சுழல் மின்னோட்டம்
cuḻal miṉṉōṭṭam
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> மின் தூண்டலின் போது, மின் கடத்தும் திண்மப் பொருளில் ஏற்படும் மின் சுழற்சியை சுழல் மின்னோட்டம் (eddy current) எனலாம்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> மின் தூண்டலின் போது, மின் கடத்தும் திண்மப் பொருளில் ஏற்படும் மின் சுழற்சியை சுழல் மின்னோட்டம் (eddy current) எனலாம். இது காந்தப் புலத்திற்குச் செங்குத்தாக அமைகிறது. மின் புலத்தைக் காந்தப் புலமாக மாற்றும் போது, சுழல் மின்னோட்டம் தூண்டப்படுகிறது. இதையே ஃபோகால்ட் மின்னோட்டம் என்பர். திண்மையான உலோகக் கடத்தி வழியாக மின்சாரம் செல்லும் போதும், சுழல் மின்னோட்டம் தூண்டப்பட வாய்ப்பு உண்டு. அரகோ வட்டின் (arago disc) ஆய்வுகளில், சுழல் மின்னோட்டத்தின் திசையை அறிய முடியும் (படம் 1). இம்மின்னோட்டத்தைப் பொதுவாக, வெப்ப வெளிப்பாட்டிற்காகவும், அலை ஓடுக்கலுக்காகவும் பயன்படுத்தலாம். லென்ஸ் விதியின்படி (Lenz’s law) காந்தப் புலம், மின் தூண்டல் புலத்திற்கு எதிர்த் திசையில் அமையும். எனவே, மின் தூண்டல் புலத்தின் திசையில் சுழல் மின்னோட்டம் தூண்டப்படுகிறது. சுழல் மின்னோட்டம் கடத்தியின் இயக்கத்தைக் காந்தப் புலம் வழியாக எதிர்க்கிறது. எனவே, அவ்வியக்கம் ஒடுக்கப் படுகிறது. காட்டாக, ஓர் அலுமினியத் தகட்டை மின் காந்த முனைகளிடையே போடும் போது, அது இயல்பாக விழுவதில்லை. ஆனால், ஒரு நிலையில் சுழல் மின்னோட்டம் காரணமாக எதையும். தொடாமலும், விழாமலும் தொக்கி நிற்கிறது. அலுமினியத் தகட்டில் செலுத்தப்படும் இயக்க ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
மின்னழுத்த மாற்றியில், மின் மாற்றின் ஊடே சட்டகத்தில் இச்சுழல் மின்னோட்டம் பெருமளவில் தோன்றுகிறது. சுழல் மின்னோட்டமாகச் சட்டகத்திலேயே முழுமை பெறுவதால், பெருமளவில் மின்னோட்டம் அச்சட்டகத்தை வெப்பப்படுத்துவதன் மூலம் பெரும் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. மேலும், சுழல் மின்னோட்டத்தால் காந்தப் புலமும் ஏற்படுவதால், அதிலும் ஆற்றல் வீணாகிறது, இதைத் தடுக்க, மின்னழுத்த மாற்றிச் சட்டகம் ஒரே உலோகத்தால் செய்யப்படாமல், தனித் தனி மெல்லிய தகடுகளாகப் பிரித்து, அவற்றிடையே காந்தப் புலம் மட்டும் செல்லும் அளவிற்கும், மின் புலம் தடுக்கப்படுமாறும், இடைத் தகடுகளின் இடையில், மெருகு பூச்சுப் பூசப்பட்டுத் தகடுகள் ஒன்றிணைக்கப் பட்டுச் சட்டகமாக உருவமைக்கப்பட வேண்டும். இந்த மெருகு பூச்சு மின் கடத்தாப் பொருளாகும். மெருகு பூசப்பட்ட தகடு மின்னழுத்தத்தைக் குறைப்பதில்லை. ஆனால், சுழல் மின்னோட்டம் ஏற்படாதவாறு, அச்சுழல் மின்னோட்டத்தின் பாதையைத் தடுத்து விடுகிறது. இதன் மூலம் பெரும் மின்னோட்டச் சுழற்சி ஏற்படாதவாறு தடுக்கலாம்.
முக்கியமாகப் பயன்படும் மின்னோட்ட அளவிகளில், மின் காந்த ஓடுக்கல் ஏற்படுத்துவதற்கு, சுழல் மின்னோட்டம் பயன்படுகிறது. இதன் பயனாக, மின்னோட்ட அளவியில் சுழித் துடிப்பு (dead beat) முதல் பல கட்டுப்படுத்தல்களை ஏற்படுத்தலாம். தூண்டு மின்னோடி (induction motor), இதன் அடிப்படையிலேயே சுழலுகிறது. மின் அளவு அளவிகளில் அலுமினியத் தட்டைச் சுழற்றுவதற்குச் சுழல் மின்னோட்டமே பயன்படுகிறது. மின் தூண்டல் உலைகளில் பொருள்களை வெப்பப்படுத்துவதற்கும், சுழல் மின்னோட்டம் பயன்படுகிறது. —மா. பூங்குன்றன் நூலோதி. Jacob Millman and Christos C. Halkias, Electronic Devices and Circuits, McGraw-Hill Book Company, Singapore, 1987.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 555)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wwp2963g/
தமிழ்“சுழல் மின்னோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wwp2963g/APA
Oliyon Research. (2026). சுழல் மின்னோட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wwp2963g/MLA
"சுழல் மின்னோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wwp2963g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment