வேக/விவேக ஸ்கஸ்ஸி
vēka/vivēka skassi
பொருள்கள் · Senses
1.
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் கொண்டது FAT ஃபேட் : "கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் "File Allocation Table" என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். fatal error : முடிவான பிழை : ஒரு நிரலாக்கத்தொடர் இயக்கப் படும்போது ஏற்படும் எதிர்பாராத பழுது அல்லது பிற சிக்கல்களினால் கணினியானது தொடர்ந்து செயல்பட முடியாமல் போவது. முடிவான பிழை இல்லை எனில் சரியான முறையில் இல்லையென்றாலும் நிரலாக்கத் தொடர் சென்று கொண்டிருக்கும். நிரலாக்கத்தொடர் நின்றுபோகுமாறு செய்கின்ற ஒரு இயக்காளரின் தவறு அல்லது 'ராம்" நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் அழிந்து போதல் போன்றவை முடிவான பிழைகளாகும் . Terminal Error என்றும் அழைக்கப்படுகிறது. fat application : ஃ பேட் பயன்பாடு : பவர்பீசி பிராசசர் பொருத்தப்பட்ட மெக்கின்டோஷ், 68000 பிராசசர் பொருத்தப்பட்ட மெக்கின்டோஷ் ஆகிய இரு வகைக் கணினிகளிலும் செயல் படுத்தக்கூடிய ஒரு பயன்பாடு. fat binary : ஃபேட் இருமம் : பவர்பீசி பிராசசர் அடிப்படையிலான மெக்கின்டோஷ், 68000 பிராசசர் அடிப்படையிலான மெக்கின்டோஷ் ஆகிய இருவகைக் கணினியிலும் செயல்படக்கூடிய ஒருவகை பயன் பாட்டு வடிவாக்கம். tatbits : பருமனான துண்மிகள் : தனிப்பட்ட திரை உறுப்புகளை மாற்றும் வகையில் திரையின் ஒரு பகுதியைப் பெரிதாக ஆக்குகிறது. வண்ணமிடும் ஒவிய நிரலாக்கத்தொடரின் தேர்ந்தெடுக்கும் முறை. எழுத்து அமைப்பு உருவாக்குவதில் பயனுள்ளது. fat client : கொழுத்த கிளையன் : ஒருவகை கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் கிளையன் கணினி. இவ்வகை அமைப்பில் பெரும்பாலான அல்லது அனைத்துச் செயலாக்கங்களையும் கிளையன் கணினியே செய்து கொள்ளும். வழங்கன் கணினி மிகச் சிலவற்றைச் செய்யும் அல்லது எதையுமே செய்யாது. தகவலை வெளியிடும் பணியையும், செயல்கூறுகளையும் கிளையன் கணினியே கவனித்துக் கொள்ளும். வழங்கன் கணினி, தரவு தளத்தை மற்றும் அதனை அணுகுதல் போன்ற பணிகளைக் கவனித்துக் கொள்ளும். FAT file system : ஃபேட் கோப்பு முறைமை : கோப்புகளை ஒழுங்குபடுத்தி மேலாண்மை செய்ய எம்எஸ்-டாஸில் மேற்கொள்ளப்படும் முறைமை. கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் File Allocation Table என்பதன் சுருக்கமே FAT எனப்படுகிறது. ஒரு வட்டினை வடிவாக்கம் (Format) செய்யும்போது எம்எஸ்-டாஸ் அவ்வட்டில் ஒரு தரவு கட்டமைப்பை (Data Structure) உருவாக்குகிறது. ஒரு கோப்பினை வட்டில் சேமிக்கும்போது, சேமித்த கோப்பின் விவரங்களை எம்எஸ்டாஸ் ஃபேட்டில் எழுதிக்கொள்ளும். பின்னாளில் ஃபைலின் விவரங்களைப் பயனாளர் கோரும்போது, டாஸ், ஃபேட்டின் உதவியுடன் ஃபைல் விவரங்களைக் கொணர்ந்து தரும். டாஸ் ஃபேட் கோப்பு முறைமையை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒஎஸ்/2, விண்டோஸ் என்டி மற்றும் விண்டோஸ் 98 ஆகியவை தமக்கேயுரிய கோப்பு முறைமைகளை (முறையே HPFS, NTFS, VFAT) பின்பற்றுவதுடன் ஃபேட் முறைமையை ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றன. father file : தந்தை கோப்பு : மூலப்பதிவேட்டின் ஒரு நகலையும் வைத்துக்கொண்டு திருத்தப்பட்ட பதிப்பையும் தருகின்ற வகையில் பதிவேடுகளைப்புதுப்பிக்கும் அமைப்பு. ஒரு கோப்பினைப் புதுப்பிக்கும் பணி நடைபெறும்போது பழைய மூல கோப்பை 'தந்தை கோப்பு' என்கிறோம். தந்தை கோப்பை உருவாக்கும் கோப்பு 'தாத்தா கோப்பு'. வட்டு அல்லது நாடா போன்ற மின்காந்த ஊடகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்புகளுக்கு இத்தொழில் நுட்பம் மிகவும் பொருத்தமானது. fat server கொழுத்த வழங்கன்; கொழுத்த சேவையகம் : ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற் ள்ளும். கிளையன் மிகச் ல பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்யாது. பயன்பாட்டு நிரல்கள் மற்றும் தரவு, வழங்கன் கணினி லேயே இருக்கும். தகவலைப் பெற்று வெளியிடும் பணி யே கிளையன் செய்யும். fatware : கொழுத்த மென் பொருள் : திறனற்ற மோசமான வடிவமைப்பு, அரிதாகப் பயன்படுத்தப்படும் ஏராளமான தேவையற்ற வசதிகள் இவற்றின் காரணமாக, நிலைவட்டில் அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் மென்பொருள். fault : கோளாறு, பழுது : வடிவமைக்கப்பட்ட விதிமுறைகளின்படி செயல்பட முடியாமல் தடுக்கும் நிலை. பிரிந்தகம் அல்லது அரை மின்சுற்று போன்றவை ஒரு துணை பாகத்திலோ, கணினியிலோ அல்லது வெளிப்புற உறுப்பிலோ செயல்பட முடியாமையை ஏற்படுத்தல். Error and Mistake என்பதற்கு எதிர்ச்சொல். fault tolerance : பழுது தாங்கு திறன் : வன்பொருள் அல்லது மென்பொருள் கோளாறுகள் இருந்தபோதும் வடிவமைப்பு விதிமுறைகளின்படி ஒரு கணினி அமைப்பு தன் பணிகளைச் செய்யும் திறன். கோளாறின்போது இயங்கி அதே வேளையில் சரிவர செயல் படவில்லையென்றால் பாதி அல்லது ஒரளவு கோளாறு தாங்கும் திறனுடையது என்று சொல்லலாம். கூடுதல் வன் பொருள், மென்பொருள் அல்லது இந்த இரண்டின் இணைப்பின் மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. fault tolerance level : பழுது தாங்கு திறன் மட்டம், பழுது சகிப்பு நிலை. பொறியமைவு : பன்முக மையச் செய்முறைப்படுத்தி, பொறியமைவு மென்பொருள் ஆகியவையுடைய கணினிகள். இவை, ஒரு முக்கியமான வன்பொருள் அல்லது மென்பொருள் செய லிழந்தாலுங்கூட செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுமாறு செய்கின்றன. favorite : கவர்வி; ஈர்ப்பி; விருப்பமான விருப்பத்தளங்கள்; விரும்பும் பக்கம் : இணையத்தில் பயனாளர் ஒருவர் அடிக்கடி விரும்பிப் பார்க்கும் வலைப் பக்கம், மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. அடிக்கடி பார்க்க விரும்பும் பக்கத்துக்கு ஒரு குறுவழியை (Shortcut) பயனாளர் தாமாகவே அமைத்துக் கொள்ள முடியும். நெட்ஸ்கேப் நேவிக்கேட்டரில் இத்தகைய பக்கத்துக்கு புத்தகக்குறி (Book Mark) என்று பெயர். favourites folder : கவர்விகள் : கோப்புறை : அடிக்கடி பார்க்க விரும்பும் வலைப்பக்கங்களுக்கான குறுவழிகளடங்கிய கோப்புறை. மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இத்தகைய பெயர். பிற உலாவிகளில் புத்தகக் குறிகள் (Book Marks), சூடான பட்டியல் (Hotlists) என்று வேறுபல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. FAx : ஃபேக்ஸ்; தொலை நகலி 1. ஃபேக்சிமிலி (Facsimile) என்ற சொல்லின் பேச்சு வழக்கு. 2. ஒரு பொதுவான எடுத்துச் செல்லும் கட்டமைப்பின் மூலம் படங்களை ஒரு இடத்திலிருந்து வேறிடத்திற்கு அனுப்ப வசதியளிக்கும் கருவி. fax board : தொலை நகலிப் பலகை : ஒரு விரிவாக்கப் பலகையிலுள்ள தொலைநகலி அனுப்பீடு. இது, வட்டுக் கோப்புகளிலிருந்து அல்லது திரையிலிருந்து தொலை நகலி குறியீடுகளை நேரடியாக உண்டாக்கும் மென்பொருள்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. மேலும், தனது உருக்காட்சியை நுண்ணாய்வு மூலம் பெறுகிற ஒரு தொலை நகலி எந்திரத்தைவிடச் செறிவான உருக்காட்சியை அனுப்பு கிறது. வந்து சேரும் தொலைநகல், கணினியின் அச்சடிப்பானில் அச்சடிக்கப்படுகிறது. fax machine : தொலை நகல் எந்திரம் : தொலை பேசிக் கம்பிகளைப் பயன்படுத்தி மின்னணுவியல் செய்தித் தொடர்புகள் மூலமாக வாசகங்களையும், வரைகலைகளையும், உருக்காட்சிகளையும் அனுப்புவதற்கான ஒர் எந்திரம். fax/modem : தொலைநகலி| மோடெம் : ஒரு புறநிலை அலகாக அல்லது தரவு மோடெமாக இருக்கக் கூடிய தொலைநகல் தரவு மோடெம் இரண்டின் இணைப்பு. இதில், அழைப் பினை தொலைநகலிக்கு அல்லது தரவு மோடெமுக்கு வழிச் செலுத்துகிற ஒரு தொலைநகல் செய்தி விசையினை உள்ளடக்கியிருக்கிறது.
— fastwise SCSI
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xghvewc3/
தமிழ்“வேக/விவேக ஸ்கஸ்ஸி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xghvewc3/APA
Oliyon Research. (2026). வேக/விவேக ஸ்கஸ்ஸி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xghvewc3/MLA
"வேக/விவேக ஸ்கஸ்ஸி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xghvewc3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment