இராமநாதக் கவிராயர்
irāmanātak kavirāyar
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்.
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் குறிச்சி என வழங்கப்பெறும் பண்ணை மாநகரினர். கவிதை படைக்கும் ஆற்றலால் இவர் கவிராயர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் ‘சிவ சைலப்பள்ளு’ என்னும் சிற்றிலக்கியத்தினைப் படைத்துள்ளார். முக்கூடற்பள்ளு, வையாபுரிப்பள்ளு முதலிய பள்ளு என்னும் நாட்டுப்புறச் சிற்றிலக்கிய வகையில் அமைந்துள்ள இந்நூல், அந்த மரபில் தோன்றிய மக்களின் வழக்காற்றுச் சொற்களையும், பழக்க வழக்கங்களையும் அமைத்துப் பாடப்பட்டது. இவர் தம் காலத்தில் வாழ்ந்த ஆறை அழகப்ப முதலியார், சிவசைலம் திருக்கோயிலுக்குச் செய்துள்ள திருப்பணிகள், சிறப்பொடு பூசனை நிகழ்வதற்கு அமைத்துள்ள கட்டளைகள் போன்றவற்றை இப்பள்ளு நூலில் பலவாறாகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஆறை அழகப்ப முதலியார் இவர் காலத்திலிருந்த நாயக்கர் படையில் தளபதியாக விளங்கியவர். இத்தளபதியும் கவிராயரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாவர் என்பதனை இப்பள்ளு நூலால் அறிய முடிகிறது. இந்நூலாசிரியர் அழகப்ப முதலியாரால் ஆதரிக்கப்பட்டு வந்துள்ளார். சிவசைலப்பள்ளு, ஆறை அழகப்ப முதலியார் மரபில் வந்த சிவசைல முதலியாரால் 1918–ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 123)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x9t3hckz/
தமிழ்“இராமநாதக் கவிராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x9t3hckz/APA
Oliyon Research. (2026). இராமநாதக் கவிராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x9t3hckz/MLA
"இராமநாதக் கவிராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x9t3hckz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment