தடைத்தாண்டி ஓட்டம்

taṭaittāṇṭi ōṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒடும் பாதைகளில் தடையாக நிற்கும் 10 தடைக்ள் நிறுத்தப்பட்டிருக்கும். அவற்றைத் தாண்டி தான் உடலாளர்கள். ஓடி ஓட்டத்தை முடிக்க வேண்டும் இதில் உயர்ந்த தடைகள் ஓட்டம் , தாழ்ந்த உயரமுள்ள தடைகள் என இரண்டு வகைப்படும் . அந்த தடையின் உயரம் ஆண்களுக்கு வேறு ,பெண்களுக்கு வேறு என்று தனித்தனியாக உண்டு. வி. க. அ. 7 ஆண்களுக்கான தடையும் உயரமும் பெண்களுக்கான தடையும் உயரமும் ஒவ்வொரு உடலாளரும் தனது ஓட்டப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 10 தடைகளையும் தாண்டித் தாண்டியே ஓடி முடிக்க வேண்டும். 27. உள்ளக விளையாட்டுப்போட்டிகள் (Intramurals) இந்த ஆங்கிலச் சொல்லுக்கு நான்கு சுவர்களுக் குள்ளேயே என்பது பொருளாகும். ஒரு பள்ளியில் அல்லது கல்லூரியில் உள்ள வகுப்புகளுக்கிடையே அல்லது சங்கங் களுக்கிடையே என, அவர்களுக்கு உள்ளேயே நடத்தப் பெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளுக்குத்தான் உள்ளக விளையாட்டுக்கள் என்பது பெயராகும். 28. வேல் அல்லது ஈட்டி (Javeline) தலைப்பாகம் உலோகத்தால் ஆகி கூர்மையான நுனி யுள்ளதாகவும், மத்திய பாகம் நூற்கயிற்றால் கட்டப்பட்டு பிடிப்புக்காகவும் (Grip), இறுதி பாகம் வால் போன்ற அமைப்புக் கொண்டு, நீண்டதாகவும் எறியப் பயன்படும் வேலானது அமையப் பெற்றிருக்கிறது. ஆண்கள் பெண்களுக்கு எறியும் வேலின் அளவு 29. வேலெறிதல் (Javelin Throw) தூரமாக எறியும் திறனுக்காக அமைக்கப்பட்ட போட்டி நிகழ்ச்சியாகும் இது. வேல் எறிவதற்காக. வேகமாக ஓடி வருகிற ஒடு பாதையின் நீளம் குறைந்தது 30 மீட்டரிலிருந்து அதிகமாக 36.5 மீட்டர் வரையாவது இருக்க வேண்டும். அங்கே குறிக்கப்பட்டுள்ள 4 மீட்டர் தூரத்திற்கும் 1.50 மீ. அகலத்திற்கும் அமைக்கப்பட்ட கோட்டின் பின்புறமிருந்து தான் எறியவேண்டும். வேலெறிபவர், வேலில் உள்ள நூல் சுற்றுப் பிடிப்பினைப் பிடித்துக் கொண்டு தான் வேலெறிய வேண்டும், எறியப் பெற்ற வேலானது, தரையில் தனது தலைப்பாகமான இரும்புக் கூர்முனையில் குத்திக்கொண்டு விழுந்தால் தான், அது சரியான எறியாகும். எறியப்பட்ட வேலானது அந்தரத்தில் முறிந்து போனால், எறிந்தவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உண்டு ஒருபோட்டியில் ஒருவருக்கு 6 எறி வாய்ப்புகள் உண்டு. — Hurdles
கலைச்சொல் · Technical ஓடுகளப் போட்டிகள் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 107)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x7s3p7jp/

தமிழ்
“தடைத்தாண்டி ஓட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x7s3p7jp/
APA
Oliyon Research. (2026). தடைத்தாண்டி ஓட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x7s3p7jp/
MLA
"தடைத்தாண்டி ஓட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x7s3p7jp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment