அயோடோபாரம்
ayōṭōpāram
அயோடோபாரம் (Iodoform) : [குறியீடு CHI3) செருல்லாஸ் என்ற அறிஞர் 1822-ல் இதைக் கண்டுபிடித்தார்.
அயோடோபாரம் (Iodoform) : [குறியீடு CHI3) செருல்லாஸ் என்ற அறிஞர் 1822-ல் இதைக் கண்டுபிடித்தார். காரங்களையோ, காரக் கார்பனேட்டுக்களையோ ஆல்கஹாலுடன் கலந்து, அயோடினுடன் வினைப்படுத்தி அயோடோபாரத்தைப் பெறலாம். வாணிபத்திற்காகப் பெரும் அளவில் தயாரிப்பதற்கும் இதே முறை கையாளப்படுகிறது, பொட்டாசியம் அயோடைடுக் கரைவில் தேவையான அளவு ஆல்கஹாலையோ அசிட்டோனையோ கலந்து மின்பகுப்பால்இதைப் பெறுவது மற்றொரு முறை.
இது சிறப்பான மணமுள்ள மஞ்சள்நிறத் திண்மம். இதன் உருகுநிலை 119°. இது நீரில் கரையாது. ஆனால் ஆல்கஹாலிலும் ஈதரிலும் கரையும். வெளிச்சத்தில் இது காற்றுடன் வினைப்பட்டுச் சிதைகிறது. காயங்களுக்கு இது நச்சுநீக்கியாகப் பயனாகிறது. உயிர்ப் பொருள்களில் இது பட்டால் அயோடின் வெளிப்படுகிறது. அயோடின் பாக்டீரியாவை அழிக்கிறது. அயோடோபாரம் கெட்ட நாற்றமும், நச்சுத் தன்மையும் உள்ளதாகையால், இதற்குப் பதிலாக வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீ. பா.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 180)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xcasn4aw/
தமிழ்“அயோடோபாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xcasn4aw/APA
Oliyon Research. (2026). அயோடோபாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xcasn4aw/MLA
"அயோடோபாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xcasn4aw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment