அம்பா சமுத்திரம்
ampā camuttiram
அம்பா சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மலைமிக்க தாலூகாவாகும்.
அம்பா சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மலைமிக்க தாலூகாவாகும். இதிலுள்ள பொதியின் மலையிலே தாமிரபருணியும், அதன் உபநதிகளும் உற்பத்தியாகின்றன. தாலூகாப்பட்டணமாகிய அம்பாசமுத்திரத்தைச் சூழ்ந்துள்ள வயல்களே மாவட்டத்தில் மிகச் செழிப்பானவை. முக்கியமான கைத்தொழில் நெசவு. பக்கத்திலுள்ள பத்தமடை கிராமம் மெல்லிய கோரைப்பாய்க்குப் பேர் போனது; புகைவண்டி நிலையம் உள்ளது. பாபநாசத் தலத்துக்குச் செல்லும் யாத்திரிகர் இங்கு இறங்கியே போவர். இங்கு நல்ல கருங்கல் கிடைக்கிறது. பெரிய தூண்கள் செய்து அயலூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. உயர்நிலைப்பள்ளி ஒன்று இருக்கிறது. நகர மக் : 20,356 (1951).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 134)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xpbufuvh/
தமிழ்“அம்பா சமுத்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xpbufuvh/APA
Oliyon Research. (2026). அம்பா சமுத்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xpbufuvh/MLA
"அம்பா சமுத்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xpbufuvh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment