சாய்சைட்
cāycaiṭ
இது ஒரு சிலிக்கேட் கனிமம்.
இது ஒரு சிலிக்கேட் கனிமம். எப்பிடோட் கனிமக் குழுவைச் சேர்ந்த இது, நீர் கலந்த கால்சியம் அலுமினியம் சிலிக்கேட் (Casub|2))Alsub|3))Sisub|3))Osub|12)) (OH)sub|2)) ஆகும். இதில் சிறிய அளவில் இரும்பு காணப்படுகின்றது. சாய்சைட் (zoisite) கிளைனோசாய்சைட் என்னும் கனிமத்துடன் ஈருருவத் தொடர்பு உடையது. செவ் வகத் தொகுதியின் நிறை வடிவ வகுப்பைச் சேர்ந்த இது, இயல்பான அடிப்படை அணுக்கோப்பை உடையது. இதன் ஓர் அணுக்கோப்பில் நான்கு கூட்டணுக்கள் உள்ளன. கனிமத்தின் அணு அமைப்பில் அணுக்களுக்கு இடையேயுள்ள தொலைவு முன்பின் திசையில் 16.2—16.30 Å ஆகவும், பக்க வாட்டத்தில் 5.45—5.63 Å ஆகவும், கீழ்மேலாக 10.04—10.20 Å ஆகவும் இருக்கும். சாய்சைட்டில் படிக அச்சுகளின் விகிதம் a:b:c=0.6195: 1:0.3429. இதன் படிகங்கள் பெரிதும் பட்டகங்களாகக் காணப் படுகின்றன. படிகங்களில் கீழ்மேலாக ஆழமான கீறல்கள் உள்ளன. இது படிகமாக அரிதாகக் காணப்படும்.
சாய்சைட் திண்மங்களாகவும், தூண் போன்று கெட்டியாகவும் இருக்கும். இதில் (100) கனிமப் பிளவுகள் தெளிவாகவும், (010) தெளிவின்றியும் காணப்படும். இது சாம்பல் நிறம், பசுமை கலந்த சாம்பல் நிறம், பசுமை கலந்த சருகு நிறம், பசுமை, வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிறமுடையது. சில நிறமற்றவையாகவும், ஊதா நிறமாகவும் உள்ளன. இதன் தூள் நிறமற்றது. சாய்சைட் சீரற்ற அல்லது வளைவு முறிவு உடையது. பளிங்கு மிளிர்வும், கனிமப் பிளவு தளத்தில் முத்து மிளிர்வும் காணப்படும். இதன் கடினத் தன்மை 6.5—7 ஒப்படர்த்தி 3.35 ; நொறுங்கக் கூடியது. ஒளி புகும் அல்லது ஒளி கசியுந்தன்மை உடையது.
நுண்ணோக்கியில் சாய்சைட்டைக் காணும் போது, குறிப்பாக இளஞ்சிவப்பு நிறமுடையது. இது திசைக் குணமாற்றம் உடையது. இதன் ஒளி விலகல் எண்கள் α = 1.685. - 1. 705; β = 1.688. -1.710; γ = 1.697. -1.725. இது இரண்டு ஒளி அச்சுகளை உடையது. இதன் ஒளி அச்சுக் கோணம் (2V)= 0°-60° நேர் ஒளிக்குறி உடையது. இதில் ஒளி அச்சுத்தளம் (010) முகத்திற்கு இணையாக அமைகிறது. இரும்பு உள்ள கனிமங்களில் இத்தளம் (001) முகத்திற்கு இணையாக இருக்கும். இதில் ஒளி பிரிதல் மிகுதி. தூளைட், டான்சனைட் ஆகிய இரண்டும் சாய்சைட்டின் வகையைச் சேர்ந்தவை, சாய்சைட் கார அனற் பாறைகளிலிருந்து உண்டான மாற்றுருப் பாறைகளில் காணப்படுகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பின்லாந்து, சோவியத் ஒன்றியக் குடியரசு, ஜப்பான் ஆகிய நாடுகளில் சாய்சைட் கிடைக்கிறது. —இல. வைத்திலிங்கம் நூலோதி. N. L Sharma & K. S. V. Ram, Introduction to India's Economic Minerals, Dhanbad Publishers, Dhanbad, 1964.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 62)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x4a3qdtr/
தமிழ்“சாய்சைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x4a3qdtr/APA
Oliyon Research. (2026). சாய்சைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x4a3qdtr/MLA
"சாய்சைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x4a3qdtr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment