செயின்ட் லாரன்ஸ் வளைகுடா
ceyiṉṭ lāraṉs vaḷaikuṭā
வட அமெரிக்கக் கடற்கரையில், மிகப் பெரிய வளைகுடாவான இது, அட்லாண்டிக் பெருங்கடலின் ஓர் ஆழ் பகுதியாகும்.
வட அமெரிக்கக் கடற்கரையில், மிகப் பெரிய வளைகுடாவான இது, அட்லாண்டிக் பெருங்கடலின் ஓர் ஆழ் பகுதியாகும். மெக்சிகோ வளைகுடாவை விடச் சற்றுச் சிறிய இதன், கிழக்கு எல்லையில் நியூஃபவுண்டுலாந்தும், தெற்கெல்லையில் நோவாஸ்காட்டியா, நியூபிரன்ஸ்விக் ஆகியவையும் உள்ளன. செயின்ட் லாரன்ஸ் வளைகுடா கிழக்குக் கனடாவுக்கும், வட அமெரிக்கப் பகுதிகளுக்கும், கப்பல் வணிகத்திற்குப் பெருமளவு பயன்படும். இவ்வளைகுடா செயின்ட் லாரன்ஸ் ஆறு, பெரிய ஏரிகள் ஆகியவற்றின் நீர் புகும் இடம் ஆகும்.
1959 இல் ஆழப் படுத்தப் பட்ட செயின்ட் லாரன்ஸ் நீர் வழியே, மிகப் பெருங்கப்பல்கள் இங்கிருந்து பெரும் ஏரிகளின் இறுதிப் பகுதி வரை செல்கின்றன. வட அமெரிக்கப் பகுதியினர், அட்லாண்டிக் கடலைக் கடந்து வணிகம் செய்ய, இவ்வளைகுடா பெரிதும் உதவுகிறது. இது அட்லாண்டிக் பெருங் கடலுடன், கேபாட் நீர்ச் சந்தி, பெல்க் தீவுச் சந்தி இவற்றின் மூலமாக இணைந்துள்ளது.
இவ்வளைகுடாவில் ஓதங்கள் (tides) தாழ்ந்த நிலையிலேயே இருந்தாலும், பல நாள் தொடர்ந்திருக்கும். அடர்த்தியான மூடு பனியும், மிதக்கும் பனிக் கட்டிகளும் கப்பல் பயணத்திற்கு ஏற்புடையன அல்ல. வளைகுடாவின் தென் முனையில் பிரின்ஸ் எட்வர்டு தீவும், லாரன்ஸ் ஆற்றின் கழிமுகம் அருகில், ஆன்டிகாஸ்டி தீவும் உள்ளன. தெற்கு, வடக்குக் கடற்கரையோரங்களில் பல சிறு தீவுகள் உள்ளன.
செயின்ட் லாரன்ஸ் வளைகுடாவும், செயின்ட் லாரன்ஸ் ஆறும் 1535இல் ஜாக்ஸ் கார்ட்டியர் என்பாரால் கண்டுபிடிக்கப்பட்டன. —கே. கே. அருணாசலம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 824)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wu74nwep/
தமிழ்“செயின்ட் லாரன்ஸ் வளைகுடா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wu74nwep/APA
Oliyon Research. (2026). செயின்ட் லாரன்ஸ் வளைகுடா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wu74nwep/MLA
"செயின்ட் லாரன்ஸ் வளைகுடா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wu74nwep/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment