்கல் கரைசலாகப் பயன்படுத்தினால், pH வரம்பை 5—6 ஆக மாற்றலாம். வெப்பநிலை 60—80°C டானிக் அமிலம் (tannic acid) இணை பொருளாகப் பயன்படுகிறது. சாய நீர்மத்திலிருந்து சாயம் விரைவில் அகன்று, இழையில் புகுவதற்கு உதவியாக வினை மட்டாக்கிகள் சேர்க்கப்படுகின்றன. மிகப் பெரும்பாலான சாய வகைகள் நேரடியாகச் சாயமேற்றத் தகுந்தவை. இவை தனி நிலைச் சாயங்களாகும். இவை நீரில் கரைவன; செல்லுலோஸ் இழைகளுக்குச் சாயமேற்றத் தகுந்தவை. இவ்வகைச் சாய மூலக்கூறுகள் நேர் சங்கிலி அமைப்புக் கொண்டவை. இழை மூலக்கூறுகளால் எளிதில் உட்கவரப்படக் கூடியவை; மேலும்; ஹைட்ரஜன் பிணைப்பும், வாண்டர் வால்ஸ் ஈர்ப்பு விசையும், பற்றுப் பொருளுடன் சாயத்தைப் பிணைக்க உதவுகின்றன. இருப்பினும், இவ்வகைச் சாயங்கள் ஒட்டும் திறன் குறைவாக அமையப் பெற்றவை. கெட்டிச் சாயமாக மாற்றப்படுவதற்குச் சில தனி வழி முறைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றில் மூன்று உட்பிரிவுகள் உள்ளன. தானே சமநிலையாகப் பரவும் தன்மை கொண்டவை (A); உப்புச் சேர்ந்து சீராகப் பரவும் தன்மை பெறுபவை (B); உப்பும், உயர் வெப்ப நிலையும் தேவைப்படும் நிலையிலுள்ளவை (C). A—வகைச் காயத்தை நீரில் குழைத்து, நேர் அயனித் தன்மை கொண்ட அல்லது அயனித் தன்மையற்ற நனைப்பூட்டியையும் (wetting agent) கொதி நீரையும் சேர்த்து, தகுந்த செறிவுள்ள உப்புக் கரைசலுடன் கலக்க வேண்டும். இழை அல்லது துணியை இச்சாய நீர்மத்தில் அமிழ்த்தி, 30—40 நிமிடங்களில் கொதி நிலைக்கு உயர்த்தி, கொதி நிலையில் 45—60 நிமிடங்களுக்குச் சாயமேற்ற வேண்டும். B—வகைச் சாயத்திற்கு உப்புச் சேர்த்தல் தவணைகளில் நிகழ்த்தப்படுகிறது C வகைச் சாயத்திற்குக் கொதி நிலை எய்திய பிறகு உப்புச் சேர்க்கப்படுகிறது. சாயத்தை உறுதியாக்குவதற்காகச் சாயமேற்றிய பின்பு, ஃபார்மால்டிஹைடு, சோடியம் குரோமேட், கரிம எதிர் அயனி நிலை நிறுத்திகள் ஆகியவற்றுடன் வினையுறுத்தலாம், நிலை நிறுத்தும் (fixing) முறைகளில் சிறந்தது டைஅசோ ஆக்கல் (diazotisation) ஆகும். பீட்டா—நாஃப்தால், ஃபீனால் ரெசார்சினால் போன்ற உருதுலக்கிகளைச் (developers) சாய மூலக்கூறுகளிலுள்ள அமினோ தொகுதியுடன் வினையுறச் செய்யலாம். வினை இழை மீது நிகழும். வழக்கம் போல, சாயமேற்றத்தை நடத்திய பிறகு துணி மீதுள்ள சாயத்தைச் சோடியம் நைட்ரைட், சல்ஃப்யூரிக் அமிலம் ஆகியவற்றுடன் டைஅசோ ஆக்கலுக்குட்படுத்தி, உரு துலக்கியைச் சேர்க்க வேண்டும். பிரிகை நிலைச் சாயங்கள் முதன்முதலாகச் செல்லுலோஸ் அசெட்டேட் இழைக்காகவே தயாரிக்கப்பட்டமையால், அவற்றை அசெட்டேட் சாயங்கள் என்றே கூறினர். நீர் தவிர்க்கும் (hydrophobic) செயற்கை இழைகள் பலவும் தயாரிக்கத் தொடங்கிய பின்பு, இவ்வகைச் சாயங்களின் பயன்கள் விரிவாக்கப்பட்டன. நீரால் ஈர்க்கப்படாத தன்மை கொண்டவையாதலால், இவை எளிதில் கரிம இழையின் பரப்பை அடைந்து, ஊடுருவி, இழை மூலக்கூறுடன் திண்மக் கரைசலைத் தோற்றுவிக்கின்றன. இழைப் பற்றுப் பொருளின் தன்மைக்குத் தக்கவாறு, இவ்வகைச் சாயத்தின் கெட்டித் தன்மை அமைகிறது. அசெட்டேட் ரேயான், நைலான் போன்ற இழைகளுக்கு ஏற்றப்பட்ட இச்சாயம் வளிமம் அல்லது புகை மூட்டத்தில் நிறமிழக்கிறது. மிக உயர் வெப்ப நிலைகளில் இச்சாயம் பதங்கமாகிறது. இச்சாயங்களை அழுத்தம் கொண்டு சாயமேற்றலாம். பாலி எஸ்ட்டர் இழைகளுக்கு இம்முறை ஏற்றது; பின் வரும் சாயமேற்றும் முறை பின்பற்றப்படுகிறது. சாய நீர்மத்துடன் மேற்பரப்புச் செயலி, அணைவு ஒதுக்கி (sequestering agent) இவற்றைச் சேர்த்து, 10 நிமிடங்களுக்கு இழையை நனைத்து 20—40 நிமிடங்களுக்குச் சாயமிட வேண்டும். வெப்ப நிலை 93°C ஆகும். மிகையான சாய நீரை அகற்றிய பின்பு, இழையைக் கழுவுவதற்கு அணைவு ஒதுக்கி கலந்த நீரைப் பயன்படுத்தலாம். இவ்வகைச் சாயங்களை வெப்பக் கரைசால் (thermosol) என்ற வழி முறையாலும் சாயமேற்றலாம். தொட்டிச் சாயங்கள் தொன்மை வாய்ந்தவை. இயற்கையான தொட்டிச் சாயங்கள் எகிப்தில் கி.மு. 2000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையான தொட்டிச் சாயங்களுக்குச் சான்றுகள் இண்டிகோ (indigo), டிரியன் பழுப்பு (tyrian purple) ஆகியனவாகும். செயற்கைத் தொட்டிச் சாயம் முதன்முதலாக 1897 இல் தயாரிக்கப்பட்டது. தொட்டிச் சாயங்கள் நீரில் அரையா. காரக்கரைசலில் சோடியம் ஹைட்ரோ சல்ஃபைட் என்ற மென்மையான ஆக்சிஜன் ஒடுக்கியால், நிறமற்ற நீரில் கரைய வல்ல சேர்மமாக மாறுகிறது. நிறமற்ற இக்கரைசலில் துணியை நனைத்து, காற்றுப் படும்படியோ சோடியம் பெர்போரேட் எனும் சேர்மத்தைச் சேர்த்தோ, மீள் ஆக்சிஜனேற்றத்திற்குட்படுத்தினால், சாயம் உரிய நிறத்தை அடைந்து விடும். தொட்டிச் சாயங்கள் பெரும்பாலும் கெட்டிச் சாயங்களே ஆகும். வினைபுரி சாயங்கள், இழையுடன் சக பிணைப்புறுவாதல் ஏனையவற்றிலிருந்து தனித்தவை; கெட்டித் தன்மை (colour fastness) மிக்கவை. பெரும்பாலும் செல்லுலோஸ் வகை இழைகளுக்கே பயன்படுத்தப்படுவனவாயினும், பட்டு, கம்பளி, நைலான், அக்ரிலிக் போன்ற இழைகளுக்கும் தகுந்தவையே. வினைபுரி சாயத்திலுள்ள ஒரு வேதித் தொகுதி செல்லுலோஸ் இழையின் —OH தொகுதியுடனோ, மற்றவகை இழையின் —NH தொகுதியுடனோ பிணைப்புறுகிறது. கெட்டித் தன்மை மிக்க இச்சாயங்கள் விலையுயர்ந்தவை. இச்சாயத்திற்குச் சேர்க்கப்படும் துணைப் பொருள்களின் எண்ணிக்கை, சற்றுக் கூடுதலாகும். இவ்வகைச் சாயக் கரைசலை நீண்ட நாள் சேமித்து வைத்தால், வேதி நிலையிறக்கம் காணக் கூடும். வினைபுரி சாயமேற்றலைத் தொடர்ச்சியாகவோ, தொகுதி முறையிலோ (batch process) நிகழ்த்தலாம். தொடர்முறையில் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளைக் கொண்ட கலப்பு இழையைச் சாயமேற்றுதல் எளிதன்று. ஏனெனில், ஒவ்வொரு வகை இழையும் அனைத்துச் சாயங்களுக்கும் ஒரே வகைப் பிணைப்பைத் தோற்றுவிப்பதில்லை. எனவே, ஒரு வகை இழையைச் சாயமேற்றி, துணியை நன்கு கழுவி, பிறகு மற்றோர் இழைக்குச் சாயமேற்ற வேண்டும். சாயமேற்றும் துறையில் பின்வரும் சில சிறப்புச் சொற்றொடர்கள் பயன்படுகின்றன. கோடிழை (barre). துணியில் கோடுகளாகத் தெரியும் சாயம். தடுக்கும் செயல் (blocking). ஒரு சாயத்தின் ஒட்டுவிப்பை மற்றொரு சாயம் பிரித்தல் அல்லது பாதித்தல். உதிர்தல் (crocking). சரியாக நிலை நிறுத்தப்படாத சாயம் உராய்வால் உதிர்தல். தீர்தல் (exhaustion). சாயம் நீர்மத்தை விட்டு இழைக்கு இடம் பெயர்தல். கெட்டித் தன்மை (fastness), கசிதல் மூலமோ, மங்குதல் மூலமோ நிறமிழப்பு நேர்வதைத் தடுக்கும் ஆற்றல். காரிக்கண் துணி(grey or greige goods). சாயமேற்றப்படாத, முழுமையுறாத தறியிலிருந்தோ, பின்னல் பொறியிலிருந்தோ (knitting machine) நேராகப் பெறப்பட்ட துணிகள். குழைத்தல் (pasting). சாயத்தை ஈரமேற்றிக் குழைத்தல். வடமடிப்பு (rope crease). சாயமிடுகையில் துணி முறுக்கேற்றமடைவதால் தோன்றும் சாயக் கீறல். மாறுபட்ட நிற ஊன்றுகை (shading). கலப்பு இழைகளில் ஓர் இழையின் நிறம் மற்றொன்றை விட ஆழமாக ஊன்றுதல். சோப்பால் அகற்றம், மிகையான சாயத்தைச் சோப்பால் கழுவி அகற்றுதல், சமநிலைப் பரப்புத் தன்மை (levelling). சமச் சீராகச் சாயத்தைத் துணி அல்லது இழை மீது பரவச் செய்தல்.கலப்பிழைச் சாயமிடல் (union dyeing). இரண்டையோ அதற்கு மேற்பட்ட இழைகளையோ, ஒரே நூற்கண்டு அல்லது துணியில் சாயமேற்றுதல். —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. Douglas M. Considine. Chemical Process and Technology. First Edition, McGraw Hill Book Company, New York. 1974. சார்க்கோமா கருவில் முதன் முதலில் மூன்று வகைத் திசுக்களே காணப்படும். அவை இடைப்படை, புறப்படை, அகப்படை ஆகும். இவற்றில் இடைப்படைச் செல்களிலிருந்து பல்வேறு திசுக்களில் உண்டாகும் புற்றையே சார்க்கோமா (sarcoma) என்பர். கார்சினோமா (carcinoma) புற்று, சார்க்கோமா புற்றிலிருந்து பின்வரும் வகையில் வேறுபடுகிறது. கார்சினோமா, சுரப்பி மற்றும் தோல் பகுதியில் உள்ள மேலணித்திசுச் செல்களிலிருந்து உண்டாகிறது. சார்க்கோமா, தசை, எலும்பு, புன்கலன், நார்த்திசு ஆகியவற்றில் உண்டாகிறது. சார்க்கோமா 10—20 வயது வரை அதிகம் காணப்படும். கார்சினோமா வயதானோரிடம் காணப்படும். சார்க்கோமா மிக விரைவாக வளர்ந்து குருதி மூலம் உடலெங்கும் பரவும் தன்மை வாய்ந்தது. கார்சினோமா நிணநீர் வழியாகப் பரவுகிறது. நுண்ணோக்கியால் நோக்க, சார்க்கோமாவில் செல்கள் தனித்துக் காணப்படும். மாறாக, கார்சினோமாவில் செல்கள் தூண்களைப் போலக் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். சில வேளைகளில் சார்க்கோமா. முன்பிருந்த தீங்கற்ற கட்டிகளிலும் தோன்றும். நோய்க்குறிகள். சார்க்கோமா கட்டிகள் சதைப் பற்றுடன் கடினமாகவோ, மென்மையாகவோ காணப்படும். குருதி ஓட்டக் குறைவுள்ள நார் சார்க்கோமா (Fibro sarcoma) கடினமாக, வெண்ணிறக் கட்டிகளாகக் காணப்படும். மாறாக முலையில் உண்டாகும் நார் சார்க்கோமா மென்மையாகவும், குருதி ஒழுக்குச் சிரைப் பைகளுடனும் காணப்படுவதற்குக் காரணம் மியூகாய்டு நலிவேயாகும். குருதி ஓட்டம் நிறைந்த இப்புற்றுக் கட்டியில் குருதி வாரி உண்டாகக் காரணம் மெல்லிய சுவர்களுடைய நாளங்களே. சில இடங்களில் இவை சிரை குருதி நிறைந்து குடாக்களாகக் (venous space) காணப்படும். இக்கட்டிகள் சூட்டுடன் காணப்படுவதற்கான காரணம், மிகு குருதி ஓட்டமும், குருதி ஒழுக்கில் உண்டான குருதி மீண்டும் குருதியுடன் கலப்பதுமேயாகும். மருத்துவம். சுற்றியுள்ள நல்ல திசுக்களுடன் கட்டியை முழுமையாக எடுக்காவிட்டால், எளிதில் பிற இடங்களுக்குப் பரவும். கை, கால்களில் உள்ள சார்க்கோமாவில் அப்பகுதியைத் துண்டித்துக் களைவதன் மூலம் முற்றிலும் நீக்கலாம். —மா.ஜெ. பிரடெரிக் ஜோசப் சார்காசம் பூக்காத தாவரப் பிரிவைச் சார்ந்த பழுப்பு நிறக் கடற்பாசிகளில் முக்கியமானவை சார்காசம் (sargassam) என்ற கடற் களைகளாகும். மிகு தோற்றம் காரணமாகவே, இவை களைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. பச்சையத்தைக் கொண்டிருப்பினும், இவற்றை மஞ்சள் பழுப்புப் போன்ற நிறமிகள் (chromatophores) மறைப்பதால், இவை பழுப்பு நிறத்தை வெளிப்படையாகக் கொண்டுள்ளன. ஏனைய நிலத் தாவரங்களைப் போலவே, ஒளிச்சேர்க்கையால் தம் உணவை இவை உற்பத்தி செய்கின்றன. சார்காசம் ஆழம் குறைந்த வெப்பக் கடற் பகுதிகளின் அடி மட்டத்தில் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பொருளில் ஒட்டியவாறே காணப்படும். எனினும், அவ்வப்போது அடிமட்டத்திலிருந்து பெயர்ந்து, நீர் மட்டத்தோடு மிதந்தும் செல்லக் கூடும். இவற்றிலிருந்து பிரிந்த துண்டுகளிலிருந்தே புதுத் தாவரம் உருவாவதால், இவற்றின் உற்பத்தி விரைவாகவும், மிகுதியாகவும் இருக்கும். வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான சார்காசாக் கடல் இதன் மிகு உற்பத்தி காரணமாகவே இப்பெயர் பெற்றுள்ளது. இக்கடலில் 4—11 மில்லியன் எடையுள்ள சார்காசம் களைகள் உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. கொலம்பசின் முதல் கடற் பயணத்திலிருந்தே மீனவர்கள் சார்காசத்தை அறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடற்களைகளிலேயே மிகப் பெரிய பருமனைக் கொண்டுள்ளவை சார்காசக் களைகளே, பல பிரிவுகளாலான நீளத் தண்டுகளில், விட்டு விட்டு அமைந்த ஒழுங்கற்ற முள்கள் உள்ள இலைகளைக் கொண்டவை. இலைகளுக்கிடையில் தொடர்ந்து பிரிந்து பல்கிப் பெருகுவதற்கு ஏற்ற மெலிந்த தண்டுகளோடு ஒவ்வோர் இலையின் அருகிலும் திராட்சைப் பழ வடிவத்தையொத்த ஒரு காற்றுப்பை இருக்கும். இக்காற்றுப்பைகள் கடலின் மேல் மட்டத்தில் மிதந்து செல்வதற்குத் துணை புரிகின்றன. போர்ச்சுக்கீசிய மொழியில் சார்கா (sarga) என்பது திராட்சைப் பழத்தைக் குறிப்பதாலும், இக்களைகள் திராட்சைப் பழ வடிவக் காற்றுப்பைகள் கொண்டுள்ளமையாலும், சார்காசம் எனப் பெயர் பெற்றுள்ளன. சார்காசக் களைகள் ஓரிரு மீட்டர் பரப்பு களாகப் பெரிதும் மிதந்து காணப்படுகின்றன. இவற்றில் மீன், இறால், மெல்லுடலிகள் போன்ற கடல்-வாழ் உயிரினங்கள் மறைந்து வாழ முடியும். எனவே இப்பரப்புகள் விலங்கியல் தோட்டங்கள் எனப்படுகின்றன. சார்காசம் மீன்களும் இவற்றில் மறைந்து வாழும். சார்காச இலைகள் போன்றஅமைப்புகள் இம்மீன்களின் வெளித் தோலிருந்து நீண்டு தொங்குவது குறிப்பிடத்தக்கது. சார்காசக் களைகள் மடிந்து அழுகும் போதும், அவை இருக்கும் பகுதிகளில் வாழும் மீன் போன்ற விலங்கினங்களுக்குச் சிறந்த உணவாக அமையும், ஹோயர்ட் என்னும் ஆய்வாளர், 1000—1500 மீட்டர் ஆழப்பகுதிகளில் மிதக்கும் நுண்ணுயிரிகளும், மீன்களும் கிழக்குக் கடல் பகுதிகளை விடச் சார்காசக் கடலில் மிகுதியாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். சார்காசம் மிரியோசிஸ்டம், சா. சினரியம், சா.ஜான்ஷ்டனி, சா.டெனிரிமம் போன்ற இனங்கள் இந்தியக் கடற்கரையோரப் பாறைகளிலும், பவளப் பாறைகளிலும், கற்களிலும், பிற தாவரங்களிலும் ஒட்டி வளர்கின்றன. தமிழ்நாடு, குஜராத், கோவா, கார்வார், வர்கலா, வங்கம், விசாகப்பட்டினம், பம்பாய், ரத்தினகிரி, இலட்சத்தீவுகள், அந்தமான், நிக்கோபார் தீவு இவற்றில் மிகுதியாகக் காணப்படுகின்றன. பயன்கள். சார்காசம் களைகளின் செல் சுவர்கள் செல்லுலோஸ், அல்ஜீனிக் அமிலம் போன்றவற்றால் ஆனவை. செல்கள் மானிட்டால் என்ற மாவுப் பொருளை உற்பத்தி செய்து சேமித்து வைக்கின்றன. உலர்ந்த சுளைகளின் எடையில் 2% மானிட்டால் உள்ளது. இக்களைகளிலிருந்து பிரித்தெடுக்கக் கூடிய அல்ஜீனிக் அமிலம், பெரும்பாலான உணவுப் பொருள்களில் அவற்றின் தன்மையை நிலைப்படுத்தும் பொருளாக ஆலைகளில் பயன்படுகிறது. மேலும், இக்களைகளில் புரோலின், டைரோசின் மெத்தியோனின், ஐசோலூசின், லூசின் போன்ற அமினோ அமிலங்கள் உட்பட 19 அமினோ அமிலங்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. காற்றில் உலர்ந்த 100 கிராம் சர்காசக் களைகளில் 25 மி. கி. அயோடினும், ஆர்செனிக், போரான், கோபால்ட், தாமிரம்,இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம் போன்ற தனிமங்களும் உள்ளன. சா மிரியோசிஸ்டம் என்ற இனத்தில் எலுமிச்சம் பழத்தில் உள்ளதை விட அதிக அளவில், அதாவது, 100 கிராம் உலராத களை எடையில் 67 கி. கி. அளவில் வைட்டமின் C உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சார்காசம் களைகளை உரமாகவும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றின் தீவனத்தில் ஒரு பகுதியாகவும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. கடற்களைகளில் உள்ள சத்துப் பொருள்கள் எளிதில் நீரில் கரையும் தன்மை கொண்டமையால், அவை எளியவாகவும், விரைவாகவும் தாவரங்களுக்குக் கிடைக்கின்றன. வெண்டை, சீனிக் கிழங்கு, காய்கறி- களின் உற்பத்தி கடற்களைகளின் உரத்தில் பெருகுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. —கோலி, இராமசாமி நூலோதி . P. Burton. The Seashore and Its Wild Life, Orbs Publishing Co., Ltd., London. 1977; A. R. O. Chapman, Biology of Sea Weeds, Edward Arnold, London, 1979. சார்காய்டோசிஸ் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகள் எதுவுமின்றி, பல்வேறு உறுப்புகளில் வளர் கட்டிகளையும், நார்ப் பொருள்களையும் உருவாக்கும் நோய் நிலை சார்க்காய்டோசிஸ் (sarcoidosis) எனப்படும். கிரேக்க மொழியில் சார்க் என்றால் தசை என்று பொருள். இந்நோய் தசை உள்ளிட்ட தோலையும் பாதிக்கிறது. நுண் வலையுடைய அகத்தோலிய மண்டலம் (reticulo endothelial system), நிணநீர் மண்டலம், நிணநீர்ச் சுரப்பிகள், அடிநாச் சதை, எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், நுரையீரல், கல்லீரல், கண், இதயம், தசை, தோல், உமிழ்நீர்ச் சுரப்பி, கண்ணீர்ச் சுரப்பி, சிறுநீரகம், மைய நரம்பு மண்டலம் ஆகியவையும் இந்நோயால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. நோய்க் காரணம் தெரியவில்லை. சார்காய்டோசிஸ், காசநோயைப் போன்று இருக்குமோ என்று கூடக் கருதப்பட்டது. ட்யூபர்குலின் (மாண்டோ) ஆய்வு எதிர்மறையாக இருப்பதால், இந்நோய்க்கும் காச நோய்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என முடிவு செய்யலாம். இந்நோய் பெருமளவில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காணப்பட்டாலும், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மிகுதியாகக் காணப்படுவதில்லை. சார்காய்டு நோயால் மரணமடைபவர்களில் 75 சதவீதத்தினருக்கு கல்லீரல் வீங்கிப் பெரியதாகக் காணப்படுகிறது. எலும்புகளும், மூட்டுகளும் பாதிக்கப்படும் போது, கணுக்கால் மூட்டே பெரிதும் பாதிக்கப்படுகிறது. நுரையீரல்கள் சார்க்காய்டோசிசால் பாதிக்கப்படும் போது, ஹைல நிணக் கட்டிகளும், மையத்தான நிணக் கட்டிகளும் வீங்கிக் காணப்படுகின்றன. இந்நோய், பெரும்பாலும் தானாகவே சீரடைகிறது. பாதிக்கப்பட்ட உறுப்புகளில் நார்ப் பொருள் மிகுதியாக உருவாவதால், பணிகள் பாதிக்கப்படுகின்றன. நோயை முடிவு செய்ய, கிவீம் (Kveim) ஆய்வு உதவுகிறது. பாதிக்கப்பட்ட உறுப்புகளில் இருந்து பெறப்பட்ட பிழிசாற்றைத் தோல் இடை ஊசியாகச் செலுத்தி, நோய் முடிவு செய்யப்படுகிறது. 90% நோயாளிகளிடம் இந்த ஆய்வு உதவுகிறது. இந்நோய்க்கெனத் தனி மருத்துவம் எதுவும் இல்லை. தொடக்க காலத்தில் கார்டிகோஸ்டீராய்டு நல்ல பலனளிக்கிறது. மேலும், தனியான சிறப்பான மருத்துவம் எதுவும் இல்லாததால், பாதிக்கப்பட்ட உறுப்புகளிலிருந்து உருவாகும் அறிகுறிகளைப் பொறுத்தே மருத்துவம் அளிக்கப்படும். —அ. கதிரேசன் சார்கோசா கடல் இது வட அட்லாண்டிக் பெருங்கடலில் ஒழுங்கற்ற முட்டை வடிவப் பகுதியாகும். இதன் மையம் கானரித் தீவுகளிலிருந்து ஏறத்தாழ 3200 கி.மீ. தொலைவில் உள்ளது. கிரீன்விச்சுக்கு மேற்கே 20-40° வட அகலாங்கிற்கு இடையிலும் 35-75° நெட்டாங்கிற்கு இடையிலும் இது அமைந்துள்ளது. பரந்த பெருங்கடலில் இதற்குத் தனி எல்லை (கரை) இல்லை. இதைத் தனித்தறிய, இதில் மிதக்கும் கடல் தாவரங்களே உதவுகின்றன. இதில் கடல் நீரோட்டத்தின் வேகம் மிகக் குறைவாக உள்ளது. சார்கோசா கடலைச் சுற்றியுள்ள வளைகுடாவிலும், வடக்கு நிலநடு நீரோட்டப் பகுதியிலும் கடல் நீரோட்டம் மிகவும் அதிகமாயுள்ளது. சார்கோசா என்னும் கடல் தாவரக்களையால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது. போர்ச்சுகீசிய மொழியில் கடல் களைகளுக்கு வழங்கும் சார்கோசா என்னும் பெயரிலிருந்து, கடலுக்கும் இப்பெயர் வந்துள்ளது. சார்கோசா என்பதற்குத் திராட்சை என்னும் வேறு பொருளும் உண்டு. இக்கடல் தாவரங்களின் சில பகுதிகள் திராட்சை போன்ற மிதவைகளாகக் காணப்படுவதாலும், இப்பெயர் வந்திருக்கலாம். இக்கடலைப் பற்றிய முழு விவரங்களையும் முதன் முதலில் ஆய்ந்தளித்தவர் கிரிஸ்டோஃபர் கொலம்பஸ் ஆவார். 1492இல் இவர் பயணம் செய்தபோது, இக்கடலில் பாறைகளேயில்லை என்பதைக் கண்டறிந்தார். கடலியல் வல்லுநர் இக்கடலைப் பற்றி நன்கு ஆய்வு செய்து, இதன் பரப்பளவு ஏறத்தாழ 5 மில்லியன் ச. கி.மீ.எனக் குறிப்பிட்டுள்ளனர். மேற்கிந்தியத் தீவுகளின் கரைகளிலிருந்து காற்றாலும், அலையாலும் தள்ளப்பட்ட கடற்களைகள் இப்பகுதிக்கு வந்திருக்கலாமெனத் தெரிகிறது. இவற்றில் ஒரு பகுதிக் களைகள் பரந்த கடற்பரப்பில் வளர்ந்து, பல்கிப் பெருகுவதற்கான தகவமைப்பைப் பெற்றிருந்தன. இக்களைகள், விதைகள் இல்லாமலே இனப்பெருக்கம் செய்ய வல்லவை. முதிர் களைகளை அலை நீர் அடித்துச் சிதற விட்டு, இச்சிதறல் மீண்டும் அலைகளால் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வளர்ந்து முதிர்ந்தன. களைகளில் உள்ள காற்று நிறைந்த குமிழ்ப் பகுதிகள், மிதவைகளாகப் பயன்படுகின்றன. சார்காசம் உலகில் பல கடற்பகுதிகளிலும் உள்ளது. இதில் ஒரு வகையை ஜப்பானில் உணவாகப் பயன்படுத்துகின்றனர். சிறு நண்டு, இறால், பார்னகிள் போன்ற உயிரிகள் இக்களைகள் மீதும், ஊடேயும் வாழ்கின்றன. கடலின் ஆழ்பகுதியில் (350 மீ) வாழும் சார்கோசா மீன்கள் உருவத்திலும், அமைப்பிலும் சார்கோசா களைகளை ஒத்துள்ளமையால், இவற்றை எளிதில் கண்டறிய முடிவதில்லை. —கே. கே. அருணாசலம் சார்பிலாக் குவாண்டம் கோட்பாடு ஒளியின் திசை வேகத்தை விடக் குறைவான திசை வேகங்களுடன் இயங்குகிறவையும், ஆக்கவோ, அழிக்கவோ படாதவையுமான பருப்பொருள் துகள்களுக்குப் பயன்படக் கூடிய ஒரு நவீன கொள்கை சார்பிலாக் குவாண்டம் கோட்பாடு (non-relativistic quantum theory) ஆகும். இது பருப்பொருள் மற்றும் மின் காந்தக் கதிர்களுடன் நிகழ்த்துகிற பரிமாற்று வினைகள் பற்றியதாகும். பழங்கொள்கை இயக்கவியலின் நியூட்டன் விதிகளைப் போலவே, தெளிவான எடுகோள்களின் வடிவத்தில் குவாண்டம் கொள்கையின் வழக்கமான கட்டமைப்பைச் சுருக்கமாக விவரித்து விடலாம். சார்பிலாக் குவாண்டம் கோட்பாட்டின் மரபொழுங்கு (formalism) தானாக உருவானதன்று. அது பழங்கொள்கைகளின் ஏற்கத் தக்க அமைப்புள்ள நீட்டிப்பே ஆகும். அலைச்சார்பெண்ணும், நிகழ்தகவு அடர்த்தியும். பருப்பொருளின் அலைப் பண்புகளுடன் சார்பு இணைந்திருக்கிறது; அது அலைச் சமன்பாட்டுக்குக் கீழ்ப்படியும் என்பதே குவாண்டம் கொள்கையின் அடிப்படையாகும். ஒரு முப்பரிமாண வெளியில் இருப்பதிலேயே மிக எளிய அலை, திசையிலி அலையாகும். அது ψ(x,y,z,t) = ψ((r,t) என்ற ஒரே ஒரு சார்பு அலைக் கிளர்ச்சியை முழுமையாகக் குறிப்பிட்டுக் காட்டி விடுகிறது. எனவே ψ(x,y,z,t) என்ற அலைச் சார்பு V(r) எனக் குறிப்பிடப்படுகிற விசை அழுத்தத்தை உடைய, ஒரு விசைப் புலத்தில் இயங்குகிற, ஓர் ஒற்றைத் துகளாக இருக்கக் கூடிய எளிய வடிவம் கொண்ட ஓர் இயற்பியல் அமைப்பைப் பற்றிய முழுமையான தகவலை அளிக்கும். பழங்கொள்கைகளின் மூலம் [ψ(r.t)| அலைச் செறிவுக்கு நேர் விகிதத்திலிருக்கும். அதை நிகழ்தகவு அடர்த்தியாக வைத்துக் கொள்ளலாம். அதாவது x மற்றும் x+dx, y மற்றும் y+dy, z மற்றும் z+dz ஆகிய ஆயங்களுக்கிடையில் பரவியிருக்கிற, dxdydz=dr என்ற பருமமுள்ள வெளியில், t என்ற நேரத்தில் ஒரு துகளைக் காண்பதற்கான நிகழ் தகவு [ψ(r.t)| dr. ψ(r…rt) என்ற சார்பு g துகள்கள் கொண்ட ஓர் அமைப்பை முழுமையாக விவரிக்கும் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளலாம். இந்த அமைப்பில் ஒன்றாம் துகளை dr= dxdydz என்ற பருமத் துண்டிலும், ஏனைய துகள்களை அவற்றுக்கேற்ற பருமத் துண்டுகளிலும் g என்ற துகளை dr =dxdydz என்ற பருமத் துண்டிலும் t என்ற கணத்தில், சம காலத்தில் காண்பதற்கான நிகழ் தகவு |ψ(r…rt)| ஆக இருக்கும். மேலும், வேறு படுத்திப் பார்க்கக் கூடிய g துகள்கள் அடங்கிய ஓர் அமைப்பில் j என்ற துகளை = x, y, z என்ற இடத்தில் உள்ள dr என்ற பருமத் துண்டில் காண்பதற்கான நிகழ் தகவு P(r)dr எனில், P(r)dr=dr[∫{dr…drdrdr…dr X|ψ(r…r.r.r…r)|] (1) இங்கு |ψ(r…r| என்பது 1 முதல் j-1 வரையிலும் j+1 முதல் g வரையிலுமான எல்லாத் துகள் நிலைகளையும் சேர்த்துத் தொகைப்படுத்துகிறது. r =r எனவும் வைத்துக் கொள்ளலாம். இயல்பாக்குதல் (normalization). 1 முதல் g வரையிலான ஒவ்வொரு துகளும் பருப்பொருளியல் வெளியில் ஓர் இடத்தில் இருந்தே ஆக வேண்டும். எனவே பின் வரும் சமன்பாடு g துகள்களின் எல்லா நிலைகளையும் பொறுத்துத் தொகையிடப்பட வேண்டும் என (1) ஆம் சமன்பாடு வற்புறுத்துகிறது. ∫drP(r)=[∫{dr…dr|ψ(r…r| (2a) மேற்காணும் சமன்பாடு நிறைவு செய்யப்பட்டால், அலைச்சார்பு இயல்பாக்கப்பட்டதாகச் சொல்லப்படும். ψ(r…r.t) என்பது பின்வரும் சமன்பாட்டை நிறைவு செய்யும் அலைச் சார்பாக இருக்கலாம். ∫dr…dr|ψ|=C ≠ 1 (2b) ψ—ஆல் குறிப்பிடப்படுகிற நிகழ் தகவுகளை இயல்பாக்கப்பட்ட ψ=Cψexp(iη)எனும் சார்பைப் பயன்படுத்தி முதற் சமன்பாட்டிலிருந்து பெறலாம். இதற்கு C வரம்பிலியாக இருக்கக் கூடாது. அதாவது ψ இருமடித் தன்மையில் தொகைப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். η மெய்யானதாக இருப்பதால் exp(iη) என்ற கட்டக் காரணியைத் (phase factor) தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ψ(r…r இருமடித் தன்மையில் தொகைப்படுத்த முடியாததாக இருக்கும் போது, P(r) என்ற தனி நிகழ்தகவுகள் வரையறுக்கப் படுவதில்லை என்ற போதும், 1 முதல் g வரையான துகள்களை முறையே r முதல் r வரையான நிலைகளில் காண்பதற்கான சார்பு நிகழ்தகவுக்கான ஒரு பயனுள்ள அளவாக |ψ'(r)| இருக்கும். உண்மையான பருப்பொருள் அமைப்புகளைக் குறிப்பிடக்கூடிய அலைச் சார்பைக் கருத்தில் கொண்டால் மட்டும் போதும். . r…r என்ற 3g பரிமாண வெளியில் வரம்பிலியை அணுகும் போது, ψ' மிக மிக மெதுவாகச் சுழியாகிறது அல்லது ஒரு வரையறைக்குட்பட்டதாக இருக்கிறது என்பதால்தான் ψ' (r…r) என்ற ஏற்கக் கூடிய, பருப்பொருள் தன்மையில் சாத்தியமான, அலைச் சார்பு இருமடித் தன்மையில் தொகையிடப்படக் கூடியதாக இருக்கிறது அல்லது அவ்வாறு இல்லை எனக் கற்பித்துக் கொள்ளப்படுகிறது. இந்த இரண்டு வகைகளைச் சேராத மற்ற வகை அலைச் சார்புகள் இருக்க முடியா என்பதற்கு நம்பகமான இயற்பியல் காரணங்களையும், கணிதவியல் காரணங்களையும் கண்டுபிடிக்க முடியும். இருமடித் தன்மையில் தொகையிடப்பட முடியாத ψ'(r) என்ற ஒற்றைத் துகள் சார்புகள் பழங்கொள்கைப் படி கட்டுக்கடங்கி வைக்கப்படாத அமைப்புகளுக்கு நேரானவை, எடுத்துக்காட்டாக, ஒரு ஹைட்ரஜன் அணுவிலிருந்த அயனியாக்கம் செய்யப்பட்ட ஓர் எலெக்ட்ரான் இத்தகைய அமைப்பு ஆகும். இத்தகைய அமைப்புகளுக்கு ψ(r)=∞ψ'=0 என்ற அலைச் சார்பின் வெளிப்படையான பொருள் எந்த ஒரு வரையறைக்குட்பட்ட பருமத்திற்கு வெளியிலும், ஒரு கட்டுப்படாத துகளை நிச்சயமாகக் கண்டு பிடிக்க முடியும் என்பதேயாகும். ψ'(r) போன்ற இத்தகைய அலைச் சார்பு ஓர் எல்லையற்ற பருமத்தில் தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கிற எல்லையற்ற எண்ணிக்கையிலான துகள்களையும் குறிப்பிட முடியும். இத்தகைய துகள்களுக்கு எடுத்துக்காட்டாக, ஓர் எலெக்ட்ரான் மூலத்திலிருந்து பொழிகிற தனியான எலெக்ட்ரான்களின் கற்றையைக் கூறலாம். இந்நிகழ்வில் |ψ'| ஓர் எலெக்ட்ரானைக் காண்பதற்கான சாத்தியக் கூறை விவரிப்பதாகத் தொடர்ந்து நீடித்தாலும், (2b) சமன்பாட்டில் C மதிப்பை வரம்பிலியாக்கி விட்டால், r என்ற ஏதாவது ஒரு புள்ளியில் உள்ள உண்மையான எலெக்ட்ரான் எண்ணிக்கை அடர்த்திக்கு |ψ'(r)| சமமாயிருக்கும் என வைத்துக் கொள்ளலாம். (2b) சமன்பாட்டில் C = ∞ எனில், மொத்த வெளியிலும் உள்ள துகள்களின் எண்ணிக்கை வரம்பிலி எனக் காட்டுவதாகிறது. இந்தக் கருத்துகளை இருமடித் தன்மையில் தொகையிட முடியாத பல துகள் அலைச்சார்புகளாக ψ'(r…r)ஆகியவற்றுக்கும் நீட்டிக்கலாம். தற்சுழற்சி. ஒரு துகள் என்பது கட்டமைப்பு இல்லாத உருப்படி எனவும், அதன் நிலையான r தெரிந்து விட்டால், அதைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரிந்து விடும் எனவும் பழங்கொள்கை இயற்பியல் கற்பித்துக் கொள்கிறது. மேலே விவரித்த மரபொழுங்கும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறது. வழக்கமான நிலைப்பாடு உள்ளவையாகக் கருதப்படுகிற பொருள்களை உருவாக்குகிற அடிப்படைத் துகள்களான எலெக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியூட்ரான்கள் ஆகிய அமைப்புகளுக்கு இந்தக் கருத்து துல்லியமானது அன்று. எனவே மேற்சொன்ன மரபொழுங்கும் முழுமையாகப் போதுமானது அன்று. குறிப்பாக ψ(r,t) என்ற ஒற்றையான அலைச் சார்பெண் ஓர் எலெக்ட்ரான் அல்லது புரோட்டான் அல்லது நியூட்ரானை முழுமையாக விவரிக்க முடியாது. இவற்றில் ஒவ்வொரு துகளுக்கும் ψ(r,t), ψ(r,t) என்ற இரண்டு அலைச் சார்புகள் தேவை. இவற்றை ஒட்டு மொத்தமான இரட்டைக் கூற்றுஅலைச் சார்பான (ψ(r,t) இன் ஆக்கக் கூறுகளாகக் கருதலாம். ஒரு பல கூற்று அலைச் சார்பு தேவைப்படுவதைப் பழங்கொள்கை அடிப்படையில் துகளுக்கு உள்ளிட உரிமைப் படிகள் (degrees of freedom) இருப்பதாக விளக்கலாம். அதாவது துகளின் இருப்பிடம் தெரிந்து விட்டதாலேயே, அதைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெரிந்து விட்டதாக கொள்ளவியலாது. இந்த உள்ளிட உரிமைப் படிகள் உள்ளார்ந்த கோண உந்தம் அல்லது தற்கழற்சியுடன் தொடர்பு கொண்டவை எனக் காட்ட முடியும். எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றுக்கு ½h என்ற தற்கழற்சி உள்ளது. இதில் h=. h என்பது பிளாங்கின் மாறிலி தற்சுழறசியின் விசை ஆக்கக் கூறான Sக்கு ±½ என்ற மதிப்புகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைப்பில் ½ தற்கழற்சியுள்ள ஒரே ஒரு துகள் மட்டுமே இருக்குமானால், |ψ{rt|dr என்பது dr என்ற பருமத்தில் S=+½ மதிப்புள்ள ஒரு துகளைக் கண்டு பிடிப்பதற்கான நிகழ்தகவாகும் என விளக்கலாம். அதே போல் |ψ{rt| என்பது s=-½ மதிப்புள்ள ஒரு துகளைக் கண்டு பிடிப்பதற்கான நிகழ்தகவு அடர்த்தியாகும். (2a) என்ற சமன்பாட்டுக்கு மாறாகப் பின் வரும் இயல்பாக்க நிபந்தனையைப் பயன்படுத்த வேண்டும். ∫dr[|ψ(r.t)|+|ψ(r.t)|=1 (3) இந்த மரபொழுங்கை எளிதாகப் பல துகள் அமைப்புகளுக்கு நீட்டிக்கலாம். எடுத்துக்காட்டாக, அமைப்பில் ½ தற்சுழற்சியுள்ள g துகள்கள் இருக்குமானால், ஒட்டு மொத்த அலைச்சார்பு ψஇல் γ எண்ணிக்கையில் ψ ஆக்கக்கூறுகள் இருக்கும். | ψ{r…r| என்பது + z திசையில் அமைந்த தற்சுழற்சியுள்ள 1 முதல் g வரையான ஒவ்வொரு துகளையும் கண்டுபிடிப்பதற்கான நிகழ்தகவு அடர்த்தியாகும். j=1 முதல் j= 2 வரை கூட்டப்பட்ட இயல்பாக்க நிபந்தனை பின்வருமாறு: ∫dr…dr|r.t|(r…r|=1 (4) அலைச் சார்பெண் இருமடித் தன்மையில் தொகையிடப்பட முடியாததாக இருக்கும்போது உள்ள தகுந்த மறுவிளக்கங்கள் வெளிப்படையானவை. செயலிகள் (operators). பழங்கொள்கை இயக்கவியலில் r என்ற துகள் ஆயங்களும், P என்ற உந்தங்களும் எண்களாகக் கொள்ளப்படுகின்றன. எந்தக் கணத்திலும், அவற்றைத் தனித்தனியாகக் குறிப்பிட முடியும். ஆனால், குவாண்டம் இயக்கவியலில் r,P ஆகியவற்றின் ஆக்கக் கூறுகள் நேர்போக்குச் செயலிகள்; அதே போல் ஆயங்கள். உந்தங்கள் ஆகியவற்றின் f(r,P) என்ற சார்புகளும் நேர்போக்குச் செயலிகள் ஆகும். x என்ற செயலி ψ(x) என்ற அலைச் சார்பை ஆயத்தால் பெருக்கச் செய்கிறது; அதாவது Xψ=xψ எனவும், அத்துகளின் உந்தத்தின் விதிப்படி பரிமாற்றான x-ஆக்கக் கூறுக்கு நேரான செயலி p = (h/i)∂/∂x, அதாவது Pψ=(h/i)∂ψ/∂x எனவும் கற்பிதங்கள் செய்து கொள்ளப்படுகின்றன. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட அலைச் சார்பு ψஇன் மேல் A என்ற நேர்போக்குச் செயல் நிகழும் போது உண்டாகிற ψ'=Aψ என்ற புதிய அலைச்சார்பு ψ குறிப்பிடுகிறது. A, B, C ஆகியவை நேர் போக்குச் செயலிகளாகவும், ψ,ξ ஆகியவை எவையேனும் இரண்டு சார்பெண்களாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டால், பின்வரும் சமன்பாடுகள் பொருத்தமாக இருக்கும். Α(ψ + ξ) = Αψ + Αξ (Α + Β)ψ = Αψ + Βψ (5) ABψ = A(Bψ) மேலும் ξ,ψ ஆகியவற்றைக் கூட்டவோ, சமமாக்கவோ முடியுமானால், அவற்றிலுள்ள ஆக்கக்கூறுகளின் எண்ணிக்கை சமமாகவும், அவை ஒரே வெளி ஆயங்களையும், தற்சுழற்சி ஆயங்களையும் சார்ந்தவையாகவும் இருக்க வேண்டும். ξ = ψ எனில், அவற்றின் நேரான ஆக்கக் கூறுகளும் சமமாக இருக்கும். ஒரு தற்சுழற்சி சாராச் செயலி ஒரு பல கூற்று அலைச் சார்பின் ஒவ்வோர் ஆக்கக் கூறின் மேலும் ஒரே விதமான செயலை நிகழ்த்துகிறது. எடுத்துக்காட்டாக (рψ)= рψ) =(h/i)∂ψ/∂x. தற்சுழற்சி சார்ந்த செயலிகள் மிகவும் சிக்கலானவை. எடுத்துக்காட்டாக 1/2 தற்சுழற்சியுள்ள ஓர் ஒற்றைத் துகள் அமைப்பில், ψ'=sψ என்ற அலைச் சார்பின் ஆக்கக் கூறுகள் பின்வருமாறு இருக்கும். இதில s என்பது தற்கழற்சிச் செயலியின் Z திசை ஆக்கக் கூறைக் குறிக்கிறது. ψ'=½hψ, ψ'=½hψ (6) ψ என்ற ஏதாவது ஓர் அலைச் சார்பிற்கு A(Bψ)= B(Aψ) எனில் A, B ஆகிய செயலிகள் பரிமாற்றுத் தன்மை உள்ளவையாகச் சொல்லப்படும். அப்போது பின்வரும் சமன்பாடு இயலக் கூடியதாகும். AB—BA=0 (7) (AB—BA) என்ற செயலி, A, B ஆகியவற்றின் பரிமாற்றி எனப்படும். A என்ற செயலியில் வலிமைத் தொடராக (power series) குறிப்பிடக்கூடிய f(A) என்ற எந்த ஒரு செயலியும், A உடன் பரிமாற்றம் செய்யும். குறிப்பிட்ட செயல்கள் மூலம் பின்வரும் சமன்பாட்டைப் பெறலாம். இரட்டையான செயலிகள் பரிமாறிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என இது காட்டுகிறது. g துகள்கள் கொண்ட ஓர் அமைப்பில் x, y, z முதல் x, y, z வரையான எல்லாத் துகள் ஆயங்களும் ஒன்றோடொன்று பரிமாற்றம் செய்து கொள்கின்றன . p…p வரையான எல்லா உந்த ஆயங்களும் ஒன்றோடொன்று பரிமாற்றம் செய்து கொள்கின்றன. rஅல்லது p இன் எந்த ஓர் ஆக்கக் கூறும் r…r, வரையான தொலைவுகள், p வரையான தொலைவுகள், p…p வரையான உந்தங்கள் ஆகியவற்றின் எல்லா ஆக்கக் கூறுகளுடனும் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. எந்த ஒரு துகளின் x ஆயமும் அத்துகளின் p, p ஆகியவற்றுடன் பரிமாற்றம் செய்து கொள்கிறது. இவ்வாறே பிறவும் செய்கின்றன. ஹெர்மிசியன் செயலிகள். ξ(r…r), ψ(r…r) என்ற போதுமான அளவில் நன்கு செயல்படும் இருமடித் தன்மையில் தொகையிடக்கூடிய அலைச் சார்பின் எல்லா இரட்டைகளுக்கும் பின்வரும் சமன்பாடு பொருத்தமாக இருக்குமானால், g துகள்களைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அமைப்புக்குப் பொருத்தமாக இருக்கிற A என்னும் செயலி ஹெர்மிசியன் செயலி எனப்படும். இச்சமன்பாட்டில் நட்சத்திரக் குறி இணைச் சிக்கல் எண்ணைக் (complex conjugate) குறிக்கிறது. ξ, Aψ, ψ, Aξ ஆகியவற்றின் எல்லா j ஆக்கக் கூறுகளையும் இணைத்துக் கூட்டியுள்ளது. நன்முறையில் செயல்படும் எல்லா f(r…r) சார்புகளையும் போலவே x,y,z… x,y,x என்ற எல்லாத் துகள் ஆயங்களுமே ஹெர்மிசியன் செயலிகள் ஆகும். இருமடித் தன்மையில் தொகையிடப்படக் கூடிய சார்புகள் வரம்பிலியில் மறைந்து விடுவதை நினைவில் கொண்டு, பகுதி பகுதியாகத் தொகையிட்டால், p…p ஆகியவற்றின் எல்லா ஆக்கக் கூறுகளும் ஹெர்மிசியன்கள் என்பது தெரியும். அதே போல, p…p ஆகியவற்றின் ஆக்கக் கூறுகளில் ஒரு வலிமைத் தொடராகக் குறிப்பிடக்கூடிய f(p…p) என்ற எந்த ஒரு சமன்பாடும் ஹெர்மிசியன் ஆகும். எடுத்துக்காட்டாகத் தற்சுழற்சியற்ற எளிய ஒற்றைப் பரிமாண அமைப்பில் பின்வரும் சமன்பாடு பொருத்தமாக இருக்கும். ξ, ψஆகியவை தொடர்ச்சியானவை என்பது இங்கு தொக்கி நிற்கிறது. அவ்வாறு இல்லாத போது, பகுதி பகுதியாகத் தொகையீடு செய்யும் போது (10) ஆம் சமன்பாட்டின் வலப்பக்கத்தில் கூடுதலான கோவைகள் இடம் பெறும். அதே போல ξ, ψ ஆகியவை தொடர்ச்சியாகவும், எல்லா நிலைகளிலும் தொடர்ச்சியான முதல் வகைக்கெழுக்களைப் (first derivative) பெற்றவையாகவும் இருந்தால் மட்டுமே p 9ஆம் சமன்பாட்டால் வரையறுக்கப்பட்ட, விரும்பக்கூடிய ஹெர்மிசியன் பண்பைப் பெற்றிருக்கும். A,B,C ஆகியவை தனித்தனியாக ஹெர்மிசியன் தன்மை பெற்றிருக்குமானால், பின்வரும் சமன்பாடு சரியாக இருக்கும்: A,B ஆகியவை ஹெர்மிசியன்களாக இருக்கும் போது ,½(AB+BA) என்பது ஹெர்மிசியன் எனவும், A,B ஆகியவை பரிமாற்றம் செய்யக் கூடியவையாக இல்லாவிட்டா,ல் AB,BA ஆகியவை ஹெர்மிசியன்களாக இரா எனவும் 11 ஆம் சமன்பாடு காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, xP. Px ஆகியவை ஹெர்மிசியன்கள் அல்ல. ஆனால், ½(xP + Px) ஹெர்மிசியன் பழங்கொள்கைப்படி xP, Px அல்லது ½(xP + Px) ஆகியவற்றுக்கிடையில் வேறுபாடு இல்லை என்பது உண்மையே. தக்கபடி சமச் சீர்மைப்படுத்தி, 11ஆம் சமன்பாட்டில் உதவியுடன் ஆயங்கள், உந்தங்கள் ஆகியவற்றின் ஆக்கக் கூறுகளில் ஒரு வலிமைத் தொடராகக் குறிப்பிடக்கூடிய, f(r…r;P…P) என்ற எந்த ஒரு பழங்கொள்கைப்படியான சார்பு எண்ணுக்கும் ஒத்த ஒரு குவாண்டம் இயக்கவியல் ஹெர்மிசியன் செயலியை உருவாக்க முடியும். g துகள்கள் கொண்ட ஒரு குவாண்டம் இயக்கவியல் அமைப்பின் மேல் செயல்படும் விசைகள், ஒரு பழங்கொள்கை அமைப்பின் மேல் செயலபடும் விசைகளைப் போன்றவையே என வைத்துக் கொண்டால், ஆற்றல் செயலி பின்வரும் சமன்பாட்டில் உள்ள பழங்கொள்கை ஹாமில்டோனியன் ஆகும். இதில் இயக்க ஆற்றல் V(r…r) என்பது நிலை ஆற்றல்; m என்பது ஒரு துகளின் நிறை. V(r…r)-ஐ விட மிகவும் சிக்கலான நிலை ஆற்றல் செயல்களுடன் கூடிய பழங்கொள்கைப்படி அல்லாத குவாண்டம் இயக்கவியல் விசைகள் அரிதானவை அல்ல. எடுத்துக்காட்டாக, இரண்டு நியூட்ரான்களுக்கு இடையிலான இடைவினைகளில் பின்வரும் சமன்பாட்டில் காணப்படுவதைப் போன்ற வெளிப் பரிமாற்றங்கள் சேர்ந்திருப்பவையாக நம்பப்படும். இதில் J(r) என்பது துகள்களுக்கு இடையிலுள்ள தொலைவான r இன் ஒரு சாதாரணமான சார்பு, P என்பது வெளிப் பரிமாற்றச் செயலி, இது ψஇன் ஒவ்வோர் ஆக்கக்கூறிலும் 1,2 ஆகிய துகள்களின் வெளி ஆயங்களைப் பரிமாற்றம் செய்கிறது. மெய்யான தற்சிறப்பியல்பு மதிப்புகள். A என்ற செயலிக்கான தற்சிறப்பியல்பு மதிப்புச் சமன்பாடு பின்வருமாறு: இதில் α என்பது தற்சிறப்பியல்பு மதிப்பாகும். u(α)என்பது அதற்கு நேரான தற்சிறப்பியல்பின் சார்பு. H என்ற ஆற்றல் செயலிக்கான தற்சிறப்பியல்பு மதிப்புச் சமன்பாடு Hu=Eu என்பது ஒரு சிறப்பான முக்கியத்துவம் கொண்டது. அதற்குக் காலம் சாரா சுரோடிஞ்சர் சமன்பாடு என்று பெயர். α என்ற தற்சிறப்பியல்பு மதிப்புகள் அளவீட்டுப் பலன்களாக இனம் காணப்படுவதால் அவையனைத்தும் கூட்டு எண்களாக இல்லாமல் மெய் எண்களாக இருப்பதும், அவற்றுக்கு நேரான தற்சிறப்பியல்புச் சார்புகள் ஒரு முழுமையான கணமாக அமைவதும் விரும்பத்தக்கன. நடைமுறையில் கருவிகளின் மூலம் எடுக்கப்படுகிற அளவீடுகள் மெய் எண்களாகவே இருக்கின்றன. Aஇன் தற்சிறப்பியல்பு மதிப்பு கூட்டு எண்ணாக இருந்தால், αஇன் ஒவ்வொரு மதிப்பும் A-ஐச் சரியாக அளவிட்டதன் மூலம் கிடைத்த சாத்தியமான பலனைக் குறிப்பிடுவதாகக் கருத முடியாது. மெய்யான அளவுகளைக் கூட்டுக் கோவைகளுடன் இணைக்க முடியும் என்றாலும், மேற்காணும் கூற்றை மறுக்க முடியாது. எடுத்துக்காட்டாக xy தளத்திலுள்ள rஇன் ஆயங்கள் x + iy என்ற கூட்டு வெக்டாராக அமைகின்றன. A என்ற ஒரு ஹெர்மிரியன் செயலியின் இருமடித் தன்மையில் தொகையிடக் கூடிய தற்சிறப்பியல்புச் சார்புகளான u(α)=u) ஐச் சேர்ந்த α என்ற தற்சிறப்பியல்பு மதிப்புகள் மெய்யானவை. (11)ஆம் சமன்பாட்டிலுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி (9)ஆம் சமன்பாட்டில் ξ=ψ = u என அமைத்து, (14)ஆம் சமன்பாட்டைப் பயன்படுத்தினால், பின்வரும் சமன்பாடு கிடைக்கிறது. மேற்காணும் சமன்பாடு α=α* எனக் காட்டுகிறது. எனவே, காணக் கூடிய எல்லாச் செயலிகளும் ஹெர்மிசியன் செயலிகள் என எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு மாறாக, எல்லா ஹெர்மிசியன் செயலிகளும் காணக் கூடிய அளவுகளைக் குறிப்பனவாக வைத்துக் கொள்ளப்படும். இது முதற்கொண்டு எல்லாச் செயலிகளும் ஹெர்மிசியன்களாகக் கொள்ளப்படும். அத்துடன், அனுமதிக்கப்பட்ட தற்சிறப்பியல்புச் சார்புகள் 9 ஆம் சமன்பாட்டின் ஹெர்மிசியத் தன்மையை மாறாமல் வைத்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது. இல்லையேல் (15) ஆம் சமன்பாடு சரியாக இருக்காது. H=T+V என்ற முக்கியமான ஹாமில்டோனியன் செயலிகளின் வகைக்கு, தனித் தன்மை வாய்ந்த தொடர்ச்சியற்ற அழுத்தங்கள் உள்ள போது தவிர u,∂u/∂x ஆகியவை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்னும் எல்லை நிபந்தனையானது. (14) ஆம் சமன்பாட்டிற்குத் தீர்வு காணக் கூடிய, இருமடித் தன்மையில் தொகையிடக் கூடிய ஒரு u அளவுக்கு நேரான தற்சிறப்பியல்பு மதிப்பு மெய்யானதாக இருப்பதை உறுதி செய்கிறது. ஆனால் (2 b) சமன்பாட்டை அடுத்து வரையறுக்கப் பட்டிருக்கிற அனுமதிக்கப்பட்ட அலைச் சார்புகள், இருமடித் தன்மையில் தொகையிட முடியாதவையாக இருக்கலாம். இருமடித் தன்மையில் தொகையிடப்படக் கூடிய u-க்குச் சரியாக இருக்குமாறு 15 ஆம் சமன்பாட்டை அமைக்கும் தொடர்ச்சி நிபந்தனைகள் u, ∂u/∂x முதலியவற்றை நிறைவு செய்கிற நிலையில் Aஇன் தற்சிறப்பியல்புச் சார்புகளான u(α) அனுமதிக்கப்படக் கூடியவையாக இருக்க வேண்டும் என்னும் எளிய, விரும்பத்தக்க தேவையிலிருந்து α என்ற தற்சிறப்பியல்பு மதிப்புகள் மெய்யாக இருக்க வேண்டும் என்பதும், அவற்றுக்கு நேரான தற்சிறப்பியல்புச் சார்புகள் முழுமையான கணமாக அமைய வேண்டும் என்பதும் பெறப்படுகின்றன. ஓர் ஒற்றையான, தற்- சுழற்சியற்ற துகள் அடங்கிய அமைப்புக்கு இந்தக் கற்பிதம் சரியானதாகக் காணப்படும். இதை விடச் சிக்கலான அமைப்புகளுக்கும், இந்தக் கற்பிதம் சரியானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையைக் குவாண்டம் இயக்கவியலின் அளவறுதியான வெற்றிகள் ஏற்படுத்துகின்றன. ஆர்த்தகோனால் தன்மை (orthogonality). இருமடித் தன்மையில் தொகையிடக் கூடிய தற்சிறப்பியல்புச் சார்புகளுக்கு நேரான α தற்சிறப்பியல்பு மதிப்புகள் மாதிரித் தன்மையில் அமைந்த ஒரு கணமாக உருவாகின்றன. அது வரம்பிலியாக இருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தாலும், அதை எண்ணி விடலாம். அது Aஇன் தனித்தனியான கூறுகளின் வரிசையை உருவாக்குகிறது. அனுமதிக்கப்பட்ட, இருமடியல்லாத தன்மையில் தொகையிடக் கூடிய தற்சிறப்பியல்புச் சார்புகள், மாதிரித் தன்மையில் Aஇன் தொடர்ச்சியான கூறு வரிசையை உருவாக்குகிற மெய்யான தற்சிறப்பியல்பு மதிப்புகளின் ஒரு தொடர் கணத்திற்கு நேராக இருக்கின்றன. α என்ற ஒரே மதிப்புக்கு நேரிணையாக u… u வரை தன்னிச்சையான d தற்சிறப்பியல்பு சார்புகள் இருக்குமானால், α என்ற தற்சிறப்பியல்பு மதிப்பு பன்மைக் கூற்றுத் தன்மையுள்ளதாக (degenerate) இருக்கும். அதன் பன்மைக் கூற்றுத்தன்மை அளவு d≥2. ஆனால், இத்தகைய தற்சிறப்பியல்புச் சார்புகளின் எண்ணிக்கை d+1 ஆக இருக்குமானால், அவை தன்னிச்சையாக இராமல் சார்தன்மையுள்ளவையாகவே இருக்கும். c… c வரையான மாறிலிகள் அனைத்துமே சுழிக்குச் சமமாக இல்லாமல், பின் வரும் சமன்பாடு சரியாக இருக்குமானால், ψ… ψ வரையான d சார்பெண்கள் நேர்போக்கில் சார்தன்மையுள்ளவையாக இருக்கும் . cψ+… +cψ=C (16). தனித்தனியாகவோ, தொடர்ச்சியாகவோ, இரு வகையாகவோ இருக்கும் தற்சிறப்பு மதிப்புகள் பன்மைக் கூற்றுத் தன்மையுள்ளவையாக இருக்கக் கூடும். தற்செயலான பன்மைக் கூற்றுத் தன்மையும் ஏற்பட முடியும். எனினும், சாதாரணமாக Aஇன் α தற்சிறப்பியல்பு மதிப்புகளின் பன்மைக் கூற்றுத் தன்மை, Aயுடன் பரிமாற்றம் செய்யக் கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. பன்மை கூற்றுத் தன்மை இல்லாத போது, u(α) தற்சிறப்பியல்பு சார்புகள் α—வினால் குறியிடப்படுகின்றன. அவற்றைப் பின் வரும் சமன்பாட்டில் காட்டியபடி ஆர்த்தோ நார்மல் சமன்பாடுகளை நிறைவு செய்யும் வகையில் தேர்வு செய்து கொள்ளலாம். (17) ஆம் சமன்பாட்டில் δ' குரோனக்கர் குறி எனப்படுகிறது. தொடர்ச்சியற்ற கூறு வரிசையில் (spectrum) உள்ள போது, அது பயன்படுத்தப்படுகிறது. α தொடர்ச்சியான கூறு வரிசையில் அமைந்து விட்டால், δ(α-α') என்ற டிராக்கின் டெல்டா சார்பு பயன்படுத்தப்படுகிறது. α≠0 எனில் δ(α-α')=0 ஆனால் அதற்குப் பின்வரும் சமன்பாட்டால் வரையறுக்கப்படுகிற ஒரு வரம்புடைத் தொகையீடு உண்டு. f(α) சார்புகளின் ஏராளமான வகைகளுக்குப் பின் வரும் சமன்பாடு சரியாக இருக்கும் என δ(α-α') இன் இந்தப் பண்புகள் காட்டுகின்றன. (17)ஆம் சமன்பாடு பொருத்தமாக இருக்கும் போது, u(α), α அளவுப்படியில் இயல்பாக்கப்பட்டதாகச் சொல்லப்படும். எனவே x=0 என்ற நிலையில் δ(α) மிகு ஒருமைத் தன்மையுள்ளதாக இருக்கும் எனத் தோன்றுகிறது. அது Xஇன் ஓர் இரட்டைப்படைச் சார்பாகும். வெவ்வேறு தற்சிறப்பியல்பு மதிப்புகளுக்கு நேரிணையான தற்சிறப்பியல்பு சார்புகள் எப்போதும் ஆர்த்தோ கோனல் தன்மையுள்ளனவாயிருக்கும் என (17) ஆம் சமன்பாடு வலியுறுத்துகிறது. அதாவது, α=α' என உள்ள போதெல்லாம், (17) ஆம் சமன்பாட்டிலுள்ள தொகையீடு சுழிக்குச் சமம் ஆகி விடும். தனித்தனியான α அல்லது α' மதிப்புகளுக்கும் இது பொருந்தும். உண்மையில் தற்சிறப்பியல்பு மதிப்புகள் பன்மைக் கூற்றுத் தன்மை பெற்றிருந்தாலும், பெற்றிரா விட்டாலும், α≠α' என்பதற்கு ஆர்த்தோகோனால் தன்மை உண்டு, α, α' ஆகிய இரண்டுமே தொடர்ச்சியான வரிசையில் அமைந்து விடும் போது, (17) ஆம் சமன்பாட்டின் தொகையீடு குவிவதில்லை. எனவே, அது உண்மையில் வரையறுக்கப்படுவதில்லை. இவ்வாறு δ(α-α') என்ற டெல்டாச் சார்பெண் முதன்மையாக ஒரு பயனுள்ள மரபொழுங்கு எல்லாவிடங்களிலும் (18) ஆம் சமன்பாட்டில் உள்ளதைப் போலவே தொகையிடப்படும். இத்தகைய தொகையீடுகள் (17) ஆம் சமன்பாட்டின் இடப்பக்கத்தில் உள்ளதைப் போன்ற கோவைகளைப் பயனுறு முறையில் குவிக்கவே செய்கின்றன. குவாண்டம் கொள்கையில் பயன்படுத்தும் டெல்டாச் சார்பையோ, (17) ஆம் சமன்பாட்டையோ தீவிரமான கணித அடிப்படையில் நியாயப்படுத்துவது கடினமாகும். α தற்சிறப்பியல்பு மதிப்புகள் மெய்யாக இருக்க வேண்டும் என்றும், அவற்றுக்கு நேரிணையாகத் தற்சிறப்பியல்பு சார்பு முழுமையான கணமாக அமைய வேண்டும் என்றும் உள்ள பண்புகளை உறுதியுடன் நிறுவுவதில் உள்ள இடையூறுகளே இதற்குக் காரணம். ஆனாலும், சார்பியல் அற்ற குவாண்டம் கொள்கையின் கணித நடைமுறைகளின் அடிப்படையான சரியான தன்மையை ஐயப்பட முடியாது. பயன்பாடு. பின்வரும் பகுதிகளில் ஒற்றைப் பரிமாணமுள்ள, தற்சுழற்சியற்ற, x திசையில் மட்டுமே நகரும் துகள்களைப் பற்றிய சில கணக்கீடுகள் விவரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கணக்கீடும் (14)ஆம் சமன்பாட்டிற்கு ஒரு தகுந்த தீர்வைக் கண்டு பிடிப்பதிலிருந்து தொடங்குகிறது. இத்தகைய எளிய அமைப்புக்குக் கிடைக்கிற புலன்கள், இதை விடச் சிக்கலான அமைப்புகளுக்கும் பொருத்தமாகவே இருக்கின்றன. உந்தம்: (14) ஆம் சமன்பாட்டைப் பின்வருமாறு மாற்றி எழுதலாம். இங்கு hk என்பது தற்சிறப்பியல்பு மதிப்பு; வழக்க மாக, தற்சிறப்பியல்பு மதிப்புகள் k என்ற அலை எண்ணால் குறியிடப்படும். (19) ஆம் சமன்பாட்டிற்கான தீர்வுகள் u(x,k)=c(k)eXp[ikx] என்ற வடிவத்தில் இருக்கும். இங்கு c(k) என்பது ஓர் இயல்பாக்கும் சார்பாகும். k மெய்யானதாக இருக்கும் போது, -∞ < x <∞ என்ற எல்லா x மதிப்புகளுக்கும், u(x,k) வரம்புடையதாக இருக்கும். இதன் பின் விளைவாக வரிசை தொடர்ச்சியானதாயும் -∞ ≤ x ≤∞ என்ற எல்லா X மதிப்புகளை உள்ளடக்கியதாயும் இருக்கும். kஇல் ஒரு கற்பனைப் பகுதி இருக்குமானால், அதாவது k=k +ik,k≠ 0 எனில் u(x,k +ik) என்பது ஏற்க முடியாதது. ஏனெனில் X= +∞ அல்லது X= -∞ என்ற நிலையில் அது வரம்பிலியாகி விடுகிறது. |x| ≥ a என்ற நிலையில் தற்சிறப்பியல்பு மதிப்பு ஒத்த வகையில் மறைந்துவிடக் கூடுமானால், அது k என்ற கூட்டளவுக்கு இருமடித் தன்மையில் தொகையிடக் கூடியதாக இருக்கும். அது போல நிகழும் போது, தற்சிறப்பியல்பு சார்பு x = a என்ற நிலையில் தொடர்ச்சியற்றதாக இருக்கும். எனினும், C(k) = 0 என்று இல்லாத வரையில், பின் வரும் சமன்பாடு சரியானதாக இருக்கும். இவ்வாறு u அனுமதிக்கக் கூடியதாயும், தொடர்ச்சியானதாயும் இருக்க வேண்டும் என்கிற தேவை, p இன் தற்சிறப்பியல்பு மதிப்புகள் மெய்யாக இருப்பதை உறுதி செய்கிறது. தொடர்ச்சியான வரிசைக்கு இருக்க வேண்டியதைப் போலவே u(x,k) மதிப்புகள் இருமடித் தன்மையில் தொகையிட முடியாதவையாயிருக்கின்றன. ஒவ்வொரு u(x,k) மதிப்பும் ஒரே திசைவேகத்துடன் இயங்குகிற துகள்களைக் கொண்ட ஒரு கற்றையைக் குறிப்பிடுவதாக வைத்துக் கொள்ளலாம். exp[ikx] என்பது λ=2π/k என்ற அலை நீளமுள்ள மடக்குகளைக் (periodic) கொண்டுள்ளது. எனவே இத்தகைய கற்றை, போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும். உண்மையில் டி பிராக்ளி சமன்பாடுகளுடன் உடன்பட்டுப் போகும் வகையில் p = hk= π என உள்ளது. டி பிராக்ளி சமன்பாடுகளிலிருந்து தொடங்கி, p=∂/∂x என்பது குவாண்டம் இயக்கவியல் உந்தச் செயலி என்று நிறுவ முடியும். ஆனாலும், 8ஆம் சமன்பாட்டிலிருந்து p இன் வடிவத்தை நேரடியாக ஊகித்து உணர முடியும். டி பிராக்ளின் சமன்பாடுகளைப் பயன்படுத்தாமலே, ஒரு பரிமாற்றியின் பண்புகளுக்கும் பாய்சான் அடைப்புக் குறியின் (possion bracket) பண்புகளுக்கும் இடையிலுள்ள வடிவ இசைவுகளிலிருந்து (formal analogy) 8ஆம் சமன்பாட்டைப் பெற முடியும். k- அளவுப்படியில் இயல்பாக்கப்பட்டுள்ள தற்சிறப்பியல்பு சார்புகளைப் பின்வரும் சமன்பாட்டிலிருந்து பெறலாம். (17) ஆம் சமன்பாட்டை ஒத்த இதற்கான சமன்பாடு பின்வருமாறு: இந்தச் சமன்பாடு ஃபூரியரின் தொகையீட்டு மாற்றத் தேற்றத்தின் மேலோட்டமான கூற்றுக்குச் சமமானது என்பதைப் பின்வரும் சமன்பாடுகள் காட்டும். தீவிரமான கணித முறைகளின் மூலம் (22) என்னும் சமன்பாட்டைப் பெற முடியும். குவாண்டம் கொள்கை முறையில் (22a) சமன்பாடு (2π) exp (-ik'x) ஆல் பெருக்கப்பட்டு x முழுமைக்கும் தொகையிடப்படுகிறது. x,k தொகையீடு களின் வரிசைகளைப் பரிமாற்றம் செய்த பின்னர், பின் வரும் சமன்பாடு கிடைக்கிறது. இயக்க ஆற்றல். T = p/2m என்ற இயக்க ஆற்றலுக்கு (14) ஆம் சமன்பாடு பின் வருமாறு மாற்றி எழுதப்படுகிறது. இதில் E என்பது தற்சிறப்பியல்பு மதிப்பு. பின் வரும் சமன்பாடு ஏற்கத் தக்க தீர்வுகளை அளிக்கிறது. இங்கு \sqrt{E}மெய்யானதாக இருக்க வேண்டும். இவ்வாறு வரிசை தொடர்ச்சியாக E=ν முதல் E=+∞ வரை பரவியிருக்கிறது. (25) ஆம் சமன்பாட்டில் உள்ள இருமடி மூலம் நேரினமாகவோ, எதிரினமாகவோ இருக்கலாம். இவ்வாறு Eஇன் ஒவ்வொரு மதிப்புக்கும் இரண்டு தன்னிச்சையான தற்சிறப்பியல்பு சார்புகள் அமைகின்றன. அதாவது பன்மைக் கூற்றுத் தன்மையுள்ளதாகிறது, தற்சிறப்பியல்பு சார்புகளை u(x,E),u(x,E) எனக் குறியிடலாம். E அளவில் இயல்பாக்கப்பட்டால், பின் வரும் சமன்பாடு கிடைக்கிறது. இதில் இருமடி மூலம் எப்போதும் நேரினமானது, u,u ஆகியவை (17)ஆம் சமன்பாட்டைத் தனித் தனியாக நிறைவு செய்கின்றன. ஆனால் u,u ஆகிய கணங்கள் ஒன்றுக்கொன்று ஆர்த்தோகோனல் தன்மை கொண்டவை. k=\sqrt{2mE/h} என்பதை அறிமுகப்படுத்தித் தற்சிறப்பியல்பு சார்புகளை, E,+, - என்ற கீழொட்டுகள் ஆகியவற்றுக்கு k(-∞≤ k ≤ ∞) என்ற ஒரே அளவினால் குறிடலாம். (21a) சமன்பாட்டில் உள்ள u(x,k) ஆகியவை p க்கு மட்டுமன்றி Tக்குமான தற்சிறப்பியல்பு சார்புகள் ஆகும். இதிலிருந்து ஒரு துகளின் P உந்தத்தைச் சரியாகத் தெரிந்து கொண்டு விட்டால், அதன் ஆற்றல் Eஐச் சரியாகக் கண்டுபிடித்து விட முடியும் என்று தெரிகிறது. மேலும் பழங்கொள்கை இயக்கவியலில் உள்ளவாறே E=p/2m =(-P)/2m ஆக இருக்கிறது. dE=(hk/m)dk ஆதலால் (21a), (26) ஆகிய சமன்பாடுகளில் உள்ள இயல்பாக்கங்கள் வேறுபட்டிருக்கின்றன. பின் வரும் சமன்பாட்டிலுள்ள தற்சிறப்பியல்பு சார்புகளும் E அளவில் இயல்பாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தற்சிறப்பியல்பு சார்புகள் (25)ஆம் சமன்பாட்டில் உள்ள u (x,E) க்கு ஒரு மாற்றுக் கணமாக அமைகின்றன. —கே.என்.ராமச்சந்திரன் சார்பின் சிறப்புப்புள்ளி ஒரு வரம்புடைய (அடைப்பட்ட) அரங்கத்தினுள்ளே முடிவுள்ள எண்ணிக்கையுடைய புள்ளிகளைத் தவிர மற்றெல்லாப் புள்ளிகளிடத்தும் ஒரு சார்பு பகுமுறையாகிறது என்றால், அந்தத் தனித்த புள்ளிகள் அச்சார்பின் சிறப்புப் புள்ளிகள் (singular points) எனப்படும். அதாவது ஒரு சார்பு எந்தப் புள்ளியிடத்துப் பகுமுறையாகாதோ, அந்தப் புள்ளி அச்சார்பின் சிறப்புப் புள்ளி எனப்படும். எடுத்துக்காட்டாக f(z) = என்ற சார்பு z=0 என்ற புள்ளியிடத்தைத் தவிர, ஏனைய புள்ளிகளிடத்துப் பகுமுறையாகிறது. இங்கு z = 0, f(z) = சிறப்புப் புள்ளி எனப்படும். இச்சிறப்புப் புள்ளி தனியாக்கப்பட்ட (தனித்த, சிறப்புப் புள்ளி, இன்றியமையாச் சிறப்புப் புள்ளி) m வரிசையுடைய துருவம், நீக்கக் கூடிய சிறப்புப் புள்ளி என வகைப்படுத்தப்படும். தனித்த சிறப்புப்புள்ளி. f(z) என்ற சார்பு, புள்ளி z இன் zஐ நீக்கிய அதன் அண்மையில், ஒவ்வொரு புள்ளியிடத்தும் பகுமுறையாகிறது என்றால், புள்ளி z சார்பு f(z) இன் ஒரு தனித்த (isolated) சிறப்புப் புள்ளி எனப்படும். எடுத்துகாட்டாக f(z) = என்ற சார்பானது z=0, z=i, z= -i என்ற புள்ளிகளை நீக்கிய அதன் அண்மையில் ஒவ்வொரு புள்ளியிடத்தும் பகுமுறையாகிறது. இம்மூன்று புள்ளிகளிலும் f(z) தனித்த சிறப்புப் புள்ளிகளாகும். m வரிசையுடைய துருவம், சார்பு f(z) புள்ளி z=z இடத்து, தன் முதன்மைப் பகுதியில் முடிவுள்ள எண்ணிக்கையுடைய உறுப்புகளை, அதாவது m உறுப்புகளைப் பெற்றிருந்தால், அச்சார்பு அப்புள்ளியிடத்து ஒரு வரிசையுடைய துருவத்தைப் பெற்றிருக்கும்; எடுத்துக்காட்டாக, இன் m வரிசையுடைய துருவம் Z ஆகும். ஒரு வரிசையுடைய துருவம், எளிய துருவம் எனப்படும். எல்லை z → z, f(z) = ∞ என்றால் புள்ளி z,f(z)இன் துருவம் எனப்படும். இன்றியமையாச் சிறப்புப் புள்ளி. f(z) என்ற சார்பு z=z புள்ளியிடத்து அதன் முதன்மைப் பகுதியில் முடிவிலா எண்ணிக்கையுடைய உறுப்புகளைப் பெற்றிருந்தால், அப்புள்ளி z, f(z)இன் தனித்த இன்றியமையாச் சிறப்புப் புள்ளி எனப்படும். எடுத்துக் காட்டாக, என்ற சார்பு z=0 என்ற புள்ளியிடத்து ஒரு தனித்த இன்றியமையாச் சிறப்புப் புள்ளியைப் பெற்றிருக்கிறது. துருவங்கள் அல்லாத ஒவ்வொரு சிறப்புப் புள்ளியும் இன்றியமையாச் சிறப்புப் புள்ளி ஆகும். நீக்கக் கூடிய சிறப்புப் புள்ளி. z=z புள்ளியிடத்து சார்பு f(z) பகுமுறையாகவில்லை என்றாலும், அப்புள்ளியிடத்து சரியான மதிப்பை f(Z)க்கு அமைத்து அப்புள்ளியிடத்துச் சார்பு பகுமுறையாக்கப்படும் என்றால், அப்புள்ளி f(z) இன் நீக்கக் கூடிய சிறப்புப் புள்ளி எனப்படும். எடுத்துக்காட்டாக, என்ற சார்பு z=0 இடத்துப் பகுமுறை என்றாலும், z=0 இடத்து f(z)=1 என்று அமைய f(z), புள்ளி z=0 இடத்துப் பகுமுறையாக்கப்படுகிறது. எனவே Z=0 இங்கு f(z) இன் நீக்கக் கூடிய சிறப்புப் புள்ளி எனப்படும். —கே. இராசேந்திரன் சார்பு பொதுவாக இரு மாறிகள், ஒன்றுக்கேற்ப மற்றது அமைந்தால், அவற்றுக்குள்ள உறவை, சார்பு (function) எனலாம். இத்தகைய சார்பின் தொடர்புடைய பல மாறிகள் நடைமுறையில் உள்ளன. சார்பு பற்றிய கருத்துகள் நீண்ட காலமாக வழக்கில் இருந்து வந்துள்ள போதும், பதினாறாம் நூற்றாண்டில் இயற்பியல் அளவுகளிடையே உள்ள தொடர்புகளை ஆராய முற்பட்ட அறிஞர்களே சார்பு பற்றிய அடிப்படை உண்மைகளைத் தெளிவாக அறிந்தார்கள் என்று கூறலாம். குறிப்பாக இயக்க விதிகளைப் பற்றி விளக்கம் காண முனைந்த போது, s=16t போன்ற விதிகள் சார்புகளாகத் தரப்பட்டன. இங்கே ஒரு துகள், நிலையிலிருந்து கீழே விழும் போது, t எனும் நொடிகளில் கீழே விழுந்த தொலைவு s மீட்டர் ஆகும்; s, t ஆகியன மாறிகள். t மாறுவதற்கேற்ப s பெறும் மாற்றத்தைச் சார்பு வரையறை செய்கிறது. s ஆனது t இன் சார்பு ஆகும். குறியீட்டில் s=f(t) என எழுதப்படும். இங்கே t என்பதைச் சார்பின் தனித்த மாறி (independent variable) என்றும், s என்பதைச் சார்ந்த மாறி (dependent variable) என்றும் குறிக்கலாம். s=16t என்ற சார்பு ஒரு சமன்பாடு அமைப்பில் உள்ளது. இது போலவே r என்ற ஆரையை உடைய வட்டத்தின் பரப்பு A எனில், A=πr என்ற சார்பு சமன்பாடு வடிவத்தில் அமைந்துள்ளது. சார்பினை இரு மாறிகளுக்கு இடையே இயைந்த மதிப்புகளின் பட்டியலாக வெளியிடலாம். … … … … இதனையே (1,16), (2.64), (3,144), (4,256)… என்பன போன்ற வரிசைப்பட்ட இணைகளின் தொகுதியாகக் குறிப்பிடலாம். இத்துடன் சார்பினை வரைபடமாக அமைத்தும் காட்டலாம். x, y ஆகிய மாறிகளைச் செங்குத்து அச்சுகளில் எடுத்துக் கொண்டால் y=f(x) எனுமாறு அமைந்த (x,y) புள்ளிகளின் தொகுப்பு, f என்ற சார்பின் வரைபடமாகும். இயற்பியல், புள்ளியியல் முதலான பல துறைகளிலும் சார்பு ஓர் அடிப்படைக் கருத்தாகவும் பயன் மிக்கதாகவும் அமைந்துள்ளது. கணக் கொள்கை அடிப்படையில் சார்பு பற்றிய விளக்கம். சார்பின் பயன்பாடு சிறப்பானது என்பதைக் கருதியும், கணக் கொள்கை (set theory) கணிதக் கருத்துகளின் வெளிப்பாட்டுக்கு அடித்தளமாக அமைந்துள்ளமை கருதியும், சார்பு பற்றிய கருத்துகளைக் கணக் கொள்கை நோக்கில் அமைத்துக் காணலாம். X என்ற கணத்தில் உள்ள x என்ற உறுப்புக்கு இயைய, Y என்ற கணத்தில் உள்ள y என்ற உறுப்பைச் சில நிபந்தனைகளுக்கேற்ப, தொடர்புபடுத்தும் உறவே சார்பு (function or mapping) எனப்படும். இங்கே முதல் கணமான X அரங்கம் (domain) எனவும், இரண்டாம் கணமான Y இணை அரங்கம் (co-domain) எனவும் கூறப்படும். f என்ற சார்பால் X என்ற உறுப்போடு தொடர்புறுவது y என்ற உறுப்பெனில், f:x→y என எழுதி, y-ஐ f ஐப் பொறுத்து xஇன் பிம்பம் அல்லது மதிப்பு (image or value) எனக் கூறலாம். இதையே y =f(x) என்றும் எழுதலாம். சார்பினால் இரு கணங்கள் தொடர்புறும் போது, இரு நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். (1) அரங்கத்தின ஒவ்வோர் உறுப்புக்கும் ஒரு பிம்பம் கூறப்பட வேண்டும். (2) எந்த உறுப்புக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பிம்பம் கூடாது. ஆனால் இரு உறுப்புகளின் பிம்பங்களும் ஒன்றாக அமையத் தடையில்லை. எ.கா: A={1, 2, 3, 4,…); B = {1,2,3,4,…} எனலாம். f:A → B என்ற சார்பு பின்வருமாறு வரையறை செய்யப்படுகிறது. ஒவ்வோர் எண்ணும் (x) அதன் இரண்டாம் படியோடு (x) தொடர்புபடுத்தப்பட்டுள்ளது, இங்கு f(x) = x எனுமாறு சார்பு f வரையறையாகிறது. {1,2,3,4,…} என்பது அரங்கம். {1.4.9,16,…} ஆகிய பிம்பங்களின் தொகுப்பு, வீச்சு (range) எனப்படும். இங்கே வீச்சு, {1,2,3,4,…} என்ற இணை அரங்கத்தின் ஓர் உட்கணம் (sub set) ஆகும். படம் 1.இல் காண்பது சார்பன்று. ஏனெனில், dக்குப் பிம்பம் கூறப்படவில்லை. சார்பு வகைகள். (அ) f: A → B என்பது சார்பு; Bஇன் ஒவ்வோர் உறுப்பும் fஇன் பிம்பமாக வருமானால், f என்பது மேல் குவி சார்பு (subjective function) எனப்படும். படம். 2 என்பது மேல் குவி சார்பு. ஆனால், படம் 3 என்பது மேல் குவி சார்பு அன்று; ஏனெனில் Bஇன் உறுப்பான 3 ஆனது A இன் எந்த உறுப்பின் பிம்பமும் அன்று. (ஆ) f: A → B என்பது சார்பு; Bஇன் ஒவ்வோர் உறுப்பும் f இன் பிம்பமாக ஒரு முறைக்கு மட்டுமே வருமானால், f என்பது 1-1 (injective) சார்பு எனப்படும். படம் 4 என்பது 1-1 சார்பு. ஆனால் படம் 5 என்பது 1-1 சார்பன்று. ஏனெனில், a,b இரண்டுமே 1 என்ற பிம்பத்தைப் பெற்றுள்ளன. (இ) f மேல் குவி சார்பாகவும், அதே சமயத்தில் 1-1 (bijective) சார்பாகவும் கூறப்படும். இத்தகைய சார்பில் அரங்கமும், துணை அரங்கமும் சம எண்ணிக்கை உறுப்புகளைக் கொண்டு, ஒவ்வோர் அரங்க உறுப்பும் தனித்தனிப் பிம்பங்கள் கொண்டு விளங்கும். நேர், மறை சார்புகள். y=x² என்பது போன்று மாறிகள் நேராகத் தொடர்புபடுத்தப்பட்டிருந்தால், நேர் சார்பு (explicit function) என்றும், x²+y²= 25 என்பது போன்று நேரிடையாகத் தொடர்புபடுத்தப் படாமல் இருந்தால், மறை சார்பு (implicit function) என்றும் கூறப்படும். வளர், குறை சார்புகள். [a.b] என்ற இடைவெளியில் a≤ x ≤ x' ≤b என்ற கட்டுப்பாட்டுக்கு இயைந்து உள்ள x, x' எல்லாவற்றுக்கும் f[x] ≤ f[x'] எனில், y=f[x] என்ற சார்பு [a,b] என்ற இடைவெளியில் வளரும் சார்பு (increasing function) எனப்படும். இவ்வாறே a≤ x ≤ x' ≤ b எனுமாறு அமைந்த x, x' எல்லாம் f[x] >f[x'] எனும் வகையில் அமைந்தால் [a,b] இடைவெளியில் குறை சார்பு (decreasing function) எனப்படும். காட்டாக, [0,1] எனும் இடைவெளியில் y=x² என்பது வளரும் சார்பு; y = குறையும் சார்பு. பல்மாறிச் சார்புகள். இது வரை இரு மாறிகளிடையே உள்ள சார்பு பற்றிக் குறிப்பிடப்பட்டது. ஒரு மாறியின் மதிப்பு, பல மாறிகளின் மதிப்புக்கிணங்கத் தீர்மானமாகக் கூடிய சார்புகளும் உள்ளன. காட்டாக x நீளம், y அகலம், செவ்வகரப் பரப்பு A எனில் A=xy என்ற சார்பினைக் குறிப்பிடலாம். பொதுவாக y=f(x,x…x] என்பது பல மாறிகளில் அமைந்த சார்பு ஆகும். சார்பின் பயன்பாடுகள். பல துறைகளிலும் புள்ளியியல் முறைகளைக் கையாளும் போது, இரண்டும் அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளிடையே உறவு உள்ளதா, அதனை உய்த்துணர முடியுமா, அவ்வாறெனில், அந்த உறவை வரையறை செய்கின்ற சார்பின் வாய்ப்பாடு என்ன, நேர்கோட்டுச் சார்பா அல்லது வளைவரைச் சார்பா, தோராயமாகச் சார்பை கண்டால், தோராய மதிப்பீடுகளுக்கும் நடைமுறை மதிப்பீடுகளுக்குமிடையே விலக்கத்தின் தன்மை என்ன ஆகிய முக்கியமான கேள்விகளுக்கு விடை காணச் சார்பு பற்றிய அறிவு அடித்தளமாகிறது. —கோ. சண்முகசுந்தரம் சார்பு அணு நிறை இயற்கையான நியூக்ளைடு கூட்டமைப்புக் கொண்ட ஓர் அணுவின் சராசரி நிறைக்கும், ஒரு கார்பன்-12 நியூக்ளைடு அணுவின் நிறையில் 12 இல் ஒரு பங்குக்கும் இடையிலான தகவு சார்பு அணு நிறை (realative mass unit) எனப்படுகிறது. கார்பன்-12 இன் சார்பு அணு நிறை = 12 குளோரினின் சார்பு அணு நிறை = 35.453 அணுவிலுள்ள புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றின் எண்ணிக்கையையும், ஆற்றல் உள்ளடக்கத்தையும், அணுக் கருக் கட்டமைப்பையும் பொறுத்துப் பல அணுக்கள் நியூக்ளைடுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜனின் அணு எடை 16 என வைத்துக் கொண்டு, தனிமங்களின் அணு எடையைக் கணக்கிடுவதில் உள்ள பல சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக 1960 இல் சார்பு அணு நிறை கருத்து நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. சார்பு அணு நிறை அலகு டால்ட்டன் (dalton) எனப்படும். அதைச் சுருக்கமாக (amu) என்பர். அதை u என்ற எழுந்தால் குறிக்கலாம். சார்பு நியூக்ளைடு நிறை எனவும் குறிக்கலாம். —கே.என்.ராமச்சந்திரன் சார்பு இயக்க உராய்வியல் சார்பு இயக்கத்திலிருக்கும் இரு திண்மப் பொருள்களின் இடையே உள்ள உராய்வைப் பற்றிக் கூறுவது சார்பு இயக்க உராய்வியல் (tribology) ஆகும். இதில் அதன் அடிப்படைத் தன்மைகளும் தொழில் நுட்பப் பயன்பாடுகளில் உராய்வு விசையின் செயல்களும் விளக்கப்படுகின்றன. வேகமாற்றும் பற்சக்கரம், தாங்கிகள் (bearings) போன்றவற்றில் அவற்றின் பரப்புகளை மேலோட்டமாகப் பார்த்தால், வழவழப்பாகத் தெரியும். நுண்ணோக்கின், அவை சொர சொரப்பான பரப்புடையவையாகத் தோன்றும். இத்தகைய பரப்புகள் ஒன்றோடொன்று தொட்டுக் கொண்டு நகரும் போது, குறிப்பிட்ட சில பகுதிகளில் மீள்நிலை உருக்குலைவோ, மீளாநிலை உருக்குலைவோ தோன்றும். வெளியிலிருந்து செயல்படும் விசைகளைத் தாங்கும் அளவிற்குப் பரப்பு மிகும் வரை மட்டுமே இவை இருக்கும். இவை கீழ்க் காணும் விதிகளுக்குட்பட்டுத் தொடுகோட்டு வழுக்கு விசைகளைச் சீர் செய்கின்றன. இவ்விதிகள் உராய்வு விதிகள் எனப்படும். 1. உராய்வு செயல்படும் சுமைக்கு நேர் விகிதத்திலிருக்கும் (F=μw); 2. உராய்வு தொடும் பரப்பைப் பொறுத்து அமையாது. 3. உராய்வு வழுக்கி ஓடும் வேகத்தைப் பொறுத்து அமையாது என்பவற்றில் முதல் விதி உராய்வை வரையறுத்துக் கூறுகிறது. தேய்வு என்பது தொடு பரப்பில் தோன்றும் பொருள் இழப்பு அல்லது மாற்றத்தைக் குறிக்கும். இந்தேய்வு, இத்தகைய இடைச்செயல் உராய்வு விசைகளாலேயே தோற்றுவிக்கப்படும். தேய்வு என்பதில், பரப்பில் தோன்றும் உருக்குலைவு, பொரிதல், அரித்தல் ஆகியவை அடங்கும். பொரிதல் என்பது மூன்றாம் பொருளின் இடைச் செயலால் தோற்றுவிக்கப்படுவதாகும். வேதிப் பொருள்களால் ஊக்குவிக்கப்படும் தேய்வு, அரித்தல் ஆகும். சுழற்சியாகச் சுமை ஏற்றப்படும் பரப்புகளில் தோன்றும் தேய்வு, சுழல் தேய்வு எனப்படும். பொதுவாக, தேய்வால் ஏற்படும் பொருள் இழப்பின் அளவு செயல்படும் சுமைக்கும் (w), நகரும் தொலைவுக்கும் (x) நேர்விகிதத்திலிருக்கும். பொருளின் கடினத் தன்மைக்கு (p) எதிர் விகிதத்திலுமிருக்கும். V = K எண்ணெய், மசகு (greese) போன்ற பொருள்களைப் பயன்படுத்தி உராய்வு விசை, தேய்வு ஆகியவற்றால் தோன்றும் விளைவுகளை ஓரளவு குறைக்க முடியும். இதற்கு உராய்வுத் தடுப்பு அல்லது உயவாக்கல் எனப் பெயர். இதற்குப் பயன்படும் பொருள்கள் உயவுப் பொருள்கள் எனப்படும். கிராஃபைட், மாலிப்டினம் டைசல்ஃபைடு போன்றவை திண்ம உயவுப் பொருள்கள். எண்ணெய் போன்றவை நீர்ம உயவுப் பொருள்கள், அரைத் திண்மமாக உள்ள மசகு போன்றவையும் உயவுப் பொருளாகப் பயன்படும். உயவுப் பொருள் நீர்மமாக இருந்தால், அது வெளியில் நிலை நீர்ம வடிவில் அழுத்தத்தைத் தோற்றுவிக்கலாம் அல்லது ஒரு நீர்ம வடிவில் தானே அழுத்தத்தைத் தோற்றுவிக்கலாம். இவ்வழுத்தமே இடைநிலையில் செயல்பட்டுச் சுமைக்கு உதவியாக அமைகிறது. வேகமாற்றும் பற்சக்கரங்கள், தாங்கி கள் போன்ற மிகு சுமை அமைப்புகளில் இவ்வகை அழுத்தத்தால் உயவுப் பொருளின் பாகுநிலையில் தோன்றும் மாறுபாட்டையும், பரப்பில் தோன்றும் மீள் உருவ மாற்றத்தையும் எடுத்துக் கொண்டு பகுப்பாய்வு செய்ய வேண்டும். —எஸ். சோமசுந்தரம் நூலோதி. Charles Kittel et.al, .Mechanics, Vol.I, Second Edition, McGraw-Hill Book Company, New York, 1973. சார்பு இயக்கம் அனைத்து இயக்கங்களுமே ஏதாவது ஒரு மேற்கோள் சட்டத்தைச் சார்ந்தே உள்ளன. ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் மேற்கோள் சட்டம் என்பது ஒரு பார்வையாளரைப் பொறுத்து ஓய்வு நிலையிலிருக்கிற ஒன்றுக்கொன்று செங்குத்தான மூன்று ஆயங்களே ஆகும். ஆய்வகத்தில் பல்வேறு வகையான இயக்கங்களைப் பரிசீலிக்கும் போது, இத்தகைய ஒரு மேற்கோள் சட்டம் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பை ஒட்டு மொத்தமாக நகர்த்துகிற பிற இயக்கங்களின் பொதுவான விளைவுகள் கவனிக்கப்படுவதில்லை. இந்த அமைப்பு, தனிமைப் படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. புவியிலிருந்து வெளியேறிச் சற்றுத் தொலைவில் இருக்கிற ஒரு பார்வையாளரின் மேற்கோள் சட்டத்தைப் பொறுத்த வரை, புவி தன் அச்சைச் சுற்றிச் சுழலும் போதும், சூரியனைச் சுற்றி வரும் போதும், அந்தப் பார்வையாளருக்கு ஆய்வக மேற்கோள் சட்டம் புவியுடன் சேர்ந்து நகர்வதாகத் தோன்றும். ஆய்வகத்திலிருந்து பார்க்கும் போது, எளிமையாகத் தோன்றுகிற இயக்கங்கள், புவிக்கு வெளியில் நின்று பார்க்கும் போது, சிக்கலாகத் தோற்றம் அளிக்கும். ஒரு பார்வையாளரைப் பொறுத்து, ஒரு பொருளின் நிலை தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதை இயக்கம் எனலாம். வேறு ஒரு மேற்கோள் சட்டத்தில் இருந்து கொண்டு, அந்தப் பொருளைப் பார்க்கும் வேறு ஒரு பார்வையாளருக்கு அது அசையாமல் இருப்பதாகவும் தோன்றலாம். அல்லது அது வேறு வகையாக இயங்கிக் கொண்டிருப்பதைப் போலவும் தோற்றம் அளிக்கலாம். ஒரு மனிதன், சூரியனில் நின்று கொண்டு, அங்குள்ள ஒரு மேற்கோள் சட்டத்தைப் பொறுத்துக் கோளகளின் இயக்கத்தைக் கவனிப்பதாகக் கற்பனை செய்து கொண்டு கோள்களின் சார்பு இயக்கத்தை (relative motion) நீள்வட்ட ஓடு பாதைகளின் அடிப்படையில் எளிமையாக விளக்க முடியும். புவியிலுள்ள மேற்கோள் சட்டத்தைப் பொறுத்ததாகவோ, சூரியனிலுள்ள மேற்கோள் சட்டத்தைப் பொறுத்ததாகவோ வைத்துக் கொண்டு, கோள்களின் இயக்கங்களை விளக்குவதில் பெரிய வேறுபாடு எதுவும் ஏற்பட்டு விடாது. ஆனால் கெப்ளரின் விளக்கம் புரிந்து கொள்ள வசதியானது. ஒப்புமைத் திசை வேகம். இயக்கம் என்பது ஒரு பார்வையாளரைப் பொறுத்ததே என்பது பழங்காலத்திலிருந்தே ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. கலிலியோ, நியூட்டன் ஆகியோர் உருவாக்கிய இயக்கவியல் கொள்கைகளில் இக்கருத்துகள் தெளிவாக்கப் பட்டன. வெவ்வேறு திசை வேகங்களுடன் இயங்கும் இரண்டு பொருள்களின் சார்பு திசை வேகத்தைக் கணக்கிடும் முறைகள் உருவாக்கப்பட்டன. திசை வேகங்கள் வெக்டார் அளவுகள். ஆகவே, அவற்றை அளவிலும், திசையிலும் ஒத்த நேர் கோடுகளால் குறிப்பிடலாம். அவ்வாறு v, v என்ற திசை வேகங்கள் கொண்ட இரு பொருள்களின் திசை வேகங்கள் விகித நீளமுள்ள நேர் கோடுகளால் முதற் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இப்போது v-உடன் v என்ற வெக்டாரைக் கூட்டினால், v கிடைக்கும். அதாவது v + v = v அல்லது v=v-v எனவே, முதல் பொருளைப் பொறுத்து, இரண்டாம் பொருளின் சார்பு திசை வேகம், v என்ற வெக்டாரினால் அளவிலும், திசையிலும் குறிப்பிடப்படுகிறது. v, v ஆகிய திசை வேகங்கள் ஒன்றுக்கொன்று இணையாக, ஒரே திசையில் இருக்கும் போது, முதல் பொருளைப் பொறுத்து, இரண்டாம் பொருளின் திசை வேகம் v = v-v பொருள்கள் ஒன்றுக்கொன்று இணையாக, ஆனால், எதிர் எதிரான திசைகளில் இயங்குமானால், ஒரு பொருளின் திசை வேகம் மற்றதன் திசை வேகத்தைப் பொறுத்து எதிரினமாக இருக்கும். அப்போது, v=v-(-v) =v+v₁முதல் பொருளைப் பொறுத்து, இரண்டாம் பொருளின் சார்பு திசை வேகம் வலமிருந்து இடப் பக்கமாகத் திசை கொண்டிருந்தால், இரண்டாம் பொருளைப் பொறுத்து முதற் பொருளின் சார்பு திசை வேகம் இடமிருந்து வலப்புறமாகத் திசை கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக இரண்டு உந்துகள் முறையே மணிக்கு 20, 30 கி.மீ. என்ற திசை வேகங்களுடன் ஒரு சாலையில் ஓடிக் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அவை ஒரே திசையில் ஓடிக் கொண்டிருக்குமானால், முதல் உந்தில் உட்கார்ந்து கொண்டு மற்ற உந்தைப் பார்க்கிற ஒரு பயணிக்கு, இரண்டாம் உந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் முன்னேறிச் சென்று கொண்டிருப்பதாகவே தோன்றும். இதற்கு மாறாக, இரண்டாம் உந்திலிருந்து முதல் உந்தைப் பார்க்கிற ஒரு பயணிக்கு, முதல் உந்து மணிக்கு 10 கி.மீ. திசை வேகத்துடன் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதைப் போலத் தோற்றம் கிடைக்கும். இரண்டு உந்துகளும் ஒன்றுக்கொன்று எதிரான திசைகளில் பயணம் செய்து கொண்டிருக்குமானால், ஓர் உந்தில் உள்ள பயணிகள் மற்ற உந்து தமக்கு எதிரான திசையில் மணிக்கு 20+30=50 கி.மீ. திசை வேகத்துடன் சென்று கொண்டிருப்பதாகவே உணர்வர். சாலையோரமாக நின்று கொண்டிருக்கிற ஒருவருக்கு, இரண்டு உந்துகளும் முறையே மணிக்கு 20,30 கி.மீ. திசை வேகத்துடன் பயணம் செய்து கொண்டிருப்பதாகத் தோன்றும். சார்பு முடுக்கம். திசை வேகத்தைப் போலவே, முடுக்கமும் பார்வையாளரின் மேற்கோள் சட்டத்தைப் பொறுத்ததே ஆகும். ஓர் உந்து, ஓய்வு நிலையிலிருந்து புறப்பட்டுத் தன் திசை வேகத்தை அதிகமாக்கிக் கொண்டே போவதாக வைத்துக் கொள்ளலாம். அதிலுள்ள ஒரு பயணியோ, உந்தோ முன்னோக்கி முடுக்கப்படுவதை உணர முடியாது. வெளியில் சாலையோரமாக நிற்கிற மரங்களும், கட்டடங்களும் பின்னோக்கி முடுக்கப்பட்டு விரைந்து செல்வதாகவே அவருக்குத் தோன்றும். ஆனால் சாலை ஓரத்தில் நிற்கிற மனிதர்கள், பயணியும், உந்தும் முடுக்கப்படுவதைக் காண முடியும். இவ்வாறு பயணியின் மேற்கோள் சட்டத்தின்படி, உந்து ஓய்வு நிலையிலிருப்பதாகவும், பிற பொருள்கள் பின்னோக்கி உந்தப்படுவதாகவும் தோன்றுகிறது. புவியின் அசையாத மேற்கோள் சட்டத்தின்படி, பயணியும், உந்தும் முன்னோக்கி உந்தப்படுவதாகத் தோன்றுகிறது. திசை வேகத்தைப் போலவே, முடுக்கமும், திசையும் எண் மதிப்பும் கொண்ட ஒரு வெக்டார் அளவாகும். முடுக்கங்களையும், வெக்டார்களாகக் குறிப்பிட்டு அவற்றின் வெக்டார் வேறுபாட்டைக் கண்டுபிடிப்பதன் மூலம் சார்பு முடுக்கங்களைக் கணக்கிடலாம். —கே.என். ராமச்சந்திரன் நூலோதி. White H.E., Modern College Physics, D. Van Nostrand Company Ltd., London, 1962. சார்பு இயக்கவியல் சார்பியலின் சிறப்புக் கொள்கையுடன் ஒத்து வரும் வகையில் நீட்டிக்கப்பட்ட நியூட்டனின் இயக்கவியல், சார்பு இயக்கவியல் (relativistic mechanics) எனப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு பொதுவாக்கப்பட்ட முடிவுகள், சார்பியலின் பொதுக் கொள்கையில் இணைக்கப்பட்டிருக்கின்றன. சார்பு இயக்கவியலின் ஆற்றல் மற்றும் உந்தத்தின் மாறாமை விதிகள், சார்பியல் குவாண்டம் இயக்கவியலின் வளர்ச்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உயர் ஆற்றல் இயற்பியலில் அவற்றுக்கு முக்கியமான பயன்கள் உண்டு. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியைச் சார்பியலாக்குவது கடினமாகும். தொடர்ச்சியான ஊடகத்திலோ, தனித் தனியான துகள்கள் உள்ள அமைப்பிலோ செயல்கள் இடை விடாமல் நிகழும் இலட்சியச் சூழ்நிலைகளில் அதன் பயன்பாடு மிகவும் எளிது. 1906 இல் மாக்ஸ் பிளாங்க் ஒரு மின் காந்தப் புலத்தில் இயங்குகிற மின் துகளின் இயக்கத்தை விவரிக்க உருவாக்கிய சமன்பாடே முதன் முதலாகச் சரியான முறையில் அமைந்த சார்பியல் இயக்கச் சமன்பாடு ஆகும். பின்னர் ஹெர்மன் மின்கோவஸ்கி என்பார் செலுத்தப்படும் விசையின் மேல் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கி, நான்கு பரிமாணமுள்ள கால-வெளிக் கோட்பாட்டை முதன்முறையாக ஒழுங்காகப் பயன்படுத்தினார். ma = f என்னும் நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியின் சார்பியல் பொதுவாக்கம் பின்வரும் இரண்டு நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும். முதலாவதாகத் துகள்களின் திசை வேகம் குறைவாயிருக்கும் போது, வரம்பு நிலையாக நியூட்டனின் சமன்பாட்டை அது சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து, அது லாரன்ட்ஸ் மாற்றங்களின் போது, அமைப்பை மாற்றிக் கொள்ளாததாக இருக்க வேண்டும். இதை நான்கு வெக்டார் உருவத்தில் குறிப்பிடும் போது, இரண்டாம் நிபந்தனை தானாகவே நிறைவு செய்யப்படும். நியூட்டனின் முதல் விதியை உடனடியாகச் சார்பியல் தன்மையுள்ளதாக நீட்டிக்க முடியும். ஏனெனில், அது இரண்டாம் விதியைத் தெளிவு படுத்த உதவும் நிலைமச் சட்டக் குழுவை வரையறுப்பதில் மட்டுமே பயன்படுகிறது. அந்த நிலைமச் சட்டக் குழு, சார்பியலின் சிறப்புக் கொள்கையிலும் இப்பணியையே செய்கிறது. ma=f என்ற சமன்பாட்டிற்கான சார்பியல் பொதுவாக்கத்தைப் பெறுவதற்கு அதை முதலில் துகளின் உந்தத்தின் அடிப்படையில் மாற்றி எழுத வேண்டும். துகளின் உந்தம் p = m dx/dt. எனவே, f=dp/dt. பிறகு dx, dy, dz ஆகியவற்றுக்குப் பதிலாக dx-ஐப் பதிலீடு செய்ய வேண்டும். இங்கு n = 0,1,2,3,… ஆகிய மதிப்புகளைக் கொண்டது x=ct. m-க்குப் பதிலாக m-ஐப் பதிலீடு செய்ய வேண்டும். m என்பது ஓய்வு நிறை. துகள் உடனடியாக ஓய்வு நிலையிலுள்ள மேற்கோள் சட்டத்தில் அதன் நிறையை அளந்தால், கிடைக்கிற மதிப்பு ஓய்வு நிறையாகும். dt-க்குப் பதிலஈக அதன் நான்கு திசையிலி விரிவாக்கமான dτ=dt \sqrt{1-v^2/c^2} பதிலீடு செய்யப்பட வேண்டும். இதன்படி p = m dx/dτ, [n = 0,1,2,3] இதனால் விளையும் நான்கு வெக்டார் சமன்பாடு dp/dτ = F என்ற வடிவத்தில் அமைகிறது. இதை மின்கோவஸ்கியின் இயக்கச் சமன்பாடு எனலாம். காலம் t அறிமுகப்படுத்தப்படும் போது, மின்கோவஸ்கியின் சமன்பாட்டின் உட்கருத்து வெளிப்படுகிறது. இதன் மூலம் பின் வரும் சமன்பாடுகள் கிடைக்கின்றன. v என்பது துகளின் உடனடித் திசை வேகம். γ = 1+v²/2c² + … எனவே v²/c² புறக்கணிக்கக் கூடிய அளவுக்குச் சிறுமமாகி விடும் போது, n = 1, 2,3 ஆகிய மதிப்புகளுக்கான p = ma என்ற சமன்பாடு, அதை ஒத்த நியூட்டன் சமன்பாடுகளுடன் பொருந்தி விடும். மேலும் ஒரு நான்கு வெக்ட்டாரின் ஆக்கக் கூறுகள் F தானே தவிர f அன்று. நியூட்டன் விசையின் இந்த நான்கு வெக்ட்டார் பொதுவாக்கம் மின்கோவஸ்கி விசை எனப்படுகிறது. n = 0 என்னும் போது (1) ஆம் சமன்பாட்டின் பொருளைப் பின் வரும் நான்கு திசையிலி சமன்பாட்டின் உதவியால் நிறுவலாம். இச்சமன்பாட்டை (1), (2) ஆகிய சமன்பாடுகளிலிருந்து பெற முடியும். இதில் p = (p, p², p³) இச்சமன்பாட்டை. t-ஐப் பொறுத்து வகைப்படுத்தி, (1) ஆம் சமன்பாட்டையும் பயன்படுத்தினால் d(mc²)/dt = cf² =f. v என வரும். எனவே, E=cp=mc² (4) என்ற சமன்பாட்டால் வரையறுக்கப்படும் அளவு ஓர் ஆற்றல் ஆகும். p என்னும் நான்கு உந்தம், ஆற்றல் உந்த வெக்டார் எனவும் பொதுவாகக் கூறப்படும். (3), (4) ஆகிய சமன்பாடுகளின் மூலம் Eஐப் பின் வரும் சமன்பாட்டிலுள்ள சார்பியல் p-இன் அடிப்படையிலும் குறிப்பிடலாம். E என்பது வழக்கமாக மொத்த ஆற்றல் எனப்படும். அதனுடன் ஒரு சார்பியலான இயக்க ஆற்றலை அறிமுகப்படுத்துவது பயனுடையதாக இருக்கும். சுழியானால் இந்த இயக்க ஆற்றலும் சுழியாகி விடும். அதை mc²(γ-1) என எழுதலாம். γ-ஐ விரிக்கும் போது, v²/c²-ஐப் புறக்கணிக்க முடியுமானால், msub}0c²(γ-1) என்பது நியூட்டனின் இயக்க ஆற்றல் கோவையான mv²/2 ஆகச் சுருங்கி விடுகிறது. m≠0 எனும் போது, (2), (4) ஆகிய சமன்பாடுகள், υ = 0 என்ற மதிப்புக்கு E என்ற ஆற்றல் E= mc² என்ற மதிப்பைப் பெற்று விடுகிறது. இந்த ஓய்வு ஆற்றல் ஒரு துகளின் ஓய்வு நிறையுடன் முழுமையாகச் சேர்ந்து வரும் உள்ளார்ந்த ஆற்றலாகும். இந்த ஆற்றலின் நிலைமத் தன்மையை முக்கியமாக ஐன்ஸ்டீன் நிறுவினார். ஆய்வுகளும் அதை விரிவாக உறுதிப்படுத்தியுள்ளன. இது சார்பியல் கொள்கையின் முடிவுகளில் மிக முக்கியமானது ஆகும். சுழியாக முடியாத ஓய்வு நிறை கொண்ட ஒரு துகளின் திசை வேகம் ஒளியின் திசை வேகத்தை நெருங்கி வரலாமே தவிர, அதற்குச் சம்மாகவே முடியாது என்பது (2) ஆம் சமன்பாட்டிலிருந்து கிடைக்கிற இன்னுமொரு முக்கியமான முடிவு ஆகும். சார்பியல் கொள்கைகளிலிருந்து பெறப்பட்டுள்ள பிற முடிவுகளும் இதற்குச் சான்றாகின்றன. இதற்கு மாறாகச் சுழியாகக் கூடிய ஓய்வு நிறையைப் பெற்றிருக்கிற ஃபோட்டான் போன்றதொரு துகளின் திசை வேகம் ஒளியின் திசை வேகத்திற்குச் சமமாகவே இருக்க முடியும். அவ்வாறு இல்லாத போது, கொள்கைகளுக்கும், பட்டறிவுக்கும் மாறான வகையில் துகளின் ஆற்றலும், உந்தமும் சுழியாகி விடும். மேலும் (5) ஆம் சமன்பாடு இத்தகைய துகளின் ஆற்றலும், உந்தமும் E = c|p| என்ற எளிய சமன்பாட்டால் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. m சுழிக்குச் சமமாக இல்லாத போது, இந்த உறவு உயர் ஆற்றல் தோராயமாக (m <<|p|) நிலை பெறுகிறது. துகள்களின் சிறப்பு அமைப்புகள். ஓர் அமைப்பில் உள்ள துகள்கள் இடம், காலம் இவற்றைச் சார்ந்த, தல அளவிலான பரிமாற்று வினைகளில் மட்டுமே பங்கு கொண்டிருக்க முடியும் என்று கட்டுப்படுத்துகிற ஓர் ஊகத்தின் மூலம், நியூட்டனின் மூன்றாம் விதியைச் சார்பியல் தன்மையில் அமைப்பு மாறாத வகையில் உருவாக்க முடிகிறது. மேலும் அமைப்பு மூடியதாக, அதாவது வெளி வினைகளால் தாக்கப்படாததாக இருந்தால், நியூட்டன் எந்திரவியலில் உள்ளது போலவே அமைப்பின் மொத்த ஆற்றலும், உந்தமும் மாறா அளவுகளாக இருக்கும். ΣE,Σp ஆகியவை, மாறிலிகளாக இருக்கும். அதாவது, நான்கு வெக்டார் குறியீட்டு முறையில் பின் வரும் சமன்பாடு நிறைவு செய்யப்படும். துகள்களை உண்டாக்கவும், அழிக்கவும் செய்கிற குவாண்டம் செயல் முறைகளை அனுமதிக்கிற வகையில், இம்முடிவை நீட்டிக்கலாம். அப்போது, அமைப்பில் உள்ள துகள்களின் எண்ணிக்கை மாற வேண்டிய தேவை இராது. (6) ஆம் சமன்பாட்டிலுள்ள Σ என்ற கூட்டல் குறி கணிக்கப்படும் தறுவாயில் உள்ள துகள்களை மட்டுமே குறிப்பிடுகிறது. குறிப்பாக, ஒரு துகளின் சிதை செயல்முறைக்கோ தல அளவிலான ஏதாவது ஓர் இரட்டைத் துகள் மோதல் வகைக்கோ (6) ஆம் சமன்பாட்டைப் பின் வரும் முறையில், மேலும் விரிவாக எழுதலாம். இதில் m இன் மதிப்பு 1 அல்லது 2 ஆக இருக்கும். காம்ப்டன் விளைவு என்ற முக்கியமான, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆய்வில் இச்சமன்பாட்டை 1922 ஆம் ஆண்டிலேயே காம்ப்டன் பயன்படுத்தினார். காம்ப்டன் விளைவில் ஓர் எக்ஸ் கதிர் ஃபோட்டான் ஒரு தன்னிச்சையான எலெக்ட்ரானுடன் மோதும் போது ஏற்படும் சிதறல், ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நீட்டிக்கப்பட்ட சமன்பாடு எண்ணற்ற உயர் ஆற்றல் துகள் வினைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இயற்பியலில் மிகவும் உறுதியாக நிறுவப்பட்டு விட்ட விதிகளில் ஒன்றைக் குறிப்பிடும். குறைந்த ஆற்றல் மோதல்களில் செய்வதைப் போலவே, உயர் ஆற்றல் துகள் வினைகளிலும் ஆய்வக மேற்கோள் சட்டத்தை மட்டுமன்றி, ஆய்வு செய்யப்படுகிற எந்திரவியல் அமைப்பின் நிறை மையம் அல்லது உந்த மைய மேற்கோள் சட்டத்தையும் கையாளுவது துணை செய்யும். அமைப்பின் மொத்த நான்கு உந்தத்தின் இடம் சார்ந்த பகுதி மறைந்து விடுகிறது என்னும் நிபந்தனை நிறை மைய மேற்கோள் சட்டத்தை வரையறுக்கிறது. நிறை மைய மேற்கோள் சட்டத்தின் வழக்கமான பயன்களுடன், அது குறிப்பாகப் பேருயர் ஆற்றல் மோதல்களில் மிகு பயன்பாடு பெற்றுள்ளது. ஆய்வக மேற்கோள் சட்டத்திலும், நிறை மைய மேற்கோள் சட்டத்திலும் 6ஆம் சமன்பாட்டால் வரையறுக்கப்படும் மொத்த நான்கு உந்தம் pஇன் ஆக்கக் கூறுகளை இணைக்கிற லாரண்ட்ஸ் மாற்றங்களின் உதவியுடன் ஆய்வகத்தைப் பொறுத்து அசையாமல் இருக்கிற ஒரு வகைத் துகள்களின் மேல், அதே போன்ற துகள்கள் அடங்கிய கற்றைகளைச் செலுத்தித் தாக்குவதற்குப் பதிலாக, இரண்டு துகள் கற்றைகளை எதிர் எதிராகச் செலுத்தி மோதிக் கொள்ளுமாறு செய்தால், வெளிப்படும் ஆற்றல் தேவையான அளவில் மிகுதியாகும் என்று காட்டலாம். அப்போது ஆய்வகமே ஒரு நிறை மைய மேற்கோள் சட்டமாகச் செயல்படும். துகள்களின் ஆற்றல் மிகுதியாக, விடுவிக்கப்படும் ஆற்றலின் அளவும் மிகும். சேமிப்பு வளையங்கள் எனப்படும் கருவிகளில் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் பாசிட்ரான் கற்றைகளுடன் எலெக்ட்ரான் கற்றைகளும், புரோட்டான் கற்றைகளுடன் புரோட்டான் கற்றைகளும் மோத விடப்படுகின்றன. நிறை மைய மேற்கோள் சட்டத்திற்குத் தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. S என்பது நிறை மைய மேற்கோள் சட்டத்தையும் S என்பது ஒரு தன்னிச்சையான மேற்கோள் சட்டத்தையும் குறிப்பதாக வைத்துக் கொண்டால், மொத்த நான்கு உந்தத்தின் லாரண்ட்ஸ் மாற்றத்திலிருந்து எனக் காட்டலாம். இதில் v என்பது S-ஐப் பொறுத்து Sஇன் சார்பு திசை வேகம். P என்பது 6 ஆம் சமன்பாட்டால் வரையறுக்கப்படுகிற நான்கு வெக்டார். P ஆகியவை, S இல் இந்த நான்கு வெக்டாரின் ஆக்கக் கூறுகள். எனவே, M=P/c என்பதை அமைப்பின் ஓய்வு நிறையாகக் கொள்ளலாம். இச்சமன்பாடுகள் M என்ற ஓய்வு நிறையும், S-ஐப் பொறுத்து v என்ற சார்பு திசை வேகமும் கொண்ட ஒற்றைத் துகளுக்கான (1), (2) ஆகிய சமன்பாடுகளை ஒத்திருக்கின்றன. மேலும் M=ΣK/c² எனக் காட்டலாம். m என்பது துகளின் ஓய்வு நிறை. K என்பது S-ஐப் பொறுத்து ஒரு துகளின் சார்பியல் இயக்க ஆற்றல். ΣK/c² என்பது ஆற்றல் நிலைமத்தின் ஒரு சுவையான வெளிப்பாடாகும். —கே. என். ராமச்சந்திரன் சார்புக் குவாண்டம் கோட்பாடு சார்பியலின் சிறப்புக் கொள்கையுடன் ஒத்துப் போகிற துகள் குவாண்டம் கோட்பாடு சார்புக் குவாண்டம் கோட்பாடு (relativistic quantum theory) எனப்படும். அது ஒளியின் திசை வேகத்திற்கு நெருங்கிய திசை வேகங்களில் தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கிற துகள்களை விவரிக்கும். குவாண்டம் புலக்கொள்கை மட்டுமே நிறைவு தரும் சார்புக் குவாண்டம் கொள்கையாக இருப்பதாக இப்போது உணரப்பட்டிருக்கிறது. ஒற்றைத் துகளின் அலைச் சார்பெண்ணுக்கான சுரோடிஞ்சர் சமன்பாட்டைச் சார்பியலாக்கச் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கின்றன. ஆனாலும், விளக்கங்களை மாற்றியமைத்தால், சார்பியல் அலைச் சார்புகள், ஒரு மின் காந்தப் புலத்தில் துகள் இயக்கங்களின் சில கூறுகளைச் சரியாக விளக்கவே செய்கின்றன.மாறாமை (invariance). |ψ(r,t)|² என்பது ஒரு துகளை r என்ற புள்ளியில் t என்ற நேரத்தில் காண்பதற்கான நிகழ்தகவு அடர்த்தி ஒரு துகளின் ψ(r,t) என்ற அலைச் சார்புக்கான சுரோடிஞ்சர் சமன்பாடு Eψ=H(p,r)ψ ஆகும். (1) இதில் E என்பது ih(∂/∂t) என்ற ஆற்றல் செயலி. p என்பது ih▽ என்ற உந்தச் செயலி. H(p,r) என்பது பழங்கொள்கையிலான ஹாமில்டோனியன். வெற்றிடத்திலுள்ள ஒரு சார்பியலற்ற துகளுக்கு H=p²/2m (1)ஆம் சமன்பாட்டைச் சார்பியலாக்க என்ற சார்பியல் ஹாமில்டோனியனைப் பயன்படுத்துவது எளிமையான வழியாகும். முதற் சமன்பாடு, (2)ஆம் சமன்பாட்டுடன் சேர்ந்து அதிர்வெண், அலை எண் ஆகியவற்றுக்கிடையிலும், அதாவது ஆற்றல், உந்தம் ஆகியவற்றுக்கிடையிலுமான சரியான சார்பியல் உறவை அளிக்கிறது என்றாலும், அந்தச் சமன்பாடு தன்னளவில் சார்பியல் தன்மையில் மாறிலி அன்று. E,p ஆகியவை அதில் சார்பியல் மாறிலிகளாக இடம் பெறாமையே இதற்குக் காரணம். மேலும், ஒரு கடும் சிக்கல் உண்டு. t=0 என்ற நேரத்தில் ஒரு துகள் r=0 என்ற இடத்தில் அமர்ந்திருப்பதாகக் கொள்ளலாம். அதாவது r≠0 என்ற நிலையில் ψ(r,0) =0. (1), (2) ஆகிய சமன்பாடுகளிலிருந்து, அதற்குப் பிந்திய எந்த நேரத்திலும், r இன் அனைத்து மதிப்புகளுக்கும் ψ(r,t)≠0 எனக் காட்ட முடியும். ஆனால், சார்பியல் கொள்கையின்படி, துகள் ஒலியின் திசை வேகமான cஐ விட அதிகமான திசை வேகத்துடன் பயணம் செய்திருக்க முடியாது. எனவே, r>ct எனில், ψ(r,t) சுழிக்குச் சமமாகத்தான் இருக்க வேண்டும். கிளெய்ன்—கோர்டன் (Klein-Gordon) சமன்பாடு. மேற்காணும் குறைகள் இல்லாத ஒரு சமன்பாட்டைக் கிளெய்ன், கோர்டன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். அது பின்வருமாறு: ஆனால், இச் சமன்பாட்டை நிறைவு செய்கிற φ(r,t) ஓர் அலைச் சார்பாக இருக்க முடியாது. அதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புள்ள இரண்டு காரணங்கள் உள்ளன. (அ) (3)ஆம் சமன்பாடு ∂/∂tஇல் இரண்டாம் வரிசை (second order) ஆனது. எனவே φ இன் எதிர்கால மதிப்புகளைக் காண φ(r,0) மட்டுமன்றி ∂φ/∂t உம் தேவை. (ஆ) φஇலிருந்து உருவாக்கப்பட்ட ஓர் அழியாத் தன்மை கொண்ட அளவின் அடர்த்தி பின் வரும் உருவத்தைக் கொண்டே இருக்க முடியும். ஆனால், இது ஒரு நிகழ்தகவு அடர்த்தியாக இருக்க முடியாது. ஏனெனில் இது உறுதியான நேரினம் (definite positive) அன்று φ க்குப் பதிலாக φ*ஐப் பயன்படுத்தும்போது அதன் குறி மாறி விடுகிறது. ஆனால் 4ஆம் தொடர்பில் உள்ள ρ அலகு மின் eஆல் பெருக்கும் போது, அது மின் அடர்த்தியாக ஆகி விடுவதாக விளக்கம் தரலாம். அப்போது m நிறையும், e மின்னும், உள்ள தற்சுழற்சி இல்லாத குவாண்டங்களை உடைய ஒரு குவாண்டமாக்கப்பட்ட புலத்தின் புலச் செயலி (field operator)Φஇன் அணிக்கூறாக (matrix element) ρஐ விளக்க வேண்டியிருக்கும். (3)ஆம் சமன்பாட்டுக்கு Φ(r,t) கீழ்ப்படிகிறது. எனவே அதன் அனைத்து அணிக் கூறுகளும் 3ஆம் சமன்பாட்டிற்குக் கீழ்ப்படியும். இது ஒரு மின்காந்தப் புலத்தைப் பொறுத்தும் உண்மையாயிருக்கும். அங்கு (3), (4), ஆகிய சமன்பாடுகளைப் பின் வருமாறு மாற்றி அமைக்க வேண்டும். இங்கு Φ(r,t), A(r,t) ஆகியவை முறையே மின் காந்தப் புலத்தின் ஸ்கேலார் மற்றும் வெக்டார் மின்னழுத்தங்கள் ஆகும். ஒரு நிலை மின்புலத்தில் ρஇன் தற்சிறப்பியல்பு நிலைகளை (eigen states) வழக்கமான முறையிலேயே கண்டு பிடிக்கலாம். இதன் மூலம் ஓர் அணுக்கருவின் மின்புலத்திலுள்ள π மெசான் போன்ற மின்னுள்ள, ஆனால், தற்சுழற்சியில்லாத துகள்களின் ஆற்றல் மட்டங்களைத் துல்லியமாகக் கணக்கிடலாம். ஆனாலும், துகள் தன்னுடனும் அதைச் சுற்றி இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட துகள்களுடனும் நிகழ்த்துகிற மின்காந்தப் பரிமாற்று வினைகளின் காரணமாக ஏற்படுகிற கதிர்வீசுத் திருத்தங்கள், துகளின் உள்ளார்ந்த கட்டமைப்பு ஆகியவற்றின் விளைவுகளால் ஆற்றல் மட்ட மதிப்புகளில் பிழை ஏற்படலாம். டிராக் சமன்பாடு. டிராக் (1)ஆம் சமன்பாட்டிற்கு ஒரு சார்பியலாக்கப்பட்ட உருவைக் கண்டுபிடித்தார். அது Eஇல் நேர்கோட்டுத் தன்மை கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு நேரின உறுதியான அடர்த்தி உருவமும் (positive definite density) பின்வருமாறு உள்ளது. இதில் β,α ஆகியவை மாறிலிகள். அவை பின் வரும் சமன்பாடுகளுக்குக் கீழ்ப்படிகின்றன. இச்சமன்பாட்டை மீண்டும் செயல்படுத்தினால், பின் வரும் சமன்பாடு கிடைக்கிறது. இது கிளெய்ன்—கோர்டன் சமன்பாடாகும் இதன் மூலம் துகளின் ஆற்றலும், உந்தமும் சரியான முறையில் உறவு கொண்டிருப்பது உறுதியாகிறது. β,αi ஆகிய மாறிலிகள் முழு எண்களாக இருக்க முடியா என்பது வெளிப்படை. ஆனாலும் இவை 4 ×4 கூறுகளுள்ள அணிகளாக இருக்க முடியும். அப்போது ψ என்பது ஒரு நான்கு ஆக்கக் கூறுகள் கொண்ட டிராக் ஸ்பினார் (Dirac spinor) எனப்படும் தற்சுழற்சி வெக்டார் ஆகி விடும். 6 என்ற டிராக் சமன்பாட்டின் சமதளத் தீர்வுகளை எடுத்துக் கொள்ளலாம். ρக்கு p என்ற தற்சிறப்பியல்பு மதிப்பு உள்ளது. 6 ஆம் சமன்பாட்டை Eக்கான ஒரு தற்சிறப்பியல்புச் சமன்பாடாகக் கருதினால், நான்கு தற்சிறப்பியல்பு நிலைகள் கிடைக்கின்றன. ஏனெனில் H ஒரு 4×4 அணியாகும். இந்தத் தற்சிறப்பியல்பு நிலை இரண்டில் E=+\sqrt{(mc)^2 + p^2c^2} என்ற மதிப்பும் ஏனைய இரண்டில் E=-\sqrt{(mc)^2 + p^2c^2} என்ற மதிப்பும் இருக்கும். இவற்றில் இரண்டு நேரின ஆற்றல் நிலைகள், ½h என்ற தற்சுழற்சியுள்ள ஒரு துகளின் இரண்டு தற்சுழற்சி நிலைகளாக விளக்கப்படுகின்றன. உண்மையில் தற்சுழற்சிக் கோண உந்தத்தைக் குறிப்பிடுகிற ஒரு செயலியை αஇலிருந்து அமைக்கலாம். எஞ்சியுள்ள இரண்டு எதிரின ஆற்றல் நிலைகளை விளக்க இயலாது. ஒரு நேரின ஆற்றல் நிலையிலுள்ள துகளை எடுத்துக் கொண்டு கணக்கிடத் தொடங்கினாலும், அது விரைந்து எதிரின ஆற்றல் நிலைகளின் வழியாகக் கதிர் வீசல் மாற்றங்களை அடைந்து விடும். இச்சிக்கலைத் தீர்ப்பதற்காக டிராக் ஒரு கருத்தை வெளியிட்டார். அதன்படி ψஇனால் விரிக்கப்படும் துகள், பாலியின் தவிர்க்கை விதிக்குக் கீழ்ப்படிவதாக இருந்தால், அனைத்து எதிரின ஆற்றல் நிலைகளும் துகள்களால் நிரப்பப்பட்டன எனவும், அவற்றில் மேலும் துகள்கள் நுழைய வழியில்லை எனவும் வைத்துக் கொள்ளலாம். P என்ற குறிப்பிட்ட உந்தத்திற்கு நான்கு ஒற்றைத் துகள் நிலைகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு நேரின ஆற்றல் கொண்ட ஒரு துகளின் தற்சுழற்சி நிலைகள். ஏனைய இரண்டும் -P என்ற உந்தம் கொண்ட ஓர் எதிரின ஆற்றல் துகளைக் கழித்ததால் கிடைக்கும் நிலைகள், இவை இரண்டும் துளை நிலைகள் (hole states) எனப்படும். இவை நேரின ஆற்றலும், துகளின் மின்னுக்கு எதிரான குறியுள்ள மின்னும் கொண்டவை என்பதால், உண்மையில் ஓர் எதிர்த் துகளே. நுகள் எலெக்ட்ரானாக இருந்தால், துளை பாசிட்ரானாகும். ஆனால் எதிரின ஆற்றல் நிலைகள் நிரம்பி விடும் போது, ஒற்றைத் துகள் அமைப்புகள் ஏற்படுவதில்லை. ψஐ ஓர் அலைச் சார்பாகக் குறிப்பிடவும் முடியாது.அதற்குப் பதிலாக இதை ψ என்ற ஒரு புலச் செயலியின் அணி ஆக்கக் கூறாகத்தான் விளக்க முடியும். 5ஆம் சமன்பாட்டிலுள்ள திருத்தங்களுடன் கூடிய 6ஆம் சமன்பாடு ஒரு மின் காந்தப் புலத்தில் உள்ள, ½h தற்சுழற்சி கொண்ட மின் துகளின் தற்சிறப்பியல்பு நிலைகளுக்குச் சரியான மதிப்புகளைத் தருகிறது. கதிர்வீசு திருத்தங்கள், உள்ளார்ந்த கட்டமைப்புகள் ஆகியவற்றின் விளைவுகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாத போதே, இக்கூற்று உண்மையாகும். உள்ளார்ந்த கட்டமைப்பால் ஏற்படும் விளைவுகள் புரோட்டான் போன்ற ஹேட்ரான்களில் மட்டுமே காணப்படும். எலெக்ட்ரான், மியுவான் போன்ற துகள்களில் காணப்படாத கதிர் வீசு திருத்தங்களைச் சேர்க்காமல் எலெக்ட்ரான்களுக்கும், மியுவான்களுக்கும் டிராக் திருப்புத் திறன் எனப்படுகிற காந்தத் திருப்புத் திறனுக்குச் சரியான மதிப்பைக் கணக்கிட முடிகிறது என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த உண்மையாகும். ½h தற்சுழற்சியுள்ள, நிறையில்லாத ஒரு துகளுக்கு, டிராக்கின் (6ஆம்) சமன்பாட்டில் β இடம் பெறுவதில்லை. αi, 2x2 அணிகளாகவே இருப்பதால், βஐப் புறக்கணித்துவிட்டு, 7ஆம் சமன்பாடுகளில் உள்ள நிபந்தனைகளை நிறைவு செய்து விடலாம். அப்போது துகளும், அதன் எதிர்த் துகளும் ஒரே ஒரு தற்சுழற்சி நிலை மட்டுமே கொண்டவையாயிருக்கும். ஆனால் துகள் ½h என்ற தற்சுழற்சியைப்பெற்றிருக்கும் எனக் காட்ட முடியும். துகளின் தற்சுழற்சி அதன் உந்தத்திற்கு இணையாகவும், எதிர்த் துகளின் தற்சுழற்சி அதன் உந்தத்திற்கு எதிரிணையாகவும் மட்டுமே இருக்கும். ஒரு தலைகீழாகப் புரட்டப்பட்ட ஆய அமைப்பில், இந்தக் கூற்றுகள் நேர்மாறாக இருக்கும். இவ்வாறு இரட்டை ஆக்கக் கூறுகள் கொண்ட டிராக் சமன்பாடு வெளி (space) தலை கீழாகும் போது, மாறாமல் இருப்பதில்லை. Ύ, Ύ என்ற இரண்டு நியூட்ரினோக்கள் மட்டுமே ½h தற்சுழற்சியுள்ள நிறை இல்லாத துகள்களாகத் தெரிகின்றன. அவை மேற்காணும் சுருக்கமான டிராக் சமன்பாட்டை நிறைவு செய்கின்றன. இதை விட, அதிகமான தற்சுழற்சியுள்ள துகள்களுக்கான அலைச் சமன்பாடுகளும் இருக்கின்றன. 1h என்ற தற்சுழற்சியுள்ள, நிறையில்லாத துகள்களுக்கான மாக்ஸ்வெல் சமன்பாடுகளை இதற்குச் சிறந்த சான்றுகளாகக் கூறலாம். தற்சுழற்சி அதிகமாக, அதிகமாக அச்சமன்பாடுகள் அதிகச் சிக்கலானவையாகின்றன. தற்சுழற்சி ≥1h ஆக இருக்கும் போது, ஒரு கட்டமைப்பில்லாத துகள் மின் காந்தப் புலத்துடன் நிகழ்த்துகிற பரிமாற்று வினை ஒப்பற்றதாகவோ, தனித்தன்மை வாய்ந்ததாகவோ தெரிவதில்லை. எனவே காந்தத் திருப்புத் திறன் கணக்கிடப்படுவதில்லை. —கே.என். ராமச்சந்திரன் சார்புடைப் பகுப்பாய்வு இடத்திய நேரியல் வெளி (topological linear space), அதன் இணையிய வெளி (conjugate space) மற்றும் இவ்வெளிகளுக்கிடையே உள்ள தொடர்ச்சியான செயலிகள் பற்றிய கணிதவியலின் ஒரு பகுதி, சார்புடைப் பகுப்பாய்வு (functional analysis) எனப்படும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வோல்டெரா, ஃபிரெட்ஹோம் ஆகியோர் தொகையீட்டுச் சமன்பாடுகளில் சிலவற்றிற்குத் தீர்வு கண்டனர். தொடர்ந்து, ஹில்பெர்ட், ரீஸ் போன்றோர் இச்சமன்பாடுகள் வரையறுக்கப்பட்ட இடத்திய நேரியல் வெளியினைப் பற்றி மேலும் பல ஆய்வுகள் செய்தனர். இவற்றைத் தவிர, லெபெக்கும், வேறு சிலரும் தொகையீட்டுக் கோட்பாட்டை விரிவுப்படுத்தியதன் விளைவாக, இடத்திய நேரிய வெளியில் எண்ணற்ற மெய்யான எடுத்துக்காட்டுகள் கிடைத்தன. சார்புகளையுடைய ஒரு வெளியில் வரையறுக்கப்படும் சார்பு, சார்புடை (functional) எனப்பட்டது. பகுப்பாய்வில் சிறப்பிடம் பெற்ற சார்புடைப் பகுப்பாய்வு, நேரியல் பகுதி வகையீட்டுச் சமன்பாடுகள் (linear partial differential equation), பாய்வு (harmonic analysis), பரவல் கோட்பாடு, குவாண்டம் இயக்கவியலின் அடிப்படைத் தத்துவம் போன்றவற்றின் கருத்தியல் சட்டமாகக் கருதப்பட்டது. —பங்கஜம் கணேசன் சார்பு மின்னியக்கவியல் ஒளியின் திசை வேகத்துடன் மின் துகள்கள் இயங்கும் போது, அவற்றுக்கும் மின் மற்றும் காந்தப்புலங்களுக்கும் இடையில் நிகழும் பரிமாற்று வினைகளைப் பற்றி விவரிப்பது சார்பு மின்னியக்கவியல் (relativistic electrodynamics) எனப்படும். அதைச் சாதாரணமாக நடைமுறையில் உள்ள மின்னியல் மற்றும் காந்தவியல் விதிகளின் விரிவாக்கமாகக் கொள்ளலாம். உயர் ஆற்றல் துகள் முடுக்கிகளிலும், உயர் மின்னோட்டமும், உயர் மின்னழுத்தமும் பங்கு பெறுகிற வால்வுகளிலும், வெற்றிடக் குழாய்களிலும், மின் காந்தக் கதிர் வீசல்களிலும், சார்பு மின்னியக்கவியல் கொள்கைகள் குறிப்பிடத்தக்கவை. மின்கள், மின்னோட்டங்களுக்கும் அவற்றால் உண்டாக்கப்படும் மின் புலங்கள் மற்றும் காந்தப் புலங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பை மாக்ஸ்வெல் சமன்பாடுகள் காட்டுகின்றன. இத்தகைய புலங்களில் நுழையும் மின் துகள்களும், மின்னோட்டக் கூறுகளும் லாரண்ட்ஸ் விசையால் தாக்கப்படுகின்றன. அதன் பிறகு, அப்புலங்களில மின் துகள்களும், மின்னோட்டக் கூறுகளும் இயங்குவது உயர் வேகங்களுக்கான சார்பியல் திருத்தங்களுடன் கூடிய நியூட்டனின் இயக்க விதிகளின்படி நிகழ்கிறது. மாக்ஸ்வெல், சார்பு மின்னியக்கவியலுக்கான நான்கு சமன்பாடுகளை அளித்ததுடன், இடப்பெயர்ச்சி மின்னோட்டம் என்ற கருத்தையும் அறிமுகப்படுத்தினார். அச்சமன்பாடுகள் முதலில் அசைவற்ற அல்லது ஏனைய கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளின் அடிப்படையில் பெறப்பட்டாலும், காலத்தோடு தன்னிச்சையாக மாறக் கூடிய புலங்களுக்கும் அச்சமன்பாடுகள் பொருந்தும் என்று அவர் உணர்த்தினார். q என்ற மின் ν என்ற திசை வேகம் கொண்ட ஒரு துகளின் மேல் E என்ற மின்புலமும் B என்ற காந்தப் புலமும் ஏற்படுத்தும் விளைவை விவரிக்கும் லாரண்ட்ஸ் விசை பின்வரும் சமன்பாட்டால் தரப்படுகிறது. F=q(E+vXB) (1) மின்னூட்ட அடர்த்தி p, மின்னோட்ட அடர்த்தி J எனில் தொடர் நிலைச் சமன்பாட்டின்படி, மின்னின் p மின்னின் ஓய்வு நிறை m. ஒளியின் திசை வேகம் c எனில் நியூட்டனின் இரண்டாம் விதியின்படி லாரன்ட்ஸ் விசையின் X திசை ஆக்கக் கூறு F=q(E+vB-VB,y,z திசைகளிலுள்ள ஆக்கக் கூறுகளுக்கும் இது. போன்ற சமன்பாடுகளைப் பெறலாம். பல்வேறு குழ்நிலைகளில் மின்களின் புலங்களையும், இயக்கங்களையும் கணக்கிடுவதற்கு உதவுகிற சமன்பாடுகளின் ஒரு தன் நிலைப்பாடுள்ள கணத்தை மேற்காணும் சமன்பாடுகள் அளிக்கின்றன. மின்களும் மின்னோட்டங்களும் இல்லாத போது E, B ஆகிய புலங்கள் மீட்டர் / நொடி என்ற அலைத் திசை வேகமுள்ள ஓர் அலைச் சமன்பாட்டை நிறைவு செய்கின்றன என்பது மாக்ஸ்லெல் சமன்பாடுகளின் நேரடியான பின் விளைவு ஆகும். இது ஒளியின் திசை வேகத்திற்குச் சமமாயிருப்பதைக் கண்ட மாக்ஸ்வெல், மின்சாரம் காந்தத்துவம் ஆகியவற்றைப் போலவே ஒளியும் ஒரு மின்காந்த நிகழ்வே என்ற கருத்தை ஊகித்தார். மாக்ஸ்வெல் சமன்பாடுகளின் மாறாமை. மாக்ஸ்வெல் சமன்பாடுகள் சார்பியல் நிலைகளில் மாறாமலிருப்பதன் காரணமாகவே, அவற்றைச் சார்பு மின்னியக்கவியல் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்த முடிகிறது. சீரான வேகத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மேற்கோள் சட்டமானாலும், ஓய்வு நிலையில் உள்ள ஒரு மேற்கோள் சட்டமானாலும், அவற்றைப் பொறுத்து மாக்ஸ்வெல் சமன்பாடுகள் செல்லுபடியாகின்றன என்பதே அவற்றின் மாறாமைப் பண்பின் அறிகுறி ஆகும். ஆனால் ஒய்வு நிலையில் உள்ள ஒரு சட்டத்தின் காந்தப்புலம், இயங்குகிற ஒரு சட்டத்தில் ஒரே சமயத்தில் காந்தப்புலமாகவும், மின்புலமாகவும் காணப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, வெளியிலிருந்து செலுத்தப்படும் ஒரு நிலையான மின்புலத்திலும், காந்தப்புலத்கிலும் ஓர் எலெக்ட்ரான் இயங்குவதாகக் கொள்ளலாம். லாரன்ட்ஸ் விசை மறைந்து போகிற வகையில் அதன் திசை வேகம் அமைந்திருக்கும் நிலையில் பின் வரும் சமன்பாடுகள் பொருத்தமாக இருக்கும். V என்ற திசை வேகத்துடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு மேற்கோள் சட்டத்தில், மின் துகள் அசையாமல் ஓய்வு நிலையில் இருப்பதைப் போலத் தோன்றும். எனவே, அதன் மேல் மின்புலம் மட்டுமே செயல்பட்டு, F = q E' என்ற விசையை அது உணரும். எலெக்ட்ரான் ஓய்வு நிலையில் இருப்பதால், F' என்னும் விசை மறைந்து, அதன் காரணமாக E' என்ற மின்புலம் மறையும். B' என்ற ஒரு காந்தப்புலம் மட்டும் எஞ்சியிருக்கும். எனவே ஒரு லாரன்ட்ஸ் மாற்றம் ஏற்படும் போது, மின்புலங்களும், காந்தப்புலங்களும் மாறியாக வேண்டும் என்று தெரிகிறது. எல்லா விதமான மேற்கோள் சட்டங்களைப் பொறுத்தும் மாக்ஸ்வெல் சமன்பாடுகள் ஒரே மாதிரியாகத் தோன்றுகிற வகையில் புலங்கள் கலந்து விடுகின்றன. சார்பியல் தன்மையான கற்றைகள். புலங்கள் மாற்றம் அடைகிற விதம் காரணமாக இணையான பாதைகளில் பெரும் திசை வேகங்களுடன் பாய்ந்து கொண்டிருக்கிற மின்களுக்கிடையிலுள்ள விலக்கு விசை குறைகிறது. z திசையில் r திசை வேகத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிற ஒரு மேற்கோள் சட்டத்தில் மின்கள் ஓய்வு நிலையில் இருக்கும் போது, காந்தப் புலம் மறைந்து விடுகிறது. ஒரு மின்துகளால் பிறி- தொரு மின் துகள் இருக்கும் இடத்தில் தோற்றுவிக்கப்படும் மின்புலத்தைப் பின்வரும் சமன்பாடு அளிக்கிறது. இங்கு Ύ என்பது இரு மின்துகள்களுக்கு இடையில் உள்ள தொலைவு ஆகும். ஓய்வு நிலையில் உள்ள ஓர் அமைப்பில் புலங்கள் பின்வருமாறு மாற்றம் அடைகின்றன. மின் துகள்களுக்கிடையிலான விசை F, எனில் இவ்வாறு இவ்விசை, மின் விசையை விட ஒரு (Ύ²/c²) மடங்கு குறைவாயும், மின்கள் ஓய்வு நிலையில் உள்ள போது இருக்கிற மின் விசையை விட xx-smaller|{\sqrt{1-{\frac{\upsilon^2}{c^2 மடங்கு குறைவாகவும் இருக்கிறது. மேலும் ஓர் எடுத்துக்காட்டைக் காணலாம். Z திசையில், υ திசைவேகத்துடன் பாய்ந்து கொண்டிருக்கும் மின்களாலான ஓர் உருளை வடிவ மின்னோட்டக் கற்றையை எடுத்துக் கொள்ளலாம். அதில் I என்ற மின்னோட்டம் பாய்ந்தால், அந்த உருளையின் வெளிப்புறமாக உள்ள மின்களின் மேல் செயல்படும் விசையைக் கணக்கிடலாம். உருளையின் மேற்பரப்பில் (r=a) செயல்படும் தொடுவியலான காந்தப்புலம் B எனில் ஆம்பியரின் விதிப்படி, இதில் μ என்பது வெற்நிடத்தின் காந்த உட்புகு திறன் μ=1.257 × 10 ஹென்றி / மீ. மின்னின் இடையறாத்தன்மை காரணமாக அலகு நீளத்திற்கான மின் அடர்த்தி τ = 1/υ (10) அப்போது காஸ் விதியின்படி, உருளையின் மேற்பரப்பில் ஆரத்திசை மின்புலம் இதில் ε என்பது வெற்றிடத்தின் மின் அனுமதிப்புத் திறன். அதன் மதிப்பு 8.85 × 10 பாரட்/மீ. உருளையின் மேற்பரப்பில் உள்ள ஒரு மின் துகளின் மேல் செயல்படும் விசை F எனில், துகள்கள் ஏறத்தாழ ஒளியின் திசை வேகத்துடன் இயங்கும் போது காந்தப்புலம், மின்புலத்தை ஏறத்தாழ முழுமையாகவே மறையச் செய்து விடுகிறது என்பது மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. இந்த மின் துகள் வடிவமைப்பின் நீளவாட்டு அல்லது Z திசையிலான இயக்கத்துடன் ஒப்பிடுகையில், அதன் குறுக்குத் திசை இயக்கம் மெதுவானதே. குறுக்குத் திசை இயக்கம் பின் வரும் சமன்பாட்டால் குறிப்பிடப்படுகிறது. இதில் மின் துகளின் சார்பியல் நிறை இவ்வாறு மின்கள் ஓய்வு நிலையில் இருக்கும் போது, அவற்றின் இயக்க நிலையில் இருப்பதை விடக் குறுக்கு இயக்கம் பெரிதும் குறைக்கப்பட்டு விடுகிறது. வெளிமின் (space charge) விசைகளின் விளைவாகப் பரவலாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிற மிகு வேகத் துகள் கற்றைகளில் இக்கருத்துப் பயன்படுகிறது. காட்டாக நேர் கோட்டுத் துகள் முடுக்கிகளில் [1-(ν²/c²)] இன் மதிப்புச் சிறியதாயிருப்பதால் துகள்களின் குறுக்குத் திசைப் பரவலைப் புறக்கணித்து விடலாம். எலெக்ட்ரான்களின் ஓய்வு நிலை அமைப்பில் துகள் முடுக்கி, லாரண்ட்ஸ் சுருக்கத்தின் காரணமாக மிகச் சிறியதாகத் தோற்றம் அளிக்கிறது. எனவே, கற்றையைப் பிரிக்க வெளி-மின்களுக்குப் போதுமான வாய்ப்பு இல்லாமல் போகிறது. சார்பியல் தன்மையில் இயங்குகிற மின் துகள் கற்றைகள் விரியாமலிருப்பது, துகள் முடுக்கிகளில் மட்டுமே நிகழும் என்பதில்லை. உயர் மின்னோட்ட உயர் மின்னழுத்த வால்வுகளில் எலெக்ட்ரான் ஒளியியல் தன்மைகளை ஆராயவும் இவ்விளைவைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கருப் பிணைவுக் கருவிகளிலும் இவ்விளைவு இன்றியமையாததாக இருக்கக் கூடும். அயனிக் கற்றைகள் குறுக்குத் திசையில் பரவும் போது, எதிர்த் திசையில் எலெக்ட்ரான் கற்றைகளைச் செலுத்தி, அயனிக் கற்றைகளைக் குவிய வைக்கிற கருவிகளைப் பற்றியும் ஆய்வு நடந்து வருகிறது. எலெக்ட்ரான்கள் காரணமாக ஓரளவு மின்துகள்கள் நடுநிலையாக்கப்பட்டு, குவியப்படுத்தும் மின் விசை குறைந்து போனாலும், குவியப்படுத்தும் காந்த விசை மாறு- வதில்லை. எனவே, நிகரமாக ஒரு குவியப்படுத்தும் விளைவு இருக்கவே செய்யும், அத்துடன் பல சமயங்களில் எலெக்ட்ரான்களைப் பயன்படுத்தி, வெளி மின்னை நடுநிலையாக்கி விடுவதன் மூலம் நேர் மின் அயனிக் கற்றைகள் வெளி மின்னால் பிரிக்கப்படுவதைக் குறைக்க முடிகிறது. ஏனைய சார்பியல் நிகழ்வுகள். சார்பு இயக்கவியலின் விளைவாகத் துகள்களுக்கும் புலங்களுக்கும் இடையிலான பரிமாற்று வினைகளுக்கான பல வாய்ப்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. சார்பியல் தன்மையில் இல்லாத, வழக்கமான பல நிகழ்வுகளுக்கான சமன்பாடுகளில் சார்பியல் முறைக் கணக்கீடுகள், சிறிய ஆனால் முக்கியமான திருத்தங்களைச் சேர்த்திருக்கின்றன. வேறு பல நிகழ்வுகளில் சார்பியல் தத்துவங்கள் சிறிய திருத்தங்களைச் சேர்க்காமல் இருப்பினும், முக்கியமாகப் பங்கேற்பனவாகவும் உள்ளன. ஒரு மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்டுக்கு மேற்பட்ட ஆற்றலுள்ள எலெக்ட்ரான் கற்றைகள், ஒரு பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்டுக்கு மேற்பட்ட ஆற்றலுள்ள புரோட்டான் கற்றைகள் போன்றவற்றை முடுக்குகிற துகள் முடுக்கிகள் இதற்குச் சான்றுகளாகும். நேர்கோட்டுத் துகள் முடுக்கிகள். பெரும்பாலான எலெக்ட்ரான் நேர் கோட்டுத் துகள் முடுக்கிகளில், மிகவும் பெருமளவு சார்பியல் தன்மை கொண்ட, அதாவது ஒளியின் திசை வேகத்தை நெருங்குகிற திசை வேகங்களைக் கொண்ட எலெக்ட்ரான்கள் உண்டாக்கப்படுகின்றன. வேகமாகச் செல்லும் எலெக்ட்ரான்களுக்கு இடையிலுள்ள பரிமாற்று வினை அவற்றுக்கிடையிலுள்ள விலக்கு விசையைப் பன்மடங்கு குறைத்து விடுகிறது. எனவே எலெக்ட்ரான்களின் குறுக்கு இயக்கத்தைக் கட்டுப்படுத்த, வேறு கருவியின் உதவி தேவை இல்லை. எலெக்ட்ரான்களின் உயர் நிறை காரணமாக, அவற்றின் நீள வாட்டு இயக்கமும் தணிக்கப்படுகிறது. நீளவாட்டு நிலைத் தன்மைக்குப் பொறுப்பான கட்ட அதிர்வுகள் மிகவும் மெதுவாகி விடுகின்றன. அனைத்து எலெக்ட்ரான்களும் C என்ற சமமான திசை வேகத்துடன் இயங்குவதாக வைத்துக் கொள்ளலாம். அதனால், அவை ஒன்றையொன்று முந்தவோ, பின் தங்கவோ செய்வதில்லை. எனவே, அவை கட்ட நிலையில் வேறுபட வாய்ப்பில்லை. உண்மையில் கட்ட இயக்கங்கள் நீள வாட்டு நிறைக்குத் தலை கீழ் விகிதத்தில் உள்ளன. முடுக்கம் தொடக்கத் திசை வேகத் திசையிலேயே இருப்பதால், நீள வாட்டு நிறை என்ற பெயர் பயன்படுகிறது. இம்மதிப்பு, சார்பியல் அளவு நெடுக்கத்தில் மிகப் பெரியதாக உள்ளது. ஒரு மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்டுக்கு மேற்பட்ட ஆற்றல்களுக்குத் துகள்களை முடுக்குகிற சார்பியலான நேர் கோட்டு அயனி முடுக்கிகளுக்கும் மேற்சொன்ன கருத்துகள் பொருந்தும். வழக்கமான அயனித் தோற்றுவாய்கள் மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட் நெடுக்கத்தில் உள்ள துகள்களை வெளிப்படுத்துகின்றன. எனவே, இவற்றில் சார்பியல் தன்மையில்லாத நிகழ்வுகள் மேம்பட்டுள்ள ஒரு பெரும் பகுதி தேவை. வட்டத் துகள் முடுக்கிகள். சைக்ளோட்ரான் என்பது அடிப்படையில் சார்பியல் தன்மையில்லாத ஒரு கருவி. அதிலுள்ள ஒரு சீரான புலத்தில் ஒரு நிலையான ரேடியோ அதிர்வெண்ணுள்ள அலைவு புலங்கள் துகள்களை முடுக்குகின்றன. அவற்றின் கோணத் திசை வேகம் எனில், m சார்பியல் தன்மையில் இல்லாத வரை, அதாவது அது ஓய்வு நிறைக்கு ஏறத்தாழ சமமாக இருக்கும் வரை துகள்களின் சுழற்சி அதிர்வெண் ψ/2π, செலுத்தப்படும் ரேடியோ அதிர்வெண்ணுக்குச் சமமாக இருக்கும். துகள்கள் சார்பியல் தன்மையை அடைந்த பிறகு, அவையிரண்டும் சமமாயிரா. இதற்கு மேற்பட்ட அளவில் துகள்களை முடுக்க வேண்டுமானால், நேரம் செல்லச் செல்ல அதிர்வெண் குறையுமாறு செய்ய வேண்டும் (சிங்க்ரோ சைக்ளோட்ரான்) அல்லது ஆரம் அதிகரிக்க, அதிகரிக்கக் காந்தப் புலத்தின் மதிப்பு அதிகரிக்கும்படிச் செய்ய வேண்டும். நேரம் செல்லச் செல்லக் காந்தப் புலம் மாறுகிற முடுக்கி சிங்க்ரோட்ரான் எனப்படும். அது புரோட்டான், எலெக்ட்ரான் ஆகிய இரண்டு வகைத் துகள்களையும் முடுக்கும். அதில் துள்களின் ஓடு பாதை ஆரம் மாறாமலிருக்கும் வகையில், நேரம் செல்லச் செல்லக் காந்தப் புலம் மாற்றப்படும். ஒரு குறிப்பிட்ட ஓடு பாதை ஆரத்துக்கான காந்தப் புலம், அதிர்வெண் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பைப் பின்வரும் சமன்பாடு அளிக்கிறது. சார்பியல் தன்மையுள்ள எலெக்ட்ரான்களுக்கு r, ஒளியின் திசை வேகத்தை நெருங்கி விடும். அப்போது, துகளை முடுக்க காந்தப் புலத்தை மாற்றினால் போதும். பீட்டாட்ரான் என்ற எலெக்ட்ரான் முடுக்கியில் ரேடியோ அதிர்வெண் புலங்கள் இல்லாமலேயே ஓடுபாதைகளின் ஆரங்கள் நிலையாக வைக்கப்படுகின்றன. ஓடு பாதையுடன் இணைந்த காந்தப் பாயத்தை அதிகரிப்பதன் மூலம் எலெக்ட்ரான்கள் முடுக்கப்படு- கின்றன. இணைக்கப்பட்ட காந்தப் பாயம், ஓடு பாதையில் உள்ள புலம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை ஃபாரடேயின் மின் காந்தத் தூண்டல் விதியிலிருந்தும், வட்ட இயக்கத்திற்கான சார்பியல் சமன்பாட்டிலிருந்தும் பெறலாம். ஃபாரடே விதியின் படி, இதிலிருந்து ஒவ்வொரு சுற்றிலும் துகளின் இயக்க ஆற்றலில் ஏற்படும் அதிகரிப்பு ΔE எனில், எனத் தெரிகிறது. இதில் Δ எனபது ஒரு சுற்றுக்கு ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது. Φ என்பது ஓடு பாதையுடன் இணைந்த காந்தப் பாயம், காந்தப் புலமும், உந்தமும் Δp=q rΔB என்ற வகையில் அதிகரித்தால், துகளின் ஓடு பாதையின் ஆரம் மாறாது. இதிலிருந்து ΔE=νΔP எனவும் காட்டலாம். ஓடு பாதைக்குள் அடங்கியுள்ள சராசரிப் புலத்தில் ஏற்படும் அதிகரிப்பு, ஓடு பாதையிலுள்ள புலத்தில் ஏற்பட்ட அதிகரிப்பைப் போல, இரு மடங்காக இருக்க வேண்டும். அதாவது, = 2ΔB என்ற நிபந்தனை நிறைவு செய்யப் பட்டால்தான், ΔE =νΔP என்ற சமன்பாடு நிறைவு செய்யப்படும். = 2ΔB என்பது பீட்டாட்ரான் நிபந்தனை எனப்படும். மின்காந்தக் கதிர் வீச்சு. சார்பியல் தத்து வங்கள் பயன்படுகிற பிறிதொரு முக்கியமான துறை மின்காந்தக் கதிர் வீச்சு ஆகும். அத்துடன் தொடர்புடைய அனைத்துச் சமன்பாடுகளிலும் ஒளியின் திசை வேகம் இடம் பெறுவதிலிருந்து கதிர் வீச்சு நிகழ்வில் ஒரு முழுமையான சார்பியல் கணக்கீடு முறை பங்கு பெறும் என்பதைக் கற்பிதம் செய்து கொள்ளலாம். நேரத்துடன் சைன் கோட்டு வடிவில் மாறுகிற மின்னோட்டத் தோற்றுவாய்களைக் கவனிக்கும் போது, குறைந்த அதிர்வெண் தீர்வானது, தூண்டுகிற மின்னோட்டத்தின் ஒவ்வொரு கூறிலிருந்தும் தோன்றுகிற கதிர் வீச்சுப் புலங்களை ஓரியல்பாக மேற்பொருத்துவதற்கு ஒப்பானதாகும். அதிர்வெண் அதிகரிக்கும் போது, இச்சிக்கலின் ஒரு சுவையான சார்பியல் தன்மை வெளிப்படுகிறது. வெவ்வேறு மின்னோட்டக் கூறுகளிலிருந்து புறப்படுகிற வெவ்வேறு கிளர்வுகள் பார்வையாளரை வெவ்வேறு நேரங்களில் வந்தடைகின்றன. மொத்தக் கதிர் வீச்சிற்கு இக்கிளர்வுகள் அளிக்கும் பங்களிப்புகளின் சார்புக் கட்டம் மாறுகிறது. தோற்றுவாய்க்கும், பார்வையாளருக்கும் இடையிலுள்ள தொலைவு r எனில், கட்டத்துடன் kr என்ற அளவைக் கூட்டி, இச்சார்புக் கட்ட மாற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். k என்பது அலை எண் (wave number) எனப்படும். இதில் f என்பது அதிர்வெண்; λ என்பது அலை நீளம். மின்னோட்டப் பரவீட்டின் இரு எதிர் விளிம்புகளுக்கு இடையிலுள்ள கட்ட வேறுபாடு 2π க்கு ஏறத்தாழ சமமாகவோ, அதை விடப் பெரியதாகவோ இருக்குமானால், அதாவது kD ≥ 2π அல்லது D ≥ λ எனில், மேற்சொன்ன விளைவு இன்றியமையாததாகி விடுகிறது. பொதுவாக, கதிர் வீசும் அமைப்பின் பரிமாணங்கள் அலை நீளங்களுக்கு ஏறத்தாழ சமமாகவோ, அவற்றை விடப் பெரியவாகவோ இருக்கும் போது, கிளர்வுகளின் மேற்சொன்ன கட்ட வேறுபாட்டு விளைவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சிங்க்ரோட்ரான் கதிர் வீச்சு. முழுமையான சார்பியல் நிகழ்வுக்குப் பிறிதோர் எடுத்துக்காட்டாக, மாறாத வேகத்தில் வட்டமான பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு மின் துகள் முடுக்கப்படும் போது, அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீசலை எடுத்துக் கொள்ளலாம். என்ற பழங்கொள்கைப்படியான லார்மார் சமன்பாடு, மெதுவாக நகரும் மின் துகள்களிலிருந்து, ஒரு நொடியில் வெளிப்படும் கதிர் வீசலின் அளவை அளிக்கிறது. இதில் a என்பது துகளின் முடுக்கம், வட்ட இயக்கத்திற்கு ஏற்ற சார்பியல் சமன்பாடு பின்வருமாறு: இதில் a=v²/r என்பது ஓடுபாதையின் ஆரம். இச்சமன்பாட்டிலிருந்து சார்பியல் திசை வேகங்கள் ஆரத்துடன் மாறுவதை உணரலாம். இக்கதிர் வீச்சு சிங்க்ரோட்ரான் கதிர் வீச்சு எனப்படுகிறது. வட்டத்துகள் முடுக்கிகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆற்றலுள்ள துகள்களை உண்டாக்க முடியாது என்று இச்சமன்பாடு வரையறுக்கிறது. —கே.என். ராமச்சந்திரன் சார்பு மூலக்கூறு எடை ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களில் நிறைகளின் மொத்தக் கூட்டுத் தொகை, மூலக்கூறு எடை எனப்- படும். தற்காலத்தில் மூலக்கூறு எடை என்ற கருத்துக்கு மாறாகச் சார்பு மூலக்கூறு நிறை (relative molecular mass) என்னும் கருத்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஓர் இயற்கையான நூக்ளைடு கூட்டமைப்பில் ஒரு மூலக்கூறின் நிறைக்கும், கார்பன்—12 நூக்ளைடு நிறையின் 12இல் ஒரு பங்கு நிறைக்கும் உள்ள தகவு சார்பு மூலக் கூறு நிறை ஆகும். காட்டாக, பொட்டாசியம் குளோரைடின் (KCI) சார்பு மூலக்கூறு நிறை 74.555 ஆகும். —கே. என். ராமச்சந்திரன் சார்ம் அடிப்படைத் துகள் இயற்பியலில் ஒரு புதிய வகுப்பைச் சேர்ந்த அடிப்படைத் துகள்கள் சார்ம் (charm) என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. சாதாரணமான அணுக்களில் நியூட்ரான்களும், புரோட்டான்களும் அடங்கிய ஓர் அணுக் கருவும், அதைச் சுற்றிலும் எலெக்ட்ரான்களும் அமைந்திருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளில், பல எதிர்பாராத பண்புகளைக் கொண்ட ஏனைய துகள்களும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. அவை எலெக்ட்ரான்கள் போன்ற லெப்டான்களையும், புரோட்டான்கள் போன்ற ஹேட்ரான்களையும் சேர்ந்தவை என அறியப்படுகின்றன. லெப்டான்கள். இக்குழுவில் எலெக்ட்ரான்களுடன் மியூ (mu) மெசான், டௌ (tau) மெசான் ஆகியவை உள்ளன. மியூமெசான் எலெக்ட்ரானைப் போல ஏறத்தாழ 200 மடங்கு அதிகமான நிறையும், டௌ மெசான் ஏறத்தாழ, 3700 மடங்கு அதிகமான நிறையும் கொண்டவை. நிறையைத் தவிரப் பிற பண்புகளிலும் அவை எலெக்ட்ரானை ஒத்திருக்கின்றன. இவற்றுடன் குறைந்தது இரண்டு வகையான நியூட்ரினோக்கள் உள்ளன. எலெக்ட்ரானுடன் தொடர்பு கொண்ட நியூட்ரினோவை γ எனவும் மியூ மெசானுடன் தொடர்பு கொண்டதை γஎனவும் குறிப்பிடுகின்றனர். டௌ மெசானுக்கும் ஒரு கூட்டு நியூட்ரினோ உண்டா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மொத்தத்தில் ஐந்து அல்லது ஆறு அடிப்படையான, தனித்தனியான, கட்டமைப்பில்லாத லெப்டான்கள் உள்ளன. ஹேட்ரான்கள்.ஹேட்ரான்களிலும் இதே போன்ற ஆனால், மேலும் அதிகமான சிக்கல் நிலவுகிறது. ஹேட்ரான்கள் நூற்றுக் கணக்காக உள்ளன. அவற்றை லெப்டான்களைப் போன்று அடிப்படைத் துகள்களாக மதிக்க முடியாது. உண்மையில் அவை, அடிப்படையான குவார்க்குகள் என்ற துகள்கள் கூடி உருவான கூட்டமைப்புகளாக விளக்கப்படுகின்றன. குவார்க்குகள், லெப்டான்களின் அளவுக்கு அடிப்படையான துகள்கள் என்று இப்போது தெரிகிறது. ஆய்வின் போது, பல புதிய எதிர்பாராத துகள்கள் கண்டு பிடிக்கப்பட்டதன் மூலம், குவார்க் இனங்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. தொடக்கத்தில் + 2/3 மின்னுள்ள மேல் குவார்க்கும் (u), - 1/3 மின்னுள்ள கீழ்க் குவார்க்கும் (d) மட்டுமே தெரிந்த, ஓர் எளிய சூழ்நிலை நிலவியது. அதன் பிறகு சுவைகள் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய குவார்க் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று விந்தைக் குவார்க் (s) எனப்படுகிறது. அது —1/3 மின்னுள்ளது. S=-1 என்ற விந்தைத் தன்மை எனப் பெயரிடப்பட்டுள்ள ஒரு கூடுதல் பண்பு அல்லது குவாண்டம் எண் அதற்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அதன் உதவியால் விந்தைத் துகள்களில் ஒரு குடும்பத்தின் எதிரியாராத பண்புகளை விளக்க முடிகிறது. புரோட்டானை விட மூன்று மடங்கு அதிக நிறை கொண்ட J/ψ என்ற துகள்கள் கண்டு பிடிக்கப்பட்ட போது, அவற்றை விளக்குவதற்காக, ஒரு குவார்க்குக் குடும்பத்திற்கு C = +1 என்ற சார்ம் குவாண்டம் எண் விதிக்கப்பட்டது. அதற்கு விந்தைத் தன்மை இல்லை; ஆனால் + 2/3 என்ற மின் சுமை உண்டு. C என்ற எழுத்தால் குறிப்பிடலாம். ஐந்தாவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட குவார்க்கு —1/3 மின் சுமையுள்ளது. அதை b என்ற எழுத்தால் குறிப்பிடலாம். நிறைமிக்க யூப்சிலான் (Ύ) என்ற துகள்கள் காணப்படுவதை விளக்குவதற்காக அது சேர்க்கப்பட்டது. இது வரை கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் குவார்க்குகளும், லெப்டான்களும் ஒரு சமச் சீர்மையுள்ள அணி வகுப்பாக அமைந்திருப்பதைப் போலத் தோன்றும். லெப்டான்களும், குவார்க்குகளும் இரண்டு, இரண்டாக அமைந்துள்ளன. லெப்டான்களில் முறையே 0,-1 ஆகிய மின்கள் உள்ள (Ύ-எலெக்ட்ரான்), (Ύ-மியூமெசான்), (Ύ-டௌ மெசான்) இரட்டைகள் உள்ளன. குவார்க்குகளில் முறையே + 2/3, -1/3 மின்கள் உள்ள (u-d),(c-s),(t-b) இரட்டைகள் காணப்படுகின்றன. b குவார்க்கின் இணையாகக் கருதப்படுகிற t குவார்க் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை, மேலும் இது போன்ற புதிய லெப்டான் இரட்டைகளும் குவார்க் இரட்டைகளும் கண்டு பிடிக்கப்படுமா என்பது ஆய்விற்குரியது. காட்சிப் பதிவுகள். சார்முடன் கூட்டுச் சேர்ந்த துகள் குடும்பத்தின் கூறுகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒரு பிரிவில் சார்ம் மறைமுகமாக இருக்கிறது. அதில் உள்ள நிலைகள் சார்மோனியம் எனப்படும். சார்ம், எதிர்ச் சார்ம் குவார்க்குகளின் (e,c) கூட்டு ஆகும். பிற பிரிவில் சார்ம் பண்பு தெளிவாக வெளிப்படுகிறது. ஒரு c குவார்க்கும் d எதிர்க் குவார்க்கும் இணைந்த D+ மெசான், c, u, d ஆகிய குவார்க்குகள் கூடிய A பார்யான் ஆகியவை இப்பிரிவுக்கு எடுத்துக்காட்டுகள். சார்மோனியம். சார்மோனியக் குடும்பத்தில் பல்வேறு நிறைகளும், சிதைவு பாங்கங்களும் கொண்ட ஆறு அல்லது ஏழு நிலைகள் இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆய்வுகளின் மூலம் இப்பண்புகள் அனைத்தையும் இது வரை விவரமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அவை அனைத்தும் கொள்கை அடிப்படையிலான எதிர்பார்ப்புகளுடன் பண்பளவில் ஒத்துப் போவனவாகவே தோன்றுகின்றன. வெளிப்படையான சார்ம் நிலைகள். பல வெளிப்படையான சார்ம் நிலைகள் இனம் காணப்பட்டிருக்கின்றன. சான்றாக c, d ஆகிய குவார்க்குகள் சேர்ந்த ஆகிய மெசான்கள், cuu என்ற குவார்க்குக் கூட்டமைப்புக் கொண்ட Σ, cud என்ற குவார்க்குக் கூட்டமைப்புக் கொண்ட A ஆகிய சார்ம் உள்ள பார்யான்கள் ஆகியவற்றைக் கூறலாம். A, D° ஆகிய துகள்களின் ஆயுள் 10 நொடி அளவிலும், D துகளின் ஆயுள் அதைப் போல ஏழு மடங்கு மிகுதியாகவும் இருப்பதாகப் புகைப்படத் தட்டுகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. புகைப்படத் தட்டுகளில் உள்ள வேதிக்கூழ்மத்தில் அவை பயணம் செய்த தொலைவுகளை நுட்பமாக அளந்து, அவற்றின் ஆயுட்காலங்கள் கணிக்கப்பட்டன. இம்மதிப்புகள், கொள்கை அடிப்படையிலான ஊகங்களுடன் சிறப்பான அளவில் ஒத்திருக்கின்றன. Aஎன்ற சார்முள்ள பாரியான் பல வகையான பரிமாற்று வினைகளில் உண்டாக்கப்படுவது காணப்பட்டிருக்கிறது. நியூட்ரினோ புரோட்டான், புரோட்டான்—புரோட்டான், எலெக்ட்ரான்—பாசிட்ரான், நியூட்ரினோ—நியான் ஆகிய துகள் பரிமாற்று வினைகள் இதற்குச் சான்றாகும். A பல வகைகளில் சிதைவடைவதும் காணப்பட்டிருக்கிறது. அதன் உற்பத்தி மற்றும் சிதைவு முறைகளை ஆய்வு செய்து இத்துகள்களின் நிறைகளை நுட்பமாகக் கணக்கிட முடியும். எதிர்காலம். சார்முள்ள நிலைகளைப் பற்றிய ஆய்வுகளில் ஏற்றுக் கொள்ளத் தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான நிலைகளே கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வு செய்ய வேண்டியவை பலவுண்டு. ஹேட்ரான்களின் எண்ணற்ற விந்தையான மற்றும் விந்தையற்ற ஒத்ததிர்வு நிலைகளை ஆய்வு செய்வது மூலம் SU(3) என்ற அடிப்படைச் சமச் சீர்மை கண்டுபிடிக்கக்பட்டதைப் போலவே, கூடுதலான நிலைகள் கண்டு பிடிக்கப்பட்டால், சார்ம் பண்புகளை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். —கே.என் ராமச்சந்திரன் சார்லஸ் விதி ஒரு வளிமத்தின் பருமன், வெப்ப நிலைத் தொடர்பை விளக்குவது சார்லஸ் விதி ஆகும். 1787 ஆம் ஆண்டு சார்லஸ் என்பாராலும், 1808 ஆம் ஆண்டு கேலூசக் என்பாராலும் இது தனித்தனியே அறியப்பட்டது. ஒரு குறிப்பிட்ட அழுத்தம் உள்ள வளிமத்தின் செல்சியஸ் வெப்ப நிலையைப் படிப்படியாக மாற்றும் போது, அதன் பருமன் நேர் கோட்டுத் தொடர்பில் மாறி வருவதைக் கண்டனர். பல்வேறு அழுத்தத்தில் உள்ள அனைத்து வளிமங்களும், பருமன் வெப்ப நிலை வரைபடத்தில், பூஜ்ய செல்சியஸ் வெப்ப நிலையில் பெற்றுள்ள பருமனின் நேர் கோட்டை நீட்டி விட்டால் (extrapolated), வளிமத்தின் பூஜ்ய பருமன் (V=O) ஒரே வெப்ப நிலையில் (-273°C) முடிவடையும். ஒவ்வோர் ஆய்விலும் இவ்வரை கோட்டின் சாய்வு (slope), V/273 என்பதற்குச் சமமாக இருக்கும். இங்கு V என்பது O°Cஇல் எடுத்துக் கொள்ளப்பட்ட வளிமம் பெற்றுள்ள பருமன். கவனிப்பின் மூலமாகவே தனி வெப்ப நிலை (absolute temperature scale) அல்லது கெல்வின் வெப்ப நிலை அலகு வருவிக்கப்பட்டது. -273°C என்ற வெப்ப நிலையில்தான், ஒரு வளிமத்தின் பருமன் பூஜ்யமாக உள்ளது. இவ்வெப்ப நிலையே கெல்வின் வெப்ப அலகில் பூஜ்யமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சிறந்த ஆய்வு முடிவுகளின் மூலமாக ஓர் அமைப்பின் தனி வெப்ப நிலைச் சமன்பாடு என்பது, 1°C வெப்பநிலை மாற்றத்திற்கு, ஆகவே t°C என்ற வளிமத்தின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலைக்கான சமன்பாடானது, இங்கு,குறிப்பிட்ட வளிமத்திற்கு V ஒரு மாறிலி ஆகும். எனவே, இச்சமன்பாடே சார்லஸ் விதியாகும். மாறா அழுத்தத்தில் கொடுக்கப்பட்ட வளிமத்தின் பருமன், அதன் தனி வெப்ப நிலையுடன் நேர் விகித தொடர்பைப் பெற்றுள்ளது என்பதே சார்லஸ் விதி ஆகும். V/T என்பது மாறிலி. ஒரு வளிமத்தின் பரும விரிவு எண்ணின் அடிப்படையிலும் சார்லசின் விதி குறிப்பிடப்படுகிறது. ஒரு வளிமத்தின் பரும விரிவு எண் α எனலாம். ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வளிமத்தை மாறாத அழுத்தத்தில் சூடாக்க, அதன் வெப்ப நிலை ஒரு செல்சியஸ் பாகை உயரும் போது, அதன் பருமன், பூஜ்ய செல்சியஸ் பாகையில் இருந்த அதன் தொடக்கப் பருமனைப் போல α மடங்கு அதிகரிக்கிறது. t வெப்ப நிலையில் வளிமத்தின் பருமன் V. பூஜ்ய வெப்ப நிலையில் அதன் பருமன் V எனில் α = எனவே, V - V = αVt இதே போல ஒரு வளிமத்தின் அழுத்த விரிவு எண்ணின் அடிப்படையிலும் சார்லஸின் விதியைக் கூற முடியும். ஒரு வளிமத்தின் அழுத்த விரிவு எண் α எனலாம். ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வளிமத்தை அதன் பருமன மாறாத வகையில் சூடாக்கி, அதன் வெப்ப நிலை ஒரு செல்சியஸ் பாகை உயரும் போது, அதன் அழுத்தம், பூஜ்ய செல்சியஸ் பாகையில் இருந்து, அதன் தொடக்க அழுத்தத்தைப் போல α மடங்கு அதிகரிக்கும். t வெப்ப நிலையில் வளிமத்தின் அழுத்தம் P, பூஜ்ய வெப்ப நிலையில் அதன் அழுத்தம் P. எனில் α = அல்லது P - P = αPt —பி.ஈ.எம். லியாகத் அலி கான் —கே. என். ராமச்சந்திரன் சாரஸ் கொக்கு இது, குருவிபார்மீஸ் வரிசையில் குருயிடே குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களை உணவாகக் கொள்ளும் கொக்குகளில் வடஇந்தியாவில் பரவலாகக் காணப்படுவதாகும். சைபீரியாவிலிருந்து பரத்பூர் பறவைகள் புகலிடத்திற்கு வலசை வரும் வெண் கொக்கும் இக்குடும்பத்தைச் சேர்ந்ததே. கழுகளவு உடலைக் கொண்ட சாரஸ் கொக்கு (Grus antigone) நீண்ட கால்களையும், கழுத்தையும் பெற்றிருப்பதால் ஆள் உயரமுடையதாகத் தோற்றம் தரும். கழுத்தின் மேற்பகுதியும், தலையும் சிவப்பாக இருப்பதைக் கொண்டு, இதனை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். பெரும்பாலும், இணையாகவே காணப்படுவது எனினும், இனப்பெருக்கம் செய்யாத குளிர் காலத்தில் 60-70 வரையான குழுவாகத் திரளவும் காணலாம். அப்போது இவை பெருத்த ஆரவாரத்துடன் உரக்கக் குரல் கொடுத்து, ஆட்ட ஓட்டங்களில் ஈடுபட்டாலும், இடையிடையே இணையாகப் பிரிந்து, மீண்டும் குழுவாகத் திரண்டு கொள்ளும். இணை சேர்ந்த பறவைகள் வாழ்நாள் முழுதும் பிரிவதில்லை. இதன் காரணமாக, இவை பயிர்களைத் தின்று தீங்கு செய்யினும், மக்கள் இதற்குத் தீங்கிழைப்பதில்லை. தானியங்கள், முளைத்து வரும் பயிர்கள், வேர்க்கடலை ஆகியவற்றோடு தவளை, தண்டு, நத்தை, வெட்டுக்கிளி முதலிய உயிரினங்களையும் உணவாகக் கொள்கிறது. இணை சேர்ந்த பறவைகள் உரக்கக் குரல் கொடுத்து ஒன்றை ஒன்று அழைத்துக் கொள்ளும், இவ்வாறு குரல் கொடுக்கும் போது அரை மணித் துளி வரை கழுத்தை நீட்டி வைத்தபடி, அலகினை வான் நோக்கி உயர்த்திக் கொண்டு, உடலில் உள்ள இறகுகளை உசுப்பி உப்ப வைத்துக் கொள்ளும், இவ்வாறு குரல் கொடுப்பது பகல் இரவு பாராமல் நிகழும். இனப்பெருக்க காலத்தில் ஆணும், பெண்ணும் வெறி கொண்டனவாக ஆட்டம் நிகழ்த்தியே இணை சேரும். ஜூலை—டிசம்பர்த் திங்களே இனப் பெருக்க காலம், வயலிடையேயும் குளம் குட்டைகள் நடுவே உள்ள மேட்டிலும் வைக்கோல், இலை, தழை ஆகியவற்றை ஒரு மீட்டர் குறுக்களவுள்ள குவியலாகத் திரட்டி அதன் நடுவே பழுப்பு, இளஞ்சிவப்புப் புள்ளிகளோடு கூடிய பசுமை தோய்ந்த வெண்ணிற முட்டைகள் இரண்டினை இடும். ஆணும், பெண்ணும் கூடு அமைத்தல், அடை காத்தல் ஆகியவற்றில் பங்கு பெறுகின்றன. ஆண் முட்டைகளையும் குஞ்சுகளையும் காப்பதில், அதிக கவனம் செலுத்தியபடி இருக்கும். அடைகாக்கும் காலம் 34 நாள்கள். —க. ரத்னம் நூலோதி. Salim Ali, and Ripley S. Dillon, Hand Book of the Birds of India and Pakistan, Vol.II, Oxford Press, London, 1969. சாரா அணிக்கோவை அணிக்கோவை விரிவுபடுத்தப்படும்போது K(λ) = |a-bλ|=0 என்னும் சமன்பாடு, λஇன் பல்லுறுப்புக் கோவையாக அமையுமானால், அது ஒரு சாரா அணிக்கோவை (secular determinant) ஆகும். இது, அணி இயற்பியலின் (matrix algebra), Eஐ அலகு அணியாகக் கொண்ட (λE-A) என்னும் தனிப் பண்புடைய அணி Aஇன் அணிக்கோவை என்றும் குறிப்பிடப்படும். இங்கு என்பது தனிப் பண்புடைய சமன்பாடு அல்லது சார்பாகும். கெழுக்கள் a,a,……aஇன் உறுப்புகளைக் கொண்டவையாகும். K(λ) இன் உள்ளார்ந்த (latent) அல்லது தனிப் பண்புடைய n மூலங்கள் ஐகன் மதிப்புகளையுடையவை. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மூலங்கள் சமமாக இருந்தால், அவை சீர் கேடுடையவை (degenerate) எனப்படும். ஒத்த உருமாற்றத்தால், இரண்டு அணிகள் Aஉம், Bஉம், B =QAQ எனத் தொடர்பு படுத்தப்பட்டால் A.B இல் உள்ளார்ந்த மூலங்கள் ஒத்தவையாக உள்ளன என்பது, உள்ளார்ந்த மூலங்களின் சிறந்த பண்பாகும். —பங்கஜம் கணேசன் சாராய ஈரல் நோய், அழற்சி நாட்பட்ட கல்லீரல் நோய்க்கு, மிகையாக மது அருந்துவதே தலையாய காரணமாகும். மிகை மதுவால் உண்டாகும் கல்லீரல் சுருக்க நோயால் மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆல்கஹால், நேரடியாகவே கல்லீரலைப் பாதிக்கிறது எனவும், உணவு ஊட்டக் குறைவு ஏற்பட்ட பின்னரே கல்லீரலைத் தாக்குகிறது எனவும், மதுவுக்கும், கல்லீரல் நோய்க்கும் உள்ள உறவு பற்றி இரண்டு கோட்பாடுகள் உள்ளன. டிஹைட்ரோஜிளேஸ் ADH என்ற நொதியால் ஆல்கஹால், அசெட்டால்டிஹைடாக மாறுவதுதான் முதல் படியாகும். பின்னர், மைட்டோகாண்டிரிய நொதியான அசெடால்டிஹைடு டிரைஹட்ரோஜினேசால், அசெடால்டிஹைடு அசெடேட்டாக மாறுகிறது. மிகச் சிறிய அளவில் ஆல்கஹால் கல்லீரலின் நொதிகளால் வளர்சிதை மாற்றம் அடைகிறது. ஆல்கஹாலின் வளர்சிதை மாற்றத்தால், கல்லீரலின் சைடோசாலிலும், மைட்டோகாண்டிரியா விலும் ரிடாக்ஸ் மட்டம் அதிகரிக்கிறது. இதனால் பின்வரும் விளைவுகள் உண்டாகின்றன. 1. லாக்டேட்—பைருவேட் விகிதம் அதிகரித்து, மிகை குருதி லாக்டிக் அமில நிலையும், மிகை குருதி யூரிக் அமில நிலையும் உண்டாகும். 2. குளூக்கோஸ் புதிதாக உற்பத்தியாவது குறைவதால், குறை குருதி குளுக்கோஸ் நிலை தோன்றும். 3, பீட்டா ஹைட்ராக்சி பியூட்ரேட்—அசெட்டோ அசெட்டிக் அமில விகிதம் அதிகரித்து, அமில மிகை நிலை உண்டாகிறது. 4. சிட்ரிக் அமில வட்டம் மட்டுப்படுவதால், கொழுப்பு அமில ஆக்சிஜனேற்றம் குறைந்து, கல்லீரலில் கொழுப்புத் தேக்கமடைகிறது. சில சமயம் வயிற்று வலியும், குறைந்த அளவில் குருதிச் சிதைவு சோகையும் (Zieve's syndrome) உண்டாகலாம். மேலும் கல்லீரலில் கொழுப்பு மிகையாகப் படிவதால், கல்லீரல் வீங்கி காமாலை, பசி இன்மை, சோர்வு, இறுதியாகக் கல்லீரல் தளர்வு உண்டாகலாம். நுரையீரல் அழற்சி, கணைய அழற்சி, சிறுநீரக அழற்சி தோன்றலாம். ஆய்வு முடிவுகள். குளுடாமிக் ஆக்ஸலோ அசெட்டிக் டிரான்ஸ்மினேஸ் அளவு அதிகரிக்கிறது. காமா குளுட்டாமைல் டிரான்ஸ்பெப்டிசேஸ், சோடியம் புரோமாப்தலின், பிலிரூபின் அல்கலைன் பாஸ்ஃபட்டேஸ் ஆகியவையும் குருதியில் மிகுதியாகக் காணப்படுகின்றன. தீவிர ஆல்கஹால் கல்லீரல் அழற்சியில், கல்லீரல் வீக்கம், கல்லீரலில் தொடுவலி, மஞ்சள் காமாலை, தோலில் சிலந்தி போன்ற குருதி நாள மாற்றங்கள், காய்ச்சல், மகோதரம், மூளை அழற்சி, இரைப்பை—சிறுகுடலில் இரத்தப் பெருக்கு ஆகியவை உண்டாகின்றன. கல்லீரலில் சீழ்க் கட்டியும் தோன்றலாம். குருதி வாந்தியும் உண்டாகலாம். உணவுக் குழலின் சிரைகளிலிருந்து குருதிப் பெருக்கு உண்டாகும். தீவிர ஆல்கஹால் கல்லீரல் ஆய்வு முடிவுகள். பிலிரூபின் 17.8 மி. கி./டெசி லி; அல்புமின் 2.4 கி/டெசிலி; புரோத்திராம்பின் 47%, வெள்ளணுக்களின் எண்ணிக்கை 15,700/கன மி.மீ.; கிரியாடினின் 1.3 மி. கி. /டெசி.லி; ஹீமோகுளோபின் 10.8 கி/டெசி. லி. இந்நோயின் சிக்கல்களாக, கல்லீரல் சிரையின் குருதிமிகு அழுத்தம், மகோதரம், நுண்ணுயிர் உதரவுறை அழற்சி, கல்லீரல் சார்ந்த மூளை அழற்சி, கல்லீரல் சார்ந்த சிறுநீரக நோயியம் தோன்றலாம்.வெள்ளணுக்களின் எண்ணிக்கை 7000க்கு மேல் அதிகரித்தாலும், கிரியாடினின் 0.6 மி.கிராமுக்கும அதிகரித்தாலும், குருதியில் பிலிரூபின் 7மி. கிராமுக்கும் அதிகரித்தாலும் நோயாளி சீரடைவது கடினம். மருத்துவம். கார்டிகோஸ்டீராய்டுள், புரோப்பைல் தையோயூரசில், பெனிசிலமைன், கால்சிசின், குளுக்கான், இன்சுலின் போன்றவை மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. குருதியில் மொத்தப் புரதம் 0. 3 கிராம்/டெசி லி. அதிகமாக இருந்தால், புரோத்திராம்பின் 15% க்கும் அதிகரித்தால், டிரை அயோடதைரோனின் 80 நானோ. கி/மி.லி. அதிகரித்தால், நோயாளி சீரடையக் கூடும். —அ. கதிரேசன் சாராயம், சாராய மிகைப்பு பல வகையான மது (சாராயம்) வகைகளில் எத்தில் ஆல்கஹால் (எத்தனால்) மருந்தியல் துறையில் இன்றியமையாதது. மருந்து என்ற அளவில் எத்தனால் மிகக் குறைவாகவே பயன்பட்டாலும், வேறு எந்த மருந்தையும் விட, இதை மக்கள் அருந்தி மருந்தடிமையாகின்றனர். மேலும் பல மருந்துகளுடன் வினை புரிந்து தீய விளைவுகளையும் எத்தனால் உண்டாக்குகிறது. எத்தனால் ஓர் எளிய வேதி மூலக் கூறாகும். ஈஸ்ட்டால் சர்க்கரை நொதித்தல் அடையும் போது, அதன் விளை பொருளாக எத்தனால் உண்டாகிறது. மிகையாக மது அருந்தும் போது நரம்பு மண்டலத் தளர்வு ஏற்படுவதற்கு எத்தனாலே காரணமாகும். நாளும் இரவு உணவுடன் 2 அவுன்ஸ் மது அருந்துபவரை ஓரளவான குடிகாரர் என்றும், நாளும் 6 அவுன்ஸ் அருந்துபவரை நடுத்தரக் குடிகாரர் என்றும், 10 அவுன்சுக்கு மேல் மது அருந்துபவரைப் பெருங்குடிகாரர் என்றும் மூவகையாகப் பிரிக்கலாம். எத்தனால் மைய நரம்பு மண்டலத்தைத் தளரச் செய்கிறது. தளரும் அளவு, அருந்திய மதுவின் அளவைப் பொறுத்தது. நரம்பு மண்டலத் தளர்வுக்கு முன்பு முரட்டுத் தனம், தவறான நடத்தை, உள வய மாற்றங்கள், தொடர்ந்து பேசுதல் (பிதற்றல்) ஆகியவை தோன்றுகின்றன. விஞ்சிய அளவால் ஏற்படும் மரணத்திற்கு, மூச்சு மண்டலத் தளர்வே காரணமாகும். பெரும்பாலான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. குருதி நாள விரிவு, உமிழ் நீர், இரைப்பை நீர்ச் சுரப்பு அதிகரிப்பு, கடும் பசி, நாட்பட்ட இரைப்பை அழற்சி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்குத் தோன்றலாம். கல்லீரல் பாதிக்கப்படும். இதய வீக்கம், இதயத் தளர்வு, குருதி உறை கட்டி, அடைப்பு ஆகியவையும் தோன்றலாம். எத்தனால், முழுமையாக இரைப்பை—குடல் பாதையில் உறிஞ்சப்படுகிறது. மிகவும் கொழுப்புக் கொண்ட பால் போன்ற உணவுகள், மது உறிஞ்சலைக் குறைக்கும். குருதியில் இதன் அளவைக் கொண்டு மனிதனின் நிலையை அறுதியிடலாம். எத்தில் ஆல்கஹால் மிகவும் எளிதில் தாய் சேய் இணைப்பு மூலம் சூல் சிசுவை அடைகிறது. இதன் விளைவாகச் சிசு மது நோயியம் (foetal alcohol syndrome) என்ற நிலையில் மிகச் சிறிய தலை (microcephaly), குன்றிய வளர்ச்சி, அரை குறையாக மூடிய கண்கள், இதயக் குறைபாடு, பிறப்புறுப்பு ஊனம், காது கேளாமை போன்றவை உண்டாகின்றன. அருந்தப்பட்ட 90—98% எத்தனால் வளர்சிதை மாற்றமடைகிறது. 2—10% எம்மாற்றமும் அடையாமல் சிறுநீரிலோ, வெளி மூச்சுக் காற்றிலோ வெளிப்படுகிறது. மது மிகையாக அருந்தப்படும் போது, மது அருந்தியவருக்கு மட்டுமல்லாமல், அருகில் உள்ளவர்களுக்கும் தீமையேற்படும். மேலே குறிப்பிடப்பட்ட அட்டவணையின் மூலம் குடிகாரரின் நிலையையும், குருதி அளவையும், குடித்த மதுவின் அளவையும் தெரிந்து கொள்ளலாம். மிகை மது நிலைக்குச் சிரை வழியாக மானிட்டால் நீர்மத்தைச் செலுத்தலாம். குருதி ஊடு பிரிவு முறையையும் கையாளலாம். எத்தனால் உணவுப் பற்றாக்குறை, ஊட்டமின்மை, நோய் அறிகுறிகள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கிறது. கணைய அழற்சி, நாட்பட்ட இதயத் தசைத் தளர்வு, புற நரம்பழற்சி, மனத் தளர்ச்சியால் தற்கொலை மனப்பான்மை, நினைவாற்றல் குறைவு, உளறல், தடுமாற்ற நடை, வெர்னிக்—கார்சகோஃப் நோயியம் (syndrome) போன்ற மீள முடியா நரம்பு நிலைகள் சாராய மிகைப்பின் அறிகுறிகளாகும். —அ. கதிரேசன் சாரைப் பாம்பு இதன் விலங்கியல் பெயர் டையஸ் மியுக்கோசஸ் (Ptyas mucosus) ஆகும். இது ஊர்வன வரிசையில் ஸ்குவாமேட்டா துணை வரிசையில் ஒஃபீடியா குடும்பத்தில் கொலுபரிடே என்ற இனத்தில் அமையும். இயற்கையில் சாரைப் பாம்பு பிறருக்கு ஊறு விளைவிக்காததும், நச்சற்றதும் ஆகும். பருவ வளர்ச்சி அடைந்த சாரைப் பாம்பு 1.65-3.52 மீ. நீண்டு வளரும். ஆண் பாம்பு, பெண் பாம்பை விட நீளம் மிகுந்தது. இச்சாரைப் பாம்பை இனங் கண்டறிய உடல் மேற்பரப்பில் போர்த்தப்பட்டுள்ள செதில்களும், தகடுகளும் குறிப்பிட்ட முறையில் அமைந்துள்ளன. தலைப் பகுதி மேற்பரப்புத் தகடுகளாலும், வயிற்றுப் புறம் அகன்ற வயிற்றுத் தகடுகளாலும், வாலின் வயிற்றுப்புறம் இரு வரிசைத் தகடுகளாலும், உடலின் மேற்பரப்புச் செதில்களாலும் போர்த்தப்பட்டிருக்கும். உடலின் மேற்புறச் செதிலமைப்புத் தலையை அடுத்து 17-19 நீள் வரிசைகளிலும், உடல் மையப் பகுதியில் 16-17 நீள் வரிசைகளிலும், மல வாய்க்கு முன் பகுதியில் 12-14 நீள் வரிசைகளிலும் செதில்கள் அமைந்துள்ளன. சாரைப் பாம்பின் தலை நீண்டும், கழுத்து குறுகலாகவும் அமைந்திருக்கும். கண்கள் பெரியனவாகவும் பரிவுடன் உற்று நோக்கும் அமைப்பாகவும் காணப்படும். புற மூக்குத் துளைகள் முகத் தகட்டின் இரு மருங்கிலும் பெரியவையாக உள்ளன. உடல் மிக வலிமையுள்ளதாக, உறுதியாக, மேலும் கீழும் அழுந்தியதாக, இரு நுனிகளை நோக்கிக் குறுகியதாக இருக்கும். வால் உடல் நீளத்தில் நான்கில் ஒரு பங்கும், உருள் வடிவும் கொண்டது. சாரைப் பாம்பின் நிறம் வாழிடச் சூழ்நிலைக்கேற்றவாறுள்ளது. சில சூழ்நிலைகளில், முதுகுப் புற நிறம் பசுமை கலந்த மஞ்சளும், சில சூழ்நிலைகளில் பழுப்பும் கொண்டிருக்கும். கருமையான குறுக்கமைப்புக் கோடுகள் வலைப் பின்னல் போன்று ஒழுங்காக அமைந்திருக்கும். வயிற்றுப் பகுதி சாம்பல் கலந்த வெண்மையாகவோ, மஞ்சள் நிறமாகவோ இருக்கும். தோல் கருமையாக, வெண்மையான குறுக்குக் கோடுகளுடையதாகச் செதில்களால் மறைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் சாரைப் பாம்புகள் சமவெளிப் பகுதிகளில் வாழ்வன. ஆனாலும், மலைப் பகுதிகளில் 1,800 மீ உயரம் வரையில் இப்பாம்புகள் வாழ்கின்றன என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், ஸ்ரீலங்கா, பர்மா, சுமத்திரா, ஜாவா, ஆப்கானிஸ்தானம், சீனா போன்ற வெப்ப நாடுகளிலும் சாரைப் பாம்பு வாழ்கிறது. இரவு, பகல் ஆகிய இரு வேளைகளிலும் சாரைப் பாம்பு இரை தேட இருப்பிடத்தை விட்டு வெளி வரும். ஆனால், மனிதர்கள் வாழும் பகுதிகளில் இரவு நேரத்திவ் மட்டுமே இருப்பிடத்தை விட்டு வெளி வந்து இரை தேடும். தரையில் வாழும் இப்பாம்பு, நீரில் தலையை நீர் மட்டத்திற்கு மேலே உயர்த்தி மிக வேகமாக நீந்தும். மரக் கிளைகளில் மிக எளிதாகவும், வேகமாகவும் தாவி ஏறும். மரக்கிளை உச்சியிலிருக்கும் போது, இடையூறு ஏற்பட்டால், அங்கிருந்து கீழே விழுந்து, தப்பித்துக் கொள்ளவும் தயங்காது. மனிதர்களைக் கண்டால், மறைந்து ஓடி விடும் இயல்புடையது. ஆனால், அதற்குத் தீங்கு விளைவித்தால், சினத்துடன் தன் ஆற்றல் அனைத்தையும் ஒருங்கிணைத்துத் தாக்கும் பண்புடையது. அது போன்ற சமயங்களில், தலையை S வடிவத்துடன் தரையிலிருந்து மேலே உயர்த்தி, நாகப் பாம்பு போன்று போலியாக நடித்து, எதிரிகளைத் துணிவுடன் தாக்கும். அதே சமயத்தில் வால்பகுதியை வளைத்து, உராய்ந்து, ஒரு வகை அச்ச உணர்வு தரும் ஒலி எழுப்பும். சாரைப் பாம்பு தன் உணவிற்காகப் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து, தனக்கு விருப்பமான உணவைத் தெரிந்தெடுத்து உண்ணும் வழக்கமுடையது, தவளை, தேரை, பல்லி, இளம் ஆமைக் கூட்டிலுள்ள குஞ்சு, வெளவால், பிற பாம்பு போன்றவற்றை உணவாகக் கொள்ளும். ஆங்கிலத்தில் எலிப் பாம்பு எனப்படும் சாரைப் பாம்பு அச்சொல்லுக்கேற்றவாறு எலிகளை உண்ணும் என்றாலும் ,அதற்கு எலி விருப்பமான உணவு என்று கூற முடியாது. எலிகளை உணவாகத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில், அவற்றைத் தன் உடலால் சுற்றி வளைத்துத் தரையில்அழுத்திக் கொன்று தின்னும். தேடிய உணவைக்கண்டவுடன், ஆவலுடன் மிகுந்த வேகத்துடன் விழுங்கி விடும் ஆற்றலுடையது. அவ்வாறு விழுங்கப்படும் உணவு உயிருள்ள தவளையானால், பாம்பின் இரைப்பையை அடைகிற வரை தவளை எழுப்பும் குரலொலி வர வரக் குறைந்து தேய்ந்து மறைந்து விடுவதைத் தெளிவாகக் கேட்க முடியும். தவளையை விழுங்கிய சில நொடிகளில் பாம்பை அறுவை செய்து, தவளையை உயிருடன் மீட்க முடியும். மே, ஜூன் மாதங்களில் ஆண், பெண் பாம்புகள், கூடிக் கலவி மேற்கொண்டு, ஆகஸ்ட் மாதத்தில் 5—14 முட்டைகளிடும். முட்டைகள் அனைத்தும் ஜெல்லி போன்ற பொருளால் ஒன்றிணைக்கப்படும். பெண் பாம்பு, முட்டைகளைத் தன் உடலால் சுற்றி வளைத்து அடை காக்கும். செப்டம்பர்—ஜனவரி வரை முட்டைகள் பொரிந்து, இளம் பாம்புகள் வெளி வரும். இவ்விளம் பாம்புகள் முட்டையிலிருந்து வெளி வரும் சமயத்தில், 371-472 மி. மீ. நீளம் வரை இருக்கும். இவ்விளம் பாம்புகள் வளர்ந்து மூன்றாண்டுகளில் முதிர்ச்சி அடையும். இப்பாம்புகளை எளிதில் பழக்கலாம். பழக்கத்திற்கு உட்படுத்தப்படும் பாம்புகள் 11 ஆண்டுகளும், அதற்கு மேலும் வாழக் கூடியவை. இரு ஆண் பாம்புகள் சந்தித்துப் போரிட நேர்ந்தால், ஒன்றுக்கொன்று உடலால் பின்னிக் கொண்டு, தலையைத் தரையிலிருந்து மேலே உயர்த்தி, போராட்ட நடனம் ஆடும். இவ்வகை நடனம் வேறு எந்த இந்திய பாம்பினத்திலும் இல்லை. சாரைப் பாம்பின் தோல் பல்வேறு கைவினைப் பொருள்கள்செய்வதற்குப் பயன்படுகிறது. கேரள மாநிலத்தில், மலபார் என்னுமிடத்தில் உள்ள சிலர் சாரைப் பாம்பின் இறைச்சியை வேக வைத்துத் தரை வாழ் கெழுத்தி மீன் என்னும் பொருள்பட, பரம்புவாலா அல்லது கரவாலா என்ற பெயரில் உணவாக உட்கொள்கின்றனர். இப்பாம்புகள், வயல்வெளிகளில் எலிகளைக் கட்டுப்படுத்தி, உழவர்களுக்கு நன்மை செய்கின்றன. சாரைப் பாம்பும் நல்ல பாம்பும் புணரும் என்ற மூட நம்பிக்கை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே மக்களிடையே உள்ளது. நல்ல பாம்பில் ஆண் பாம்புதான் சாரைப் பரம்பு என்ற மூட நம்பிக்கையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்களிடம் உள்ளது. பசு மாட்டின் மடியில் பாலை உறிஞ்சிக் குடிக்கும் பழக்கம் இப்பாம்பிற்குண்டு என்னும் தவறான கருத்தும், சாரைப் பாம்பிற்கு வாலில் முள் உண்டு, அது வாலால் அடித்துக் கொன்று விடும் என்னும் மூட நம்பிக்கையும் காணப்படுகின்றன. —பா. வேல்முருகன் நூலோதி. P.J. Deoras, Snakes of India, National Book Trust, New Delhi, 1965, சாரோப்போடா டைனோசார்கள் என்னும் சாரோப்போடா ஊர்வனவற்றில் சாரிஷியா துணை வரிசையைச் சார்ந்தவை. இவ்வகை ஊர்வன, சுமார் 405 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, வாழ்ந்து, அழிந்த மிகப் பெரிய டினோசார்கள் ஆகும். இவ்வரிசையில் மிக மிகப் பெரிய புதை படிவங்களான, பிராண்டோசாரஸ், டிப்ளோடோகஸ், பிராக்கியோசாரஸ் என்னும் டைனோசார்கள் அடங்கியுள்ளன. இவற்றின் உடல் நீளம் ஏறக்குறைய 20—25 மீ. வரையும், எடை சுமார் 30—50 டன் வரையும் இருந்தமை அறியப்படுகிறது. எனவே இவை, அனைத்து விலங்குகளிலும் நீளம், எடை ஆகிய அளவுகளில் முதலிடம் பெற்றிருந்தன எனக் கூறலாம். சாரோப்போடா துணை வரிசையில் அடங்கியுள்ள பல்வேறு டைனோசார்கள் பல பொதுப் பண்புகளைப் பெற்றிருந்தன. இவற்றிற்கிடையே. குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் மண்டையோட்டின் எலும்புகளிலேயே காணப்படுகின்றன. மேலும், இவை உடலளவில் மிகவும் பருத்திருந்தமையால், உறுதியான மிகப் பெரிய தூண் போன்ற நான்கு கால்களைப் பெற்றிருந்தன. இருப்பினும், முன்கால்கள், பின்கால்களை விடக் குட்டையாக இருந்தமையால், இவை இரு காலிகள் வழி வந்தவை என்றும் கருதப்படும். இவற்றின் கால் எலும்புகள் தடித்து, வலிவாகவும், உறுதியாகவும் அமைந்துள்ளமையால், மிக அதிக எடை கொண்ட உடலைத் தாங்கிச் செல்லும் ஆற்றல் வாய்ந்தவையாக அமைந்திருந்தன. மேலும் இவற்றின் பாதங்கள், யானையின் பாதங்களைப் போன்று அகன்ற பாதத் திண்டுகளைப் பெற்றிருந்தன. இவ்வமைப்பு, சாராப்போடாக்களின் மிகப் பெரிய உடலைத் தாங்கி எளிதில் நன்கு ஊன்றி நடக்கப் பயன்பட்டிருக்கக் கூடும். கால் விரல்கள் குட்டையாகவும் சிலவற்றில் நகங்கள் வளைவாகவும் அமைந்திருந்தன. பிராண்டோசாரஸ் என்னும் டைனோசார் விலங்குகளில் முன் பாத உள் விரல்களில் மிகப்பெரும் வளை நகங்களும், பின் பாத மூன்று உள் விரல்களில் வளை நகங்களும் காணப்பட்டன. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரத்தில் கீழ்—கிரேட்டேசியப் பாறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சில பிராண்டோசாரஸ்களின் பாதப் பதிப்பில் இருந்து இவற்றின் பாத அளவு, அகன்றதாக இருக்கும் என்பது தெளிவாகிறது. மிக அதிக எடையுள்ள இந்த டைனோசார்களின் இடுப்பு மிகப் பெரியதாகவும், வலிமையாகவும், பட்டை எலும்பு மிக நீளமானதாகவும், உறுதியானதாகவும் அமைந்திருந்தன. கழுத்து, முதுகு எலும்புகள் மிகப் பெரியனவாக இருப்பினும், எடை கூடாமல் இருக்க சென்ட்ராவின் பக்கவாட்டில் அகன்ற குழிகளைக் கொண்டுள்ளன. மேலும், முதுகெலும்புகளில் உள்ள உறுதியான முள்கள் நீண்ட கழுத்து வால் பகுதியில் உள்ள தசைகளைப் பொருத்தப் பயன்பட்டுள்ளன. இவ்விலங்குகளின் மண்டை ஓடு சிறியதாகவும், சுவாசத் துளைகள் அதன் நுனிப் பகுதியிலும் காணப்படுகின்றன. இத்தகவமைப்பினால், இவ்விலங்கினம் நீரில் மூழ்கியிருக்கும் போது, தலையை மட்டும் நீரின் மேல் வைத்துக் கொண்டு, காற்றைச் சுவாசித்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> டிப்லோடோக்கஸ் என்னும் மிகப் பெரிய விலங்கின் பற்கள் மிகச் சிறியவாகவும், உறுதியற்றவையாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. பிராண்டோசாரஸ் எனப்படும் விலங்கிலும் பற்கள் இவ்வாறே அமைந்திருந்தன. மேற்கூறிய பற்களின் அமைப்பிலிருந்து இவ்வகைச் சாரோப்போடாக்கள் தளிர், இலை, தண்டு போன்றவற்றை உண்டு தாவர உண்ணியாக வாழ்ந்திருக்கலாம் என்று தெரிய வருகின்றது. இவற்றின் தாடைகள், பற்களின் அமைப்பிலிருந்து இவை பெரிய கடினமான தாவரங்களையும் உணவாகக் கொண்டன என்றும், சிலவகைச் சாரோப்போடாக்கள், மெல்லுடலிகள் பல விலங்குகளின் தசைகளையும் உண்டு வாழ்ந்திருக்கலாம் என்றும் தெரிய வருகின்றது. இப்பெரிய விலங்குகள் எவ்வாறு இச்சிறிய வாய் மூலமாக உணவு உட்கொண்டன என்பது புலனாகவில்லை. இவ்விலங்குகளின் வளர்சிதை மாற்றம் குறைந்த விகிதத்திலேயே இருந்திருக்கக் கூடும். ஆகவே, இவற்றிற்கு உடல் பெரிதாக இருப்பினும், அதிக உணவு தேவைப்படவில்லை எனக் கருத இடமுண்டு. மேலும், சாரோப்போடாக்கள் சதுப்பு நிலம், ஏரி, ஆறு முதலிய இடங்களில் உள்ள தாவரங்களை உண்டு வாழ்ந்திருக்கக் கூடும். இவ்விடங்களை நோக்கி உணவுக்கு மட்டுமல்லாமல், தம் பாதுகாப்புக்காகவும் சென்றிருக்கலாம். அல்லோசாரஸ் போன்ற எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இவை நீருக்குள் சென்றாலும், தலைப் பகுதி மட்டும் நீருக்கு மேல் இருக்கும்படியான தகவமைப்பைப் பெற்றிருந்தன என்றும் அறியப்படுகிறது. மேற்கூறிய தகவமைப்புகளின் மூலமாக இவ்வகைச் சாரோப்போடாக்கள் மீசோசுவாயிக் காலத்தில் உலகம் முழுதும் பரவி இருந்தன என்பதற்குப் புதைபடிவச் சான்றுகள் உள்ளன. — டி. எஸ். சரவணன் நூலோதி. E.H. Colbert, Evolution of the Vertebrates, Second Edition, John wiley & Sons, New York, 1969; A.S. Romer, The Vertebrate Body, Third Edition, W.B. Saunders Co.. Philadelphia, 1960. சாரோஸ் நான்கு அல்லது ஐந்து லீப் ஆண்டுகளைக் கொண்ட 18 ஆண்டுகள் 11 நாள்கள் அல்லது 10 நாள்களுக்குச் சமமான நாள்கள் 6585 ஆகும். சூரியனைப் பொறுத்து, மேற்கிலிருந்து கிழக்காக ஒரு முறை நகருவதற்குச் சந்திரன் எடுக்கும் காலம் ஒரு சந்திர மாதம் (lunation) எனப்படும். ஒரு சந்திர மாதம் 29.53 நாள்களையுடையதாகும். 223 சந்திர மாதங்களின் நாள்கள் ஏறக்குறைய 6585 ஆகும். மேலும், சூரியன் ஒரு கோள் சந்தியிலிருந்து (node) புறப்பட்டு, மீண்டும் அதே கோள் சந்தியை அடையும் காலம் 346.62 நாள்களாகும். ஆகவே, கோள் சந்திகளின் 19 ஞாயிற்று வழிக் கால வட்டங்களின் (synodic period) நாள்களும் ஏறக்குறைய 6585 ஆகின்றது. இதிலிருந்து 19 ஞாயிற்று வழிக் கால வட்டங்களுக்கும் 223 சந்திர மாதங்களுக்கும் தோராயமாக 6585 நாள்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கால வட்டத்தில், கோள் சந்திகள் பின்னணியில் சூரியன், சந்திரன், புவி மூன்றும் மீண்டும், மீண்டும் அதே இடங்களில் வந்தமையும். 6585 நாள்களுக்கு முன்பு சூரியன், சந்திரன் ஒளி மறைப்பு எவ்வாறு எந்த அளவில் ஏற்பட்டதோ, அவ்வாறே அதே மறைப்பு அதே அளவில் 6585 நாள்களுக்குப் பின்பும் எத்தகைய மாற்றமுமிலாது நிகழும். இவ்வாறாக, ஒரு முறை 6585 நாள்களில் ஏற்படும் மறைப்புகளைக் கணக்கிட்டுத் தெரிந்து கொண்டால், அடுத்தடுத்த கால வட்டங்களில் நிகழக் கூடிய மறைப்புகளைக் குறிப்பிடலாம். இதைச் சால்டிய நாட்டு வானியல் அறிஞர்கள் முதன்முதலாகக் கண்டு பிடித்து, அக்கால வட்டத்திற்கு, சாரோஸ் (saros) எனப் பெயரிட்டனர். சாரோஸை மறைப்புக் கால வட்டம் எனவும் கூறுவர். சால்டிய நாட்டினர் கண்டுபிடித்ததால் கால வட்டத்தை, சால்டியனின் சாரோஸ் (saros of the chaldeans) என்றும் குறிப்பிடுவர். 19 ஞாயிற்று வழிக் கால வட்டத்தில், மிகவும் துல்லியமாகக் கணக்கிடும் போது, 6585.78 நாள்களும், 223 சந்திர மாதங்களில் 6585.32 நாள்களும் உள்ளமையால், மறைப்புகளின் கணிப்பு நேரத்தில் மட்டும் சிறு மாறுதலிருக்கலாம். பொதுவாக, ஒரு சாரோஸ் கால வட்டத்தில் 71 சூரியன் மறைப்புகளும், ஏறக்குறைய 45 சந்திர மறைப்புகளும் நிகழும். —பங்கஜம் கணேசன் சால்காந்தைட் இது ஒரு சல்ஃபேட் கனிமம். இது நீர் கலந்த தாமிர சல்பேட் (CuSO 5H₂O) ஆகும். சால்காந்தைட் (chalcanthite) முச்சரிவுத் தொகுதியைச் சேர்ந்தது. இதில் பக்க வாட்ட படிக அச்சு நீளமாக இருக்கும் இதன் படிக அச்சுகளின் நீளம் a:b:c = 0.5656: 1 : 0.5507 என்ற விகிதத்தில் இருக்கும். இதன் படிக அச்சுகளுக்கு இடையேயான கோணங்கள் α = 82°21′; β= 73°11'; γ= 77°37′ ஆக உள்ளன. சால்காந்தைட் பெரும்பாலும் படிகங்களாகக் கிடைக்கிறது. இதன் படிகங்கள் பட்டகக் கூம்பின் முகத்திற்கு (111) இணையாகவும், தட்டையாகவும் இருக்கின்றன. சால்காந்தைட் திண்மங்களாகவும், கல் விழுதுகளாகவும், முந்திரி வடிவமாகவும் இருக்கும். சில சமயங்களில் இழைகளாகவும் காணப்படும். சால்காந்தைட்டில் (110), (110), (111) முகங்களுக்கு இணையாகத் தெளிவற்ற கனிமப் பிளவுகள் காணப்படும். இது வளைமுறிவும், கண்ணாடி மிளிர்வும் உடையது. இதன் கடினத் தன்மை 2.5; ஒப்படர்த்தி 2.12—2.30. சால்காந்தைட் பல வகையான நீல நிறங்களை உடையது. சில சமயங்களில் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இதன் கீற்று நிறமற்றது. இது நொறுங்கக் கூடியது. ஒளி, கசியும் அல்லது புகும் தன்மையுடையது. இக்கனிமம் அருவெறுப்பான உலோகச் சுவை உடையது. இது நீரில் கரையும். சால்காந்தைட் இரண்டு ஒளி அச்சுகளை உடைய கனிமம். இதன் ஒளி அச்சுகளுக்கு இடையேயுள்ள கோணம் (2 V)=56° ஆகும். இது எதிர்மறை ஒளிக் குறி உடையது. இக்கனிமத்தின் ஒளி விலகல் எண்கள் α = 1.516; β = 1.539; γ = 1.546 ஆகும். செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட சால்காந்தைட்டில் தாமிரத்துடன் இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், கோபால்ட் ஆகியவையும் இருக்கும். சால்காந்தைட், சால்கோபைரைட் முதலிய தாமிர சல்ஃபேட்டுக் கனிமங்கள் ஆக்சிஜனேற்றம் அடைவதால் உண்டாகிறது. சுரங்கங்களிலிருந்து வெளியாகும் நீரிலிருந்து படிவுகளாக இது வெளியேறுகிறது. தாமிரப் படிவுகள் உள்ள இடங்களில் ஆக்சைடு தாரைகளில் இது காணப்படுகிறது. சால்காந்தைட் செக்கஸ்லோவேக்கியா, ஸ்பெயின், கார்ன்வால், பொலிவியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் கிடைக்கிறது. சிலியிலுள்ள பாலைவனப் பகுதிகளில் சால்காந்தைட் பெருமளவில் கிடைக்கிறது. தாமிரத்தோடு, துத்தநாகமும், இரும்பும் உள்ள நீர் கலந்த சல்ஃபேட் [(Zn, Cu, Fe) SO, 5HO] கனிமம் துத்தநாக தாமிர சால்காந்தைட் எனப்படும். இக்கனிமம் வெளிறிய நீல நிறமுடையது. எதிர் மறை ஒளிக் குறி உடையது. இதன் ஒளிவிலகல் எண்கள் சால்காந்தைட்டின் ஒளி விலகல் எண்களை விடச் சற்றே குறைவாக இருக்கும். —இல. வைத்திலிங்கம் நூலோதி. L.G. Berry and B. Mason, Mineralogy, W.H. Freeman & Co., Sanfrancisco, 1961. சால்க்கோசைட் இது CuS உட்கூறு கொண்ட கனிமமாகும். சால்கோசைட் (chalcocite) செஞ்சாய்சதுரத் தொகுதியைச் (orthorhombic system) சேர்ந்தது. படிகங்கள் அரியவாகவும், சிறியனவாகவும் காணப்படுகின்றன. இரட்டுறலால் படிகங்கள் அறுகோண எல்லை வரையைப் பெற்றுள்ளன (படம்), இக் கனிமம் பெரிதும் நுண் மணிகளாகவும், திரட்சியாகவும் காணப்படும். சால்கோசைட் உலோக மிளிர்வுடையது; பளபளப்பான ஈயச் சாம்பல் நிறமுடையது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> படிகங்கள் போலி உருவ அறுகோணங்களைக் கொண்டும், இரட்டுறல் படிகத் தன்மையைப் பெற்றும் காணப்படும். இரட்டுறல் படிகத்தளம் (110) பட்டகத்தில் காணப்படும். இரட்டுறல் படிகத் தன்மை (032) அல்லது (112) பக்கத்தில் அரிதாகக் காணப்படும். வழக்கமாகத் திண்ணிய உருவைப் பெற்றுக் கட்டமைப்புத் திண்துகள் அமைப்பு முதல் இறுகிய துகள் வடிவு அமைப்பு வரை காணப்படும். இது ஈருருவமாதல் (dimorphism) தன்மையுடன் காணப்படும். 91°Cக்கு மேல் செஞ்சாய் சதுரத் தொகுதி உருவம் உடையது. சம அச்சுத் தொகுதிப் படிக உருவத்திற்கு மாறக் கூடியது. செயற்கைச் சால்கோசைட் படிகங்கள் கன சதுர வடிவம் (100), எண்முக வடிவப் (111) பக்கங்களில் இரட்டுறல் தன்மையுடன் காணப்படும். பிளவு, பட்டகப் பக்கத்தில் (110) குறிப்பிடுமளவில் காணப்படும். சங்கு முறிவு உடையது. ஒளி புகாத் தன்மையுடன் காணப்படும். உட்செறிவு. தாமிர சல்ஃபைடு (Cu₂S), கந்தகம் 20.2%, தாமிரம் 79.8%, சில சமயம் இரும்பு, வெள்ளி முதலியவை சிறிய அளவில் சேர்ந்து காணப்படும். அமிலத்தில் கரையும் தன்மை உடையது. இக்கனிமம் வெள்ளிக் கனிமமான அர்ஜென்டைட் போல் காணப்படும். ஆனால், இது எளிதில் உடையக் கூடியது. சால்கோசைட் செயற்கையாகத் தாமிர குளோரைடு வளிமத்தையும், ஹைட்ரஜன் சல்ஃபைடு வளிமத்தையும் சூடுபடுத்தித் தயாரிக்கப்படுகிறது. சால்கோசைட்டைத் தனித் தாமிரமாகவோ, சால்கோபைரைட்டாகவோ, போர்னைட், கோவிலைட், மாலகைட், அசூரைட் போன்று மாற்ற முடியும். தோன்றுமிடம். தாமிரத்தின் விலை உயர்ந்த தாதுவான இது, பரந்து காணப்படுகிறது. சால்கோசைட் தோன்றுமிடத்தை அறிவது மிகவும் கடினம். இது பெரும்பாலும் சல்ஃபைடு செறிவூட்ட முறையில் (sulphide enrichment) உண்டான கனிமமாகக் காணப்படும். திறந்த நிலையில் இக்கனிமத்தின் மேல் மாசு போன்ற கறை படிய, இது வெளிர் கறுப்பாக மாறுகிறது. கத்தியால் இக்களிமத்தை வெட்டினால், சீரற்ற முறையில் உடைகிறது. மோஸ் அளவில் இதன் கடினத் தன்மை 2.5; ஒப்படர்த்தி 5.7. செயற்கைக் கனிமம் 5.785 வரை பெற்றுக் காணப்படும். இது செம்பின் முக்கியமான தாதுவாகும். மியாமி, மொரென்சி, பிஸ்பி, ஆரிஸ் முதலிய இடங்களிலுள்ள சல்ஃபைடு படிவுகளில் காணப்படுகிறது. —அ.வே. உடையனபிள்ளை —இரா. சரசவாணி சால்கோபைரைட் <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> இது ஒரு சல்ஃபைடு கனிமம் ஆகும். இது தாமிரம், இரும்பு ஆகிய இரண்டின் சல்ஃபைடு (CuFeS) ஆகும். இதைத் தமிழில் பித்தளை நிமளை என்று கூறுகின்றனர். இதற்கு, தாமிர-பைரைட் (copper pyrite), மஞ்சள் தாமிரத் தாது (yellow copper ore) என்னும் வேறு பெயர்கள் உண்டு. சில சமயங்களில் தங்கம், வெள்ளி ஆகியவை சிறிய அளவில் இருக்கும். சால்கோபைரைட் (chalcopyrite) நீள் சதுரத்- தொகுதியின் ஸ்பீனாய்டு வகுப்பைச் சேர்ந்தது. இதன் படிகக் குத்து அச்சின் நீளம் C = 0.98525 ஆகும். சால்கோபைரைட் பெரும்பாலும் நான்முக வடிவப் படிகங்களாகவும், ஸ்பீனாய்டு வடிவத்துடன் சேர்ந்தும் காணப்படுகிறது. சால்க்கோபைரைட் படிகங்கள் (111) தளத்தில் இரட்டுறல் உடையனவாய்க் காணப்படுகின்றன. (101), (110) தளங்களிலும் படிக இரட்டுறல் காணப்படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சால்கோபைரைட் திண்மமாகவும், கெட்டியாகவும், குமிழ்குவை அல்லது முந்திரி வடிவமாகவும் காணப்படுகிறது. இதில் கனிமப் பிளவு (201) தளத்திற்கு இணையாகச் சில சமயங்களில் தெளிவாகக் காணப்படும். சீரற்ற முறிவு உடையது; நொறுங்கக் கூடியது. இதன் கடினத் தன்மை 3.5—4; ஒப்படர்த்தி 4.1—4.3; உலோக மிளிர்வு உடையது, சால்கோபைரைட் பித்தளை அல்லது வெண்கலம் போன்ற மஞ்சள் நிறம் உடையது. இதன் தூள் நிறம் பசுமை கலந்த கறுப்பு. ஒளிப் புகாத் தன்மையது. இது நைட்ரிக் அமிலத்தில் கரையும். சால்கோபைரைட் தோற்றத்தில், பொன் போலவே இருக்கும். ஆகையால் இதைச் சிலர் முட்டாளின் தங்கம் (fool's gold) என்பர். தங்கம், சால்கோபைரைட் இரண்டையும் அவற்றின் தூளின் நிறத்தைக் கொண்டு எளிதில் வேறுபடுத்தி அறியலாம். சால்கோபைரைட் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. பைரைட்டுடன் தாமிர சல்ஃபைடு சேர்த்து உருக்கியும், தாமிர, இரும்பு ஆக்சைடுகளை ஹைட்ரஜன் சல்ஃபைடு வளிமத்தைச் சூழ வைத்துச் சூடாக்கியும் தயாரிக்கின்றனர். சால்கோபைரைட், பைரைட், போர்னைட், சால்கோசைட், டெட்ராஹைட்ரேட், மாலக்கைட், அஸீரைட் முதலிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படும். சில சமயங்களில் கலீனா, ஸ்பேலரைட், ஆர்சினோபைரைட், காசிட்டரைட் முதலிய தாது, கனிமங்களுடனும் கிடைக்கின்றது. சால்கோபைரைட் அதிக வெப்ப நிலையில் உண்டான வெப்ப நீர்ப் படிவுத் தாரைகளிலும், தொடு ஏற்புப் பாறையின் மாற்றப் படிவுகளிலும் காணப்படுகின்றது. இது அனற்பாறை, பெக்மடைட் பாறைகள், நைஸ், படலப் பாறை (schist) முதலிய மாற்றுருப் பாறைகளிலிருந்தும் கிடைக்கிறது. சால்கோபைரைட் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் சால்கோபைரைட் ஏனைய தாமிரத் தாதுக்களுடன் சிங்பும், மொசபானி, ஆந்திரத்திலுள்ளஅக்னி குண்டலா, ஜபல்பூர், சிக்கிம், கர்நாடகா (கோலார்) முதலான பகுதிகளில் காணப்படுகின்றது. சால்கோபைரைட், தாமிரத்தின் முக்கிய தாதுப் பொருள்களில் ஒன்றாகும். சால்கோபைரைட் என்னும் பெயர் சால்கோஸ் என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. —இல. வைத்திலிங்கம் நூலோதி. W. E. Ford, Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Pvt. Ltd, New Delhi, 1985. சால்சிடொனி இது குவார்ட்ஸ், சிலிக்கான் டைஆக்சைடு உடைய நுண் மணி இழை வகையாகும். இக்கனிமத்திலுள்ள தனி இழைகளை நுண்ணோக்கியால் மட்டுமே காணலாம். மாசுகளால் ஏற்படும் நிறத்தின் அடிப்படையில் சால்சிடொனி (chalcedony) பல வகை- யாக உள்ளது. பழங்காலத்தில் இது அருமணிப் பொருளாக மதிக்கப்பட்டது. அடர் சிவப்பிலிருந்து தெளிவான சிவப்பு நிறமுடைய, அரை ஒளி ஊடுருவும் கார்நெல்லியன் மணிக்கல், ஆரஞ்சு—பழுப்பு முதல் சிவப்புப் பழுப்பு நிறம் கொண்டது. சார்டு (sard) படிகக் கல், ஆப்பிள் பச்சை நிறமான கிரைசோபிரேஸ் (chrysoprase) கல் முதலியவை இதில் அடங்கும். சால்சிடொனி சில சமயங்களில் மரவடிவுடைய துகள்களைப் பெற்றுள்ளது. இரும்பு ஆக்சைடு (கார்நெல்லியன், சார்டு), நிக்கல் (கிரைசோபிரஸ்), மாங்கனீஸ் முதலிய மாசுகள் சால்சிடொனிக்கு நிறத்தை அளிக்கின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சில சமயங்களில் இது புவியோடுகளாக உருண்டையான, திரட்சியான திராட்சைக்கொத்து (botryoidal surface) மேற்பரப்புகளுடன் காணப்படுகிறது. முடிச்சு மற்றும் படுகைச் செர்ட்டுகளின் முக்கிய உட்கூறுகளாகவும் காணப்படுகிறது. மோஸ் அளவில் இதன் கடினத் தன்மை 6.5—7; ஒப்படர்த்தி 2.57—2.64. சால்சிடொனியின் மிகுநுண் கட்டமைப்பில் நுண் படிகக் குவார்ட்சுடன் நுண் துளைகள் உள்ளனவாக எக்ஸ் கதிர் மற்றும் எலெக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் கண்டறியப்படுகிறது. படிகமற்ற சிலிக்கா துகள்கள் 10% க்குக் குறைவாகக் காணப்படுகின்றன. நுண் துளைகளால் ஏற்படும் ஒளிச் சிதறலால் மஞ்சள் நிறம் காணப்படுகிறது. தொல்லூழிக் கால (paleozoic) மற்றும் பழங்காலச் சால்சிடொனி இளம் சால்சிடொனியை விடப் பருவெட்டுப் படிகமாகக் (coarse crystal) காணப்படுகிறது. புவியோட்டிலுள்ள சால்சிடொனி, மேற்பரப்பில் ஒரே மையத்தைக் கொண்ட தெளிவான அடுக்குகளைக் கொண்டுள்ளது. அகேட், பொதுவான முக்கியமான சால்சிடொனி வகையாகும். இதில் காணப்படும் அடுத்தடுத்த அடுக்குகள் (successive layers) நிறம், ஒளி ஊடுருவும் பண்பு ஆகியவற்றில் வேறுபடுகின்றன. சால்சிடொனி மற்றும் அகேட்டின் அடுத்தடுத்த அடுக்குகள் புரைமையில் (permeability) வேறுபடுகின்றன. நிறமுள்ள அகேட் செயற்கைச் சாயங்கள், கனிம வேதிக் கூட்டுப்பொருள்கள் முதலியவற்றால் நிறமேற்றப்பட்டு வணிக முறையில் விற்கப்படுகிறது. —இரா. சரசவாணி நூலோதி. A. V. Milovsky. Mineralogy and Petrography, First Edition, Mir Publishers, Moscow, 1982. சால்ப்பா முதுகு நாண் உயிரிகளில், வால் நாணுடைய வகையைச் சார்ந்த இது பாலிலி உருவம், பால் உருவம் ஆகிய இரண்டு உருவங்களைக் கொண்டு காணப்படுகிறது. வாழ்க்கை வரலாற்றில் இரண்டு உருவங்களும் மாறி, மாறி வருவதால், இது தலைமுறை மாற்றத்தைப் பெற்றுள்ளது. முட்டையிலிருந்து பாலிலி சினைச் சுற்றுயிரியாக (oozoid) வளர்ச்சி அடைந்து இனச்செல் சுரப்பியற்று நீண்ட கொடியைப் (stolon) பெற்றுக் காணப்படும். பீப்பாய் வடிவத்திலும், ஒளி ஊடுருவும் தன்மையிலும் உள்ள இது சமச்சீருடன், ஆழமற்ற கடற்பகுதியில் காணப்படும். செவுளும், ஏட்ரியத் துளையும் எதிரெதிர் முனைகளில் காணப்படுகின்றன. ஏழு தசைப் பட்டைகள் அடிப்புறத்தில் முற்றுப் பெறாமல் உடலைச் சுற்றிக் காணப்படுகின்றன. இவை சுருங்குவதால், ஏட்ரியத்துளை வழியாக நீர் பீறிட்டு அடிக்கப்பட்டு, உயிரி முன்னோக்கித் தள்ளப்படுகிறது. பின் முனையில் இரைப்பை, குடல், குழல் சுரப்பி (pyloric gland) ஆகிய மூன்றும் ஒரே தொகுப்பாக உள்ளமையால், இது உட்கரு எனப்படுகிறது. முதல் இணைச் செவுள் பிளவுகள் ஒரு பெரிய தனியான குற்றிழைச் செவுளாகச் செவுள் மேல் சட்டகமாக (hyper branchial bar) மாறியுள்ளன. பாலிலி உருவில் காணப்படும் கொடி நீண்டு, அரும்புகளைக் கொண்ட சங்கிலியாகப் பிரிகிறது. இவ்வரும்புகள் வளர்ந்து, இனப்பெருக்கச் சிற்றுயிரியாக (blastozooid) மாறுகின்றன. இனப் பெருக்க உயிரி இனச் செல் சுரப்பியைக் கொண்டும், கொடியற்றும் காணப்படுகிறது. இது பாலிலி உருவை ஒத்துக் காணப்பட்டாலும், உடல் சமச்சீரற்று, ஒரு சில தசைப் பட்டைகள் மட்டுமே காணப்படும். இதன் உடலுள் தொண்டைச் சுவரின் மேல் கரு வளர்கிறது. வளர்கரு கொப்பூழ்க் கொடி (placenta) மூலம் தேவையான உணவைப் பெறுகிறது. வளர்ச்சியுற்ற கரு தனிப் பாலிலி சினைச் சிற்றுயிரியாகத் தாய் உயிரியிடமிருந்து வெளியேறி முதிர்ச்சி பெறுகிறது. உலகெங்கும் இவ்வுயிரி பரவலாகக் காணப்படுகிறது. —மு. சங்கரன் நூலோதி. E. L. Jordan and P.S. Verma, Chordate Zoology and Animal Physiology, S. Chand and Co. Ltd., New Delhi, 1983. சால்பியூட்டமால் இம்மருந்து β ஏற்பிகளை மட்டும் தனித்துத் தூண்டும் திறன் உடையது. இது சாலிகினின் என்ற வேதிப் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. N-மூவிணைய பியூட்டைல் தொகுப்பு இதில் பக்கச் சங்கிலியாக (side chain) உள்ளது. இதன் அமைப்பு கீழ்வருமாறு அமைந்துள்ளது. செயல்திறன். β ஏற்பிகளை மட்டும் இது தனித்துத் தூண்டுவதால் ஏற்கப்பட்ட மருந்தியல் அளவுகளில், இதயத் தூண்டுதல் எதுவுமின்றி, மூச்சுக் குழாயை விரிவடையச் செய்கிறது. மேலும், ஒவ்வாமையின் விளைவாக நுரையீரல் களஞ்சிய நுண்ணியங்களிலிருந்து (mast cells) ஹிஸ்ட்டமின், வியூகோட்ரின் போன்ற வேதிப் பொருள்களின் வெளியேற்றத்தைத் தடுக்கிறது. ஆஸ்த்துமா நோய் நிலைகளில், சுவாசக் குழல் அடைப்பு, மூச்சுக் குழல் இறுக்கம், சளி இறுகல், மூச்சுக் குழல் சீதச் சவ்வு வீக்கம் போன்றவை காரணமாகின்றன. இவை அனைத்தும் β ஏற்பிகளைத் தூண்டுவதன் மூலம் தடுக்கப்படுகின்றன. மேலும், ஆக்சிஜன் குறைந்த நிலைகளில் (hypoxic states) கார்பன் டைஆக்சைடின் சுவாச இயக்கத் தூண்டு திறனைச் சால்பியூட்டமால் அதிகரிக்கிறது. மருந்தியல் இயக்கம். இம்மருந்தை அழுத்தத்துடன் கூடிய காற்றுக் கரைசலாக (aerosol) மூச்சு உள்ளிழுக்கும் போது, நேரடியாக வாய் வழியே மூச்சுக் குழலை வந்தடையுமாறோ, வாய் வழியாக வில்லை அல்லது நீர்ம வடிவிலோ, ஊசி மூலமோ உடலினுள் செலுத்த இயலும். காட்டகால்—O—மெத்தில் டிரான்ஸ்ஃபரேஸ் அல்லது சல்ஃபட்டேஸ் இவற்றின் மூலம் இது திறன் இழக்காமல் நீண்ட நேரம் β ஏற்பிகளைத் தூண்டுகிறது. சராசரியாக இம்மருந்தின் இயக்கம் சுமார் 4 மணி நேரம் வரை இருக்கும். மருந்தின் பயன். ஆஸ்த்துமா நோய் மருத்துவத்தில் இது பெரிதும் பயன் அளிக்கிறது. இம்மருந்தை 4 மி.கி. கொண்ட வில்லைகளாகவோ, நீர்மமாகவோ வாய் வழியாகச் செலுத்தலாம். இவ்வகை மருத்துவத்தில் வாய் வழிச் செல்லும் மருந்தில், உடல் ஏற்கும் மருந்தின் அளவு நிலையாக இல்லாமை குறிப்பிடத்தக்கது. சுமார் 100 மைக்ரோ கிராம் அளவு மருந்தை நேரடியாக வாய் வழி அளித்தால், மூச்சுக் குழலை வந்தடைகிறது. சாதாரணமாக, நான்கு மணிக்கு ஒரு முறை, மேற்கூறியவாறு ஒன்று அல்லது இரண்டு முறை இம்மருந்தைப் பயன்படுத்தினால் மிகு நன்மை கிட்டும். மேற்கூறிய முறை பயன் அளிக்காத நிலையில், மருந்தை ஊசி மூலம் தோலுக்கு அடியில் அல்லது தசையினுள் 500 மைக்ரோகிராம் அளவில் 4 மணிக்கு ஒரு முறை செலுத்தலாம். சில நேரங்களில் 250 மைக்ரோகிராம் அளவு மருந்தை இதய நோய்க்குக் குருதி நாள வழியே மிக மெதுவாகச் செலுத்துவது தொடர் மூச்சு இளைப்பு நிலைகளில் (status asthmaticus) பெரிதும் உதவும். மூச்சு இளைப்புத் தீவிரமாக உள்ள நிலைகளில் உதவும் வண்ணம் தற்போது இவ்வேதி மருந்து மூச்சு இயக்கிக் கரைசலாகவும் கிடைக்கிறது. 0.5% சால்பியூட்டமால் கரைசல் மருந்து அதிக அளவு ஆக்சிஜன் கலந்த காற்றுடன், விட்டு விட்டு நேர்முக அழுத்த முறையாக மூச்சு இயக்கி மூலம் செலுத்தப்படுகிறது. இம்முறையில் சுமார் 10 மி.கி. சால்பியூட்டமால் 3 நிமிடங்களில் செலுத்தப்படுகிறது. சூலுற்ற பெண்களின் இறுதிப் பருவத்திற்கு முன்பே நிகழும் சிக்கலற்ற மகப்பேற்றின் போதும் இம்மருந்து பயன்படுகிறது. கைத்தசை நடுக்கம், மார்புப் படபடப்பு ஆகியவை வாய் வழியே அதிக அளவு மருந்தினை ஏற்கும் நிலைகளில் தோன்றும் விரும்பத் தகாத பக்க விளைவுகள் ஆகும். —கே.என். ராஜன் சால்மன் இது சால்மோனிடே என்னும் மீன் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இக்குடும்பத்தில் சால்மன் (salmon), டிரவுட், கிரேலிங், ஸ்மட்ஸ் போன்ற மீன்கள் அடங்கும். பசிபிக் பெருங்கடல் சால்மன் மீன், ஆன்கோரிங்கஸ் என்னும் பேரினத்தைச் சார்ந்தது. ஆன்கோரிங்கஸ் என்ற சொல் ரஷிய மொழி வழியாகும். வட அமெரிக்காவில் அமெரிக்கர்களின் குடியேற்றத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே சைபீரியா, அலாஸ்கா போன்ற இடங்களில் காணப்பட்ட இம்மீன்களின் அமைப்பினால் ரஷியர்கள் சால்மன் எனப் பெயரிட்டனர். சால்மன் மீனின் வாழ்க்கை முறை மிகவும் எளிமையாகக் காணப்படுகிறது. கடலில் வாழும் இம்மீன் இனப் பெருக்கம் செய்ய நன்னீர் நிலைகளை நாடிச் செல்கிறது. இச்செயல் ஓர் உள்ளுணர்வுத் தூண்டுதலால் நிகழ்கிறது. ஆற்றின் வேகத்தையும், நீர் வீழ்ச்சியின் வேகத்தையும் பொருட்படுத்தாது எதிர்த்து நீந்தி, ஆறு உற்பத்தியாகிற பகுதியைச் சென்றடைந்து, அதன் மென்மையான நீரோட்டத்தில், நீரின் அடிப்பரப்பின் மணலிலோ, கற்களின் குவியலிலோ கூடு கட்டி முட்டைகளை இடுகிறது. முட்டையிட்ட பின்பு அல்லது கடல் நோக்கித் திரும்பிச் செல்கின்ற பயணத்தில் இறந்து விடுகிறது. நீர் வீழ்ச்சிகளைக் கடந்து செல்வதற்குத் தன் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்திக் குதித்துத் தாவி நீந்திச் செல்லும் வல்லமையுடையது. உலகில் சால்மன் மீன் வகைகள் வட அட்லாண்டிக் பெருங்கடல, வட பசிபிக் பெருங்கடல் ஆகிய இரு இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவிலிருந்து, வட அமெரிக்காவில் அலாஸ்கா பகுதி வரையிலும், ஆசியா கண்ட சைபீரியா நாடு வரை பரவியுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியிலும், பசிபிக் சால்மன் மீன்கள் காணப்படுகின்றன. வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதியிலிருந்து, ஐரோப்பிய நாடுகளின் மேற்குப் பகுதி வரை பரவியுள்ள வட அட்லாண்டிக் பெருங்கடலில் அட்லாண்டிக் சால்மன் மீன் வகைகள் வாழ்கின்றன. இவ்விரு பெருங்கடல் பகுதிகளிலும் மித வெப்பச் சூழ்நிலைக்கேற்றவாறு நீரின் தன்மை குளிர்ச்சியாக இம்மீன்கள் வாழ்வதற்கேற்ற வகையில் உள்ளது. அட்லாண்டிக் பெருங்கடல் சால்மன் மீன்கள் மெய்லி, புதிய ஹாம்சயர், வெர்மான்ட், கனடா நாட்டின் வடபகுதி ஏரிகள் போன்ற உள்நாட்டு நன்னீர் நிலைகளில் தேக்கப்பட்டு, நிலைத்து இனப் பெருக்கம் செய்து வாழ்கின்றன. இதனால், சால்மன் மீன்களின் கடல் நீர் செல்கின்ற தன்மை தடைப்பட, அவை நன்னீர் நிலைச் சூழல் வாழ்க்கையை மேற்கொள்கின்றன. சால்மன் மீன் இலையுதிர் காலத்தில் கடலிலிருந்து தன்னுடைய நன்னீர்ப் பயணத்தை இனப் பெருக்கம் செய்வதற்காகத் தொடங்குகிறது. அப்பயண முடிவில் அமைதியான ஆனால், வேகமான நீரோட்டம் ஏற்படுத்தும் ஆக்சிஜன் கரைந்துள்ள ஆழம் குறைந்த கூழாங்கற்களின் பரப்பையோ, மணற் பரப்பையோ கூடு கட்டி முட்டையிடத் தேர்ந்தெடுக்கிறது. அவ்விடத்தில் வால் துடுப்பின் சுழற்சியால் கற்களையும், மணலையும் விலக்கிப் பள்ளம் ஏற்படுத்திக் கூடு கட்டுகிறது. இக்கூட்டின் குறுக்களவு 5—6 அடி விட்டமுடையதாகவும், தூய்மையாகவும் தென்படும். ஒவ்வொரு பெண் சால்மன் மீனும் சுமார் 10,000 சிவப்பு நிறமுடைய சிறிய பட்டாணி அளவுள்ள கோள வடிவ முட்டையிடுகிறது. பின்பு, ஆண் சால்மன் மீன் அம்முட்டைகளின் மீது விந்து தெளித்துக் கருவுறச் செய்கிறது. ஒவ்வொரு 5000 முட்டைகளுக்கு 50 முட்டைகள் வீதம் பொரிந்து, இளம் மீன் குஞ்சுகள் வெளி வருகின்றன. பெண், ஆண் சால்மன் மீன்கள் முறையே முட்டையிட்டுக் கருவுறச் செய்த பின்பு, செதில்கள் நிறமிழந்து, தோலின் தன்மை மாறி, துடுப்புகள் சிதைந்து இறக்கின்றன. இந்நிலையில் இம்மீன்கள் சுவையற்றனவாகவும் உண்பதற்கு ஏற்றனவாகவும் மாறிவிடுகின்றன. முட்டையிலிருந்து 2—2½ மாதங்களில் இளம் குஞ்சு மீன், வயிற்றுப் பகுதியில் பெரிய கருவுணவுப் பையுடன் வெளி வருகிறது. இக்கருவுணவுப் பை மறைந்து, மீன் குஞ்சு மீன் உருப்பெற மேலும் இரண்டு மாத காலமாகும். மீன் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளி வந்து, ஓராண்டு இந்நன்னீர் நிலைகளில் வாழ்ந்த பின்பு, உள்ளுணர்வுத் தூண்டலால் அவ்விடத்தை விட்டு வெளியேறுகின்றன. அப்போது, இம்மீன்கள் சுமார் ஐந்து அங்குல நீளமும், பிற சிறு மீன்களை உணவாக உட்கொள்ளும் தன்மையும் கொண்டுள்ளன. முட்டையினின்றும் வெளி வந்த இடத்தை விட்டு வெளியேறிய இம்மீன்கள், நீரோட்டத்துடன் செல்லும் வழியில், பல தடைகளைத் (நீர் மாசுபடுதல், கொக்கு, வாத்து, மீனுண்ணும் பாலூட்டி போன்ற எதிரிகள்) கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளமையால், ஒரு சில சால்மன் மீன்கள் மட்டுமே கடல் நீருக்கு வருகின்றன. இச்சால்மன் மீன்கள் எவ்வாறு கழிமுகத்தைக் கடந்து நீண்ட தொலைவிற்குச் செல்கின்றன என்பது புலனாகவில்லை. வட பசிபிக் பெருங்கடல் பகுதி நாடுகளுக்கும், வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி நாடுகளுக்கும் மீன் பிடி தொழில் உள்ளமையால், இந்நாடுகளிலிருந்து பெருமளவில் இம்மீன்கள் ஏற்றுமதியாகி அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்றன. வளர்ந்து வரும் சமுதாயத்தில், தற்போது ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டி விடுவதால், இம்மீன்களின் நன்னீர்ப் பயணம் பெருமளவில் தடைப்படுகிறது. அதற்கேற்றவாறு, சால்மன் மீன்களின் நன்னீர்ப் பயணத்தின் போது, இம்மீன்களைப் பிடித்துச் செயற்கை முறைப் பண்ணைகளில் முட்டைகளையும், விந்தையும் திரட்டிக் கருவுறச் செய்கின்றனர். பின்பு கருவுற்ற முட்டைளில் தனிக் கவனம் செலுத்தி, மீன் குஞ்சுகளைப் பொரிக்கச் செய்கின்றனர். முட்டைகளையும், விந்தையும் திரட்டிய பிறகு அம்மீன்களை உண்கின்றனர். சினாக் சால்மன், சாக்கேயி சால்மன், வெள்ளிச் சால்மன், சிவப்புச் சால்மன், சம்சால்மன் போன்றவை வணிகச் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்தியாவில் நீலகிரி மலையிலுள்ள நன்னீர் நிலைக்கு 1867ஆம் ஆண்டு சென்னை ஆளுநராக இருந்த சர். வில்லியம் டென்னிசன் மூலம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட சால்மன் மீன் இனம் நன்கு நிலைத்து வளர்ந்து, இனப்பெருக்கம் செய்யவில்லை. இவ்வாய்வு வெற்றி பெறாமைக்கு, அம்மீனினச் சினைச் செல்களைப் பனிக் கட்டி மூலம் கொண்டு வந்ததும், நீலகிரி மலையில் காணப்பட்ட வேறுபட்ட சூழ்நிலை மண்டலமும் காரணம் ஆகும். —பா. வேல்முருகன் சால்வியா இது லேமியேசி எனும் இரு வித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறு செடியாகும். இது சுமார் 700 சிற்றினங்களைக் கொண்ட பேரினம். சால்வியா (salvia) செடிகள் சேஜ் எனப்படுகின்றன. இவை 6—15 அங்குலம் உயரம் வளரும் தன்மையுடையவை. சில, புதர்ச் செடிகள் போன்று வளரும் இயல்புடையவை. சால்வியா செடியின் இலைகளும், தண்டும் நறுமணம் கொண்டவை. பொதுவாக லேமியேசி குடும்பத்தில் இனிய மணம் கொண்ட எண்ணெய் வகைகள் மிகுதியாக உண்டு. சால்வியாவின் தண்டு, குறுக்குத் தோற்றத்தில் சதுர வடிவம் கொண்டது. இதன் பூக்கள் இரு உதடுகளைக் கொண்டவை. பூக்கள் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், ஊதா, கருஞ்சிவப்புப் போன்ற நிறங்களில் மலர்கின்றன. பூவில் இரண்டு மகரந்தத் தாள்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும், ஒரு மகரந்தப் பகுதி (anther lobe) வளமுடையதாக இருக்க, மற்றொரு மகரந்தப் பகுதி மட்டும் மலடாகிறது. இவ்விரு மகரந்தப் பகுதிகளும், அவற்றின் இணைப்புத் திசு (connective tissue) வளைந்து நீட்சி பெறுவதால், தனிப்படுத்தப்படுகின்றன. இணைப்புத் திசு மகரந்தக் கம்பியின் மேல் எளிதாக அசையும் தன்மை கொண்டுள்ளது. இந்த அமைப்பின் மேல்புறம் இருப்பது வளமான மகரந்தப் பகுதி, கீழே இருப்பது மலட்டுப் பகுதியாகும். மகரந்தச் சேர்க்கையின் போது, இந்த அமைப்பு நெம்பு கோல் போல வேலை செய்யப் பெரிதும் பயன்படுகிறது. வண்டு பூவின் உள்ளே நுழையும் போது, மகரந்தத தாள்களின் இரண்டு மலட்டுப் பகுதிகளையும் முட்டியவாறு, பூவினுள் செல்லும். அப்போது இணைப்புத் திசு கீழ் நோக்கி வளைய, வளமான மகரந்தப் பகுதி வண்டின் முதுகில் மகரந்தத்தைத் தெளிக்கிறது. வேறு பூவிற்குள் இவ்வண்டு நுழையும் போது, அப்பூவின் சூல்முடி வளைந்து, வண்டின் முதுகில் உள்ள மகரந்த் தூளை ஏற்கிறது. இந்த அயல் மகரந்தச் சேர்க்கை, சால்வியாவில் ஒரு தனித் தன்மையுடைய மகரந்தச் சேர்க்கை முறையாகும். புல்லிவட்டம். இது இரு உதடுகளைக் கொண்டதாகும். மேலுதடு 3 புல்லி இதழ்களாலும், கீழுதடு 2 புல்லி இதழ்களாலும் ஆனவை. அல்லி வட்டம். இது இணைந்து இரு உதடுகளைக் கொண்டிருக்கும். மேலுதடு 2 அல்லி இதழ்களாலும், கீழுதடு 3 அல்லி இதழ்களாலும் ஆனவை. மேலுதடு நாகப்பாம்பின் படம் போன்று அமைந்துள்ளது. கீழுதடு பெரியது; மூன்றாகப் பிரிந்திருக்கும். சால்வியா செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. சால்வியா ஸ்பிலென்டன்ஸ் (salvia splendens) என்பதன் பூக்கள் நல்ல சிவப்பு நிறமுடையவை. இது பிரேசிலைச் சேர்ந்தது. எனினும், உலகின் பல பகுதிகளிலும் தோட்டச் செடியாக வளர்க்கப்படுகிறது. தோட்டத்து அழகு தாவரமாக சால்லியா ஃபாரினேசியா (salvia farinacea) எனும் செடியைக் குறிப்பிடலாம். இதன் பூக்கள் ஊதா நிறம் கொண்டவை. பயன்கள். புதர்ச் செடி அளவிற்கு வளரும் சால்வியா அஃபிசினாலிஸ் (salvia officinalis) உணவின் முக்கிய மணப் பொருளாகப் பயன்படுகிறது. இது பரவலாக வளர்க்கப்படும் செடியாகும். தூவிகள் கொண்ட பசுமையான இலைகள் மிகுந்த மணமுடையவை. பழங்காலத்திலிருந்து, இவை <!---- இவை என்ற சொல்லே பன்மைதான். இவைகள் என்பது தவறு. ---->மருத்துவத்தில் பயன்பட்டு வருகின்றன. இதனின்று பெறப்படும் எண்ணெயை மணப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். பழங்குடிமக்கள் சால்வியா செடியால் மரணமடையாதிருக்க முடியும் என நம்பினர். இச்செடிக்குப் பற்களைப் பாதுகாக்கும் பண்பு இருப்பதாகக் கூறுவர். இத்தாவரத்தை இருமல், காயங்கள் போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாம். மேலும் குருதியைத் தூய்மைப்படுத்தவும் இது பயன்படுகிறது. சால்வியா புமிலா, சால்வியா ஸ்பைனோசா, சால்வியா ஏஜிப்டியாகா, சால்வியா ஹிமட்டோடிஸ், சால்வியா மூர்கிராஃப்டியானா என்பவை மருத்துவத்திற்குப் பயன்படும் சால்லியாச் சிற்றினங்கள் ஆகும். சால்வியா ஏஜிப்டியானாவின் விதைகள் பேதி போன்ற நோயைக் குணப்படுத்த வல்லவை. மெக்சிகோவிலும், அமெரிக்காலின் சில இடங்களிலும் நீர் வேட்கையைத் தணிக்கும் நீர் இதன் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவ்விதைகள் சத்தான உணவாகவும் உள்ளன. குருதிச் சோகைக்கு மருந்தாகச் சால்வியா ஹிமடோடிஸ் பயன்படுகிறது. இருமலைப் போக்கும் மருந்தாகச் சால்லியா மூர்கிராப்டியானா பயன்படுகிறது. —எல். வசந்த்சிங் நூலோதி. A.F. Hill, Economic Botany, Tata McGraw-Hill Publishing Company, London, 1952. சாலஞ்சர் ஆய்வுப் பயணம் பெருங்கடல்களின் நீரியல்புகள் பற்றியும், அவற்றில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள் பற்றியும், ஆழ்கடலில் வாழும் வியத்தகு உயிரினங்கள் பற்றியும் ஆராயச் சில கடல் ஆய்வுப் பயணங்கள் ஆங்காங்கே நடைபெற்ற போதும், இங்கிலாந்து நாட்டின் தேம்ஸ் ஆற்றின் கழிமுகத்திலிருந்து 1872ஆம் நாள் கிளம்பிய H.M.S சாலஞ்சர் எனும் ஆய்வுக் கப்பல் உலகப் பெருங்கடல்களில் நடத்திய ஆய்வுப் பயணம் கடலறிவியலில் பெருஞ்சாதனையாகும். சுமார் மூன்றரை ஆண்டுக் காலம் தொடர்ந்து பயணம் செய்த சாலஞ்சர், பெருங்கடல்களில் கடந்த தொலைவு 68,890 கடல் மைலகளாகும். ஆய்வுப் பயணம். இங்கிலாந்து மன்னரின் கப்பற்படையிலிருந்த போர்க் கப்பலான 2306 டன் எடையுடைய சாலஞ்சர், அதிலிருந்த பீரங்கிகள் அகற்றப்பட்டு, ஆய்வுக் கப்பலாக மாற்றப்பட்டது. பாய் மரக் கப்பலான சாலஞ்சருக்கு, நீராவி ஆற்றலும் உண்டு. இந்த ஆய்வுக் கப்பலில், ஓர் உயிரியல் ஆய்வுக் கூடமும், வேதியியல் ஆய்வுக் கூடமும், குறிப்பு நூலகமும் அமைக்கப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகியிருந்த சிறந்த ஆய்வுக் கருவிகள் அனைத்தும் இக்கப்பலில் இடம் பெற்றன. மேலும், கடல் பயணக் கருவிகள், ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு ஏற்ற மாதிரி நீர்க் குப்பிகள் (water samplers) ஆழ்கடலின் அடியிலிருந்து மண் வளம் மற்றும் உயிரினங்களை எடுப்பதற்கான கருவிகள், கடல்களின் ஆழங்களை வெவ்வேறு இடங்களில் அறிவதற்கான நீளம் மிகுந்த ஆழமறி கயிறுகள் யாவும் இக்கப்பலில் இடம் பெற்றன. வல்லுநர் குழு. சாலஞ்சர் பெரும் பயணம் தொடங்கிய போது, கப்பலின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தியவர் காப்டன் ஜார்ஜ் எஸ். நேர்ஸ் ஆவார். அவருக்குப் பின், கப்பலின் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் தொடர்ந்து இப்பயணத்தை நடத்தியவர் காப்டன் ஃப்ராங்க் டி. தாம்சன் ஆவார். ஆய்வுப் பயண வல்லுநர் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்றவர் சர். சார்லஸ் வைவில் தாம்சன் ஆவார். அக்குழுவில் இடம் பெற்ற, குறிப்பிடத்தக்க கடலறிவியலாளர் ஐவர். அவர்களில், டாக்டர் ரூடால்ஃப் வான் வில்மோசும், ஜான் மர்ரே, எச்.என்.மோஸ்லே, ஜி.ஜி.ஒயில்டு ஆகிய நால்வரும் கடலுயிரியல் ஆய்வாளர்களாவர். ஜே. ஒய். பியூக்கனன் என்பார் மட்டும் வேதியியலாளர் ஆவார். ஆய்வுமுறை. பெருங்கடல்களில் மொத்தம் 362 இடங்களில் மையங்களைத் தெரிந்தெடுத்து, ஒவ்வொரு மையத்திலிருந்தும் மிகுதியான ஆய்வுத் தகவல்களை முதன் முதலாக எடுத்தது சாலஞ்சர். அவற்றில் கடலின் அடிப்பரப்பில் வெப்பநிலை, மேற்பரப்பின் வெப்ப நிலை, இவற்றின் இடைப்பட்ட கடற்பரப்பின் வெப்ப நிலை, வெவ்வேறு நீர் மட்டங்களிலுமிருந்து நீரின் மாதிரிகள், வெவ்வேறு நீர்மட்டங்களில் வாழும் விந்தை மிகு உயிரினங்கள் என்பன சிலவாம். மேலும், கடலின் வெவ்வேறு அடித்தளப் பகுதிகளிலிருந்து மண் மாதிரிகள் முதன்முதலாகக் கடலறிவியல் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. அவற்றைப் பற்றிய குறிப்புகளும், விளக்கப் படங்களும் அவ்வப்போது தயார் செய்யப்பட்டு, முழு விவர ஆராய்ச்சிக்காக உயிரினங்கள், மண் மாதிரிகள் யாவும் முறையாகப் பாடம் செய்யப்பட்டன. ஆய்வு முடிவு. பெருங்கடல் ஆய்வுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, 1876 இல் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்பிட்ஹெட் எனும் இடத்துக்குத் திரும்பியது சாலஞ்சர். மூன்றரை ஆண்டுகளாக சர், வைவில் தாம்சனின் தலைமையில், பெருங்கடல்களிலிருந்து ஆராய்ச்சிக்காக எடுக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களையும், பல ஆய்வுக் குறிப்புகளையும், புள்ளி விவரங்களையும், பகுத்தறியும் பணியும், அவற்றின் முடிவுகளை ஆய்வுப் பயண அறிக்கைகளாக வெளியிடும் பணியும், எடின்பரோ நகரில் நிறுவப்பட்ட சாலஞ்சர் ஆராய்ச்சி அலுவலகத்தில் 1876இல் தொடங்கின. உலகெங்குமிருந்து பல ஆராய்ச்சி வல்லுநர்கள் வருகை தந்து இப்பணியில் இருபது ஆண்டுக் காலம் ஈடுபட்டுச் சாலஞ்சர் ஆய்வுப் பயண அறிக்கைகளை ஐம்பது தொகுதிகளாக வெளியிட்டனர். இன்றும் இவ்வறிக்கை நூல்கள் பெருங்கடலறிவியல் ஆய்வுகளுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. ஆய்வின் விளைவு. சாலஞ்சர் ஆய்வுப் பயணத்தின் விளைவாக 4700 புதிய கடல்வாழ் உயிரினங்கள் அறிவியல் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. சாலஞ்சர், பெருங்கடல்களில் எடுத்திருந்த புள்ளி விவரங்களைப் பகுத்தறிந்த போது, ஆழ்கடலில் பல ஆழமான மடு இருப்பது முதன் முறையாகத் தெரிய வந்தது. அவற்றுள் வட பசிபிக் பெருங்கடலில் மேரியானா தீவுகளுக்கு அருகே, ஆழ்கடலில் உள்ள சுமார் 8000 மீ. ஆழமுள்ள மடுவே மிகவும் ஆழமானதாகும். பெருங்கடல்களின் அடியில் செல்லும் நீரோட்டங்கள் பற்றியும், வெவ்வேறு நீர் மட்டங்களில் உள்ள நீரின் வெப்ப நிலை பற்றியும் சாலஞ்சர் ஆய்வுப் பயணம் தெளிவான அறிக்கைகளை வெளியிட்டு, அவற்றின் மூலம் கப்பற்பயணங்கள் இடையூறில்லாமல், பாதுகாப்பான கடல் வழியில் செல்ல வழி செய்தது. உலகிலேயே முதன்முதலில் அண்டார்க்டிக் வட்டத்தைக் கடந்த நீராவிக் கப்பல் என்ற பெருமை சாலஞ்சருக்கு உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில், பெருங்கடல் ஆய்வுப் பயணத்தைத் தொடங்க, சர். வைவில் தாம்சன் தலைமையிலான கடலறிவியலாளர் குழுவுக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்திருந்த காலத்தில், அரசாங்கப் பணத்தை இவ்வாறு வீணே செலவு செய்யலாகாது என்று ஒரு சிலர் எதிர்த்து வந்தனர். ஆனால், இறுதியில் இக்கடலறிவியலாளர்களின் ஆராய்ச்சிகளின் விளைவாக, முன்னரே இந்த ஆய்வுப் பயணத்துக்காக இங்கிலாந்து அரசு மதிப்பிட்டிருந்த செலவுத் தொகையை விடப் பெருமளவு வருவாயை இந்த ஆய்வுப் பயணம் இங்கிலாந்து அரசுக்கு ஈட்டித் தந்தது. —இரா.நடராஜன் நூலோதி. R.C. Cowen, Frontiers of the Sea, Doubleday & Co., Inc. New York, 1960. சாலமன் கடல் இது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியாகும். மேற்கில் நியூகினியாவாலும், வடக்கில் நியூ பிரிட்டனாலும், கிழக்கில் சாலமன் தீவுகளாலும் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு சுமார் 7,20,000 சதுர கிலோ மீட்டராகும். இக்கடலில் லூயிசியேட் தீவுக் கூட்டங்கள், நியூ ஜியார்ஜியா, குவாடல் கெனால் தீவு முதலியவை உள்ளன. இது தெற்கில் பவளக் கடலுடனும், வடகிழக்கில் பிஸ்மார்க் கடலுடனும் தொடர்பு கொண்டுள்ளது. கடல் தரையில் நியூ பிரிட்டன் பள்ளத்தாக்கு, சாலமன் பள்ளத்தாக்கு ஆகியவை உள்ளன. வடக்கிலுள்ள நியூ பிரிட்டன் பள்ளத்தாக்கு 4000 மீ. ஆழம் கொண்டது. சில இடங்களில் 9000 மீ. ஆழம் கொண்டது. தெற்கிலுள்ள சாலமன் பள்ளத்தாக்கு 7000 மீ. ஆழம் கொண்டது. நியூ ஜியார்ஜியா தீவுகளுக்கும் சால்ட்டா இசபெல் பள்ளத்திற்கும் இடையில் உள்ள கடல் தரை இவ்வளவு ஆழமானதன்று. மழைக் காலத்தில் பசிபிக் தென் நடுவரைக் கோட்டு நீரோட்டம் வடக்கிலிருந்து கடலுக்குள் பாய்ந்து,பின் தென்கிழக்கு தென்மேற்குத் திசைகளில் பிரிகிறது. கோடைக் காலத்தில் இந்நீரோட்டம் எதிர்த் திசையில் செல்கிறது. —கே. கே. அருணாசலம் சாலிசைலிக் அமிலம் இதன் வேதிப் பெயர் ஆர்த்தோஹைட்ராக்சி பென்சோயிக் அமிலம். சாலிசைலிக் அமிலம் (salicylic acid) பெரும்பாலான ஆவியாகும் தைலங்களில் மெத்தில் எக்ஸ்டராக்ட் <!---- Extract----> உள்ளது. சாலிசைலால்டிஹைடு அல்லது சாலிசைல் ஆல்கஹாலை ஆக்சிஜனேற்றப்படுத்தியோ ஆர்த்தோ சல்ஃபோ பென்சோயிக் அமிலத்துடன் சோடியம் ஹைட்ராக்சைடைச் சேர்த்து உருக்கும் போதோ, சாலிசைலிக் அமிலம் உண்டாகிறது. தொழில் முறையில் இது, கோல்ப்—ஷிமிட் வினை மூலம் தயாரிக்கப்படுகிறது. சோடியம் ஃபீனாக்சைடுடன் கார்பன் டைஆக்சைடைச் சேர்த்து அழுத்தத்துடன் 120—140° C வெப்பத்தில் வினை புரியச் செய்து இது பெறப்படுகிறது. சாலிசைலிக் அமிலம் ஒரு திண்மம்; உருகு நிலை 159°C. மருத்துவத்தில் சீழ் எதிர்ப்பியாகவும் (antiseptic), அசோ சாயங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. சாலிசைலிக் அமிலத்தை வேகமாக வெப்பப்படுத்தினால், பதங்கமாகிறது; மெதுவாக வெப்பப்படுத்தினால், இதிலிருந்து கார்பன் டைஆக்சைடு வெளியேறுகிறது. சோடியம்-ஐசோபென்டனாலைச் சேர்த்து ஒடுக்கும் போது, பைமாலிக் அமிலம் உண்டாகிறது. இதனை நைட்ரோ ஏற்றம், புரோமினேற்றம் ஆகியவற்றிற்குட்படுத்தும் போது 2, 4, 6—மூபதிலீட்டுச் சேர்மங்கள் உண்டாகின்றன. இவ்வினை நீர்ம ஊடகத்தில் நடைபெற்றால் மட்டுமே கார்பாக்சில் தொகுதி நீக்கமடைகிறது; அசெட்டிக் அமிலக் கரைசலில் இவ்வாறு நடைபெறுவதில்லை. கார்பனேட்டுகளுடன் வினைப்படுத்தும் போது, கார்பாக்சில் தொகுதி மட்டுமே உப்புகளை உண்டாக்குகிறது. ஆனால், காரத்துடன் வினைப்படும் போது, கார்பாக்சில், ஹைட்ராக்சில் தொகுதி ஆகிய இரண்டும் வினைப்பட்டு உப்புகளை உண்டாக்குகின்றன. மூட்டு வாதத்திற்குச் (rheumatism) சோடியம் சாலிசைலேட் பயன்படுகிறது. பாரா, மெட்டா அமிலங்களை விட ஆர்த்தோ மாற்றியம் (isomer) அமிலத் தன்மை மிகுந்துள்ளது. இதன் ஒரு பெறுதி மெத்தில் சாலிசைலேட் நறுமணப் பொருளாகும். சலால் அல்லது ஃபீனைல் சாலிசைலேட் உள்சீழ் எதிர்ப்பியாகவும், ஆஸ்ஃப்ரின் அல்லது அசெட்டைல் சாலிசைலிக் அமிலம் வலி குறைப்பியாகவும் செயல்படுகின்றன. —பி. ஈ.எம்.லியாகத் அலிகான் சாலிசைலேட்டுகள் இவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சாலிசேசி (salicaceae) தாவரத்தின் பட்டையிலிருந்து பயன்படுத்தப்பட்டன. 1899 முதல் ஆஸ்ப்ரின் என்னும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்று மலிவான எளிய வலி நீக்கும் மருந்துகளாக உள்ளன. இயங்கும் விதம். சாலிசைலேட்டுகள் மூளையின் ஒரு பகுதியான ஹைப்போதாலமசின் புற நரம்பு மண்டலத்தில் எதிர் வினை புரிந்து வலியைக் குறைக்கின்றன. ஆனால், பெருமளவில் தரும் போது, வளர் சிதை மாற்றத் தூண்டலும், வெப்ப உற்பத்தியும் கூடுவதால், சாலிசைலேட்டுகள் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. மருந்தடை மாற்றம். சாலிசைலேட்டுகள் தலைவலி, காய்ச்சல் போன்றவற்றைத் தணிக்கின்றன. சில நீரிழிவு நோயாளிகளிடம் குருதிக் குளுக்கோஸ் அளவையும் குறைக்கின்றன. இவற்றை உணவுடனோ, உணவுக்குப் பின்னரோ சாப்பிட வேண்டும். இவை குடலில் விரைவில் உள்ளுறிஞ்சப்படுகின்றன. ஆஸ்ப்ரின், உடல் திசுக்களிலும், பிளாஸ்மாவிலும் விரைவாக ஹைட்ராக்கில் நீக்கமடைந்து, சாலிசிலிக் அமிலமாக மாறுகிறது. இதயத்தின் மீதான விளைவுகள். மருத்துவ அளவில் தரும் போது, இவை இதயத்தைத் தாக்குவனவல்ல. ஆயினும், முடக்கு வாதக் காய்ச்சலில் பெருமளவு தரும் போது, இதயச் செயலிழப்பு, நுரையீரல் வீக்கம் முதலியவற்றை ஏற்படுத்தக் கூடும். சிறுநீரக விளைவுகள். பெருமளவில் தரும் போது, இவை சிறுநீரைப் பெருக்கும். சிறுநீர்ப் பெருக்கம் கடுமையாக இருந்தால், நீரிழப்பு ஏற்பட்டுச் சிறுநீர்ப் பெருக்கம் குறைய, சிறுநீரகச் செயலிழப்புத் தோன்றக் கூடும். வேண்டா விளைவுகள். சாலிசைலேட்டுகள் குமட்டல், வாந்தி, தலைவலி, காய்ச்சல், காது இரைச்சல் முதலிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இவை இரைப்பையை உறுத்தக் கூடும். பெருமளவில் தரும் போது, இரைப்பைச் சிறுகுடல் புண்ணை மிகுதியாக்கி, இரைப்பைக் குருதி ஒழுக்கையும், அரிப்பையும் ஏற்படுத்தக் கூடும். ஆஸ்த்துமா போன்ற ஒவ்வாமை விளைவுகளையும் ஏற்படுத்தும். பயன்கள். மெத்தில் சாலிசைலிக் அமிலத்தை, தலை வலி, மூட்டு வலி ஆகிய நோய்களில் உடலின் மேல் தேய்க்கலாம். அசெட்டைல் சாலிசைலிக் அமிலமும், உப்புகளும் காய்ச்சலுக்குக் கொடுக்கப் படுகின்றன. 300—1000 மி.கி. 4 மணிக்கொரு முறை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும். முடக்கு வாதக் காய்ச்சலுக்கு நாள் ஒன்றுக்கு 5 கிராம் வரை கொடுக்கலாம். தலைவலி, மூட்டு வலி, வலியுடன் கூடிய மாத விலக்குப் போன்ற நிலைகளுக்கும் இவற்றை மாத்திரையாகக் கொடுக்கலாம். சாலிசைலிக் அமிலத் தட்டணுவின் எதிர் இயக்கப் பண்பின் காரணமாக ஏற்படும் இதயத் தசைச் சிதைவு நோய் (myocardial infarction), இதயத் தமனி நோய் (coronary artery disease) ஆகியவற்றுக்கு இவை பயன்படுகின்றன, —ச. ஆதித்தன் சாலை உருளை <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சாலைகளை உருவாக்கும் போது, மண், கல் ஆகிய சாலைப் பொருள்களைப் பிணைத்து இறுக்கம் அடையச் செய்யச் சாலை உருளை (road roller) பயன்படுகிறது. இது அதிக எடை உள்ள கல் அல்லது இரும்பு உருளை கொண்ட எந்திரம் ஆகும். சாலைப் பொருள்களுக்கு இடையே உள்ள காற்றுக் குமிழ்கள், இறுக்கம் அடைவதற்கு வெளியேற்றப்பட வேண்டும். சாலைப் பொருள்களின் இடையே உள்ள நீர் அளவு, மண்ணின் குணம், கற்களின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தே இறுக்கம் மாறுபடும். மீண்டும், மீண்டும் சாலை உருளையை உருட்டுவதன் மூலம், சாலைப் பிணைப்பு நன்முறையில் அமையும். சாலை உருளையைப் பயன்படுத்துவதால், சாலையின் உலர் அடர்த்தி (dry density), வெட்டு வலிமை ஆகியவை அதிகரிக்கும். சாலை உருளையைப் பயன்படுத்தி, இறுக்கமடையச் செய்யா விட்டால், மண் அதிக உயரத்திற்கு இருக்கும் போது, உயரத்திற்கேற்றவாறு சுமை அதிகரிப்பதால், மண் தரையுள் அமிழ்ந்து தாழ்வடையும். முதலிலேயே, சாலை உருளையைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து, அடுக்கடுக்காகச் சாலைப் பொருள்களை அமைத்தால், தேவையான உயரத்திற்குச் சாலை இறுக்கமாக அழுத்தமடையும். இவ்வாறு அழுத்தத்துடன் உருவாக்கப்படும் சாலைகளின் இடையே நீர்க் கசிவும், நீரினால் ஏற்படும் தீய விளைவுகளும் ஏற்படா. சாலைப் பொருள்களின் ஒவ்வோர் அடுக்கும் சாலை உருளையைப் பயன்படுத்தி, அழுத்தம் கொடுத்து இறுக்கம் அடைந்த பின்னரே, அடுத்த அடுக்கிற்கான சாலைப் பொருள்களை இட வேண்டும். இறுக்கம் அடையத் தேவையான திரை மட்டுமே சாலைப் பொருள்களுடன் கலக்க வேண்டும். நீரின் அளவு மிகுதியாக இருந்தால், சாலைப் பொருள்கள் இணைந்து இறுக்கமடைவதற்குப் பதிலாக, நீருடன் இணைந்து சகதியாகச் சாலையின் பக்கவாட்டில் வழியக் கூடும். மண் சாலை, கற்சாலைகள் அமைக்கும் போது, அவற்றை இறுக்கமடையச் செய்யப் பல வழி முறைகள் கையாளப்படுகின்றன. அவற்றில் முதன்மையான முறை, சாலை உருளையைப் பல முறை உருப்படுவது ஆகும். இம்முறையில் எடை மிகுந்துள்ள கல் அல்லது இரும்பு உருளை மீண்டும், மீண்டும் உருட்டப்படுவதால் இறுக்கம் ஏற்படும். பிசைதல் என்னும் முறையில் சாலைப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப நீர் சேர்த்துப் பிசையும் போதே, அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இம்முறையில் சாலை அமைக்க, சாலை உருளையின் வெளிப்புறத்தில் வரிசையாக ஆட்டுக் கால் போன்ற இணைப்புகள் இணைந்திருக்கும். இதில் உருளை அழுத்தத்தையும், ஆட்டுக்கால் இணைப்புப் பிசைதலையும் ஏற்படுத்தும். அதிர்வு உருளைகளைப் பயன்படுத்திச் சாலைப் பொருள்களின் மீது அதிர்வும், அழுத்தமும் ஏற்படுத்துவது மற்றொரு முறையாகும். கெட்டித்தல் மூலம் இறுக்கமடையச் செய்யும் முறையில் சாலைப் பொருள்கள் இடித்து இணைக்கப்படும். இரும்பு, கல் முதலியவற்றால் செய்யப்பட்ட திமிசுகள் கெட்டிக்கப் பயன்படும். எந்திரத் திமிசுகளும் பயன்படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சாலை உருளைகள் பல வகைப்படும். அவை சீரான வழவழப்பான மேற்பரப்புள்ள சக்கர உருளைகள், ஆட்டுக் கால் போன்ற அமைப்பு இணைந்த உருளைகள், அடுக்குச் சக்கர உருளைகள் என்பனவாம். முதல் வகைச் சக்கர உருளை, மூன்று சக்கரங்கள் உடையது. மூன்று சக்கரங்களும் மிகுந்த எடையுடையவை. பின்புறம் உள்ள இரு சக்கரங்களை விட, முன்புறம் உள்ள சந்தரம் மிகப் பெரிய உருளையாக இருக்கும். சில வண்டிகளில் முன்புற உருளை மட்டும் மிகப் பெரிய கல் உருளையாக இணைக்கப்பட்டிருக்கும். உருளைகள், சமப்படுத்தும் உருளைகள் எனப்படும். சில வண்டிகளில் இரண்டு அல்லது மூன்று உருளைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்கும். சில சாலை உருளைகளில் முன்புறம் இணைக்கப்பட்டுள்ள இரும்பு உருளை உட்புறம் வெற்றிடம் கொண்டிருக்கும். இந்த இரும்பு உருளையின் உட்புறமும் நீர் அல்லது ஈர மணலைத் தேவையான அளவு நிரப்பிப் பயன்படுத்தலாம். நொறுங்கும் தன்மை தேவைப்படும் கூழாங்கல், மணல் சாலைகள் அமைக்க இவ்வகையான சாலை உருளைகள் பயன்படுகின்றன. சாதாரணமாக 15 செ மீ கனத்திற்கு மிகாமல் சாலைப் பொருள்கள் பரவலாக்கப்பட்ட பின்னர், சாலை உருளைகள் உருட்டப்பட வேண்டும். இரண்டாம் வகைச் சாலை உருளைகளில், இரும்பு உருளையின் மேற்பரப்பில், பல இரும்புக் கால்கள் நீட்டிக் கொண்டிருக்கும். இவ்வகை உருளைகள் தனியாக ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இதைக் கன ரக ஊர்திகளுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். இவை கிடை மட்டத்திலும், செங்குத்துத் திசையிலும் ஒரே நேரத்தில் அழுத்தம் கொடுத்து, இறுக்கமடையச் செய்யும் உருளைகளாகும். களிமண், குறுமணல் சாலைகள் அமைக்க இந்த உருளைகள் தகுந்தவை. ஆனால், காற்றுக் குமிழிகள் உருவாகும் வாய்ப்பும் உண்டு. பல முறைகள் உருட்டிய பின்னரே, அடர்த்தி அதிகரிக்கும். அடுக்குச் சக்கர உருளைகளில், பெரிய பெட்டிகள் இரு அச்சுகளின் மீதும் இணைக்கப்பட்டிருக்கும். முன் பக்க அச்சு, பின் பக்க அச்சை விடத் தாழ்வாக இருக்கும். இது மூன்று வகையாகப் பிரிக்கப்படும். நடுத்தரம், மிகு சுமையுடையது, நடுத்தரச் சுமை உள்ளது. நடுத்தரச் சுமை உள்ளது 13 டன் எடை உள்ள உருளை ஆகும். இவ்வகை உருளைகள் தனியாகப் பிரித்து ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால், பலர் சேர்ந்தே இதை உருட்ட முடியும். அல்லது ஊர்திகளில் இணைத்து உருட்டலாம். இவ்வகை உருளைகள் பிசைதல்,அழுத்தம் கொடுத்தல் ஆகிய இரு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்ய வல்லவை. கூழாங்கல், குறுமணல், களிமண், மணல் இவற்றாலான சாலைகள் அமைக்க இவ்வகை உருளைகள் ஏற்றவை. மண் சாலை அமைக்கும் போது, இயற்கையாக உள்ள தரையின் மீது 8—10 டன் எடையுள்ள சாலை உருளை குறைந்தது 6 முறை உருட்டப்பட்டு, இறுக்கமடைந்த பின்னரே, சாலைப் பொருள்களை இட வேண்டும். 25 செ.மீ கனத்திற்கு மிகாமல், சாலைப் பொருள்களை அடுக்காக அமைத்த பின்னர், மீண்டும் உருளைகளை உருட்டி, இறுக்கமடையச் செய்ய வேண்டும். கூழாங்கல் சாலை அமைக்கும் போதும், இதே முறையைப் பின்பற்ற வேண்டும். கூழாங்கல் சாலை அமைக்கும் போது, கற்கள் பரப்பப்பட்ட பின்னர், முதல் வகைச் சக்கர உருளைகள் பயன்படுத்தப்படும். சாலைகளின் ஓரப் பகுதியிலிருந்து நடுப் பகுதி வரை உருளைகள் உருட்டப்பட்டும் சாலை ஓரங்களில் உருளைகள் முன்னும், பின்னுமாக உருட்டப்பட்டும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். பின்னர், நடுக் கோட்டிற்கு இணையாக உருளைகள் உட்புறமாக முன்னும், பின்னும் உருட்டப்பட்டு நடுப் பகுதிக்கு வர வேண்டும். பாதி அகலம், பாதி அகலமாக நகர்ந்து வர வேண்டும். உருளை ஒவ்வொரு முறையும் உருட்டப்படும் போது, தேவையான நீர் சேர்த்து இறுக்கமடையச் செய்ய வேண்டும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> நீர் இணைப்புக் கற்சாலைகள் அமைக்கும் போது, மூன்று சக்கர உருளைகளைப் பயன்படுத்தி இறுக்கம் அடையச் செய்யலாம். அதிர்வு உருளைகளையும் பயன்படுத்தலாம். இதிலும் சாலை உருளைகளை ஓரப் பகுதியிலிருந்து நடுப்பகுதியை நோக்கி முன்னும், பின்னுமாக உருட்ட வேண்டும். நீர் தெளித்த பின்னர், மீண்டும் உருட்ட வேண்டும். சாலை உருளையின் மீது நீரைத் தெளித்து உருட்டினால், உருளையின் மீது ஒட்டிக் கொண்டுள்ள பொருள்கள் நீருடன் வழிந்து சாலையில் விழுந்து உருளையால் அழுத்தப்படும். தார்ச்சாலைகள் அமைக்கும் போது, உருளைகளின் மீது நீர் தெளித்து உருட்ட வேண்டும். அப்போதுதான் சாலைப் பொருள்களான தார், நுண் கல் துகள் முதலியவை உருளையில் ஒட்டாமல் இருக்கும். —ஏ. எஸ்.எஸ். சேகர் நூலோதி. Kenneth B. Woods, Highway Engineering Hand Book,.First Edition, McGraw-Hill Book Company, New York, 1960. சாலைகள் இருப்புப் பாதைகளும், சாலைகளும் முக்கிய போக்குவரத்து வசதிகளாகப் பயன்படுகின்றன. இவற்றில், சாலைப் போக்குவரத்து மிகுதியாகப் பயன்படுகிறது. ஏனெனில், குறைந்த அளவு உள்ள சுமைகளைக் கொண்டு செல்லச் சாலைப் போக்குவரத்தே ஏற்றது; இம்முறையில் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும், கொண்டு செல்ல முடியும்; வாகன ஓட்டுநர்களின் நேரடிப் பார்வையில் இருப்பதால், பொருள்களும் சுமைகளும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்;குறைந்த செலவில் சுமைகளைக் கூட்டி வைக்க முடியும்; மிகுந்த உயரங்களுக்கும், பள்ளங்களுக்கும் சாலைகளை அமைத்துச் செல்ல முடியும்; எந்நேரமும், அனைத்துக் கால நிலைகளிலும் சாலை வசதியைப் பயன்படுத்த முடியும்; மொத்தச் செலவைக் கணக்கிட்டால், பிற போக்குவரத்துகளை விடக் குறைவாகவே இருக்கும்; பல மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும். சாலைகள் வேளாண்மை, தொழிற்சாலை, வணிகம், சுகாதாரத் தூய்மையாக்கம் போன்றவற்றில் பயன்படக் கூடியன. அவசரத் தேவைகளில் சாலை வசதியின் இன்றியமையாமை புலப்படும். சாலைகளின் உதவியால் கடிதப் போக்குவரத்து எளிதாகிறது; சாலைகள் உள்ள இடங்களில் நிலத்தின் விலை மதிப்புப் பெருகக் கூடும். அசோகர் ஆட்சியில் மிகச் சிறந்த சாலை அமைப்புகளும், சாலைகளின் பராமரிப்பு வசதிகளும், சாலைகளின் அருகே ஓய்வு விடுதிகளும் இருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் சாலைகளின் அமைப்பு, மழை நீர் வழிந்து செல்ல வசதியாக ஆமை முதுகு போல அமைக்கப்பட்டிருந்தது. முகலாய மன்னர்கள் காலத்தில் குறிப்பிடத்தக்க பல நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில், இருப்புப் பாதை நிர்வாகத்துடன், சாலை கட்டும் பணியும் சேர்க்கப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின், ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரித்தது. சாலைகளின் பராமரிப்புப் பணிக்கென நிதி நிர்வாகம் 1928 ஆம் ஆண்டு கெய்சர் குழுவின் கீழ் அமைக்கப்பட்டது. சாலை வரிகள் விதிக்கப்பட்டன. மையச் சாலை மேலாண்மை நிறுவனம் 1930 இல் நிறுவப்பட்டது. இந்திய சாலைக் குழு 1934 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்குழு, சாலை அமைக்கும் முறைகள் பற்றியும், தரக் கட்டுப்பாடு பற்றியும், புதிய கட்டுமான முன்னேற்றங்கள் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளது. சாலை வளர்ச்சிக்கான ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளது. போக்குவரத்து அறிவுரைக் குழு 1935ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சாலைப் போக்குவரத்து மேலாண்மைக்கென 1939ஆம் ஆண்டு ஊர்திச் சட்டம் இயற்றப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை மைய அரசின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. சாலை முன்னேற்றத்- திற்கென ஐந்தாண்டுத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> ஆசிய நாடுகளுக்கிடையே வணிக, சமூக, கலைப் பண்பாட்டு முன்னேற்றத்திற்கென, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பல நாடுகள் சாலைகளை அமைக்க முயற்சி செய்தன. தலைநகர்கள், துறைமுகங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை இணைக்கும் சாலைகள் அமைக்க, ஆசிய நெடுஞ்சாலைத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. 38,500 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கிழக்கு மேற்குத் தடமாக 10,800 கி.மீ. சாலை ஒன்று 1972ஆம் ஆண்டு நிறைவுற்றது. இச்சாலைத்திட்டம் ஈரான்—துருக்கி எல்லையில் தொடங்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகள் வழியே சென்று வியட்நாமில் முடிவடைகிறது. இந்தியாவில் ஆசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் 15,700 கி.மீ. நீளத்திற்குச் சாலைகள் அமைக்கப்பட்டன. முதலில் சாலைகள் ரோம் நகரில் கற்பலகைகளையும், கல், சுண்ணாம்புக் கற்காரையையும் கொண்டு கட்டப்பட்டன. பிரான்சில் நொறுங்கிய கற்களைப் பயன்படுத்தும் முறை கண்டுபிடிக்கப் பட்டது. இம்முறை டிரசாகுட் முறை எனப்பட்டது. பின்னர், ஜான் மெட்காப் முறையில் கூழாங்கற்களால் சாலை அமைக்கும் முறை வந்தது. மிகப் பெரிய அடித்தளக் கற்களைப் பயன்படுத்திச் சாலை கட்டும் தாமஸ் டெல்போர்டு முறை கண்டுபிடிக்கப்பட்டது. சிறு கற்களை அடுக்காக இறுக்கமடையச் செய்து, சாலை அமைக்கும் மக்காடம் முறையும் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் சாலை மேலாண்மைக்கென முறையான அமைப்புகளும், கட்டுக்கோப்புகளும், சட்டங்களும் உண்டு. மைய அரசு, மாநில அரசு, மாவட்டக் கூட்டமைப்பு, நகராட்சி, ஊராட்சி, வட்ட முன்னேற்றத் துறை ஆகிய பல்வேறு அமைப்புகளும் சாலை மேலாண்மையில் தொடர்பு கொண்டவை. மையப் பொதுப்பணித் துறை, மாநிலப் பொதுப் பணித் துறை, நகராட்சி முதலியவை சாலைகளை அமைத்தல், பராமரித்தல் ஆகிய பணிகளைக் கவனித்துக் கொள்கின்றன. இவற்றின் கீழ், முறையான பொறியாளர், மேலாண்மை செய்து சாலை அமைத்தலையும், பராமரித்தலையும் கண்காணித்து வருகின்றனர். மக்களும், சுமைகளும் பாதுகாப்பாக, சிக்கனமான செலவில் வசதியாக, விரைவாக இடம் மாறிச் செல்ல உதவுமாறு சாலைகளை அமைக்க வேண்டும். இயற்கை வசதிகளைப் பயன்படுத்தி, மிகுந்த பயன் கிடைக்குமாறும், பொருளாதார வசதி பெருகுமாறும் திட்டமிட வேண்டும். சாலைகள், தேசிய அளவில் அமைக்கப்படும் சாலை அமைப்புகளுக்கு உதவும் வகையில் அமைய வேண்டும். இச்சாலைகளுக்கு, போக்குவரத்துத் தேவைகளுக்கேற்ப முக்கியத்துவம் அளிக்க வேண்டும். —ஏ. எஸ். எஸ். சேகர் சாலைகளின் அமைவு வடிவமைத்தல் சாலையின் ஒவ்வொரு பகுதியையும் அளவிட்டு அமைத்தல், சாலை அமைவு வடிவமைத்தல் எனப்படும். சாலையை ஒழுங்குபடுத்துதல், சரிவு, அகலம், வளைவு, பார்வைத் தொலைவு அமைத்தல் ஆகியவையும் சாலை அமைவு வடிவமைத்தலில் (geometrical design of roads) அடங்கும். இதனால், போக்குவரத்து மேலாண்மை, பாதுகாப்பு, வசதி, சிக்கனம் ஆகியவை மேம்படும். அமைவு வடிவமைத்தல், குறைந்த செலவு, நெடுஞ்சாலை வகை, நில அமைப்பு, வேகத் தேவை, சாலையின் கொள்ளளவு, ஊர்திகளின் வடிவமைப்பு, பார்வைத் தொலைவு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு சாலை அமைக்க வேண்டும். <!---- முன் பக்கத் தொடர்ச்சி இவ்வரிகள் இங்கு அமைந்தால்தான் ஒழுங்குற அமையும். இந்த வரிகள் பக்க நடுவில் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளன. எனவே, முறையான பொருள் பெற, இவவரிகளை மாற்ற வேண்டாம். ----> <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> பார்வைத் தொலைவு, <!---- பக்கக் கடைசியில் தோன்றும் இவ்வார்த்தைகள் இங்கு அமைந்தால்தான் ஒழுங்குற அமையும். இவ்வார்த்தைகள் பக்கக் கடைசியில் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளன. எனவே, முறையான பொருள் பெற, இவ்வார்த்தைகளை மாற்ற வேண்டாம். ---->சாலையின் எல்லா இடங்களிலும், வளைவுகளிலும், மேடு பள்ளங்களிலும், சாலைச் சந்திப்புகளிலும் இருக்க வேண்டும், நிறுத்துவதற்குத் தேவையானது, முன்னால் செல்லும் ஊர்தியைக் கடந்து செல்லத் தேவையானது, இரவு நேரங்களில் விளக்கு ஒளியில் நிறுத்துவதற்குத் தேவையானது எனப் பார்வைத் தொலைவு பலவகைப்படும். நிறுத்துவதற்குத் தேவையான பார்வைத் தொலைவைக் காண, எதிர் வினைத் தொலைவையும், ஊர்தியை நிறுத்திய பிறகு அது நகரும் தொலைவையும் கூட்ட வேண்டும். இவற்றைக் கணக்கிட, ஊர்தி வடிவமைப்பு வேகம், எதிர் வினை நேரம், உராய்வுக் குணகம், ஊர்திப் பளு முதலியவை தேவைப்படும். முன்னால் செல்லும் ஊர்தியைக் கடந்து செல்லத் தேவையான தொலைவைக் கணக்கிட, ஊர்தி வடிவமைப்பு வேகம், ஊர்தி கடக்க வேண்டிய தொலைவு, இரு ஊர்திகளின் வேக வேறுபாடு, கடந்து செல்ல எடுத்துக் கொள்ளும் நேரம், ஊர்தியைக் கடக்கு முன்பும், கடந்த பின்பும் உள்ள ஊர்தி வேகம் ஆகியவற்றை அறிய வேண்டும். சாலைச் சந்திப்புகளைத் திட்டமிடும் போது, மூலைகளில், பார்வைத் தொலைவு தேவையான அளவு அமைய வேண்டும். ஓட்டுநர் பார்வைக்கு, சந்திப்பின் பரப்பளவு முழுதும் தெரியுமாறு அமைய வேண்டும். பார்வைத் தொலைவிற்குள்ளாக ஊர்தி வேகத்தை மாற்றவும், நிறுத்தவும் நேரம் கிடைக்குமாறு வசதி வேண்டும். கட்டுமானம், இயக்குதல், பராமரிப்பு ஆகியவற்றிற்கான செலவை ஒரு கிலோ மீட்டருக்கு ஓர் ஆண்டிற்கு எவ்வளவு எனக் கணக்கிட வேண்டும். மிகுந்த சரிவு, மலைப் பகுதி, குறைந்த சரிவு, சரிவு இல்லாதது என நில அமைப்பு, பல வகையாகப் பிரிக்கப்படும். ஊர்தி வேகம் பயணம் முழுதும் ஒரே வேகத்துடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு சாலை அமைவு வடிவமைக்கப்பட வேண்டும். சாலையின் புறப்பரப்பு, போக்குவரத்து அளவு, வளைவு, பார்வைத் தொலைவு ஆகியவற்றைப் பொறுத்தும் ஊர்தி வேகம் அமையும். சாலையின் கொள்ளளவு என்பது ஒரு மணி நேரத்தில் அச்சாலையில் செல்லக் கூடிய ஊர்திகளின் மிகு எண்ணிக்கை ஆகும். அது ஊர்தி, ஊர்தி வேகம், இடையூறு, ஊர்தி ஓட்டுநர் வசதி ஆகிய காரணங்களால் மாறுபடக் கூடும். ஊர்தி வடிவமைப்பு, அதன் சுமை, சக்கரங்களின் அமைப்பு, மொத்த நீளம், அகலம், உயரம், சுழற்சி, ஆரம் ஆகியவை ஊர்தி வேகத்தையும், அமைவு வடிவமைப்பையும் கட்டுப்படுத்தக் கூடியவை. பார்வைத் தொலைவு என்பது ஓட்டுநரால் பார்க்க முடிகின்ற சாலை நீளம் ஆகும். இது சாலைப் பாதுகாப்பிற்கும், வசதியான இயக்கத்திற்கும் இன்றியமையாதது. <!---- ‘பார்வைத் தொலைவு’ முதல் பத்திக்கு நகர்த்தப்பட்டுள்ளது.----> சாலையின் கிடைத்தள ஒழுங்கமைப்பு வடிவமைக்கப்படும் போது, சாலைகளின் வளைவுகள், ஓரச் சாலை உயர்வு, வளைவுகளில் தேவைப்படும் அதிகமான அகலம், மலைச்சாலைகளில் தேவைப்படும் அதிகமான அகலம், தடுப்புகள் உள்ள இடங்களில் பார்வைத் தொலைவு ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும். சாலைகளின் வளைவுகள் சாதாரண வளைவு, இணைந்த வளைவு, எதிர்த் திசை வளைவு, விலகிச் செல்லும் வளைவு, சீராக மாறிச் செல்லும் தொடர்ந்த வளைவு எனப் பல வகைப்படும். வளைவுகள் அமைக்கும் போது, ஆரத்தின் சரியான அளவு, வளைவுகளின் கோணங்கள் முதலியவற்றைக் கண்டு பிடித்துப் பயன்படுத்த வேண்டும். சாலையின் செங்குத்துத் தள ஒழுங்கமைப்பு வடிவமைக்கப்படும் போது, நீள் திசையில் சரிவு, மேடு பள்ளங்கள், உயர்ந்து தாழ்ந்து செல்லும் வளைவுகள் ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும். இவ்வாறு வளைவுகள் அமைக்கும் போது, பார்வைத் தொலைவு வளைவுகளின் நீளம், ஊர்தி விளக்கு ஒளித் தொலைவு, ஓட்டுநர் வசதி, கழிவு நீர் செல்லும் வசதி முதலியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். விளக்கு ஒளித் தொலைவை ஊர்தி நிறுத்துவதற்குத் தேவையான பார்வைத் தொலைவாக அமைக்க வேண்டும். பள்ளத்தில் வளைவு அமைக்கும் போதும், மிகத் தாழ்வான சாலைப் பரப்பு அமைக்கும் இடத்தை முடிவு செய்யும் போதும் கழிவு நீர் செல்ல வசதியாகவும், கழிவு நீர்க் குழாய்கள் சாலைக்குக் கீழே வசதியாகவும் அமைய, தட்டை நிலப் பரப்பு வகையைத் திட்டமிட வேண்டும். கிடைத்தள வளைவு, செங்குத்துத் தள வளைவு ஆகியன இணைந்து அமையும் போது, ஒழுங்கமைப்பு மிகவும் இன்றியமையாதது. சாலையின் மொத்த அகலத்திற்கும், ஓட்டுநரின் நம்பிக்கைக்கும், பாதுகாப்பிற்கும் ஏற்ற வகையில், சிறந்த முறையில் சாலையின் புறப் பரப்பு அமைய வேண்டும். சாலை உட்புறமாக வளைந்த மேற்பரப்புக் கொண்டிருந்தால், ஒழுங்கமைப்புச் சீராக அமைவதில்லை. மேலும், விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மிகு நீளமான சாலையின் இடையே மறைந்துள்ள குழிவான சாலைப் பகுதி தீமை செய்யும். சாலை அமைவு வடிவமைப்பு வகைகள். கிடைத்தள வளைவு, செங்குத்துத் தள வளைவு ஆகியவற்றின் தொடக்கப் புள்ளிகள் ஏறத்தாழ இணைந்த ஒரே புள்ளியாக இருத்தல் வேண்டும். கிடைத்தள வளைவு, செங்குத்துத் தள வளைவு இரண்டின் நீளமும் ஏறத்தாழ ஒரே நீளம் இருக்க வேண்டும். இரு வளைவுகளுக்கும் ஒரே நீளம் அமைக்க முடியாத போது, கிடைத்தள வளைவு நீளத்தை மிகுதியாக அமைத்தல் வேண்டும். செங்குத்துத் தள வளைவின் உச்சியில் கிடைத்தள வளைவு அமையாமலும், திடீர்த் திருப்பம் உண்டாக்கும் கிடைத்தள வளைவு இல்லாமலும் இருக்க வேண்டும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> வடிவமைப்பின் போது, சாலைத் தளத்தின் பல பகுதிகளும் சரிவர அமையக் கவனம் செலுத்த வேண்டும். சாலையின் அகலம், எதிர்கால விரிவாக்கத்திற்கும் சேர்த்து முதலிலேயே முடிவு செய்யப் பட வேண்டும். நெடுஞ்சாலையின் உரிய பாதை எனப்படுவது எல்லைகளுக்கு இடையேயுள்ள சாலைத் தளம் ஆகும். நில அகலம் எனப்படுவது, சாலையின் இரு புறமும் உள்ள மண் பகுதிகளும், தடுப்புச் சுவர்ப் பகுதிகளும், மரங்கள் இருக்கும் நிலங்களும் சேர்ந்த பகுதியாகும். சில இடங்களில் ஊர்திகள் நிறுத்துமிடம், சாலைப் பொருள்கள் சேமிக்கும் இடம், எந்திரங்கள் நிறுத்துமிடம் இவற்றிற்காகச் சாலையின் அகலம் மிகுதியாக இருக்க வேண்டும். சாதாரணமாக நில அகலம் 18—45 மீ வரை இருக்கும். தவிர்க்க முடியாத நகரங்களுக்குள் உள்ள சாலைகளில் மிகக் குறைவாகவும் இருக்கலாம். ஊர்தி செல்லும் பாதை அல்லது தள அகலம் போக்குவரத்து வரிசைகளைப் பொறுத்து அமையும். ஒரு வரிசை அகலம் 3.75 மீ., இரு வரிசை அகலம் 7 மீ. என அமைக்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் இரு வரிசை அகலம் 5.5 மீட்டருக்கும் குறையக் கூடாது. பாலங்களின் மீது அமைக்கும் போது, ஒரு வரிசை அகலம் 4.25 மீ; இரு வரிசை அகலம் 7.5 மீ. என அமைய வேண்டும். சாலைகளின் இருபுறமும் அமைந்துள்ள மண் மேட்டுப் பகுதி கரை எனப்படும். அதன் சிறும அளவு அகலம் 1.85 மீ சாலைகளின் அருகில் அமைக்கப்படும் நடைபாதை அகலம் 1.50 மீ; ஒரு வழி மிதி வண்டிப் பாதை அகலம் 2 மீ; இரு வழி மிதி வண்டிப் பாதை அகலம் 3 மீ என இருக்க வேண்டும். ஒரு செங்கல் அகலக் கோட்டுச் சுவர், சாலையின் ஓரங்களில் அகலம் மிகுதியாக இருக்கும் இடங்களில் அமைய வேண்டும். பெரிய சாலைச் சந்திப்புகளின் நடுவில் 5 மீ. அகலம் வரை இடங்களை வட்ட வடிவில் விட்டு வைக்க வேண்டும். தேவையான இடங்களில் அகலம் குறைவான நீண்ட புல்வெளிகள் அமைக்க வேண்டும். சாலை ஓரங்களில் பாதுகாப்பிற்கெனத் தடுப்புக் கல் தூண்கள், வேலிகள் முதலியவற்றைச் சில இடங்களில் அமைக்க வேண்டியிருக்கும். சாலை ஓரங்களில் விளக்குத் தூண்கள், தொலை பேசித் தொடர்பு எந்திரப் பெட்டி, தகவல் பலகை, கல், அடையாளப் பலகை, மரம் முதலியவற்றை ஆபத்து ஏற்படுத்தாத வகையில் அமைக்க வேண்டும். சாலை ஓரங்களில்,விளக்குப் பாதை வரிசைகள் ஊர்திகளை நிறுத்துவதற்கு வசதியாக 3 மீ. அகலமும் 90 மீ. நீளமும் இருக்குமாறு ஒவ்வொரு 1.5 கி.மீ. தொலைவிலும் அமைத்தல் நலம். அவை சாலை வளைவுகளுக்கு அருகிலும், பாலங்களுக்கு அருகிலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சாலையின் குறுக்குத் திசையில் உள்ள சரிவை, சாலை வகையைப் பொறுத்தும், மழை நீர் அளவைப் பொறுத்தும் அமைக்க வேண்டும். இச்சரிவு மண் சாலையில் 3—4%உம், கற்சாலைகளில் 2.5—3% உம், தார்ச் சாலையில் 2.5%உம், கற்காரைச் சாலையில் 2% உம் இருக்குமாறு அமைக்க வேண்டும். இக்குறுக்குச் சரிவு, சாலையில் நீள்திசைச் சரிவில் பாதி அளவு இருக்குமாறு அமைந்தால், மழைvநீர் அங்கு தங்காமல், சாலைகளின் இருபுறமும் வடிந்து விடும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சாலையின் புறப்பரப்புத் தன்மை, குறுக்கு வெட்டுத் தளம், ஒழுங்கமைப்பு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள், பல வகையிலும் கேடு தருகின்றன. இதனால், போக்குவரத்துச் செலவு அதிகரிக்கிறது; பயண நேரம் கூடுகிறது; விபத்துகள் அதிகரிக்கின்றன; பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. பொதுவாகத் தவிர்க்கப்பட வேண்டிய குறைபாடுகள் பின் வருவன: சமச்சீரற்ற சாலைத் தளம். குறிப்பிட்ட தொலைவிற்குள் உள்ள மேடு பள்ளங்கள், கரடுமுரடான குணகத்தால் குறிப்பிடப்படும். இக்குணக மதிப்பு 150 செ.மீ./கி.மீ. க்குள் இருக்க வேண்டும். இக்கரடு முரடான தன்மையை, அதற்கென உள்ள அளவியால் அளக்க முடியும். சமச்சீரற்ற சாலையால் ஏற்படும் இழப்பைக் கணக்கிட்டால், அச்செலவில் நல்ல கற்காரைத் தளச் சாலையே அமைக்க முடியும். சாலையின் வழுக்கும் தன்மை. இது சாலையின் புறப் பரப்பு, அது கட்டப்பட்ட பொருள்களின் பண்பு, சாலையின் வகை, மழை நீர் நிற்கும் அளவு, சேறு அல்லது உலர்ந்த மணல் இருக்கும் அளவு, சக்கரங்களின் நிலை, ஊர்திகளின் வேகம், நிற்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். இவ்வழுக்கும் தன்மையால், சாலையின் நீள் திசையில் வழுக்குவதை விட, சாலையின் ஓரத் திசையில் வழுக்குவது மிகுந்த கேடு விளைவிக்கக் கூடியது. இதற்கு உராய்வு அதிகம் ஏற்படுத்தும் வளைவுகள் அமைக்க வேண்டும். கிடைத்தள வளைவில் உராய்வுக் குணகம் 0.15 என்றும், நீள்திசை வளைவில் உராய்வுக் குணகம் 0.4 என்றும் இருக்க வேண்டும். தார்ச்சாலைகள் இரவு நேரங்களில் தெளிவாகக் காட்சியளிப்பதில்லை. குறிப்பாக, மழைக் காலங்களில் மிக மோசமாக இருக்கும். கற்காரைத் தளச் சாலை தெளிவாகக் காட்சியளிக்கும். ஆனால், அது கண் கூசுமாறு ஒளிச் சிதறல் ஏற்படுத்தும். மழைக் காலங்களில் நீர் உள்ள சாலை ஒளிச் சிதறலை மிகுதியும் உருவாக்கும். இதனால் ஊர்தி வேகம் குறையும். விபத்து நேரும் வாய்ப்பும் மிகும். சாலைக்கரைகளின் நிறைவில்லா நிலை. பெரும்பாலான சாலைகளில் சாலைக் கரைகள் சாலைத் தளத்தை விடத் தாழ்ந்து அமைந்துள்ளன. இது சமச் சீரற்ற நிலையை உருவாக்கி, ஊர்திகளுக்கு உறுதியற்ற நிலையை ஏற்படுத்துகிறது; மழைக் காலங்களில் எளிதில் சாய்ந்து வழுக்கும் நிலையை உருவாக்கி விடும். ஊர்திகள் எதிர்த் திசையில் கடக்கும் போதும், ஒரே திசையில் முன்னால் செல்லும் ஊர்தியைக் கடக்கும் போதும், தொல்லை ஏற்படுத்தித் தாமதம் உண்டாக்கும்; விபத்து நேரும் சிற்றூர்ச் சாலைகளில் மேடு பள்ளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. மேலும், இறுக்கமடையாத மணல் பகுதிகளும், மழைக் காலங்களில் சேறு நிறைந்த பகுதிகளும் காணப்படுகின்றன. மக்கள் அப்பகுதியில் நடந்து கூடச் செல்ல முடிவதில்லை. இவை போன்ற இடையூறுகளால், சாலையின் மொத்த அகலம் குறைக்கப்படுகிறது. மேலும், சிற்றூர்ப் பகுதிகளில், சாலைகளின் ஓரங்களும், கூரைப் பகுதிகளும், மாட்டு வண்டிகளாலும், கை வண்டிகளா- லும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன. சரியான முறையில் வடிவமைக்கப்படாத, பராமரிப்பு இல்லாத குழிவான சாலைகளும், பள்ளங்களும் விபத்துகளை அதிகரிக்கின்றன. —ஏ. எஸ். எஸ். சேகர் நூலோதி. Kenneth B. Woods, Highway Engineering Hand Book, First Edition, McGraw-Hill Book Company, New York, 1960. சாலைத்தள வடிவமைப்பு பளுவுக்கேற்றவாறு வளைந்து கொடுக்கக் கூடிய இணக்கமான சாலை, விறைப்பான, உறுதியான வளையாத சாலை, பாதி வளையும் தன்மையும், விறைப்புத் தன்மையும் சமமாகக் கலந்துள்ள சாலை என்று சாலைத் தளம் (road pavement) மூன்று வகைப்படும். சாலைத்தள வடிவமைப்பு, தளத்தின் உருவம், அதன் கலவை ஆகியவற்றைப் பொறுத்தது. ஊர்திகளின் பாதுகாப்புக்கு ஏற்ற புறப்பரப்பு வடிவமைப்பது இதன் நோக்கம் ஆகும். சாலைத்தளம் ஊர்திகளின் வேகத்தைக் குறைக்கக் கூடாது; ஊர்திகளுக்கு அதிர்வு தரும் வகையில் கரடு முரடாக இருக்கக் கூடாது; எவ்வகையிலும் பாதுகாப்புக் குறையக் கூடாது; இது குறைந்த செலவில், அனைத்துப் பயனும் தரக் கூடியதாக அமையவேண்டும். சாலைத் தளத்தின் பல்வேறு பகுதிகள் பல காரணங்களுக்காகக் கட்டப்படுகின்றன. மேல்புறம் உள்ள தேய்மான அடுக்கு, மெல்லிய அடுக்கு ஆகும். ஊர்திகளால் ஏற்படும் திடீர் மோதல் விசைகளையும், அரிப்பையும் தடுத்துக் கால நிலைகளால் ஏற்படும் மாற்றங்களைத் தாங்கக்கூடியது. மேல்புற அடுக்கைத் தாங்கக் கூடிய அடிப்படை அடுக்கு, பளுவைப் பரவலாக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட சாலைப் பொருள்களைக் கொண்டு அடிப்படை அடுக்கைத் தாங்கக் கூடிய அடிவார அடுக்கு ஒன்றும் இருக்கும். இவ்வடுக்கு இயற்கையான மண்ணின் வலிமையைப் பொறுத்து அமையும். இயற்கையான மண் பரப்பின் அடுக்கு 0.5 மீ. ஆழம் வரை உள்ள தாங்கும் பகுதி, அடிப்படை அடுக்காகும். அதற்குக் கீழ் உள்ள மண் பகுதி சாலைப் படுகை எனப்படும். சாலைப் படுகையின் மேல் புறம் அனைத்து அடுக்குகளும் வரிசையாக அமைக்கப்படும். இணக்கமான சாலைத் தளம் என்பது இவ்வாறு வளையும் தன்மையுள்ள பல அடுக்குகள், கல், கீல், கருங்காரை முதலிய பொருள்களால் கட்டப்படும். இணக்கமான சாலைத் தளம் பளுவைச் சீராக ஒவ்வோர் அடுக்கிற்கும் பரவலாகப் பிரித்துக் கொடுக்கும். விறைப்பான சாலைத் தளம் சாலைப் படுகையின் மீது ஒரே தளமாகக் கற்காரை, சிமெண்ட், கற்பலகை முதலிய பொருள்களால் கட்டப்படும். விறைப்பான சாலைத் தளத்தில் பளு, தளத்தில் பெறப்பட்டு, உத்திரம் போல் இயங்கிச் சாலைப் படுகைக்குக் கொடுக்கப்படுகிறது. இணக்கமான சாலைத் தளத்தில் சாலைத் தள வடிவமைப்பு, அடிப்படை அடுக்குகளின் வலிமையைப் பொறுத்தே அமையும். நடுத்தரச் சாலைத் தளத்தில் சிமெண்ட், சுண்ணாம்பு, செயற்கைக் கட்டி முதலியவற்றைப் பயன்படுத்தி, வலிவான விறைப்புக் குறைவான மெல்லிய சாலையாக அமைக்கலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சாலைத்தள வடிவமைப்பு, போக்குவரத்து நிலை, சாலையின் ஈரத் தன்மை, கால நிலை மாறுபாடு, அடித்தள மண் தரம், சாலை கட்டப் பயன்படக் கூடிய பொருள்களின் பளு, பரவலாக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். இணக்கமான சாலைத் தள வடிவமைப்பு. இந்திய நெடுஞ்சாலைகளில் பெரும் பகுதி இவ்வடிவமைப்பிலேயே உள்ளது. 1970ஆம் ஆண்டு வரை இணக்கமான சாலைத் தள வடிவமைப்பு, இடத்திற்குத் தக்கவாறு மாறுபட்டு வந்தது. அறிவியல் அடிப்படை எதுவும் இல்லாமல், முழுச் சாலை நீளத்திற்கு ஒரே கனத்தில் கட்டப்பட்டது. மண்ணின் தரம், போக்குவரத்து நிலை, கால நிலை வேறுபாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் கட்டப்பட்டு வந்தது. 1970ஆம் ஆண்டு இந்திய சாலைச் சங்கம், இணக்கமான சாலைத் தள வடிவமைப்பிற்கென வழிகாட்டி ஒன்றை உருவாக்கியது. இவ்வழிகாட்டி கலிஃபோர்னியா தாங்கு ஆற்றல் விகித முறை வடிவமைப்பைச் சிறந்த முறை என்று பரிந்துரை செய்துள்ளது. பல்வேறு ஆய்வுகள் அடங்கிய பல முறைகள் வெவ்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவை சூழ்நிலைக்கேற்ற வாய்ப்பாடுகளையும் செயல் முறைகளையும் கொண்டுள்ள முறைகளாகும். இம்முறைகள் ஊர்தி வேகம், ஊர்தி ஓட்டத்திற்கு வசதி, தள மேற்பரப்பின் சொர சொரப்புத் தன்மை, சாலைப் பராமரிப்பு முதலியவற்றைத் தொடர்பு கொள்ளாமல் முடிவு செய்யப்படுபவை ஆகும். சாலை அமைக்கவிருக்கும் மண்ணின் வலிமையை, ஆய்வு மூலம் அறிந்து, வாய்ப்பாடுகளைப் பயன்படுத்திச் சாலைத் தள வடிவமைப்புச் செய்யும் முறைகள் பின் வருவன: அவை கலிஃபோர்னியா தாங்கு ஆற்றல் விகித முறை, யோமிங் முறை, வடக்கு டாக்கோட்டா கூம்பு முறை, மெக்லியோடு முறை என்பன. கலிஃபோர்னியா தாங்கு ஆற்றல் விகித முறை துளைத்து உட்புகும் ஆய்வை அடிப்படையாகக் கொண்டது. மண்ணின் அடர்த்தி, நீர் இருப்பு அளவு முதலியவற்றையும் பொறுத்துச் சாலையின் வடிவமைப்புத் தீர்மானிக்கப்படும். ஆதலால், கலிஃபோர்னியா முறையில் செயல்படுத்தப்படும் ஆய்வு, மண்ணின் உலர் அடர்த்தி, நீர் இருப்பு அளவுகளை அறிவது இன்றியமையாதது. ஆய்வுகள் மிகத் துல்லியமாக நடத்தப்பட வேண்டும். குறைபாடுகளைத் தவிர்க்க ஒவ்வோர் இடத்திலும், சிறும அளவு மூன்று மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். மூன்று மாதிரிகளையும் ஒரே அடர்த்தி, நீர் இருப்பு அளவு உள்ள இடத்திலேயே எடுக்க வேண்டும். இம்மூன்று மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் மிகுந்த வேறுபாட்டுடன் இருந்தால், ஆறு மாதிரிகளில் ஆய்வு நடத்திச் சராசரி முடிவு காண வேண்டும். பின்னர், சாலையின் மொத்தக் கனத்தைக் கணக்கிட, இங்கிலாந்து சாலை ஆராய்ச்சி ஆய்வகம் கொடுத்துள்ள வரைபடத்தைப் பயன்படுத்த, இந்தியச் சாலைச் சங்கம் பரிந்துரை செய்துள்ளது. இவ்வரைபடம் மொத்தப் போக்குவரத்து அளவுக்கும், சாலையின் கனத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. மேற்புற மெல்லிய அடுக்கு 2.5 செ.மீ. கனம் உள்ளது. வலிமை அமைப்பில் ஈடுபடாமையால், அதனைச் சாலையின் மொத்தக் கனத்தில் சேர்க்கத் தேவையில்லை. கலிஃபோர்னியா முறை, சாலையின் மொத்தக் கனத்தைக் கண்டு பிடிக்க உதவுகிறது. ஆயினும், அது அடிவார அடுக்கின் கனம், புற அடுக்குகளின் கனம் ஆகியவற்றைத் தனித் தனியே துல்லியமாகக் கணக்கிட உதவுவதில்லை. நாள் ஒன்றுக்கு மிகுந்த பளு உள்ள கனரக ஊர்திகள் எத்தனை செல்லும் என்பதைக் கணக்கிட்டு, வடிவமைப்பிற்குத் தேவையான ஊர்திப் பளுவாகக் கொள்ள வேண்டும். ஊர்திகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்ள வரைபடக் கோட்டின் உதவியுடன் அடிப்புறச் சாலைப் பொருள்களின் கனம், நீர், இணைப்புக் கற்களின் கனம், தார் இணைந்த கற்பகுதியின் கனம், அதன் மேற்புறச் சாலை லிரிப்புப் போன்ற மென்மையான பகுதியின் கனம் ஆகியவற்றைத் தீர்மானிக்க வேண்டும். கலிஃபோர்னியா தாங்கு ஆற்றல் விகித முறையில், ஒவ்வொரு பகுதி மண்ணின் அளவையும் அறிய, பளுவையும், துளைத்து ஊடுருவும் ஆழத்தையும் தொடர்பு படுத்தி ஒரு வரைபடக் கோடு வரைய வேண்டும். துளைத்து ஊடுருவும் உந்து தண்டுக் கம்பியின் குறுக்குப் பரப்பரளவு, அத்தண்டில் கொடுக்கப் படும் அழுத்தத்தின் அளவு முதலியவற்றைக் கணக்கிட வேண்டும். அழுத்தங்களின் விகித அளவின் மூலம், சதவீதத்தில் கலிஃபோர்னியா தாங்கு ஆற்றல் அளவு கணக்கிடப்படுகிறது. இவ்விகித அளவுக்கும், மொத்தச் சாலைக் கனத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தும் ஒரு வரைபடம் வரைய வேண்டும். யோமிங்கு முறையில் கலிஃபோர்னியா முறை மேலும் சீர்திருத்தப்பட்டுள்ளது. ஆண்டு மழை அளவு, நிலத்தடி நீர் ஆழம், பனிக்கட்டிகளால் ஏற்படும் மாறுபாடு, போக்குவரத்து அளவு ஆகியனவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வடக்கு டாக்கோட்டா கூம்பு முறையில் தாங்கு ஆற்றல் கண்டு பிடிப்பதற்குத் துளைத்து ஊடுருவும் உந்து தண்டு முனையில் கூம்பு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். மெக்லியோடு முறையில் தட்டின் தாங்கு ஆற்றல் ஆய்வு நடத்தப்பட்டு, விலக்கம் கண்டு பிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டெபிலோ மீட்டர், கொகசோ மீட்டர் அளவு முறையில் மண் பொருள்களின் விரிவடையும் தன்மை, மீட்சித் தன்மையால் ஏற்படும் அளவு மாறுபாடு, நீர் இருப்புத் தன்மை முதலியவை கணக்கில் கொள்ளப்படும். ஆஸ்பால்ட் ஆய்வக முறையில் மேற்கூறிய அனைத்து முறைகளின் முக்கிய முடிவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, போக்குவரத்து அளவைப் பொறுத்துச் சாலையின் மேற்புறத் தேய்மானத் தடுப்பு அடுக்கின் கனம் தீர்மானிக்கப்படும். விறைப்பான சாலைத் தள வடிவமைப்பு. விறைப்பான சாலைத் தளம் பொதுவாக, சிமெண்ட் கற்காரைத் தளத்தால் அமைக்கப்படுகிறது. அழுத்த வலிமை 280 கி.கி. /ச. செ. மீட்டராகவும், வளைவை எதிர்க்கும் வலிமை 40 கி. கி. / ச. செ. மீட்டராகவும் இருக்க வேண்டும். இதனால், சாலையின் மீது ஊர்திகள் மூலம் கொடுக்கப்படும் பளு பரவலாகக் கொடுக்கப்பட்டுத் தளத்தின் கீழ்ப்புறம் உள்ள அடிவார அடுக்கிற்குப் பளு மிகக் குறைந்த அளவே தரப்படும். சாதாரணமாக, விறைப்பான சாலைத் தளத்திற்கு அடிவார அடுக்கு வலிமையாகத் தேவைப்படுவதில்லை. எனினும், சில வேளைகளில் பனிக் கட்டிகளால் ஏற்படும் மாற்றம், கழிவு நீரினால் ஏற்படும் சிக்கல், சேறு மிகுதியால் ஏற்படும் தொல்லை, மண் விரிவடைதல், சுருங்குதல் ஆகியவற்றைப் போக்க வலிமையான அடிவார அடுக்குத் தேவைப்படுகிறது. சிமெண்ட் கற்காரைத் தளத்தில், ஊர்திப் பளு, வெப்பநிலை மாறுபாடு, நீர் இருப்பு அளவு மாறுபாடு, அடித் தள மண்ணின் பரிமாண மாற்றம் ஆகியவற்றால் தகைவுகள் ஏற்படுவதால், சாலைத் தளம் சேதமடையலாம். அதைத் தடுத்துச் சாலைத் தள வடிவமைப்புச் செய்யப் போக்குவரத்துச் சுற்றுப்புறச் சூழ்நிலை, அடித்தளத்தின் வலிமை, மேற்புற அடுக்கின் குணம், கற்காரையின் தன்மை ஆகியவற்றைத் தெளிவாகக் கண்டு பிடித்துப் பயன்படுத்த வேண்டும். முதலில் விறைப்புத் தன்மையின் ஆரத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். இது அழுத்தத்தால் ஏற்படும் சிதைவுகளைத் தடுக்க உதவும். ஆரம் கணக்கிடப் பின் வரும் வாய்ப்பாடு உதவுகிறது. L—விறைப்புத் தன்மையின் ஆர; E—கற்காரையின் மீட்சிக் குணகம்; μ—கற்காரையின் பாய்சான் விகிதம்; h—கற்காரைத் தளத்தின் கனம்; k—அடித் தள எதிர் வினைக் குணகம். பின்னர், சாலைத் தளத்தின் மூன்று நிலைகளில் மிகுதியான பளு சுமத்தப்படும் போது, கற்காரைத் தளத்தின் வலிமையைச் சோதித்து அறிய வேண்டும். அம்மூன்று நிலைகள் மூலைக் கோணம், ஓரப் பகுதி, மையத் தளம் ஆகியவையாகும். மூலைக் கோணங்கள், குறுக்கு இணைப்பு மூட்டுகள் சந்திக்கும் இடங்களிலும், நீள்திசை மூட்டுகளிலும், சாலை ஓரங்களில் ஏற்படும் கீறல் இடங்களிலும் உருவாகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> பளு, மையத் தளத்தின் மீது சுமத்தப்படும் போது சாலை, உள் நோக்கி உத்திரம் போல் வளைக்கப்படு கிறது. இதனால் சாலைத் தளத்தின் அடிப்பகுதியில் இழுவை ஏற்படுகிறது. தாக்கும் இடத்திற்கு அருகில் மிகுந்த தகைவு ஏற்படுகிறது; தொலைவு அதிகமாக, அதிகமாகத் தகைவு குறைகிறது. இதே போல், சாலை ஓரப் பகுதியில் கொடுக்கும் போதும், சாலை ஓரத்தில் உத்திரம் போல் தொய்வு ஏற்பட்டு, அடிப்பகுதியில் இழுவை ஏற்படுகிறது. மையப் பகுதியில் கொடுக்கப் படும் பளுவின் தகைவு, பளு உள்ள இடத்திலிருந்து ஆரத்தின் வழியாக, அனைத்துத் திசையிலும் செயல் படுகிறது. ஆனால், ஓரப் பகுதியில் பளு செயல்படும் போது, தகைவு ஓரத்திற்கு இணையான திசையில் மட்டுமே செயல்படுகிறது. மையச் சாலைப்பகுதியில் பளு தூக்கும் போது, பளு சிறிய பரப்பளவில் செயல் பட்ட போதும், அப்பரப்பளவின் ஆரப் பகுதிகள் அனைத்தும் தொய்வு ஏற்படாமல் தடுக்கின்றன. இதைச் சம எதிர்ப்பளிக்கும் ஆரப் பகுதிகள் எனக் குறிப்பிடலாம். இதற்கும், சாலைத் தளத்தின் கனத்திற்கும் உள்ள தொடர்பைப் பின் வருமாறு கூறலாம். ≥ 1. 724 ≤ 1. 724 larger|b=(1.6a^2 + h^2 - 0.675h)^{\frac{1}{2 b—சம எதிர்ப்பளிக்கும் ஆரப்பகுதி; a—பளு கொடுக்கும் சக்கரத்தின் ஆரம்; h—தளத்தின் கனம். மூலைக் கோணப் பகுதிகள், ஒரு முனை நிலையால் பொருத்தப்பட்ட உத்திரத்தைப் போல் வளையக் கூடியவை. மூலைக் கோணத்தில் ஏற்படும் பளு, சாலைத்தளத்தின் மேற்பகுதியில் மிகுதியான இழுவைத் தகைவை ஏற்படுத்துகிறது. இத்தகைவு மூலைக் கோணத்தின் இரு சமவெட்டிற்கு இணையாகச் செயல்படுகிறது. மிகு தகைவு, பளு செயல்படும் இடத்தில் ஏற்படுவதில்லை. ஆனால், இரு சமவெட்டின் குறிப்பிட்ட தொலைவில் ஏற்படுகிறது.larger|தொலைவு d=2.38(al)^{\frac{1}{2 d—மூலைக்கோணத்தளத்தின் உச்சியிலிருந்து மிகுந்த தகைவு இரு சம வெட்டில் ஏற்படும் இடத்திற்கு உள்ள தொலைவு.; a—பளு ஏற்படும் பரப்பளவின் ஆரம்; l—விறைப்புத் தன்மையின் ஆரம் இவ்வாறு மிகுந்த தகைவு, மூலைக் கோணப் பகுதியில்தான் ஏற்படுகிறது. ஏனெனில், மூலைக் கோணப் பகுதி இரு திசைகளிலும் தொடர்ந்து செல்வதில்லை. சாலையின் ஓரப் பகுதி, ஒரு திசையில் மட்டும் தொடர்ந்து செல்வதில்லை; அது குறைந்த தகைவு பெறுகிறது. மிகக் குறைந்த தகைவு பெறுவது மையச் சாலைப் பகுதி மட்டுமே. ஏனெனில், அனைத்துத் திசைகளிலும் தொடர்ந்து செல்கிறது. தகைவுகளைத் தனித் தனியே மையச் சாலைப் பகுதி, சாலையின் ஓரப் பகுதி, மூலைக் கோணப் பகுதி ஆகியவற்றிற்குக் கணக்கிட முடியும். சக்கரப் பளு மற்றும் சாலையின் கனம், சம எதிர்ப்பளிக்கும் ஆரப் பகுதி முதலியவற்றைப் பயன்படுத்திக் கண்டு பிடிக்க வேண்டும். வெப்பத் தகைவுகள் மையச் சாலைப் பகுதியில் மிகுதியாகவும், மூலைக் கோணத்தில் மிகக் குறைவாகவும் இருக்கும். இதைக் கற்காரையில் வெப்ப நிலைக் குணக மதிப்பை அறிந்து கணக்கிட வேண்டும். இதனால், சாலைத் தளத்தின் நீளம், அடிவாரத் தளத்தின் குணகம் முதலியவற்றைப் பயன்படுத்தி உராய்வுத் தகைவைக் கணக்கிட வேண்டும். இந்தியச் சாலைச் சங்க முறைப்படித் திருத்தி அமைக்கப்பட்ட விறைப்புச் சாலைத் தள வடிவமைப்புத் தகைவுகள் பின்வருமாறு: பளு தகைவுகள் சாலைத் தளத்தின் ஓரப்பகுதியில்: larger|\delta{e}=0.529{\frac{p}{h^2(10.54\mu)(4log_{10}\frac{l}{b}0.408) பளு தகைவுகள் சாலையின் மூலைக் கோணப்பகுதியில்: larger|\delta{c}={\frac{3p}{h^2[l-(\frac{a\sqrt{2{l})^{1.2}] சாலைத் தளத்தின் கனம் 17.5 —20 செ.மீ. வரை இருக்கலாம். —ஏ. எஸ். எஸ். சேகர் சாலைப் பொருள்கள் கல், மணல், சிமெண்ட், தார், பிட்டுமன் முதலிய இணைப்புப் பொருள்கள், சாலைப் பொருள்கள் (road materials) ஆகும். கல், மணல் ஆகியவை அடிப்படைப் பொருள்கள் ஆகும். இவை, சாலையில் ஏற்படும் தகைவுகள் அனைத்தையும் தாங்கக் கூடியவை; தேய்மானத்தைத் தடுக்கக் கூடியவை. இவை ஒன்றோடு ஒன்று இணைந்து, இறுக்கம் அடைந்த நிலையே சாலை அமைப்பைச் சிறப்படையச் செய்யும். ஊர்திகளின் பளு, உராய்வு, மழை, வெயில் ஆகியவற்றை எதிர் கொள்ளும். கல்லும், மணலும் பாறைகளிலிருந்தும், நிலங்களிலிருந்தும் இயற்கையாகக் கிடைக்கக் கூடியவை. குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார், மைக்கா, கால்சைட், டோலமைட் முதலிய மூலக் கூறுகள் இணைந்து பாறைகள் உருவாகின்றன. பாறைகளில் அனற் பாறை (igneous rocks), படிவுப் பாறை (sedimentary rocks), உருமாற்றப் பாறை (metamorphic rock) என மூன்று வகையுண்டு. முதல் வகை, புவிக்குக் கீழே மிகு வெப்பத்தில் இணைந்த மூலக் கூறுகள் படிப்படியாகக் குளிர்ந்து, இறுக்கம் அடைவதால் உருவாகிறது. இரண்டாம் வகை, முன்னரே இருந்த பாறைக் கற்களின் அரிப்பால் உதிர்ந்து, மீண்டும் வேறு இடங்களில் படிந்து, மணல் பாறையாக உருவாகும். மூன்றாம் வகை, மிகு வெப்பம், அழுத்தம், வெட்டுத் தகைவு, மின் அசைவு ஆகியவற்றால் இறுக்கமடைந்து உருவாகும். சரளை அல்லது உருளைக் கற்கள். இவை சிறிய சீரற்ற அளவுகளில், நீர்ப் பாதைகளில் காணப்படும். நீரோட்டத்தால் பல இடங்களிலிருந்தும், ஆற்றுப் படுகைகளுக்கு வந்து சேரும். ஒன்றோடு ஒன்று பிணையும் தன்மை குறைவானாலும் வேலை செய்ய ஏற்றவை. ஆகையால், கற்காரைக் கலவைக்கு இவை பயன்படும். மணல். நுண் கற்கள் எனப்படும் இவை, பாறைகளிலிருந்து உதிர்ந்தவை. ஆறு, கடற்கரைகளில்கிடைக்கும் நல்ல மணல், கூர்மையான கோணங்களுடன் ஒரே அளவில் தூசி, களிமண் இல்லாமல் நீடித்து உழைக்க ஏற்றது. லேட்டரைட். இது இரும்புத் தாது மிகுதியும் கலந்த களிமண் கல்லாகும். மர நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் காணப்படும். எளிதாக வேலை செய்ய ஏற்றது. ஈரத் தன்மை உடையது. சில காலத்தில் கடினத் தன்மை அடையக் கூடியது. கன்கர். இது களிமண், மணல் சேர்ந்த தூய்மையற்ற சுண்ணாம்புக் கல் ஆகும். சாம்பல் நிறத்தில் காணப்படும் இதில் மென்மையான, இறுக்கமான வகை உண்டு. முர்ரம். இதில் இரும்புத் தாது, உருளைக் கல், சிவப்புக் களிமண் ஆகியவை இணைந்து காணப்படும். பெரும் பாறைகள் கால நிலை மாற்றங்களால் சிதறுவதால், இவை உருவாகின்றன. கடினக் கற்கள். இவை சாலைகளின் மேற்பரப்பில் பயன்படுகின்றன. மென்மையான கற்கள். முர்ரம், கன்கர், லேட்டரைட் போன்றவை மென்மையான கற்கள்; இவை சிக்கனச் செலவில் கட்டப்படும் சாலைகளின் அடிப்பரப்பில் நிரப்பப் பயன்படுகின்றன. செயற்கைக் கற்கள். இரும்பை உருக்கும் கொதி கலனின் கழிவுப் பொருள்களிலிருந்து செயற்கைக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் அலுமினிய சிலிக்கேட்டும், மக்னீசியமும் மிகுந்து காணப்படும். நல்ல கற்கள் பின்வரும் குணங்களுடன் இருக்க வேண்டும். அவை கடினத் தன்மை, ஒன்றோடு ஒன்று உராயும் போது, உராய்வைத் தாங்கும் நிலை, பளுவைத் தாங்கும் வலிமை, நொறுங்கும் ஆற்றலைத் தாங்கும் வலிமை, சீரான நுண் பகுதிகளுடன் தேய்மானத்தை எதிர்க்கும் ஆற்றல், நெடுங்காலம் பயன்படும் தன்மை, மிகு ஒப்படர்த்தி, பிணைப்பு ஏற்படும் வகையில் கோணங்கள், உடைந்த போதும் தானே இறுக்கமடையக் கூடிய வலிமை முதலியன. சிமெண்ட். கல், மணல் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்க, சிமெண்ட் பயன்படுகிறது. நீருடன் சேர்ந்து வேதி மாற்றம் ஏற்பட்டுக் கல், மணல், சிமெண்ட் இணைந்து ஒரே பொருளாக மாறிச் சாலையில் கற்காரைத் தளமாக அமையும். நீண்ட கால உழைப்பு, அதிக பளு தாங்கும் தன்மை, மிகக் குறைவான தேய்மானம் ஆகியவற்றைக் கொண்டது. தார் மற்றும் பிட்டுமன். இந்த இணைப்புப் பொருள்கள், பிசுபிசுப்புத் தன்மை உடைய ஒட்டும் தன்மை மிகுந்த பெட்ரோலியக் கழிவுப் பொருள்களாகும். ரப்பர் பால் போன்று இளகி இருக்கும். நீர்ம நிலையிலும், திண்ம நிலையிலும் இருக்கக் கூடியது. ஹைட்ரோகார்பன் மிகுதியாக உள்ளது. கார்பன் டை சல்பைடில் கரையக் கூடியது. பெட்ரோலிய மூலப் பொருளில், எரி வளிம எண்ணெய், மசகு எண்ணெய் முதலியவற்றைப் பிரித்து எடுத்த பின்னர், எஞ்சிய பொருளிலிருந்து கிடைப்பதே பிட்டுமன் எனப்படுவது. இதனுடன், எளிதில் ஆவியாகக் கூடிய ஒரு கரைப்பான் கலக்கப்பட்டுச் சாலை அமைக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. கரைப்பானின் தன்மையால் பிட்டுமன்னுடன் இணைந்து இளகிப் பின்னர், ஆவியாகி விடுவதால் இறுக்கம் அதிகரித்து விடுகிறது. பிட்டுமன் நீர்மம். இது பால் போல் இருக்கும்; பிட்டுமன், நீர் ஊக்குவிக்கும் நீர்மம் ஆகியவற்றை அதி வேகக் கலவை எந்திரத்தில் இட்டுத் தயாரிக்கப் படுகிறது. இது மூன்று வகைப்படும். முதல் வகை, குளிர் நிலையில் உடையக் கூடியது. இரண்டாம் வகை, ஓரளவு நீர்மம் சேர்ந்தது; பழைய சாலைகளைச் செப்பனிட இவ்வகை பயன்படுகிறது. மூன்றாம் வகை, வேதி, இயற்பியல் நிலைப்புத் தன்மை மிகுந்தது. குளிர் காலத்தில் சாலை அமைக்க இது ஏற்றது. ஏனெனில், குளிரிலும் உலர்ந்த பின்னரும் உடையாதது. தார். இது கறுப்பு நிறமுடைய பிசுபிசுப்பான நீர்மம்; ஒட்டும் தன்மை மிகுந்தது. புவிக்கு அடியில், எரிந்த மரம், கரி, மென்மையான பாறை ஆகியவற்றின் கலப்பால் ஆனது. மிகுந்த வெப்பத்தைத் தாங்கக் கூடியது. இறுக்கமடைய நீண்ட நாள் எடுத்துக் கொள்ளும். நீண்ட நாள் உழைக்கக் கூடியது. நிலக்கரியிலிருந்து எண்ணெய், நாஃப்தலீன் போன்றவற்றைப் பிரித்த பின்னர், தார் உருவாகிறது. ரப்பர் பிட்டுமன். நீர்ம நிலையில் உள்ள ரப்பர் பாலுடன் பிட்டுமன் இணைத்துத் தயாரிக்கப்படுகிறது. ஒட்டும் தன்மையும், நிலைப்புத் தன்மையும் மிகுதியாக உடையது. மென்மையும், அதிர்ச்சி தாங்கும் தன்மையும் உடையது. வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் குறைவாக உடையது. கீறல் விழுவதைத் தடுக்கக் கூடியது. —ஏ. எஸ். எஸ். சேகர் நூலோதி. Kenneth B. woods, Highway Engineering Hand Book, First Edition, McGraw Hill Book Company, New York, 1960. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு முடிவுற்றது. அடுத்த பக்கத்தில் புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> சாலை போடும் முறைகள் பொது வாழ்வில் சாலைகள் மிகவும் இன்றியமையாதவையாகும். இச்சாலைகள், நீண்டநாள் உழைக்கும் பொருட்டுச் சிறப்பான முறைகளில் போடப்பட வேண்டும். மண் சாலை. இது குறைந்த செலவில் உருவாகக் கூடிய சாலையாகும். மணல், குறுமணல், களிமண் ஆகியவை கலந்த மண்ணால் அமைக்கப் படுவது. மிகுந்த அளவில் விரிவடையக் கூடிய களிமண்ணையும், சாலை அமைக்கும் முன்னர் அவ்விடத்தில் உள்ள முட்செடி, புதர், மரம், செடி ஆகியவற்றையும் நீக்க வேண்டும். தூய்மைப் படுத்திய பின்பு, சாலை அமைக்கப் போகும் நீள, அகலங்களை வண்ணம் பூசிய மரக் குச்சிகளையும், முளைக் கம்புகளையும் நிறுத்தித் தெளிவாகத் தெரியுமாறும், இயற்கையாக உள்ள தரையின் மீது உருளையை உருட்டிச் சாலை இறுக்கமடையுமாறும் செய்ய வேண்டும். தேவையான அளவு இறுக்கமாக இல்லாவிட்டால் 50 செ.மீ. ஆழத்திற்கு மண்ணைக் கிளறி விட்டு, நீர் சேர்த்துப் பின்னர், தேவையான அளவு இறுக்கமடையச் செய்யலாம். சாலை உருளையைப் பயன்படுத்தி, அழுத்தம் கொடுக்கும் போது மண் அடுக்கின் கனம் 25 செ.மீக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓர் அடுக்கு முழுமையாக இறுக்கம் அடைந்த பின்னரே, அடுத்த அடுக்குச் சாலைப் பொருள்களைச் சாலையின் முழு அகலத்திற்கும் பரவலாகப் போட வேண்டும். சாலையின் தேவையைக் கணக்கிட்டு நீர் சேர்க்க வேண்டும். ஏறத்தாழ 95% உலர் அடர்த்தி அடையும் வரை சாலையை இறுக்கமடையச் செய்ய வேண்டும். முழுமையாக இறுக்கமடைந்த பின்னர், சில நாள் உலர வைத்த பின்னரே, ஊர்திகளை அனுமதிக்க வேண்டும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> கூழாங்கல் சாலை. இது கனரக ஊர்திகள் செல்லக் கூடிய, குறைந்த செலவில் அமைக்கக் கூடிய, அனைத்துத் தட்ப வெப்ப நிலையிலும் ஓரளவு பயன்படக் கூடிய, நாள் ஒன்றுக்கு 400 ஊர்திகள் வரை செல்லக் கூடிய சாலை ஆகும். கூழாங்கற்களும், நொறுக்கப்பட்ட கற்களும் தூய்மைப்படுத்தப்பட்ட பின் பயன்படுத்தப்பட வேண்டும். சாலையின் இரு பக்கங்களிலும் கற்களைக் குவித்துச் சேர்த்த பின்னர், சாலை சம அளவில் குழி போல் வெட்டப்பட வேண்டும். சாலை உருளையைப் பயன்படுத்தி வெட்டப்பட்ட குழியை அழுத்தம் அடையச் செய்ய வேண்டும். பின்னர், 10 செ.மீ. கனத்திற்குச் சீராகக் கற்களைப் பரவலாக இட வேண்டும். பெரிய கற்கள் சாலையின் மையத்திலும், சிறு கற்கள் சாலையின் ஓரத்திலும் இருக்குமாறு அமைத்தால், சாலையின் நடுப்பகுதி மேடாக அமையத் தேவையான சரிவு கிடைக்கும். பின்னர், சாலை உருளையைப் பயன்படுத்தி, ஓரத்திலுள்ள கற்களை இறுக்கமடையச் செய்ய வேண்டும். முன்னும், பின்னும் உருளையை உருட்டி, இணை கோடுகளில் நடுப்பகுதியை நோக்கி உருளையை உருட்ட வேண்டும். தேவையான இறுக்கம் அடையும் வரை இடையிடையே நீர் தெளித்து உருட்ட வேண்டும். மேற்புறம் மணலைத் தூவி, உருளையை உருட்டி, உலர்ந்த பின்னரே ஊர்திகளை அனுமதிக்க வேண்டும். நீர் இணைப்புக் கற்சாலை. அடிப்பகுதியில் பெரிய கற்களை இட்டுச் சாலை உருளையை உருட்டி இறுக்கமடையச் செய்த பின்னர், பொடிக் கற்களையும், இணைப்புப் பொருள்களையும் அடுக்கடுக்காகப் போட்டு அமைக்க வேண்டும். இது 8—30 செ.மீ. கனமுடைய சாலையாகும். பெரிய கற்களை இதற்குப் பயன்படுத்தும் போது அவை வலிமை, வடிவம், புற அமைப்பு, அளவு, ஒத்த தன்மை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். கற்களைச் சாலையின் இரு புறமும் குவித்து 7.5 செ.மீ. தடிமனுக்கு இட்டு அமைக்க வேண்டும். மேற்பரப்புச் சமமாக இருக்கும் போது, அளவுகோலின் உதவியுடன் சீர் செய்ய வேண்டும். சாலை உருளையைப் பயன்படுத்தி இறுக்கம் அடையச் செய்ய வேண்டும். அதிர்வு உருளையையும் பயன்படுத்தலாம். ஓரத்திலிருந்து நடுப்பகுதி நோக்கிச் சாலை உருளையை உருட்டி நகர்த்த வேண்டும். இறுக்கமடைந்த பின்னர், சிறு கற்களை நிரப்பி, இடைவெளிகளை மூடி உருளையால் உருட்ட வேண்டும். பின்னர், மிகுதியாக நீரைத் தெளித்து, உருளையை உருட்ட வேண்டும். நீர் மிகுதியாகச் சேர்ப்பதால், காற்று வெளியேறி ஈரமான சிறு கல் தூள்கள் படிந்து, இறுக்கமடையப் பிணைப்பு ஏற்படும். அதன் மீது, இணைப்புப் பொருள், நிரப்பும் பொருள் ஆகிய குறுமணலை மெல்லிய அடுக்கில் பரவலாகப் போட வேண்டும். மீண்டும் நீர் தெளித்து, உருளையால் உருட்ட வேண்டும். இதனால், சிறு மண் உருளையில் ஒட்டாமல் விழுந்து விடும். தேவையான அளவு அழுத்தம் கொடுத்துச் சாலை இறுக்கமடைந்த பின்னர், 12 மணி நேரம் உலர வைத்து 6 மி மீ. கனத்திற்கு மணல் சேர்ந்த மண்ணைத் தூவி, மீண்டும் நீர் தெளித்து இறுக்கமடையச் செய்ய வேண்டும். பின்னர், சில நாள் உலர வைத்த பிறகே ஊர்திகளை அனுமதிக்க வேண்டும். களிமண் மிகுதியாக உள்ள இடங்களிலும், குறைபாடு உள்ள மண்கள் நிறைந்த இடங்களிலும் சாலை அமைக்க, அவற்றுடன் உறுதியும், கடினத் தன்மையும் அதிகரிக்கக் கூடிய பல்வேறு சாலைப் பொருள்களை இணைத்துச் சாலைக்கு வலிமை கூட்ட வேண்டும். குறிப்பிட்ட ஆழத்திற்குக் களிமண்ணை அகற்றிய பின்னர், 1% சுண்ணாம்பு கலந்த மண்ணை அடிப் பகுதியாக அமைக்க வேண்டும். சுண்ணாம்பு, களிமண்ணின் பிசின் தன்மையைக் குறைக்க வல்லது. முதல் அடுக்குச் சாலையாகக் களிமண்ணுடன் 2—3% சுண்ணாம்பு சேர்த்துச் சாலை அமைக்க வேண்டும். அடுத்த அடுக்கில், 2—3% சுண்ணாம்பு சேர்த்து வலிவூட்டிய மண்ணுடன் தேவையான அளவு நீர் சேர்த்து இறுக்கம் அடையச் செய்ய வேண்டும். பின்னர், பெரிய கற்கள் அருகில் கிடைக்குமாயின் நீர் இணைப்புக் கல் சாலை அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில், மேலும் 3—6% சுண்ணாம்பு சேர்ந்த மண்ணை இரு அடுக்குகளாக அமைத்துச் சாலை போட வேண்டும். அல்லது, 3—5% சிமெண்ட் பொருள்களான வலிவான சாம்பல், சுண்ணாம்புக் கல், சுக்காங்கல் ஆகியவற்றை இணைத்துச் சாலை அமைக்க வேண்டும். தேவையான அளவு நீர் சேர்த்து உருளையை உருட்டி, இறுக்கம் அடையச் செய்ய வேண்டும். சாலையின் மேற்பரப்பில் மணல் கலவையை மெல்லிய அடுக்காகத் தூவி உலர வைத்த பின்னர், ஊர்திகளை அனுமதிக்கலாம். பாலைவனம் போன்ற இடங்களில் சாலை அமைக்க, மண்ணுடன் சிமெண்ட், சுண்ணாம்பு சேர்க்க இயலாது. மேலும், நீர் மிகக் குறைவாக உள்ள இவ்விடங்களில் பாலைவன மணல் இறுக்கமடைவது மிகக் கடினமாகும். ஆதலால், நிறமியுடன் கலந்த அடர்த்தி மிகுந்த குழம்பு போன்ற திண் சுதைப்பால், கலவையை மணலுடன் சேர்த்துச் சாலைப் பொருளாகப் பயன்படுத்த வேண்டும். குளிர்ச்சியூட்டப்பட்ட ஃபார்மால்டிஹைடு என்ற பொருளை மணலுடன் சேர்த்துச் சாலைப் பொருளாகப் பயன்படுத்தலாம். தார்ச் சாலை. இது நீர் இணைப்புக் கற்சாலையை முதலில் அமைத்த பின்னர், அதன் மேற்பரப்பை நிறமி, தார்,புகைக்கீல,கருங்காரை போன்ற பொருள்களைக் கற்பொடிகளுடன் கலந்து மேல் அடுக்காக அமைக்கும் சாலையாகும். தார் சூடாகக் காய்ச்சப்பட்டுக் கற்களுடன் கலந்து சாலை அமைப்பதும் உண்டு. கற்கள், மணல், நிறமி ஆகியவை கற்காரைக் கலவையாகத் தயாரிக்கப்பட்டுச் சாலை அமைக்கப்படுவதும் உண்டு. வெறும் நிறமியும், இணைப்புப் பொருளும் காய்ச்சப்பட்டு, சூடான நிலையில் கற்சாலையின் மேற்புற அடுக்காகவும் ஊற்றப்படலாம். மணலைக் கருங்காரையுடன் கலந்தும் பயன்படுத்தலாம். தார், மணல், கல் சேர்ந்த கலவையைக் கற்காரையாகப் பயன்படுத்தித் தளம் அமைத்தும் தார்ச்சாலை அமைக்கலாம். மேற்புறச் சீரமைப்பு எனப்படுவது, ஒன்று அல்லது இரண்டு அடுக்குகளாக நிறமியும், வேதிக் கலவையும் ஒட்டும் பொருள்களாகச் சூடான நிலையில் பூச்சுப் போல் அமைவது ஆகும். இதை அமைக்கும் போது, தட்ப வெப்ப நிலை 16°Cக்குக் குறையாமல் இருக்க வேண்டும். நிறமி 163—177°C வரை சூடாக்கப்பட்டுச் சீராகத் தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட வேண்டும். மேற்புறப்பூச்சுப் போட்டவுடன், அது இறுக்கமடையும் வரை சாலை உருளையால் உருட்ட வேண்டும். 24 மணி நேரத்திற்குப் பின்னர், சாலையைப் பயன்படுத்தலாம். கற்காரைச் சாலை. மாறுபாட்டுப் பகுதி கட்டும் முறை, தொடர்ந்து கட்டும் முறை என இரு முறைகளில் இச்சாலையை அமைக்கலாம். குறிப்பிட்ட தொலைவை ஒரு பகுதியாகக் கொண்டு ஒன்று விட்டு ஒரு பகுதியைக் கட்டிக் கொண்டு செல்வது முதல் முறை, விடுபட்ட பகுதிகளை ஒரு வார இடைவெளிக்குள் மீண்டும் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். தொடர்ந்து கட்டும் முறையில் சாலை நீளவாக்கில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பக்கமாகச் சாலையில் கற்காரைத் தளத்தைக் கட்ட வேண்டும். பின்னர், மறு பக்கத்தைத் தொடர்ந்து கட்டவேண்டும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> கற்காரைச் சாலை அமைக்கும் போது, உலர்ந்த தட்ப வெப்ப நிலை 4—40°C வரை இருக்கலாம். அடித்தளத்தைச் சீராகவும், இறுக்கமாகவும், உறுதியாகவும் அமைக்க வேண்டும். மேற்பரப்புக் கடினமாக இருக்க வேண்டும். ஓரங்களில் சாலையின் அகலத்தை விட 30செ.மீ. அளவு தூய்மை செய்யப்பட வேண்டும். கற்காரை ஒட்டும் வகையில் அடித்தளம் வடிவமைக்கப்பட வேண்டும். கற்காரையைச் சாலையின் அகலத்திற்குள் தடுத்து நிறுத்த அச்சறைச் சட்டமும், முட்டுத் தாங்கியும் அமைக்க வேண்டும். கல், மணல், சிமெண்ட், நீர் ஆகியவற்றை எந்திரத்தில் இட்டுக் கலவை தயார் செய்ய வேண்டும். ஆய்வு மூலம் கற்காரையின் தரத்தைச் சோதித்த பின்னர் அடித்தளத்தில் பரவலாகக் கொட்ட வேண்டும். கற்காரையைச் சீராகவும், இடைவெளி இல்லாமலும் பரப்ப வேண்டும். இதை 90 செ.மீ. உயரத்திலிருந்து தளத்தில் கொட்ட வேண்டும். கலவை எந்திரத்திலிருந்து எடுத்த கற்காரையை 20 நிமிட நேரத்திற்குள் அடித் தளத்தின் மீது போட வேண்டும். கற்காரைக்கு இறுக்கமும், அழுத்தமும் கொடுக்க அதிர்வு தண்டுகள் பயன்படுத்தலாம். அதிக அதிர்வு கொடுக்கப்பட்டால், சாந்து, நீர் ஆகியவை பிரிந்து மேற்புறமாக வர வாய்ப்பு உண்டு. ஆதலால், சரியான அதிர்வு கொடுத்து அனைத்து இடத்திலும் கற்காரை சீராகப் படியுமாறு செய்ய வேண்டும். அளவுகோல் பயன்படுத்திக் கற்காரை உலரும் முன்னர், தளத்தில் தடிமன், சரிவு முதலியவற்றைச் சரி செய்ய வேண்டும். ஏதாவது ஓரிடத்தில் பள்ளம் அமைந்தால், அவ்விடத்தை உடனடியாகச் சற்றுப் பெரிய பள்ளமாக மாற்றிப் புதிய கற்காரையால் நிரப்பிச் சீர் செய்ய வேண்டும். இத்தகைய சீரமைப்பு வேலைகளை, கலவை கலந்த 75 நிமிடத்திற்குள் முடிக்க வேண்டும். இரண்டு அடுக்காகச் சாலை போட வேண்டி இருந்தால், முதல் அடுக்குக் கலவை போட்டு இறுக்கமடைந்த 30 நிமிடத்திற்குள்ளாக அடுத்த அடுக்கை அமைக்க வேண்டும். சாலையின் மேற்பரப்பு, ஓரம், சரிவு ஆகியவற்றைச் சரி பார்த்த பின்னர், சாலையின் மேற்பரப்பில் உராய்வுக்கெனத் தேவையான அளவு சொர சொரப்பு ஏற்படுத்த வேண்டும். அதற்குக் குச்சிகள் நிறைந்த பூச்சுக் கோல் அல்லது பெருக்குமாறு பயன்படுத்தலாம். சாலை போட்டு முடித்த பின்னர், துணி, சாக்கு முதலியவற்றை நீரில் நனைத்து நீர் கசியும் வகையில் சாலையின் மீது போட்டு மூட வேண்டும். தொடர்ந்து, 24 மணி நேரம் இவ்வாறு ஈரம் கொடுத்த பின்னர், துணிகளையும், சாக்குகளையும் நீக்கி விட்டு, சாலையின் மீது மண் வரப்பு அமைத்து, அதில் நீர் தேங்கி நிற்கச் செய்ய வேண்டும். குறைந்தது 14 நாளுக்கு நீர் ஊட்டம் கொடுத்த பின்னர், பயன்படுத்தலாம். —ஏ.எஸ்.எஸ். சேகர் சாலை வகைகள் கட்டப்படும் பொருள்களைப் பொறுத்தும், பயன்படுத்தப்படும் காரணங்களை ஒட்டியும், சாலைகள் பலவகையாகப் பிரிக்கப்படலாம். கட்டுமானப் பொருள்களைப் பொறுத்துச் சாலைகள், மண் சாலை, கூழாங்கல் சாலை, நீர் இணைப்புக் கற்சாலை, தார்ச் சாலை, சிமெண்ட் சாலை அல்லது கற்காரைச் சாலை, தகட்டுச் சாலை எனப் பிரிக்கப்படும். மண் சாலை, மணல், களிமண் ஆகியவற்றைச் சரியான அளவில் கலந்து உருவாக்கப்படுகிறது. முதலில் உள்ள மண்ணின் மேற்பரப்பு மேலும் கீழுமாகவும் கரடு முரடாகவும் இருக்கும். அவற்றின் மீது மணல், களிமண் கலவையைப் பரவலாகப் போட்டு, ஏறத்தாழ 12 செ.மீ. உயரத்திற்குப் புதிய சாலை அமைக்கப்படுகிறது. பின்னர், அதே சாலை 7.5 செ.மீ உயரமாகக் குறையும் வரை மீண்டும், மீண்டும் கல் உருளையால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. முழுமையாக அழுத்தம் கொடுத்து முடிந்த பின்னர், சாலைகளின் இரு பக்கமும் முறையான கழிவு நீர்ப் பாதைகள் அமைக்கப்படும். கூழாங்கல் சாலை அல்லது சரளைக் கல் சாலை எனப்படுவதும் இதே முறையில் அமைக்கப்படும். 6—30 மி.மீ. அளவுடைய கூழாங்கற்கள் அல்லது சரளைக் கற்கள் தேர்வு செய்யப்படும். இக்கற்களைக் கரடு முரடான மண் மேற்பரப்பில் மணல், களிமண் கலவையுடன் பரவலாகப் போட வேண்டும். இக்கலவையில் 26% மணலும், 13% களிமண்ணும் இருக்கும். இச்சாலையின் கனம் 15—30 செ.மீ. வரையிலும் அமைக்கப்படும். அதன் மேற்புறம் 6—12 மி.மீ. உயரத்திற்குக் குறுமணல் பரப்பப்பட்டு மூடப்படும். மழைக் காலங்களில் இவை பெருமளவில் சேறு உண்டாக்கக் கூடியவை. நீர் இணைப்புக் கற்சாலை, நீர் மிகுதியாகப் பயன்படுத்திக் கட்டப்படும் சாலையாகும். 10 செ.மீ. உயரத்தில், இரு அடுக்குக் கற்சாலை அமைக்க வேண்டும். 7 செ.மீ. அளவுள்ள கற்கள் இதற்குப் பயன்படும். முதலில் சிறிய அளவிலான கற்களைப் பயன்படுத்தி, 5 செ.மீ. உயரத்திற்கு ஓர் அடுக்குக் கற்சாலை அமைக்க வேண்டும். கல் தூள், பருமணல் ஆகியவை இணைப்புப் பொருளாகவும், நிரப்பும் பொருளாகவும் பயன்படும். ஒவ்வோர் அடுக்காகக் கற்கள் அமைக்கப்பட்ட பின், மிகுந்த நீர் தெளிக்க, இறுக்கமான பிணைப்பு ஏற்படும். தார்ச்சாலை, கருங்காரை அல்லது தார் போன்ற ஒட்டும் பொருள் மிகுதியாகப் பயன்படும் கற்சாலை ஆகும். இது ஒட்டும் பொருளின் தன்மைக்கேற்ப வெப்ப அல்லது குளிர்ந்த நிலையில் அமைக்கப்படுகிறது. பொதுவாக, தார் போன்ற இணைப்புப் பொருள்கள் உருகிய நிலையில், கற்களுடன் கலக்கப் பட்டு, அக்கற்கள் பரவலாக்கப்படுவதால் இச்சாலைகள் கட்டப்படுகின்றன. இக்கற்களின் அடிப்புறமும், மேற்புறமும் தார் நிரப்பப்பட்டுச் சாலை கறுப்பு நிறத்தில் அமைந்திருக்கும். இவற்றின் மொத்தக் கனம் 15 செ.மீ. வரை இருக்கும். சில வேளைகளில் கருங்காரை அல்லது நீலக்கல் போன்ற வாஷிங்டன் கிறித்தவ ஆலயத்தின் அன்றைய, இன்றைய சாலை அமைப்பு இணைப்புப் பொருள்களுடன் கல் பொடிகள் சேர்த்துக் கெட்டியாக்கப்பட்டு, நீர் இணைப்புக் கற்சாலையின் மீது இட்டு அழுத்தப்பட்டுத் தார்ச் சாலையாக அமைக்கப்படும். சிமெண்ட் சாலை அல்லது கற்காரைச் சாலையைக் கட்டடங்களில் தளம் போடுவது போல அமைக்க வேண்டும். மண்ணின் மேற்பரப்புச் சமப்படுத்தப்பட்ட பின்பு, கற்காரைத் தளம் போட வேண்டும். சிமெண்ட், கல், மணல், நீர் ஆகியவற்றைச் சரியான அளவில் கலந்து இச்சாலைகள் கட்டப்படுகின்றன. 10 செ.மீ. கனம் உள்ள தளங்கள் வரிசையாகவோ, குறிப்பிட்ட தொலைவிற்கு ஒன்றாகவோ அமைக்கப்படும். குறைந்தது 14 நாள் நீர் விடப்பட்டு, இறுக்கமடைய வேண்டும். 28 நாளுக்குப் பின்னரே, ஊர்திகள் செல்லக் கூடிய அளவில் முழு வலிமை அடையும். தகட்டுக் கற்சாலையில், குறிப்பிட்ட அளவில் கற்கள் தகடுகள் போல வெட்டப்பட்டு, அவை தளமாக அமைக்கப்படும். சிறு வீதிகளில் மண்ணின் மேற்பரப்புச் சமப்படுத்தப்பட்டு, இறுக்கமடைந்த பின்னர், தகட்டுக் கற்கள் பாவப்பட்டுக் கற்களுக்கு இடையில் உள்ள சிறு இடைவெளிகள் சாந்தால் மூடப்படும். கற்காரைத் தட்டுகளும் இதில் பயன்படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> நிர்வாகக் காரணங்களுக்காக, சாலைகள் நாக்பூர் திட்டத்தின் மூலம் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலை, சிற்றூர்ச் சாலை, மலைச்சாலை என இவை பிரிக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அடுத்துள்ள மாநில நெடுஞ்சாலைகள் மாநிலங்களையும், மாவட்டத் தலைநகர்களையும், முக்கிய நகரங்களையும் இணைக்கும் சாலைகள் ஆகும். மாவட்ட நெடுஞ்சாலைகள் என்பன பொருள்கள் உற்பத்தி, விற்பனை ஆகும் இடங்களின் நெடுஞ்சாலைகள், பாதைகள் உள்ள இடங்களுடன் இணையும் சாலைகள் ஆகும். இச்சாலைகள் ஆண்டு முழுதும் போக்குவரத்தை நகரப் பகுதிகளுக்குள் கொண்டு செல்லும் வல்லமை பெற்றவை. இவ்வகைச் சாலைகள் பெரிய மாவட்டச் சாலைகள், பிற மாவட்டச் சாலைகள் என இருவகைப்படும். சிற்றூர்ச் சாலைகள் சிற்றூர்களை ஒன்றோடு ஒன்று இணைக்கவும், அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை, இருப்புப் பாதை, படகுத் துறை ஆகியவற்றுடன் இணைக்கவும் பயன்படுகின்றன. சிற்றூர் மக்களின் தேவையை இவை நிறைவு செய்கின்றன. இவை, பயன்படுத்தப்படும் விதம், தாங்கக் கூடிய சுமை, அவற்றின் அகலம், இன்றியமையாமை ஆகியவற்றைப் பொறுத்துப் பல வகைப்படும். வெளிப்புறச் சாலைகள், அகச் சாலைகள், மாவட்டச் சாலைகள் அல்லது வீதிகள், பண்ணைச் சாலைகள் எனப் பிரிக்கப்படும். வெளிப் புறச் சாலைகள், சிற்றூர் இணைப்புச் சாலைகள் எனப் பிரிக்கப்படும். பெரிய மாவட்டச் சாலைகள் சிற்றூர்களைக் கடந்து செல்லக் கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆகும். இவை நேரிடையாகப் பயன்படுவதில்லை. சிற்றூர் இணைப்புச் சாலைகள் ஓர் ஊரை ஏனைய சிற்றூர்களுடனோ, நகர நெடுஞ்சாலையுடனோ இணைக்கக் கூடியவையாகும். அகச் சாலைகள், ஊரின் சுற்றுச் சாலைகள், ஆரச் சாலை, முதன்மை வீதிகள், கிளை வீதிகள் எனப் பல வகைப்படும். சுற்றுச் சாலை, ஊருக்குள் பொருள்களை எடுத்துச் செல்லப் பயன்படும் சாலையாகும். இது சிற்றூரின் முழுப் பகுதியை யும் சுற்றியுள்ள சாலையாகும். ஊர்திகள் நிறுத்தும் வசதி உடைய சாலைகளாகவும் இருக்கும். ஆரச் சாலைகள் (radial roads) ஊர் மையத்திலிருந்து சுற்றுச் சாலையை அடையும். கனரக ஊர்திகள் செல்ல இவை பயன்படுவதில்லை. எனினும், மாட்டு வண்டிகளும், வேளாண் ஊர்திகளும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். முதன்மை வீதிகள் ஊரிலுள்ள இல்லங்களைக் கடந்து, சுற்றுச் சாலைகளை அடையும் சாலைகளாகும். கிளைச் சாலைகள் முக்கிய வீதிகளிலிருந்து பிரிந்து செல்லும் சாலைகள் ஆகும். இச்சாலைகள் சுற்றுச் சாலைகளில் முடிவதும் உண்டு; இல்லந்தோறும் சென்று முடிவதும் உண்டு. பண்ணைச் சாலைகள், பெரும் பண்ணைச் சாலை, சிறு பண்ணைச் சாலை, விலங்குச் சாலை எனப் பல வகைப்படும். பெரும் பண்ணைச் சாலைகள் சிற்றூர்களின் வெளிப்புறச் சாலைகளில் உள்ள பண்ணைகளையும், வயல்களையும் இணைக்கும்; வேளாண் ஊர்திகள், சுமை ஏற்றிச் செல்லும் ஊர்திகள் அனைத்தும் செல்லக் கூடியன. சிறு பண்ணைச் சாலைகள், பெரும் பண்ணைச் சாலைகளின் கிளைகளாகப் பிரிந்து செல்லும் துணைச் சாலைகளாகும். ஒற்றையடிப் பாதையே விலங்குச் சாலைகள் ஆகும். மலைச் சாலைகளின் இன்றியமையாமை அகலம், அவற்றில் செல்லக் கூடிய சுமை முதலியவற்றைப் பொறுத்துப் பலவாறாகப் பிரிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை, வகுப்பு 9, 5, 3, எனப் பிரிக்கப்படும். முக்கியத்துவம் வாய்ந்த மலைச் சாலைகள் தேசிய நெடுஞ்சாலை எனப்படும். வகுப்பு 9, 6 மீ அகலம் உடையது; 3 டன் எடையுள்ள ஊர்திகள் செல்லக் கூடியது. வகுப்பு 5, 4.9 மீ அகலம் உடையது; 1 டன் எடையுள்ள ஊர்திகள் செல்லக் கூடியது. வகுப்பு 3, 2.5—3.65 மீ. அகலம் உடையது. சிற்றுந்துகள் மட்டுமே செல்லக் கூடியது. நகரச் சாலைகள் நகரத்திலிருந்து பிற நகரத்திற்குச் செல்லும் சாலைகள், பெரும் பிரிவுச் சாலைகள், சுற்றி வரக் கூடிய சாலைகள், சந்துச் சாலைகள், நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றியுள்ள சாலைகள், இல்லங்களுக்கு உள்ள இணைப்புச் சாலைகள், நடைபாதை மற்றும் மிதிவண்டிச் சாலைகள் என ஏழு வகைப்படும். போக்குவரத்து வசதிகளைப் பொறுத்து இவை நான்கு வகைப்படும். அவை உயர் வகை நெடுஞ்சாலை, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்புச் சாலைகள் ஆகும். உயர் வகை நெடுஞ்சாலைகள் நான்கு ஊர்திகள் செல்லக் கூடிய அகலம் உடையவை. இவற்றில் நாள் ஒன்றுக்கு 3000க்கு மேற்பட்ட ஊர்திகள் செல்லும். முதல் வகுப்புச் சாலையில் நாள் ஒன்றுக்கு 1500 ஊர்திகள் வரை செல்லும். இச்சாலைகள் தார்ச் சாலைகளாக இருக்கும். இரண்டாம் வகுப்புச் சாலை நாள் ஒன்றுக்கு 300 ஊர்திகள் வரை செல்லக் கூடியது. கற்சாலைகளாகவும், நீர் இணைப்புக் கற்சாலைகளாகவும் கட்டப்பட்டிருக்கும். மூன்றாம் வகுப்புச் சாலை ஓர் ஊர்தி செல்லும் பாதையாகப் பயன்படக் கூடியது. நாள் ஒன்றுக்கு 75 க்கும் குறைவான ஊர்திகள் செல்லும். சில சாலைகள் வேறு பெயருடன் குறிக்கப்படும். உடலில் குருதி எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்கள் போன்று நாடிச் சாலை என ஒரு சாலை செயல்படுகிறது. இது முக்கியமான சாலைகளை நகரச் சாலைகளுடன் இணைக்கிறது. முதன்மைச் சாலை அல்லது ஊர்வலச் சாலை என்பது ஊர்வலம், அணி வகுப்பு நடைபெற மிக வசதியாக உள்ளதாகும். புறவழிச்சாலைகள் நகரங்களினுள்ளே செல்லாமல், வெளிப்புறமாகவே செல்பவை. நாட்டுச் சாலை எனப்படுவது ஒரு நகரத்தை அடுத்த நகரத்துடன் இணைக்கும் சாலை ஆகும். மிகு விரைவுப் பாதை எனப்படுவது விரைந்து செல்லும் ஊர்திகள் மட்டுமே செல்லக் கூடிய மிக அகலமான சாலையாகும். இது மித தட்ப வெப்ப நிலை இயல்பாக இருக்கும் போது மட்டுமே பயன்படக் கூடியது. தடையற்ற சாலை எனப்படுவது நாடிச் சாலை போன்ற குறுக்கீடு எதுவும் இல்லாததாகும். காட்டுச் சாலை அல்லது சீரில்லாச் சாலை எனப்படுவது, மேடு, பள்ளங்கள் நிறைந்தது. நிலையச் சாலை, ஊர்திகள் நிறுத்துவதற்கு ஏற்ற இட வசதி கொண்டது. பணிச்சாலை முக்கியமான சாலைகளுக்கு இணையாக, அவற்றிற்கு அருகிலுள்ள சாலை ஆகும். இப்பணிச் சாலை முக்கிய சாலையில் ஊர்தி நெருக்கடியைக் குறைக்கவும், அவசரக் காலங்களில் பயன்படவும் கூடியது. —ஏ. எஸ். எஸ், சேகர் சாளை குளூப்பியிடே குடும்பத்தைச் சார்ந்த சார்டின் மீன்களே சாளை எனவும் கூறப்படும். பொதுவாக, இக்குடும்பத்திலுள்ள பல மீன் வகைகளுக்கும் இப்பெயர் பொருந்தும் என்றாலும், சிறப்பாகப் பசிஃபிக், ஆஃப்ரிக்கா, ஐரோப்பா மீன்களுக்கே பொருந்தும். முதன்முதலில், மத்திய தரைக்கடல் இத்தாலியத் தீவிலுள்ள சார்டினியா அருகில் இவ்வகை மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டமையால், சார்டின் எனப் பெயர் பெற்றன. ஹெர்ரிங் வகையைச் சேர்ந்த இம்மீன்கள், உலகில் அனைத்துப் பகுதிகளிலும் மித வெப்பக் கடலோரங்களில் காணப்படுகின்றன. ஜப்பான், வடமேற்கு ஆஃப்ரிக்கா, தென் ஆஃப்ரிக்கப் பகுதிகளில் இவை மிகுதியாகக் காணப்படுகின்றன. இவற்றின் நீளம் 23—30 செ.மீ. எடை 110—120 கிராம், முதுகுப் பகுதி நீலப் பழுப்பாகவும், வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் இருக்கும். வளர்ந்த மீன்கள் 1000—1500 கொண்ட குழுவாகவே நீந்தும். இவை நீர்ப் பரப்பில் வாழும் மிதவையுயிரிகளை உண்டு வாழ்கின்றன. பெரும்பாலும் இரவில் இவை கூட்டங் கூட்டமாக நீந்தும் போது, நீர்ப் பரப்பிலுள்ள ஒளியுமிழும் ஒற்றைச் செல் உயிரிகள் அலைக்கப்பட்டு ஒளியுண்டாகும். அமாவாசை இருட்டுக் காலங்களில் இவ்வொளி மிகுதியாகத் தெரிவதால், சாளை உள்ள இடத்தை எளிதில் தெரிந்து கொண்டு, வலை வீசிப் பிடித்து விடுவர். இம்மீன்களைப் பிடிக்க, பை வளையைப் (purse seine) பயன்படுத்துவர். சாளைகளைப் பதப்படுத்தி, டப்பாக்களில் அடைத்துப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். சார்டின் எண்ணெய், லினோலியம், வண்ணப் பூச்சு (paint), குழைவணம் (varnish) போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. சில மீன்களைக் கோழித் தீவனங்களில் மீன் உணவாகவும், உரங்கள் தயாரிப்பதிலும் பயன்படுத்துகின்றனர். சிறு சாளைகள் தூண்டில் உணவாகவும் பயன்படுகின்றன. —கே. கே. அருணாசலம் சாறு ஒழுகல் நோய் இந்நோய் தென்னையிலும், கமுகிலும் செரட்டோ சிஸ்டிஸ் பேரடாக்சா என்னும் பூசணத்தால் தோன்றுகிறது.மரத்தின் வெடிப்பு அல்லது காயங்கள் மூலம் சாறு ஒழுகல் நோய் (stem bleeding disease) தோன்றுகிறது. வெடிப்பிலிருந்து பழுப்பும், சிவப்பும் கலந்த நிறத்தில் சாறு வடிந்து, நாளடைவில் காய்ந்து, கரும்பட்டையாகத் தோன்றும். தாக்கப்பட்ட திசுக்கள் நிறம் மாறி, மஞ்சளான பழுப்பு நிறத்தில் காணப்படும். நோய் பரவுதல் நாளடைவில், மெதுவாக நடைபெறுகிறது. இந்நோயால் ஓராண்டில் இளமரம் காய்ந்து விடக் கூடும். ஆனால், முதிர்ச்சியடைந்த மரங்கள் இந்நோயால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே காய்க்கின்றன. ஆயினும், அதற்கிடையில் பாதிக்கப்பட்ட மரங்கள் வளர்ச்சியிலும், விளைச்சலிலும் குன்றும். நோயுற்ற பகுதியைச் செதுக்கி, அகற்றி விட்டுச் சூடான தாரைத் (hot tar) தடவ வேண்டும். மரத்தில் நோய் தாக்கிய பகுதிகளில், குழிகள் காணபபட்டால், மரத்தூளையும், தாரையும் கலந்து மூட வேண்டும். —கா. சிவப்பிரகாசம் சாறுண்ணிகள் உயிரிகள் தாம் வாழத் தேவையான உணவைத் தம் சூழ்நிலைகளிலிருந்தே பெறுகின்றன. பச்சை நிறமுள்ள தாவரங்கள் தமக்கு வேண்டிய உணவைத் தாமே வேதிச் செயலால் செய்து கொள்கின்றன. இவ்வகைத் தாவரங்கள் தன்னூட்டவுயிர்கள் (auto-trophic) எனப்படும். தன்னூட்டவுயிர்களில் சில, பாக்டீரியா வேதிச் செயல் புரியத் தேவையான ஆற்றலைச் சில கரிமப் பொருளை ஆக்சிஜனேற்றம் செய்து பெறுகின்றன. அவற்றிலுள்ள சில நொதிகளின் உதவியால், ஆக்ஸிஜனேற்றத்தைச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, நைட்ரோசோமோனாஸ் (nitrosomonas) என்னும் பாக்டீரியா, அம்மோனியாவை ஆக்சிஜனேற்றம் செய்கிறது. நைட்ரோபேக்டர் (nitrobacter) என்னும் பாக்டீரியா, நைட்ரைட்டுகளை நைட்ரேட்டுகளாக ஆக்சிஜனேற்றம் செய்கிறது. இவ்வகை ஆக்சிஜனேற்றத்தால் உண்டாகும் ஆற்றலைக் கொண்டு, தாம் நிலைக்கவும், வளரவும் தேவையான புரோட்டோப்பிளாசத்தைத் தாவரம் அமைத்துக் கொள்ளும். ஊதாப் பாக்டீரியாவில் இருக்கும் நிறம், சூரிய ஒளியாற்றலைக் கொண்டு கார்பன் டைஆக்சைடைக் கார்போஹைட்ரேட்டாக அமைத்துக் கொள்ளும். எனினும், இவ்வேதி வினையில் ஆக்சிஜன் உண்டாவதில்லை. தமக்கு வேண்டிய உணவைத் தாமே அமைத்துக் கொள்ள முடியாத உயிரிகளும் உண்டு. அவை ஏனைய உயிரிகளிலிருந்தும், தாமே உணவு தயாரித்துக் கொள்ளும் தாவரங்களிலிருந்தும், மட்கி அழுகிச் சிதைந்த பொருள்களிலிருந்தும் தம் உணவைப் பெறுகின்றன. இவ்வகை உயிரிகள், வேற்றூட்டவுயிர்கள் (heterotrophic) எனப்படும். பெரும்பான்மையான பாக்டீரியாக்கள், காளான்கள் ஆகியன இதில் அடங்கும். ஏனைய இறந்து சிதைந்து அழுகிய பொருள்களை உணவாக உட்கொண்டு வரும் உயிரிகள், சாறுண்ணிகள் (saprophytes) எனப்படும். இவ்வகையில் பல தாவரங்களும், விலங்குகளும் அடங்கும். யூக்ளீனா என்னும் உயிரி, சில சமயத்தில் தாவரத்தைப் போலவும், சில சமயம் விலங்கைப் போலவும் வாழ்கிறது. பெரும்பாலும் இது, தான் வாழும் நீரிலுள்ள உணவுப் பொருள்களை உறிஞ்சி வாழும். நீர்க் கரைசலில் உணவு மிகுதியாக இருக்குமாயின், அவ்வுயிரி மங்கலான ஒளியிலும், இருட்டிலுங்கூட நன்கு வளர்ந்து பெருகும். ஈஸ்ட், பூசணம், பாக்டீரியா ஆகியவற்றால் திண்ம உணவை உட்கொள்ள இயலாது. அவை தம் உயிரணுக்களைச் சுற்றியுள்ள சவ்வு வழியாகவே உணவை உள்ளுறிஞ்ச வேண்டும். இது சாறுண்ணி முறை (saprophytic nutrition) எனப்படும். ஈஸ்ட் வாழ்வதற்கு உப்பு, ஆக்சிஜன், சர்க்கரை ஆகியவை தேவை. சர்க்கரையிலிருந்து ஆற்றல், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின் ஆகியவற்றைப் பெறும். ஆக்சிஜன் மிகுதியாகக் கிடைக்குமிடத்தில் ‘குளூக்கோஸ்’ என்னும் சர்க்கரையை ஆக்சிஜனேற்றம் செய்து, கார்பன் டைஆக்சைடு, நீர் ஆகியவற்றை உண்டாக்குகின்றன. ஆக்சிஜன் குறைவாகக் கிடைக்கும் போது, குளுக்கோசை நொதிக்கச் செய்து, ஆல்கஹால், கார்பன் டைஆக்சைடு ஆகியவற்றை உண்டாக்குகின்றன. இச்சாறுண்ணி முறையைப் பயன்படுத்தியே எத்தில் ஆல்கஹால் தயாரிக்கப்படுகிறது. மற்றொரு வகையான வேற்றூட்ட முறை, ஒட்டுண்ணி முறை (parasitism) எனப்படும். ஒட்டுண்ணி, தாவரம் அல்லது விலங்கின் உடலில் வாழ்ந்து, தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களை உறிஞ்சுவது இம்முறையைச் சாரும். காண்க: ஒட்டுண்ணித் தாவரங்கள். நூலோதி. A.C. Dutta, Botany, Fifth Edition, Oxford University Press, New Delhi, 1982. சாறு மூலம் பரவுதல் நோய்களை உருவாக்கும் உயிரினக் காரணிகளைப் போலவே நச்சுயிரிகளும் பரவுகின்றன. அவற்றில் ஒன்றே சாறு மூலம் பரவுதல் (sap transmission) ஆகும். இயற்கையில் சில சமயங்களில் மட்டுமே இம்முறையில் நோய் பரவுகிறது. செயற்கை முறையில் சாறு மூலம் பரவுதலை, உயிரி உட்செலுத்தல் (mechanical inoculation) என்று குறிப்பிடுவர். இம்முறை, நச்சுயிரி கலந்த சாற்றை விரல்களால் இலை மேல் தேய்ப்பதால் ஏற்படும் சிறு வெட்டுகள் மூலம் உள்ளே சேர்ப்பது ஆகும். நச்சுயிரி ஆய்வில் முதன்மை பெறும் இம்முறையால் நச்சுயிரியின் நோய் ஆற்றல், அதனால் நோய்க்- குட்படும் செடிகளின் வகைகள், செடிகளில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை அறியலாம். அனைத்து வகை நச்சுயிரிகளையும் சாற்றின் மூலம் செடிகளின் உள் செலுத்தலாம். ஆனால், அனைத்து நச்சுயிரிகளும் இம்முறையில் உள்ளே சென்று செயல்பட்டு, நோயை உண்டாக்க முடியாது. குறிப்பிட்ட அந்த நச்சுயிரிக்கு எந்தச் செடி ஆதாரமாகிறது என்பதைப் பொறுத்துள்ளது. இம்முறையில் பார்லி மஞ்சள் குட்டை நச்சுயிரி, உருளைக்கிழங்கு இலைச்சுருள் நச்சுயிரி, பீச் தேமல் நச்சுயிரி போன்றவை நோய் உண்டாக்க மாட்டா. செடிகளின் மேற்பரப்பில் சிறு காயங்களோ, சிராய்ப்புகளோ உண்டாக்கப்பட வேண்டும் என்பது முதல் படியாகும். நச்சுயிரி உள்ள சாற்றை நோய் பாதித்த திசுக்களிலிருந்து சேகரித்து, நோய் உண்டாக்கப்பட வேண்டிய உறுப்புகளில் தேய்த்தல், இந்த இடத்தில் நுழைந்த நச்சுயிரிகள் பிற செல்களுக்கு நகர்ந்து நோய் உண்டாக்குதல் முதலிய தொடர் நிகழ்ச்சிகள் இம்முறையில் அடங்கும். நச்சுயிரி சாறுசரியான முறையில் சேகரிக்கப்பட்டால்தான், அவற்றை வெற்றிகரமாக உட்செலுத்த முடியும். நச்சுயிரிகள் நோயுற்ற செடியின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்பட்டாலும், அவை எங்கு அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனவோ, அங்கிருந்து எடுக்கப் பட வேண்டும். பொதுவாக,-நோய்க் குறிகள் காணப்படும் இலைகள், நச்சுயிரிச் சாறு சேகரிக்கச் சிறந்த இடமாகும். சில நச்சுயிரிகள் குறிப்பிட்ட சில உறுப்புகளில் மட்டும் காணப்படுகின்றன. காட்டாகப் புகையிலைக் கொல்லி நச்சுயிரிகள் (tobacco necrosis virus) வேர்ப் பகுதிகளில் மட்டும் காணப்படுகின்றன. இரண்டாவதாக, நச்சுயிரிச் சாற்றின் நோய் உண்டாக்கும் ஆற்றல் அதைப் பிரித்தெடுக்கும் முறைகளைப் பொறுத்தும், வேறு சில காரணிகளைப் பொறுத்தும் அமையும். நச்சுயிரிச் சாறு வெளிச் சூழலுக்கு மாற்றப்படுவது மட்டுமல்லாமல், இலைச் சாற்றிலுள்ள சில கரிமப் பொருள்கள் நச்சுயிரியின் ஆற்றலைக் குறைக்கவும் கூடும். அதனால், நச்சுயிரிகளை ஏனைய பொருள்களிலிருந்து பிரித்து எடுப்பதால், அவை ஆற்றலுடன் காணப்படுகின்றன. ஆனால், உருளைக்கிழங்கு மஞ்சள் குட்டை நச்சுயிரி தூய்மை செய்யப்பட்டால், தன் ஆற்றலை இழந்து விடுகிறது. டானின், ஃபினால் போன்ற தாவரப் பொருள்கள் நச்சுயிரியின் ஆற்றலைக் குறைக்க வல்லவை. வைரஸ் சாறு, இலைகளின் மேல் காணப்படும் சிராய்ப்புகள் மூலம் உள்ளே நுழைகிறது. இலையின் மேற்பரப்பில் கியூட்டின், மெழுகு போன்ற பொருள்கள் உள்ளன. இவை இலையில் சிராய்ப்பு ஏற்படுத்துவதன் மூலம் நீக்கப்படுகின்றன. இம்முறையில், நோய் தோற்றுவிப்பதை அதிகமாக்கச் சில காரணிகளைப் பயன்படுத்துகின்றனர். நச்சுயிரிச் சாற்றுடன் பாஸ்ஃபேட் பஃபர் சேர்ப்பது நச்சுயிரியுடன் நோய் உண்டாக்கும் தன்மையை அதிகமாக்குவதுடன், செடிகளின் தடுப்பு ஆற்றலையும் குறைக்கிறது. சிறு சிராய்ப்புகள் உண்டாக்கச் சாற்றுடன் கார்போரண்டம் தூள் போன்ற பொருள்கள் சேர்க்கப் படுகின்றன. ஆய்வு முறையில், சாறு மூலம் பரவுதல் கீழ்க்காணுமாறு செய்யப்படுகிறது. சுமார் 5 கிராம் நோயுற்ற இலைகளை அரைவைக் குடுவையில் அரைத்துக் கொண்டு, 1 க்கு 10 என்ற அளவில் நீருடனோ, பாஸ்ஃபேட் பஃபருடனோ சேர்த்து நீர்த்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு மில்லி லிட்டருக்கு 0.7 கிராம் என்ற அளவில் கார்போரண்டம் தூளைக் கலந்து கொள்ள வேண்டும். ஒரு கையில் இலைப் பரப்பை வைத்துக் கொண்டு, மற்றொரு கை விரலை நச்சுயிரிக் கலவையில் நனைத்து எடுத்து, இலைப் பரப்பின் மேல் 1—3 முறை தேய்க்க வேண்டும். சிறிது நேரத்திற்குப் பின், இலைப் பரப்பை நீரால் கழுவி விட வேண்டும். சில நோயின் அறிகுறிகள் இலையில் தோன்றும். சில சமயங்களில் சாறு மூலம் பரவும் முறை இயற்கையிலும் நோய் பரவுவதற்குக் காரணமாகலாம். புகையிலைத் தேமல் நோய், புகையிலைத் தோட்டத்தில் அச்செடியைக் கையாள்வதன் மூலம் மனிதருக்குப் பரவுகிறது. —எம். எஸ். கிருஷ்ணமூர்த்தி நூலோதி. C. I. Kado and H. O. Agarwal, Principles and Techniques in Plant Virology, Van Nostrand Reinhold Co., New York, 1972. சான்ட்மேயர் வினை பென்சீன் டைஅசோனியம் குளோரைடு என்ற வேதிப் பொருளிலிருந்து பல்வேறு அரோமாட்டிக் சேர்மங்களைத் தயாரிக்கலாம். அச்சேர்மத்தின் பல வினைகளில் முக்கியமானதொரு வினையே சான்ட்மேயர் வினை (Sandmeyer reaction) ஆகும். அரோமாட்டிக் கரு-ஹாலோஜன் சேர்மங்களைத் தயாரிக்க இவ்வினை புதிய எளிய வழியாகும். அயோடோபென்சீனைத் தயாரிக்க இவ்வினை பெரிதும் பயன்படவில்லை என்றாலும், குளோரோபென்சீன், புரோமோபென்சீன் ஆகியவற்றைத் தயாரிக்க இது மிகவும் பயன்படுகிறது. 1884 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இவ்வினையின் வினைப்படு பொருள் பென்சீன் டைஅசோனியம் குளோரைடு ஆகும். வினைக் கலம் ஒன்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட குப்பரஸ் குளோரைடு கரைசலில், பென்சீன் டைஅசோனியம் குளோரைடு கரைசலை மெதுவாகச் சேர்த்தால், டைஅசோனியம் தொகுதி குளோரின் அணுவால் பதிலீடு செய்யப்பட்டு, குளோரோபென்சீன் விளை- பொருளாகக் கிடைக்கும். நைட்ரஜன் வளிமம் உடன் விளைபொருளாக வெளியேறும். ஹைட்ரோகுளோரிக் அமிலத்திற்குப் பதிலாக ஹைட்ரோபுரோமிக் அமிலத்தையும், குப்ரஸ் குளோரைடுக்குப் பதிலாக, குப்பரஸ் புரோமைடையும் பயன்படுத்தினால் விளைபொருளாக, புரோமோ பென்சீன் கிடைக்கும். அயோடோபென்சீனை இம்முறையில் தயாரிப்பதில்லை. ஏனெனில் குளோரோ பென்சீனுடன், பொட்டாசியம் அயோடைடு கரைசலைச் சேர்த்தாலே, அயோடோபென்சீன் கிடைத்து விடும். இவ்வினையின் வழிமுறை தெளிவாக அறியப்படவில்லை; எனினும், பின் வரும் வழிமுறையில் வினை நடைபெறுவதாகக் கொள்ளலாம். கௌட்ரியின் ஆய்வுப்படி, இவ்வினையில் குப்ரஸ் குளோரைடு CuCl— அயனியாகப் பங்கேற்கிறது. குப்ரஸ் குளோரைடு, அமிலத்தில் இருந்து பெறப்பட்ட குளோரைடு எதிரயனியுடன் இணைந்து CuCl- என்ற எதிரயனியைத் தருகிறது. இவ்வயனி பென்சீன் டைஅசோனியம் அயனியுடன் மெதுவாக வினைப்படுகிறது. இந்நிலையே, வினையின் முக்கியமான நிலையும், வினை வேகத்தை அறுதியிடும் நிலையுமாகும். இதனால், பென்சீன் இயங்கு உறுப்பு (free radical) உண்டாகிறது. இது விரைந்து CuCl வினைப்பட்டு, குளோரோபென்சீனைத் தருகிறது. குப்ரஸ் குளோரைடு மீண்டும் உடன் விளைபொருளாகத் தோன்றுகிறது. m-குளோரோ அனிலின் போன்ற நேரடியாக எளிதில் தயாரிக்க இயலாத சேர்மத்தை இவ்வினையைப் பயன்படுத்தித் தயாரிக்கலாம். டைநைட்ரோ பென்சீனை, சோடியம் சல்ஃபைடு கொண்டு பகுதி ஒடுக்கம் செய்து, 11-நைட்ரோ அனிலீனைத் தயார் செய்யலாம். இதை டைஅசோ ஆக்கல் வினைக்கு உட்படுத்திய பின்பு சான்ட் மேயர் வினைக்கு உட்படுத்தினால், m-குளோரோநைட்ரோ பென்சீன் கிடைக்கும். இதை ஒடுக்கி m-குளோரோ அனிலீனைத் தயாரிக்கலாம். —பி. ஈ. எம். லியாகத் அலிகான் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு முடிவுற்றது. இங்கு புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> சான்றிதழ் விதை தரமான முளைப்புத் திறனுள்ள விதைகளை விதை உற்பத்தியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து கிடைக்க வழி வகை செய்கிறது விதைச் சான்றிதழ். விதைச் சான்றிதழில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை: விதை மூலம் (seed source), வயல் ஆய்வு (field inspection), விதைப் பக்குவம் (seed processing), விதை மருந்து கலத்தல் (seed treating), விதைப் பகுப்பாய்வு (seed testing), சான்றட்டை பொருத்துதல் (tagging and sealing) ஆகியன. விதை மூலம். விதை உற்பத்தியில் இனத் தூய்மையைப் (genetic purity) பராமரிக்க, மூன்று தலைமுறை விதைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. முதலாவதாக, பயிர் வல்லுநர்களால் உருவாக்கப்படும் மூல விதைகள் ஆதார விதை உற்பத்திக்குப் பயன்படுகின்றன. ஆதார விதைகளிலிருந்து சான்றுரை விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சில சமயங்களில் சான்றுரை விதைகள், மீண்டும் ஒருமுறை விதை உற்பத்திக்கு அனுமதிக்கப்படுகின்றன. விதைச் சான்று அலுவலர் விதை மூலத்தை அறிந்த பின்னரே, வயல் ஆய்வுக்கு அனுமதி அளிக்கின்றனர். வயல் ஆய்வு. எந்த அறிவிக்கப்பட்ட வகையையும் (notified varieties) விதைச் சான்றுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். விதை சான்று வகை என்பது தானாக முன் வந்து செய்து கொள்வதாகும். விதைச் சான்று பெற விரும்புவோர், விதைச் சான்று அலுவலர்களுக்கு உரிய படிவத்தில் விதைப்பு அறிக்கையை, நிர்ணயிக்கப்பட்ட வயல் ஆய்வுக் கட்டணத்துடன் அனுப்ப வேண்டும். வயல் ஆய்வு, பயிரின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு, இனத் தூய்மை, புறத் தூய்மை (physical purity), நோயற்ற தன்மை ஆகியன கண்காணிக்கப்படும். வயல் ஆய்வு, பயிர் வகைகளுக்குத் தனித் தனியே பல்வேறு காலக் கட்டங்களில் செய்யப்படுகிறது. வயல் ஆய்வின் போது, வயல் தரம் ஆய்வு செய்யப்பட்டுச் சிறும வயல் தரம் இருந்தால் மட்டுமே, விதைச் சான்றுரைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சிறும வயல் தரம் இல்லாத பயிர்கள் விதைக்கு ஒவ்வாதவை என நீக்கப்படுகின்றன. விதைப் பக்குவம். வயல் ஆய்வில் தேறிய விதைகள் உரிய காலத்தில் அறுவடை செய்யப்பட்டு, விதை பிரித்தெடுக்கப்பட்டு, சிறும ஈரப் பதத்திற்குக் காய வைக்கப்பட்டு, விதைப் பக்குவம் செய்யப்படுகிறது. விதைப் பக்குவம் செய்யும் போது, களை விதைகள், ஏனைய பயிர் விதைகள், தூசி, கல், நோய் பூச்சி தாக்கிய விதைகள் ஆகியன அப்புறப்படுத்தப்பட்டுச் சீரான பருமனுள்ள, நல்ல முளைப்புத் திறனுள்ள விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. விதைப் பக்குவம், அங்கீகரிக்கப்பட்ட விதைப் பக்குவ நிலையங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. விதைத் தரத்தை அறிய, அவ்வப்போது விதை மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. விதைப் பக்குவம் செய்யப்பட்ட விதைகள் பூச்சி நோய் தாக்கா வண்ணம் விதை நேர்த்தி செய்யப்படுகின்றன. விதைப் பகுப்பாய்வு. விதைப் பக்குவம் செய்த பின்னர், எடுக்கப்பட்ட விதை மாதிரி அங்கீகரிக்கப்பட்ட விதை ஆய்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, ஈரப் பதம், புறத் தூய்மை, இதர பயிர் விதைகள், களை விதைகள், நோயற்ற தன்மை முதலியன சிறும விதைத் தரங்களுக்கு மேற்பட்டு உள்ளனவா என அறியப்படுகிறது. விதை ஆய்வு முடிவுகள் விதை ஆய்வாளரால் உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்படுகின்றன. சான்றட்டை பொருத்துதல். விதை ஆய்வு முடிவுகள் சிறும விதைத் தரங்கள் கொண்டிருப்பின், சான்றட்டைகள் பொருத்தப்படுகின்றன. புதிய கலன்களில் விதைகள் அடைக்கப்பட்டு, விதை வகைகளுக்கு ஏற்ப, சான்றட்டைகள் பொருத்தப்பட்டுக் காப்பிடப்படும். இவை அனைத்துமே விதைச் சான்றுரை அலுவலர்களின் முன்னிலையில் செய்யப்படுகின்றன. சான்றட்டைகளின் நிறம், விதை வகைகளுக்கு ஏற்ப மாறுபடும். ஆதார விதைகளுக்கு வெள்ளை நிற அட்டைகளும், சான்றுரை விதைகளுக்கு நீல நிற அட்டைகளும் வழங்கப்படுகின்றன. சான்றட்டைகளில் சான்றளிக்கும் நிறுவனத்தின் பெயர், உற்பத்தியாளர் முகவரி, பயிர் வகை, சிறும முளைப்புத் திறன், புறத் தூய்மை, ஏனைய பயிர் விதைகள், களை விதைகள் ஆகியவற்றின் சதவீதம், ஆய்வு செய்த நாள், காலக் கெடு ஆகியன குறிக்கப்பட்டுச் சான்றுரை அலுவலர்களால் கையொப்பமிடப்படுகிறது. இந்திய விதைச் சட்டம் பகுதி 9ன்படி விதைகளுக்குச் சான்று அளிக்கப்படுகிறது. சான்றுரையை மீளப் பெறவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் சான்றுரை அலுவலர்க்கு உரிமை உண்டு. —இரா. கேசவன் சானிடின் இது ஃபெல்ஸ்பார் வகுப்பைச் சேர்ந்த சிலிக்கேட் கனிமமாகும். இக்கனிமம், பொட்டாசியம்—ஃபெல்ஸ்பார்களில் ஒன்றான ஆர்த்தோகிளேஸ் என்னும் கனிமத்தின் ஒரு வகையாகும். இதுவும் ஒரு பொட்டாசியம் அலுமினியம் சிலிகேட் (KAlSiO) ஆகும். இதில் பெரும்பாலும், சோடியம் கலந்திருக்கும். ஆகையால், இதைச் சோடியம்—ஆர்த்தோகிளேஸ் என்பர். இதைப் பொட்டாசியம்-ஃபெல்ஸ்பார்களில் அதிக வெப்ப நிலையில் தோன்றும் வகை எனக் கூறலாம். சானிடின் (sanidine) ஒற்றைச் சரிவுத் தொகுதியைச் சேர்ந்தது. இது பெரும்பாலும், படிகங்களாகக் காணப்படுகிறது. இதன் படிகங்கள் ஒளிபுகுத் தன்மையுடனும், கண்ணாடி போன்று பளபளப்பாகவும் இருக்கும். சானிடின் படிகங்கள் (010) தளத்திற்கு இணையாகத் தட்டையானவையாக இருக்கும். சில சதுரப் பட்டகங்களாகக் காணப்படுகின்றன. இதன் படிகங்கள் கார்ல்ஸ்பாடு விதிகளின் படி படிக—இரட்டுறல் அடைந்து காணப்படும். இதில் (010). (001) ஆகிய இரண்டு கனிமப் பிளவுகள் தெளிவாகக் காணப்படும். இது பொதுவாக அழுக்கடைந்த வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். சங்கு முறிவு அல்லது சீரற்ற முறிவும், கண்ணாடி மிளிர்வு அல்லது குறை கண்ணாடி மிளிர்வும் உடையது. இதன் கடினத் தன்மை 6; ஒப்படர்த்தி 2.57—2.58. நொறுங்கக் கூடியது. சானிடின் அதன் இனத்தைச் சேர்ந்த ஆர்த்தோ கிளேஸ், அடுலேரியா ஆகியவற்றிலிருந்து சற்றே மாறுபாடான ஒளியியல் தன்மைகளைக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், இக்கனிமங்களை வேறுபடுத்தி அறிய முடிகிறது. இது இரண்டு ஒளி அச்சுகளை உடையது. சானிடின் கனிமத்தின் ஒளி அச்சுத் தளம் (010) முகத்திற்கு இணையாக அமைந்துள்ளது. இதன் ஒளி அச்சுகளுக்கு இடையேயான (2V) கோணம் மிகவும் குறைவாக இருக்கும். இதன் ஒளிச் சிதறல் சிவப்பு ஒளியில் ஏற்படுவதை விட ஊதா ஒளியில் குறைவாகவே காணப்படும். இது எதிர்மறை ஒளிக் குறி உடையது. இதன் ஒளி விலகல் எண்கள் α = 1.521; β = 1.526; γ = 1.527. சானிடினை டிராக்கைட், ரயோலைட், ஃபோனாலைட் முதலிய நுண்ணிய துகள்களாலான பாறைகளில் பெரிய அளவிலான படிகங்களாகப் பொதிந்திருக்கக் காணலாம். சானிடின் ஜெர்மனியிலுள்ள ரைன்லன்ட், சிபென்கிபிரிஜ் முதலான இடங்களிலுள்ள அனற் பாறைகளில் காணப்படுகிறது. அமெரிக்காவிலுள்ள நிவேடா பகுதிகளில் தனித்த அல்லது இரட்டுறல் அடைந்த படிகங்கள் காணப்படுகின்றன. சானிடின் என்னும் பெயர் அதன் படிக உருவால், தட்டையான அல்லது பலகை என்னும் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. —இல, வைத்திலிங்கம் நூலோதி. A. V. Milovsky, Mineralogy and Petrography, First Edition, Mir Publishers, Moscow, 1982. சானிடினைட் உயர் தரத் தொடு உருமாற்றத்தாலும், சில படிவுகளின் காற்றியக்கத்தாலும் (paeumatolysis) உரு- வாகும் ஒரு வகைப் பாறைகள் சானிடினைட் (sanidinite) எனப்படும். இப்படிவுகள் எரிமலைக் குழம்பு அல்லது எரிமலையால் வெளியேற்றப்பட்ட அர்ஜில்லைட்டுகள் நிறைந்தவையாகும். மேற்கு ஜெர்மனியில் லாச்சர் ஏரிப் பகுதியில் காணப்படும் சானிடினைட்டுகள் மிகுந்த புகழ் பெற்றவை. மூலப்பொருள்களில் அலுமினா—படலப் பாறை மிகுதியாகக் காணப்படுகிறது. மேலும் குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார், கயனைட், ஸ்டாரோலைட், கார்னட் முதலியவையும் காணப்படுகின்றன. சில இடங்களில் இப்பாறைகள் கண்ணாடியாக உருக்கப்படுகின்றன; சில இடங்களில் முழுதுமாக மீள்படிகமாக்கப்பட்டு ஹைபர்ஸ்தீன், கார்டியரைட், குருந்தம் மற்றும் பிற கனிமங்களாக உருவாகின்றன. காற்றியக்க முறையால் உட்செலுத்தப்படும் சோடா மற்றும் பிற வளிமங்கள், சோடியம் மிகுதியாக உள்ள பெரிய சானிடின் படிகங்களையும், குளோரைடுகள், சல்ஃபேட்டுகள், கார்போனேட்டுகள் முதலியவற்றையுடைய கங்கிரினைட், நோஸ்லைட், ஸ்கபோலைட், அபடைட், கால்சைட் போன்ற கனிமங்களையும் உருவாக்குகின்றன. மேலும், பல எரிமலைகளிலிருந்து வெளியேற்றப்படும் பொருள்களிலிருந்து (எ-டு: வெசுவியஸ் எரிமலை) கனிம உட்கூறுகள் அறியப்படுகின்றன. —இரா, சரசவாணி <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. அடுத்த பக்கத்தில் புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க, இக்கோடு தேவை. ---->